அநாயகா-30
அநாயகா-30
இளந்திரன் ஆதிராவோடு இரண்டு குடும்பமும் சேர்ந்து கோவிலில் சாமி கும்பிட நின்றிருந்தனர்.
இப்போது எல்லாருடைய மனசுக்குள்ளும் இளந்தீரன் ஆதிராவோடு நல்லபடியாக சந்தோஷமாக வாழ வேண்டும்; அவன் மறுபடியும் அந்த சிவானந்தனின் கூட்டத்தோடு போய் சேரக்கூடாது என்றுதான் வேண்டிக் கொண்டிருந்தார்கள்.
மகேஷ்வரிக்கோ ‘இந்தக் கல்யாண விஷயம் கேள்விப்பட்டாவது என் வீட்டுக்காரர் சந்தோஷமா சீக்கிரமாக குணமாகி எழுந்துவரணும், ஆதிராவும் இளந்தீரனும் சந்தோசமாக வாழனும்,அதுவும் இந்த இளந்தீரனுக்கும் இன்னும் கொஞ்சம் நல்ல புத்தியை கொடுங்க கடவுளே! இவன் கோக்குமாக்கானவன். எப்போ என்ன பண்ணுவான்னே சொல்லமுடியாது.என் பொண்ணோட வாழ்க்கையே இவன் கையிலதான் இருக்கு. இவன் மனசை எப்படியாவது நல்லபடியா மாத்திகொடுங்க. என் பொண்ணோட வாழ்க்கை முழுவதும் பிரச்சினை இல்லாமல் இருக்கணும். அவளோட மனசும் சந்தோசமா இருக்கணும். எவ்வளவுதான் இவன் வேண்டாம்னு ஒதுக்கி வைச்சாலும் நீங்க அவன்தான் அவளோட துணைன்னு கொடுத்திருக்கீங்க. அவளுக்கு இந்த வாழ்க்கை சந்தோசமா இருக்கணும்”என்று ஒரு தாயாக நின்று, ஆதிரா இளந்தீரன் வாழ்க்கை நல்லாயிருக்கணும் என்று மனதுருகி வேண்டிக்கொண்டார்.
ஆதிராவும் மனம் தடுமாற்றத்துடன் வேண்டிக் கொண்டிருந்தாள்.
“இந்த அத்தான் எதுக்கு இந்தத் தாலியையை என் கழுத்துல நம்பி கட்டினாங்கன்னு எனக்குத் தெரியாது. எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னும் எனக்கு தெரியாது. நானும் எதுக்காக அந்த தாலியே ஏத்துக்கிட்டானும் எனக்குத் தெரியாது.கடவுளே இந்த வாழ்க்கை நீங்க எனக்குக் கொடுத்தது. ஏன் கொடுத்தீங்க? எதுக்கு கொடுத்தீங்க?இது எதுவும் எனக்குத் தெரியாது? தீரா அத்தானைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சின்ன வயசிலிருந்து ஆசையை வளர்த்திருந்தேன். அவங்க வேறொருத்தியை விரும்பினாலும் எனக்காக என் அத்தான் வருவாங்கன்னு நம்பினேன். நானும் அவங்களுக்காக காத்திட்டிருந்தேன். அந்த ஆசையை நீங்கதான் நிறைவேற்றி வச்சிருக்கீங்க. இந்த ஆசையும் காதலும், என் வாழ்க்கை முழுவதும்,என் வாழ்நாளெல்லாம் கூடவே இருக்கணும்,மாறமல் இருக்கணும். அத்தான் நல்லாயிருக்கணும். அவங்க மனசுல நான் மட்டும்தான் இனி இருக்கணும். இது எங்க வாழ்க்கை. இந்த வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கையா அமைச்சிக்கொடுங்க. நாங்க நல்லா வாழ்றதுக்கு நீங்கதான் அருள்புரியணும்” என்று மனதுருகி வேண்டிக்கொண்டிருந்தாள்.
அந்த நேரம் அவளது நெற்றியில் சரியாக குங்குமத்தையும்,அதுக்கு அடுத்து திருநீற்றையுமும் இளந்தீரன் வைத்துவிட்டான்.
ஆதிரா தன் நெற்றியில் இளந்தீரன் குங்குமம் வைக்கவும் கண்ணைத் திறந்துப்பார்த்தாள். இளந்தீரன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.
அதைப்பார்த்து மனசுக்குள்ளே அவளுக்கு ஒருமாதிரி இருந்தது. இப்போதானே கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டிருந்தேன். நான் இந்த அத்தான் இப்படியெல்லாம் குங்குமம் வைச்சிவிடணும்னு பல காலமா கனவுகண்டேனே. அந்தக் கனவு இப்போ பலிச்சிடுச்சே!என் மனசை உணர்ந்து அத்தான் குங்குமம் வைச்சிவிட்றுக்காங்க!ளே என்று மனம் பூரித்து சந்தோசிக்க இளந்தீரனைப் பார்த்து புன்னகைத்தாள்.
அவர்களின் இந்த காதலின் புன்னகையையும் இளந்தீரனின் இந்தச் செயலையும் பார்த்த சங்கவியோ ரவீந்திரனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவனோ பாவமாக சாமியை வேண்டிக்கொண்டிருந்தான்.
அவனது கையைப் பிடித்து இழுத்து “எனக்கென்னவோ உங்க தம்பிக்கும் என் தங்கச்சிக்கும் ஏதோ உள்ளுக்குள்ள ரொம்ப வருஷம் ஓடிட்டிருந்திருக்குன்னு தோணுது. இத்தனை வருஷமா இரண்டும் நம்மளை ஏமாத்திருக்கு போல. இவங்க இரண்டு பேரும் ஏதோ ப்ளான் பண்ணித்தான் இந்தக் கல்யாணத்தை முடிச்சிட்டு வந்திருக்காங்க. அங்கப்பாருங்க உங்க தம்பி ஆதிராவுக்கு எப்படியெல்லாம் குங்குமும் தீருநீறும் வைச்சு விடுறான்னு பாருங்க. இத்தனை வருஷமா குடும்பம் நடத்துற நம்ம கிட்டகூட இந்த அந்நியோந்நியம் வரலை. என்னத்தையோ போங்க. நம்ம இன்னும் நிறைய இவங்களைப் பார்த்து படிக்கணுமோ அத்தான். நீங்க என்னைக்காவது எனக்கு இப்படி குங்குமும் வைச்சுவிட்டிருக்கீங்களா?- உங்க தம்பியை பார்த்து படிச்சுக்கோங்க”என்றவளின் பார்வையோ அவர்களிடமே இருந்தது.
“ஏண்டி அவன் உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த சூழ்நிலையே வேற. அவனுக்கு உன் தங்கச்சிதான் வாழ்க்கை கொடுத்திருக்கா. அவன் உங்க அப்பா மண்டைய அடிச்சு உடைச்சுட்டு திரும்பி வந்திருக்கான். நானும் அதே மாதிரி உங்கப்பா மண்டைய அடிச்சு உடைச்சிட்டு, ஜெயிலுக்கு போயிட்டு திரும்பி வந்து உன் கழுத்துல தாலிகட்டி இப்படி உனக்கு குங்குமம்பொட்டு வைச்சு விடட்டுமா?” என்று நக்கலாகக் கேட்டான்.
அவ்வளவுதான் சங்கவி மகேஸ்வரி மகள் என்பது நிரூபிக்கும் விதமாக தனது கண்களாலேயே ரவீந்திரனை மிரட்டி விட்டாள்.
“என்னது எங்க அப்பா மண்டையை உடைச்சுட்டு ஜெயிலுக்கு போக போறீங்களா? என்ன நினைச்சிட்டு இந்தமாதிரி பேசிட்டு இருக்கீங்க? கொஞ்சமாவது அறிவு இருக்கா? கோயிலுக்குள்ள நின்னு என்ன பேச்சுபேசிட்டு இருக்கீங்க? ஏற்கனவே உங்க தம்பி பண்ணி வைச்சிருக்கிற வேலைக்கு எவ்வளவு பெரிய பிரச்சனை ஆகிப்போச்சு. இதுல நீங்க வேற கண்டைதையும் கோயிலுக்குள்ள நின்னு பேசாதீங்க? உங்கக்கிட்ட தெரியாம குங்குமம் வைச்சு விடுங்கன்னு சொல்லிட்டேன்? மன்னிச்சுக்கோங்க சாமி. நானே குங்குமத்தை வைச்சிக்கிறேன்” என்றவள் குங்குமத்தை எடுத்து நெத்தியிலும் தனது தாலியிலும் வைத்துக்கொண்டாள்.
“இது நல்ல பொண்டாட்டிக்கு அடையாளம். அதைவிட்டு அவனை மாதிரி பண்ணு இவனை மாதிரி பண்ணுன்னுலாம் என்கிட்ட சொல்லப்படாது. எனக்கு என்ன வருமோ அதைத்தான் நான் செய்வேன் புரிஞ்சுதா?”என்று அவளிடம் சொல்லிட்டுவிட்டு எதிரில் நிற்கும் இளந்தீரனை பார்த்தான்.
அவனோ பக்கத்துல யாரு இருக்கா இல்லையென்றெல்லாம் பார்க்கவில்லை. அவளது நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டு அதை அழகாக துடைத்தும் விட்டான்.
அதைப் பார்த்த ரவீந்திரதான் “இவன் இதையெல்லாம் தெரிஞ்சு பண்றானா?இல்லை தெரியாமல் பண்றானான்னே தெரியலையே? இவன் இப்போ எந்த கேட்டகிரியில் இருக்கான்னு புரிஞ்சுக்க முடியலை. நம்ம ஏதாவது கேட்கப் போனால் மட்டும் ஏதாவது இடக்குமடக்கா பதில் சொல்லுவ்ன். இவன் எனக்கு தம்பியா இல்ல நான் இவனுக்கு தம்பியான்னே தெரியாமாட்டேங்குது. ஏதோ ஒன்னு நல்ல வேலையா ஆதிராவை கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த கூட்டத்திலிருந்து தப்பிச்சு வந்துட்டானே. அதுக்கே இந்த சாமிக்கு பெரிய ஒரு கும்பிடு போடணும்” என்று நினைத்தவன் சாமியைப் பார்த்து திரும்பி கையைத் தூக்கி தலைக்குமேல வைச்சு, பெருசா ஒரு கும்பிடு போட்டு நன்றி சொன்னான்.
அதுக்கு அப்புறம் இரண்டு பேரின் பேரிலும் அர்ச்சனை செய்துவிட்டு, அந்த அர்ச்சனை தட்டுகளை வாங்கிவிட்டு, மாலையும் மாற்றி முடித்துவிட்டு வெளியே வந்தார்கள்.
மகேஸ்வரி கிடைத்த கொஞ்ச நேரத்திலேயே மகளுக்கும் மருமகளுக்கும் அழகான புடவையும் வேஷ்டியும் வாங்கி கொடுத்திருந்தார்.
அதில் புதுமண தம்பதிகளாக கோயிலுக்குள்ளிருந்து வெளியே வரும்போது அழகான ஜோடி என்று எல்லாரும் திரும்பி பார்க்கிறளவுக்கு பொருத்தமான பாந்தமான ஜோடியாக இருந்தார்கள்.
இப்பொழுது மகேஸ்வரிக்கு அவர்களைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எது எப்படியோ இரண்டு பேரும் சந்தோஷமாக வாழனும், அது போதும் என்று நினைத்தவர் அவர்களை நேராக அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்குத்தான் போனார்கள்.
அங்கே படுத்திருந்த ஜெயச்சந்திரனைப் பார்த்ததும் ஆதிராவுக்கு தன்னை மீறி அழுகையை வந்துவிட்டது. அப்படியே ஓடிப்போய் “அப்பாஆஆஆ” என்று அவரது காலைப் பிடித்துக்கொண்டு அழுதாள்.
இளந்தீரனோ எந்தவிதமான உணர்ச்சியையும் வெளியே காட்டிக் கொள்ளாது அமைதியாக அவள் பக்கத்திலயே நின்றிருந்தான்.
சங்கரி ஆத்தாதான் உடனே மகனது பக்கத்தில் போய் அவனது கையை பிடித்து வருடி கொடுத்தவர் “ஐயா இங்கப்பாரு நீ ஆசைப்பட்டபடியே உன் சின்ன மருமகன் தீரன் வந்திருக்கான் பாரு. உன் செல்ல மகள் ஆதிராவை அவனே கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான். அவங்க இரண்டுபேரையும் கண்ணைத் திறந்து பாருய்யா. நீ ஆசிர்வாதம் பண்ண எழும்பிய்யா?இரண்டும் உன்னைப் பார்த்து அழுதிட்டிருக்குப் பாரு. தீரன் உன்னைப் பார்க்க வந்திருக்கான் பாருய்யா”என்று அழுதவாறே பேசினார்.
அதைக்கேட்டதும் இப்போது இளந்தீரனுக்கு அப்படியே உள்ளுக்குள் ஏதோ உடைந்ததுபோன்று இருந்தது. ஆனாலும் எதையுமே வெளியே காட்டிக்கொள்ளாது அமைதியாக நின்றான்.
மகேஷ்வரியும் போய் அவரது அந்தப்பக்கத்தின் கையைப் பிடித்தவர் “என்னங்க ஆதிராவுக்கும் இளந்தீரனுக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சிங்க. இரண்டுபேரும் உங்களைப் பார்க்க மாலையும் கழுத்துமா வந்து நிக்கிறாங்க. அவங்களை ஆசிர்வாதம் பண்றதுக்காவது எழுந்து வாங்க. நீங்க இல்லாமல் உங்க மகள் கல்யாணம் நடந்திருக்குங்க. அவங்களுக்காகவது எழுந்து வாங்க”என்றவருக்கு அதற்குமேல் வார்த்தை வரவில்லை, அவரது கையில் தலையை வைத்துக்கொண்டு ஓஓவென்று அழுதார்.
அதையெல்லாம் பார்த்ததும் இளந்தீரன் இப்போ ஆதிராவின் கையைப்பிடித்துக்கொண்டு அவரது பக்கமாகப்போனவன் மெதுவாகக் குனிந்து “யோவ் ஜெயசந்திரன்! உங்க இளைய மகள் ஆதிரா கழுத்துல உங்க சம்மதம் இல்லாமலயே தாலியைக் கட்டி, என் பொண்டாட்டியா கூட்டிட்டு வந்திருக்கேன். அப்படியே எழுந்து எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க. இதுக்குத்தானே ஆசைப்பட்டீங்க எழும்புங்க!””என்று சத்தமாக சொன்னான்.
அவ்வளவுதான் அடுத்த நொடியே அவரது கண்ணு இரண்டும் பளிச்சுன்னு திறந்து அவங்களைப் பார்த்தது.
அவ்வளவுதான் எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். அங்கிருந்த நர்ஸ் ஓடிப்போய் டாக்டரைக் கூட்டிட்டு வந்துவிட்டார்.
அவர் கண்ணைத் திறந்து பார்த்ததும் எல்லோருக்கும் ஆனந்த ஆதிர்ச்சி. அதுவும் இளந்தீரன் பேசியதைக் கேட்டதும் அவர் கணைத் திறந்துபார்த்துவிட்டாரே என்றதொரு அதிர்ச்சி என அபபடியே அவரை சுத்தி நின்று பார்த்தனர்.
அதற்குள் டாக்டர் வந்து அவரைப் பார்த்து பரிசோதிக்கவும் அப்படியே கண்ணை மூடிக்கொண்டார்.
அவ்வளவுதான் திரும்பவும் மொத்தக்குடும்பமும் அழ ஆரம்பித்துவிட்டனர்.
உடனே டாக்டர் அவர்களை சத்தம்போட்டு வெளியே அனுப்பிவைத்துவிட்டு, பரிசோதித்து முடித்துவிட்டு வெளியே வந்தார்.
ரவீந்திரனும் இளந்தீரனும் அவரிடம் என்னாச்சு என்று கேட்டார்கள்.
அது அவருக்கு “கொஞ்சம் கொஞ்சமா தெளிவு வருது. இனி கண்ணுமுழிச்சா நார்மலாகிடுவாரு. ஆனாலும் கொஞ்சநாளைக்கு அவரைப் பத்திரமா பார்த்துக்கணும். கோமாவுல இருந்து கண்ணுமுழிக்கிறதே அதிசயம. அவரு கண்ணுமுழிச்சிருக்காருன்னா இனி குணமாகிடுவாரு. கவலைப்படாதிங்க உங்க மாமா எழுந்து வந்திடுவாரு” எ தைரியம் சொல்லிவிட்டுப்போனார்.
சங்கரிதான் “பார்த்தியா நான் சொன்னேன்ல உங்க கல்யாண விசயம் கேட்டு அவன் எழுந்திருப்பான்னு. இப்போ கண்ணு முழிச்சிட்டான். என் மகன் சீக்கிரம் எழுந்து வந்திடுவான்” என்று கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பேசினார்.
டாக்டர் பாஸிட்டிவாக சொல்லிட்டுப்போனதே அவங்களுக்கு ஆறுதலாக இருந்தது. அதனால் அப்படியே அமைதியாக கொஞ்சநேரம ஜெயச்சந்திரன் பக்கத்துலயே உட்கார்ந்துவிட்டு வெளியேவந்தனர்.
இப்போதும் சங்கவி சந்தேகத்துடனே எல்லோரையும் பார்த்தாள்.
ரவிதான் “என்னடி முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு?இப்படி அமைதியாக வர்ற?”என்று அவளது தோளைத்தட்டிக் கேட்டான்.
“அதுவாத்தான். அதெப்படி நம்ம ஒரு மாசத்துக்கு மேலா அப்பா அப்பான்னு கதறிக்கூப்பிட்டும் எழும்பாதவறு உங்க தம்பி கூப்பிட்டதும் எழுந்து பார்த்தாரு. அப்போ நம்ம மேலயெல்லாம் அவருக்கு பாசமில்லையா என்ன?அவருக்கும் இவனுக்கும் ஏதோ கனெக்ஷன் இருக்குதுன்னு எனக்குத் தோணுது. இரண்டும் கூட்டுக்களவானிங்களா இருப்பாங்களோன்னு நினைக்கிறேன்”என்றவள் அவனை சந்தேக்கண்ணோடு பார்த்தாள்.
ஆதிராதான் “போச்சுடா மறுபடியும் இவா சந்தேகத்தைத் தொடங்கிட்டாள். இவா எல்லாம் திருந்தவேமாட்டாளா அத்தான்?”என் ரவியிடம் கேட்டாள்.
“அவா கிடக்கிற சந்தேகத்துக்கு பெறந்தவா?இன்னும் என்னை சந்தேகப்படாமல் இருக்காளேன்னு நான் சந்தேசப்பட்டுக்கிறேன்” என்றதும் அவனை கோபத்தில் வெட்டவா குத்தவான்னு பார்த்தாள்.
இதுக்குமேல ரவி இனி பேசுவான்? ஆனால் இளந்தீரனோ இதையெல்லாம் கவனிக்காது அவன் வேற ஏதோ சிந்தனையிலயே நடந்தான்.
ஜெயசந்திரன் கண்ணுமுழிச்சுப் பார்த்ததில் எல்லோருக்குமே சந்தோசம். அந்த சந்தோசத்தோடு எல்லோரும் வீடுவந்துச் சேர்ந்தனர்!