அநாயகா-32
அநாயகா-32
இளந்தீரன் ஆதிராவின் திருமணம் முடிந்தும் எந்த விதமான மாற்றமும் இல்லாது இந்த ஒரு வாரம் எப்படி போனது என்றே தெரியாது.
இப்போ இரண்டும் ஹாஸ்பிட்டலுக்கு அவனோட தலையில் உள்ள காயத்திலிருந்து தையலை எடுக்க வந்திருந்தார்கள்.
டாக்டர் தையலை எடுத்ததும் இனி பிரச்சனையில்லைஎன்று சொல்லிவிட்டார்.
அப்படியே இரண்டுபேரும் ஜெயச்சந்திரனை பார்க்க, அவரை வைத்திருந்த தனி ரூமுக்குள்ளே வந்தார்கள்.
மகேஷ்வரிதான் ஜெயச்சந்திரனின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். அப்பொழுது அங்கே வந்த டாக்டர்ஸிடம் இளந்தீரன் ஜெயசந்திரனின் உடலநிலைப் பற்றி கேட்டுக்கொண்டிருந்தான்.
“டாக்டர் எங்க மாமா கோமாவுல படுத்து கிட்டத்தட்ட ஒன்றரை மாசத்துக்கு மேலாகிட்டு. இன்னும் எழுந்திருக்கிற மாதிரியோ, உட்கார்ற மாதிரியோ தெரியலையே. இப்படியேத்னே இருக்காரு நீங்கள் ட்ரீட்மெண்ட்ல ஏதாவது கொடுக்கறீங்களா இல்லையா? இவரோட நிலைமை இன்னைக்குவரைக்கும் இப்படியேதான் இருக்கு. அடுத்து என்னன்னு எங்கக்கிட்ட ஓப்பனா சொல்லுங்க. நாங்க எங்க மாமாவா பெரிய ஹாஸ்பிடல் கொண்டுபோய் பார்க்கணும்னாலும் பார்க்கிறோம். இல்லை அங்கேயும் முடியாதுன்னா எங்க வீட்டுக்கே கொண்டுபோய் தனியா நர்ஸ் வைச்சு பார்த்துக்கிறோம்” என்று ஜெயச்சந்திரனுக்காக பேசினான்.
அதைக்கேட்டதும் மகேஸ்வரிக்கு கோபம் வந்தது “உன்னாலதாண்டா அவரே இந்த நிலைமைக்கு ஆளாகிட்ட்ரு அவர் இப்படி படுத்து இருக்காருன்னா அதுக்கு நீதான்டா காரணம்” என்று வாய் வரைக்கும் வந்த வார்த்தையை தனது மகளுக்கு வேண்டி அடக்கிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
உடனே டாக்டர் “இதுக்கு மேல அவருக்கு ஒன்னும் பண்ண முடியாது. ஹாஸ்பிட்டல்ல இருந்தா டாக்டரஸ் அடிக்கடி வந்து பாத்துப்பாங்க. நர்ஸும் கூடவே இருப்பாங்க. இங்கே இருக்கிறது நல்லது ஆனா அதனால் எந்த இம்ப்ரூவ்மெண்ட்டும் இருக்காது. நீங்க வீட்ல தனி ரூம்ல வைச்சுனாலும் பார்த்துக்கலாம். எந்த இன்ஃபெக்ஷனும் வராதளவுக்கு பாத்துக்கணும். அதுக்காக தனியா ஒரு மேல் நர்ஸ் உங்களுக்காக நாங்க ஏற்பாடு பண்ணனும்னாலும் ஏற்பாடு பண்ணி தர்றோம்”
அதைக் கேட்ட மகேஸ்வரி “வேண்டாம் என் ஹஸ்பண்ட் ஹாஸ்பிடடல்லயே இருக்கட்டும். வீட்டுக்கு கொண்டு போய் அவருக்கு ஏதாவது ஆகிட்டுன்னா என்னால தாங்கிக்க முடியாது. இங்கன்னா டாக்டர்ஸ் எல்லாரும் இருக்காங்க” என்று தனது கணவருக்காக பேசினார்.
இளந்தீரன் இப்பொழுது எந்த முடிவும் எடுக்காமல் நேராக ஆதிராவைப் பார்த்தான்.
ஆதிரா உடனே அம்மாவின் தோளில் கையை வைத்தவள் ஏதோ பேச வந்தாள்.
“ஆதிரா நீ எதுவுமே இப்போ பேச வேண்டாம். நீ என்ன சொல்லப்போறன்னும் எனக்குத் தெரியும். உனக்கு எப்படி இப்போ வந்த உன் வீட்டுக்காரன் முக்கியமோ அதேமாதிரிதான் இத்தனை வருஷமா கூடவே வாழ்ந்த என் வீட்டுக்காரர் எனக்கு ரொம்ப முக்கியம். அவரோட உயிருக்கு ஆபத்தா இருக்குற எந்த விதமான விஷயத்தை நான் செய்யமாட்டேன். அவரை இப்போதைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போய் பார்க்கிறது சரியா படலை. வேற மாதிரி ஆகிடுச்சுன்னா என்னால தாங்கிக்க முடியாது. இது தப்பு வேண்டாம்”என்று அவர் அவரது முடிவில் தெளிவாக இருந்தார்.
இளந்தீரன் அதற்கு மேல் எதுவும் பேச முடியாது அப்படியே அமைதியாகி விட்டான். அந்த நேரத்தில் ரவியும் சங்கவியும் கொஞ்சம் டென்ஷனோடு உள்ளே வந்தார்கள்.
ரவியின் முகத்தை பார்த்தவுடனே மகேஸ்வரி “என்னாச்சு ரவி கட்சியில ஏதாவது பிரச்சனையா? இல்ல சங்கவி உன்கிட்ட சண்டை போட்டாளா? ஏன் இரண்டு பேரும் ஒரு மாதிரி இருக்கீங்க?”என விசாரித்தார்.
“அது வந்து எலக்சன் டேட் எப்போன்னு இன்னைக்கு அறிவிச்சிட்டாங்க. மாமா இன்னும் எழுந்துக்கலையே. அந்த இடத்துல அவருக்கு பதிலா வேற யாரையாவது கேண்டிடேட்டா நிக்க விட்றுவாங்களே. அதுதான் எனக்கு அடுத்து என்ன செய்யணும்னு தெரியாது இங்க வந்தேன். மாமா இருந்தா எல்லாத்தையும் தைரியமா செய்யவாங்க. அவங்க கண்ணுமுழிச்சாக்கூட அடுத்த நம்ம என்ன செய்யணும்னு முடிவு பண்ணிக்கலாம் . எனக்கு எதுவுமே ஓடல. என்ன செய்யணும்னு நீங்க சொல்லுங்க அத்தை”என்று முடிவை அவரிடமே விட்டுவிட்டான்.
அதைக் கேட்டதும் மகேஸ்வரிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. கொஞ்ச நேரம் யோசித்தவர் மெதுவாக எழுந்து ஜெயச்சந்திரனின் கையைப் பிடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாக நின்றார்.
ஆதிரா கல்யாண விஷயம் கேள்விப்பட்ட உடனே உங்க அப்பா கண்ண முழிச்சு பார்த்தாரு இல்ல,அதேமாதிரி கண்டிப்பா சீக்கிரமா கண்ணு முழிச்சு எழுந்து உட்காருவார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு ஆனா எந்த சூழ்நிலையிலும் அவர் எந்த இடத்திலயும் இதுவரைக்கும் தோற்றதில்லை. அதனால் இப்பவும் அவரை தோற்க விடமாட்டேன். ரவி அவருக்கு பதிலா நீயே எலக்சன்ல நில்லு. கட்சி மேல் இடத்துல பேசு”என்று இப்போதைக்கான ஒரு முடிவை அவர் எடுத்திருந்தார்.
அதைக் கேட்டதும் ரவீந்திரன் அப்படியே அதிர்ச்சியில் " “ஐயோ அத்தை அதெல்லாம் சரிப்பட்டு வரா.து எனக்கு அரசியலில் எதுவுமே தெரியாது. எப்பவுமே நான் மாமா பின்னாடி நின்னு பழகிட்டேன். இந்த கட்சி மேலிடத்துல பேசுவது, பணம் காரியங்கள் இது மட்டும்தான் எனக்கு தெரியுமே. அதுதவிர வேற எந்த அரசியல் முடிவுகளும் எடுக்க தெரியாது. வேணும்னா நீங்களோ, இல்லை சங்கவியோ அவருக்கு பதிலா நிக்கலாம். நான் மேலிடத்துல பேசுறேன்”இன்று நேர்மையாக பதில் சொன்னான்.
அதைக் கேட்டதும் " சங்கவியோ ஐயோ நானா? இந்த அரசியல் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. அப்பாக்கு பதிலா அம்மாவே இந்தத் தொகுதியில நிக்கிறதுக்கு பேரைக் கொடுக்கட்டும். அதுதான் சரகயாவரும்" என்று எல்லாரும் சேர்ந்து இப்பொழுது மொத்தம் முடிவையும் மகேஷ்வரியிடம் விட்டு விட்டனர்.
மகேஷ்வரியோ அப்படியே குழப்பத்தில் உட்கார்ந்திருந்தார்.
அதற்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மூளைக்குள் ஏதும் யோசனை வரவில்லை.
அந்த இடத்தில் இளந்தீரன் இப்பொழுது பேசினான்.
“ஆதிரா உங்க அம்மாக்கிட்ட சொல்லு. உன் அம்மா இந்த சூழ்நிலையில எலக்சன்ல நின்னாங்கன்னா அவங்களால் எதுவுமே செய்ய முடியாது. ஜெயிக்க முடியும் ஆனால் அவங்களோட மனசு, எண்ணம் எல்லாமே மாமா மேலதான் இருக்கும். அவங்களால இறங்கி வேலை செய்ய முடியாது,எப்பவும் குழப்பத்திலேயேதான் இருப்பாங்க. அதனால நான் ஒரு முடிவு சொல்லுறேன். நான் இத்தனை வருஷம் என்னோட அரசியல் வாழ்க்கையில கத்துக்கிட்டதிலிருந்து இந்த முடிவை சொல்லுறேன். அதை ஏத்துக்கிறதும் ஏத்துக்காம போறதும் உங்க விருப்பம்” என்று சொல்லிவிட்டு எல்லாருடைய முகத்தையும் பார்த்தான்.
அவங்க எல்லாருமே தங்களது மனதில் அவன் என்ன சொல்ல போறான் என்பதை யூகித்து,அதை எதிர்பார்த்து,அவன் சொல்ல வர்றதைத சொல்லட்டும் என்று காத்திருந்தனர்.
“எனக்குத் தெரிஞ்சவரைக்கும் அரசியலில் மாமா மாதிரி பொறுமையாகவும், நிதானமாகவும். சமயோஜிதா புத்தியோடவும் செயல்படனும். அது அத்தையாலயோ, ரவியாலயோ, சங்கவியாலயோ முடியாது .ஆனால் ஜெயச்சந்திரன் நகலாக இருக்கும் ஆதிராவால எல்லாம் முடியும். இந்த எலக்சன்ல இப்போதைக்கு நிக்கறதுக்கு தகுதியான ஒரே ஆள் ஜெயச்சந்திரன் அவரோட இளைய மகள் ஆதிரா மட்டும்தான். மாமா தனக்கடுத்து அரசியல் களத்துல நிக்க வைக்கிறதுக்கு யோசிச்ச ரெண்டு பேருல ஆதிராவும் ஒருத்தி. நான் அவபேரைதான் இந்த இடத்துல சொல்லுவேன். அவள் மாமாக்கு பதிலாக இந்த தொகுதியில் நிக்கட்டும். அவளுக்காக இறங்கி வேலை செய்கிறது என் பொறுப்பு. ஏற்கனவே ஒரு துரோகிக்கு வேலை செய்திருக்கேன். இப்போ என் பொண்டாட்டிக்காக அதை விட அதிகமாக இறங்கி எல்லா வேலையும் செய்ய மாட்டேனா என்ன? இது என்னோட முடிவு நீங்க இதை யோசிச்சு சொல்லுங்க. இந்த பேச்சு கண்டிப்பா மாமா காதுல விழுந்திருக்கும். அது அவரோட முடிவாகவும் இருக்கும். அவர் இந்த முடிவுக்காக கண்டிப்பா சந்தோஷம் படுவாரு. இப்பவே இந்த இடத்திலேயே இதற்கான முடிவை எடுத்துட்டு வெளியே போவோம். அடுத்தது உடனே அதற்கான வேலையும் தொடங்குவோம். நீங்க எல்லாம் என்ன சொல்லுறீங்க”இன்று தனது முடிவை சொல்லிவிட்டு அங்க போடப்பட்டிருந்த சேரில் உட்கார்ந்து, அவர்கள் நான்கு பேரும் முகத்தையே பார்த்திருந்தான்.
ஆதிராவின் பெயரை அவன் சொல்லுவான் என்று ஆதிரா உட்பட நான்கு பேருமே எதிர்பார்க்கவில்லை.
அவன் அவனது பெயரைத்தான் சொல்லுவான் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அவன் அப்படி அவன் பெயரை சொல்லாது ஆதிராவை அந்த இடத்துக்குக் கொண்டுவர நினைத்து பேசியதும் , அவர்கள் யாருக்குமே பேச்சு வராது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மகேஸ்வரிக்கு அவன் சொன்னதெல்லாம் சரிதான் எனப்பட்டது. ஆதிராவையே இந்த எல்க்ஷன்ல நகக்க வைக்கலாம் என்று இப்பொழுது யோசனை தோன்றியது.
ரவியுமே அவர் என்ன நினைத்தாரோ அதையேதான் நினைத்தான்.
ரவீந்திரன் உடனே “அத்தை தம்பி சொல்றது ரொம்ப நல்லா ஐடியா உண்மையிலேயே உங்களை விடவும் ஆதிராதான் இதுக்கு தகுதியானா ஆள். எப்பவுமே மாமா சொல்லுறதுதான். என்னை ம்திரியே யோசிக்கிறாள், என்னை மாதிரியே பேசுறா, நல்ல பொறுமையும் நிதானமும் அவளுக்கு இருக்கு. ஆனா ல்அவளை தனியா எப்படி அரசியல் நிக்க வைக்கிறதுன்னு யோசிப்பாங்கா. அவளுக்கு நாளைக்கு கல்யாணமாகி அவளோட ஹாஸ்பண்டுக்கு அவா அரசியல்ல இருக்கிறது பிடிக்கலைன்னா பிரச்சனையாகுமே. அதுதான் ரொம்ப யோசிக்கிறேன்னு என்று நிறைய தடவை பேசியிருக்காங்க”
என்ன ரவிக்கு அவ்வளவு ஆழமான ஞானமும் விருப்பமும் இந்த அரசலில் கிடையாது என்பது ஜெயச்சந்திரனுக்கு நன்றாக தெரியும். அதனால் தான் அவர் ஆதிராவே அரசியல் எடுப்பது பற்றி யோசித்தார். அவரது முதல் விருப்பம் இளந்தீரனை இந்த கட்சியில் ஒரு ஆளாக்குவது. அடுத்து ஆதிராவை களம் இறக்கி இளந்திரணையும் ஆதிராவையும் சேர்ந்து பயணிக்க வைப்பது என்பதுதான் மாமாவோட திட்டமாக இருந்தது. அது இப்பொழுது நடக்குதுன்னு நான் உறுதியா சொல்லுவேன். அதனால்தான் ஆதிராவையே எம்.எல்.ஏ கேண்டிடேட்டா மாமாக்கு பதிலாக நிற்க வைக்கலாம்” என்று தைரியமாக சொன்னான்.
சங்கவிக்கு இது நல்ல ஐடியாவாக தெரியவும் “ஆமாம்மா அததான் சொல்லுறதும் சரித்ன் அப்பாவுக்கு எப்பவுமே ஆதிராவை அரசியல் இறக்கணும்னு ஒரு ஆசை இருந்துச்சு .ஆனா அவளுக்கு கல்யாணம் முடிஞ்சிட்டா பிரச்சினையாகும்னுதான் யோசிச்சாங்க. அதுதான் இளந்தீரன் இப்போ அவளுக்காக இருக்காங்களே. அவங்களே அவளுக்காக எல்லாம் பார்த்துப்பாங்க. அவருக்கும் கட்சியில ஏற்கனவே நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. அதனால் சொல்லுறேன்.
ஆதிராவையே நிக்க வைப்போம்” என்று எல்லோரும் ஒரு மனதாக ஆதிராவை எலக்க்ஷன்ல நிக்க வைப்பதை பத்தியே பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் அவளோ இளந்திரனையேத்ன் கண்ணெடுக்காது ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏன் அத்தான் என்னோட பெயரை சொன்னாங்க? ஏன் அவங்க பேரைச் சொல்லல? அவங்க இப்பநான் எலக்சன் நிக்கிறேன்னு சொன்னாலும் எனக்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுக்கததான் செய்யிறாங்க. இடத்துல வேற ஒருத்தர் இருந்தாங்கன்னா இப்படி யோசிப்பாங்களா? சுயநலமா நான் நிக்கணும், நான் எம்எல்ஏ ஆகணும் எனக்கு அந்த பதவி கிடைக்கனும்தானே ஆசைப்பட்டு சொல்லி இருப்பாங்க. ஆனா நம்ம அத்தாதான் அப்படி எந்த சுயநலமான முடிவும் எடுக்காமல் நியாயமானதை சொன்னாங்களே. இதுவே அவங்களோ குணத்தை காணபிக்குது.இதுக்கு மேல இளந்தீரன் அத்தானோட குணத்தை காண்பிக்க வேறொரு சந்தர்ப்பம் எப்படி கிடைக்கும்? இது போதுமே”என்று நினைத்தவள உள்ளுக்குள்ள அப்படியே நெகிழ்ந்து போயிருந்தாள்.
இப்பொழுது மகேஸ்வரி ஆதிராவின் அருகில் வந்து “உண்மையிலே உங்கப்பா இப்போ கண்முழிச்சு எழுந்து வந்தாக்கூட இதே பதிலைததான் சொல்லி இருப்பாங்க. அவருக்குப் பதிலா நான் அந்த முடிவை எடுக்கிறேன். உங்க அப்பாக்கு பதிலா இந்த முறை நம்ம தொகுதி எம்.எல்.ஏ கேண்டிட்டா உன் பேரு இருக்கணும்னு ஆசைப்படுறேன்.நீ அரசியல்ல இறங்கு ,கண்டிப்பா நி ஜெயிப்ப”என்று தனது முடிவையும் சொன்னார்.
இளந்தீரனை பார்த்தவாறே " தீராத்த்ன் சொன்னா சரியாத்தான் இருக்கும். அவங்க சொன்ன மாதிரியே இந்த எலக்ஷ்சன்ல நான் நிற்கிறேன். எப்ப மனுவை கொடுக்க போகணும்னு சொல்லுங்க போய் கொடுத்திடுவோம்" என்று சம்மதம் சொன்னாள்.
அவள் எலக்ஷ்சன்ல நிக்கிறேன்னீ சம்மதம் சொன்னது, யாருக்கும் சந்தோஷமே இல்லையோ இளந்தீரனக்கு ரொம்ப சந்தோஷம். அப்படியே வேகமாக வந்து அவளது கையை பிடித்து “வருங்கால எம்.எல்.ஏ ஆதிரா இள்ந்தீரன் அவர்களே உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்” என்று அவளை மனதார வாழ்த்தினான்.
அங்கிருந்த மற்றவர்களுமே இதை பார்த்து உண்மையிலயே இளந்தீரனின் குணத்தைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள்!