அநாயகா-29

அநாயகா-29

அநாயகா-29

அடப்பாவிங்களா!நீங்க இரண்டுபேரும் கல்யாணத்தை 

ப்ளான் பண்ணித்தான் பண்ணிருக்கீங்களா!என்று தன்னையும் அறியாமல் சத்தம்போட்டாள் சங்கவி!

அதில் ஆதிரா பதறி இளந்தீரனிடமிருந்து விலக நினைக்க,இளந்தீரனோ மெதுவாக அவளைவிடு வித்தவன்,அப்படியே இழுத்து தன் நெஞ்சோடு அணைத்தவாறே சங்கவியை திமிராகப்பார்த்தான்.

“அடுத்தவங்க பெர்சனல் ரூமுக்குள்ள வரும்போதே கதவைத் தட்டிட்டுவரணும்னு மேனர்ஸ் உங்க அக்காவுக்கு யாரும் சொல்லிக்குடுக்கலை போலிருக்கே!கண்ட நேரத்துல வந்து கண்டதையும் பாய்த்திட்டிருக்காளே!புருஷனும் பொண்டாட்டியும் முத்தம் கொடுக்கமால் வேற என்ன பண்ணுவாங்களாம்?உங்க அக்கா என்ன சின்ன நொள்ளையா ஒன்னும் தெரியாமல் இருக்கிறதுக்கு. இதுல ஷாக்கு வேற” என்று நக்கலாச் சொல்லிவிட்டு ஆதிர்வைப் பார்த்தான்.

அவன் பேசியதைக் கேட்டு ஆதிராவுக்கே சிரிப்பு வந்தது. ஆனாலும் அக்காவைப் பார்த்து சிரிக்கமுடியாதே என்று சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.

ஆனால் சங்கவியோ ‘ஹல்லோ இது என் வீடு, இது என் தங்கச்சி ரூமுடா அப்படித்தான்டா வருவேன்.உனக்கென்னடா வந்துச்சு?”

“எனக்கு ஒன்னுமில்லை நான் பொண்டாட்டிக்கூட கண்டபடி இருப்பேன். உனக்கு ப்ரீ சோ பார்க்கணும்னா பார்த்துட்டுப்போ எனக்கென்ன வந்துச்சு. உன் ரூமுக்குள்ள இப்படி ஆதிரா வந்தா ஒத்துப்பியா?அவ அப்படியெல்லாம் வரமாட்டா என் பொண்டாட்டி எல்லாத்துலயும் விபரமாக்கும். உனக்கு நானும் என் பொண்டாட்டியும் சந்தோசமா இருக்கிறது பிடிக்கலைன்னு இடைஞ்சல் பண்ண வந்திருக்குன்னு சொல்லு” என்று சொல்லிவிட்டு சங்கவியை நக்கலாகப் பார்த்தான்.

“ஆதிரா இவன்கிட்ட சொல்லிவை. என்னை பேச இவனுக்கு எந்த ரைட்ஸ்ஸூம் இல்லை. பார்த்துக்க”

“அதேமாதிரி உனக்கும் எந்த ரைட்ஸும் இல்ல நாங்க இப்போ பிஸி வெளிய போ”

“அத்தாஆஆன் என்ன பேசுறீங்க?”என்று அதைக்கேட்டு ஆதிரா சத்தம்போடவும் அவனும் வாயை மூடிக்கொண்டான்.

“என்ன அக்கா இது?என்னை பார்க்க வந்தியா? வா உட்காரு”என்று கூப்பிட்டாள்.

“உங்ளை அம்மா சாப்பிடக் கூப்பிட்டாங்க. வந்து சாப்பிடணுமாம், அப்புறம் கோயிலுக்குப் போகணுமாம் கிளம்பணுமாம் அதைச் சொல்லச் சொன்னாங்க. அதுக்குத்தான் வந்தேன். இனி உன் ரூம்பக்கமே வரமாட்டேன். நீங்க இங்க இருங்க நாங்க எங்க மாமியார் வீட்டுக்கே போயிடுறோம்” என்று சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டாள்.

ஆதிரா இப்போது திரும்பி இளந்தீரனைக் கோபத்தில் பார்த்தாள்.அவனோ எதுவுமே பேசாது அவளது மடியில் தலையை சாய்த்துப் படுத்துக்கொண்டான்.

இதுக்குமேல அவளுக்குமே அவனிடம் கோபப்பட முடியாது அவனது தலையை அழகாகக் கோதிவிட்டாள். அவனோ அவளது மற்றொரு கையைப் பிடித்து தனது நோஞ்சோடு அணைத்துக்கொண்டு, பயமில்லாது தைரியாக தூங்கிப்போனான்!

உண்மையிலேயே இப்பொழுது அவனது முகத்தை பார்த்த ஆதிராவிற்கு ஆச்சரியமாக இருந்தது. 

நான் என்ன நினைத்து இவங்களை கேஸில்ல் இருந்து விடுதலையாக்கி வெளியே கொண்டு வந்தேன். ஆனால் இங்கு என்ன நடந்திட்டிருக்கு என்று நினைத்தவளுக்கோ அதை அவளாலயே நம்ப முடியாது அப்படியே அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

இது இந்த பன்னிரண்டு வருஷமா நான் பார்த்த அத்தான் இல்லை. அதற்கு முன்னாடி என்கூட பழகின என்னுடைய தீராத்தான். என்னை பொண்டாட்டி உரிமையா சொல்லி உரிமைக் கொண்டாடிய, நான் காதலித்த அதே என் அத்தான் என்று நினைத்தவளின் உள்ளம் தானாகவே அவன் பால் உருகிப் போனது.

அப்படியே எவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் என்று தெரியாது. அவன் ஒரு தோள் மேலே தன் தலையை சாய்த்து அவளும் கவிழ்ந்து படுக்க, அப்படியே தூங்கி இருந்தாள்.

இளந்திரனுக்கு தன்மேல் ஏதோ பாரமா உணர்ந்தவன் கண் முழித்து பார்த்தான்.

அவன் ஆதிராவின் மடியில் சாய்ந்த படுத்திருக்கன அவனது தோளில் அவள் தலைக்கவிழ்ந்து படுத்திருந்தாள். 

அப்படியே மெதுவாக அசைந்து எழுந்தான். ஆதிராவோ அவன் எழுந்ததை உணரவில்லை. மெதுவாக எழுந்தவன் அவனை அப்படியே காட்டிலில் சாய்த்து படுக்க வைத்துவிட்டு எழுந்து முகம் கழுவி வந்தவன் தேவதை போன்று தூங்கிக் கொண்டிருக்கும் அவளைத்தான் அப்படியே அசையாது நின்றவாறே பார்த்திருந்தான்.

எவ்வளவு நேரம் அவன் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தான் என்று அவனுக்கே தெரியாது.

ஆனால் அவனுக்கு பின்னாடியிருந்து அவனது மாமியார் இவ்வளவு நேரமும் அவனை கவனித்து விட்டுசென்றதையே அவன் கவனிக்கவில்லை. 

அவர் சங்கவியிடம் இரண்டு பேரையும் சாப்பிட கூட்டிட்டு வா என்று சொல்லித்தான் அனுப்பி இருந்தார்.

ஆனால் சங்கவி வந்து இங்கு நடந்ததையும் அவனோடு சண்டை போட்டதையும் நேராக கீழ போய் மகேஸ்வரிடம் சொன்ன்ள்.

“உன் மகளும் மருமகனும் கொஞ்சிக்கிட்டு இருக்காங்க இப்போதைக்கு வர மாட்டாங்க. நானும் என் புருஷன் போய் சாப்பிட போறோம்’ என்று அவள் சாப்பிட போய்விட்டாள்.

அவள் அப்படி சொல்லி சென்றதை பார்த்த சங்கரி,கவிதா, மகேஸ்வரி என்று மூன்று பேரும் புரியாது பார்த்தனர்.

அதனால் கொஞ்ச நேரம் காத்திருந்து மகேஸ்வரி மெதுவாக மேலே வந்தார்.

அப்போது ஆதிராவைக் கட்டிலில் சரியாக படுக்க வைத்துவிட்டு. அவளை பார்த்துக் கொண்டிருந்த இளந்திரனைதான் கண்டார்.

இவ்வளவு பொறுமையோடு தனது மகளை கவனித்துக் கொள்ளும் இளந்தீரனைப் பார்த்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.‌ நான் எதுவும் கனவுக் கினவு காணலையே என்று தனது கண்ணையே நம்ப முடியாது கொஞ்ச நேரம் முழித்து முழித்துப் பார்த்தார்.

ஆனால் அவர் பார்த்தது உண்மைதான்.இளந்தீரன் தனது மகளை ஆசையாக பார்த்துக் கொண்டிருப்பதை கண்டவர் இதற்கு மேலே இங்கே நிற்கக்கூடாது உ என்று வேகமாக கீழே இறங்கி போய்விட்டார்.

மகேஸ்வரியும் பிள்ளைங்க இரண்டுபேரையும் கூப்பிடாமல் கீழே வந்ததை கண்ட கவிதாதான் பதறிப்போய் “என்னாச்சு இன்னும் இரண்டு பேரும் சண்டை போடுறாங்களூ? என் இளந்தீரன் எதுவும் பிரச்சனை பண்றானா?” என்ன ஆச்சு?” என்று பதறி கேட்டார்.

“ச்சே.சே அப்படியெல்லாம் இல்ல. ஆதிரா தூங்கிட்டு இருக்கா. அவ எழுந்ததும் இரண்டு பேரும் சேர்ந்து வந்து சாப்பிடுவாங்க. நம்ம அடுத்துஇருக்கிற வேலையைப் பார்ப்போம்”என்றுவிட்டார்.

அவருக்கு இளந்தீரன் நடந்து கொண்டதை பார்த்ததும் ஒரு நம்பிக்கை வந்திருந்தது. ஆனாலும் இவன் மதில் மேல இருக்கிற பூனைப்போல. எப்போ எந்தப்பக்கம் குதிப்பான்னே தெரியாது. எல்லாத்துலயும் கவனமா இருக்கணும். ஆதிரா இளந்தீரன் விசயத்துல கொஞ்சம் புத்தியை கடன்கொடுக்கிறாள் என்று மனதிற்குள்ளே பல கணக்குகளைப் போட்டுக்கொண்டிருந்தார்.

இளந்தீரன் ஆதிராவை ரொம்ப நேரமாக் பார்த்திருந்தவன் அவளைத் தொந்தரவு செய்யாது அப்படியே அந்த ரூமுக்குள்ளயே சுத்திப்பார்த்தான்.

அவ்வளவு நேர்த்தியாக அவளைப்போலவே அவளது ரூமும் இருந்தது. இதே ரூமுக்குள்ள வைச்சுத்தானே அவளிடம் என்னெல்லாமோ உளறினேன் என்று நினைத்தவனுக்கு நெஞ்சில் சுருக்கென்று குத்தியதுபோல உணர்ந்தான்.

‘ஆனால் அந்த உளறல்கள்தான் உண்மையானதாக இருந்திருக்கு?அதுக்கப்புறம் மதுமதியிடம் பேசினது எல்லாமே மூளைக்குள்ளிருந்து பேசியிருக்கேன். இவக்கிட்ட பேசினது மட்டும்தான் மனசுக்குள்ளிருந்து பேசியிருக்கேன்’ என்று நினைத்தவன் அப்படியே அவளை வாரி அள்ளியெடுத்துட்டு எந்த மனுஷனுங்களுமே இல்லாத ஏதாவது ஒரு இடத்துக்கு போயிடணும்னு நினைத்தான்.

அவளது கால் பக்கத்தில் மீண்டும் அந்தக் கட்டிலில் உட்கார்ந்தவனுக்கு ‘ஏன் இப்படியெல்லாம் நடந்துச்சு என்று ஒரு கேள்வி தொக்கி வந்தது. அப்படியே கண்ணைமூடி கொஞ்சநேரம் அவளது காலடியிலயே படுத்தவன், அவளது காலைத் தூக்கி தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு அப்படியே யோசித்திருந்தான்.

அவனது யோசனைக்கு தாளம் போடுறமாதிரியே அவளது கொலுசை தனது விரல்களால் தீண்டிக்கொண்டிருக்க. அது அழகாக அவனது இதயத்துடிப்பிற்கு ஏத்தவாறே சத்தம் எழுப்பியது.

ஆதிரா நல்ல தூக்கத்திலிருந்து ஏதோ கொஞ்சம் சத்தம் கேட்குதே என்று கண்ணு முழித்து பார்த்தாள்.

அவள் மெதுவாக எழுந்து என்னவென்று கவனிக்க அவளது கால் ஏதோ மேடையில் மேலிருந்து போன்று உணர்வு வந்தது, உடனே எழுந்து உட்கார்ந்தாள்.

அங்கே கண்ணை மூடி தன் கொலுசை தாளம் போட்டவாறு, யோசனையிலிருந்து இளந்தீரனைப் பார்த்து அவளுக்கு அதிர்ச்சி விட ஆச்சரியமாக இருந்தது.

இந்த அத்தானுக்கு என்னாச்சு? பொம்பளைங்களுக்கு தான் தாலி கட்டினதும் தாலி செண்டிமெண்டல்ல உருகுவாங்கன்னு பார்த்தால், இங்க இந்த அத்தானுக்கு வந்திருக்கே! என்ன ஒரு ஆச்சரியம்! என்று நினைத்தவள் மெதுவாக அவனது கையில் இருந்து தனது காலை எடுக்க முயன்றாள்.

அதில் கண் முழித்தவன் அவளது காலை பிடித்து வைத்துக்கொண்டு “கொஞ்சம் டயர்டா இருக்கேன் படுத்து தூங்குலாம்ன இந்த பக்கமா படுத்து தூங்கினது தப்பா போச்சுபோல, கட்டின புருஷன்னுக்கூட மதிக்காமல் என் நெஞ்சிலயே காலைப்போட்டு மிதிச்சிட்டிருக்க. உனக்கு பிடிக்காம தாலி கட்டினால் இப்படித்தான் நெஞ்சிலே ஏறி மிதிப்பியா?”என்று கேட்டவன் எழுந்து உட்கார்ந்தான்.

அதைக் கேட்டதும் ஆதிராதான் “ நம்மதான் இவங்க நெஞ்சில கால் போட்டமோ? இது எப்போ நடந்தது? இவங்க என் மடியில தானே படுத்திருந்தாங்க? என்று யோசித்தவளுக்கு எதுவுமே புரியாமல் மெதுவாக எழுந்தாள்.

அவள் குழப்பத்தில் இருப்பதை புரிந்தவன் “ஆமா தூக்கத்துல எதுக்கு எனக்கு முத்தம் தந்த?நான் முத்தம் நேரா தானே தந்தேன் அதேமாதிரி நீயும் தரவேண்டியது தானே.அதென்ன தூக்கத்துல தர்ற?" என்று கொஞ்சம் கோபத்தில் கேட்டான்.

“என்னது முத்தமா?என்னத்தான் சொல்லுறீங்க. நானே நீங்க என் மடியில் படுத்து தூங்கினதும் அப்படியே தூங்கிட்டேன். இதுல முத்தமாம்ல முத்தம். கழுத்துல த்லியேறினதும் மனசு குளுகுளுன்னு மாறி உங்களுக்கு முத்தம் தர்றளவுக்கு நீங்க ஒன்னும் காதல் மன்னன் இல்லை. ஏதோ தாலி வ்ங்கிட்டோமே அதை வேஸ்ட் பண்ணக்கூடாதுன்னு என் கழுத்துல கட்டிட்டுப் பேச்சைப் பாரு பேச்சை. இவங்களுக்கு முத்தம் குடுத்தனாம் முத்தம்”

“அப்போ நீ எனக்கு முத்தம் தரல?”

“தரல”

“ஏன் தரல?”

அதைக்கேட்டதும் “என்ன?ஏன் தரலலையா?இதென்ன கேள்வி?”

“அதுதான் கேள்வியே ஏன் தரலை?”

“அது அது”என்று வாய் குழறியவள் “எனக்குப் பசிக்குது நான் கீழேப்போறேன். உங்களுக்கும் பசிக்கும்ல வாங்க சாப்பிடப்போகலாம். அம்மா கோவிலுக்கு வேற போகணும்னு சொன்னாங்க. அப்படியே அப்பாவையும் பார்க்கப்போகணும்”என்று அந்த பேச்சிலிருந்து தப்பிக்க நினைத்தாள்.

ஆதிரா எல்லார் விசயத்துலயும் தெளிவு. ஆனால் இவன்கிட்ட மட்டும் எப்பவுமே குழம்பிடுறா!இப்பவும் குழம்பிவிட்டாள். அதுதானே அவனுக்கும் வேணும்!

“எனக்கும் பசிக்குது. என்ன புதுமாப்பிள்ளைக்கு தலைவாலை விருந்து என் மாமியார் ரெடி பண்ணி வைச்சிருக்காங்களா?”

“உங்க தலையை எடுக்கமா விருந்து வைக்கிறீங்களேன்னு சந்தோசமா சாப்பிடவாங்க”என்று வெளியே நடந்தவளின் கையைப்பிடித்து இழுத்தான்.

“என்னடி நக்கலு? இது புது மாப்பிள்ளைக்கு மரியாதை குடுக்கலன்னா நான் என்ன பண்ணுவேன்னு தெரியாதா”

“என்ன எங்கம்மா மண்டையை உடைப்பீங்களா?”

ஆதிரா ஊஷாராகிட்டான்னு தெரிஞ்சதும் இதுக்குமேல பேசினா சரியா வராதுன்னு, அவளை இழுத்து அவள் தோள்மேல் கையைப்போட்டவாறே கீழே இறங்கினான்.

“இந்த அலும்புக்குத்தான் வாங்கி கட்டிக்கிட்டீங்கத்தான். இன்னும் கொட்டம் அடங்கல”

“அது அடங்காது கூடவேபொறந்தது.வேணும்னா நீ அடக்கிப்பாரேன்”

“யாரு நான்? அடக்கணும்?”என்றவள் அமைதியாக இறங்கினாள்.

“அதைப் பார்த்திருந்த சங்கவிதான் உங்க தம்பிக்கு இருக்கிற கொழுப்பைப் பார்த்தீங்களா?”

“அவன் பொண்டாட்டி அவன் கையைப்போட்டு வர்றான். நீ உன் புருஷனை மட்டும் பாரு”

“க்கும்”

அவங்க இரண்டுபேரும் வரவும் கவிதாவும் சங்கீதாவும் எழுந்துப்போய் சாப்பாடு எடுத்து வைத்தனர்.

“என்ன சங்கரியாத்தா உன் மகள் என்ன இந்தப்பக்கம் வந்திருக்காங்க?உன் மருமகனும் வந்திருக்காரு போலிருக்கு. உன் வீட்டுல ஏதூவது விசேஷமா?”

அதைக்கேட்டதும் ஆதிரா அவனை முறைக்கவும் இதுக்குமேல பேசினா ஓவராகிடும் என்று அமைதியாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு எழுந்தான்.

ஆதிராவும் சாப்பிட்டு வர, மகேஷ்வரி அவளை கூப்பிட்டு தாம்பூலத்துல நகையும், புதுசா புடவையும் வேஷ்டியையும் வைத்து கொடுத்தார்.

“ஆதிராம்மா இதைப்போட்டுட்டு வா.கோயில்ல பூஜைக்கு சொல்லிருக்கேன். அது முடிச்சிட்டு அப்படியே அப்பாக்கிட்ட போய் ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்திடலாம்”என்று சொன்னார்.

அதைக்கேட்டதும் இளந்தீரன் ஏதோ சொல்லவர ஆதிரா அவனது கையைபுபிடித்து அழுத்தி தன்னோடு நிற்கவைத்தாள்.

அதைப்புரிந்தவன் வேறு ஒன்றும் சொல்லாது அமைதியாகிவிட்டான். 

அதைப்பார்த்த பெரியவங்களுக்குத்தான் ஹப்பாடா பையன் ஆதிராகிட்ட மொத்தமா அடங்கிடுவான் இதுபோதும் என்று நிம்மதியானார்கள்!