அநாயகா-31
அநாயகா-31
எல்லோரும் வீட்டுக்கு வந்ததும் கவிதாவும் விஜயராஜும் மகேஷ்வரியிடம் பேசினார்கள்.
“அண்ணி அது வந்து பெரியவன்தான் அண்ணன்கூடவே வேலைப்பார்த்துட்டு அப்படியே இங்கயே இருந்துட்டான். அதனால சின்னவனையும் ஆதிராவையும் நாங்க எங்கக்கூட வைச்சிக்கிறோம் அவங்களை இப்போவே எங்க வீட்டுக்குக்கூட்டிட்டு போறோமே. நீங்க இரண்டுபேரையும எங்கக்கூட அனுப்பிவைங்க”என்று நேரடியாகவே கேட்டார்.
மகேஷ்வரிக்கு கவிதா கேட்பதும் சரிதான்னு தெரிஞ்சாலும் இளந்தீரனை நம்பி ஆதிராவை அனுப்ப ரொம்ப யோசித்தார்.
இளந்தீரனும் ஆதிராவும் ஒருத்தொருக்கொருத்தர் பார்த்துவிட்டு என்ன பதில் சொல்ல என்று குழம்பினார்கள்.
மகேஷ்வரி அமைதியாக இருப்பதைப் பார்த்த சங்கரிதான் “ என்ன மகேஷ்வரி உன் புள்ளைங்க இரண்டும் உன்கூடவே இருக்கணும்னு நினைக்கிற அதுசரிதான். ஆனால் அவளும் இரண்டு மகன்களைப் பெத்தவள்ல அவளுக்கும் மகன் மருகள்கள்னு இருக்கணும்னு ஆசை வரும்ல. மூத்தவதான் இங்கயே இருந்துட்டா. அப்போ இளையவளாவது அங்கப்போகணும்ல. ஏதாவது ஒன்னை விட்டுக்கொடுக்கணும்ல. இதுவரைக்கும் அவ ரவி சங்கவியை என் வீட்டுக்குக் கூட்டிட்டுப்போகட்டுமான்னு கேட்கவேயில்லையே. அப்போ நம்மளும் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப்போகணும்ல”என்று நியாயமானதை பேசினார்.
மகேஷ்வரி திரும்பி ஆதிராவைப் பார்த்தார். ஆதிரா “நாங்க அத்தைக்கூடவே…”என்று சொல்லிமுடிக்கும் முன்பே அவளது கையைப்பிடித்த தடுத்தவன் “நாங்க கொஞ்சநாளைக்கு இங்க இருக்கோம். மாமாவை வீட்டுக்குக்கூட்டிட்டு வந்ததும் அங்க வர்றோம். இதுவரைக்கும் பொறுமையா இருந்தீங்கள்ல இப்பவும் இருங்க. பொறுத்தார் பூமியாள்வாராம் கவிதாயம்மையாரே. அதனால் மகன்களுக்காக சண்டைப்போடாமல் அடுத்து வர்ற பேரப்பிள்ளைங்களை எப்படி பிரிச்சு கொஞ்சுறதுன்னு யோசிசிட்டிருங்க. இதுக்கு எதுக்கு இரண்டுபேரும் பேசிக்கிட்டு”என்று சொன்னவன் “வா ஆதிரா எனக்குத் தலைவலிக்குது,உனக்கும் தலைவலிக்குதுல்ல நேத்துலயிருந்து சரியா தூக்கமில்லை”என்றவன் யாரு என்ன சொல்லவர்றாங்கன்னு பார்க்காமலயே அவளையும் இழுத்துக்கொண்டு மாடிக்குப் போய்விட்டான்.
அவன் சொன்னதைக் கேட்டு எல்லோரும் வாயடைத்துப்போய் நின்றுவிட்டனர்.
ஆதிராதான் அவர்களைப் பார்த்தவாறே, என்ன சொல்லுறதுன்னு தெரியாமலயே அவன்கூடவே போனாள்.
இதுக்குமேல என்னத்தை பேசுறது என்று கவிதாவும் விஜயகுமாரும் வீட்டுக்குக் கிளம்பிவிட்டனர்.
ஆனாலும் கவிதாவுக்கு மனசே ஆறாலை. அண்ணன் மகள்களைக் கட்டிக்கிட்டு இரண்டு மகன்களும் இங்கயே இருக்காங்களே என்றுதான் யோசித்தார். எப்டடியோ அவங்க இரண்டுபேரும் நல்லாயிருந்தா சரிதான் என்று மனசை தேத்திக்கொண்டார்.
மகேஷ்வரியோ சங்கவியைப் பார்த்தவர் “உங்க தங்கச்சிபோற போக்குல உனக்கு முன்னாடி எனக்கு பேரன் பேத்திகளைப் பெத்துக்கொடுத்திருவா போலிருக்கு. நீ இப்படியே இரு. எதையும் யோசிச்சு செய்யாத போ”என்று அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
சங்கவிக்கு வந்தக் கோபத்துல ரவியைத்தான் கொலைவெறியில் பார்த்தாள்.
“உங்கத் தம்பி ஓவரா பண்ணிட்டுப்போறான். அவனால எனக்கு எங்கம்மாகட்ட திட்டுக்கிடைக்குது. அவன்கிட்ட சொல்லி வைங்க”
“யாரு அவன்கிட்டயா? சொல்லி வைக்கணுமா? சரிதான். நீ சொல்றன்னு அவன்கிட்ட போய் நான் சொனனேன் வையேன் முதல் வேலையா எதை செய்யாதன்னு சொல்றோமோ அதைதான் செய்திட்டிருப்பான். அப்புறம் நீ தான் கடுப்பாகி என்கிட்ட சண்டைக்கு வருவ. உனக்கு எது வசதி அவன் கிட்ட சொல்லனுமா? சொல்லாம அமைதியா இருக்கணுமா?”
“அவன் வீட்ல வந்த ஒரு நாளைக்குள்ளயே எனக்கு நிம்மதி இல்லாம போய்ட்டு. எனக்கும் இவனுக்கும் ஆகவே ஆகாது இந்த வீட்ல இனி எப்படித்தான் இருக்க போறேன் தெரியல என் சொந்த வீடு என் வீட்டிலே என்னால நிம்மதியா இருக்க முடியாது போல வாங்க கிளம்புங்க பேசாம நம்ம வீட்டுக்கு போவோம். இவன் இங்கே இருக்கட்டும்” இன்று அவள் அலப்பறையைக் கூட்டிக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்தா சங்கரி ஆத்தாதான் “ஏன்டி உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? ஆதிராவை அவன் கல்யாணம் பண்ணி இருக்கான். உன்னைமாதிரிதானே ஆதிராவும். உன்னோட புருஷனுக்கு இங்க என்ன உரிமை இருக்கோ அதே மாதிரி அவனுக்கும் இங்க இருக்க உரிமை இருக்குல்ல. உனக்கு பிடிக்குலைன்னா நீ உன் ரூம்லபோய் இரு.ஏன் அவனைப் பத்தி பேசிட்டு இருக்க? இப்போதானே கவிதா கேட்டுட்டு போனாள். ஒரு பிள்ளையாவது என்னோடு அனுப்பிவிடுங்கன்னீ உங்க அம்மா என்ன சொல்லிவிட்டா? இப்போ என் புருஷன் இல்ல என் இரண்டு பிள்ளைகளை கொஞ்ச நாள் இங்கு இருக்கட்டும்னுதானே சொன்னா. அதனால இப்போ இருக்கிற வீட்டு நிலைமையை புரிஞ்சுகிட்டு அமைதியா இரு. இபபடி தையத் தக்கன்னு குதிக்காமல் போய் வாழ்கிற வழியை பார். சீக்கிரம் எனக்கும் கொள்ளுப்பேரனை பெத்துத் தர வழியெதுவா அதைப்பாரு”
அதுதானே இப்படித்தான் பேசுவன்னு நான் நினைச்சேன். ஆத்தா சங்கிரி ஆத்தா! அப்பத்தா உனக்கு எப்பவுமே அவன்தானே ஒசத்தி. அத்தைக்கும் அவனைத்தான் பிடிக்கும். இவரை மட்டும் என்ன தவிட்டுக்கா வாங்குனீங்க? என் புருஷனை பிடிக்க மாட்டேங்குது என்னையும் பிடிக்க மாட்டேங்குது. இதுக்குத்தான் இதுக்குத்தான் அவனை எல்லாம் வீட்டுக்குள்ள விடக்கூடாதுன்னு நான் இருந்தேன். என் தங்கச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்க வீட்டுக்கு வந்து என்னையவே அதிகாரம் பண்றான்”
“அவன் எங்கடி அதிகாரம் பண்றான் அவன் உண்டு அவன் பொண்டாட்டி உண்டு இருக்கான். நீதான் இப்போ பிரச்சனைக்கு குதிச்சிட்டு இருக்க. போ போ. எப்பவுமே அடுத்தவங்கள பாக்காம நம்மளோட வாழ்க்கை எப்படி வாழலாம்னு பாரு” என திட்டியவர் இனி இவளிடம் பதில் பேச முடியாது என போய்விட்டார்.
மகேஸ்வரியும் இதில் நாம் ஏதாவது பதில் சொன்னாள் இரண்டு பொண்ணுங்களுக்கு இடையில் பிரச்சனை வரும் என்று அமைதியாக போய்விட்டார்.
யாருமே நமக்கு சப்போர்ட்டுக்கு வர மாட்டாங்க என்று தெரிந்ததும் சங்கவியும் வேறு வழியின்றி உள்ளே போய்விட்டாள்.
ரவிக்கு சங்கவியைபத்தி தெரியும். அவளுக்கு ஆரம்பத்தில் இருந்து இளந்தீரன பிடிக்காது. அவன் இத்தனை வருஷமா அவங்க அப்பாகிட்ட பிரச்சனை பண்றதுலிருந்து அவனை வெறுக்க ஆரம்பித்து இருந்தாள். இந்த வெறுப்பு இப்போது வரைக்கும் இருக்கிறது. இளந்தீரன் செய்யாத பிரச்சனையே இல்லையே!இவளையும் திடீர்னு மனசுமாறி நம்ம வீட்ல ஒருத்தனாக பாருன்னு சொன்னால் உடனே எப்படி அவளால் மாறமுடியும்? நமக்குத்தான் அவன் சொந்த தம்பி, சொந்த இரத்தம் .என்ன தப்பு செய்தாலும் மறந்து மன்னிக்க முடியும் .அவளுக்கு அப்படியா அத்தை மகன்தானே கொஞ்சம் கொஞ்சமா மாறுவா” என்று அவன் தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டான். அது அதன் பிறகு அவள் பேசுவதை பிரச்சினையாக மாற்றிக் கொள்ளவில்லை.
இங்கே இளந்தீரன் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான்.
அவனது பக்கத்தில் உட்கார்ந்த ஆதிரா அவனது முகத்தையே பார்த்திருந்தாள்.
“என்ன ஜெயச்சந்திரன் பெத்த சித்திரம் என்னையவே முறைச்சிப்பார்க்குத?என்ன விசயம்?”
“எல்லாரும் முன்னாடி என்ன சொல்லிட்டு வந்தீங்க எனக்கு ஒரே கேவலமாவும் வெக்கமாவும் இருக்கு. இப்படியா ஓபனா பேசிட்டு வருவீங்க? நம்மள பத்தி என்ன நினைப்பாங்க தப்பா நினைக்க மாட்டாங்களா?”
“தப்பா நினைக்க என்ன இருக்? இதுக்கு மேல என்ன தப்பா நினைக்க என்ன இருக்கு?” எனக் கேட்டவன் ஒரு மார்க்கமாக சரிதான்.
“உங்கள பத்தி தப்பா நினைக்க ஒன்றும் இல்லை சார் ஆனா என்ன பத்தி நினைக்க நிறைய இருக்குல்ல. இந்த பொண்ணு கல்யாணம் ஆனதும் பாரீ புருஷன் முன்னாடியே ஓடுது பாருன்னு சொல்ல மாட்டாங்களா இல்லையா?”
“அப்படி சொன்னா நல்லதுதானே கல்யாணம் முடிஞ்ச உடனே புருஷனை எப்படி கவனிக்குது பாருன்னு சந்தோஷமா சொல்லுறாங்க நினைச்சுக்கோ”
“சரித்ன் உங்கக்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன்” என தலையணையை எடுத்துப்போட்டு படுத்தவள் கண்ணை இறுக மூடிக்கொண்டாள்.
இளந்தீரன் இப்பொழுது மெதுவாக அவ காதில் குனிந்து பேசினான்.
“இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்டு மறந்துட்டியா?” என ஹஸ்கி வாய்ஸில் அவளிடம் கேட்டான்.
அதைக் கேட்டதும் வேகமாக துள்ளி எழுந்து உட்கார்ந்தவள் அவனது முகத்தை ஒரு விதமான கலக்கத்தோடு பார்த்தாள்.
“என்னம்மா ஆதிரா? உன் முகம் என்ன இவ்வளவு கலக்கமா இருக்கு? நான் உன் புருஷன். உனக்கு பிடிச்ச காதலன். உன் அத்தை மகன். இவ்வளவு தூரம் பழகி இருக்கோம், அப்புறம் எதுக்கு இந்த கலக்கம்?” என்ன நக்கலாகக் கேட்டவன் அவளது நாடியை தனது ஒரு விரலால் தொட்டு நிமிர்த்தினான்.
அவளோ பதறிப் போய் தனது கண்களை வேகமாக சுழற்றியவள், அவனைப் பார்க்காது வெளியே பார்த்தாள்.
“இதுவே உங்க அப்பா நம்மக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி நான் உன் கழுத்துல தாலி கட்டியிருந்தா என் பக்கத்துல தைரியமா வந்து கொஞ்சிப்பேசிருப்பல்ல,இந்த பயம் இருந்திருக்காதுல்ல? ஏதோ ஒரு தாலி கட்டுறான் இவனை காதலிச்சதுக்காக இந்தத் தாலியை வாங்கிப்போம் அப்படின்னு தானே வாங்கிக்கிட்ட. மனசார என்கூட வாழனும்னு நீ அந்த நொடி நினைக்கலதானே” என வேண்டுமென்று அவளை வலிக்க வைக்கும் வார்த்தைகளால் கேள்வி கேட்டான்.
அதைக் கேட்டதும் பதறியவள் அப்படியே திரும்பி அவனைப் பார்த்தவளுக்கு கண்ணீர் மூட்டி கொண்டு வந்தது.
“கல்யாணம் எப்போ எப்படி யார் மூலமா நடந்திருந்தாலும் நீங்க என் கழுத்துல தாலி கட்டினால் அதை மனசார ஏத்துக்கிட்டு வாழ்வதற்கு ஒத்துக்கிட்டுதான் வந்திருப்பேன். இப்ப எப்படி இருந்தாலும் அதே மனநிலையில்தான் எங்க அப்பா ஏற்பாடு பண்ணினாலும் இருந்திருப்பேன். இப்படி கண்டதையும் பேசு என மன உளைச்சலை உண்டு பண்ணாதீங்க. உங்களுக்கு தலையில காயம் இருக்குல்ல. தையல் எடுக்கணும்ல. நம்ம ஒன்னும் வயசானவங்க கிடையாது வாழ்க்கை தொடங்க நிறைய நாட்கள் இருக்கு. அவசர அவசரமாக வாழ்க்கை தொடங்கனும்னு எந்த ஒரு அவசரமும் இல்லை, அவசியமும் இல்லை. நமக்கான உணர்வுகள் ஒன்னா பயணிக்கும் பொழுது அந்த வாழ்க்கையை ஆரம்பிக்கிறது நல்லது. இப்போ எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் தேவை தூங்கட்டுமா? இப்பவேதான் வாழ்க்கை ஆரம்பிக்கணும் அப்படின்னா அது உங்க விருப்பம் ஆனா அது என்னோட விருப்பம் இல்லாமல் உங்க விருப்பமா மட்டும்த்ன் இருக்கும். நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்”
“புரியல இப்ப என்ன பண்ணுவ?" என அவ்வளவு நேரம் அவள் பேசியதற்கான எந்தவிதமான புரிதலும் இல்லாததுபோலவே கேள்விக்கேட்டான்.
புரியலன்னு சொன்னதும, இவ்வளவு நேரம் தெளிவா பேசிட்டு இருந்த ஆதிரா அவனைக் குழப்பத்தோடு பார்த்தாள்.
அவள் அப்படி குழப்பத்தோடு அவனைப் பார்க்கவும்,அவளை இழுத்து இறுக்கமாகக் கட்டிக் கொண்டான்.
அதில் அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளது நெஞ்சோ “அவன் எப்படியும் சும்மா விடமாட்டான். இன்னைக்கே என்கூட வாழ ஆரம்பிச்சிடுவான். நம்ம எதுக்கு இப்போ பயப்படனும். அவன் தாலி கட்டும்போது பயப்படாம இருந்துட்டு இப்போ எதுக்கு பயப்படனும்?எதுனாலும் அதை அந்த நேரத்துக்காக ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்” என்று தன்னைதானே தேற்றி கொண்டிருந்தாள்.
இவள் ஒரு யோசனையோடு இருக்க,அவனோ எதுவுமே செய்யாது அமைதியாகக் கட்டிக்கொண்டு படுத்திருந்தான்.
“என்ன அமைதியா ஒன்னும் செய்யாம படுத்திருக்காங்க என்ன பிளான்ல இருக்காங்கன்னு தெரியலையே இந்த அத்தான்” என்று அவனது நெஞ்சில் இருந்து தலையை விலக்கியவள் அவனது முகத்தை ஏறிட்டு பார்த்தாள்.
“என்னடி?”உரிமையாக அவளைப் பார்த்துக் கேட்டான்.
அவளால் இப்போது அவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை. இவன் நம்மள குழப்புறானா? இல்லை நம்ம தான் தானாக குழம்புறோமா” என்று தெளிவில்லாத யோசனையோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னடி இவ்ளோ நேரம் தெளிவா பேசிட்டு இருந்த. இப்போ குழப்பத்தோடு என்ன பார்க்கிறா, ரொம்ப குழப்பிட்டனோ? இப்படியே குழம்பிட்டேயிரு அப்பதான் எனக்கு நல்லது. என் வாழ்க்கை ஸ்மூத்தா போகும்” என்று சொன்னவன் அவளது நெற்றியில் முத்தம் வைத்தவன், மீண்டுமாக அவளை தனது நெஞ்சில் சாய்த்து கண்ணை மூடிக்கொண்டான்.
நீ என்ன பண்ணாலும் எனக்கு சம்மதம்தான் பண்ணாம இருந்தாலும் எனக்கு சம்மதம் தான் என்ற ஒரு முடிவுக்கு வந்தவள் அவனது நெஞ்சில் அப்படியே சாய்ந்து தூங்கிவிட்டாள்.
அவள் தூங்கியதும் அப்படியே அவளது முகத்தை தடவியாறே கொஞ்ச நேரம் பார்த்து இருந்தவன், நிறைய முடிவுகளை அந்த ஒரு நொடிக்குள் எடுத்து விட்டு தூங்கிப் போனான்.
இந்த முடிவுகள் அனைத்தும் அவனுக்கு சாதகமாக இருக்குமா? இல்லை அந்த முடிவுகள் ஆதிராவுக்காக எடுக்கப்பட்டதா?
அவன் சாதகமாக முடிவெடுத்தாலும்சரிஸ்ரீபாதகமாக முடிவு எடுத்தாலும் சரி. எதை செய்தாலும் அதை ஆதிரா எதிர்கொள்ளும் மன நிலையில்தான் இப்பொழுது இருக்கிறாள்!