அநாயகா-25

அநாயகா-25

அநாயகா-25

இளந்தீரன் ஆதிராவோடு மண்டபத்திற்குள்ளே போகும்போதே சிவானந்தன் பயந்துவிட்டார். 

‘இவன் எதுக்கு இப்போ இங்கே வர்றான். இவனைப் போட்டு தள்ளுவதற்கு ஆள் அனுப்பினனே? அவனுங்க இவனைப் போட்டுத் தள்ளாமல் என்ன பண்ணிட்டு இருந்தானுங்க?இவனே உயிரோடு இருக்கும்போது, அப்போ அந்த ஜெயச்சந்திரனும் உயிரோடுதான் இருக்கானோ!அதனாலதானே ஆதிரா இவன்கூட தைரியமா வந்திருக்கா? எதுக்காக இவன் வந்திருக்கான்? இவன்ஐ அடிச்சு விரட்டனுமே” என்று யோசித்தவர் டக்கென்று முடிவெடுத்து தனது ஆட்களிடம் அவனை தடுத்து நிறுத்துமாறு கண்ணைக் காண்பித்தார்.

ஆனால் அவங்களுக்கு இளந்தீரனைப் பத்தி நல்லாவே தெரியும் என்பதால், யாருமே அவனைத் தடுத்து நிறுத்த முன் வரவில்லை. 

ரகுவரனோ மெதுவாக இயல்பாகி, இளந்தீரனைப் பார்த்து நட்பாகச் சிரித்தான். அவனை கல்யாணத்திற்கு கூப்பிட்டிருக்கிறதுபோலவே காட்டிக்கொண்டான். 

இளந்தீரனும் மதுமதியும் நெருக்கமாக பாழகினது காதலித்தது என்று எல்லாமே எல்லோருக்குமே தெரியும். ஆனாலும் அது அவங்க அவங்க வாழ்க்கை, அவங்க அவங்க விருப்பம் என்று நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஆனாலும் கட்சி சார்ந்த ஆட்களுக்கோ இளந்தீரன் அடுத்து என்ன பிரச்சனையை உண்டுபண்ண போறானோ என்கின்ற ஆர்வம் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்தது.

இளந்தீரனோ சிரித்தவாறு ரகுவரனைப் பார்த்து கையசைத்தவன் நடக்கட்டும் நடக்கடுட்டும் என்று சொல்லிவிட்டு, அப்படியேபோய் முன்னாடி உட்கார்ந்தான். 

அவன் உட்கார்ந்தது மட்டுமல்லாமல், பக்கத்தில் இருந்த சேரினை சரியாக இழுத்துப்போட்டு ஆதிராவை பிடித்து உட்கார வைத்தான்.

ஆதிராவும் அவனிடம் இந்த நேரத்திலும் இந்த இடத்திலும் எதுவுமே பேசமுடியாது அவனை எரிச்சலில் முறைத்துப்பார்த்தவள், வாயிக்குள்ளாகவே முணுமுணுத்துக்கொண்டே உட்கார்ந்திருந்தாள்.

இந்த அத்தான் என்னதான் செய்ய காத்திருக்காங்கன்னு தெரியலையே. மதுமதி கழுத்துல தாலிகட்டணும்னு வந்துட்டு இப்படி கல்யாணத்தைப் பார்க்க வந்தவங்க மாதிரி உட்கார்ந்திருக்கிறதைப் பாரேன். இவங்களை என்ன செய்யவென்று புரியாது அவனது முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.

“என் மூஞ்சியை எதுக்கு பாக்குற? மணமேடையில இருக்கிற மாப்பிள்ளையையும் பொண்ணையீம் பாரு. அங்க உட்க்ந்துதான் அவன் மதுமதி கழுத்துலதாலி அங்கே கட்டப்போறான். அங்க பாரு என்னைம பார்க்காத” என்று அவளிடம் சொன்னவன் மனமேடையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“இந்த அத்தானுக்கு என்னாச்சு. ஒன்பது பவுனுக்குத் தாலியை வாங்கிட்டு வந்தாங்களே, மதுமதியை கல்யாணம் பண்ணிக்க போவாங்கன்னு பார்த்தால், அவளோட கல்யாணத்தை பார்க்கிறதுக்கு இங்க வந்து உட்கார்ந்திருக்காங்க. இவங்க என்ன நினைச்சிட்டு தாலி வாங்கிட்டு வந்தாங்க? இவங்க வந்ததும் இல்லாமல் நம்மளையும் சேர்த்துல இழுத்துட்டு வந்திருக்காங்க. இங்க பார்க்குறவங்க எல்லாம் என்னடா ஜெயச்சந்திரனோட மகள் இந்தக் கல்யாணத்துக்கு வந்திருக்காளேன்னு நினைக்க மாட்டாங்களா? இல்லையா? நமக்கிருக்கிற ஆயிரெத்தெட்டு பிரச்சனையில இந்த அத்தானோட பிரச்சனையும்ல நம்ம தலையில வந்துவிழுது.இதுல வேற இந்த அத்தான் நடக்கப்போற கல்யாணத்தை நிறுத்திட்டு இந்த மதுமதி கழுத்துல தாலிய வேற கட்டிட்டாங்கன்னா அவ்வளவுதான், மொத்த ப்ரப்ளமும் எனக்கு பிராப்ளமா வந்து, என்னை ஓட ஓட விரட்டப் போறாங்க” என வாய்விட்டு புலம்பிவாறே உட்கார்ந்திருந்தாள்.

“எதுக்கு இப்போ இவ்வளவு புலம்புற? அதுதான் நான் எப்படிப்பட்டவன்னு தெரியும்ல அப்புறம் எதுக்கு என்னை வெளியே எடுத்த? யாரை கேட்டுட்டு இதையெல்லாம் செய்த?என்கிட்ட ஏதாவது சொன்னியா என்ன? எதுவும் சொல்லாமல் நீயா தானே முடிவு எடுத்த. அப்போ நீயும் என் கூட எல்லா விஷயத்துலயும் உக்கார்ந்து பிரச்சனைகளை சமாளி.அதுதான் உனக்கு நல்லது”

அதைக் கேட்டதும் ஆதிராவுக்கு உண்மையிலே கோபம் வந்துவிட்டது. உடனே திரும்பி “யோவ் அத்தான் இனி ஏதாவது பேசுன மரியாதையெல்லாம் கொடுக்க மாட்டேன். உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? நீயா ஒரு பிரச்சனையை உண்டு பண்ணி அதுக்கு மேல வந்து உட்க்கார்ந்து இருக்கிற. நீ அந்தப் பிரச்சனைக்காக சண்டை போடு.நீ உன் காதலையும் காதலியையும் காப்பாத்த பிரச்சனை பண்ணு, ஒய் மீ? நானே சிவனேன்னு ஹாஸ்பிடல்ல உன்னை பார்க்காமல் அப்பாவை பார்க்கிறதுக்குத்தானே வந்தேன். அப்படி வந்தவளை வாசல்ல வைச்சே இழுத்துட்டு வந்து, என் காசுலயே தாலி வாங்கிக்கிட்ட இப்படி மண்டபத்துல வந்து உட்கார வச்சிருக்கியே உனக்கு இது நியாயமா. எள்ளுதான்யா எண்ணெய்க்காக காயணும் எலி புழுக்கை எதுக்கய்யா காயணும்? இந்த மண்டபத்தில் நல்ல சாப்பாடு போடுறாங்கன்னு யாராவது உனக்கு சொன்னாங்களா? இப்படி வந்து ஹாயா உட்கார்ந்திட்டு என்னைக் கடுப்பேத்திட்டிருக்க, இருக்கிற கோபத்துல நானே கத்தி கல்யாணத்தை நிறுத்திட்டு என்னமும் பண்ணுன்னு போயிட்டே இருப்பேன்”என்று மூச்சு வாங்க வசனம் பேசிக்கொண்டிருந்தவளை நக்கலாகப் பார்த்தான்.

“என்ன அப்படிப் பார்க்கிற?நானும் ரவுடிப் பொண்ணுதான்யா”

“அது பார்த்தாலே தெரியுது . ஆமா என்ன கேட்ட இந்த மண்டபத்துல நல்ல சாப்பாடு போடுறாங்கன்னா?ஆமா இந்தக் கல்யாணத்துல பிரியாணி போடுறாங்களாம், அதுவும் மட்டன் பிரியாணியாம், உனக்குத்தான் மட்டன் பிரியாணின்னா ரொம்ப பிடிக்குமே. அதுதான் கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கேன் கொஞ்சம் வெயிட் பண்ணு. தாலிக்கட்டி முடிஞ்சதும் பொறுமையாக இருந்து இரண்டு பிளேட் பிரியாணி அடிச்சிட்டு போலாம்" 

"என்ன காமெடி பண்றதா நினைப்பா? இந்த காமெடி எல்லாம் இப்போதைக்கு இங்கு செல்லுபடியாகாது. நீங்க வாங்கிட்டு வந்த தாலியை எடுத்துட்டு போய் மரியாதையா மதுமதி கழுத்துல கட்டப்பாருங்க. உங்களை வெளியே எடுத்து உங்க கல்யாணத்தை நடத்தி வைச்ச புண்ணியமாவது எனக்கு சேரட்டும்" 

" அப்படிங்கிற?" என்று நக்கலாகக் கேட்டுவிட்டு அவளது முகத்தைத் திரும்பிப் பார்த்தான்.

அவளது கண்களோ அவனை பார்க்கமுடியாது அப்படியே அலைபாய்ந்தது.

அதைக் கண்டு கொண்டவன் “என்ன கண்ணு அங்கயும் இங்கயும் நாட்டியமாடுது. என்னவாம்?" 

“என் கண்ணு எப்படி வேணும்னாலும் நாட்டியமாடும். உங்களுக்கு என்ன வந்தது?நீங்க இப்போ என் கண்ணை பார்த்து ஆராய்ச்சி பண்றதை விட்டுட்டு உங்களுக்கு எதிர்ல இருக்காளே உங்க காதலி மதுமதி கண்ணைப் பாரத்து ஆராய்ச்சி பண்ணுங்க. அதுதான் இப்போதைக்கும், பிற்காலத்துல உங்க வாழ்க்கைக்கு நல்லது” என்றவள் பேச்சுவாக்கில் அவனது முகத்தை பிடித்து மதுமதியை நோக்கி திருப்பினாள்.

ஆதிரா இளந்தீரனை தொட்டுப் பேசுவதைக் கண்ட மதுமதி தனது கண்களை விரித்து ஆச்சரியமாக பார்த்தாள். 

“என்ன இந்த இளந்தீரன் நம்ம ரகுவரனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதைப் பத்தி எந்தவிதக் கவலையும் இல்லாமல் அவனுடைய பழைய கிரஷ்கிட்ட ஒட்டி உரசிக்கிட்டிருக்கான்? நம்மளைப் பத்தி யோசிக்காமல், இவ்வளவு சீக்கிரமா அவளோடு ஒட்டிக்கிட்டானா? அப்போ இவன் நம்மள காதலிக்கிறேன்னு சொன்னதெல்லாம் பொய்யா? இல்ல நடிப்பா? எதுன்னு புரியலையே! இந்த ஆதிராவும் இவ்வளவு நெருக்கமா இளந்தீரனின் முகத்தை பிடித்தெல்லாம் விளையாடுறா? என்னங்கடா நடக்குது இங்க?” என்று தனது கல்யாணம் நடக்கப் போகும் நேரத்தில் அவளது கவனம் இவர்களை நோக்கி தான் இருந்தது. 

அவளது என்ன ஓட்டங்களை சரியாக கவனித்த, இளந்தீரனும் உதட்டை வளைத்து மெதுவாக சிரித்தவாறே தனது மீசை கடித்தான்.

அவனது பார்வை மதுமதி நோக்கி இருப்பதை கண்ட ரகுவரனுக்கு அவ்வளவு ஆத்திரமாக வந்தது. ஆனாலும் அதையெல்லாம் அடக்கிக்கொண்டான்.

“உன்னையெல்லாம் உயிரோடு விட்டு வைச்சது என் தப்புத்தான்டா. நீ என் கல்யாணத்துக்கு வந்து நான் கட்டிக்க போறவளையே ஒரு மார்க்கமா பார்த்து வைக்கிற பாத்தியா, உனக்கு இருக்குடா! எப்படிரும் நான் உன்ன சும்மா விடமாட்டேன்” என்று அவனை முறைத்துப் பார்த்தான். 

அவன் உள்ளே வந்ததும் அவனைப் பார்த்து சிரித்த அதே ரகுவரன்தான், இப்பொழுது அவனை கோபத்தில் முறைக்கவும் செய்தான். 

ஆனாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், தன்னைத்தானே நிதானப்படுத்திக் கொண்டு ஐயர் சொன்ன மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தான். 

அதற்குள் தாலியையும் எல்லாரும் தொட்டு ஆசீர்வாதம் பண்ணி கொடுத்துவிட, ஐயர் அந்த தாலியை எடுத்து மந்திரம் ஓதி ரகுவரன் கையில் கொடுத்தார். ரகுவரன் அதை வாங்கி மதுமதி கழுத்தில் கட்டப்போனான்.

அதைப் பார்த்த ஆதிராதான் பதறிவிட்டாள். உடனே இளந்தீரனின் தோளைப் பிடித்து இழுத்தவள் “என்னத்தான் இப்படிப் பார்த்துட்டு இருக்கீங்க. ராகுவரன் உங்க காதலியோட கழுத்துல தாலி கட்டப்போறான். நீங்க எழுந்து சீக்கிரம் போங்க. நீங்க வாங்கிட்டு வந்த தாலியை அவ கழுத்தில் கட்டுங்க. போங்கத்தான் ஓடிப்போய் கட்டுங்க. எது வந்தாலும் எந்த பிரச்சனையானாலும் அப்புறமா பார்த்துக்கலாம்” என்று அவனை உந்தித் தள்ளினாள்.

ஆனால் இளந்தீரனோ அவள் பேசுவதை கேட்டும், அமைதியாக எதுவும் செய்யாது,அப்படியே அசையாது உட்கார்ந்திருந்தான்.

அதைப் பார்த்தவள், அவனது கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வேகமாக மணமேடையை நோக்கிப் போனாள்.

ஆனால் ரகுவரனோ அவர்கள் மணமேடைய நோக்கி வருவதை பார்த்ததும் வேகவேகமாக மதுமதியின் கழுத்தில் தாலி கட்டி,மூன்று முடிச்சு போட ஆரம்பித்தான். 

அதைப் பார்த்தது ஆதிராவிற்கு அப்படியே மனசு விட்டு போச்சு. உடனே கோபத்தில் இளந்தீரனைப் பார்த்தவள் “எல்லாம் போச்சு அவக்கழுத்துல தாலி கட்டிட்டான் அவளும் பாருங்க எவ்வளவு ஒய்யரமா உட்கார்ந்து அவன் கையாலத் தாலியை வாங்கிட்டு இருக்காள். உங்க காதலிதானே அவ, நீங்க காதலிச்சவதானே அவ. இவ்வளவு கஷ்டப்பட்டு தாலியெல்லாம் வாங்கிட்டு வந்தும், அவனை தாலி கட்ட விட்டுட்டீங்களே. என்னத்தான் நீங்க? உங்களை எவ்வளவு தைரியமான ஆளுன்னு நான் நினைச்சிட்டிருக்கேன். ஆனால் நீங்க இப்படி பண்ணிட்டீங்களே. இப்ப என்ன பண்ண போறீங்க?” என்று அவனுக்காக பரிதவித்து பேசியவளை இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான்.

அதற்குள் கையில் அட்சதை வைத்திருந்த மக்கள் கூட்டம் எல்லோரும் அட்சதையே தூக்கி ரகுவரன் மதுமதி தம்பதிகளின் மேல் வீச அது நேராக ஆதிரா இளந்திரன் மீதும் வந்து விழுந்தது.

அதில் உணர்வுக்கு வந்த ஆதிரா எதுக்கு இந்த அத்தான் நம்மளை இப்படி பார்க்கிறாங்க? என்று கொஞ்சம் யோசனையோடு அவனை கவனித்துப் பார்த்தாள்.

அவனது பார்வையே வித்தியாசமாக இருக்கவும், ஏன் இந்த அத்தான் இப்படி பார்க்கிறாங்க, இதுக்கு மேல நம்ம இங்க நிக்கக்கூடாது என்று நினைத்தவள் திரும்பி பார்த்தாள்.

அங்கே எல்லோரும் அவர்களையே பார்ப்பது போன்று இருந்தது. உடனே அங்கிருந்து நடந்து கீழே இறங்க முற்பட்டாள்.

ஆனால் அவளால் இறங்க முடியவில்லை. அவளது கையை யாரோ பிடித்து இழுப்பது போலிருந்தது. யார் நம்ம கையைப் பிடிச்சி இழுக்குறாங்க என்று பார்த்தாள்.

இளந்தீரன்தான் அவளது கையை இறுக்கமாக பிடித்து தன்பக்கத்தில் இழுத்தான். 

அதை அங்கிருந்த எல்லாருமே பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். 

“அத்தான் எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க. வாங்க சீக்கிரமாக இரண்டுபேரும் வெளியே போயிடுவோம்.இனியும் இங்க நின்னா சரியாகாது. அதுதான் உங்க உயிர் நண்பனே உங்கக் காதலிக்கு தாலியை கட்டுறதுக்கு விட்டுட்டீங்களே. இதுக்குமேல இங்கிருந்தால் என்ன பிரயோஜனம்? உங்களுக்கு வேணும்னா உங்க காதலிக் கல்யாணத்துல பிரியாணியை சாப்பிடுறதுக்குஸ்ரீஆசையா இருக்கும். ஆனால் எனக்கு அப்படியான ஆசையெல்லாம் இல்லை. நான் போறேன் கைய விடுங்க” என சொன்னவள் அவனது கையிலிருந்துத் தன் கையை இருந்து உருவியெடுக்க முயன்றாள்.

அதையெல்லாம் கண்டுக்காதவன் அவளையும் இழுத்துக்கொண்டு நேராக மதுமதி ரகுவரன் இருக்கும் இடத்திற்கு சென்றவன், ரகுவரனின் சட்டையை வேகமாக பிடித்து இழுத்து அவனே தள்ளிவிட்டு அவன் உட்கார்ந்திருந்த இடத்தில் உட்கார்ந்தான். 

அதைப் பார்த்ததும் மதுமதி மிரண்டு விட்டாள். உடனே அவளை சொடக்குப்போட்டுக் கூப்பிட்டவன் “இந்த இடத்திலிருந்து முதல்ல மரியாதையா எழுந்து உன் புருஷன் ரகுவரன் பக்கத்தில் போய் நில்லு” என்று சத்தம் போட்டான். 

அவளுக்கோ இங்கே என்ன நடக்கப்போகிறது? என்று புரியாமல் பார்த்துக்கொண்டு அவள் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

அதைப்பார்த்த ரகுவரன்தான் ஓடி வந்து அவளின் கையைப்பிடித்து இழுத்து எழுப்பியவன்,தன் பக்கமாக நிறுத்திக் கொண்டான். 

இங்கு என்ன நடக்கிறது என்று புரியாது பார்த்திருந்த ஆதிராவின் கையை இப்போதும் விடாது பிடித்திருந்தவன், அப்படியே அவளது கையை வேகமாக இழுத்தான். அவள் அவன் பக்கத்தில் தடுமாறி உட்கார்ந்தாள்.

அவள் பதறியவாறே “அத்தான் என்ன பண்ணிட்டிருக்கீங்க நீங்க? ஏன் என்னையும் சேர்த்து இழுத்துட்டு வந்து இங்க உட்கார வேச்சிருக்கீங்க. உங்களுக்கு நட்டுக் கழண்டுட்டுப்போல. என் கையை விடுங்க. பைத்தியம் மாதிரி பண்ணாதிங்க”என்று கோபத்தில் பல்லைக் கடித்தவாறு பேசியவள்,அப்படியே அவனிடமிருந்து விலகி எழுந்திருக்க முயன்றாள்.

ஆனால் அவனோ அவளை எழுந்திருக்க விடாது இறுக்கிப்பிடித்து, தன் பக்கத்தில் உட்கார வைத்தான். அவளை எழுந்திருக்கவிடாது அவளது தொடை மேலே தனது காலை வைத்து அப்படியே அழுத்திப் பிடித்துக்கொண்டான்.

உடனே அங்கே உட்கார்ந்திருந்த ஐயரிடம் திரும்பியவன் “மந்திரத்தை ஓதுங்க ஐயரே. என் கல்யாணத்தை நடத்தி வைங்க, உங்களுக்கான பேமண்டை எக்ஸ்ட்ரா சேர்த்து தர்றேன்”என்று சொன்னதும் ஐயர் சந்தோஷமாக தலையாட்டி மந்திரத்தை ஓத ஆரம்பித்தார். 

ஆத்தி என்ன இது புதுசா இருக்கு என்று அதைக்கேட்ட எல்லோருமே வாயைப்பிளந்துக்கொண்டு பார்க்க,மதுமதி ரகுவரனிடமிருந்து தனது கையை உருவியெடுக்க முயன்றாள். அவனோ அவளைவிடாது பிடித்து வைத்திருந்தான்.

அதற்குள் இளந்தீரன் தனது பாக்கெட்டில் வைத்திருந்த தாலியை வேகமாக எடுத்தான்.

“ஐயோ இந்த அத்தானுக்கு பைத்தியம் பிடிச்சு போச்சா என்ன? இப்படி பிஹேவ் பண்றாங்க” அவள் மிரண்டு வேண்டாம் என்று தலை அசைக்க, அவனும் எனக்கு வேணும் என்று அவனும் தலையை மேலும் கீழும் அசைத்தவாறே அவளது கழுத்தில் வேகமாக தாலியைக் கட்டினான்.

அவன் என்ன ரகுவரன் மாதிரியா தாலியை மஞ்சள் கயித்துல கட்டுறான் தங்கத்தாலி,அதை அப்படியே அவளது கழுத்தில் போட்டு கொக்கியை மாட்டிவிட்டு அவளைப் பார்த்தான்.

ஆதிரா இப்பொழுது தனது கழுத்தில் தொங்கி கொண்டிருந்த தாலியை எடுத்து பார்த்தவள் அப்படியே திரும்பி இளந்தீரனைப் பார்த்தாள்.

அவள் மறுபடியும் குனிந்து தனது கழுத்தில் கிடக்கும் தாலியைப் பார்த்தாள்,அப்படியே இளந்தீரனைப் பார்த்தாள்.

இப்படியே ஒரு நாலைஞ்சு தடவை பார்த்துமே அவளுக்கு என்ன நடந்தது என்பதை மூளைக்குள் ரெஜிஸ்டர் பண்ணிக்கொள்ள முடியவில்லை. 

அதைப் பார்த்த இளந்தீரனோ ஆதிராவின் தோளின் மீது கையை போட்டு தன் பக்கமாக இழுத்து நெருங்கி உட்கார வைத்தவன், அங்கு முன்னாடி வைத்திருந்த குங்குமத்தை எடுத்து அவளது நெற்றியில் வைத்துவிட்டான்.

அந்த ஒரு நொடியில் ஆதிரா தன்னை அறியாமலே கண்களை மூடி, அந்த குங்குமத்தை தனது நெற்றியில் ஏற்றுக் கொண்டாள்!