அநாயகா-20

அநாயகா-20

அநாயகா-20

இளந்தீரன் சிவானந்தனின் வீட்டிலிரீந்து வெளியே வந்தான். ஆதிராவுடைய கார் கொஞ்சம் தள்ளி நிற்பதை பார்த்தான். அவளும் உள்ள என்ன நடக்குதோ என்பது தெரியாது பதறிப்போய் மதுமதி வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்தவனுக்கு ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியாக இருந்தது. நமக்காக இப்பவும் வந்து உதவி செய்கிற இவளுக்கு நான் என்ன செய்திருக்கேன்?இதுவரைக்கும் சண்டைதான் போட்டிருக்கேன். இப்பவும் நான் மதுமதியை கூட்டிட்டு வருவேன்னு காத்திருக்காளே! என நினைத்தவாறே நடந்தவனுக்கு அவளது முகத்தை பார்க்க தயக்கமாக இருந்தது.

அதனால் நேராக டிரைவரிடம் போய் எங்கே போகவேண்டும் என்று சொல்லிவிட்டு, அந்தப்பக்கமாகக் கதவைத் திறந்து உள்ளே உட்கார்ந்தான்.

அவன் சொன்ன இடத்தைக் கேட்டதும் டிரைவர் நேரடியாக ஆதிராவைத்தான் குழப்பத்தோடு திரும்பி பார்த்தான். 

ஆதிராவும் “என்ன ஆச்சு?” என்று கேட்டவாறு பக்கத்தில் வந்தாள்.

“அதுவந்துங்க மேடம் அந்த ஆத்துப்பாலத்து பக்கத்துல போகணும்னு சொல்றாரு. நீங்க ஏற்கனவே நம்ம வீட்டுக்கு போகணும்னுதானே சொன்னீங்க. ஆனால் இவர் வந்து இப்போ அங்க போகணும்னு சொல்லுறாரே. அதுதான் என்ன பண்ணனும் எங்க போகணும்னு நீங்க சொன்னா போகலாம்னு உங்களை பார்த்தேன்” என்று மெதுவாக ஒருவித சந்தேகத்துடன் பேசினான்.

ஏனென்றால் அந்த டிரைவருக்கு இளந்தீரனை பற்றி நன்றாக தெரியும். இத்தனை வருஷமாக ஜெயசந்திரன்கிட்ட வேலை பார்க்கிற அவனுக்கு இளந்தீரனைப் பத்தி தெரியாததா என்ன? அதனால்தான் இளந்தீரனிடம் நம்பிக்கை இல்லாது ஒவ்வொன்றுக்கும் ஆதிராவிடமே கேட்டுக் கொண்டிருந்தான். இப்போ இளந்தீரனை நம்பி அங்கெல்லாம் போகமுடியாது என்றுதான் யோசனையோடு அவளிடமே கேட்டான். 

ஆதிராவையும் அங்கே கூட்டிட்டு போகலாமா! வேண்டாமா? என்று பயந்தான். ஆதிராவை இளந்தீரன் ஏதாவது அந்த ரகுவரன்கூட சேர்த்து செய்துட்டா என்ன பண்ணமுடியும்! அதனால்அவன் ஆதிரா அங்கே போக வேண்டாமென்று நினைக்கிறான். 

ஆதிராவுக்கு டிரைவரின் சந்தேகம் புரிந்தது. உடனே திரும்பி இளந்தீரனை பார்த்தவள் “என்னத்தான் எங்க போகணும? உள்ள போய் என்ன பேசினீங்க? எதுவும் பிரச்சனையா? நம்ம இப்போ நேரா வீட்டுக்கு போகலாமே நீங்க வருவீங்கன்னு நம்ம வீட்டுல யாருக்குமே தெரியாது. நான் உங்களை என் வீட்டுக்கு கூட்டிட்டுப்போகணும்னு நினைச்சுத்தான் வெயிட் பண்ணிட்டிருந்தேன். மதுமதியோட வருவீங்கல்ல அப்போ எங்க வீட்டுக்குப்போனா பிரச்சனை இருக்காதுன்னு யோசிச்சேன். அவங்களுக்கு பிடிக்குதோ? பிடிக்கலையோ? எப்படின்னாலும் உங்களை ஏத்துப்பாங்க. இப்போ ஏன் மதுமதி உங்கக்கூட வரலை. ஏன் ஆத்துப்பாலத்துக்குப் போகணும்னு டிரைவருக்கிட்ட சொல்லுறீங்க?”

“அது வந்து எனக்கு மதுமதிக்கூட கொஞ்சம் முக்கியமா பேச வேண்டியதிருக்கு. ரகுவரன் அவளைத் தனியா கூட்டிட்டு வர்றேன்னு சொல்லிருக்கான். ஒருவேளை அவள் அந்தநேரத்துல என் கூட வருதுக்கு சம்மதிச்சான்னா அவளோடுதான் வருவேன். அதனால் அவங்க வீட்லயும் பிரச்சனையாகவும், நம்ம வீட்டுலயும் பிரச்சனையாகும். ஏற்கனவே என்னை யாருக்கும் பிடிக்காது. நான் வர்றதையே யாரும் விரும்ப மாட்டாங்க. ஒருவேளை மதுமதி என்கூட வந்தான்னா அவளைக் கல்யாணம் பண்ணிட்டு நான் தனியா வேறெங்கயாவது போய் வாழ வேண்டிருக்கும். நீ என்கூட வந்து அங்க விட்டுட்டு, கிளம்பி போய்டு அதுதான் உனக்கு நல்லது. நீ பயப்படாது உன்னை ஒன்னும் செய்யிறதுக்காக அங்க கூட்டிட்டுப் போகலை.உன் டிரைவரைக்கு உன் பாதுகாப்பு முக்கியம்னு யோசிக்கிறான். அவனே யோசிக்கும்போது நான் யோசிக்கமாட்டேனா?மாமாவுக்கும் எனக்கும் இருந்த பிரச்சனை வேற. அவ்வளவு கெட்டவனும் இல்லை. அவ்வளவு நல்லவனும் இல்லை. நம்பி காரை எடுக்கச்சொல்லு” 

அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ஆதிரா சிறிது நேரம் அமைதியாக அவனையே பார்த்தாள்.

அந்த அமைதி இளந்தீரனை பாதித்தது. அவனுமே அப்படியே கொஞ்ச நேரம் அவளை அமைதியாக பார்த்தான்.

இளந்தீரனின் அந்த அமைதி சில பல குழப்பங்களுக்கு தீர்வா இருக்கும் என்று நினைத்தாள். ஆனால் அது இனும் பலப்பல குழப்பங்களை உருவாக்க தயாராகயிருந்தது. 

ஆதிராதான் இப்போது அந்த அமைதி உடைத்து இளந்தீரனிடம் பேசினாள்.

“இதுவரைக்கும் உங்களைக் கூட்டிட்டு வந்திருக்கேன் இனி மதுமதியையும் பார்க்க கூட்டிட்டு போறதில எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நாங்க உங்களை அங்க அந்த ஆத்துப்பாலத்து மேலயே விட்டுட்டு, உடனே கிளம்பிடுறேன். இதற்கு அப்புறமாவது உங்க வாழ்க்கை எப்படி வாழணும்னு ஒழுங்கா தீர்மாணம் எடுப்பீங்கன்னு நினைக்கிறேன்” என்றவள் அவனது பதிலுக்கு காத்திராமல் காரில் ஏறி அவன் பக்கத்துலயே உட்கார்ந்தாள்.

அதற்குமேல அவனிடம் பேச எதுவும் இல்லை என்பதால், அவள் அவனைத் திரும்பி பார்க்கவேயில்லை.

ஆதிராவும் இளந்தீரனும் இப்பொழுது ரகுவரன் சொன்ன இடத்திற்கு போய் சேர்ந்தார்கள்.

இவர்களது கார் போவதற்கு முன்னாடியே அங்கே ஒரு கார் நின்றிருந்தது. அது மதுமதியின் கார்தான். அதைப் பார்த்தவுடன் இளந்தீரன் முகத்தில் ஒரு சந்தோஷம் வந்தது. 

உடனே ஆதிராவிடம் எதுவும் சொல்லாமலே வேக வேகமாக இளந்தீரன் இறங்கி போய்விட்டான்.

மதுமதி இன்னும் காரைவிட்டு இறங்கவேயில்லை. ஆதிரா இருப்பதையும் கவனிக்கவில்லை.

இளந்தீரன் இறங்கி அந்தக் கார் பக்கத்தில் போவதைப் பார்த்த டிரைவருக்குத்தான் கோபம் வந்தது. 

“நம்ம சின்ன மேடம் இவ்வளவு இறங்கி வந்து இவனுக்கு எல்லாம் செய்திருக்காங்க. ஜெயில்ல இருந்து வெளியே எடுத்துட்டு வந்திருக்காங்க. ஆனாலும் இந்த ஆளுக்குக் கொஞ்சம்கூட நன்றியே இல்லாமல் அந்த பொண்ணைப் பார்க்க இறங்கி போயிட்டானே என்று வருத்தப்பட்டான். இனி அங்கே நிற்க கூடாது என்று ஆதிராவிடம் கேட்காமல் காரை திருப்பிக் கொண்டு கிளம்பினான்.

ஆதிராவுக்குமே கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் எதுவும் பேசாமல் தனது கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

அவனது மனசு அவளை அறியாமலே ஒரு விதமாக ஏங்கி துடிக்க ஆரம்பித்தது. ஆனாலும் அதை கட்டுப்படுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

இளந்தீரன் வந்து கார் கதவைத் தட்டிக்கொண்டு நிற்பதைப் பார்த்ததும் மதுமதி காரை விட்டு கீழே இறங்கிவந்தாள்.

அவளைப் பார்த்தவுடனே இளந்தீரன் அவரது கையை பிடித்து தன் பக்கமாக இழுத்தவன் அவளை கட்டிப்பிடிக்க முயன்றான்.

ஆனால் மதுமதியோ வெடுக்கென்று அவனது கையிலிருந்து தனது கையை வேகமாக உருவியெடுத்துவிட்டு, அவனிடமிருந்து சட்டென்று விலகி நின்றாள்.

இந்த விலகலை இளந்தீரன் உண்மையிலயே எதிர்பார்க்கவில்லை. அவன் அவள் விலகி நின்றதும் அப்படியே அதிர்ச்சியில் அவளை கண்கள் விரிய, சட்டென்று ஏறிய கோபத்தில் பார்த்தான்.

இவ்வளவு பிரச்சனையாகி நான் ஒரு மாசம் ஜெயில்ல இருந்துட்டு வந்திருக்கேன். என்னைப் பார்த்ததும் மச்சான்னு ஓடிவருவான்னு பார்த்தால், இவளென்ன என்கிட்ட இருந்து இப்படி விலகி நிற்கிறாள் என்ற கோபத்துடன் அவளை மீண்டும் பிடித்து இழுக்க கையை நீட்டினான்.

“என்ன பண்றீங்க இளந்தீரன்?உங்களுக்கு அறிவில்லையா?என்னை ரகு மாமாதான் கூட்டிட்டு வந்தாங்க. அவங்க கார்ல இருக்காங்க. அவங்க முன்னாடி என்னை இப்படி கட்டிப்பிடிக்க வர்றீங்க? அவங்க போய் அப்பா கிட்ட சொன்னால் என்னாகும்? திரும்பவும் பிரச்சினையாகும். ஏற்கனவே பிரச்சனையாகிதான் எங்க அம்மா பிடிவாதமா ராகுவரான் மாமாவுக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. இப்ப நீங்க கட்டுப்பிடிச்சீங்கன்னா எப்படி? இதையும் அம்மா பெருசாக்கி பிரச்சனை பண்ணுவாங்க. " என்று ஏதேதோ உளறியவள் அவனிடமிருந்து விலகி நின்றாள்.

இதை சத்தியமாக இளந்தீரன் எதிர்பார்க்கவில்லை.

நம்ம ஒரு மாசம் ஜெயில இருந்துட்டு, இவளை பார்க்க முடியாம ஏங்கி தவிக்கிறது போல அவளும் நம்மளை பார்க்கிறதுக்காக ஏங்கித் தவிச்சிட்டு இருப்பாளௌன்னு ஓடிவந்து இவளைக் கட்டிப்பிடிச்சா இவா என்ன இப்படி பேசுறா என்று இன்னும் அதிர்ச்சியாகி அப்படியே நின்றுவிட்டான்.

அவன் தன்னைப் பார்த்து அதிர்ச்சியாகி நிற்பதைப் பார்த்ததும் மதுமதி என்ன நினைத்தாளோ மெதுவாக அவன் பக்கத்தில் வந்தாள்.

“அது வந்து இளா நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க முன்னாடி எல்லாம் நீங்களும் நானும் லவ் பண்ணதுக்கு ரகு மாமாதான் துணையா இருந்தாங்க ஆனா இப்போ அவங்களுக்கு எனக்கும் எங்கேஜ்மென்ட் முடிஞ்சு இன்னும் இரண்டு நாள்ல கல்யாணம் நடக்கப்போகிற நேரத்துல, நீங்களும் நானும் இப்படி பேசிட்டிருந்தால், ஊர் என்ன பேசும் தப்பாதானே பேசுவாங்க. அதனால்தான் கொஞ்சம் விலகி நிக்கலாம்னு அப்படி பேசிட்டேன், தப்பா எடுத்துக்காதீங்க” என்று கொஞ்சம் சமாதானமாக பேசினாள்.

“யாரு என்னமோ பேசிட்டு போகட்டும் அதெல்லாம் பத்தி கவலைப்படற ஆளா நீ? இதுக்கு முன்னாடி நம்ம எப்படியெல்லாம் காதலிச்சோம்.உனக்கு தெரியாதா? காலேஜ்ல படிக்கிறதுல இருந்தே காதலிக்கிறோம். அப்போ எல்லாம் வராத பிரச்சனை இப்போ வருதா. இல்லை கேட்கிறேன் சொல்லுடி, இப்போ என்ன திடீர்னு எங்கிருந்து இப்படியான பேச்சுக்கள் எல்லாம் வரும்னு நீ பேசிட்டிருக்கன்னு எனக்கு புரியல?”

“அப்படியில்லை இளந்தீரா நீங்க தப்பா நினைக்காதீங்க. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக காத்திருக்கிறவர் முன்னாடி நான் உங்களை கொஞ்சிக்கிட்டிருந்தா அது நல்லாவா இருக்கும், ரகு மாமாவுக்கும் கஷ்டமாதானே இருக்கும்.அதனாலதான் நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு உங்கக்கிட்ட சொல்றேன்”

“நீ எதுக்காக இப்போ ரகுவரனுக்காக யோசிக்கணும்? நீயும் நானும் காதலிக்கிறது ரகுவரனுக்கு தெரியத்தானே செய்யும், அப்படித் தெரிஞ்சும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கான், நீயும் சம்மதிச்சிருக்கிற. என்ன அர்த்தத்துல இதெல்லாம் நடக்குது? அவனோடான கல்யாணத்துக்கு நீ தயாராகிட்டன்னு சொல்லு. உனக்கு இப்போ அவன்கூட வாழ்றதுதான் பிடிச்சிருக்கு அப்படித்தானே!”

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. அம்மா கட்டாயப்படுத்தினதுனால எல்லாம் நடந்துச்சு. எங்க இரண்டுபேருக்கும் வேற வழியேயில்லாமாதான் சம்மதிச்சோம், அதுவும் இல்லாம நீங்க எப்ப வருவீங்க என்ன பண்ணுவீங்கன்னு எதுவுமே தெரியாமல் நான் யாருகிட்ட நம்ம காதலுக்காக போராட முடியும் சொல்லுங்க. நீங்க வர்றதுக்காகத்தான் காத்திருந்தேன்”

“சரி நீ சொல்றதெல்லாம் எனக்கு புரியுது.இப்போதான் நான் வந்துட்டேன்ல. என்கூட இப்போவே வா நம்ம கோயில்ல போய் தாலிகட்டிக் கல்யாணம் பண்ணிக்கலாம், யாரு என்ன பண்ணினாலும், எதிர்த்து வந்தாலும் நான் சமாளிச்சுக்கிறேன். என் மே நம்பிக்கை இருக்குல்ல. வா என்கூட”எனறு அவளது கையைப் பிடிக்க முயன்றான்.

அவளோ அவன் கைக்கு பிடிகொடுக்காமல் ஒதுங்கியவள்“அது எப்படி வர முடியும் இளா? உங்களை நம்பி வரதுக்கு நான் தயார்தான். ஆனால் இப்போ நான் உங்கக்கூட வந்தா எங்க அப்பாவோட மானம், மரியாதை எல்லாம் போயிடும். அதனால கொஞ்சம் பொறுமையா இருங்க. நான் அப்பாகிட்ட பேசுறேன். அப்பா கண்டிப்பா நம்ம காதலுக்கு சம்மதம் சொல்லுவார். அதே மேடையில உங்களுக்கும் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கவும் வாய்ப்பு இருக்கு அதனால கொஞ்சம் பொறுமையா இருங்க”

“ஓகேமா நீ சொல்றது வாஸ்தவம்தான். இப்போ நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்க அப்பாக்கு தலைகுனிவா போயிடும். வா இப்பவே போய் உங்க அப்பாகிட்ட நம்ம காதலைச் சொல்லுவோம். அவர்க்கிட்ட பேசுவோம். நீயும் என்னை கல்யாணம் பண்ணிககறதுல உறுதியா இருக்கிறதா சொல்லு. அவரு கண்டிப்பா நம்ம இரண்டு பேருக்கு கல்யாணம் பண்ணி வைப்பாரு.எதுக்காக இன்னும் ரெண்டு நாள் வெயிட் பண்ணனும். இன்னைக்கே சொல்லிட்டா எல்லாம் முடிஞ்சில்ல.வா போவோம்” என்று திரும்பி காரில் ரகுவரன் இருக்கிறானா என்று பார்த்தான்.

அவள் திரும்பிப் பார்க்கத்தான் செய்தான். அந்த நேரத்தில் சரியாக அவனது பின்னந்தலையில் யாரோ அடிப்பது போன்றிருந்தது.

ஆஆஆஆஆஆ என்று தலையை பிடித்தவனுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. அவனது கண்களில் மின்னல் தெறிக்க விழுந்த அடியின் வலியில் தள்ளாடியவன் பக்கத்தில் நின்றிருந்த மதுமதியை பார்க்க கண்களையும் திறக்க முயன்று, கைகளையும் விரித்து அவளைப் பிடிக்க முயன்றான்.

ஆனால் அவனால் முடியவில்லை. அவனது கையெல்லாம் இரத்தம் வடிந்தது. அவன் அப்படியே மயங்கிசரிந்தான், அப்போது அவனது காதல் ஐயோ மாமா என்ன பண்ணிட்டீங்க?” என்று மதுமதி காத்தும் சத்தம் தான் கேட்டது. 

அவ்வளவுதான் இளந்திரன் மொத்தமாக கண்கள் சொருகி அப்படியே மயங்கி விழுந்து விட்டான்!