அநாயகனே-7
அநாயகா-7
ஜெயச்சந்திரன் வீட்டுக்கு வந்ததும் யோசனையோடு உட்கார்ந்திருந்தார்.
அவரது முகமே ஒரு மாதிரியாக இருந்தது. அதனால் சங்கரி அவரது பக்கத்தில் போய் உட்கார்ந்து “என்ன தம்பி யோசனையாக இருக்க?" என்று ஆதூரமாகக் கேட்டார்.
“ஆதிராவுக்கும் இளந்தீரனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறேன். அதுதான் தங்கச்சிக்கிட்ட பேசி முடிச்சிடலாமான்னு யோசிக்கிறேன். தங்கச்சி சொன்னா இவன் கேட்பானான்னு தெரியலையே! இன்னும் வேற மாதிரியெல்லாம் நிறைய இருக்கு. என்ன பண்ணலாம்னுதான் அப்படியே உட்கார்ந்திருக்கேன். இதுக்குமேல அவனை அப்படியேவிடமுடியாது. இவளுக்கும் கல்யாணம் பண்ணனும் என்ன செய்யன்னும் தெரியலை, இதுல சட்டுன்னு ஒரு முடிவெடுக்கவும் முடியல” என்று ஒரு மாதிரி நைந்துபோன குரலில் சொன்னார்.
“நீ இதையெல்லாம் நினைச்சு விசனப்படாத தம்பி. நீ முதல்ல தங்கச்சிக்கிட்டயும் மச்சான்கிட்டயும் பேசிடு. அவங்க இளந்தீரன்கிட்ட பேசி எப்படியும் சம்மதிக்க வைச்சிடுவாங்க. அவனுக்கு நம்மளைவிட்டால் வேற யாரு இருக்கா?அவன் வாழ்க்கையையும் பார்க்கணும்ல”என்று பேரனுக்காக பரிதவித்து கண்கலங்கிப் பேசினார்.
அப்போது அங்கே வந்த மகேஸ்வரி அதைக்கேட்டு அதிர்ச்சியில் “என்னது என் பொண்ணைக் உங்க தங்கச்சி மகனுக்குக் கட்டிக்குடுக்கப் போறீங்களா? யாரு கிட்ட கேட்டு இந்த முடிவை எடுத்தீங்க?" என்று கோபத்தில் சத்தம் போட்டார்.
அவர் போட்டோ சத்தத்தில் தங்களது ரூமில் இருந்து சங்கவியும் ஆதிராவுமே வேகமா வெளியே வந்து பார்த்தனர்.
மகேஸ்வரியின் கோபத்தைக்கண்ட சங்கரி ஆத்தா “மகேஷ்வரி எதுக்கு இப்போ இவ்வளவு சத்தம் போட்டு பேசுற?நாங்க நம்ம வீட்டுப் பிள்ளைங்களுக்கு எது நல்லதுன்னு பார்த்து பேசிதானே முடிவு செய்வோம்,அதுதான் பேசிட்டிருக்கோம். நீ எதுக்கு இப்போ இவ்வளவு ஆங்காரமா பேசிட்டிருக்க.மெதுவா பேசு”
“அப்படியெல்லாம் மெதுவா பேசமுடியாது. நீங்க என் மகளோட வாழ்க்கையை கெடுக்கணும்னு பேசிட்டிருக்கீங்க. அவளை அந்த பொறுக்கி இளந்தீரனுக்குக் கட்டிவைக்கப் பார்க்குறீங்களே! இதெல்லாம் உங்களுக்கு நியாயமகப்படுதா!அந்த நாயே சிவானந்தன் மகளோடு ஊர் சுத்தி மேஞ்சிட்டிருக்கான். அவனுக்குப்போய் என் மகளைக் கட்டிவைக்கணும்னு அம்மாவும் மகனும் பேசிட்டிருக்கீங்களே. இது நல்லாயில்லை சொல்லிட்டேன். நான் ஜட்ஜ் குருநாதனோட மகனுக்கு என் மகளைக் கட்டிக்குடுக்கலாம்னு யோசிக்கிறேன். அவளோட வாழ்க்கை நல்லாயிருக்கும். பையனுக்கும் ஆதிராவைப் பிடிச்சிருக்கு காலையில் கோவில்ல பார்க்கும்போதே பார்த்துட்டேன். இங்கப்பாருங்க உங்கம்மாவுக்கு பேரனோட வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு யோசனை. அதுக்காக பேத்தி வாழ்க்கையை யோசிக்கலை பாருங்க. இந்த கல்யாணம் நடந்துச்சு நான் உயிரோடவே இருக்கமாட்டேன் சொல்லிட்டேன்”என்றவருக்கு மூச்சு வாங்கியது அப்படியே ஜெயசந்திரன் பக்கத்திலயே உட்கார்ந்துவிட்டார்.
சங்கரிதான் “என்ன வார்த்தை பேசுற மகேஷ்வரி. இளந்தீரனும் நம்ம வீட்டுப் பிள்ளைதான். அவனும் நல்ல பையன்தான். என்ன சேர்வார் சேர்க்கை சரியில்லை”என இளந்தீரனுக்காக பேசினார்.
“அப்பத்தா அந்த பொறுக்கிப்பையலுக்காக வக்காலத்து வாங்கதீங்க. அவனுக்கெல்லாம் என் தங்கச்சியைக் கட்டி வைக்க முடியாது. நானும் அத்தானும் தர்ஷனுக்கு ஆதிராவைப் பார்க்கலாமான்னுதான் யோசிக்கிறோம். நீங்க தலையிட்டு அதைக் கெடுத்திடாதிங்க பிளீஸ்”என்று சங்கவி கெஞ்சினாள்.
அவர் பதில் பேசுவதற்கு முன்பாகவே ஜெயசந்திரன் கோபத்தில் சத்தம்போட்டார்.
“இந்த வீட்டுல ஆளாளுக்கு ஒரு முடிவெடுக்க இதென்ன சத்திரமா? என் பொண்ணுக்கு யாரைக் கட்டிவைக்கணும்னு எனக்கு நல்லா தெரியும். இதுல வேற யாரும் தலையிட வேண்டாம். சங்கவி உனக்குக் கல்யாணம் முடிஞ்சு உனக்கென்று ஒரு குடும்பம் வந்தாச்சு. இனி எந்த முடிவெடுக்கணும்னாலும் உன் வீட்டுல கேட்டு செய். ரவி சம்மதிக்கிறான்னா அது அவன் விருப்பம். அதை என்கிட்ட கொண்டு வரக்கூடாது. அவனைத் தூண்டிவிடுற வேலையை செய்யாத. போங்க போய் தூங்குங்க. இதைப்பத்தி இனி யாரும் இங்க பேசக்கூடாது”என்றுவிட்டு எழுந்துபோய்விட்டார்.
சங்கவியோ அவர் அப்படி பேசினதில் ஷாக்காகி ரவீந்திரனை அழுகையோடு பார்த்தாள். அவன்தான் அவளது தோளில் கையைப்போட்டு சமாதானப்படுத்தினான்.
மகேஷ்வரிக்கு அடுத்து ஒன்னும் பேசமுடியவில்லை, மாமியாரைம் ஒன்னு சொல்லமுடியவில்லை. அதனால் அங்கயே கோபத்தில் சோபாவில் கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருந்தார். அவருக்கு எந்ந காரணம் கொண்டும் இளந்தீரன் தனது மகளைக் கல்யாணம் பண்ணிட்டு எனக்கு மருமகனா வரக்கூடாது. அப்படிவந்தால் எனக்கு அவமனாம் என்றுதான் நினைத்தார்.
ஆதிரா இங்கே நடக்கும் எல்லாவற்றையும் அமைதியாக ஜெயசந்திரனைப்போல கவனித்தாளே தவிற, எந்த உணர்வையும் வெளிப்படுத்தவில்லை.
மகேஷ்வரி மாதிரி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாமல், என்ன வந்தாலும்,எது நடந்தாலும், எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தோடு நின்றிருந்தாள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் தூங்குவதற்குப்போய்விட்டனர்.
இங்கே இளந்தீரன் மதுமதியை விட்டுவிட்டு நேராக ரகவரனைப் பார்க்க தோப்பு வீட்டு ஷெட்டுக்கு வந்துவிட்டான்.
இளந்தீரனும் ரகுவரனும் அந்த நள்ளிரவில், அந்த பண்ணை வீட்டின் முன்னாடி போட்டிருந்த திண்ணையில் உட்கார்ந்து என்சாய் பண்ணிக் குடித்துக்கொண்டிருந்தார்கள்.
இளந்தீரன் வரும்போதுதான் போஸ்டர் ஒட்டினதையெல்லாம் பார்த்து செக் பண்ணிட்டு வந்திருந்தான்
ரகுவரனும் இளந்தீரனும் கட்சி, அரசியல் என்று தங்களுடைய வாழ்க்கையை படிக்கும்போதிலிருந்தே மாற்றிக்கொண்டிருந்தார்கள். இருவரது இரத்தத்திலும் அரசியல், கொள்கை,அதைதாண்டி தாங்களும் எம்.எல்.ஏவாகி அப்படியே மேல மேலப்போயிக்கொண்டே இருக்கணும் என்ற ஆசையும் வெறியும்தான் இருக்கிறது.
இளந்தீரனுக்குக் கொஞ்சம் போதை ஏறினதும் “டேய் பங்காளி நான் வீட்டுக்குப் போறேன்டா. இப்பவே லேட்டாகிட்டு இதுக்குமேலயும் வீட்டுக்குப் போகாமல் இருந்தேன்னா எங்கம்மா கவிதாகுமாரி சோத்துல விசத்தை வைச்சு தந்திரும்டா. ஏற்கனவே என்மேல கடுப்புலதான் மொத்தக்குடும்பமும் இருக்காங்க. அப்புறம் நம்ம செத்து நரகத்துலபோய்தான் அரசியல் பண்ணமுடியும்டா. எங்கம்மாவுக்கு எங்க தாத்தன் பேரு வைச்சிருக்கத பார்த்தியா கவிதாகுமாரின்னு. இந்த பேருல மயங்கித்தான் எங்கப்பா கவிதாகுமாரியைக் கட்டிக்கிட்டாராம். வர்றேன்டா”என்றவன் அவனது கையில் இருந்த கிளாஸை கீழே வைத்துவிட்டு மெதுவாக எழுந்தான்.
ரகுவரனோ அவனது கையைப் பிடித்துக்கொண்டான்.
“டேய் எங்கடா போற உட்காரு. எப்படியும் நம்மளை வீட்டுல திட்டத்தான் போறாங்க. அதுதான் நம்மளைப் பார்த்தாலே அவங்களுக்குப் பிடிக்காதே. அரசியல்வாதின்னு பேரு குத்தி ஒதுக்கி வைச்சிருக்காங்களே. இருடா எங்களுக்கு கம்பெனிக்குடுத்துட்டு அப்புறமா எல்லோரும் சேர்ந்துப் போகலாம்” என்றவன் அவனை இழுத்து தன் பக்கத்தில் உட்காரவைத்தான்.
“டேய் கையை விடுடா ரொம்ப லேட்டாகிட்டு. மணியை பார்த்தியா இரண்டு மணிக்கு மேலாகுது. இப்பவே எங்க வீட்டுல கேட்டு வரைக்கும் பூட்டை போட்டு வைச்சிருப்பாங்க. நான் வீட்டுக்கு போகணும். எங்க அம்மா வேற போன் பண்ணிக்கிட்டே இருக்கு” என்று சொன்னவன் ரகுவரனின் கையைத் தட்டி விட்டுவிட்டுப் போய் தன்னுடைய வண்டியை எடுத்தான்.
“ரகுவரனோ டேய் இன்னைக்கு இங்கயே இருடா. காலையில வீட்டுக்குப் போகலாம். காலையில் கட்சி ஆபிஸுக்கு போய் மாமாவைப் போய் பார்க்கணும்ல”
“அதெல்லாம் கன் டைமுக்கு இந்த இளந்தீரன் வந்திருவான். நீ டென்சன் எடுக்காத”என்று அவனிடம் பேசிக்கொண்டே வண்டியைய ஸ்டார்ட் பண்ணதான் செய்தான். அதற்குள்ளாக அவனுக்கு மறுபடியும் போன் வந்தது.
“இந்த அம்மா வேற நொய்யி நொய்யின்னு போன் பண்ணிட்டிருக்கு அம்மாவுக்கு வேற வேலையே இல்லை சும்மா சும்மா போன் பண்ணிட்டு இருக்கு. மூத்த மவன்தான் அவன் மாமனார் வீட்டுல சொகுசா இருக்கானே. அவனைத் தேடி போன் பண்ணாது. என்னையவே எப்பவும் நோண்டிட்டிருக்கணும்” என்று கடுப்பாகி முணுமுணுத்தவாறே மொபைலை எடுத்துப் பார்த்தான்.
அதில் வந்த பெயரைப் பார்த்ததும் குழம்பினான். “இவன் எதுக்கு இப்போ போன் பண்றான்?” என்று எடுத்து காதில் வைத்தான்.
அந்தப் பக்கம் அவர்களின் கட்சியில் வேலைப் பார்க்கும் பாண்டியன்தான் பேசினான்.
அவனது பெயரை போன் திரையில் பார்த்ததும் போனை எடுத்து காதில் வைத்ததுமே “டேய் எங்கடா இருக்கீங்க? நம்ம நம்ம கட்சித் தலைவருக்காக ஒட்டின போஸ்டரை எல்லாம் எதிர்கட்சிகாரனுங்க மொத்தமா கிழிச்சிட்டானுங்கடா. நம்ம ஊரு மட்டுமில்லடா மொத்த தொகுதியிலயும் ஆள் வைச்சு கிழிச்சிட்டு, அந்த இடத்துலே அந்த எதிர்கட்சி எம்.எல்.ஏ ஜெயசந்திரனோட படத்தை பெருசா போட்டு போஸ்டரா ஒட்டி வைச்சிருக்கானுங்க மாப்ள. இப்போ என்னடா செய்யிறது? நம்ம நேத்து முழுசும் செய்த வேலையெல்லாம் வீணாப்போச்சுதுடா. அந்த எம்.எல்.ஏவுக்கு இதே வேலையாப்போச்சு. அந்தாளை வைச்சு செஞ்சிவுட்டாதான் இனி ஒழுங்கா அடங்கியிருப்பான்”என்று தனது கட்சிக்காக உழைக்கும் கடைநிலைத் தொண்டனாகக் கோபத்திலும்,வருத்தத்திலும் பேசினான்.
அவ்வளவுதான் பாண்டியன் சொன்னதைக்கேட்டு இளந்தீரன் கொதித்தெழுந்துவிட்டான்.
“என்னடா பாண்டியா சொல்லுற? அந்த போஸ்டரையெல்லாம் நம்ம ஒட்டிட்டு வந்து ஒரு மணி நேரம் தானே ஆகுது, அதுக்குள்ள அவனுங்க வந்து கிழிச்சிப்போட்டிருக்கானுங்க,போஸ்டரைக் கிழிச்சது மட்டுமில்லாமல் அப்படியே அவனுங்க போஸ்ட் ஒட்டி வைச்சிருக்கானுங்களா?நீ அங்கேயே இருடா நாங்க எல்லோரும் இன்னும் ஐஞ்சே நிமிசத்துல அங்க வர்றோம்”என்று கோபத்தில் சொன்னவன் போனை வைத்துவிட்டு திரும்பி ரகுவரன்யைப் பார்த்தான்.
ஏற்கனவே இளந்தீரன் கோபமாக போனில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும், ரகுவரன் வேகமாக எழுந்து, அவன் பக்கத்தில் வந்தான். அங்கிருந்த அவனது பிரண்ட்ஸும் அவங்கக்கூட இருந்த கட்சியாட்களும் உடனே எழுந்து வந்தார்கள்.
“என்னடா பங்காளி பிரச்சனை? போன்ல பேசினது யாரு? இவ்ளோ கோபமா பேசிட்டு இருக்க?ஏதோ போஸ்டர் கீஸ்டருன்னு பேசிட்டிருந்த?” என்று இளந்தீரனின் தோளைத்தட்டி ரகுவரன் கேட்டான்.
“டேய் அந்த எதிர் காட்சிக்காரனுங்க அவங்க அவனுங்க புத்தியை காண்பிச்சுட்டானுங்கடா. நம்ம தலைவர் போஸ்டரை எல்லாம் கிழிச்சுட்டு அவங்க தலைவர் போஸ்டரை ஒட்டி வைச்சிருக்கானுங்கடா. அதுவும் பிளான் பண்ணி பண்ணிருக்காங்க. நம்ம ஒட்டிட்டு வந்து இப்போதான் பார்ட்டி பண்ணிட்டு இருக்கோம், அதுக்குள்ள அவனுக்கு எல்லாம் வேலையும் செய்து முடிச்சிருக்கானுங்க பாரு. அப்போ நம்ம போஸ்டர் ஒட்டப்போறோம்னு இவனுங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சுதான் திட்டம்போட்டு செய்து இருக்கானுங்க. அவனுங்களை சும்மாவிடக் கூடாதுடா. எல்லோரும் வண்டி எடுங்கடா.அங்கப்போய் அவனுங்க ஒட்டியிருக்கிற எல்லா போஸ்ட்ரயும் கிழிச்சு எறிஞ்சிட்டு இது செய்ய சொன்னது யாருன்னு கேட்டு அவனையும் சேர்த்துக் கிழிச்சுட்டு வந்துருவோம்டா” என்றவன் வண்டி எடுத்தான்.
“என்னது நம்ம ஓட்டிட்டு வந்த போஸ்டரையே கிழிச்சிட்டானுங்களா? இது யார் வேலையா இருக்கும்னு தெரியுமா பங்காளி? எல்லாம் அவன் வேலையா தான் இருக்கும். அவனை இதுக்கு மேல சும்மா விட்டாசரி வராதுடா. உனக்காகத்தான் நாங்க பார்த்துட்டு இருக்கோம். இல்லைன்னா அந்தாளை கொன்னுருப்போம்” என்று ரகுவரன் கோபத்தில் கத்தினான்.
“இருடா முதல்ல போஸ்டரை கிழிச்சதுயாருன்னு கேட்டு விசாரிச்சுட்டு செய்தவனை இராத்திரியோடு இராத்திரியா தூக்கிருவோம்டா”என்றுவிட்டு அப்படியே மொத்தமாக எல்லோரும் கிளம்பி சிட்டிக்குள்ள வந்தார்கள்.
அவர்கள் வரும்பொழுதே போஸ்டர் ஒட்டிய சுவரையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் வந்தார்கள்.
அவர்கள் கட்சித் தலைவரின் போஸ்டர் கிழிக்கப்பட்டு அதற்கு மேலாக அந்த ஊரிலே இருக்கும் எதிர்க்கட்சியின் மாவட்டத் தலைவராக,எம்.எல்.ஏவுமான ஜெயசந்திரனின் போஸ்டர்களும் படங்களும் ஒட்டப்பட்டிருந்தது.
அதையெல்லாம் பார்த்ததும் இளந்தீரனின் கண்களில் அப்படியே கோபம் தெறிக்க, வெறிக்க பார்த்துக்கொண்டே வந்தான்.
அவன் அமைதியாக வருவதைப்பார்த்த பார்த்த ரகுவரன் லேசாக நக்கலாகச் சிரித்தவாறே “இளந்தீரா உனக்கு இப்போ தெரியுதா இந்த வேலை யாரு செய்திருப்பான்னு?அங்கப்போரு என்னவொரு சிரிப்போட போட்டோவுல இருக்கிறாரு பாரு ஜெயசந்திரன் எம்.எல்.ஏ. அந்தாளு கமுக்கமா இருந்துட்டு நம்ம போஸ்டரை ஓட்டினதும் உடனே ஆட்களை வைச்சு அதைக் கிழிச்சி எறிஞ்சிட்டு அந்த ஆளு போட்டோவையும், அவங்க தலைவர் போட்டோவும் வச்சிருக்கான். இவனை இப்படியே விட்டால் இனியும் சரிவராது மச்சான். அப்படியே தூக்கிட்டு போய் நாலு காட்டு காட்டுனாதான் சரியா வருவான் போல இருக்கு” என்று தனக்கு கையை முறுக்கி கொண்டு பேசினான்.
அவன் பேசப்பேச இளந்தீரனுக்கோ கோபம் இன்னும் தலைக்கேறியது. அதனால் “டேய் ரகுவரன் அந்தாளை இவ்வளவு நாளு பாவம் பார்த்து சும்மா விட்டது தப்பா போச்சுடா. நீ சொன்ன மாதிரியே அவரைத் தூக்கிட்டு போய் கும்மாங்குத்தா நாலு குத்து குத்திவிட்டாத்தான் சரியா வருவாருன்னு நினைக்கிறேன். தாய்மாமான்னுலாம் இனி பார்க்கமாட்டேன் எதிர்கட்சினாலே எதிரிங்கதான். இருடா அந்தாளை இன்னைக்கு ஒருவழிப்பண்ணாமல் விடமாட்டேன். நம்ம யாருன்னு காண்பிச்சாதான் இனி நம்ம வழிக்கு வரமாட்டாரு”என்றவாறே பைக்கினை நேராக ஜெயசந்திரன் இருக்கும் திசைக்கு நேராக திருப்பினான்.
“டேய் பார்த்துடா அப்புறம் நீ எதாவது செய்துவைச்சிட்டன்னா உங்க மாமா எங்க மாமா மேல குத்தம் சொல்லுவாரு. கேஸு அதுஇதுன்னு போட்டுவிட்ருவாரு. எங்க மாமாதான் உங்க மாமாவோட எதிர்கட்சி ஆளு. அதுவுமில்லாமல் இரண்டுபேருக்கும் இடையில பெரியபிரச்சனையே ஓடிட்டிருக்கு. இப்போ நீ ஏதாவது செய்து வைச்சிட்டன்னு வையேன் நாங்கதான் உன்னைத் தூண்டிவிட்டு உங்கமாமாவுக்கும் உனக்கும் பிரச்சனையை ஏற்படுத்தி பிரிச்சுவைக்கிறோம்னு நினைக்கப்போறாங்க. சும்மாவே அதைத்தான் சொல்லிட்டிருக்காங்க”
“எவன் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் சொல்லிட்டுப்போகட்டும்டா. நமக்கும் நம்ம நட்புக்கும் எல்லாம் தெரியும்டா. நான் அரசியலுக்கு வந்து பெரியாளகணும்னுதான் இலட்சியத்தோடு இருக்கேன். எனக்குப் பிடிச்ச கட்சியில் இருக்கேன். மாமான் இருக்கான் அண்ணன் இருக்கான்னு அவங்கக் கட்சியில போய் அடிமை வேலைப் பண்ணிட்டு கும்பிடுபோட்டுட்டு இருக்க முடியாது. இன்னைக்கு அந்தாளுக்கிட்ட ஏன் இப்படி செய்தன்னு கேட்டுட்டு சண்டைப்போட்டாத்தான் நான் நம்ம கட்சியில இருக்கிறதுக்கு லாயக்கு”என்றவன் நேரகா எம்.எல்.ஏ ஜெயசந்திரன் வீட்டுக்குப்போக வண்டியைத் திருப்பினான்.
அவன் நேராகப்போய் ஜெயசந்திரன் வீட்டுக்கு முன்னாடி போய் நின்றான்.
ஹய்யோ சிங்கம் சிறுத்தையை சுரண்டிவிடப்போகுதே!