அநாயகா-26

அநாயகா-26

அநாயகா-26

சிவானந்தனுக்கு அவ்வளவு கோபம் வந்தது. என் பொண்ணொட கல்யாணத்துல இவன் வந்து இப்படிக் கலாட்டா பண்ணிட்டிருக்கான். எல்லோரும் நின்னு வேடிக்கைப் பார்த்திட்டிருக்காங்க என்று நினைத்தவர் இளந்தீரனை பிடித்து வெளியே தள்ளும் முனைப்புடன் அவன் பக்கத்தில் போனார்.

அவனோ திரும்பி அவரை ஒரு பார்வைதான் பார்த்தான்,அவ்வளவுதான் இதுக்குமேல அவன் பக்கத்து போனா இத்தனைபேர் முன்னாடியே நம்மளை அடிச்சாலும் அடிச்சிடுவான் எனாறு நினைத்து அங்கயே,அப்படியே நின்றுவிட்டார்.

ராகுவரனும் மதுமதியுமே வெறும் பார்வையாளராகத்தான் அங்கே நின்று புது மணமக்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இப்படி நம்ம கல்யாணத்துலயே வந்து அவன் கல்யாணத்தை நடத்திப்பான்னு அவங்க கனவுலக்கூட நினைச்சிருக்கமாட்டாங்க, அந்தக்கோபம் வேறு ரகுவரனுக்கு வந்தது.

ஆனாலும் இப்போதைக்கு அவனை ஒன்னும் செய்யமுடியாதக் கோபத்தை உள்ளுக்குள்ளயே அடக்கி வைத்தான்.

இளந்தீரன் ஆதிராவுக்குக் குங்குமம் வைத்துவிட்டு அவளது கண்களைப் பார்த்தான். அவன் குங்குமம் வைக்கும்போது தன்னையறியாமலயே கண்களை மூடி அதை ஏற்றுக்கொண்டவள் சட்டென்று கண்களைத் திறந்துப் பார்த்தாள்.

இளந்தீரன் அவளது முகத்திற்கு அருகில் தனது முகத்தை வைத்து அவளது கண்களையே ஊடுருவிப்பார்த்தான்.

அந்த பார்வையைப் புரிந்துக்கொண்டவளோ அவனைப் பார்க்க முடியாது தடுமாறினாள். அவளது இமைகள் படபடவென்று அடித்து கருவிழிகள் பதட்டமாவதை தடுத்து நிறுத்தியது.

அவனோ அவளிடம் அதன்பின் ஒருவார்த்தைக்கூட பேசாது, அப்படியே அவளது கையை பிடித்துக்கொண்டு எழுந்தவன், அங்கிருந்த அக்னியை சாட்சியாக வைத்து மூன்று முறை சுற்றிவந்தான்.

ஆதிராவுக்கு நட்நதக் கல்யாணத்தின் அதிர்ச்சியில் மூளை அப்படியே உறைந்திருக்க, அவன் இழுத்துச்சென்ற திசைக்கெல்லாம் அவளும்கூடவே போனாள்.

அதற்குள் இங்கே நடந்ததையெல்லாம் ஆளாளுக்கு கையில் மொபைலை வைத்து போட்டோவாக எடுத்தனர். 

அந்த தொகுதி எம்.எல்.ஏவின் மகளை, அவரது தங்கச்சி மகனே கல்யாணம் பண்ணிக்கிட்டான். அதுவும் எதிர்கட்சித் தலைவரின் மகள் கல்யாணத்தில் வந்து கலாட்டா பண்ணி கல்யாணம் பண்ணிருக்கான். அன்றைய நாளில் மிகமுக்கிய செய்தியே அதுவாகத்தான் இருக்கப்போகுது!

அந்தப் போட்டோக்களை ஜெயசந்திரன் கட்சியைச் சேர்ந்தவர்கள் அப்படியே மகேஸ்வரிக்கு பக்காவாக அனுப்பி விட்டார்கள். 

இளந்தீரன் அக்கினியை சாட்சியாக மூன்று முறை சுற்றி முடித்துவிட்டு, நேராக ராகுவரன் பக்கத்தில் வந்து நின்று, அவனைப் பார்த்து சிரித்தான். 

“என்ன பங்கு நம்ம நட்புக்கு ஏத்தமாதிரியே இரண்டு பேருக்கும் ஒரே மேடையில ஒன்னு போல கல்யாணம் ஆகிடுச்சு பாத்தியா?செமல்ல பங்கு. உனக்கும் உன் கல்யாணத்துக்காக வாழ்த்துகள்டா”என்று கையைக்கொடுத்தான்.

அவனோ அசையாது அப்படியே நின்றிருக்கவும்

“ஆமா பங்கு நேத்து எதுக்கு ஹாஸ்பிட்டலுக்கு உங்க ஆட்களை அனுப்பி வைச்ச? என்னை உன் கல்யாணத்துக்கு கூட்டிட்டு வர்றதுக்காக ஆட்களை அனுப்பி வைச்சியோ? அதுசரி ஆனா எதுக்கு எங்க மாமாவையும் பார்க்க வந்தானுங்க. எங்க மாமாவையும் உன் கல்யாணத்துக்கு கூப்பிட வந்திருந்தாங்களோ?நான் வேற இதுதெரியாமல் அவனுங்களை அடிச்சு போட்டுட்டேனே அச்சோ!”என்று பாவமாக கேட்டான்.

அதைககேட்டதும்தான் ஆதிராவுக்கு இப்போது கொஞ்சம் தெளிந்தவள் இளந்தீரனை நிமிர்ந்துப் பார்த்தவள் “என்னது நேத்து இவங்க ஆட்கள் அப்பாவைப் பார்க்க வந்தாங்களா?உங்கக்கிட்டதானா யாரோ ஹாஸ்பிட்டல்ல பிரச்சனை பண்ண வந்தாங்கன்னு சொன்னாங்க. அப்பாவை எப்போ பார்க்க வந்தாங்க? ஹாஸ்பிட்டல்ல இதைப்பத்தி எதுவுமே என்கிட்ட சொல்லலையே. நான்தான் நம்ம ஆட்கள் அப்பாவைப் பார்த்துக்க நிறுத்தி வச்சிருக்கனே. அப்பாவையும் உங்களையும் பார்த்துக்க சொல்லி தானே ஆட்களை ஏற்பாடு பண்ணி இருந்தேன். ஹாஸ்பிட்டலில் சொல்லி வைத்திருந்தானே” என்று படபடவென்று அவனிடம் கேள்வியாகக் கேட்டாள்.

“ப்ச்ச் இதெல்லாம் அரசியல் விளையாட்டு. என் உயிர் நண்பன் நான் ஜெயில் இருந்து வெளியே வந்ததும் ஓடிவந்து அப்படியே என்னைக் கட்டிப்பிடிச்சு நண்பேன்டா என்று வரவேற்பான்னு பார்த்தா அவன் நான் காதலிச்ச பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்கான். அதைக் கேட்டு நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? அந்த சந்தோஷத்தோடு அவனைப் பார்க்க வந்தால் அவன் எனக்கு ஒரு பெரிய பரிசு கொடுத்தான்பாரு நல்லவேளை அந்தபபரிசை சரியான நேரத்தில் தந்தான். அதனாலதானே நானும் மாமாவும் ஒரே ஹாஸ்பிட்டல்ல படுத்திருந்தோம். அதுக்காக என்னைப் பார்க்க அவனோட ஆட்களை அனுப்பியிருந்தான். மாமாவையும் என்னையும் பாரத்துட்டு நல்ல விசாரிச்சுட்டு வரதுக்காக அனுப்பி இருந்திருக்கான். ஏன்னா அவன் கல்யாண மாப்பிள்ளை பாத்தியா, கையில காப்பு கட்டிட்டான். அவனால் நம்மளை வந்து பார்க்க முடியாது அதனால்தான் நானே இப்போ அவனைப்பார்க்க நேரா இங்கயே வந்து அவனுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுத்திருக்கேன். அதுவும் இல்லாமல் உயிர் நண்பனான நான் இல்லாமல் கல்யாணத்தை எப்படி நடத்தன்னு இவன் பீல் பண்ணிட்டே இருந்திருப்பான். நான் சரியான் நேரத்துல அவன் கல்யாணத்துக்கு வந்துட்டேன். அப்படியே என் கல்யாணத்தையும் அவன் முன்னாடியே சந்தோசமா முடிச்சிட்டேன்”

ஆதிரா ஆஹா இந்த அத்தான் அப்போ மொத்தமா ப்ளான் போட்டுத்தான் நம்மளையும் சேர்த்து இங்க இழுத்துட்டு வந்திருக்காங்களான்னு அவ அவா யோசனையில் இருக்க, ரகுவரனோ இவனுக்கு எல்லாமே தெரிஞ்சிடுச்சே என்ற பதட்டத்தில் இருந்தான். மதுமதியின் பார்வையோ யாருக்குமே புரியாததாகா இருந்தது.

“ரொம்ப ரொம்ப சந்தோசம் நண்பா!என் மனசு இப்போ ரொம்ப திருப்தியா இருக்கு. ரகுவரன் ரொம்ப தேங்க்ஸ்டா. நீ என்னை விசாரிக்க ஆள் அனுப்பினதால்தான் நான் இங்கவரமுடிஞ்சுது.ஆதிரைவை கல்யாணம் பண்ணிக்கவும் முடிஞ்சது. அவளை எப்படி கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு மூளையைபோட்டுக் குழப்பிக்கிட்டே இருந்தேன். அந்தக் குழப்பம் எல்லாம் சரியாகி ஏதோ ஒரு நல்லது உயிர் நண்பன், என்னை வளர்த்த என் கட்சித் தலைவர் சிவானந்தன் முன்னிலையில் என் கல்யாணம் நடந்துட்டு. அப்படி கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நான் எவ்வளவு கொடுத்து வைச்சிருக்கணும், ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கணும் நீங்க எல்லாரும் சேர்ந்து என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க. இதுக்கு மேலான என்னோட வாழ்க்கை ரொம்ப சிறப்பா அமையும்”என்று ரகுவரனிடம் சொல்லிவிட்டு மதுமதியை ஏறயிறங்கப் பார்த்து புருவம் உயர்த்தி எப்படி என் பெர்பாமன்ஸ் என்பதுபோல கேட்டான்.

அவள் ஏதோ பேச வந்தாள். அதற்குள் தனது கையை நீட்டி தடுத்தவன் “நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் மிஸஸ்.ரகுவரன். உங்க கல்யாண வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்க கல்யாண வாழ்க்கை சிறப்பு அமைய வாழ்த்துக்கள் வர்றட்டா" என் சொல்லிவிட்டுக் திரும்பி ஆதிராவின் கையே இறுக்கமாக பிடித்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியே வந்தான். 

அவன் பேசுறதை தனது வாயைப்பிளந்துக் கேட்டிருந்த ஆதிரா, அவன் கையைப்பிடித்து இழுத்ததும் அப்படியே பொம்மை மாதிரியே அவன் பின்னாடியே நடந்தாள்.

“இந்த அத்தானை நம்ம என்னமோ நினைச்சோம். ஆனால் தலையில பலமா அடிவாங்கினதும் நல்ல தெளிஞ்சிட்டாருபோல. போலீஸ் அடி பண்ணானததையெல்லாம் இந்த துரோகத்தின் அடிதான் பலமா பாடம் கத்துக்கொடுத்திருக்கு போல என்று நினைத்துக்கொண்டாள்.

அவங்க இரண்டுபேரும் வெளியே வரவும் மகேஸ்வரி ரவி என்று எல்லாரும் காரில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.

அது இளந்தீரன் ஆதிராவுக்குத் தாலிகட்டுவதை போட்டோ எடுத்து மகேஷ்வரி அனுப்பியிருந்ததை பார்த்துவிட்டு அப்படியே அதிர்ச்சியில் போனையே கீழேபோட்டுவிட்டார்.

அவரால் இளந்தீரன் ஆதிராவைக் கல்யாணம் பண்ணிக் கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது அப்படியே தவித்தார். ஆனாலும் இந்தப்பொண்ணு அவனை நம்பிபோய் இப்படிக் கல்யாணம் பண்ணிக்கிட்டாளே என்று எழுந்த ஆதங்கத்தில் கையில் இருந்த போனைப்போட்டு உடைத்தார்.

அப்போதான் ரவியும் அந்தப்போட்டோக்களைப் பார்த்துவிட்டு அவரிடம் சொல்லுவதற்காக வந்தான்.

“என்ன அத்தை ஆதிரா இப்படிப் பண்ணிட்டா?என்னால இதை நம்பவேமுடியலையே. அந்தளவுக்கா அவனை அவா நம்புறா? என்னத்த சொல்லண்ணுத் தெரியல. கண்ணை மூடிக்கிட்டு பாழுங்கிணத்துல விழைந்திருக்கா. அவளே அவளோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டாளே. இப்போ என்ன அத்தை பண்றது?” என்று உண்மையாகவே ஆதிராவின் வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட்டு கேட்டான்.

“எனக்கு இப்பவே அவளை அவன்கிட்ட இருந்து பிரிச்சுக்கூட்டிட்டு வரணும். நான் அங்கப்போறேன். என் மகளையெல்லாம் அப்படி இவன்கூட வாழ விடமுடியாது. அவன் என் பொண்ணை அடிச்சுக்கொன்னாலும் கொன்னுருவான்” என்று பயந்து காரை எடுக்க சொல்லி ரவியிடம் சொன்னார். 

ரவி வெளியே வர அவங்களோடு சேர்ந்து சங்கவியும் நானும் வர்றேன் என்று சொல்ல, இப்போ எல்லோரும் காரில் ஏறி நேராக மண்டபத்திற்கு வந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததும் இருவரும் அப்படியே ஷாக்காக நின்றுவிட்டனர்.

ஆதிராவுக்கோ ஐயோ நம்ம குடும்பம் இப்படி மொத்தமா வந்திருக்காங்களே. இந்த அத்தானை மொத்தமா முடிச்சுவிடத்தான் வந்திருப்பாங்க. என்ன பண்ணப்போறனோ என்று இளந்தீரனைப் பார்த்தாள்.

அவனோ அவளது முகத்தைப் பார்க்கவில்லை. ஆனால் தனது கைவிரல்களால் அவளது கைவிரல்களை அழுத்திப்பிடித்து, நான் பார்த்துக்ககறேன் என்று சொன்னான்.

இப்போது சங்கவி ஓடிவந்து ஆதிராவின் தோளைப்பிடித்து இழுத்து “என்னடி பண்ணி வச்சிருக்க? என்னடி கோலம் இது? யாரைக் கேட்டு இதெல்லாம் பண்ணுன?” என்று அடக்கப்பட்ட கோபத்தில் கேட்டவள் திரும்பி இளந்தீரனை முறைத்து பார்த்தாள்.

அவள் தன்னைதன் முறைத்து பார்க்கிறாள் என்று தெரிந்தும் இளந்தீரன் ஆதிராவின் தோளில் கையைப்போட்டு இறுக்கிப் பிடித்துக்கொண்டான்.

அதைப்பார்த்வர்களோ ஷாக்கில் இருக்க,சங்கவியோ தங்கச்சியை தனியாக இழுத்துக் கொண்டுபோய் பேசி இவனாடமிருந்து பிரிச்சி கூட்டிட்டு போயிடணும் என்று அவளை இழுத்தாள்.

அவனோ இன்னும் அழுத்தமாகப் பிடித்து தன் பக்கம் இன்னும் நெருக்கமாக நிறுத்தியவன் உங்களால் ஒன்னும் கிழிக்கமுடியாது என்பதுபோன்று சிரித்தான்.

அதைப் பார்த்த சங்கவிக்கு இப்போ இளந்தீரனை நாலு அடி அடிச்சிடணும் என்றுதான் கோபம் வந்தது. 

ஆனாலும் இப்போதைக்கு இந்த கல்யாண மண்டபத்தின் முன்னாடி நின்னு எதையும் செய்யக்கூட்து. அப்படி செய்தால் பெரிய சீனே கிரியேட் பண்ணின மாதிரியாகிடும். எல்லாரும் ஜெயச்சந்திரன் குடும்பம் இங்க வந்து சண்டை போட்டுட்டு இருக்காங் என்று பேசினானாங்கன்னா அது அப்பாவுக்கு கேவலமாக போய்விடும். இப்போதைக்கு அமைதியாக இரு சங்கவி என்று தன்னைத்தானே நிதானப்படுத்திக் கொண்டு நேராக மகேஸ்வரி பக்கத்தில் போய்விட்டாள்..

மகேஸ்வரி இளந்திரனை பார்த்துவிட்டு அப்படியே ஆதிராவையும் பார்த்தார்.

“அம்மாஆஆஆ அது வந்து” என்று ஆதிரா தயங்கித் தயங்கி பேச முயன்றாள்.

ஆனால் மகேஸ்வரி தனது கைகாட்டி இப்போ எதுவும் பேசாதே! என்று தடுத்துவிட்டார்.

ஆதிராவிடம் “உடனே கார்ல இருங்க.இங்க நின்னு எதுவும் பேசவேண்டாம். எதுனாலும் நம்ம வீட்டுக்கு போய் பேசுவோம்” என கட்டளையாக சொன்னார்.

அதைக் கேட்டதும் “ அம்மா நாங்க என் கார்லயே வீட்டுக்கு வந்திடுறோம்” என்றவள் வேகவேமாக இளந்தீரனையும் இழுத்துக் கொண்டு அவர்களது காரில் ஏறினாள்.

அதை பார்த்த ரவி தான் அத்தை நீங்க நம்ம கார்ல வீட்டுக்கு வாங்க. நான் அவங்ககாரே ஓட்டிட்டு வரேன் இளந்திரனும் ஆதிராவுப் இப்போக்ஷஇருக்குற நிலைமைல காரை ஓட்டிட்டு வர்றது சரியில்லை என சொல்லிவிட்டு அவரிடம் எதுவும் பதில் கேட்காமலே ஆதிராவையும் இளந்திரனையும் பின்னாடி உட்கார சொல்லிவிட்டு அந்தக் காரை அவன் வீட்டுக்கு ஓட்டிட்டு வந்தான். 

அவர்கள் வந்து வீட்டில் இறங்கியதுமே அப்பத்தா ரெடியாக வைத்திருந்த ஆரத்தி தட்டை எடுத்து வந்தார். யாருக்கிட்டயும் எதுவும் கேட்காமல் புதுசா கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிற ஜோடிக்கு ஆரத்தி எடுத்து அவர்கள் உள்ளே வரவேற்று உட்கார வைத்தார். 

“இவனுக்கு இது ஒன்னுதான் குறைச்சல். எங்க அப்பாவை அடிச்சு ஹாஸ்பிடல்ல போட்டவனுக்கு வந்த வாழ்வைப் பாருங்க. அப்பா அங்க ஒரு மாசமா கோமால இருக்காங்க. எப்போ எழும்புவார்னு தெரியாது. ஐ.சி.யூல இருந்து இப்போதான் தனி ரூமுக்கு மாத்தியிருக்காங்க. இந்த லட்சணத்துல எங்க அப்பாவை கொல்ல நினைச்ச இவனையும் இவனோடு சேர்ந்தவங்களையும் கூட்டத்தோடு உள்ள ஜெயில்ல பிடிச்சு போடுவாங்கன்னு பார்த்தால், என் தங்கச்சியே அவனை கல்யாணம் பண்ணிட்டு வந்து நடு வீட்டுல உட்கார்ந்து இருக்கா. இந்தக் கேவலத்தை எங்க போய் சொல்ல”என்று சங்கவி தனது தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

சங்கவியாவது மனம் திறந்து வெளியே சொல்லிவிட்டாள். மகேஸ்வரிக்கு அதே எண்ணமும், அதே கோபமும்தான் இருந்தது. ஆனால் அதை வெளிப்படுத்தாது அமைதியாக அவர்களை பார்த்தவாறே எதிரே உட்கார்ந்திருந்தார்.

ரவி தான் இப்பொழுது இளந்தீரனிடம் வந்தவன் “ரகுவரன் மதுமதி கல்யாணம் பண்ணிக்கிட்டான்க அப்படிங்கிற கோபத்துல அவங்களை பழிவாங்க நீ எதுக்கு ஆதிரா கழுத்துல தாலியைகட்டின. இது தப்பு இல்லையா? அவளுக்குன்னு ஒரு எதிர்காலம் இருக்கு நீ ஜெயிலுக்குள்ள இருந்துட்டு வந்திருக்க. உன்னோட கேஸ் இன்னும் முழுசா முடியல.உனக்கு அப்படியென்ன எதிர்காலம் இருக்கும்னே தெரியாது. உன்னோட எதிர்காலத்தை உன்னால் தீர்மானிக்க முடியாத நிலையில இருக்கும்போது ஆதிராவினுடைய எதிர்காலத்தையும் சேர்த்து இப்படி கெடுத்துட்டியே உனக்கு இது நியாயமா படுதா?”என்று ஆதங்கத்தில் கேட்டான்.

இளந்தீரனோ எதுவுமே பேசாது அவன் இருந்த அந்த சோபாவில் சாய்ந்து கெத்தாக தோரணையாக உட்கார்ந்து கால் மேல் கால் போட்டு அவனைத் தீர்க்கமாக பார்த்தான். 

ஆதிரா கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பும், தாலி கட்டியபின்பும் அந்த மண்டபத்தில் வைத்து அவ்வளவு வியாக்கியானமாக பேசிய இளந்தீரன், இப்போ தனக்குத்தானே மௌனத்தை தத்தெடுத்தவனாக உட்கார்ந்திருந்தான்.

ரவிக்கும் மற்றவர்களுக்கும் அவனது அந்தப் பார்வை எரிச்சலை தந்தது.

“எதுக்குடா இப்படி பார்க்கிற?நீதான் எப்பவும் டயலாக்கு டயலாக்கா பேசுவியே இப்போ அதே மாதிரி பேசவேண்டியதுதானே!இப்படி சும்மா பார்த்திட்டேயிருந்தா நீ செய்தது சரியாகிடுமா என்ன?இது ஆதிராவோட எதிர்கால வாழ்க்கை பத்தினதீ. நீ பதில் சொல்லியேயாகணும்”என ரவி பிடிவாதம் பிடித்தான்.

அதைப்பார்த்த இளந்தீரனோ ஆதிராவிடம் திரும்பி “எனக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்தது டயர்டா இருக்கு. உன்னோட ரூம்ல போய் படுக்கப்போறேன். உனக்கும் டயர்டா இருந்தா வா என்கூட வந்து ரெஸ்ட் எடு” என்றவன் அங்கிருந்து எழுந்து வேகமா படியேறி சரியாக அவளுடைய ரூமுக்குள் நுழைந்தான்.

ஆதிராவோ அதைப்பார்த்துவிட்டு “இந்த அத்தான் ஏன் இப்படி வேணும்னே பண்றாங்கன்னு தெரியலையே. இப்போ எல்லாரும் என்னைத்தானே திரும்பிப் பார்ப்பாங்க” என்று நினைத்து முடிப்பதற்குள் எல்லாரும் அவளைத் திரும்பி பார்க்கவும் என்ன பதில் சொல்லவென்று தெரியாமல் கண்ணை உருட்டி உருட்டி முழித்தவாறே உட்கார்ந்திருந்தாள்.