அநாயகா-15
அநாயகா-15
ஆதிரா தனது அப்பாவை வைத்திருந்த ஐ.சி. யூ ரூமுக்குள்ளே நுழைந்தவள், அங்கே தனியாக நின்றவாறே, மெடிக்கல் எக்யூப்மென்ட்ஸ் மூலமாக சுவாசித்துக்ககொண்டிருந்த அப்பாவை வேதனையோடு பார்த்தாள்.
இப்போது அவரு பக்கத்தில் உட்கார்ந்தவள், அவரது கையைப்பிடித்து தனது உள்ளங்கையில் வைத்துப் பிடித்துக்கொண்டு, அப்படியே வருடியவாறு அவரிகம் பேசினாள்.
“அப்பா உங்களுக்கு பிடிக்காத ஒரு காரியத்தை இன்னைக்கு பண்ணிட்டு வந்திருக்கேன். நீங்க எந்த சூழ்நிலையிலும் சின்னத்தானை நீங்க விட்டுக் கொடுத்ததே இல்லை. ஆனால் இப்போ உங்களுக்கான இந்த நிலைமை நினைச்சு நானும் அம்மாவும் சேர்ந்து அவருக்கு எதிராக கேஸ் கொடுத்துட்டு, அதுக்கான கையெழுத்தும் போட்டுட்டு வந்திருக்கோம். அத்தானை இன்னைக்கு கோர்ட்டுக்கு கொண்டுபோய் ஆஜர் படுத்திட்டாங்க. அவங்களுக்கு ஒரு மாசம் ரிமாண்டுன்னு ஜெயில்ல அடைச்சிட்டாங்க. இன்னும் எதுன்னாலும் தெரியும் ஆனா நீங்க எழுந்து வரும்போது இது தெரிஞ்சா வருத்தப்படுவீங்கன்னு எனக்கு தெரியும் எங்களுக்கு வேற வழி தெரியலப்பா? நீங்க இருக்க பதவிக்கும் உங்களுடைய இந்த நிலைமைக்கும் கண்டிப்பா சட்ட ரீதியான நாங்க முன்னெடுத்து ஆகணும் எப்பவும் போல சின்னத்தனை சும்மாவிட முடியல. என்னை மன்னிச்சிடுங்கப்பா. எங்களுக்கு நீங்க இல்லாமல் இரண்டுநாளே ஏதோ இரண்டு ஜென்மம் மாதிரி இருக்குப்பா. தயவு செய்து எழுந்து வந்திருங்கப்பா” என்றவள் அவரது கையைப் பிடித்துக்கொண்டு அழுதாள்.
அவளால் அவளது அப்பாவை இப்படி ஒரு நிலையில் பார்க்க முடியவில்லை. எவ்வளவு கம்பீரமாக இருந்த ஒரு ஆளுமையான ஆள். தான் நினைவு தெரிந்த நாளிலிருந்து கட்சியிலும், வெளியிலும், குடும்பத்திலும் மரியாதையான கௌரவமாக கம்பீரமாக இருந்தவர். அவரை இப்படி படுக்க வைச்சிட்டாங்களே இந்த சின்னத்தான் என்று நினைத்து அழுதாள். அதுவும் இல்லாமல் அவர் இப்போ இருக்கிற நிலமையில் உயிரோடு எழுந்து வருவாரா?இல்லையா? என்பதைக்கூட சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார் என்பதே அவளுக்கு அவ்வளவு ஒரு மன வேதனை கொடுத்தது.
அவள் அப்படி அழுது கொண்டிருக்கும்போதே, பின்னாடியே சங்கவியும் வந்து நின்றாள். அவள் அழுவதைப் பார்த்தவள் அவளது தோளைத் தட்டி, அப்படியே சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தாள்.
“ஆதிரா எதுக்கு இப்போ அப்பா முன்னாடியே உட்கார்ந்து அழுதுட்டிருக்கடி. அப்பாவுக்கு உணர்வு எல்லாம் இருக்கு. நம்ம பேசுறது அவருக்குக் கேட்கும்டி. அவரால் நமமளை பார்க்கத்தான் முடியாது.ஆனால் அவரது காது தானாகவே கேட்கும்ல். அவரு ரியாக்ஷன் பண்ணலன்னாலும் அந்த வலி அவருக்குள்ள இருக்கத்தானே செய்யும். அதனால் அவருக்கு முன்னாடி அழாத. எல்லா விஷயத்துலயும் தைரியமா இருக்கக்கூடிய நீயே இப்படி உடைந்து அழுதன்னா எப்படி? அம்மாவைப்பாரு ஒழுங்கா சாப்பிடாமல் இரண்டுநாளாவே ஹாஸ்பிடலே கதின்னு கிடக்கிறாங்க. நீ அவங்களை வீட்டுக்குக் கூட்டிட்டு வீட்டுக்கு போ. அவங்களை குளித்து சாப்பிடச் சொல்லு. அப்படியே அவங்களுக்கும் உனக்கும் ட்ரஸ் எடுத்துட்டும் வா நானும் உங்க அத்தானும் இங்க பார்த்துக்குறோம். அடுத்து நடக்கிறதைப் பார்க்கணும்ல. அப்பாவுக்கு சர்ஜரி அதேஇதுன்னு சொல்லிட்டாங்கன்னா அப்புறம் எங்கேயும் போகமுடியாது, அப்பத்தாவை வேற பார்க்கணும். மக,ஔ நினைச்சுஅழுதிட்டிருப்பாங்க. அவங்களையும் அப்பாவைப் பார்க்க கூட்டிட்டுவா” என்று தனது தங்கச்சியை சமாதானப்படுத்தி வீட்டுக்குப்போகச்சொல்லிக்கொண்டிருந்தாள்.
அந்த நேரத்தில் கவிதா தனது கணவரோடு அங்கே வந்தார்.
அவர் தன்னுடயை இளைய மகனை நினைத்து அழுதிருப்பார் போல. என்னதான் இருந்தாலும் பெற்றவளுக்கு வலிக்கத்தானே செய்யும். தன்னோட சொந்த அண்ணனை, தான் பெத்தமகனே இப்படிக் கல்லால் அடிப்பான்னு நினைச்சுக்கூட பார்த்திருக்கமாட்டார். ஆனாலும் அவனுக்கு இவ்வளவு பெரிய தண்டனையாக ஜெயிலுக்குப் போயிருக்கவேண்டாம் என்று நினைத்தாலும், அவனை வெளியே கொண்டுவரவதற்கு நினைத்தார். ஆனால் ரவியும் விஜயராஜூம்தான் அவனுக்கு எந்த ஹெல்ப்பும் பண்ணக்கூடாதுன்னு தடுத்துவிட்டார்கள். அந்த வேதனையில் அழுது அழுது அவரது முகமும் கண்களும் வீங்கியிருந்தது.
கவிதா வந்ததும் நேராக சென்று அண்ணனைப் பார்த்தவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை! எப்படி வாழ்ந்த மனுஷன்! இப்படி தனது மகனால் அடிபட்டு சுய நினைவின்றி இருக்கிறாரே! என்று வேதனையில் மீண்டும் அழுதவாறே வெளியே வந்தார்.
ஆதிராவை கட்டிக்கொண்டு ஏங்கி ஏங்கி அழுதார்.
அவருக்கு மகனையும் விட்டுக் கொடுக்க முடியவில்லை. தனது அண்ணனையும் இப்படி பார்க்க முடியவில்லை. அதனால்தான் எதுவும் பேசாத அழுது கொண்டிருந்தார்.
அவரது அழுகைக்கான காரணம் தெரிந்த ஆதிராவும் அவரை தீர்க்கமாகப் பார்த்தாள்.
அவளதது பார்வையின் அரத்தத்தை உணர்ந்த கவிதா வேக வேகமாக தனது கண்ணைத் துடைத்துக் கொண்டு மகேஸ்வரியின் பக்கத்தில் போய் உட்கார்ந்தார்.
“அண்ணிஈஈஈஈ” என்று போய் மகேஸ்வரின் கையை பிடித்த கவிதா பேசாமல் அழுது கொண்டிருக்க, மகேஸ்வரியே கவிதாவின் கையில் இருந்து தனது கையை விலக்கி எடுத்தார்..
“உன் மகனால்தான் நாங்க இவ்வளவு கஷ்டத்தோட இருக்கோம், கிட்டத்தட்ட பத்து பனிரெண்டு வருஷமா எங்களை இப்படித்தான் டார்ச்சர் பண்ணிட்டு இருந்தான். ஆனாலும் என் புருஷனோ தங்கச்சி மகன் தங்கச்சி மகன்னு பாசமா இருந்தாரே. அவரை கடைசில இப்படி படுக்க வைச்சிட்டானே அவன் நல்லாவே இருக்கமாட்டான். முதல்ல இருந்தே அவனை இப்படியான பிள்ளையா வளரமால் இருக்கத்தான் அவனை அதட்டி வைங்க, அப்படியில்லாமல் சின்னபையன்னு விட்டுவைச்சது இப்போ அது எங்க வந்து நிற்க்குது பாரு. என் புருஷனோட உயிரைக் குடிக்கிறவுக்கு வந்து நிக்கிது. இப்போ வரைக்கும் உன் மகனுக்காகதான் நீ யோசிக்கிறன்னும் எனக்குத் தெரியும். அவனை ஜெயிலுக்கு அனுப்பினது அனுப்பினதுதான். அவன் மேல போட்ட கேஸை நான் வாபஸ் வாங்க மாட்டேன். என் புருஷனுக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆயிருச்சின்னு வையேன் உன் மகனை வெளியவே வரவிடமாட்டேன். இது என் புருஷன் மேல சத்தியம் பண்ணி சொல்லுறேன். உன் மகனுக்காக எல்லாம் என்கிட்ட பேச வராத கவிதா. இப்போ தயவு செய்து எழுந்து போயிடீ.உன்னை பற்றி தெரியும் உன் அண்ணனை பத்தியும் எனக்குத் தெரியும். அதனால்தான் பேசிட்டிருக்கேன். இனிமேல் என் பக்கமே வந்திடாதே” என்று கையெடுத்துக் கும்பிட்டுஃ கவிதாவின் முகத்துக்கு நேராகவே இங்கிருந்து போயிடு என்று பேசிவிட்டார்.
அவர் அப்படி பேசியதும் கவிதாவுக்கு அடுத்து என்ன பேசணும் என்று தெரியாது பரிதவித்தார். ஆனாலும் நடுங்கும் வார்த்தைகளோடு “அண்ணி நீங்க என்னை தப்பா நினைச்சிட்டீங்க. இப்போ நான் என் அண்ணனைப் பார்க்கத்தான் வந்தேன். என் மகனுக்காக பேசறதுக்காக வரலை. அவன் எப்படி போனாலும் போகட்டும், அவனைப்பத்தி நான் இனி கவலைப்படப் போறதில்ல . அவன் வாழ்க்கை ஜெயிலுக்குள் இருந்தாலும் ஒன்னுதான் வெளிய வந்தாலும் ஒன்னுதான் அவனை நான் நேத்தோடு தலை முழுகிட்டேன்”என்று சொன்னாலும், அவரையும் மீறி மகனுக்காக வந்த அழுகையை மகேஸ்வரிக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டார்.
ஆனால் ஆதிராவுக்கு அவரது வாயின் வார்த்தை பொய்யானது என்று தெரியும். ஏனென்றால் அவளுக்குத்தான் சின்னவயசுல இருந்து தனது அத்தையை பத்தி தெரியுமே!
இதுக்குமேல அவங்களைப் பேசவிட்டால் அவ்வளவுதான் இருக்கிற பிரச்சனையை பத்தாக்கி மொத்தக் குடும்பத்தையும் நாலாக்கிடுவாங்க. இரண்டுபேரும் பாசமா இருக்கும்போதுதான் அம்மா அத்தையென்ற தேவதைகள். இரண்டுபேருக்கும் ஈகோ கிளாஸாகி சண்டை வந்துட்டு இரண்டும் இராட்சஷிங்களா மாறிடுவாங்களே! என்று நினைத்தவள் ஓடிப்போய் அவங்க இரண்டுபேருக்கும் நடுவுல போய் உட்கார்ந்தாள்.
அவங்க இரண்டுபேரோட கையையையும் தன்னோடு இரண்டு கையாலும் பிடித்தவாறே அமைதியாக உட்கார்ந்துவிட்டாள்.
இதுக்கு மேல இவங்கள பேசவிட்டால் ஒருத்தருக்கு ஒருத்தர் தனது மனசுக்குள்ள இருக்குற ஆதங்கத்தை வார்த்தைகளை கொட்டிடுவாங்க! இருக்க பிரச்சனை போதாதுன்னு மொத்தமா குடும்பத்தையும் பிரச்சனைக்குள்ளயே தள்ளிடுவாங்க.
அப்புறம் ரவி அத்தானுக்கு அவங்களுக்காக பேசவா, எங்களுக்காக பேசவான்னு தெரியாது பிரச்சனை குழம்பிட்டாருன்னா அவ்வளவுதான். அவரு எதையாவது பேசி, அக்கா கோவத்துல உங்கக்கூட வாழ மாட்டேன்னு சொன்னாலும் சொல்லிடுவா. அவங்க குடும்ப வாழ்க்கையும் எப்படி போகும்னே தெரியாது. அதனால் இப்போ இவங்க இரண்டுபேரையும் சமாதானப்படுத்தியே ஆகணும் என பேச ஆரம்பித்தாள்.
“அம்மா அத்தை என்ன செய்தாங்கன்னு அத்தை மேல கோவப்படுறீங்க?அத்தான் செய்து வைச்சிருக்கிறதுக்கு அத்தை என்ன செய்வாங்க? ஒருத்தருக்கு மேல ஒருத்தர் கோபப்பட்டு பேசி இப்போ எந்த பிரயோஜனமும் இல்லை. அப்பாவை எப்படி காப்பாத்தலாம்னுயோசிப்போம், டாக்டர் கிட்ட பேசணும். டாக்டர் ஆபரேஷன் எதுவும் பண்ணனும்னு இப்போதைக்கு சொல்லலை. அவரை மூணு நாலுநாள் ஐசியூவில் வைச்சு செக் பண்ணிட்டுத்தான் எதுன்னாலும் சொல்லமுடியும்னு சொல்லிட்டாங்க. ஏன்னா வெளி காயம் அதிகமா இருக்கு, ஆனால் உள்ள காயங்களை பார்த்து சரியா சொல்ல முடியலன்னு சொன்னாங்க. அப்பாவுக்குத் திரும்பவும் ஸ்கேன் எடுத்து பார்த்துட்டுதான் எதுன்னாலும் முடிவு பண்ண முடியுமாம். அதனால நீங்க இப்போ சண்டை போடுறதை விட்டுட்டு அடுத்து என்ன பண்ணனும், என்ன ஆகணும் அப்படிங்கறது பத்தி யோசிப்போம். அத்தை உங்களுக்கு இப்ப வருத்தமான நிலைதான் ஒரு பக்கம் உங்க அண்ணன் கோமா ஸ்டேஜ்ல இருக்காங்க இன்னொரு பக்கமும் உங்க மகன் ஜெயிலுக்குள்ள இருக்காங்க. கூடப்பிறந்தவனா?பெத்த பிள்ளையான்னு நீங்க அல்லாடிட்டு இருக்கிறது எங்களுக்கு தெரியும். அதனால் இப்போதைக்கு நீங்க கொஞ்சம் அமைதியாவும் பொறுமையாவும் இருங். இனி நடக்குறது நல்லாவே நடக்கும்னு நம்புவோம் என்று சொல்லி அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.
அவள் அப்படி பேசி முடித்ததும் அவளது கையைப் பிடித்த கவிதா “எங்க அண்ணன் பேசுற மாதிரியே பேசுறியேடி, அவரும் இப்படித்தான் எல்லா சூழ்நிலையிலும் பொறுமையா, அமைதியா முடிவெடுப்பார். நீயும் இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு நடுவுலயும் அவரை மாதிரியே யோசிச்சு பேசுற பார்த்தியா, உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நான் பெத்தது கண்ட கண்ட கழுதையையெல்லாம் காதலிச்சு அவன் வாழ்க்கையே நாசமாக்கிட்டான். இப்போ ஜெயில்ல இருக்கான். அவனெல்லாம் திருந்தவே மாட்டான். ஒரு பெத்தவளா இருந்தும் நான் அவனை சபிக்கத்தான் செய்யிறேன்” என்று கவிதா தன்னுடைய ஆதங்கத்தில் மகனை சபித்தார்.
அதைக் கேட்டதுமே ஆதிரா அதற்குமேல் எதுவும் பேசமுடியாது, தன் உதட்டை கடித்து, உணர்வுகளை கட்டுப்படுத்தி அப்படியே தொண்டைக்குள் விழுங்கிக்கொண்டாள்.
மகேஸ்வரிக்கு அதைக் கேட்டு இன்னும் கடுப்புதான் வந்தது. இப்போ வந்து மகனுக்கு என் பொண்ணைக் கட்டி கொடுக்க முடியலைன்னு ஆதங்கப்படுறத பாரு. அவன் இதுநாள்வரைக்கும் செய்துவைச்சிருக்க வேலையை பத்தி நினைக்கவே மாட்டுக்காளே! என்று மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தாள்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ரவி காவிதாவிடம் வந்தான் “அம்மா நீ மாமாவை பார்த்துட்டல்ல வீட்டுக்கு கிளம்பு. உன் மகனுக்கு ஜாமீனெல்லாம் எடுக்குற ஐடியால எனக்கு கிடையாது. நீ இங்க எதுக்கு வந்திருப்பேன்னு எனக்குத் தெரியும்.எப்படியும் உன் இளைய மகனுக்காகக் கொஞ்சமாவது மனம் இறங்கி இருப்பான்னு தெரியும்.ஆதிராக்கிட்ட பேசியோ, இல்லௌ என்கிட்ட பேசியோ அவனை ஜாமினில் எடுக்க நீ ஐடியாவெல்லாம் பண்ணிட்டுத்தான் இங்க வந்திருக்க. உன் மேல சத்தியமா இந்தத்தடவை உன் மகனக்காக யாருமே மனசு இளக்கி, இறங்கி ஜாமீன் எல்லாம் இல்லனா எடுக்க வரமாட்டோம். நானும் அவனுக்காக எந்த உதவியும் செய்யமாட்டேன். நீயும் அப்பாவும் வேணும்னா அவனுக்கு ஏதாவது செய்யுங்க எங்களால் எதுவுமே செய்ய முடியாது. அவனோட வாழ்முழுக்க ஜெயில்லக் கிடந்து செத்தாக்கூட எங்களுக்கு நல்லதுதான். இப்படி ஒருத்தன் என்கூட பிறந்தான்னு வெளியே தெரியாமலாவது இருக்கும்”என தனது கோபத்தை வார்த்தையில் காண்பித்தான்.
“என்ன ரவி நீ இப்படி பேசுற. அவன் மனசு திருந்தி வாழணும்னுதான் நான் எல்லா சாமிக்கிட்டயும் வேண்டிக்கிட்டிருக்கேன். இப்படி அவனை சாகட்டும்னு சொல்லாதடா. அவனும் நல்லாவாழணும்னுஒரு தாயா நான் நினைப்பேன். எல்லோருமே இப்படி பேசினா எப்படி. அவனை சரியா புரிஞ்சிக்கிட்டது எங்கண்ணன் மட்டும்தான். அவரையே இப்படி படுக்கவைச்சுட்டான்”என்றவருக்கு அடுத்து பேசமுடியாது தொண்டையை அடைக்க அழமுடியாது ஏங்கினார்.
உடனே ஆதிரா எழுந்தவள் “என்ன அத்தான் இப்படி பேசுறீங்க?சின்னத்தான் செய்த தப்புக்கு ஜெயிலுக்குள்ள போயிருக்காங்க ஒரு மாசத்துல ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருக்கு. அவர் அந்த ஒரு மாசத்துல செய்த தப்பையெல்லாம் நினைச்சு திருந்தி வரவும் வாய்ப்பிருக்குல்ல. அதைவிட இப்போ அவங்ககூட யாருமே இல்லைன்னு வரும் போது அவங்களுக்கு எல்லாமே புரியவரும். இந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கும்போதுதான் நீங்கெல்லாம் துணையா இரீக்கணும். இதுக்குமேல அவங்களை சபிக்கிறமாதிரி யாருமே பேசாதிங்க. என்னைக் கல்யாணம் பண்ணலனாலும் வேற எங்கேயாவது அவருக்குப் பிடிச்சவங்களைக் கல்யாணம் பண்ணிட்டு நல்லா வாழட்டுமே. இந்த பேச்சை விட்டுட்டு அடுத்து அப்பாவுக்கு என்ன ட்ரீட்மென்ட் கொடுக்கிறதுன்னு டாக்டர்கிட்ட பேசுங்க. டாக்டர்கிட்ட கேட்டு பேசி அதற்கான ஒரு முடிவு எடுப்போம்”என்று பேசியவளைப் பார்த்து எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
மகேஷ்வரிதான் மகளின் உள்ளான மனநிலை என்னவென்பதை உணர்ந்து அவளையே பரிதாபமாகப் பார்த்தார்!