மதுரவிஷமோ நீ2

Maa2

மதுரவிஷமோ நீ2

2 மதுரவிஷமோ நீ?? 

அரசு ஒரு கம்பெனி வாங்கினா, மகிழ் ஒரு கம்பெனி வாங்குவான் ..

மதுரை என்றால் ஒன்று அரசு இன்னொன்று மகிழ் வண்ணம் பணத்துக்கு பணம் மரியாதைக்கு மரியாதை என தராசில் வைத்தால் சரிசமமாக நிற்கும் அளவு இருவரும் கடின உழைப்பாளிகள்.. மஞ்ச பாளையத்தில் படிக்க வசதி இல்லாது மதுரைக்கு மாமனும் மருமகனும் கிளம்பி வந்து விட இப்போது மதுரையையே விலைக்கு கிடைக்குமா கேளுடா என்ற அளவு பணத்தில் புரளுகின்றனர்.. 

அரசு கார் ஆமையாக நகர 

என்னாச்சு? என்று டிரைவரை வள்ளுவாக விழுந்து பிடிங்கினான் அரசு... அது என்னவோ கோடி ரூபாய் கார் என்றாலும் ஜன்னல் திறந்து வச்சாதான் ஆளுக்கு மூச்சு திணறாது, அவன் கிரகம் மது வந்து எதிரே விழுந்து விட .. வெந்நீர் கொட்டியது போல சிடுசிடுத்தான் .. 

ஏதோ ஆக்ஸிடெண்ட் போல சார் காரை நகட்டிட்டு இருக்காங்க டிராபிக் ஆகிடுச்சு 

ப்ச் , அரசு எதிரே அப்பளமாக கிடந்த காரை கண்டு விட்டு தலையை திருப்ப ... தகப்பன் தோளில் கையை போட்டு கொண்டு நின்ற மதுவை கண்டு விட்டு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது அரசுவுக்கு...அவன் பார்வை கண்டு வேண்டுமென மது அரசுவை பார்த்து கண்ணடிக்க 

"பொறுக்கி நாயை பெத்து விட்டிருக்கான் பாரு" என்று பல்லை கடித்து மகிழை பார்க்க , மகிழ் சட்டென்று முகத்தை திருப்பி கொள்ள... மது பார்வை மெல்ல கார் பின்னால் சீட்டை பார்க்க போக, அரசு சட்டென்று பின் சீட் ஜன்னலை வேகமாக மூட..

பின் இருக்கையில் அவன் பெத்த மூன்று இளவரசிகளும் இருக்க .. இவன் கண்ணை விட்டு மகள்களை அவன் வேக வேகமா மறைக்க , விசில் அடித்து கொண்டே மது பின் இருக்கையை பார்த்தான்..

அவன் பெத்த அரசிகளை இவனுக்கு பயந்தே பொத்தி பொத்தி வளர்க்கிறான்.... சரியாக டிராபிக்கில் வண்டி விழ , மது அருகே அரசு வண்டி பிரேக் போட்டு நிற்க 

கண்ணாடி ஜன்னல் அந்த பக்கம் இருந்த அரசு வாயில் வண்ண வண்ண வார்த்தை 

"பார்க்கிற பார்வையை பாரு, திருட்டு நாய் உருப்படாத பய, பொண்ணுங்கள கண்ணால பார்த்தே கெடுத்துடுவான் போல "என்று விட்டு பின்னே திரும்ப ... இரண்டாவது மகள் மகிழை பார்த்து சிரிக்க, அரசு கண்ணில் பட்டு விட்டது?  

"அங்க என்னடி கண்ணை சிமிட்டுற ? "

"ப்பா அது மகிழ் தாத்தா "

"தொலைச்சி புடுவேன், மூணு பேருக்கும் ஒன்னே ஒன்னு தான் சொல்றேன் ... அந்த வீட்டு ஆட்கள் கூட சகவாசம் வச்சிக்க நினைச்சீங்க, அப்பாவோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியது வரும்..

சரிப்பா "மூவரும் கோரஸ் பாடினர் ..

காலை மாலை மதியம் என மூன்று வேளையும் சோறு கொடுப்பானோ இல்லையோ.. இந்த மது பய இருக்கிற திசை பக்கம் போக மாட்டேன்னு ஆயிரம் தடவை சொல்லுங்க என்று சொல்லி சொல்லி வளர்த்து கொண்டிருக்கிறான்..பின்ன, சொல்ல மாட்டான் ... மது தன் பத்து வயதில் அரசு மகள் மூத்தவள் கையை பிடித்து இழுத்தான் , பனிரெண்டு வயதில் இரண்டாவது காரிக்கு முத்தம் கொடுத்து மரண அடி வாங்கினான், பதினைந்து வயதில் மூன்றாவதுக்காரிக்கு காதல் கடுதாசி கொடுத்து பாரபட்சம் இல்லாது அத்தனைக்கும் ப்ராக்கெட் போட்டால் அரசு சும்மா இருப்பானா? அவனுக்கு வயிறு கபகபவென மதுவை பார்த்தால் எரிய ஆரம்பித்து விடும்... 

என்,புள்ளையை ஆகாத எவனும், எனக்கு வேண்டாம் என்று மகிழும் அரசுவோடு இருந்த பந்தத்தை வெட்டும் அளவு, மகிழ் மீது தீரா பாசம் கொண்டு கண் மூடத்தனமான அன்பில் சாபம் பெற்று கிடந்தான்...

வண்டி நகர்வேனா என நிற்க ...  

மாமோய் உன் பொண்ண கொடே" என்று மது சத்தம் போட்டு பாட ஆரம்பிக்க... அரசு சட்டென்று காரை விட்டு இறங்கி வேட்டியை இறுக்கி கட்டி கொண்டு நேராக வந்து மது சட்டையை பிடித்து இழுக்க

"இந்த நக்கல் நையாண்டி மயிறு எல்லாம் வச்சிக்காத தொலைச்சு புடுவேன் ராஸ்கல் "என்க மது உதட்டை பிதுக்கி, அரசுவை பார்த்தவன்  

"நீர் பிடிச்ச மாதிரி நான் பிடிச்சா உமரு மருவாதை போயிடும்.. கையை எடுக்கிறீரா எப்படி ?புருவம் சுளிக்க.. 

"டேய் என் புள்ளை மேல இருந்து கையை எடுடா என்று மகிழ் வந்து அவன் கையை எடுத்து விட  

"பொறம்போக்கை பெத்து வச்சுக்கிட்டு சிலிர்க்கிறியா ..உன் மகன்கிட்ட சொல்லி வை கிண்டல் மயிறு பண்ணினான் ,அவன் தலையை சீவி ஆத்துல வீசிட்டு போயிடுவேன்னு என்று அரசு மதுவை முறைத்து விட்டு போக ..

"ஏன்டா மகனே அவன்கிட்ட போய் வச்சிக்கிற "மகன் கசங்கிய சட்டையை மகிழ் நீவி விட.. 

"தகப்பா, உன் மருமகன்ட சொல்லி வை அதே அருவா நான் வீசினாலும் வெட்டும்னு, அதோட என்னதான் ஜன்னல் போட்டு மறைச்சு வச்சாலும் நான் விட மாட்டேன்னு" என்று அரசுவுக்கு கேட்க கத்திய மதுவை அரசு திரும்பி முறைத்து கொண்டே போய் காரில் ஏற ...

"அவன் வீட்டு பொண்ணு உனக்கு எதுக்கு மகனே உலக அழகி பார்த்து உனக்கு கட்டி வைக்கிறேன்டா " என்ற மகிழ் தோளோடு அணைத்த மது 

"அய்ய தகப்பா, அவன் வீட்டு பொண்ண கட்டிக்கிறேன்னு எப்ப சொன்னேன்??" என்றவன் கண்கள் மறைந்து போன காரை குரூரமாக பார்த்தது ... 

"கட்டிக்கலேன்னா என்னடா பண்ண போற? 

"வச்சிக்க போறேன் தகப்பா' என்று சிரித்து கொண்டு கூற 

"சேட்டைக்காரன்!!" என்று மகிழ் விளையாட்டாக எண்ணி விட , அவனோ போகும் காரை பழி தீர்க்கும் ஆசையில் பார்த்தான்...

அரசுவின் மகள் சடங்கில் நடந்த அவமானம் அவன்,கண் முன் வந்து வந்து போனது.. கன்னத்தை தடவினான்.. அரசு மது சட்டையை பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளி 

"பொம்பள பொறுக்கி என் புள்ளை மேல கை வைக்கிறியா சாவு "என்று சொந்த பந்தம் முன்னே மதுவை புரட்டி போட்டு அடிக்க பந்தியில் பந்தி பரிமாறி கொண்டிருந்த மகிழ் ஓடி வந்து மகனை தூக்கி அணைத்து மறைத்து கொள்ள 

"இனிமே உன் புள்ள இங்கன கால் வச்சான் முதல் வெட்டு உனக்குதேன்" என்ற மருமகனை முறைத்த மகிழ்

"என் புள்ளை மேல கை வச்சிட்டல்லடா, இனிமே உன் கூட ஒட்டும் இல்லை உறவும் இல்லை வாடா மகனே தங்கம்" என்று நாயகியோடு நின்ற மனைவியை ஒரு கையில் மதுவை ஒரு கையில் இழுத்து கொண்டு வந்தது மறக்குமா??

அத்தனை பேர் முன்னாடி அடிச்சு அசிங்கப்படுத்தினல்ல ... பழி தீர்க்க வேண்டியது நிறைய இருக்கு மிஸ்டர் அரசு ..உங்க விரலை வச்சே உங்க கண்ணை குத்தி கிழிச்சு ரத்தம் வடிய வைக்கல நான் மதுரன் இல்லைய்யா" என்று பல்லை கடித்தான்...

அவன் தேன் வடியும் மதுரன் இல்லை 

விஷம் வடியும் மதுரன் என்று பெற்றவன் உட்பட யாரும் அறியவில்லை !! 

மனைவியை ஆட்டி படைத்த அரசுவும் கூட, தரை மட்டுமாக இடிந்து விழும் நாட்கள் இனி!! 

தேனில் விஷம் கலந்து கொடுக்க வருவான் இந்த மதுரன்!! 

காலை புதுகாரில் ஏறிய மது ..

"தாயே நீ குறுக்க போ. அப்பதான் கார் ராசியா இருக்கும் "என போன மகன், வரும் போது நண்பன் பைக்கில் வந்து இறங்க 

"மது கார எங்கடா , போகும்போது காரில் போன வரும்போது சும்மா வர்ற

அதுவா கோல்ட் நீ குறுக்க வந்தல்ல சகுனம் சரி இலலை , காருக்கு காய்ச்சல் ஹாஸ்பிட்டல்ல சேர்த்து இருக்கேன்..

"காருக்கு காய்ச்சலா..

"மனுசனுக்கு காய்ச்சல் வரும் போது, மனுசன் உருவாக்கின காருக்கு காய்ச்சல் வராதா கோல்ட்? டெல் டெல் , மது தாயை இடிக்க 

"தள்ளி போடா எருமை , இப்ப காரை எங்கடா ? "

"ஐஸ்யூ ல கவலைக்கிடமா இருக்கு கோல்ட் , பிழைக்கவும் வாய்ப்பிருக்கு. சாகவும் வாய்ப்பு இருக்கு.. நீ எதுக்கும் மனசை தளர விட்றாத சரியா என்று தாயின் தோளில் அடிக்க... 

மீனா கையில் வைத்திருந்த தோசை கரண்டியால் மகனை அடிக்க போக ... எங்கிருந்துதான் வந்தானோ இடையில் வந்து தடுத்து இருந்தான் மகிழ்

"தங்கம் வயசு பையனை கை நீட்டுறது என்ன பழக்கம் ..ஹான் 

"யோவ் வாயில எதாவது வந்திடும், கொண்டு போன காருக்கு என்ன ஆச்சுன்னு கேட்டா , கத கதையா விடுறான் , நீங்க இடையில வந்து விழுறீங்க, நீங்களாவது என்ன ஆச்சுன்னு கேளுங்க மாமா...

"ப்ச் அது குட்டி ஆக்ஸிடெண்ட் என்றதும் மீனா பதறி புருஷனை பார்க்க..

"குழந்தைக்கு ஒன்னும் இல்லடி... கார் தான் டேமேஜ் ஆகிப்போச்சு 

"எது 

"ம்ம் , அதான் புள்ள ஆசைப்பட்டு ஆடி கார் கேட்டான் உன்கிட்ட நிலத்துக்கு காசு காலையில தந்தேன்ல அதை எடுத்துட்டு வா , வேற கார் வாங்கிக்கட்டும்...

"மறுபடியும் காசா?? எடு அருவாளை" என்று தோசை கரண்டியால் மகிழ் முதுகிலேயே ஒரு அறை சப்பென்று விழுந்தது .. 

"பிள்ளையை தானே அடிக்க கூடாது இந்த அடியை நீங்க வாங்கிக்கோங்க... "

"ஆஆஆ தங்கம் வலிக்குதுடி, வயசான காலத்துல முத்தம் தாங்குற பாடி, அடி தாங்காது என்று அவளை சுற்றி சுற்றி ஓடினான்... 

"அவன் கெட்டு இப்படி நிக்கறதுக்கு காரணம் நீங்க மட்டும் தான் "என்று மகிழ் முதுகில் இன்னொரு அடி விழ போக மது தாவி தாய் கையை பிடித்து .. 

"கோல்டு வொய் கெட்டிங் ஆங்கிரி" என்று கரண்டியை பிடித்து கொண்டான் மது 

"செருப்பால அடிப்பேன் நாய , இங்கிலீஸ்ல பீத்துனா.. இருபது லட்ச ரூபா கார ஒடச்சிட்டு வந்து நிக்கிற , அவரும் ஏதோ விளையாட்டு கார் மாதிரி அடுத்தது வாங்கி கொடுன்னு, 50 லட்சம் கேட்கிறார் நீயும் பல்ல காட்டுற... உன் வயசு பிள்ளைங்க எல்லாம் உருப்பட்டு தாய் தகப்பனுக்கு சம்பாதிச்சு போடுது ஆனா நீ ?? நாங்க சம்பாதித்து வைத்த காசெல்லாம் எடுத்துக்கொண்டு தெருவுல போடுற.. அது நல்லதுக்கு செலவழிஞ்சாலும் பரவாயில்லையே இப்படி காரு, போனுன்னு அடி அழிஞ்சுகிட்டு இருக்கு என்ற மனைவியை இழுத்த மகிழ் 

"ஏண்டி இப்போ இவ்வளவு கோவப்படுற,

நான் சம்பாதிக்கிறது யாருக்கு என் மகனுக்கு தானே.. 

"அதுக்கு இப்படியா மாமா 

"ப்ச், நம்ம செத்த பிறகு அவன் அதை வச்சு என்ன செய்யப் போறான் இருக்கும் போதே அவ அனுபவிக்கிறத கண்ணால பாப்போம்டி . எதுக்கு இப்போ கத்திக்கிட்டு இருக்க, போ புள்ள களைச்சு போய் வந்திருக்கான் .. டீ போட்டுக் கொண்டு வா பக்கோடா வேணுமா வடை வேணுமா மகனே" மீனா பல்லை நரநரத்து புருஷனை பார்க்க..

அவள் கன்னத்தில் கிள்ளி முத்தமிட்ட மகிழ

"கோபப்படாதடி அவன் பச்ச புள்ள, காலம் வரும்போது புரிஞ்சுக்குவான் போ போய் வடை சுடு "

உங்களை தான் எண்ணெய்யில கொதிக்க விட்டு வடையா சுடனும்.. நானும் 25 வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கேன், அவனுக்கு கொடுக்கத் தெரியாம இடத்தை கொடுத்துகிட்டு இருக்கீங்க ஒரு நாள் இதே இடத்துல வச்சு, நாம செஞ்சது எல்லாம் தப்புன்னு உணர வச்சிடுவான் பாத்துக்கோங்க.. அன்னைக்கு ஐயோ அம்மான்னு கதறி அழுதாலும் எதுவும் திரும்பி வரப்போவது கிடையாது "என்று போகும் மனைவியை தலையில் அடித்துக் கொண்டு பார்த்த மகிழ் 

"உன் ஆத்தா , எதையாவது சொல்லுவா ராத்திரி சீக்கிரமா வீட்டுக்கு வந்து தூங்கிடு என்றுவிட்டு போகும் தகப்பனை

"தகப்பா என்று மது கத்தி அழைக்க.. மாடிப்படி ஏறிக் கொண்டிருந்த மகிழ் திரும்பி மகனை என்ன என்று பார்க்க

"ஐ லவ் யூ தகப்பா.... 

"ஹாஹா என்னடா திடீர்னு 

"ப்ச் சும்மா, எவகிட்டயும் இதுவரைக்கும் நான் ஐ லவ் யூ சொன்னதே கிடையாது.. சொல்ல போறதும் இல்ல, பட் முத முதல்ல ஐ லவ் யூ , நான் உனக்கு தான் சொல்றேன் ஐ லவ் யூ சோ மச் "என்று பறக்கும் முத்தம் கொடுக்க

"போடா லூசு பயலே" என்று சிரித்துக் கொண்டே மகிழ் அறைக்குள் போனான்

தகப்பன் மகனைப் பார்த்து மகிழ வேண்டிய மீனாவுக்கும் ஏனோ மனம் பாரம் அழுத்தியது..

"பிள்ளைக்கு பாசம் கொடுக்க வேண்டியதுதான், ஆனால் அந்தப் பிள்ளையோ அமுதத்தில் ஒரு துளி தின்று பார்க்கிறேன் என்று சொன்னால் பரவாயில்லையே, நான் விஷத்தின் ஒரு துளி தின்று பார்க்கிறேன் என்று அல்லவா வளர்ந்து கொண்டிருக்கிறான் ... விஷம் கெட்டது என்று சொல்லிக் கொடுக்க வேண்டிய தகப்பன் விஷத்தை குடித்துப் பார் என தட்டிக் கொடுக்கிறானே..

தாயாக, மனைவியாக எதுவும் செய்ய முடியாது தவித்துப் போய் ஹாலில் நின்று இரவு நேர விடுதிக்கு அந்தப் பெண்ணை அழைத்தாயா இந்தப் பெண் வந்துடுமா ரேட் எவ்வளவுனாலும் ஓகே மச்சான் ஆளு சுத்த பத்தமா இருக்கணும் எக்ஸ்ட்ரா பேமெண்ட் வாங்கிக்க சொல்லு சும்மா லோக்கல் சரக்கு எல்லாம் வேண்டாம் என்று பேசிக் கொண்டிருந்த மகனைப் பார்த்து பெத்தவளுக்கு நெஞ்சில் ரத்தம் சொட்டு சொட்டாக விழுந்தது...

அமுதில் விழுந்தாலும் விஷம் விஷமே!!