மதுர விஷமோ நீ 1

Maa1

மதுர விஷமோ நீ 1

1 மதுரவிஷமோ நீ ?? 

மதுரையின் பிரபல  மருத்துவமனை !! 

குழந்தைகள் சிறப்பு மருத்துவர் அறை முன்னே கூட்டம் கூடி இருந்தது .. 

அத்தனை குழந்தையும் ஊசி குத்தை வாங்கி விட்டு வீல் என அழ..  வெளியே அமர்ந்திருந்த மகிழ் மடியில் தன் ஐந்து வயது மகனை அணைத்து பிடித்து வைத்திருந்தான் ... அருகே அவன் மனைவி மீனா தலையில் அடித்து கொண்டு முனங்கி கொண்டிருந்தாள் ..  

பெத்தாலும் பெத்தார் சீமையில இல்லாத ஒரு பிள்ளை அப்பா இவர் பண்றதை பார்த்தா நமக்கே கோவம் வருதே என்று சலிக்கும் அளவு மகனை கொஞ்சி கொண்டு இருந்தான் மகிழ் ... 

"மாமா அவனுக்கு ஒன்னும் இல்லை" 

"உனக்கு தெரியுமா ராத்திரி மூணு தடவை புள்ள தும்மினான்...என்,புள்ளையை ரெண்டு தடவை குளிச்சி விடாதேன்னு சொன்னேன் கேட்டியா,  சளி பிடிச்சிட்டு போல" என மகன் தலையில் முத்தமிட 

"அச்சோ,ராமா !!! தும்மல் வர்றது சாதாரணம் மாமா இவன் மனைவி பக்திக்கும் அளவு இ‌ல்லை,  மகன் பக்திக்கும் அளவு இல்லை என்று மீனா நொந்து போகும் அளவு மகிழ் மீநேசம் இருக்கும் 

"ப்ச் , அது ஏன் தொடர்ந்து வருது  ஆரம்பத்திலேயே பார்த்துட்டா எனக்கு நிம்மதியா இருக்கும் .. மகிழ் பரந்த மார்பில்  காலை வைத்து மிதித்து தலைகீழாக தொங்கி கொண்டிருந்தான் அவன் தவப்புதல்வன்  

மதுரன்!!  மது  !! தேன் போன்றவன் பெயரில் மட்டுமே!! 

"டேய்  ஒழுங்கா உட்கார்டா "என்று மீனா அவன் பட்டாக்ஸில் அடிக்க போக மகிழ் கையை விழுந்து பிடித்து கொண்டு 

"தங்கம் , என் புள்ளை மேல கை வச்ச,  நடக்கிறதே வேற பார்த்துக்க , அவனே உடம்பு முடியாம கிடக்கான்..  எய்யா , இப்ப எப்படிய்யா இருக்கு,எதாவது வாங்கி தரவாய்யா" தகப்பன் தலைமீது தொங்கி கொண்டிருந்த வாணரம்  தலைகீழாக  நின்றபடி தகப்பனை பார்த்து 

"தகப்பா 

"சொல்லு மகனே 

" அந்த டாக்ட்டர் அழகா இருக்கு,  அதை வாங்கி கொடேன்"  என்று நடந்து வந்த  இளம் பெண்  டாக்டரை கை காட்ட சுத்தி இருந்த அனைவரும் சிரித்து விட, மகிழும் மகன் கண்ணம் கிள்ளி சிரித்தவர் 

"பெருசாகு மகனே  அப்பா வாங்கி தர்றேன் .. 

"நிஜமா வாங்கி தருவியா தகப்பா 

"உனக்கு இல்லாததா , நீ கேட்டா எதையும் வாங்கி தருவேன் மகனே 

"அப்போ அந்த நர்ஸையும் சேர்த்து பீல் போட்டுடு தகப்பா  

"சரி தங்கம்" என்று மகிழ் இடையில் இடித்த மீனா 

"பிள்ளையை வளர்கிற லட்சணமா இது , அவன் என்ன பல்லி மிட்டாயா கேட்கிறான், லேடி டாக்ட்டரை வாங்கி தாங்குறான்,  நீங்களும் ஆட்டு ஆட்டுன்னு தலையை ஆட்டுறீங்க..

"அட போடி , அவன் சின்ன குஞ்சுமணி ,அவனுக்கு நாலு தெரியும் பாரு,  விளையாட்டு பிள்ளையை போய்  கண்டிக்க சொல்றியா ? " 

"விளையாட்டு புள்ள போல தெரில விளையாடவே பிறந்த புள்ளை போல தெரியுது மாமா "

"உனக்கு என் பிள்ளையை குறை சொல்லிட்டே இருக்கணும்... போடி .. 

"மதுவை கூட்டிட்டு வாங்க "என்றதும் தகப்பன் தாயை இடித்து விட்டு அந்த இளம் டாக்டர் அருகே போய் மது அமர்ந்தான்  ... 

"ஹாய் பியூட்டி  ஐயம் மது "என்று கையை நீட்ட .. அவரும் சிரித்து பேசி கொண்டே,   இவனுக்கு ஊசி போட போக 

"இங்க போடுங்க ப்யூட்டி "என்று பட்டாக்ஸை பல்லை காட்டி கொண்டே காட்டி ஊசியை வாங்கியவன் ஐந்து வயதில் தன் சேட்டையை ஆரம்பித்து விட்டான் ...

"ஆன்டி நீங்க போட்ட ஊசியை நான் வாங்கினேன்ல நான் தர்ற கிஸ்ஸை நீங்க வாங்கிக்ககணும்" என்று ஸூடுல் மீது ஏறி மது டாக்ட்டர் கன்னத்தில் முத்தமிட..அவரும் குழந்தை என வாங்கி கொண்டார் .. அவன் குழந்தை அல்ல தீராத விளையாட்டு பிள்ளை , வினை பிடித்த நொள்ளை என்று யார்க்கும் தெரியும் ....

அபூர்வமாக கிடைத்த செல்வன் அவன் 

அழகான காதலுக்கு பரிசு அவன் 

தன் உயிரில் உதித்த உன்னதன் அவன் 

தேனாய் அவன் வாழ்க்கையில் மது சுரக்கும் மதுரன் அவன் !! 

மகன் எதை செய்தாலும் சரி,  அது தவறே ஆனாலும் தண்டிக்க தெரியாத தந்தையின் வளர்ப்பில் வினையாக பலர் உறவுக்கு வினையாக மாறப்போகும் ஒருவன் அவன் ..

பத்து வயது மது 

"சார் மது  டீச்சர் உட்கார்ற சேர்ல பட்டாசை வச்சிட்டான் 

"ஹிஹி அறியா புள்ளை தப்பு பண்ணிட்டான், ஸ்கூலுக்கு லைப்ரரி கட்டி தந்திடுறேன்"  கட்டு பணத்தை எடுத்து அவன் தகப்பன்  மகிழ் வைத்தான் 

பதினைந்து வயது மது

"திருவிழாவுல உன் மகன் ஆட்டக்காரி ரூம் உள்ள போய் சேட்டை பண்ணி இருக்கான் 

"தெரியாத வயசு , எதோ பண்ணி இருப்பான் கோவில் சீரமைப்புக்கு காசு கேட்டீங்களே எவ்வளவு வேணும் என்று செக் புக்கை மகிழ் தூக்க   

தண்டிக்க வேண்டிய தகப்பன் தட்டி கொடுக்க  .. தவறு தொடங்கியது அவனிடம் இல்லை ... வளர்ப்பில்!! 

"மது மட்டும் பனிரெண்டாம் வகுப்பு  பெயிலாம் மாமா என மீனா கண்ணீர் கசிய பத்து மணி வரை. பெயில் ஆன வருத்தமே இல்லாமல் தூங்கும் மகனை அடிக்க கரண்டியோடு வர   , கரண்டியை விழுந்து பிடுங்கி கொண்ட மகிழ் 

"கத்தி பிள்ளையை முழிக்க உண்டாக்காத  தங்கம் 

"மாமா வேற எதுக்குத்தான் கத்த சொல்ற ?  

"ப்ச் இப்ப என்ன நடந்து போச்சு தங்கம் ? 

"என்ன நடந்து போச்சா ,உன் மகன் நாலு பாடத்துல பெயில் மாமா 

"ப்ச் அதான்,  மறுபடியும் எழுதலாமே தங்கம் ... பின்ன என்ன விடு , அதுல பாஸ் ஆகிடுவான் என்ற  புருஷனுக்கும் அவளுக்கு சண்டை வரும் என்றால் அது மகனை வைத்து தான் 

"தண்டித்து வளர்க்கணும்" என அவள் சொல்வாள் 

"அவன்,தானா வளரட்டும் "என அவன் சொல்வான் 

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என அவள் சொல்வாள் 

"அதெல்லாம் நேரம் காலம் கூடி வந்தா நல்லா வருவான் என்று இவன் சொல்வான் .. 

மகனை கெஞ்சி கொஞ்சி லா காலேஜில் சேர்ந்து விட்டான் மகிழ் 

"சார் உங்க பையன் காலேஜ் உள்ள சிகரெட் பிடிக்கிறார்.. 

"ஓஓஓ கண்டிச்சு வைக்கிறேன் 

"கிளாஸ் வராம பசங்க கூட ஊர் சுத்துறார்

"ஓஓஓ இனி சரியா இருப்பான் 

"சார் இந்த வயசுல எதுக்கு ஆடம்பர கார் 

"ஒரே புள்ள ஆசைப்படு கேட்டான் வாங்கி கொடுத்துட்டேன்... ஒற்றை மகனை கண்டிக்க நினைப்பே இல்லை...  இப்படியே முட்டு கொடுத்து முட்டு கொடுத்து ....புட்டியில் இருந்து ,குட்டி வரை மீசை முளைக்கும்  பருவத்திலேயே ருசி பார்த்து விட்டான்...   தகப்பன் காதுக்கு அத்தனையும் வந்தாலும் என் வாழ்க்கை வளமாக்க அவன் அன்னை வந்ததது போல அவளுக்குன்னு ஒருத்தி வருவா என்று காத்திருக்கிறார்... 

மகிழ் தன் கரும்பு தொழிற்சாலைக்கு கிளம்பி கொண்டு நிற்க ..காலையிலேயே போன் கால் 

"ஹலோ 

"சார் உங்க மகன் குடிச்சிட்டு கார் ஓட்டி ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு "என்று போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் வர , பதறி போய் மகிழ் ஓட.. நேற்று வாங்கிய கார் இருபது லட்ச ரூபாய் கார் இன்று  அப்பளமாக கிடந்தது  ..  மகிழ் அதை எங்கே கவனிக்க ... 

"எய்யா புள்ளைக்கு எதுவும் ஆகலையே" என்று மகனை தேட ..

"தகப்பா "என்ற மகன் குரலில் மகிழ் திரும்ப...   அங்கு நின்ற போலீஸ் ஜீப்பை தாண்டி குதித்து வந்தான் மதுரன் !! 

உருப்படாமல் உருப்பட எண்ணம் இல்லாமல் வளர்ந்து நிற்கும் அவனின் தவப்புதல்வன் மதுரன்  வயது 28 ... 

தகப்பன் போல உயரம் அழகு , ஏன்டா இப்படி அழகா துருதுருன்னு இருக்க என்பது போல கொஞ்சும் கண்ணும் ..  துருதுருக்கும் உதடும்  .. பேணி வைத்த உடல் கட்டும்,  கழுத்தில் குட்டி இதய டாலர் செயினும் கையில் கிடக்கும் ஜாகுவார் புலி பாயும் தங்க காப்பும் ..  என்று இளம் வயது மகன்  தகப்பன் கண்ணை அழகால் நிறைக்க ..  அவன் மீது ஏதாவது அடி பட்டிருக்கா என்று பார்த்த மகிழ் மது நன்றாக இருக்கிறான் என தெரிந்தாலும் இன்னும் அவர்  பயம் தெளியாது 

"மகனே,  உனக்கு ஒன்னும் இல்லையே" என்று மகிழ் தன் தோளில் சாய்ந்து கொஞ்சும் எருமைமாடு வயது மகன் தலையை தடவ .. 

"இல்லை தகப்பா, ஐயம் ஆல்ரைட் , கார்தான் பீஸ் பீஸா போச்சு  உதட்டை பிதுக்கினான் 

"அது போனா போகட்டும் மகனே, உனக்கு ஒன்னும் இல்லையே அது போதும் ...

"தகப்பா  ஆடி கார் அழகா இருக்கு, இனி இதை வச்சி ஒன்னும் செய்ய முடியாது , அது வாங்கி கொடு 

"ஓஓஓ,  இது ஆவாதா ராசா ? 

"ப்ச் எனக்கு வேண்டாம் , எவ்வளவு தைரியம் இருந்தா சுவர்ல போய் இடிக்கும்..  நான் குடிச்சாலும் குடிக்கலேன்னாலும் அது நிதானமா இருக்கனும்ல தகப்பா " லா காலேஜ் பாஸ் ஆவேனா என பல வருடமாக லா காலேஜை சுத்துகிறான்..

"அதான நிதானம் இல்லாத கார் நமக்கு எதுக்கு ஆடி கார் எப்படி ???

"அதுவா அது இப்படி எல்லாம் இடிக்காது தகப்பா,  இடிச்சாலும் பலூன் ஒன்னு வந்திடும் ..  நமக்கு எதுவும் ஆகாது "

"ஓஓஓ நல்லா இருக்கே ,அப்ப அதையே வாங்கிடு எம்புட்டு ஆகும் மகனே ? 

"சஸ்ட் நாற்பது லட்சம்  தகப்பா"

"நாற்பதா?மகிழ் யோசிக்க 

"என்ன தகப்பா" கண்ணை சிமிட்டும் மகனை  எப்போதும் போல இப்போதும் நெட்டி முறித்து ...

"நிலம் வாங்க அம்மாகிட்ட காலையில ஐம்பது லட்சம் கெடுத்தேன் , சாயங்காலம் குடிக்காம கொள்ளாம வீட்டுக்கு வா, உன் அம்மாவை தாஜா பண்ணி அதை  வாங்கி தர்றேன் .. எல்லா வீட்டிலும் தாய் தான் மகனை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குவாள் இங்கே தகப்பன் குட்டி சுவர் ஆக்கினாலும் பரவாயில்லையே , மண் தரையாக அல்லவா ஆக்கி கொண்டிருந்தார்..

"இது தான் தகப்பா  என்று தோளுக்கு மேல் வளர்ந்த மகன் மகிழ் கன்னத்தில் இச் வைக்க 

"ச்சை...என்று  கப்பில் மூக்கை பிடித்தான் மகிழ்..

"என்ன தகப்பா?  

"எய்யா ஒரே நாத்தமா இருக்கே,  என்ன சரக்கு?  என்று மகன் அருகே வந்த மது வாடையில் முகத்தை திருப்பினான் .. அவனும் ஒரு காலத்தில் குடிகார சங்க தலைவன் அல்லவா??  

"லோக்கல்தான் தகப்பா  கையில காசு இல்லை,  அதான் "என்று தகப்பன் பையில் கையை விட்டு காசை எடுத்து கொள்ள 

"நல்ல சரக்கு வாங்கி குடிய்யா , உடம்பை கெடுத்துக்காத , பாரு குடல் வத்தி போச்சு என மகிழ் தன் காரில்  வைத்திருந்த மீதி ரூபாயை  எடுத்து மது கையில் கொடுத்து

நல்லா சாப்பிடு ..

"ம்ம் ஏதோ கேஸ் அது இதுன்னு இன்சு சொன்னார் தகப்பா "

"அதை நான் பார்த்திருக்கிறேன், நீ ஏன் கவலை படுற  

"ஓகே" என்றவன் சாலையில் மிதந்து வந்த பெராரி காரை உத்து பார்க்க மகிழும் மகன் பார்வை மாற்றம் கண்டு  அங்கே பார்க்க....

ஆடி வந்து நின்றது ஒரு கார் , அதில்  முன் சீட்டில் அரசு உட்காந்து  இருந்தான்.

தொழில் ஜாம்பவான் வல்லரசு .. அவனுக்கு சளைக்காத பண பலம் கொண்ட  மகிழ் வண்ணன் , தொழில் போட்டியாளர்கள் மட்டும் இல்லை சமீபகால எதிரிகளும் கூட 

எல்லாம் எதனால் ஒற்றை மகன் மீது கொண்ட பேரன்பால்.. 

மகன் உயிரில்லாத பொருட்களை உடைத்து தள்ளும் போது சிரித்து கடந்த தகப்பன்,  உயிருள்ள உறவுகளை உடைத்து தள்ளும் போது சிரித்து கடப்பானா? 

பேரன்பு எப்போதும் பெரிய வலியை கொண்டு வந்தே தீரும் !!