அநாயகா-28
அநாயகா-28
இவளது கல்யாண விஷயத்தை ரவீந்ததிரன் அவங்க அம்மா அப்பாவுக்கு போன் பண்ணி சொன்னதும் அவர்கள் உடனே கிளம்பி இங்கே வந்து விட்டார்கள்.
கவிதா வந்ததும் மகேஸ்வரி அவரை பார்த்து “வாம்மா வா. நீயும் உங்க அண்ணனும் என்ன நினைச்சு திட்டம்போட்டீங்களோ அது நடந்திட்டு. இப்போ உனக்கு சந்தோசமா? நீ சந்தோசத்துலதானே இங்க ஓடிவந்திருக்கன்னு எனக்கு தெரியும். இவ்வளவு நடந்தபிறகும் நீ என்ன நினைச்சியோ அதுவே நடந்திருக்கும் பாரு”என்று வார்த்தையாலே குத்தினார்.
அதைக்கேட்டதும் கவிதாவுக்கு கோபம்தான் வந்தது. அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல பேசும்போது வருத்தப்பட்டவருக்கு இப்போ மகேஷ்வரியை திருப்பித் திட்டமும் அப்படிங்கிற அளவுக்கு வந்தது.
ஆனால் அப்பத்தா அதற்குள் சட்டென்று மகேஷ்வரியிடம் திரும்பியவர் “மகேஷ்வரி நீ என்ன நினைச்சிட்டு என் மகள்கிட்ட இப்படி பேசுற? நானும் ஒரு மாசமா பார்த்துட்டிருக்கேன். அவளைப் பார்க்கிற நேரமெல்லாம் கறிச்சிக்கொட்டிட்டிருக்க. அவ அப்படி என்ன தப்புசெய்தான்னு அவளைப் பேசுற. இதே என் மகன் இங்க இருந்திருந்தான்னா நீ இப்படி பேசுவியா?வாயைக் கொஞ்சம் கட்டுப்படுத்து அது எல்லோரையும் கடிச்சு குதறிட்டிருக்கு. இது சரியில்லை. அவன் மகனுக்குக் கல்யாணம் முடிஞ்சிருக்கு அவா பார்க்க வந்திருக்கா. நியாயப்படி நம்மதான் இந்தக் கல்யாணத்தை நடத்தி வைச்சிருக்கணும். எல்லாம் என் பேரனுக்கு போதாதா காலம் இப்படி யாரும் இல்லாமல் கல்யாணத்தை பண்ணவேண்டிய நிலை வந்திடுச்சு. அதுக்காக இப்படி பேசிவியா?” என்று வருத்தப்பட்டு சத்தம்போட்டார்.
கவிதா பேசியதும் மகேஷ்வரிக்கு இன்னும்தான் கோபம் ஏறியது. அவரால் இப்போதுவரைக்குமே இளந்தீரனையும் அவன் செய்ததையும் மன்னிக்கவே முடியவில்லை.
அதனால் கோபத்தில் சங்கரியையே எதிர்த்துப் பேசினார்.
“என்ன அத்தை பேசுறீங்க. உங்க பேரனுக்குப் போதாத காலமெல்லாம் இல்லை. எங்களுக்குத்தான் சனியன் பிடிச்ச போதாத காலம். என் புருஷனையும் இப்படி படுக்கவைச்சிட்டு, என் பொண்ணையும் ஏமாத்திக் கல்யாணம் பண்ணி என் வீட்டுககுள்ளயே அவன் வந்துட்டான் பாருங்க. அவனுக்கு எல்லாம் நல்லகாலமும், சுக்கிர திசையும் குருபார்வையும்தான் கிடைச்சிருக்கு. என் மகள் மூலமா. இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைச்சான் குடும்பத்துக்குள்ளயே பிரச்சனை வந்திடுச்சே. இது ஒன்னு போதாதா?”
“அண்ணி என்ன பேசுறீங்க. அவன் என்னதான் செய்தாலும் என்னோட மகன். அவனை அப்படியே வெறுத்து ஒதுக்கச் சொல்லுறீங்களா? அவன் இவ்வளவுதூரம் மனசுமாறி அந்த ஏமாத்துக்காரனுங்கக்கிட்ட இருந்து தப்பிச்சி வந்துட்டானேன்னு நான் நிம்மதியா இருக்கேன். இனியாவது அவன் வாழ்க்கை நல்லாயிருக்கும்னு நம்புறேன். ஆதிரா எல்லாத்தையும் பார்த்துப்பா அவனை அப்படியே விட்றமாட்டான்னு நம்புறேன். அதுதான் அவனைப் பார்க்க வந்தேன் அண்ணி. இப்படியெல்லாம் இனியும் அவனை சபிக்காதிங்க, திட்டாதிங்க. இரண்டுபேரோட வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு எல்லோரும் வேண்டிப்போம்”
“உன் மகன் நல்லாயிருப்பான். அனால் என் மகள் நல்லாயிருக்கணுமே. இங்க அதுதானே பிரச்சனை. உன் மகன்ல என் மகள் கழுத்துல தாலிக்கட்டியிருக்கான். அப்புறம் எங்க அவா நல்லாயிருக்கப்போறாள்.எனக்கு இப்போவும் இவங்க இரண்டுபேரும் கல்யாணம் பண்ணிட்டு வந்தது பிடிக்கலை. என் மகள் மட்டும் தலையசைச்சான்னா இப்பவே உன் மகனை நாயடிக்கிற மாதிரி அடிச்சு வெளிய துரத்திடுவேன்”
அதைக்கேட்டதும் ஆதிரா “அம்மாஆஆஆஆஆ”என்று வேதனையான குரலில் அலறினாள்.
அந்த வார்த்தையே அவளுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது. என்னதான் இளந்தீரன் அவளைக்காயப்படுத்தியிருந்தாலும் அவளால் அவனைக் கயப்படுத்த முடிந்ததில்லை. அதை அவளால் செய்யவும் முடியாது எனும்போது. மகேஷ்வரி அவனை நாயை மாதிரி அடிச்சி விரட்டிருவேன் சொன்னதைக் கேட்டு அப்படியே மனது வெடிக்கிற மாதிரி உணர்ந்ததால், கோபத்திலும் வேதனையிலும் கத்திவிட்டாள்.
“அதுதானே உனக்கு நான் பேசுறது வலிக்குதுல்ல. இதுக்காகதான் நான் உங்ங்க இரஇரண்டு பேரையும் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்..இவளுக்காகத்தான்ளுக்காகதான் அவனை இங்கே கூட்டிட்டு வந்தேன். அவனை எனக்கு பிடிக்கும் பிடிக்கல அப்படிங்கிறதை தாண்டி இந்த பைத்தியக்காரிக்கு எப்பவும் அவனைத்தானே பிடிக்குது. அதனால்தான் வர்ற எல்லா நல்லவரனையும் தட்டி கழிச்சு வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தாள். அந்த ஜட்ஜ் மகன் இவளுக்காக காத்துக்கிட்டு இருக்கான். நாங்க பதில் சொன்னாலே போதும் இப்பவே இவனை வேண்டாம்னு வெட்டிட்டுவிட்டுட்டு போனாலும், அவன் இவளைக் கல்யாணம் பண்ணிக்க தயாராத்தான் இருக்கான். ஆனால் இந்த பைத்தியக்காரியால்தான் அமைதியா உட்கார்ந்துட்டு இருக்கேன். நான் இவங்களை கூப்பிடறதுக்கு அந்தக் கல்யாணம் மண்டபத்துக்கு போகும்போதே இவ அவனது கைய பிடிச்சுகிட்டு அவ்வளவு அந்நியோந்நியமா நடந்து வந்தாள். அந்த ஒரே காரணத்துக்காகதான் இப்ப வரைக்கும் பொறுமையா இருக்கேன். ஏன்னா உங்க எல்லாத்தையும் விட அவளை பத்தி எனக்கு தெரியும். பெத்தவ எனக்கு என் பிள்ளையோட மனசு தெரியாதா. உன் மகனுக்காக ஒன்னுமில்ல என் மகளுக்காகதான் அவன் இந்த வீட்டுக்குள்ள வைச்சிருக்கேன் என்று சொன்னவர்” அப்படியே கண்ணை மூடி அந்த சோபாவில் சாய்ந்தார்.
அவரது கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அதை பார்த்த சாங்கவியும் ஆதிராவும் ஓடிப்போய் அவரது இரு பக்கமும் உட்கார்ந்த தோளில் சாய்ந்து கொண்டார்கள்.
இந்த அன்பு தான் ஆதிராவை இத்தனை நாளும் கட்டிப் போட்டிருந்தது. அதே அன்புதான் இப்பொழுதும் இளந்தீரனைத் தேடி ஓட வைத்தது.
இதைப் பார்த்த கவிதாவுக்கு ஒன்றுமே பேச முடியவில்லை
சங்கரியும் அப்படியே அமைதியாகிவிட்டார். மருமகளை பத்திதான் அவருக்கு தெரியுமே!
இந்த குடும்பத்தை இத்தனை நாள் எவ்வளவு பாதுகாப்பாக நடத்திக்கொண்டு வந்திருகிறாள் என்று கூடவேயிருந்தே பார்த்தவர் அதனால் அமைதியாக விட்டார்.
ரவிக்கோ அவன் குடும்பத்துக்காக பேசுறதா இல்லை பொண்டாட்டி குடும்பத்துக்காக பேசறதா என்று புரியாது இருதலைக் கொல்லி எறும்பாக தவித்தான்.
சங்கரி ஆத்தாதான் “சரி என் மகன் என்ன ஆசைப்பட்டானோ அதையே அந்தக் கடவுள் நடத்தி வைச்சிட்டாருன்னு நினைச்சிக்கவேண்டியதுதான். இப்போ இரண்டுபேரையும் கூட்டிட்டு கோயிலுக்குப் போயிட்டு, அப்படியே என் மகன்கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிட்டு வரலாம். இவங்க கல்யாண விசயம் கேட்டா அவன் எழுந்துக்கூட வரலாம். அவன் மனசுக்காவது சந்தோசத்தைக் குடுப்போம்”என்று மகனை நினைத்து கலங்கியவாறே பேரன் பேத்தி வாழ்க்கையை நல்லாயிருக்கணும்னு நினைத்துப் பேசினார்.
“இதுவும் நல்லதுதான் இவங்க வாழ்க்கைக்கா அந்த சாமிக்கிட்டதான் வேண்டிக்கணும். யப்பா இந்த கிறுக்குப்பையலுக்கு நல்லபுத்தியைக்கொடுன்னு வேற என்ன செய்யமுடியும். அதுதான் இந்த பைத்தியக்காரி எல்லா பைத்தியக்காரத்தனத்தையும் செய்துமுடிச்சுட்டு வந்துட்டாளே. இனி கடவுளா பார்த்து ஏதாவது நல்லது செய்து அவன் புத்தியை நேராக்குனாதான் உண்டு. இப்போ போய் ரெஸ்ட் எடுக்கட்டும். அப்புறமா இவங்களைக்கூட்டிட்டு போயிட்டுவரலாம்” என்று மகேஷ்வரி கொஞ்சமாக மலையிறங்கியிருந்தார்.
அதனால் ஆதிரா மெதுவாக எழுந்து தனது ரூமுக்கு வந்தாள். அங்கே இளந்தீரன் கவுந்தடிச்சு குப்புற படுத்திருப்பதை பார்த்தவள், வேகமாக போய் தலையணையை எடுத்து முதுகுல நாலு போடு போட்டாள்.
அதற்கெல்லாம் அசைந்து கொடுத்தால் அவன் இளந்தீரன் இல்லையே!
அவன் அந்த அடியை வாங்கிட்டு அப்படியே படுத்திருக்க பக்கத்துல போய் நின்னவள் “ஒருத்தி கழுத்துல எல்லாரும் முன்னாடியும் வச்சி தாலி கட்டுனோமேன்னு உங்களுக்கு பெறுப்ப இருக்குதா?இல்லையா? என்கிட்ட எதுவும் கேட்காம உங்க பாட்டுக்கு தாலி கட்டிட்டு இங்கேயும் வந்தாச்சு. ஆனால் யாருக்கோ ஏதோ நடந்தது மாதிரி வந்து படுத்திருக்கீங்க. நீங்க உங்க காதலியை பழி வாங்க நான்தான் கிடைச்சனா? அந்த இடத்துல உங்களை எதிர்த்து தடுக்கவும், பேசவும் எனக்கு மனசு வரலை. விட்டுக் கொடுக்கவும் தோணலை. இதைத்தானே எங்க அப்பா எதிர்பார்த்துதான் இருந்தார். அதுவே நடக்கட்டும்னு அப்படியே உட்கார்ந்துட்டேன். இப்போ இப்படி வந்து அமைதியா படுத்திருந்தா என்ன அர்த்தம்? வீட்ல உள்ளவங்களையாவயு சமாதானப்படுத்த ஏதாவது பேசி இருக்கலாம்ல. நானே ஒத்தையில எல்லாம் சமாளிச்சுட்டு வந்திருக்கேன்”என்று தனது ஆதங்கத்தை அவனிடம் கொட்டினாள்.
அதைக் கேட்டவன் எழுந்து உட்கார்ந்தவன் “ ஆமா நீ எதுக்கு சமாளிக்கணும். ஏற்கனவே எனக்குத்தானே உன்னைக்கட்டி வைக்கிறதுக்காக அவ்வளுவு பேச்சு பேசினாங்க. இப்போ என்ன அதேமாதிரி தானே நடந்திருக்கு. அதுக்காக எதுக்கு இவ்ளோ கொஸ்டின் கேட்கணும் நடந்தது நல்லதுன்னு நினைச்சிட்டிருக்க வேண்டியதுதானே”என்று புருவம் ஏத்தி இறக்கிக்கேட்டான்.
“யாரு உங்களுக்கு கட்டி வைக்கிறேன்னா?யாரு சொன்னா? ஒருத்தரும் உங்களுக்கு கட்டிவைக்கிறேன்னு சொல்லல. நீங்க அப்பபியெல்லாம் கற்பனை பண்ணிக்காதீங்க நீங்க பண்றது எல்லாம் பண்ணிட்டு ஜெயில்ல இருந்து வந்தா உங்களுக்கு அப்படியே பொண்ணைத் தூக்கி கையிலக் குடுப்பாங்களோ! அதுவும் ஏற்கனவே ஒருத்தியை காதலிச்சுட்டு அவளை கல்யாணம் பண்ணிக்க ரெடியான உங்களுக்கு பொண்ணு கொடுக்கறதுக்கு யார்தான் வருவா? மகேஸ்வரி ஆடின ஆட்டத்துக்கு பதிலே சொல்ல முடியாம வந்திருக்கேன்”
“அவங்களை என்கிட்ட கேட்கச் சொல்லு. நான் டீட்டைலா அவங்களுக்கு பதிலை பேப்பர்ல எழுதி வேணாம்னாலுப் கொடுக்கிறேன். உன் கழுத்துல தாலி கட்டுனது நான் அப்போ என்கிட்டதானே என்ன கொஸ்டின்னால்ம் கேட்க்கணும். உன்கிட்ட ஏன் கொஸ்டின் கேக்குறாங்க?”
“ஹான் எல்லாம் வேண்டுதல்தான்”
“அப்போ நீயே பதில் சொல்லு. அவங்க கேக்குற கேள்விக்கான பதில் சொல்ல முடியாது போதுமா”
“சரிதான் இதுவேறையா!அப்போ நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க. யார் கிட்டகேட்டுட்டுஎன் கழுத்துல தாலிகட்டினீங்க? உங்களுக்கு துரோகம் பண்ணினவங்களை பழி வாங்கணும்னா உதவி செய்த என்னை காயப்படுத்துவீங்களா?எதுக்கு ஏன் விருப்பம் இல்லாமல் என் கழுத்துல தாலி கட்டுனீங்க? இதுக்கு பதில் சொல்லுங்க. நான் என்ன உணர்ச்சியே இல்லாத ஜடமா. நீங்களா ஒருத்திக்கிட்ட வந்து நீதான் என் பொண்டாட்டின்னு ஆசையா பேசுவீங்க. அப்புறம் உங்களுக்கு புத்திவந்து இல்லை இல்லை புத்திக்கெட்டுப்போய் உங்களுக்கு ஏத்தமாதிரி ஒருத்தியை பத்துவருஷமா லவ் பண்ணுவீங்க. அந்த பத்து வருஷத்துல ஒரு நாளுக்கூட ஒருத்தி மனசுல ஆசையை வளர்த்துட்டு அப்படியே அம்போன்னு விட்டுட்டமே அவளுக்கும் வலிக்குமே, அவா இதையெல்லாம் தாங்கிப்பாளா?நம்ம இல்லைன்னா என்ன ஆவான்னு எதையுமே யோசிக்கலை. ஆனால் நீங்க பத்துவருஷமா பல்லை பல்லைக் காட்டி காதலிச்சவ வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதும்,அவளைப் பழிவாங்க இந்த பாவப்பட்ட ஜென்மத்துக் கழுத்துல தாலி கட்டுவீங்களா? இப்படி ஒருத்தி மனசுக்குள்ள ஆசையை வளர்த்தோமே அவளுக்குன்னு இத்தனை வருஷத்துல ஏதாவது பண்ணிருப்போமா?இல்லை அவளோட மனசை காயப்படுத்தாமல் இருந்தோமான்னு யோசிச்சீங்களா?இப்போ இந்த பைத்தியக்காரிக்கு பதில் சொல்லுங்கத்தான்?”என்று சாட்டையால் அடிச்சமாதிரி கேட்டாள்.
அந்தக் கேள்வியை அவன் ஏற்கனவே எதிர்பார்த்திருக்கிறான் என்பதை அவனது அமைதியே விளங்கச் சொல்லியது.
அவள் கேள்விக் கேட்கும்போதே அவளது கண்ணீரை பார்த்தவன் எந்தவிதமான அசைவுமின்றி இருந்தான். எப்போதுமே அவளது கண்களையும் பார்வையையும் தவிர்ப்பவன் இப்போது அவளது பார்வையை எதிர்கொண்டு அப்படியே உட்கார்ந்திருந்தான்.
அவளது கண்ணீர் இத்தனை வருடத்தின் வலியையும் ஒருசேர அவனிடம் முறையிட்டதோ?அவளது வாயின் வார்த்தைகளைவிடவும் அந்த கண்ணீர் அதிகமாக பேசியதோ?
இளந்தீரன் மெதுவாக அவளது கையை எடுத்து, ஒன்றுமே சொல்லாமல் தனது இடது பக்க நெஞ்சில் வைத்தான்.
ஆதிரா ஏறிட்டு அவனது முகத்தைப் பார்த்தாள். அவனது கண்கள் இப்போ எதுவுமே பேசவில்லை. அவனது உதடுகளும் எந்த வார்த்தைகளையும் உதிர்க்கவில்லை. அவனது இதயத்துடிப்பு மட்டுமே அவளது கைகளினூடே பேசிக்கொண்டிருந்தது.
அதில் தனது உதடுகளை லேசாக விரித்து சிறிதானதொரு அதிர்ச்சியில் இளந்தீரனை பார்த்த ஆதிராவின் கண்ணீர் மெதுவாக நின்றது.
தனது வலது கையால் அவளது கன்னத்தைப் பிடித்து, அப்படியே விரல்களால் வழியும் கண்ணீரை மெதுவாக தொட்டுத் துடைத்தவனை, இன்னும் கொஞ்சம் அதிர்ச்சியோடு புரியாது பார்த்தாள்.
அவளது பார்வையை புரிந்தவன் அவளது முகத்துக்கு நேராக தனது முகத்தை கொண்டு வந்தான்.
ஐயோ இது சரியா வராது இங்க என்னமோ நடக்க போகுது என்று உணர்ந்தவள் அவனது கையை தன்னுடைய கன்னத்திலிருந்து எடுத்து விட்டாள்.
அதைப் பார்த்த இளந்தீரன் மேண்டுமாக அவளது கன்னத்தில் கையை வைத்து இறுக்கமாக அழுத்திப்பிடித்தான்.
அவளோ இதுக்கு மேல என்ன பண்றது என்று தெரியாமல், தனது உதட்டைக் கடித்துக்கொண்டு அவனைப் பாவமாகப் பார்த்தாள்.
இளந்தீரன் மெதுவாக தனது விரல்கொண்டீ அவளது பற்கள் கடித்து வைத்திருக்கும் அந்த உதட்டினை மெல்ல நகர்த்தி விடுவித்தான்.
அவளுக்குள் இருந்த கொஞ்சநஞ்ச இறுக்கமும் காற்றில் பறக்க, அவளது உதடுகள் இப்போது தந்தியடிக்க ஆரம்பித்தது.
“அது வந்து வந்து அம்மாஆஆ அம்மாஆஆஆ”
“ம்ம்ம்”என்று அவள் சொல்ல வந்ததைக் காதுக்கொடுத்துக் கேட்டவன், அவளது கண்களுக்குள் இறங்கி அவளது உயிருக்குள் ஊடுருவிப்பார்த்தான்.
அவளுக்கோ இப்போ வந்த வார்த்தையும் வராமல் போக“கோயிலுக்கு”என்று சொல்லிவிட்டு மீண்டும் அவனது கண்ணை பார்த்தாள்.
அவ்வளவுதான் மொத்தமா வார்த்தை அப்படியே நின்றுவிட, இதுக்குமேல முடியாது சாமி என்று கண்களை மூடி மூச்சை இழுத்துப்பிடித்துவிட்டாள்.
அடுத்த நொடி அவளது உதடுகள் இரண்டும் இளந்தீரனின் பற்களுக்குள் மென்மையாக கடிபட்டு விலங்கிடப்பட்டது.
அவனது உதடு தன் உதட்டில் பட்டதும் பட்டென்று பட்டாம்பூச்சியாய் சிறகை விரித்த இமைகள் இரண்டும், படபடவென்று அடித்து, நடப்பதை நம்பமுடியாமல் அவன் கண்களில் தன்னைது தொலைக்கப்பார்த்தாள்.
அது கனவல்ல நிஜம்தான் அவளது கதாநாயகன் அவளை மெதுவாக முத்தமிட்டு ஆண்டுக்கொண்டிருந்தான்.
அவளுக்கு என்ன செய்யவேண்டுமென்று தெரியாது, அந்த சூழ்நிலையின் பாரத்தையும் தாங்கமைடியாது, சட்டென்று அவனது தோளில் கையை வைத்து தள்ளிவிட்டாள்.
ஆனால் அதற்கெல்லாம் அசருபவனா இந்த இளந்தீரன். அவள் தள்ளிவிட்டதெல்லாம் ஒன்றுமில்லையென்பதுபோல அவனோ அவளது முகத்தை இன்னும் அழுந்தப்பிடித்துக்கொண்டான்.
அவனது உதடுகள் அவளது உதட்டை கவ்விப்பிடித்துக்கொள்ள, அவனது மூச்சுக்காற்று அவளது முகத்தில் அவ்வளவு அனலாக பட்டுத்தெறித்து அவளை மொத்தமாக உருக்கியிருந்தது.
அவள் திணறத்திணற முத்தமிட்டுக்கொண்டிருக்க, அவர்களை சாப்பிடக்கூப்பிட வந்த சங்கவியோ சட்டென்று உள்ளே வர அப்படியே அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள்!