அநாயகா-47
அநாயகா-47
ஜெயச்சந்திரனையும் ஆதிராவையும் ஒரு சேரில் இருக்க வைத்து கட்டி போட்டு இருந்தாள் மதுமதி!
ஆதிராவுக்கு ஏற்கனவே மதுமதி சரியில்லை என்பது தெரியும். ஆனால் இந்த அளவுக்கு இராட்சஷியாக இருப்பாள் என்று தெரியாது. அதனால் அவளைப் பார்த்து கோபத்தில் முறைத்தவள் “என் புருஷன் வேணும்னா எடுத்துட்டுப் போயேன். நான்தான் அவங்களே வேண்டாம்னு தூக்கியெறிஞ்சிட்டு வந்துட்டனே. அந்தாளை நீ கல்யாணம் பண்ணிக்கோ இல்லை, கல்யாணம் பண்ணிக்காமலயே கரப்பாமாகிருக்கியே அந்த குழைந்தையை பெத்துட்டு அவங்கக்கூடவே சுத்து. உங்க நாத்தம் பிடிச்ச உறவு தெரிஞ்சுதானே நானே விலகிட்டேன்னே. அதுக்கப்புறமும் என்னை கடத்திட்டு வந்திருக்க. உனக்கு அறிவில்லையா?மரெயாதையா எங்க கையை அவிழ்த்துவிடு. இல்லைன்னா அதுக்கான விளைவுகளை நீ சந்திக்க வேண்டியதுவரும்டி டேஷு” என்று ஆதிரா கோபத்தில் சத்தம் போட்டாள்.
அதைக் கேட்டதும் கூலான மதுமதியோ சத்தமாக சிரித்தாள்.
“ஹாஹாஆஆஆஆஆ ஆதிரா நீ அறிவாளிதான்னு எனக்குத் தெரியும். ஆனால் நேர்மையான உன் அறிவை வைச்சு ஊறுகாயும் போடமுடியாது, உன் புருஷனை வைத்தும் நான் ஊறுகாய் போடமுடியாது. உன் புருஷனை வைச்சு நான் என்ன பண்ணப்போறேன். எனக்கெல்லாம் அவன் தேவையேயில்லை. போடி இவளே வந்துட்டா அப்படியே அவ புருஷனை எனக்குத் தாரைவார்த்து தர்றதுக்கு. அப்போ என் புருஷனை நான் என்ன பண்ணுறது?”என்று கேட்டுவிட்டு இன்னும் சத்தமாகச் சிரித்தாள். அவளால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது தவித்தாள்.
அவளது பேச்சையும் அவளது பாடி லேங்குவேஜையும் பார்த்த ஆதிராவுக்கு ஒரு மாதிரியான குழப்பமான மனநிலைதான் வந்தது. அதனால் “அப்போ எதுக்குடி என் புருஷன் பின்னாடியே சுத்திட்டிருந்த. உனக்கு உன் புருஷன் போதும்னா ஏன்டி அடுத்தவ புருஷனை தேடிவந்த?ஏன் ஒருத்தன் உனக்குப் பத்ததா?”என்று கேட்டவளுக்கு பக்கத்தில் அப்பா இருப்பது ஞாபகம் வந்ததும் வார்த்தைகளை கவனமாக பேசணும்னு நினைத்தாள்.
அதைக் கண்டுக்கொண்ட மதுமதியோ “இங்கப்பாரு ஒருத்தனை வீழ்த்துறதுக்கு சரியான தேர்வு எது தெரியுமா அன்பும் காதலும்தான். அதைத்தான் நான் கையிலெடுத்தேன். உன் முட்டாப்புருஷன்தான் நான் கொஞ்சம் கண்ணக்காட்டினதும் விழுந்திருவானே. நீ என்னதான் காதலாகி கசிந்துருகி அவர்கூட வாழ்ந்தாலும் அவனுக்கு என்மேலதான் காதல். அவனை கொல்லணும். அதுக்கு முதல்ல உங்களைக் கொல்லணும். உங்களைக் கொன்னுட்டா அவன் எனக்கு முழுஅடிமை நான் சொன்னாலே போதும் அடங்கி என்பின்னாடியே வாலை ஆட்டிட்டு வரும் நாயாகிடுவான்”என்று நக்கலாகச் சொன்னவள் ஜ
எயச்சந்திரனைம் பார்த்தாள்.
அவரோ இவள் பேசுறதை கண்டுக்கவேயில்லை. அமைதியாக அங்க நடப்பதைக் கூர்மையாகக் கவனித்துக்கொண்டிருந்தார்.
“ஏய் ஏய் உனக்கு அவ்வளவுதான் மரியாதை. ரொம்ப பேசுறடி. நீ இப்படி பேசுறதுக்கும் பண்றதுக்கும் நல்ல அனுபவிப்படி. உன்னையெல்லாம் உங்கப்பன் கண்டிக்காமல் விட்டிருகாகான் பாரு. உன்னைப்போய் எப்படிடி எங்க அத்தான் நம்பினாரு?அவருக்கு எப்படியும் இது தெரியவரும். அப்போ இருக்குடி உனக்கு?”
“என்ன ஆதிரா நீ சாபமெல்லாம் விடுற.இவ்வளவு பெரிய அரசியல்வாதி ஜெயச்சந்திரனோட பொண்ணாக இருந்துட்டு உன்னாலயே என்னைக் கணிக்க முடியல பாத்தியா. அங்கதான் இந்த மதுமதியோட மாஸ்டர் ப்ளான் இருக்கு. உன்னாலயே என்னைக் கண்டுப்பிடிக்க முடியலை. இதுல உங்க நொத்தான் வந்து கண்டுபிடிப்பாரு. அரசியல்வாதின்னா உங்க அப்பாமாதிரி கூர்மையான அறிவோடவும் இருக்கணும், என்னை மாதிரி கொஞ்சம் கிரிமினலாகவும் இருக்கணும். உன் புருஷனெல்லாம் இந்த இரண்டு கேட்டகரியிலயும் வரமாட்டான்.
நீ என்ன நினைச்சுகிட்டிருக்க நான் உன் புருஷனைக் என் கைக்குள்ளபோட்டுக்கிட்டு அவன்கூட வாழ்றதுக்காகவா இவ்வளவு பண்றேன்னா? அப்படியான முட்டாளா நீ?”என்று அவள் சொன்னதை கேட்கும்பொழுது அப்படி ஒரு டெரராக இருந்தாள்.
உடனே ஆதிரா திரும்பி அவளது அப்பாவை பார்த்தாள் “என்னப்பா இவா இப்படியெல்லாம் பேசுறா?இவா சாதாரண மதுமதி மாதிரி பேசிலேயே ஏதோ கொள்ளைக்காரி மாதிரி பேசுறாளே. இவளோட பேச்சும், பார்வையும்,நடந்து கொள்ளறதும் எதுவுமே சரியில்லையேப்பா. இவா நடந்துக்கிறதே வித்தியாசமா இருக்குப்பா?இவளை நம்பியா அத்தான் இவ்வளவுதூரம் நடந்துக்கிறாங்க?” எனக் கேட்டாள்.
ஆதிரா நீ கொஞ்சம் அமைதியா இரு சில இடங்களில் உண்மை நேர்மை எல்லாம் என்னைக்குமே சரிப்படாது புத்திய பயன்படுத்தனும்னு சும்மாவா சொல்லி இருக்காங்க அதனால நீ அமைதியா இரு இது எதனால் நான் பாத்துக்கிறேன் என்றவர் இப்பொழுது மதுமதி திரும்பி பார்த்தார்.
அவரது பார்வைக்கு எல்லாம் அவள் அசறுபவள் அல்ல! அவரையே தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடும் சூனியக்காரி!
“என்ன மதுமதி நாடகம் எல்லாம் உச்ச கட்டத்துக்கு வந்துட்டு போலிருக்கே! என்னையும் என் பொண்ணையும் கடத்திருக்க. இதுவரைக்கும் நடத்துன உன் எல்லாவிதமான நாடகத்தையும் முடிவுக்கு கொண்டு வர முடிவுபண்ணிட்டேன்னு இதுல இருந்தே தெரியுதே!அப்புறம் வேற என்ன சொல்லு உங்க அப்பன் சிவானந்தன் செத்தாலும் நீ கவலைப்பட மாட்டன்னு எங்களுக்குத் தெரியும். அதனால் உங்க அப்பனை வைச்செல்லாம் நாங்க உன்னை மிரட்ட மாட்டோம். ஆனால் முக்கியமான ஒருத்தன் இருக்கான் என் மருமகனுக்கு அது நல்லாவே தெரியுமே. உனக்கு அது யாருன்னு தெரியுமா?”என்று கேட்டவர் இப்போது எந்தவிதமான டென்சனும் இல்லாமல் அமைதியான சிரிப்பை உதிர்த்தார்.
“ஹான் அப்போ என் நாடகத்தையெல்லாம் பார்த்துட்டுத்தான் உங்க மருமகனை எச்சரிக்காமல் இருந்தீங்களா என்ன எம்.எல்.ஏ சார்?அப்படியெல்லாம் நீங்க சும்மா இருக்கிற ஆளில்லையே!அப்போ நீங்க பெருசா ப்ளான் வைச்சிட்டுத்தான் என்கிட்ட வந்து மாட்டிக்கிட்டீங்களா என்ன?என்ன எங்க அப்பாவை வைச்சு மிரட்டமுடியாதுன்னு, அடுத்து எச்கம்மாவை வைச்சு பயமுறுத்தலாம்னு பார்க்கிறீங்களா என்ன?யாரை வைச்சுமிரட்டினாலும் என்னை பயமுறுத்த முடியாதுன்னு இவ்வளவு பெரிய அரசியல்வாதிக்கு தெரியாமல் போச்சே!பாவம் நீங்க”என்றவள் பாவமாக உச்சுக்கொட்டினாள்.
“உங்கப்பனுக்கே பதறாதவள் உங்கம்மாவுக்கூ பதறுவ?உன்னோட உயிருக்கு உயிரான காதலன்,உன் ஆசைப் புருஷன் ராகுவரன் இப்போ எங்க இருக்கான் தெரியுமா?” என்றவர் சத்தமாக அந்த இடமே அதிரும்படி சிரித்தார்.
அதைக்கேட்டதும் அவளையறியாமலயே நடுங்கியவள் “என்ன சொல்லுற நீ?ரகுவரனை என்ன பண்ணப்போறீங்க? யாரு அவரைத் தூக்கினது?”என்று நடுங்கும் குரலில் அவரிடம் கேட்டாள்.
“அவனா அவன் என் மருமகனோட காலுக்கடியில் இருக்கான்” சொல்லிவிட்டு நக்கலாகச் சிரித்தார்.
அதைப் பார்த்த மதுமதி தனது உதட்டை வளைத்தவள் “யாரு உன் மருமகன் அந்த முட்டாள் இளந்தீரன் காலுக்கடியில் என் புருஷன் ரகுவரன் விழுந்து கிடப்பான்னு நீ நினைக்கிறாயா? அட போங்கடா நான் ஒத்த சிரிப்பு சிரிச்சாலே இளந்தீரன் என் பக்கமா விழுந்திடுவான்,அதுவும் நான் கண்ணசைச்சா போதும் மொச்தமா என் காலுக்குக் கீழ விழுந்து கிடப்பான் அவனுக்கெல்லாம் இவ்வளவு பெரிய கெத்தெல்லாம் கிடையாது. என் மாமா ரகுவரன்தான்டா கெத்து. உன் மருமகனை இப்பவும் என் கைக்குள் வச்சிருக்க என்னாலயும் முடியும், என் புருஷன்னாலயும் முடியும் முடியும் நீ என்ன என்ன அரசியல்வாதி. உன் மருமகனை அரசியலுக்குள்ள கொண்டுவந்தியே உன்னை மாதிரி அவனால கெத்தா நிக்க முடியலை பார்த்தியா. ஆனா நான் பாரு பொம்பளையா இருந்தாலும் மூளையில் கில்லாடிடா! நான்த
எப்படி உன் முன்னாடி வந்து நிற்கிறோம் பாரு. உன்னை ஒழிச்சிட்டா அடுத்த எலக்சன்ல நான்தாண்டா எம்.எல்.ஏவ் ஜெயிப்பேன். அதுக்கு அப்புறம் என்ன பண்ணனும் முடிவெடுக்கிறதே நானாகத்தான் இருக்கும். உன் முட்டா பீசு மருமகனை வைச்சு காமெடி பண்ணாத”
“உன் நினைப்புத்தான் பொழைப்பைக் கெடுக்கும் பாரேன்.வெயிட் அண்ட் வாட்ச்”
“அதையும் பார்க்கலாம்”என்று சொன்னவள் அங்கிருந்ந சேரில் ஸ்டைலாக கெத்தாக உட்கார்ந்தாள்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்த ஆதிராவுக்கு ஒண்ணுமே புரியவில்லை.
எங்க என்ன நடக்குது இங்க எதை இரண்டுபேர்ள் பத்தி பேசிட்டு இருக்காங்க. அரசியல் பத்திதான் பேசுறாங்க ஆனா நமக்குதான் ஒன்னுமே தெரியமாட்டேங்குது. ஏதோ ஒரு விஷயம் இவங்களுக்குள்ள நடந்திட்டிருக்கோ?இதையெல்லாம் நம்ம கவனிக்காமல் இருந்திருக்கமோ?” என்று புரியாமல் ஜெயச்சந்திரனை பார்த்தாள்.
“அப்பா என்னப்பா நடக்குது இங்க.இவா எதுக்கு நம்மளைக் கடத்தி வைச்சிருக்கா. நம்மளை என்னவேணும்னாலும் செய்திடுவா?இவக்கிட்ட போய் இப்போ இப்படி பேசிட்டிருக்கீங்க?அத்தானுக்கு இவா போடுற நாடகமெல்லாம் தெரியுமா?என்ன நாடகம் போட்டாள்?”என் தலையைப் பிச்சிக்காத குறையாகக் கேட்டாள்.
“ஆதிரா நீ டென்சனாகாத இவளால நம்மளை ஒன்னுமே செய்யமுடியாது. இவா நம்ம மேல கையை வைச்சான்னா அங்க ரகுவரனோட கழுத்தை அறுத்திருவான் நம்ம இளந்தீரன். அமைதியா இரு”என்று மகளை சமாதானப்படுத்திவிட்டு மதுமதியைப் பார்த்தார்.
“ஹா ஹா என்ன மதுமதி நீ மட்டும்தான் அறிவாளின்னும், குள்ளநரித்தனம் எல்லாம் உன்னால்மட்டும் தான் பண்ண முடியும்னு நினைச்சியா என்ன? உன்னை தூக்கிப் போட்டு கொல்லுறதுக்கு ஒரு நிமிஷம் ஆகாது என் மருமகனுக்கு. ஆனால் கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேலாக நீ செய்கிறதையெல்லாம் பார்த்து பொறுமையா பல்லை கடிச்சிட்டுத்தான் இருந்தான். உன்னை மாதிரி ஒரு நச்சுப்பாம்பைக் தன் கூடவே வைச்சு கவனிச்சுட்டிருந்த எங்க இளந்தீரன் எவ்வளவு கெத்து தெரியுமா? நீ தற்கொலை நாடகம் போட்டுட்டு,ஆளை வைச்சு என் மருமகனுக்கு போன் பண்ணி கூப்பிட்டியே மறந்திட்டியா?அதெல்லாம் தெரிஞ்சும் நாங்க இரண்டுபேரும் சேர்ந்துதான் உன் நாடகத்தை கவனிச்சுட்டு இருந்தோம். அதுக்கு முன்னாடி போட்ட நாடகமும் எங்களுக்கு வெட்ட வெளிச்சமா தெரியும். எல்லோரும் நினைக்கிறமாதிரி ரகுவரன் ஒன்னும் எங்களுக்கு துரோகியில்லை. அவனெல்லாம் ஒரு டம்மி பீஸூ. உன் காலுக்கு கீழே கிடக்கும் நாய்க்குட்டி. உங்க அப்பன் உனக்கு பாதுகாப்பா நிக்கும் ஒரு ராஜபாளையத்தில் நாய். அவ்வளவுதான் அதை தாண்டி அவங்களால ஒன்னும் கிழிக்க முடியாது. நீ இப்ப எங்களைத் தூக்கினதுகூட என் மருமக காதுக்கு போயிருக்கும் கெத்தா வந்து நிற்பான் பாரு”என்று சொன்னவரின் தலை முடியை வேகமாக பிடித்த மதுமதி ஆத்திரத்தில் அவரை அடிக்கப்போனாள்.
அதைப் பார்த்த ஆதிரா “ஏய்ய் பைத்தியம், சைக்கோ என்னடி பண்ற? எங்க அப்பாவையாடி அடிக்கப்போற நாயே. அவரு யாரு தெரியுமாடி!எங்களுக்கெல்லாம் தலைவருடி. நாயே யாரு மேல யாரு கைய வைக்கிறது” என்று கோபத்தில் துள்ளியவள் சேரோடு எழுந்து நின்றாள்.
அதைப் பார்த்த மதுமதியோ அவள் பக்கத்தில் வந்து நின்று “ரொம்ப துள்ளாதடி. அடங்கி உட்காரு. நீ கர்ப்பமாகத்தானே இருக்கு. இருக்கக் இடுப்புல இப்பவே உன் கழுத்தை அறுத்துப்போட்டிருவேன். இது எத்தனை வருஷமா மனசுக்குள்ள இருக்கிற கோபம் தெரியுமாடி? பத்து வயசுல ஆரம்பிச்ச கோபம். உங்க அப்பன் தேர்தலில் ஒவ்வொரு முறையும் ஜெயிச்சு எங்க அப்பாவ மூக்குடைக்க வைக்கும்போதெல்லாம் வலிக்கும்டி. அவரை தோத்துப் போக வைச்சு தலைகுனிய வைச்சீங்கள்ல அப்போ ஏறின கோபம்டி. இப்படித்தான்டி நயவஞ்சகமா வெளிப்படும்.அப்போ ஆரம்பிச்சதுடி உங்கமேல எனக்கு பகை” என்றவளின் கண்களில் ஓநாய் இரையைப் பிடிக்க பதுங்கித் தாக்கும் வெறி இருந்தது.
“என்னதுபத்து வயசுலிருந்தே எங்க மேல கோபமா? இப்படியெல்லாமா ஒருத்தி இருப்பாள்?இவ்வளவு கொலைவோறியோடும் பதவி வெறியோடும் நமக்குத் தெரியாமலயே இவாஇருந்திருக்காளே”என்று அதிர்ச்சியில் புரியாது அவளை பார்த்தாள்.
மதுமதி அப்பொழுதுதான் அவளுக்கு ஜெயச்சந்திரனின் குடும்பத்தில் மேல் இருக்கும் அந்த கோபத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தாள்!