அநாயகா-45

அநாயகா-45

அநாயகா-45

ஆதிரா என்னதான் இளந்தீரனை வேண்டாமென்று விலக்கி வைத்தாலும், அவளது உள்ளமோ அவனுக்காக ஏங்கித் துடிக்கதான் செய்தது. 

அப்படித் துடிக்கும் இதயத்தின் எண்ணங்களை வேறு வழியின்றி மொத்தமாக எல்லாத்தையும் ஒதுக்கி வைககபபோர்டினாள். அதனால் அடுத்து என்ன என்று தனது வாழ்க்கைக்காக யோசிக்கத் தொடங்கினாள்.

ஜெயச்சந்திரன் கோமாவில் இருந்து எழுந்த பிறகு இப்பொழுதுதான் முதன்முறையாக தனது கட்சி சார்ந்த வேலைகளுக்காக ஆபீசுக்கு போக வேண்டும் என்று கிளம்பினார். அவர்கூடவே ஆதிராவும் இனி கட்சி சார்ந்த விஷயங்களை தீவிரமாக ஈடுபடனும் அடுத்து நம்மளும் இந்தக் கட்சியில் இருந்துக்கொண்டே தேர்தல்ல நின்னு ஜெயிக்கணும், எம்.எல்.ஏவாகிடணும். எந்த பதவிக்காக தன்னை பயன்படுத்திக்கொண்டு முதுகில் குத்தினாங்களோ அதே பதவியில் நான் உற்காரணும். இளந்தீரன் அத்தான் முன்னாடியும் அந்த மதுமதியின் முன்னாடியும் பாருங்கடா நான் எப்படி உயர்த்து நிக்கிறேன்னு காண்பிக்கணும் என்ற ஒரே நோக்கத்தோடும் வெறியோடும் அவங்கப்பாவோடு கிளம்பினாள்.

ஆதிரா புடவைக்கட்டிக்கொண்டு கண்ணாடியில் பார்த்தாள். அந்தப்புடவை அவளுக்கு ஒரு கம்பீரத்தைக் கொடுத்தது. அன்று இளந்தீரன் சொன்னது அவளுக்கு ஞாபகம் வந்தது. அத்தான் உண்மையைத்தானே சொல்லிருக்காங்க. அவங்களா இந்த எலக்ஷன்ல நிக்கிறேன்னும் சொல்லலையே. நம்மதானே அவங்களுக்கு விட்டுக்கொடுத்தோம். அப்புறம் எப்படி அவங்க இப்படி மாறிட்டாங்க?அப்போ நம்மளை விடவும் மதுமதியை அதிகமாக விரும்புறாங்களா?ச்ச்சீ இதென்ன நினைப்பு முன்னாடியாவது அவா அவங்க காதலி, இப்போ ரகுவரன் பொண்டாட்டி அவக்கூட சுத்திட்டிருக்காங்க அவங்க யாருமேல இனி காதல் வைச்சா நம்மக்கென்ன் என்று அறிவு புத்தியை இடிக்கவும் அவனைப் பத்தின நினைப்ப்பைத் தள்ளிவைத்துவிட்டு கீழே இறங்கிவந்தாள்.

அவள் அவ்வளவு கெம்பீரமாக கீழே இறங்கி வருவதை பார்த்ததும் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஆச்சரியமாக இருந்தது. 

எவ்வளவு அழகா வர்றா பாரு. இவளே எம்.எல்.ஏ எலக்ஷன்ல நின்னுருக்கலாம். இப்போ ஜெயிச்சு கெத்தா நடந்து வந்திருப்பாள். எல்லாம் போச்சு.

இவளால்தான் இவளுடைய எம்.எல்.ஏ சீட்டை அந்தப் பரதேசிக்கு கொடுத்துட்டோமே. இவா எம்.எல்.ஏவாகி இப்படி நடந்து வந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்,அவள் கம்பீரமா நடந்து வரும் பொழுது அவ்வளவு அழகா இருக்கு. ஜெயச்சந்திரன் மகள்னா சும்மாவா?” என்று ஆளாளுக்கு பார்த்துக் கொண்டிருந்தனர்.

மகேஷ்வரி அப்படியே ஓடிப்போய் அவளது கையை பிடித்துக் கொண்டார். 

“வாடி என் ராசாத்தி எவ்ளோ அழகா இருக்க. இப்போதான் ரொம்ப கம்பீரமா தெரியுற. உங்க அப்பாக்கூடவே போ. ஜெயச்சந்திரனுக்கு இரண்டு பொண்ணுங்கதான். அவருக்கு அடுத்து அவங்கக் குடும்பத்துல இருந்து அரசியலுக்கு யாரும் வர முடியாதுன்னு சொன்னவங்க முன்னாடி நீ நின்னு காண்பி. உன்னை மாதிரி ஒருத்தியை தூசிமாதிரி தட்டி வீசிட்டுப்போன அந்த இளந்தீரனுக்கு முன்னாடி நீ நல்லா இருக்கணும்டி” என்று அவளது கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.

அவளது கல்யாண வாழ்க்கை தொடங்கிய மூணே மாசத்தில இப்படி முடிஞ்சு போயிட்டதே என்று எல்லாருக்கும் மன ஆதங்கம் உண்டுதான். ஆனாலும் அதை அவளுக்கு முன்பாக காட்டிக் கொள்ளாமல் எல்லாரும் தங்களது வேதனைகளை மனதிற்குள்ளே அடக்கி கொண்டார்கள்.

அந்த மாவட்டத்தின் பெரிய கட்சியின் தலைவரான ஜெயச்சந்திரன் மீண்டும் உடல்நிலை தேறி, பணிக்கு வந்திருப்பதால் அந்தக் கட்சி அலுவலகமே கலகலவென்று இருந்தது. 

அவருக்கு பீ.ஏ.வாக ரவீந்திரன் மறுபடியும் அவரோடு கூடவந்திருந்தான்.

அவர்களது குடும்ப பிரச்சனையை இப்போதுவரைக்கும் கட்சியில் இருக்கிறவங்களுக்குக்கூட தெரியாமல் ஜெயச்சந்திரன் பார்த்துக் கொண்டார். 

ஆனால் அன்று நடந்த கூட்டத்திற்கு இளந்தீரனை கூப்பிடவில்லை. அங்கயே கூட்டத்தின் முடிவிலயே கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு ஆதிராவை தேர்ந்தெடுத்து அவளுக்கு அந்த பதவியும் கொடுத்தார்கள். 

எனக்கு அடுத்து இந்த கட்சியில் இந்த மாவட்டத்தில் எந்த முடிவெடுக்கிறதா இருந்தாலும் அது ஆதிரா மூலமாக தன் இனி எடுக்கப்படும் என்பதை சொல்லாமல் செயலில் காட்டி இருந்தார் ஜெயச்சந்திரன். 

“இப்படி கட்சியில் ஒரு கூட்டம் நடந்தது, ஆதிராவை துணைத் தலைவராக தேர்ந்தெடுத்ததையும் கேள்விப்பட்ட இளந்தீரனுக்குதான் மனசு கஷ்டமாக இருந்தது. எதிலுமே நம்மளை கலந்துக்க கூப்பிடலையே? இந்த பிரச்சனை எங்க வரைக்கும்போகும்னு தெரியலையே!” என்று யோசனையோடு இருந்தான். 

அவனது பக்கத்தில் வந்து உட்கார்ந்த மதுமதியோ “எதுக்கு இளாத்தான் இவ்வளவு தூரம் யோசிச்சிட்டு இருக்கீங்க .இந்த கட்சி இல்லைன்னா என்ன அதுதான் நம்ம கட்சியிருக்கே. ஏற்கனவே நீங்க நம்ம கட்சியில பெரியாளா இருந்திருக்கீங்க. நான் மறுபடியும் அப்பாக்கிட்ட சொல்லி உங்களுக்கு ஒரு நிரந்தர பதவியை போட்டுத்தரச் சொல்றேன். இப்போ நீங்க எம்.எல்.ஏ வேற நம்ம கட்சிக்கு தாவிட்டீங்கன்னா, நம்ம கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ கிடைச்சிடுவாச்க,உங்களுக்கு கட்சியில நிரந்தரமான ஒரு பதவியும் கிடைச்சிடும்

 ஒரே கல்லுல இரண்டு மாங்கா மாதிரியாகிடும்”என்று சொல்லிவிட்டு சந்தோசமாக சிரித்து சிரித்து பேசினாள்.

அதைக் கேட்டவன் சத்தமாக சிரித்தான்.

“எப்படி உங்க கட்சில என்ன சேர்க்க முடியும் மதுமதி. அதுதான் அடிப்படைஉறுப்பினர்கூட இல்லைன்னு மொத்தமா உங்கக் கட்சியில் இருந்து தூக்கி வெளிய போட்டுட்டீங்களே. அப்புறம் எப்படி நான் அங்க வரமுடியும்? என்னை எப்படி உங்க கட்சியில் சேர்த்துப்பேங்க. ஏற்கனவே பத்து பன்னிரண்டு வருஷமா வேலை பார்த்த பிறகும் எனக்கான அடிப்படை உறுப்பினர் பதவியைகூட எடுத்துட்டு ஜெயில்ல ஒரு மாசம் வைச்சு செய்தீங்களே அப்படி இப்பவும் செய்யிறதுக்காக உங்கக் கட்சிகு வந்து சேரச்சொல்லுற?என்னம்மா உங்க கட்சி நடத்துதல்?” என்று கேட்டுவிட்டு நக்கலாக சிரித்தான்.

அதைக் கேட்டதும் மதுமதி கொஞ்சம் யோசனையோடு அவனைப் பார்த்தாள்.

“என் விசயத்தைப் பத்தியெல்லாம் நீ ரொம்ப யோசிக்காத. அதை நான் பார்த்துப்பேன். இங்க பாரு நீ ஒரு பிரச்சனையில் இருக்க உன் புருஷனோட பேசறதுக்கும், அவன்கூட போய் சேர்றதுக்கும் வழியைப் பாரு.ரகுவரன் உன்னை ஏத்துக்க மாட்டான்னு உன் கூட சண்டை போடுறான். உங்க இரண்டு பேருக்கும் சமாதான பேசிட்டு இருக்கேன். நீ விவாகரத்து கொடுக்கணும்னு நிக்கிற. இதுக்குமேல உன் விசயத்துல நான் என்ன பண்ணனும்னு நான்தான் முடிவு பண்ணனும் அவ்வளவுதான். அப்படியே என்னை இழுத்துக் கொண்டுபோய் மறுபடியும் உங்க காட்சியில் சேர்க்கலாம்னுலாம் பார்க்காத. அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை. அப்புறம் இந்த இளாத்தான்னு கூப்பிடறது முதல்ல நிறுத்து அது எனக்கு பிடிக்கல. கடைசியா ஒரு விஷயம் என் கட்சி சார்ந்ததும் என் பதவி சர்ந்தும் எந்த விஷயத்தையும் நீ தலையிட வேண்டிய அவசியம் இல்லை”என முகத்தை கடுமையாக வைத்து பேசிவிடு அங்கிருந்து விலகி எழுந்துப் போய்விட்டான்.

மதுமதி அவன் எழுந்து போனதும் ரொம்ப நேரம் அங்கே உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள்.

அதன் பிறகு தனது போனை எடுத்து யாருக்கோ போன் பண்ணி ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தாள். அதையெல்லாம் கவனித்தும் கவனிக்காதது போலவே இளந்தீரன் இருந்துவிட்டான்.

இளந்தீரன் இப்பொழுது கட்சி ஆபிஸிற்கு வந்தாலும் ஆதிரா அவனை பார்க்க விரும்புவதில்லை. அவன் வந்தால் உடனே அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்திடுவாள். 

ஆதிரா நிம்மதியாக வேலை பார்க்கவேண்டும் என்பதால் அவள் இல்லாத நேரம்தான் அவன் வந்து ஜெயசந்திரனைப் பார்த்துவிட்டு வருவான்.

ஆனால் அவளுக்கு தான் நார்மலாக இல்லை என்பது அவளது உடல்மூலம் உணரத் தொடங்கினாள்.

அவளுக்கு இப்பொழுதும் எதுவும் சாப்பிடத் தோணலை.அடிக்கடி படுத்தே இருந்தாள்.யார் கூடவும் பேசவும் பிடிக்காது அவளது ரூமுக்குள்ளயே அடிக்கடி முடங்கிக் கிடந்தாள்.

அடிக்கடி வாந்தி வருவதுப் போலவும் உணர்ந்தாள். அதனால் அவள் நேராக போய் மகேஷ்வரியிடம் சொன்னாள்.

“அம்மா சாப்பிடவே பிடிக்க மாட்டேங்குது. பசி இல்லை. ஆனால் வாமிட்டிங்கா இருக்கும்மா. 

ஏதோ உடம்பில நடக்குது என்னாச்சுன்னு தெரியல எனக்கு ஏதாவது கசாயம் வைச்சுத் தர்றீங்களா?’ என்று சொல்லிக் கொண்டு இருந்தவளை மகேஸ்வரி விநோதமாக பார்த்தார்.

“என்னாச்சுமா?அப்படி பாக்குறீங்க?”

“நீ இளந்தீரன்கூட வாழ ஆரம்பிச்சு எத்தனை நாளாச்சுன்னு எண்ணிப்பார்த்தியா? அதுக்குப்புறம் ஒருமாசம் நீ இங்கதான் இருக்க. அப்போ கண்டிப்பா ஒரு இரண்டுமாசமாவாது இருக்கும்னு நினைக்கிறேன். இதைக்கூட கவனிக்காமல இருந்த ஆதும்மா?”என்று கேட்டதும்தான் அவளுமே யோசித்தாள்.

அவ்வளவுதான் “அம்மாஆஆஆ”என்று சந்தோசமும் கலக்கமுமாக சேர்ந்து அவளை என்னமோ செய்ய அப்டடியே அவரைக் கட்டிக்கொண்டாள்.

உடனே சங்கவி ஹாஸ்பிட்டல் போகும்போது அவளையும் சேர்த்து சாயங்காலமே கூட்டிட்டுப் போயிட்டாங்க.

அங்கே அவளுக்கு செக்கப் முடிந்ததும் அவள் கர்ப்பாமகா இருப்பதை டாக்டர்கள் உறுதிபடுத்தினார்கள்.

அந்த ரிப்போர்ட்டைப் பார்த்ததும் ஆதிரா அழுதுவிட்டாள். அவளை சங்கவியும் மகேஷ்வரியும் பக்கத்தில் உட்கார்ந்து முதுகைத் தடவித் தேற்றிக்கொண்டிருந்தார்கள்.

மொத்தகுடும்பமே கூடி சந்தோசப்படவேண்டிய விசயத்தை அவள் அபுதுக்கொண்டே பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்பதே வேதனையான விசயமல்லவா!

அந்த சந்தோசத்தைப் பறிக்கவென அவள் முன்பாக மதுமதி வந்து நின்றாள்.

என்ன ஆதிரா கர்ப்பமா இருக்கப்போல?நானும்தான் கர்ப்பமாக இருக்கேன். உன் அத்தான் இளந்தீரனாலதான் கர்ப்பமா இருக்கேன். ஆனால் என்னோட வயித்துல வளர்ற குழந்தைதான் அப்பான்னு கூப்பிடும்.உன்னோட குழந்தையில்லை. அதுதான் விவாகரத்துக்கு அப்ளை பண்ணிட்டல அப்புறம் எதுக்கு உனக்கு இந்தக் குழந்தை?பேசமால அபார்ஷன் பண்ணிடு”என்று சொல்லி முடிக்கவில்லை. 

ஆதிரா சப்புசப்புன்னு அவன் கன்னத்துல மாத்தி மாத்தி அடித்துவிட்டாள்.

அவளது முடியைப் பிடித்தவள் “யாரு குழந்தையை வந்து அபார்ஷன் பண்ண சொல்லுற திருட்டுடேஷூ. நீயே திருட்டுத்தனமா என் புருஷன்கூட படுத்து வயித்துல வாங்கியிருக்க. நீ வந்து என் குழந்தையை வேண்டாம்னு அபார்ஷன் பண்ண சொல்லுறியா பிட்ச். நான் காதலிச்ச என் அத்தானை முறைப்படி கல்யாணம் பண்ணி, அவங்கக்கூட சந்தோசமா வாழ்ந்து வந்த குழந்தைடி இது. இதுக்குமேல என் முன்னாடி நின்னன்னு வையேன். உன்னைக் கொலை பண்ணிடுவேன்டி இப்பவே”என்று அவளது கழுத்தைப் பிடித்து நெறித்தாள்.

மதுமதிக்கு மூச்சுத் திணறியது. அவளோடு யாருமே வரவில்லை. அவள் மட்டும்தான் வந்திருந்தாள். 

ஆதிரா கழுத்தைப் பிடித்து நெறித்ததும் எங்க செத்துறப்போறான்னு அவளை ஆதிராவிடமிருந்து ரவீந்தரன்தான் காப்பாத்தினான்.

ஆதிரா அவளைவிடு என்று பிடித்து இழுத்து அவளை விடுவித்திருந்தான். இப்போது ஒழுங்காக மூச்சுவிட்ட மதுமதி ஆதிர்வைக் கொலைவெறியில் பார்த்துவிட்டுப்போனாள்.

அதைப் பார்த்த ஆதிராவோ இதுக்குமேல உன்னால எனக்கு என்னடி சோய்திடமுடியும் என்று திட்டியவள் முன்பைவிடவும் ரொம்ப தெளிவாகி மனதளவில்ஸ்ட்ராங்காகி நின்றாள்.

மதுமதி எப்போ கர்ப்பம்னு சொன்னாளோ அப்பவே, அந்த நொடியே இளந்தீரனை தனது மனதிலிருந்து மொத்தமாக ஆதிரா தூக்கிப்போட்டிருந்தாள். தன்னுடைய காதலுக்கும் அன்புக்கும் தகுதியே இல்லாத ஒருத்தனாக அவனை நினைக்கத் தொடங்கிவிட்டாள்.

அதனால் இப்போது ஆழமாக மூச்செடுத்தவள் “நான் கர்ப்பமாக இருக்கிற விசயத்தை யாரும் இளந்தீரன் அத்தானுக்குச் சொல்லக்கூடாது. அப்படி என்னையும் மீறி சொன்னீங்கன்னா நான் எங்கேயவது காணமல் போயிடுவேன் அவ்வளவுதான்”என்று சொல்லிவிட்டு வெளியே நடந்தாள்.

இதெல்லாம் மறைக்ககூடியா விசயமா?இல்லை மறைக்கமுடியுமா?என்று மகேஷ்வரி ஆதங்கப்பட்டார்.

ஆனாலும் மகளுக்காக, அவளது வாழ்க்கைக்காக ரவி உட்பட யாருமே அவனிடம் சொல்லவில்லை. 

ஜெயசந்திரனுக்கோ ஆதிரா கர்ப்பமாக இருப்பதைக் கேட்டதும் அவ்வளவு சந்தோசப்பட்டவர் இளந்தீரனுக்கு சொல்லப்போனார்.அவரது கையைப்பிடித்தும் ஆதிரா தடுத்துவிட்டாள்.

இதுதான் தன்னுடைய கோபத்தின் அளவை இளந்தீரன் தெரிந்துக்கொள்ள உதவும் என்று நம்பினாள்.

உன் கோபத்தை மட்டும் தெரிஞ்சு அந்த கோக்குமாக்கான் என்ன பண்ணிடுவான்?அவன்தான் லூசுப்பையலா இருக்கானே ஆதிரா!