அநாயகா-49

அநாயகா-49

அநாயகா-49

இளந்தீரனும் ரகுவரனும் ஒரே கிளாஸ்ல இருந்தாலும் ஒரு மாசம் வரைக்கும் ஒருத்தர் பேசிக்கொள்ளவேயில்லை. 

ஏற்கனவே எதிரெதிர் கட்சியில் உள்ளவங்கன்னு தெரியும் என்பதால் எதற்கு வம்பு என்று இருவரும் விலகியேதான் இருந்தார்கள். அவர்களுக்குள் ஒருவிதமான அமைதி நிறைந்திருந்தது.

இளந்தீரன்கிட்ட ரகுவரன் பேசவந்தாலும் அவன் ஒதுங்கிச் சென்றான்.

நமக்கே கோபம் அதிகமாக வரும். இந்த ரகுவரன் வந்து பேசி நம்ம கையை நீட்டிட்டோம்னா அப்புறம் மாமாவுக்குத்தான் கெட்டபேரு வரும். நம்மளை எவனும் நம்பவும் மாட்டானுங்க,அதுதான் இளந்திரனின் குணத்தைப்பத்தி இந்த உலகத்துக்கே தெரியுமே!

ஆனால் ரகுவரன் அப்படியில்லையே!இளந்தீரன் இந்தக் காலேஜூக்குள்ள பார்த்ததும், அவங்க இரண்டுபேரும் போட்ட ஸ்கெட்சே அவன்கூட பழகி நட்பாகுறதுதானே! இளந்திரனை எப்படியாவது கவுக்குறதுதானே முதல்வேலை. அப்போ அதை செய்ய வெட்கம், மானம்,சூடெல்லாம் பார்த்தால் முடியுமா என்ன?

அதனால் இளந்தீரன் எவ்வளவுதான் விலகிப்போனாலும் மெதுமெதுவாக புன்னகை முகம் காட்டி, அப்படியே பேசி பேசி கல்லூரிக்குள் இருவரும் நண்பர்கள் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். 

ரகுவரனை பார்க்க வரும் மதுமதி அப்படியே இளந்தீரனுடன் நட்பாக பேசி பழக ஆரம்பித்தாள். முதலில் அது வெறும் நட்பாக மட்டும்தான் இருந்தது. 

மதுமதிக்கோ அது நட்புக்கூட கிடையாது. அவளது அதிகாரத்தில் அது ஒரு ப்ராஜெக்ட் . வளது அரசியல் பிரவேசத்திற்கு தடையாக இருக்கும் ஒவ்வொருவரையும் வெட்டி வீழ்த்துவதற்கான ஒரு காயாகத்தான் அவனைப் பார்த்தாள் ஆனா இளந்திரனோ மதுமதியிடம் முதலில் முழுமையானதொரு நட்பைத்தான் உணர்ந்தான். 

அதுசரி யாரு மனசுக்குள்ள எப்படி எண்ணங்கள் இருக்கிறதோ அப்படித்தானே அவங்க குணங்களும் இருக்கும். யாரையும் எந்த விதத்திலும் துரோகம் நினைக்காத இளந்தீரனுக்கு அது நல்லதொரு நட்பாக மட்டுமே இருந்தது. 

மெதுவாக மெதுவாக வாழைப்பழத்தில் ஊசியை ஏத்திற மாதகரெ அவனிடம் பேசி பேசியே ஜெயச்சந்திரன் மீதுள்ள வெறுப்பை அப்படியே அவனக்கும் கடத்தினான்.

“இளா!பங்காளி நீ உங்க கட்சியில் எந்த பதவில இருக்க?” என்று நேரடியாக ஒருநாள் கேட்டான். 

அதைக் கேட்டதும் இளந்தீரன் “அப்படியெல்லாம் ஒரு பதவியிலயும் நான் இல்லையே. இப்பதான் அடிப்படை உறுப்பினராகவே ஆகருக்கேன். இதுக்குப்புறம்தானே களப்பணியில் இருந்து மெதுவாக முன்னேறி கட்சியில் மேல வர முடியும். நீ உங்க கட்சியில் அடிப்படை உறுப்பினராகதானே இருக்க?” என்று யதார்த்தமாக கேட்டான். 

அதைக் கேட்டதும் ரகுவரன் சத்தமாக சிரித்தான். 

அவன் சிரித்ததும் இளந்தீரனுக்குக் கோபம் வந்துவிட்டது.

“ஏன்டா சிரிக்கிற காரணம் இல்லாமல் இப்படி நக்கல் பண்ணி சிரிக்காதே” என்று எழுந்தான்.

அவனது கையை பிடித்து இழுத்து ரகுவரன் உட்கார வைத்தவன் “உன் மாமா உன்னை எப்படி எல்லாம் ஏமாத்துறாருன்னு நினைச்சு சிரிச்சேன்டா?” என்று சொன்னான்.

“இங்க பாரு நீ என் ஃப்ரெண்ட் என்னைப் பத்தி மட்டும் என்கிட்ட பேசு.என் குடும்பத்தையும் என் மாமாவையும் தப்பாப்பேசுறதுக்கு உனக்கு எந்த உரிமையும் கிடையாது” என்று சொல்லிவிட்டு அவனது கையை தட்டிவிட்டுட்டு அப்படியே கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டான். 

இதுதானே ஆரம்பம். ஆனால் ரகுவரன் அதை அப்படியே விடவில்லை. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் உடையும் என்பதைப் போல மெதுமெதுவாக பேச்சிலே இளந்தீரனின் மனதைக் கரைத்து, கலைத்தும்விட்டான்.

அந்த இளம் வயதில் அந்தளவு கள்ளத்தனமும் வஞ்சகமும் இல்லாத இளந்தீரன், ரகுவரன் சொன்னதையெல்லாம் நம்பிவிட்டான்.

ஒரு வாரம் அவனிடம் சரியாக பேசாத இளந்தீரன் இப்பொழுது ரகுவரன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் அவனது கையை பிடித்த ரகுவரன் மெதுவாக சொன்னான் “நான் என் கட்சியில என் மாமாவுக்கு அடுத்தும்,அந்த கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருக்கேன். ஆனா உனக்கு உன்னோட மாமா என்ன செய்தா?ர் அதை பற்றி மட்டும் யோசி. இவ்வளவு பெரிய கட்சில இருக்கிற உன் மாமாவுக்கு இதெல்லாம் செய்ய முடியாதா என்ன? செய்யனும்னு நினைத்தால் எப்படி வேணும்னாலும் செய்யலாம் பங்காளி” என்று முதல் நச்சு விதையை அவனது உள்ளத்தில் விதைத்தான். 

இளந்தீரன் மனதில் அது விதையாக விழுந்து, செடியாக முளைத்து நேரடியாக ஒரு நாள் ஜெயச்சந்திரன் இடமே கேட்டு அதற்கு சண்டையும் போட்டு விட்டான்.

அன்னையிலிருந்து ஜெயச்சந்திரன் மேல் வந்த வெறுப்பு மெது மெதுவாக வளர்ந்து ஆலமரம் போல் வேரூன்றி விழுதுகளையும் பரப்பி நின்றது. 

ஜெயச்சந்திரன் மேலுள்ள கோபம் வெறுப்பு எல்லாம் அப்படியே அவர்களது குடும்பத்தின் மேலும் திரும்பி,அப்படியே ஆதிராவிடமிருந்து விலகிவிட்டான்.

எப்பொழுது ஆதரவிடமிருந்து விலக ஆரம்பித்தானவ அப்பவே அவனது மனதிற்கு நெருக்கமானவளாக வந்து மதுமதி உட்கார்ந்துவிட்டாள்.

ஆனால் அதெல்லாம் நடிப்பு என்று இளந்தீரனுக்கே தெரியாதே அவன் உண்மையாகவே மதுமதியை தனது எதிர்கால வாழ்க்கை என்றுதான் நம்பினான். 

அதன் பிறகு ரகுவரன் மெதுவாக அவனை தங்களுடைய கட்சிக்கு எடுத்துக் கொண்டான். அவனது படிப்பு முடிந்ததும்,கட்சி வேலை அது இது என்று சிவானந்தனோடு சேர்ந்து பயணித்தானே தவிர தனது மாமாவையும் அவர் எதுக்காக தன்னை அடிப்படை உறுப்பினராக வைத்திருந்தார் என்பதையும் யோசித்து யோசித்தும் மற்ற வெறுப்பையும் அவர் மேல்கொட்டினவன் அதற்கான உண்மையான காரணத்தை தெரிந்துக்கொள்ளவே முயலவில்லை.

அந்த வெறுப்புதான் அவரை அடிக்கக்கூட தயங்காத ஒரு குரூர எண்ணத்தை அவனுக்குள் விதைத்தது. 

அவன் கோபத்தில்தான் அடித்தான். ஆனால் அவன் மூலமாக ஜெயச்சந்திரனை போடட்டுத்தள்ளுவதற்குதான் மதுமதியும் ரகுவரனும் சிவானந்தன் கூட்டணியோடு சேர்ந்துதிட்டம் போட்டிருந்தார்கள் என்பது அதன் பிறகுதானே அவனுக்குத் தெரிய வந்தது.

ஒவ்வொரு முறையும் மதுமதி என்ன சொல்லுகிறாளோ அதையேதான் ரகுவரன் செய்வான்.

மதுமதி இளந்தீரனை தூண்டிவிட ரகுவரனிடம்தான் சொல்லுவாள். அப்பொழுது என்னென்ன சொல்லுகிறாளோ அதை அப்படியே அச்சுப் பிசாகாமல் போய் ரகுவரன் செய்வான்.

 

இளந்தீரனிடம் பேசி அவனை கோபத்தில் தூண்டி விட்டு ஜெயச்சந்திரனுக்கு எதிராக போராட வைப்பான்,சண்டையிட வைப்பான். 

நிறைய பிரச்சனைகள் உருவாக்கி ஆதிராவையும் வேதனைப்படுத்துவாள். இப்படியாக பனிரெண்டு வருஷம் இளந்தீரனுடைய தூய்மையான நெஞ்சம் மதுமதி என்னும் வஞ்சகியின் வஞ்சத்தால் விஷமாகி போயிருந்தது. 

ஆனால் இளந்தீரன் மதுமதியை உண்மையாகத்தான் நேசித்தான். தன்னுடைய எதிர்கால வாழ்க்கையே இந்த சிவானந்தனின் கட்சியிலும் அவரது மகளிலும் மட்டும்தான் இருக்கிறது என்று உறுதியாக நம்பினான்.

அதனால் மதுமதியை உண்மையாகவே நேசித்தான். அந்த இளம் பிராயத்து காதலான ஆதிராவின் மேல் வந்த காதலை அவன் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. 

இளந்தீரன் ஒவ்வொரு முறையும் மதுமதியோடு நெருங்கும்போது மதுமதி அவனிடமிருந்து விலகித்தான் இருந்தாள் .எப்பொழுது கேட்டாலும் கல்யாணத்துக்கு அப்புறம் உங்கக்கூடத்தானே வாழ போறேன் இளா அத்தான் என்று தேனாக பேசியே அவனை கவிழ்த்தாள்.

ஒவ்வொரு முறையும் இளந்தீரனிடம் பேசிவிட்டு வந்து மதுமதி ரகுவனிடம் திட்டிக் கொண்டிருப்பாள். 

“ரகு மாமா எதுக்குடா நீ அந்த இளந்தீரன்கிட்ட என்னை தனியா விட்டுட்டு தூரமா போய் நிக்கிற. எல்லா நாடகம்தான்னு உனக்கு எனக்கும் தெரியும். அந்த மடப்பயலுக்கு தெரியாது இல்ல அப்போ நீ என் பக்கத்திலேயே நிற்கலாம்ல. அடிக்கடி அவன் என் கன்னத்தை தொடுரான். அது எனக்கு அருவருப்பா இருக்கு” என்று அதற்கும் ரகுவரனைத்தான் திட்டிக் கொண்டிருப்பாள். அவர்கள் இருவரும் தங்களின் காதலில் உறுதியாகத்தான் இருந்தார்கள். 

ஆனால் இளந்தீரனையும் ஆதிராவையும் பிரிப்பதில் மதுமதி உறுதியாக இருந்தாள். அந்தக் குடும்பத்தில் யாருக்கும் எதுவும் நல்லது நடக்கக்கூடாது என்பதில் ரொம்பத் தெளிவாக இருந்தாள்.

அதே மாதிரி ரவீந்திரன் சங்கவி திருமணம் நடந்தது அந்த திருமணத்திற்கு காலையில் தாலி கட்டும்போது மட்டும்தான் இளந்தீரன் அங்கேயிருந்தான். அதற்குப் பிறகும் அதற்கு முன்பும் நடந்த எந்த சந்தோஷமான நிகழ்ச்சிகளிலும் இளந்தீரன் இல்லை. மதுமதி இருக்க விடவில்லை. அவைத் தனியாக சந்திக்க வேண்டும் பேச வேண்டும் என்று இளந்தீரனை அழைத்துக் கொண்டு வெளியே போய்விட்டாள். எப்போதும் போல ரகுவரன் அவளுக்கு பாதுகாப்பாக போனான். 

இவர்கள் போட்ட எல்லா திட்டமும் இனிதாகவே நடந்தேறியது.

இளந்தீரனை தூண்டிவிட்டு கவிதாவெற்கும் ஜெயச்சந்திரனுக்கும் தினம் தினம் பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டிருந்தாள் மதுமதி. 

ஆனாலும் இளந்தீரனின் குணத்தை சிறுவயதிலிருந்தே அறிந்த ஜெயச்சந்திரன் அவனது நன்மைக்காக பொறுமையாக காத்திருந்தார். குடும்பத்தார் எல்லாரும் திட்டினலும்,மகேஸ்வரிக்கு அவன் மேல் வெறுப்பா இருந்தாலும், யார் என்ன சொன்னாலும் ஜெயச்சந்திரன் இளந்தீரனே அப்பொழுதும் எப்பொழுதும் நம்பினார், இனியும் நம்புவார். 

மதுமதி இளந்தீரனுடன் நெருங்கி பழகுவதைப் பார்த்தா மரகதம் எல்லாரையும் கூப்பிட்டுவைத்து “என்ன நடக்குது? என்று கேட்டார்.

அப்போது சிவானந்தன் மதுமதியின் திட்டத்தை சொல்லவும் மரகதத்திற்கு அதைஉபிடிக்கவேயில்லை.

இங்க பாரு பொம்பள புள்ளையா அடக்க ஒடுக்கமா கல்யாணம் பண்ணிட்டு வீட்டோடு இருக்க வழியைப்பாரு. அப்படியே நீ அரசியலுக்கு வர்றதா இருந்தாலும், ரகுவரனைக் கல்யாணம் பண்ணிட்டு கட்சியில் ஒரு பதவியில் இருந்து ஜெயிச்சு முன்னாடி வா. இப்படி ஒருத்தன்கூட பழகி ஏமாற்றுறது எல்லாம் வாழ்க்கைக்கு சரியா வராது என்று ஒரு தாயாக தன் பெண்ணை நினைத்து அவர் மட்டுமே சரியாக பேசினார். ஆனால் அவர் பேச்சை அங்கே காது கொடுத்து கேட்க யாருமேயில்லையே!

அவர்கள் திட்டம் எதுவரைக்கும் சரியாக இருந்தது என்றால் ஜெயச்சந்திரன் போஸ்டரை கிழிச்சு ஒட்டிட்டாருன்னு இளந்தீரனைத் தூண்டிவிடுறவரைக்கும் சரியாகப்போச்சுது.

இளந்தீரனை வைத்து ஜெயச்சந்திரனை அடிக்க வைப்பது மட்டுமில்லை, அவனை இன்னும் நல்லா தூண்டிவிட்டு ஜெயசந்திரனை இளந்தீரனை வைத்தே போட்டுத்தள்ளுவது என்பதுதான் அவர்களது கடைசித்திட்டம்இருந்தது. 

இளந்தீரனை நன்றாக குடிக்க வைத்து அவனைத் தூண்டி விட்டிருந்தார்கள்.ஜெயச்சந்திரனைக் கல்லால் அடித்த அன்று ரகுவரன் தனது பைக்கில் அருவாள், கத்தி என்று வெப்பன்ஸையும் மறைத்து வைத்திருந்தான்.

இளந்தீரன் கோபத்திலும் ஆத்திரத்திலும் சண்டை போடும்போது அவன் கையில் ஆயுதத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களது திட்டமாக இருந்தது. 

ஆனால் இவர்களின் கையிஸ் அகப்பட்டுக்கொண்டவனும்,உண்மையான யாருக்கும் எந்த துரோகம் செய்யாதவனுமான இளந்தீரனை என்னை காப்பாற்றுவதற்கு அந்த கடவுளும் விதியும் போட்டுக் கொடுத்த ஒரு வழிதான் ஜெயச்சந்திரனை அவன் செங்கல்லால் அடித்தது. 

செங்கல்லால் அடித்ததும் அவர் மயங்கி விழுந்ததும் ஹாஸ்பிடலுக்கு சேர்த்ததும் என்று எல்லாத்தையும் இப்பொழுது நினைத்துப் பார்த்து மதம் மதுமதி சத்தமாக சிரித்தாள்!

அவள் சிரிப்பதைப் பார்த்த ஜெயச்சந்திரன் ஹாஹாஹாஹாஆ உங்க திட்டமெல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. அதுல ஒரு பெரகய ஓட்டு இருந்துச்சே அதை கவனிக்கலையா?ஏய் யம்மா! சிவானந்தன் மவளே!என்றவர் இன்னும் சத்தமாக அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தார்.

அதுக்கப்புறம் இபோவரைக்கும் நடக்குறது எல்லாயே நாங்க போட்ட திட்டமம்மா!நாங்க போட்ட திட்டம்!அதாவது எங்களோடது மா!எங்களோடது!என்று சொல்லிவிட்டு அவர் ஆதிராவை பார்த்துக் கண்ணடித்தார்.

எதுக்கு இவர் இப்படி சிரிக்கிறார் என்று புரியாத மதுமதி கோபமாக எழுந்து இருந்து வந்தவள் “உங்களுக்கு என்ன பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சி அது முத்திடுச்சுப் போலிருக்கே மிஸ்டர் ஜெயச்சந்திரன். கோமாவுல இருந்து எழுந்தபிறகு மாத்திரையெல்லாம் ஒழுங்கா போடலையோ. இப்படி கிறுக்குத்தனமா சிரிக்கிறீங்க” என்று கேட்டாள்.

ஆதிரவா அவர் சொன்னதையெல்லாம் தெளிவா கேட்டியா?இல்லையா? அதெல்லாம் எங்கப்பா தெளிவாதான் இருக்காரு. யாரு சொன்னா அவர் கோமாவுக்கு போனார்னு . அப்படியெல்லாம் எங்கப்பாவ இவ்வளவு சீக்கிரம் கோமாவுக்கு யாரும் அனுப்டிடமுடியாது! ஏன் மதுமதி நீ பனிரெண்டு வருஷமா போட்ட திட்டத்தை நாங்க மூணே மாசத் திட்டத்துல முடிவைச்சிட்டோம் உனக்கு தெரியுமா? என்று ஆதிரா கேட்டுவிட்டு தன் புருவம் உயர்த்தி எப்படி என்று கேட்டதும் மதுமதி அப்பொழுதுதான் இவங்க ஏதோ சதித்தட்டும் போட்டுத்தான் இளந்தீரனை எம்.எல்.ஏவாக்கிருக்காங்களோ. நம்மதான் தானாக வந்து மாட்டிக்கிட்டமோ? இதுலென்னவோ இருக்குதுபோல என்று யோசித்து அப்படியே சிலையாக நின்றாள்!

ஆஹா! அப்பாவும் மகளும் நமக்கு தெரியாம ஏதோ திட்டம் போட்டுத்தான் நம்மக்கூட வந்து கூலாக இருக்காங்களோ! என இப்போ உள்ளுக்குள் பதறினாள்!

அடிச்சான்டா ரீவீட்டு!ஆப்பு கண்ணுக்கு தெளிவா தெரியும் நேரமிது!அனுபவி மதுமதியே! அனுபவி!