அநாயகா-42

அநாயகா-42

அநாயகா-42

ஆதிரா அவர்கள் இருவரையும் கோபத்தில் கண்ணெடுக்காத பார்த்திருந்தாள்.

அந்த கோப முகத்தைப் பார்த்த மதுமதிக்கு இன்னும் மனதிற்குள் சந்தோசம் எகிறியது.

உடனே இளந்தீரனிடம் மதுமதி “இளாத்தான் நான் இங்கயே இருந்துக்கிறனே. நான் ரகுவரனை டைவர்ஸ் பண்ணிட்டு வந்துடுறேன். நம்ம இரண்டு பேரும் மறுபடியும் ஒன்னா சேர்ந்துக்கலாம். அப்பாதான் ரகுவரன் அத்தானை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சிட்டார். அந்தக் கல்யாணம்தான் இப்போ எனக்கு இவ்வளவு பிரச்சனைல கொண்டுவந்திருக்கு. நான் இனி உங்களை விட்டுப்போக மாட்டேன் அத்தான்” என்று அவனது தோளில் சாய்ந்தவாறே அழுதாள்.

அதையெல்லாம் ஆதிரா பார்க்கட்டும் என்றுதான் வேண்டுமென்று செய்தாள்.

அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பின்னாடி இருந்து க்கும் என்று ஆதிரா சத்தம் கொடுத்தாள்.

அந்த சத்தம் கேட்டதும் உடனே இளந்தீரன் திரும்பிப் பார்த்தான்.

ஆதிரா அவனது கண்களையே கூர்மையாகப் பார்க்கவும், மதுமதியை தன்னிடம் இருந்து பிரித்து விலக்கி நிறுத்தினான்.

“ஏன் தீராத்தான்‌ மதுமதியை உங்கள்கிட்ட இருந்து பிரிச்சிட்டீங்க. பாவம் அவங்க மூஞ்சியே வாடிப் போச்சு. அப்புறம் இரண்டுபேருக்கும் நான் வந்து நின்னதுல இடைஞ்சல் போல. முக்கியமா ஏதாவது பேசிட்டிருந்தீங்க போல”என்று அங்கிருந்த கட்டிலில் உட்கார்ந்து காலை நீட்டியவள் “தீராத்தானு கால் ரொம்ப வலிக்குது அத்தான் கொஞ்சம் பிடிச்சி விடுறீங்களா?" என்று கொஞ்சம் கொஞ்சலாகக் கேட்டாள்.

அவள் அப்படி சொன்னதும் இளந்தீரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன திடீர்னு உள்ள வந்தால் மதுமதியை பத்தி எதுவுமே கேட்காமல் அவக் காலை பிடித்துவிட சொல்லுறாளே” என்று யோசித்தவன் மதுமதியைப் பார்த்தான். 

" எதுக்குத்தான் மதுமதி பாக்கறீங்க. அவங்க புருஷன் ரகுவரனெல்லாம் அவங்க காலை இதுக்கு முன்னாடி பிடித்துவிடாம இருந்திருப்பாங்களா என்ன? இப்போ வேணும்னா அவங்களுக்குள்ள சண்டை வந்து பிரிஞ்சிருந்தாலும், அப்புறம் சமாதானம் சரியாகி திரும்பவும் காலை பிடிச்சிவிடுவாங்க .நீங்க உங்க பொண்டாட்டி என் காலை பிடிச்சு விடுங்கள். இராத்திரி வேற நீங்க வெளியே போயிட்டீங்களா எங்க போனீங்களோ? என்னாச்சோ?அப்படின்னு பயந்துல நடந்துட்டே இருந்தேன். அதுல கால் ரொம்ப வலிக்குது. வாங்கத்தான் கொஞ்சம் காலைப்பிடிச்சி விடுங்க ”என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு பேசினாள்.

இளந்தீரன் அதுக்குமேல ஒரு வார்த்தைக்கூட பேசவேயில்லை.

ஆதிராவின் பக்கத்தில வேகமாக உட்கார்ந்தவன் அவளோட க்லைப்பிடிச்சு தன் மடியில வைச்சிக்கிட்டே “ரொம்ப நேரமா நடந்தியா என்ன?எதுக்கு நடந்த எப்படின்னாலும் நான் வந்திருவேன்ல”என்று கேட்டவாறே அவளது காலைப் பிடித்துவிடத் தொடங்கினான்.

அதைப் பார்த்த மதுமதிக்கு அப்படியே வயிறெல்லாம் எரிந்தணு. அவளது காதில் புகை வராத குறையாக அவளை முறைத்து பார்த்தாள்.

“என்ன இளா அத்தான் நீங்க ஒரு அமைச்சர் நீங்க போய் உங்க பொண்டாட்டி காலையூல்லாம் பிடிச்சிட்டு இருக்கலாமா? அவளுக்கு கால் வலிக்குதுன்னா ஒரு வேலைக்காரியை கூப்பிட்டு வைச்சு காலை பிடிச்சுவிட சொல்ல வேண்டியதுதானே. நீங்க போய் அடிமை மாதிரி அவளுக்குக் காலைப் பிடிச்சுவிடுறீங்க. இதெல்லாம் நல்லாயில்லை” என்று கொஞ்சம் காட்டமாக எகிறி பேசினாள்.

அதைக் கேட்டதுமே இளந்தீரன் திரும்பி ஆச்சரியத்தில் அவளை பார்த்தான். ஆதிராவோ “ஹல்லோ மதுமதி என் புருஷன் என் காலைப் பிடிச்சுவிட்டா உங்களுக்கு எங்க வலிக்குது. நீங்க உங்க புருஷன்கிட்டபோய் இந்த அதிகாரத்தையெல்லாம் வைச்சிக்கங்க சரியா. இது எங்க புருஷன் பொண்டாட்டிக்குள்ள நடக்கிற ஒஇசயம். இதுல நீங்க தலையிடக்கூடாது. அப்புறம் என்னோட புருஷன் ஊருக்கே அமைச்சராக இருந்தாலும் அவரு என்னோட அத்தான்.என் புருஷன். அவரை ஏன் காலைப் பிடிச்சு விடுவாரு.நான் வேணும்னு சொன்னா எங்க வேணும்னாலும் பிடிச்சு விடுவாரு. அதை கேட்க நீங்க யாரு?மதுமதி உங்க புருஷன்கூட சண்டை போட்டு வந்திருக்கீங்க. நீங்க எங்க வீட்டு விருந்தாளியா ஒரு நாள் இருங்க, இல்லை ஒருமாசமா இருங்க. அப்புறம் உங்க புருஷன் கூட பேசி சமாதானமாகப் போகப்பாருங்க. இல்லையா உங்க வீட்டுக்கு போகணும்னு நினைச்சா உங்க வீட்டுக்குப் போங்க. என் வீட்டுக்கு வந்திருந்திட்டு என் அத்தான் எனக்கு என்ன செய்யணும், செய்யக்கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு.உங்க லிமிட் என்னவோ அதுக்குள்ள நில்லுங்க?அது போதும். வேற எந்த வேலையும் பண்ண கூடாது. தீராத்த்தான் நம்ம இரண்டு பேருக்குள்ளயும் என்ன மூணாவது ஆளு வர்றாங்க. இந்த மதுமதியை கீழ இருக்க கெஸ்ட் ரூமுக்குப் போக சொல்லுங்க. இது என்னோட பிரைவேட் ஏரியா இதுக்குள்ள கண்டவங்க எல்லாம் நிக்கக்கூடாது” என்று ஆதிரா வெடுக்கென்று பேசினாள்.

ஆதிராவுக்கு இன்று ரூமுக்குள்ள வர வரைக்கும் மதுமதியை திட்டனும் என்கிற எண்ணமே இல்லை. ஆனால் அவள் இளந்தீரனை கட்டிபிடித்துக்கொண்டு நின்றதைக் கண்டதும் அப்படியொரு கோபம் அவளையும் மீறி வந்துவிட்டது. அதைவிடவும் என் புருஷனை இவ எப்படி கட்டிப்பிடிக்கலாம் என் உரிமை மேலோங்கிவிட்டது. மதுமதி செய்த நாடகத்தனத்தை எல்லாம் பார்த்தவளுக்கு இளந்தீரன் என் புருஷன் மட்டும்தான் என்பதை இன்னும் அழுத்தமாக மதுமதி மனதில் பதிய வைக்க வேண்டும் என்று எண்ணத்தில்தான் இப்படி நடந்து கொண்டாள். 

ஆதிரா எப்பவுமே இப்படி மரியாதை குறைவாக எங்குமே நடந்துக்க மாட்டாள் என்று புரிந்தாலும், இளந்திரனுக்கு மதுமதி முகம் வாடியதும் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. 

அதைப் பார்த்த இளந்தீரன் ஆதிராவிடம் சத்தம் போட்டான்.

“என்ன ஆதுமா இப்படி பேசுற? அவ ஒரு கஷ்டமான சூழ்நிலையில நம்ம வீட்டுக்கு வந்திருக்காள். அவ நம்ம வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளி. அவள் இர எத்தனை நாள் இங்கஇருந்தாலும் அவளது முகம் கோணாமல் நம்ம பார்த்துக்கணும் அது நம்மளோட பண்பாடு. நான் உன்கிட்ட இருந்து இப்படியான பேச்சுக்களை எதிர்பார்க்கல. இனி மதுமதிக்கிட்ட இப்படி நடந்துக்காத. அப்புறம் நான் மனுஸனாக இருக்கமாட்டேன்”(இப்போமட்டும் மனுஷனாவா இருக்க) என்று அவளை கடிந்து கொண்டவன் எழுந்து மதுமதி கையை பிடித்துக் கொண்டு வெளியே வந்தான்.

இதை ஆதிரா எதிர்பார்க்கவில்லை. எந்த சூழ்நிலையிலும் அத்தான் நம்மளை யாருக்கிட்டயும், எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க. அது மதுமதியாக இருந்தாலும்கூட விட்டுக்குடுக்க மாட்டாங்க என்று நம்பினவளுக்கு அந்த நம்பிக்கை இப்பொழுது உடைந்து போனதும் அப்படியே அதிர்ச்சியில் உட்கார்ந்துவிட்டாள்.

இளந்தீரன் மதுமதியின் கைய பிடித்துக் கொண்டு போவதே பார்த்திருந்தவளுக்கு மனதை யாரோ வாள்கொண்டு அறுத்ததுபோன்று உணர்ந்தாள். இந்த அத்தானை என்னதான் நம்ம சின்ன வயசுல இருந்தே காதலிச்சிருந்தாலும் அவங்க காதலிச்சவளுக்குத்தான் முதல்ல மரியாதை குடுக்கிறாங்க. நம்மளை நாயாக நினைக்கிறாங்க போல எனநினைத்தவளுக்கு அப்படியே எங்கேயாவது போய் செத்திரலாம் போலிஇருந்தது. அந்த எண்ணம் வந்ததும் சத்தமாக அழுதாள்.

அவளது அழுகையின் சத்தம் மதுமதிக்கும் கேட்கத்தான் செய்தது. இளந்தீரனுக்குமே அவள் அழுகிறதைக் கேட்டு ஒருமாதிரியாகவுப் திரும்பி வந்து அவளை பார்த்தான். அவளோ முகத்தை மூடியவாறு அழுதுக்கொண்டிருந்தாள். 

இப்ப இருக்க சூழ்நிலை இவளை சமாதானப்படுத்த முடியாது என்று நினைத்தவன், அவளை சமாதானப்படுத்தாது அப்படியே திரும்பி வந்தவன் மாதுமதியை கூட்டிக்கொண்டு கீழே இருக்கும் ரூமுக்கு போக இறங்கிவந்தான்.

அப்படி வரும் பொழுது ஹாலில் மகேஸ்வரி, அவர்களைப் பார்த்ததும், என்ன பேசலாம் என்று யோசித்துக் கொண்டே வந்தான். 

அவனைப் பார்த்தவுடனே மகேஷ்வரி எழுந்தவர் அவன் பக்கத்தில் வந்தார்.

இளந்தீரா என்ன இதெல்லாம்? இவா அந்த சிவானந்தன் மகள்தானே. இவளைத்தானக்ஷகடந்த பத்து வருஷமா காதலிக்கிறேன்னு என்று சொல்லிட்டுருந்த. இதே பொண்ணுதானே அவங்க அப்பா ஏற்பாடு பண்ணினா கல்யாணத்துக்கு சமாதிச்சு உன்னைவிட்டுட்டு அந்த ரகுவரனை கல்யாணம் பண்ணிக்கிட்டாள்.இப்போ இவ எப்படி நம்ம வீட்டுக்குள்ள வந்தா? என் பொண்ணு கழுத்துல தாலிகட்டி இந்த வீட்டில தனிக்குடித்தனம் நடந்துகிட்டிருக்க நீ. என் பொண்ணு போட்டோ பிச்சையிலதான் நீ எம்.எல்.ஏவா ஆன. என் பொண்ணு உனக்குக் கொடுத்த அந்த வாழ்க்கையில்தான் இப்ப வாழ்ந்துட்டிருக்க. அப்படி இருக்கும்போதே இவளை எப்படி நீ இந்த வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்த? யாருகிட்ட கேட்டு இவளைக் கூட்டிட்டு வந்த? என் பொண்ணு ஆதிரா உன்னைக் கண்மூடித்தனமா நம்புறாங்கறதுக்காக இப்படி அவ முதுகுல குத்துறியா நீ. அவ கேட்கிறார்களா இல்லையா அவ வாழ்க்கைக்காக நான் கேட்பேன். இப்போ இந்த பொண்ண இந்த வீட்ல இருந்து வெளியே இறக்கி விடுறியா? இல்லையா?”

என்று கோபத்தில் சத்தம் போட்டார்.

மகேஷ்வரி பேசியதைக் கேட்ட இளந்தீரனுக்கு அவனது தன்மானம் சீண்டபட்டது. அவ்வளவுதான் அப்படியே கோபத்தில் பொங்கிவிட்டான்.

“அத்தை என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சுதான் நீங்க பேசுறீங்களா? ஆமா உங்க பொண்ணு போட்ட பிச்சையில்தான் நான் எம்.எல்.ஏ ஆனேன். அதுக்காக எப்பவுமே உங்ககிட்டதான் வந்து நின்னு பிச்சை எடுக்கணுமா என்ன? ஒவ்வொரு விஷயத்தை உங்ககிட்ட கேட்டுதான் செய்யணும்னு ஏதாவது சட்டம் இருக்கா? இது என்னோட தனிபட்ட விஷயம். அதுல என்ன செய்யணும் செய்யக்கூடாது என்கிறதெல்லாம் எனக்குத் தெரியும் நீங்க எப்படி மதுமதியை வெளியே அனுப்ப சொல்லலாம். என்கிட்ட எதுன்னாலும் சொல்லுங்க மதுமதியை பேசுற வேலையெல்லாம் வைச்சிக்காதிங்க அது நல்லாயிருக்காது. நானும் அதைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்காமாட்டேன்”என்று அவரை எதிர்த்துபேசினவனின முகத்தில் அவ்வளவு கோபம் தெறித்தது. அவனது வார்த்தையில் அடக்கப்பட்ட கோபம் தெரிந்தது. 

அதைக் கேட்டது மகேஸ்வரிக்கு கொஞ்சமாக இருந்த கோபம் இப்பொழுது பெரும் கோபமாக உருவெடுத்திருந்தது.

“யாரைப்பார்த்து பேசிறது சரியில்லைன்னு சொல்லுற இளந்தீரா?அர்த்த இராத்திரியில் அடுத்தவன் பொண்டாட்டிய உன் வீட்டுக்கு கூட்டிட்டுவந்திருக்க அது மட்டும் சரியா என்ன? இவா ஏற்கனவே உன் காதலி,உன்னைக் கல்யாணம் பண்ண நினைச்சவன்னு எங்களுக்குத் தெரியும்னு தெரிஞ்சுமே,இவளை எவ்வளவு தைரியாம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்க. இப்படியான அருவருப்பானவனை போய் என் மகள் கல்யாணம் பண்ணிருக்கான்னு நினைச்சாலே அருவருப்பா இருக்கு. என் மகள் இருக்கிற இந்த வீட்டுல ஒரு கேவலமானவள் இருக்க விடமாட்டேன். இப்பவே இவளை வெளியே அனுப்பணும். இல்லைன்னா நடக்கிறதே வேற”என்று இளந்தீரனை எச்சரித்தார்.

அவருக்கு தன் மகள் தன் கண்முன்னாடியே ஏமாற்றப் படுவதைத் தாங்கிக்கமுடியாது பேசினார்.

அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மதுமதிக்கோ உள்ளுக்குள் அப்படியே சந்தோசம் பொங்கிவழிந்தது. 

அவள் எதிர்பார்த்தது இதைத்தானே. ஆதிரா மொத்தமா இளந்தீரனிடமிருந்து விலகிப்போகணும்னுதானே அவ விரும்புறாள். அது தானாக நடக்கும்போது சந்தோசம் வரத்தானே செய்யும்!

மகேஷ்வரி ரொம்ப எகிறிப்பேசவும் இளந்தீரன் அவரை எதிர்த்து பதில் பேசினான் “அப்படியெல்லாம் உங்க இஷ்டத்துக்கு அவளை வெளியே அனுப்ப முடியாது. அவளோட பிரச்சனை முடிஞ்சதும் அனுப்புவேன் அவ்வளவுதான். என்னையெல்லாம் யாரும் அதிகராம் பண்ணமுடியாது. நான் யாருபேச்சையும் கேட்கவேண்டிய அவசியமும் இல்லை” என்னு திமிராகப்பேசினான்.

அதைக்கேட்ட எல்லோருக்குமே என்ன இவன் இப்படி பேசுறான் என்று அதிர்ச்சியாகியது. 

ரவீந்திரன் முன்னாடி வந்தவன் “ஏன்டா அத்தை இவ்வளவு தூரம் சொல்லுறாங்க அந்த பொண்ணை வெளிய அனுப்பவேண்டியதுதானடா. அவளை அனுப்புறதுல உனக்கென்ன கஷ்டம். உனக்கு ஆதிராவைவிடவும் இந்த நாய்தான் முக்கியமா இருக்காளா? அப்போ இவளை நீ இரண்டாந்தாரமா வைச்சிக்கபோறீயா. அதுதான் அவப்புருஷன்கிட்ட இருந்து பிரிச்சிக்கூட்டிட்டு வந்திட்டியா?’என்று கேட்டான்.

“ரவி அதுதான் உண்மை. இந்த நாய்கூட உன் தம்பிக்காரன் தப்பான உறவுல இருந்ததுனாலதான் இவா புருஷன் அந்த ரகுவரன் சந்தேகப்பட்டு இவளை அடிச்சு விரட்டியிருக்கான். இவா தற்கொலையெல்லாம் செய்யப்போகலை. அதெல்லாம் இவளை இங்க கூட்டிட்டுவர உன் தம்பிபோட்ட நாபகம். கள்ளக்காதலிக்காக உன் தம்பி நாளைக்குஎன் பொண்ணைக்கொல்லக்கூட தயங்கமாட்டான். ச்ச்சீ இவன் புத்தி தெரிஞ்சும் என் பொண்ணை இவன்கூட வாழ அனுமதிச்சது என் தப்புத்தான்.இந்த அசாங்கம்பிடிச்சவளை இப்பவே வெளியபிடிச்சுத் தள்ளணும் என்று மதுமதியின் கையைப்பிடித்து இழுத்து வெளியே தள்ளினார்.

அதைப்பார்த்த இளந்தீரனோ “அத்தை மதுமதியோட கையை விடுங்க. அவளைத் தொட யாருக்கும் உரிமைக்கிடையாது. நீங்க தேவையில்லாமல் அசிங்கமா பேசாதிங்க. அவளே அவ பிரசனையெல்லாம் முடிஞ்சதும் போயிடுவா. கையை விடுங்க அத்தை” என்று சொன்னான்.

“முடியாது இவா வந்து என் மகளை அழ வைச்சிட்டா”என்று மதுமதியை இழுத்து வெளியே தள்ளினார்.

அதைப்பார்த்ததும் இளந்தீரன் கோபத்தில் அவரை அடிக்க கையோங்கிவிட்டான்.

அந்த நேரம் சரியாக ஆதிரா வந்து மகேஷ்வரிக்கும் அவனுக்கும் இடையில் நின்றுவிட்டாள்.

“ஆஆஆஆ அத்தையவே அடிக்க கையோங்கிட்டானே!” என்று ரவிக்கு ஆதங்கம் தாங்கமுடியாது இளந்தீரனை அடிக்கப்போய்விட்டான். அந்த வீடே இப்போது களேபரமாகிவிட்டது.

ஆதிராவின் முன்பாக கையை ஓங்கிக்கொண்டு நின்றிருந்த இளந்தீரனை ஆதிரா தீர்க்கமாகப் பார்த்தாள்.

அப்படியே கையை கீழேப்போட்டவன் “உங்கம்மா பேசுறது சரியில்லை. சொல்லி வை நான் எப்பவும் மனுஷனா இருக்கமாட்டேன்”என்று கொஞ்சம் கோபம் தணிந்தவனாகப் பேசினான்.

அதைக்கேட்டவளோ “இப்போ மட்டும் மனுஷனா இருக்கீங்களா அத்தான்?”என்று நறுக்கென்று கேள்வியை கேட்டாள்.

“ஆதிரா நீ ரொம்ப பேசுற”

“நீங்க பேச வைச்சிட்டீங்க சார். அம்மா சொல்லுறதை விடுங்க. இப்போ நான் சொல்லுறேன் இவளை வெளியே அனுப்புங்க”

“முடியாது. அவ என்னை நம்பி வந்திருக்கா!”

“அப்போ நான் யாரை நம்பி வந்தேன்?”என்று கூர்மையாக அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“ஆதிரா நீ வேணும்னே விதாண்டவாதமா பேசாத. நான் அவளைக் கூட்டிட்டு வந்தக் காரணத்தை ஏற்கனவே உன்கிட்ட சொல்லாட்டேன். திரும்பவும் இப்படி பேசினா என்ன அர்த்தம்?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. அவா இப்போ வெளியே போகணும். அவா இங்க இருந்தா நான் இங்க இருக்கமாட்டேன்”

“அவா இங்கதான் இருப்பா”

“அப்போ என்னை வெளிய போகச் சொல்லுறீங்களா அத்தான்?” என்று கேட்டவளின் உதடுகள் துடித்தது. அவளால் அதைத் தாங்கிக்க முடியாது உள்ளம் அதைவிட அதிகமாகத் துடித்தது.

“நீ அப்படி அர்த்தம் பண்ணிக்கிட்டன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை”

“அவா இங்க இருப்பான்னா நான் வெளியப்போகணும்னுதானே அர்த்தம்”

“நான் உன்னை வெளியே போகச்சொல்லவேயில்லை. நீயா அர்த்தம் பண்ணிக்கிட்டா நான் என்ன பண்ணமுடியும்?”

“அப்போ இங்கயே உட்கார்ந்து இவாக்கூட சக்களத்தி சண்டைப்போட சொல்லுறீங்களா?”

“கண்டதையும் உளறாத ஆதும்மா”

“உண்மையைச் சொன்னா இப்படி உளர்றேன்னு அர்த்தமா. என் வீட்டுல இவா இருக்கக்கூடாது. அவ்வளவுதான்”

“இது உன்வீடுன்னு குத்திக்காட்டுறியா?”

“என் வீடுன்னா நான் என் புருஷனோட வாழ்ற வீடுன்னு அர்த்தம். இனொருத்தி வந்து வாழ்றதுக்கு நான் எப்படி அனுமதிக்க முடியும்? உங்க கள்ளக்காதலியை இப்படி அசிங்கமா கூட்டிட்டு வந்து வாழ்வீங்க அதை எப்படி தங்கிக்க முடியும்”

“ப்ச்ச் அவ பிரச்சனையோட வந்திருக்கா இப்படி பேசாத ஆதிரா”

“அப்படித்தான் பேசுவேன். உங்க அசிங்கமா கள்ள உறவுக்கு நான் சாட்சியா விளக்குப்பிடிச்சுட்டு நிக்கணுமா?ச்ச்சீ அடுத்தவ புருஷன்கூட கள்ளத்தனாம வாழ வந்திருக்கா. நான் இப்படியான அசிங்கம் பண்ணினா நீங்க சும்மா விடுவீங்களா?”என்று கேட்டு முடிக்கவில்லை அவளது கன்னம் வின்னென்று வலித்தது.

அவளது கை தானாக கன்னத்தில் இருந்தது. இளந்தீரன் அவளை அடிப்பான் என்று அவள் கனவில்கூட நினைத்ததில்லை. ஆனால் அது இப்போது நிஜத்தில் நடந்ததும் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டாள்.

அவ்வளவுதான் மகேஷ்வரி இளந்தீரனை அடிக்கப்போய்விட்டார். ஆதிராதான் அவரைப் பிடித்து தடுத்தாள்.

“அம்மாஆஆ வேண்டாம் இந்த அத்தானுக்கு மறுபடியும் புத்தி மாறிப்போச்சு. இனி எனக்கு அவங்க வேண்டாம். நான் அவர்கிட்ட இருந்து பிரிஞ்சிடுறேன். இதுக்குமேல நான் ஒரு செகண்ட்கூட இங்க இருக்க விரும்பவில்லை”என்றவள் இளந்தீரனின் முகத்தைக்கூட பார்க்கப்பிடிக்காது வேகமாக வெளியே ஓடிவந்துவிட்டாள்.

அவளால் அவன் அடித்ததைக்கூட தாங்கிக்க முடிந்தது. ஆனால் மதுமதிக்காக அவளை அடித்ததைத்தான் தாங்கிக்கமுடியவில்லை. அது அவளுக்கு ரொம்ப கேவலமாக இருந்தது. அவளது கண்ணீர்கூட இப்போ நின்றுவிட்டது.

இளந்தீரன் அவளை அடிக்கணும்னு அடிக்கலை. அவளையே அவள் அசிங்கமா குறைச்சிப்பேசவும் தாங்கிக்க முடியாது அடித்துவிட்டான்.

அவ்வளவுதான் அதுக்கப்புறம் யாருமே அவன் முன்னாடி நிக்கல. எல்லோருமே வெளியே வந்துவிட்டனர். கவிதா விஜயராஜ் உட்பட மொத்தமாக அங்கிருந்து அவன்கூடபேச விரும்பாது வந்துவிட்டனர்.

இளந்தீரன் மதுமதியோடு அந்த வீட்டில் தனியாக நின்றான்.!