அநாயகனே-4

அநாயகனே-4

அநாயகனே-4

ரகுவரன் அந்தப்பக்கம் போனதும் மதுமிதா இளந்தீரன்ன் கொடுத்த கரும்பைக் கடித்துப் பாதி ருசிபார்த்தவள், அதை அப்படியே அவனது கையில் கொடுத்துவிட்டாள்.

மதுமிதா கடித்துக் கொடுத்த கரும்பை தனது கையில் வைத்திருந்தவனுக்கு அது ஏதோ பொக்கிஷம் போல இருந்தது. அவள் கடித்தயிடத்தில் தானும் கடித்து சாப்பிட்டு சுவைத்தவனுக்கு,ஏதோ அவளையே கடிச்சு சாப்பிட்டமாதிரி பீல்பண்ணினவன் அவளை பார்த்தாவறே மீண்டும் கடித்தான்.

அவனது உணர்வைப் புரிந்தவளுக்கு வெட்கம் பிடுங்கித்திங்க போடா என்று சைகை செய்துவிட்டு பொங்கலை கிண்டுறமாதிரி குனிந்துக்கொண்டாள்.

“ஏய் என்னபண்ற?” என்று சட்டென்று அவளது இடுப்பில் கையைப்போட்டு பிடித்தான். அதில் அதிர்ந்தவள் எங்க அப்பா பாத்துட்டாங்களோ?என்று வேகமாகத் திரும்பி பார்த்தாள்.

அங்கே இருந்த கொண்டாட்ட மனநிலையில் யாரும் யாரையும் கவனிக்கும் நிலையில் இல்லை என்பதால், இவர்களது காதல் விளையாட்டை யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

சிவானந்தனோ அங்கு கட்சிக்காரர்களோடு பேசிக்கொண்டிருக்க,அவளது அம்மாவோ அங்கே சுத்தி சுத்தி ஒவ்வொரு இடமாக நின்று பேசி,போட்டோ எடுப்பதில் பிஸியாக இருந்தார். அங்கே இருந்தவர்களுக்கும் அதனால் இவர்களது காதல் நாடகம் அவர்களுக்கு தெரியவில்லை. 

ஆனால் ரகுவிற்க்கு இதெல்லாம் தெரியும் .இவர்கள் காலேஜ் படிக்கிற நாட்களிலிருந்து காதலிக்கிறாங்க என்பதும் தெரியும், இப்போதும் காதலிக்கிறாங்க, கல்யாணம் வரைக்கும் யோசிக்கத்தொடங்கிட்டாங்க என்பதுவரைக்கும் அவர்களது ரகசியங்கள் பலதையும் விரல்நுனியில் வைத்திருந்தான்.

அதனால் தூரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தான்.இவர்கள் தனியாக பேசும் போது எங்கேயாவது ஒதுங்கி போய்விடுவான். ஆனாலும் அவர்களை கவனித்துக்கொண்டுதான் இருப்பான். என்னதான் இளந்தீரன் உயிர்நண்பன் என்றாலும் அவன் பழகிக்கொண்டிருப்பது தன்னுடைய மாமா மகளல்லவா!அந்தப்பாசம்தான்!

ஒருவழியாக எல்லோரும் பொங்கல் வைத்துமுடித்து, பத்திக்கைகாரர்களுக்கு போட்டியும் கொடுத்துவிட்டு, வீட்டுக்குப்போக ரெடியாகி கார் நிற்கும் இடத்திற்கு வந்தார்கள்.

அதற்குள் இளந்தீரன் தனது கட்சி தொண்டர்களிடம் முக்கியமான வேலையை பற்றிப்பேசிக்கொண்டிருந்தான்.

அங்கே வந்த மதுமிதாவும் அவன் அருகில் வந்து நிற்கவும் அந்த வழியாக ஜெயசந்திரனின் கார் வந்தது. அவர்கள் கோவலுக்குப் போகும் வழியில்தான் அந்த பொங்கல்விழா நடக்கும் திடலும் இருந்தது.

ஏற்கனவே அந்த இடத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், போலீசார் வந்து எம்.எல்.ஏ கோவிலுக்குப் போகிறார், இந்த நேரத்துல இங்க வந்து இவ்வளவுகூட்டத்தை சிவானந்தன் கூட்டிவைச்சிருக்கார் என்று டிராபிக்கை கிளியர் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

முதல் காரில் ஜெயச்சந்திரன் அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் சங்கரியத்தாவும் இருந்தார்கள்.

அவர்களுக்கு பின்னாடி வந்த காரில் ரவீந்திரன் சங்கவியோடு, ஆதிரா உட்கார்ந்திருந்தாள்.

போலீசார் நிறையபேர் வந்து அங்கிருந்தக்கூட்டத்தை விரட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்த இளந்தீரன், என்ன நடக்கிறது என்று கவனித்தான்.

அப்போது ஜெயசந்திரனின் காரைப்பார்த்ததும் யாரெல்லாம் இருக்காங்க என்று பார்த்துவிட்டு. இரண்டு கார்லயும் தனக்குப் பிடிக்காதவங்கதான் இருக்காங்க என்றதும், இளந்தீரன் நக்கலாக சிரித்துவிட்டு, பக்கத்தில் நின்றிருந்த மதுமிதாவின் கையைப்பிடித்து இழுத்து தன்பக்கமாக நெருக்கமாக நிற்கவைத்தான்.

அதைப்பார்த்ததும் ஜெயசந்திரன் அவனை அமைதியாகப்பார்த்தார். எப்போதுமே அவர் தனது உணர்வுகளை வோளிப்படுத்தாமல்தான் பொறுமையாக சமாளிப்பார்.

இப்போதும் அதுபோலவே அமைதியாக இளந்தீரனைப் பார்த்தவர் லேசாக உதடுவிரித்து சிரித்தார்.

அதில் இளந்தீரன் காண்டானதுக்கூட பிரச்சனையில்லை. 

ஆனால் அவர் பக்கத்தில் இருந்த மகேஷ்வரிதான் ரொம்பவும் காண்டாகிவிட்டார்.

என்ன திடீர்னு இவன் இப்படி பண்றான் என்று மதுமிதா அவன் பார்வை போகும் திசையை அவதானித்தாள்.

அங்கே ஜெயச்சந்திரன் குடும்பம் காரில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும், அவளுக்குமே அவர்களை வெறுப்பேத்தி பார்க்கணும் என்று எண்ணம் தோன்றியது.

உடனே மதுமிதா வேண்டுமென்றே அவனது ஒற்றைத்தோளில் இரு கைகளையும்போட்டுக் கோர்த்துப் பிடித்துக்கொண்டு இவர்களைப் பார்த்து 

ஏளனமாக சிரித்தாள்.

அவளுக்கு இளந்தீரனுக்கும் ஜெயசந்திரனின் குடும்பத்திற்கும் உள்ள பிரச்சனை நல்லவே தெரியும் என்பதால் வேண்டுமென்றே அவனோடு மிகநெருக்கமாக இளைந்தாள்.

அங்க இளந்தீரனையும் சிவானந்தனையெல்லாம் பார்த்ததும் மகேஸ்வரி கோபத்தில் தனது கணவனிடம் திட்டிக் கொண்டிருந்தார்.

“அங்க என் மகளையும் மருமகனையும் கேவலமா திட்டிட்டு இங்க வந்து எப்படி பொங்கல வைச்சு கொண்டாடிட்டிருக்கான் பாருங்க. இதுக்குத்தான் தோள்மேலயும் மடிமேலயும் போட்டு சின்ன மருமகன்னு ஆசை ஆசையா பார்த்துப் பார்த்து வளர்த்தீங்களா? இப்போ பாருங்க வளத்தக்கிடா மாருல பாயும்னு சொன்னதுக்கேற்ப இவன் உங்களையே எவ்வளவு கேவலமா பார்க்கிறான். இந்த பத்து வருசமா இப்படித்தான் துள்ளிட்டுத் திரியுறான். அதுவும் நமக்கு ஆகாத எதிர்க்கட்சிக்காரனுங்கக்கிட்ட போய் கூட்டு சேர்ந்துகிட்டு நம்மளையே எதிர்த்து நிற்கிறான் பாருங்க.இவன் எல்லாம் எங்க உருப்பட போறான். இப்படியே உருப்படாமல் நாசமா தான் போவான். நம்ம கிட்ட வந்து ஒரு நாள் கையேந்திட்டு நிக்கணும் அப்போதான் டனக்கு அறிவெல்லாம் வரும்”என்று வாய்க்கு வந்ததைப் பேசி சாபமிட்டுக்கொண்டிருந்தார்.

அதைக் கேட்டதும் ஜெயச்சந்திரனுக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே திரும்பி மகேஷ்வரியை முறைத்தவர் “ உனக்கு அறிவு ஏதாவது இருக்காடி?இப்படி சாபம் கொடுக்கிற? அவன் சின்ன பையன் ஏதோ தெரியாம பண்ணிட்டிருப்பான் அதுக்காக இப்படி என்ன வேணும்னாலும் பேசி சாபம் தருவியா? அவனும் ஒரு நாள் எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டு வருவான். அப்போ நம்மகிட்ட தானாக வருவான்.அவன் புரிஞ்சுக்கிட்டாலும்சரி புரிஞ்சுக்காமல் இப்படெயே இருந்தாலும் சரி. அந்தக் கட்சியிலே அவனுக்கு ஒரு நல்ல பதவியும் இடமும் கிடைச்சா நல்வதுதானே. அவன் விரும்பிய காட்சியிலயே நல்லா வளர்ந்துட்டு வாழ்ந்துட்டுப் போகட்டுமே. எனக்கு எதிரா என் மருமகன் எம்எல்ஏ எலக்க்ஷன் நின்னு ஜெயிக்கிறான்னா அதைவிட எனக்கு வேற என்ன சந்தோஷம் இருந்திடப்போகுது. என் தங்கச்சி பையன், என் இரத்தம் உறவு, அவனும் அரசியலில் முன்னேறி வரட்டுமே! அதுக்காக சந்தோஷம்தான் பாடணும். நம்ம வருத்தமோ கோபமாகவே பேசி அவனை சபிக்கக்கூடாது” என்று தனது தங்கை மகனுக்காக வக்காலத்து வாங்கி பேசினார். 

அதைக்கேட்டதும் மகேஷ்வரிக்கு ஆற்றாமையாக வந்தது. இந்த மனுஷன் திருத்தவேமாட்டாரா?இன்னும் தங்கச்சி மகன் மேலுள்ள பாசம் குறையவேயில்ல போல. அவனுக்காக இவ்வளவு பேசுறாரு என்று வருத்தப்பட்டார்.

“அதான பார்த்தேன். நாங்க என்ன சொன்னாலும் உங்க காதுல ஏறவேசெய்யாதே. உங்க கண்ணுல உங்க மருமகனுக்கு மட்டும் தனியா ஒரு பாசம் வந்து ஒட்டிக்குமே. யப்பா நாங்க இப்போ எப்படி பேசினாலும் அது தப்பாதான் தெரியும்.நீங்க இரண்டுபேரும் எப்படியோ போங்க. அவன் இதுவரைக்கும் உங்களை எதிர்த்துதான் நிக்கிறான். இனி உங்க முதுகுல வந்து குத்தாம இருந்தால் சரிதான். அப்புறம் என்கிட்ட வந்துதானே புலம்பிட்டிருப்பீங்க அப்போ வைச்சிக்கிறேன் உங்களை”என்றுவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார். 

சங்கரியாத்தாவால் இப்போ மருமகளை சத்தம்போட முடியாது. அவன் பண்றதும் அப்படித்தானே இருக்கு, அவனோட நிக்கிற மதுமிதாவைப் பார்த்து வேதனைப்பட்டார்.

“அந்த சிவானந்தனின் மகள்தானே இது. அவனே மாதிரியேதான் புத்தியும் இருக்கும்போல. நம்ம காருக்குள்ள இருக்கோம்னு தெரிஞ்சே இப்படி நிக்கிதே. இதுல அவன் அவளைக் கல்யாணம் வேற பண்ணிக்கிட்டான்னா அவ்வளவுதான் இப்போ இருக்கிற தற்காலிகப்பிரிவு நிரந்தரமாகிடும். இளந்தீரன்னு ஒரு புள்ளை எங்கக் குடும்பத்துல இருந்தான்னு எல்லாரும் மறக்கிற மாதிரியே பண்ணிடுவா. சதிகாரி!இவ ஒழிஞ்சிப்போகணும் முதல்ல,அப்போதான் என் பேரன் உருப்படுவான்”என்று வேதனையோடு பார்த்தார்.

அவரைவிடவும் அதிகவேதனையோடு ஆதிரா அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது கையைப்பிடித்த சங்கவிக்கு தங்கைக்கிட்ட என்ன சொல்லவென்று தெரியாது அமைதியாகிவிட்டாள்.

ஆதிரா மனசு வெதும்பி போய் ,மெல்லவும் முடியாது சொல்ல முடியாது அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

ஆதிராவுக்கு இளந்தீரனைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு இப்போதும் ஆசையுண்டுதான். ஆனாலும் அவனுக்கு மதுமிதாவைத்தானே பிடிச்சிருக்கு, அவளைத்தானே காதலிக்கிறான் என்று நினைக்கும்போது மனசு அப்படிமே ஏங்கித் தவிக்கிறது. 

இனி அவன் நம்ம சின்னத்தானாக மாற வாய்ப்பயில்லை என்று தெரிந்தும் கானல்நீருக்காக பரிதவிக்கிறாள்.

ரவீந்திரனுக்கோ கீழே இறங்கிப்போய் இளந்தீரனுக்கும் மதுமதிக்கும் ஆளுக்கு இரண்டு அடிப்போட்டால் என்னென்றளவுக்கு கோபம் வந்து முறைத்துப்பார்த்தான்.

ஆதிரா பார்க்கிறாளென்று தெரிந்தே மதுமிதா வேண்டுமென்று அவன் தோளின் மீண்டும் கையைப்போட்டு பிடித்துக்கொண்டு நின்றாள்.

அவளுக்கு இளந்தீரனைப் பத்தியும் தெரியும்,ஆதிராவைப் பத்தியும் தெரியும். அதனால்தான் இவன் என்னைக் காதலிக்கிறான், இவன் எனக்கானவன் பார் என்ற உரிமையைக் காண்பிக்கவே அப்படி நெருங்குகிறாள் 

இளந்தீரன் இப்போது ஆதிராவைப் பார்த்தான். அவள் கண்களில் தெரிந்த உணர்வைப் படித்தவன் ஒரு நொடி தடுமாறினாலும், உடனே தன்னை நிலைப்படுத்திக்கொண்டு மதுமிதாவை காதலவடு பார்த்து சிரித்தான். அவளும் சேர்ந்து சிரிக்க ஆதிரா தனது கண்களை திருப்பிக்கொண்டாள்.

அதன்பிறகு கார் அங்கிருந்து நகரும்வரைக்கும் ஆதிரா இளந்தீரனையும் மதுமிதாவையும் திரும்பிப் பார்க்கவேயில்லை. ஆனால் அவள் மனதோ துடிக்கும் துடிப்பை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அது எதற்காக துடிக்கிறது என்பதை ஆதிரா மட்டுமே அறிவாள்.

சங்கவியோ ரவீந்திரனைப் பார்த்து “அத்தைக்கு இவங்க பழகிட்டிருக்கிறது தெரியுமா?” என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்டாள்.

“தெரியாது நீ கேள்விக்கேட்டுட்டல்ல இனி தெரியவைச்சிடுவோம்”என்றவன் தனது போனை எடுத்து இளந்தீரனையும் மதுமிதாவையும் சேர்த்து தனது போனில் ஒரு போட்டோவை எடுத்துவைத்தான்.

அதைப்பார்த்த ஆதிரா அவனது கையில் இருந்து போனை வாங்கி, அந்த போட்டோக்களை வேகமாக டெலிட் பண்ணினவள்”இது சின்னத்தானோட பிரவைசி. அவருக்கும் அந்தப்பொண்ணுக்குமான காதல். அதுல நம்ம தலையிட்டு பிரச்சனை பண்றதுக்கு என்ன இருக்கு?அவங்கள அவங்கப்போக்குல விடுங்க. அவங்க வாழ்க்கையை அவங்கப் பார்த்துப்பாங்க. ஏன் நீங்க இதை பிரச்சனையா பார்க்குறீங்க?

அந்தப்பொண்ணோடதான் சின்னத்தான் வாழணும்னு ஆசைப்படுறாங்க, அவங்ங வாழட்டுமே. இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?”என்று கோபத்தில் கேட்டாள்.

அதைக்கேட்ட சங்கவியும் ரவீந்திரனும் ஒன்னும் புரியாது முழித்தனர்.

சங்கவிதான் கோபத்தில் “உனக்கென்ன பைத்தியமாடி பிடிச்சிருக்கு?அவங்களுக்காக நீ பேசுற. அவனைத்தான் உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க அத்தையும் நம்ம அப்பாவும் பேசியிருக்காங்க. அவன் என்னடான்னா அந்த மதுமதியோட சுத்திட்டிருக்கான். நீ அதைப்பத்தி கவலைப்படாம இப்படி பேசுற?”

“நான் எதுக்கு கவலைப்படணும். அவங்க காதலிச்சா கல்யாணம் பண்ணிப்பாங்க, அவங்க வாழ்க்கையைப் பார்த்துட்டுப் போவாங்க. எனக்கானவன் யாரோ அவன் கண்டிப்பா என்னைத் தேடிவருவான். என்னைக் கல்யாணம் பண்ணிப்பான். இந்த சின்னத்தானத்தான் கட்டிப்பேன்னு நான் என்ன ஒத்தைக்காலுலையா நிக்கிறேன். காலையில் அம்மா என்ன சொன்னாங்கன்னு கேட்டல்ல, அம்மாவுக்கு எப்பவுமே சின்னத்தானுக்கு என்னைக் கட்டிக்குடுக்க விருப்பம்கிடையாது. அதனால் கண்டிப்பா எனக்கு வேறொரு நல்ல பையனா பார்த்துக் கட்டி வைப்பாங்க. நீங்க உங்க வாழ்க்கையைப் பாருங்க மிஸ்டர் அண்ட் மிஸஸ் ரவீந்திரன்”என்று முகத்தில் அடித்தாற்போல் அக்கா என்றும் பார்க்காது பேசினாள்.

“நீ இப்படித்தான் பேசுவன்னு எங்களுக்குத் தெரியும்டி. ஆதிரா இளந்தீரனுக்காக சப்போர்ட் பண்ணி பேசலைன்னாதான் ஆச்சர்யம். அவனும் நீயும் அப்படி சண்டைப்போட்டுக்கிட்டாலும் நீ அவனை விட்டுக்கொடுத்ததேயில்லையே. அவன்தான் மாடுமாதிரி வழிமாதிரி போயிட்டான். அப்படியிருந்தும் அவனுக்காக இன்னும் சப்போர்ட் பண்ணி பேசுற பாரு. உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடி. அப்படி என்னடி உனக்கும் அப்பாவுக்கும் அவன் மேல அவ்வளவு பாசம். ஏதாவது ஒரு நல்லதாவது உங்களுக்குப் பண்ணிருக்கானா?அவரு சின்ன மருமகனேன்னு பாசத்துல பொங்குறாரு. நீ சின்னத்தான்னு அவனை விட்டுக்கொடுக்காம பேசுற. உங்களையெல்லாம் கல்லைக்கட்டி கடல்ல இறக்கினாலும் திருத்த முடியாது”என்று திட்டிக்கொண்டே திரும்பி இளந்தீரனை முறைத்துப் பார்த்தாள்.

‘என் தங்கச்சி கண்ணுமுன்னாலயே அவளைக் கொஞ்சிக்கிட்டா இருக்க? இதுக்கான தண்டனை நாங்க தரமாட்டோம்டா இந்த வாழ்க்கையே உங்களுக்குத் தரும்டா என்று ஆளாளுக்கு அவங்க இரண்டுபேரையும் பார்த்து திட்டிக்கொண்டும் மனதிற்குள்ளாக சபித்ணுக்கொண்டும்தான் அன்று கோவிலுக்குப் போனார்கள்.

இவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு சபித்தார்களோ அதைவிட அதிகமாக ஜெயசந்திரனும் ஆதிராவும் இளந்தீரனுக்காக மனதார அவன் நல்லாயிருக்கணும், அவனது வாழ்க்கை சந்தோசமாகவும் வெற்றியாகவும் அமையனும் என்று சாமியிடம் கைக்கூப்பி வேண்டிக்கொண்டிருந்தார்கள்!

பாருடா உனக்காக உண்மையா உருகி உருகி வேண்டிக்கொள்கிற இரண்டு ஜீவன்களும் இங்கு இருக்காங்க!