அநாயகனே-1

அநாயகனே-1

அநாயகனே-1

இளந்தீரன் தனது காதில் விழுந்த பக்தி பாட்டை கேட்டு மெதுவாக உருண்டுப்படுத்தவன், வீடு முழுவதும் சாம்பிராணி வாசம் வரவும் கண்ணைத் திறந்துப் பார்த்தான்.

ஆஹா இன்னைக்குப் பொங்கலுல்ல. நமக்கு வேற ஏகப்பட்ட வேலையிருக்கே என்று வேகமாக எழுந்து உட்கார்ந்தான். உடனே நிமிர்ந்து மணியைப் பார்த்தான்.

மணி ஆறைத்தாண்டியிருக்கவும் அச்சோ ஏழு மணிக்கு திடல்ல இருக்கணுமே!இந்த ரகுவரன் பரதேசி வேற போன் பண்ணி எழுப்பிவிடாமல் இருந்துட்டானே. அவனைப் போய்தான் மண்டையில நாலு தட்டுத்தட்டி ஏன்டா போன் பண்ணலைன்னு கேட்கணும் என்று நினைத்தவன் வேகமாகப் போய் குளிச்சிட்டு வந்தான்.

இளந்தீரன் குளித்து முடித்துவிட்டு தனது கட்சிக்கரை போட்ட வேட்டியை எடுத்து கட்டியவாறே தன்னைக் கண்ணாடியில் பார்த்தான்.

இளந்தீரா நீ அப்படியே ஒரு தலைவன் மாதிரியே இருக்கடா!உன்னை மாதிரி ஒருத்தன் எம்.எல்.ஏவாகி அப்படியே இந்த ஊருக்குள்ள நடந்துப்போனால் எப்படி கம்பீரமா இருக்கும் என்று யோசித்தவனுக்கு உள்ளுக்குள் ஒருமாதிரி வெறித்தனமான அரசியல் உணர்வு பொங்க அப்படியே கண்ணாடி தன் உருவத்தை கொஞ்ச நேரம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். 

இளந்தீரா! இப்பவே ஒரு ஒளிவட்டம் உன் தலைக்குப் பின்னாடி தெரியுதே! நீ பெரிய தலைவனையாருவடா!தலைவன் என்ன தலைவன் அப்படியே சீ.எம் ஆகிடுவடா!அந்த முகக்கலை இப்பவே தெரியுதேடா!என்றவாறே அப்படியே கண்ணாடி முன் நின்று தனதுக்குத் தானே நெட்டி முறித்து திருஷ்டி சுத்தியவன் ஒரு பறக்கும் முத்தமும் கொடுத்தான்.

“யப்பா என்னா அழகா இருக்கடா இளந்தீரா! இந்தப் பொங்கலே உன்னாலதான் கலை கட்டுதுபோ!இதை மட்டும் அவ பார்க்கணும் ஓடிவந்துக் கட்டிப்டிடிச்சுப்பாளே! எங்க இன்னைக்குத்தான் சுத்தி ஆயிரக்கணககானபேரு இருப்பாங்களே எங்க கட்டிப்பிடிக்க. அவளை சரியா பார்க்கக்கூட முடியாது. அதுவுமில்வாமல் அவங்கப்பாக்கூடல்ல வருவா!ஆனாலும் ஓரக்கண்ணால பார்த்து ரசிப்பா அது போதும். இன்னைக்கு தரமுடியாத கட்டிபிடி வைத்தியத்தையும்,முத்தத்தையும் இன்னோரு நாள் வசமா வாங்கி நம்ம கணக்குல ஏத்திடுவோம்”என்று நினைத்தவனுக்கு முகம் அப்படியே பூரித்து பிரகாசித்தது.

அதில் அவனது கம்பீரமும் கலையும் அதிகமானதுபோல தோன்றவும் இந்த வேலையை ஒத்த கையில் வேட்டி தூக்கிப் பிடித்துக் கொண்டு,அப்படியே ராஜநடை நடந்து வெளியே வெளியே வந்தான். 

அவ்வளவுதான் அவன் அங்கே இருந்தவர்களைப் பார்த்து ஒரு நொடி அதிர்ச்சியானவன் அதன்பின் கண்டுக்காத மாதிரியே, சட்டைப்பையில் இருந்தக் கண்ணாடியை போட்டுவிட்டு, கெத்தாக எல்லோரையும் பார்த்தான்.

அவனது அம்மாச்சி சங்கரியத்தா அவனைப் பார்த்து சிரித்தவர் “இளந்தீரா இப்போதான் எழுந்து குளிச்சிட்டு வெளியே வர்றியாக்கும்?இந்ந வேட்டி சட்டையில நல்ல கெம்பீரமா உங்க மாமானாட்டமே இருக்கியே. அப்படியே அவனை மாதிரியே வாழ்க்கையில ஜெயிச்சிடு”என்று சந்தோசமாகச் சொன்னார்.

அவ்வளவுதான் அவனது முகம் மாறிவிட்டது. அதை அங்கிருந்த அவனது அண்ணன் ரவீந்திரனும் அண்ணி சங்கவியும் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர். அவர்களைக் கண்டுக்கொள்ளாதவன் மீண்டும் முகத்தைசிரித்த மாதிரியே வைத்துக்கொண்டான்.

“அடடே சங்கரியாத்தா என்ன இந்தப்பக்கம் வந்திருக்க?என் எதிரியோட சேர்த்துக்கோர்த்து என்னை பேசாதன்னு எத்தனை நாள் சொல்லிருக்கேன் அம்மாச்சி. அவரு ரொம்ப நல்லாயிருக்காருபோல? அதுதான் எகத்தாளாமா இப்பபடி பேசுற. என்ன இருந்தாலும் நீ என் அம்மாச்சியாச்சே அதனால பொங்கல் அதுவுமா உன்கிட்ட சண்டைப்போடாமல் போறேன். உனக்கும் உன் மவன் அதாவது என்எதிர்கட்சாத் தலைவர் குடும்பத்துக்கும் என்சார்பிலயும் எங்க கட்சி சார்பிலயும் இனிய பொங்கல் வாழ்த்துகளை சொல்லிக்கிறேன். வர்றட்டா”என்றவன் அந்தப்பக்கமாகத் திரும்பி நடந்தான்.

அங்கே அவனது அண்ணனும் அண்ணியும் இவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கவும், அதை கவனித்தவன் “அடடே எம்.எல்.ஏ ஜெயசந்திரன் பீ.ஏ ரவீந்திரன் சார் நீங்களா?என்ன உங்கக் காத்து எங்கவீட்டுப் பக்கமா வீசிருக்கு?உங்களைத்தான் கல்யாணம் பண்ணி பொண்டாட்டி வீட்டோட வாழ அனுப்பிட்டோமே. நல்ல மருமகனா அங்க குடும்பம் நடத்துறதை விட்டுட்டு பிறந்த வீட்டுல என்ன பண்ணிட்டிருக்க. புகுந்த வீட்டுல பொங்கலை வைச்சோமா அதை நக்கித் திண்ணோமான்னு இருக்காமல் இதென்ன சின்னப்பிள்ளைத்தனமா அம்மாவை பார்க்க ஓடிவந்திருக்க?”

என்று நக்கலா கேட்டுவிட்டு உதட்டை வளைத்துச் சிரித்தான்.

“டேய் இது என் வீடுடா என் வீட்டுக்கு நான் எப்போ வேணும்னாலும் வருவேன் அதை ஏன்டா நீ கேக்குற? ஏதோ நான் இந்த வீட்டுக்கு வராத மாதிரியே பேசுற. எனக்குன்னு ஒரு வேலை என் மாமா குடுத்திருக்காங்க. அதை ஒழுங்கா செய்யவேண்டாமா. அப்போ நேரம் கிடைக்கும்போதுதான் வரமுடியும். என்ன நான் வீட்டோட மருமகனா இருக்கிறேன்னு குத்திக்காட்டி நக்கலா பேசுறியோ?பேசு பேசு. உனக்கு பின்னாடி இருக்கிறவனுங்க குணம்தானே உனக்கும் இப்போ இருக்கும்”என்று அவனும் கொஞ்சம் காட்டமாகவே தம்பிக்கு பதில் சொன்னான்.

“பார்றா அண்ணனுக்கு கோபமெல்லாம் வருது. உன்னை நான் கேள்விக் கேட்காம வேற யாரு கேட்பாங்களாம். இது என் வீடு உன்னைத்தான் கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சே. நீ தான் உன் மாமனார் வீட்டோட போய் செட்டில் ஆகிட்டியே. அப்புறம் எதுக்கு இந்த பக்கம் வந்திருக்க? இங்கே என்ன நிலவரம் அப்படி இப்படின்னு பாக்குறதுக்கு உன் மாமனார் அனுப்பிச்சு விட்டாரா என்ன?அதுதான் கேட்டேன். அந்தாளு அப்படி செய்யக்கூடியவருதானே”

இவன் இப்படித்தான் பேசுவான் என்று தெரியும் என்பதால்தான் சங்கவி எதையுமே கண்டுக்காதமாதிரி அமைதியாக தனது போனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதையும் இளந்தீரன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். 

இவன் குணமே இப்படித்தானே என்று ரவீந்திரனும் அடுத்து எதுவும் பேசாது “அம்மாஆஆஆஆஆ”என்று உள்ளே இருக்கும் தன்னுடைய அம்மாவை கூப்பிட்டான்.

இவர்கள் பேசுறதை ஏற்கனவே கிட்சனுக்குள்ள இருந்துக் கேட்டுக்கொண்டிருந்தவர், ரவீந்திரன் அம்மாவென்று கூப்பிட்டதும் வெளியே வந்தார்

அங்கே நின்றிருந்த இளந்தீரன் அவரைப் பார்த்ததும் “வாங்க ராஜமாதா. வந்து உங்க மூத்த மகன் வழக்கைத் தீர்த்து வைங்க ராஜமாதா”என்று நக்கலாகச் சொல்லிவிட்டு சிரித்தான்.

அவனது அம்மா கவிதாகுமாரி “ஏன்டா அவனே இன்னைக்குத்தான் நேரம் கிடைச்சிருக்குன்னு நல்ல நாள் அதுவுமா வீட்டுக்கு வந்திருக்கான். அவன்கிட்ட நல்லபடியா அன்பா பேசுவன்னு பார்த்தால், நீ அதுஇதுவுமா ஏதேதோ பேசிட்டிருக்க. நீ உன் லொடலொட வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருந்தாலே போதும் நீ எதுவும் பேசாத” என்றவர் பெரிய மகனிடம் திரும்பி “இப்பதான் பொங்கல் வைச்சு எல்லாம் இறக்கிருக்கு. எல்லாரும் வந்து சாமியை கூப்பிட்டு அப்படியே சாப்பிட உட்காருவோம் வாங்க. சங்கவி வாம்மா. மூத்த மருமகள் நீதான் விளக்கு ஏத்தி வைச்சு பூஜை பண்ணனும் “என்று அவளையும் சேர்த்துக்கூப்பிட்டார்.

சங்கவி எழுந்து பூஜை ரூமுக்குள்ளே போகவும்,அ வள் பின்னாடியே ரவீந்திரன் போனான்.

“க்கும். அதெல்லாம் உங்கக்கூட இருந்து பொங்கல் கொண்டாட முடியாது.நான் வெளியே போறேன். இனைக்கு எங்க தலைவரோட சேர்ந்து ஆயிரம் பொங்கல்வைச்சு மக்களோட மக்களா கொண்டாட போறேன். அங்க எனக்காக என் ஃபிரண்ட்ஸ், என் கூட்டம்னு எல்லோரும் எனக்காகக் காத்திருக்காங்க. வீட்டுக்குள்ள பூஜையை வைச்சிக்கிட்டு வா போன்னு சொல்லி, ஒரு வருங்கால தலைவரை இப்படி உங்க வீட்டுக்குள்ள அடக்கி வைக்க பார்க்காதீங்க. நாங்கெல்லாம் வேற மாதிரியான ஆளு” என்று கெத்தாக சொன்னவன், அப்படியே திரும்பி ரவீந்திரனையும் சங்கவியையும் பார்த்தான். 

கடவுளே வர வர இந்தக் கொசுத்தொல்லைத் தாங்க முடியல என்ற ரீதியில் பார்த்தார்கள்.

“அதைப் பார்த்த இளந்தீரனுக்கு கோபம் வந்தது. ஆனாலும் எல்லா தலைவர்களையும் உலகம்தான் கொண்டாடும் வீட்டுல கண்டுக்கமாட்டாங்க. நானும் தலைவராகி இதே வீட்டுக்குள்ள கெத்தாநிப்பேன். அப்போ தெரியும் நாங்க யாருன்னு”என்று காலரைத் தூக்கிவிட்டான்.

இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை என்று இருவரும் முகத்தை திருப்பிக் கொண்டார்கள். 

சங்கரியாத்தாதான் இளந்தீரனின் கையைப் பிடித்து “அம்மாதான் சாமிக்கூம்பிடக் கூப்பிடுறாள்ல, வா வந்து சாமிகும்பிடு. சாமிகும்பிடாமல் எங்கே போற? இங்கே உங்க மாமாங்காரன் உனக்கும் சேர்த்துதான் பொங்கலுக்கு படிகொடுத்திருக்கான். அவங்களுக்கும்

கொடுத்திருக்கான். அங்கயிருந்து பொங்கல்எல்லாம் செயது கொண்டு வந்திருக்கோம். இரு அதெல்லாம் சாப்பிட்டு வெளியே போய் உங்க தலைவர் உங்க கூட எல்லாம் பொங்கல கொண்டாடு" என்று சொன்னார்.

" என்ன சங்கரியாத்தா எனக்கு ஆர்டர் போடுற?இந்த வருங்கால எம்.எல்.ஏவைப் பார்த்து பொங்கல் சாப்பிட வா, பொங்கலு கிண்டவா, சாமி கும்பிடுன்னுலாம் சொல்லக்கூடாது. அதுவும் முக்கியமா என் எதிர்க்கட்சித் தலைவரும் உன் மவனுமான அந்த ஜெயசந்திரன் வீட்டுவயிருந்து வந்த பொங்கலை சாப்பிடுன்னு சொல்லவேகூடாது. எனனைப் பார்த்து நீ எப்படி அப்படி சொல்லலாம்? நானே என் கட்சிக்கொள்கையின்படி எதிர்க்கட்சிக்காரனுங்க முகத்திலக்கூட முழிக்க கூடாதுன்னு இருக்கேன். என்னைப் பார்த்து அவரு வீட்டு பொங்கல் சாப்பிடன்னு சொல்லுற?இதெல்லாம் நல்லாயில்லை சொல்லிட்டேன்”

“அதெல்லாம் ரொம்ப நல்லாயிருக்கும். நான்தான் பொங்கல் வைச்சேன். சாப்பிடாமலே நல்லாயில்லன்னு சொல்லக்கூடாது. வா சாப்பிட்டுட்டு சொல்லு”என்று வெள்ளந்தியாக சொல்லிவிட்டு அவனது கையைப் பிடித்து இழுத்தார்.

அதைக்கேட்ட சங்கவி பக்கென்று சத்தமாக சிரித்த்விட்டாள்.

அவளைப் பார்த்து முறைத்தவன் “டேய் அண்ணா உன் பொண்டாட்டின்னு பார்க்கமாட்டேன். ஆமா சொல்லிடடேன். அவா என் எதிரியோ மகள் அதை ஞாபகம் வைச்சு சிரிக்கச்சொல்லு”என்று மிரட்டியவன் சங்கிரியாத்தவைப் பார்த்து திட்டினான்.

அம்மாச்சி வாயை மூடிட்டு சும்மாயிரு. அந்த பொங்கல்ல விஷத்தை கிஸத்தை வைச்சு இந்த வருங்கால எம்.எல்.ஏவை சாய்ச்சுபுட்டாங்கன்னா என்ன பண்ணுறது?நோ நவர் அதெல்லாம் நடக்கக்கூடாது. ஏற்கனவே நம்மளைச் சுத்தி எதிரிங்கத்தான் இருக்காங்க. இதுலவேற எதிரி வீட்டுல இருந்துக் கொண்டுவந்து பொங்கலை சாப்பிடுன்னு க்டடாயப்படுத்தாத.இந்த இளந்தீரன் எப்பவுமே கெத்தாதான் நிப்பான். உன் மகன் வீட்டு பொங்கல்லாம் எனக்குக்ஷஒன்னும் வேண்டாம். நான் என் தலைவரோட பொங்கலை சிறப்ப கொண்டா போறேன். வர்றட்டா சங்கரியாத்தா”என்று அவரது கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி வைச்சிட்டு வெளியே வந்தான்.

அதைக் கேட்டதும் அங்கிருந்த எல்லோருக்குமே கோபம் வரத்தான் செய்தது. 

அதுவும் ரவீந்திரனின் மனைவி சங்கவிக்கு அவ்வளவு கோவம் வந்தது.தனது அப்பா இவனுக்கு பொங்கல்ல விஷம் வைச்சு அனுப்பிருப்பாருன்னு சொன்னதுக்காகவே ஓடிப்போய், இளந்தீரனின் தலையில நங்கு நங்குன்னு நாலு கொட்டு கொட்டணும்ன் தோணுச்சுது. ஆனாலும் தன்னை அடக்கிக் கொண்டு ரவீந்திரனை முறைத்தாள். 

அவனோ கண்களாலே அவளிடம் அமைதியாக இரு என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

அவனது அப்பா விஜயராஜ்தான் “என்ன இளா இப்படியெல்லாம் பேசுற. அவரு உன் தாய்மாமா. உன்னைத் தூக்கி வளர்த்தவறு அவரெல்லாம் அப்படி செய்யமாட்டாரு. உன்னோட இந்த நினைப்பையே மாத்து. அவருக்கப்புறம் நீதானே அவரு கட்சிக்கு மாவட்ட தலைவராவன்னு நம்பிட்டிருக்காரு அவரைப்போய் இப்படி பேசலாமா?அது தப்பு”என கடிந்துக்கொண்டார்.

சங்கவிக்கோ தனது அப்பாவை இப்படி சொன்னதைத் தாங்கிக்க முடியாமல் “இதுக்குத்தான் நான் இங்க வரமாட்டேன்னு சொன்னேன். இவன் எப்பவுமே எங்க அப்பாவை திட்டிக்கிட்டு எங்களை ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பான். எங்கப்பாவை சொந்த தாய்மாமன்னு நினைச்சா பேசுறான்? ஏதோ பரம்பரை எதிரி மாதிரி நினைச்சு பேசிட்டிருக்கான். ஆனால் எங்கப்பாவோ சின்ன மருமகள் மேல உயிரையே வைச்சிருக்கிறார். என் சின்ன மருமகள் அரசியல்ல பெரியாளா வருவான் பாருங்கன்னு எல்லாருக்கிட்டயும் பேசிட்டு இருக்காரு. உங்க தம்பி எங்க அப்பாவை எதிரியா பார்க்கிறது, இல்லாம ஏதோ இவன அவருக் கொலை பண்ணுறதுக்கு ப்ளான் பண்ற மாதிரியே பேசறான். இவனையெல்லாம் கொலை பண்ணனும்னா எங்க அப்பாக்கு எவ்வளவு நேரமாகும் சொல்லுங்க? தங்கச்சி பிள்ளைங்கன்னு பாசமா இருக்காங்க. அதைக்கூட புரிஞ்சிக்காது அறிவுக்கெட்ட ஜென்மமா இருக்கிறான். உங்கத் தம்பி பொங்கல் அன்னைக்கும் என்னை பொங்க வைச்சுட்டான்” என்று திட்டிக் கொண்டிருந்தாள்.

அதைக்கேட்டதும் இளந்தீரன் சத்தமாகச் சிரித்தான்.

என்னது உங்கப்பா என்னைக் கொல்லுணும்னு நினைச்ச செய்து முடிச்சிருப்பாரா?எவ்வளவு நேரமாகும்னு கேட்கிற?அதெல்லாம் இந்த இளந்தீரனை எவனாலையும் போட்டுத்தள்ளமுடியாது. அதுக்காகத்தான் நானே உங்கப்பாவை போட்டுத்தள்ளுற ப்ளான்ல இருக்கேன். உங்கப்பா நினைக்கட்டும் நான் அதைச் செய்தே முடிச்சிருப்பேன். யாருக்கிட்ட அதுக்காக நம்மக்கிட்ட தரிப்படையே கருக்கும்மா?உங்கப்பாவெல்லாம் நம்மளைத் தொடக்கூஎ முடியாது. உங்கப்பா மட்டுமில்ல வேற எவனலயும் என்னை நெருங்கமுடியாது. என்னைச் சுத்தி நெருப்பு வளையமாக நிக்கிறதுக்கு ஆயிரம்போர் உண்டு. அண்ணன் யாருதெரியுமா. அடுத்த எம்.எல்.ஏ. யாருக்கிட்டவந்து என்ன பிடைப் போட்டுட்டு இருக்கா பாரேன். அண்ணே உன் பொண்டாட்டியத்தான் உன்னால அடக்கமுடியாது. அவ வாயையாவது அடக்கிவை. சின்னபிள்ளைன்னு விட்டுட்டு போறேன். எனக்கு நிறையை வேலை இருக்கு வர்றட்டா”என்று டாட்டா காட்டிச் சொன்னவன் காலரைத் தூக்கிவிட்டு, பின்னங்காலை மடக்கி மேலத் தூக்கி வேட்டியைப் பிடித்துக்கொண்டு வெளியே நடந்தான்.

அதைப்பார்த்த சங்கவிக்கு கடுப்பென்றால் ரவிக்கும் அவன குடும்பத்துக்கும் அதிர்ச்சியாக இருந்தது!