அநாயகா-34
அநாயகா-34
ஜெயசந்திரனின் குடும்பமே சேர்ந்து இப்போ கோவிலுக்கு போயிருந்தார்கள்.
ஆதிரா அவங்க அப்பாவுக்கு பதிலாக அந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ கேண்டிடேட்டாக அவர்களுக்கு கட்சியிலிருந்து செலக்ட் செய்திருந்தார்கள்.
அதனால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக சாமி கும்பிட்டவிட்டு போகணும் என்றுதான் கோவிலுக்கு வந்திருந்தனர்.
போன எலக்ஷ்சன்ல இளந்தீரன் சிவானந்தனோடும் ரகுவரனோடும் சேர்ந்து ஜெயச்சந்திரனே எதிர்த்து, அவன் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தான். எப்பவும் போல சிவானந்தன் டெபாசிட் இழந்து ஜெயசந்திரனிடம் தோற்றுப்போனார்.
இந்த எலக்ஷ்ஸன்ல தனது மனைவி ஆதிராவிற்காக பிரச்சாரம் செய்ய எல்லாம் ஆயத்தம் பண்ணி வைச்சிருந்தான்.
அவனே இப்போ தன்னுடைய பொண்டாட்டிக்காக உருகி உருகி கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தான்.
இந்த வாழ்க்கையில் காலம் எப்போதும் மனிதர்களின் முகமுடியையும்,வேஷத்தையும் எப்படி தோலுரித்துக் காண்பிக்கிறது என்பதை புரிந்து கொண்டான் என்பதால் அவனுக்கு இப்போது கடவுளிடம் கொஞ்சம் பக்தி அதிகமாகியிருந்தது.
(இப்போவாவது பக்தி வந்து புத்தி தெளிஞ்சுதே இளந்தீரா!ரொம்ப சந்தோசம்)
சாமி கும்பிட்டு முடித்துவிட்டு உடனே அவளது மனு தாக்கல் செய்ய தேர்தல் அலுவலகத்திற்கும் போனார்கள்.
அவர்கள் அமைதியாக உள்ளே போக, அங்கே ஆரவாரத்தோடு சிவானந்தன்,மதுமதி ரகுவரன் என்று எல்லாரும் பெரிய கும்பலோடு வந்திருந்தார்கள்.
அவர்களைப் பார்த்ததும் ஆதிரா திரும்பி இளந்தீரனைப் பார்த்தாள்.
அவனோ உடனே மௌனமான ஒரு புன்னகேயோடீ ஆதிராவின் கையைப் பிடித்துக் கொண்டு முன்னாடி நடந்தான்.
அவன் ஆதிராவின் கையை இறுக்கமாக பிடித்துகொண்டு நடப்பதை கண்ட மதுமதி ஒருமாதிரி முகம் வெளிறிப்போய்விட்டது.
அப்படியே இருவரின் முகத்தில் இருந்தும் தனது கண்ணை நகர்த்தி அவர்களது கைகளைப் பார்த்தாள்.
அதை கவனித்த ஆதிராவோ இன்னும் நெருக்கமாக இளந்தீரனின் கையைப் பிடித்தவள, தனது தோளோடு அவனை உரசியவாறே நடந்தாள்.
அதை ராகுவரனும் திரும்பி பார்க்கத்தான் செய்தான். “இவனெல்லாம் செத்துப் போவான்னு நினைச்சுட்டிருந்தா இவன் என்ன அவன் மாமா பொண்ணையே கல்யாணம் பண்ணிட்டு, நம்ம முன்னாடி நடந்துவர்றானே” என்று தான் மனசுக்குள் யோசித்துக் கொண்டிருந்தான்.
அதற்குள் இளந்தீரன் “ஹலோ ரகுவரன் எப்படி இருக்கீங்க? என்ன வேட்புமனீ தாக்கல் செய்ய வந்தீங்களா? இந்த டைம் எலக்சன்ல யாரு நிக்கிற? உங்க மாமாவா நீங்களா?”எ ன்று நக்கலான தொணியில் கேட்டான்.
அவனும் இவனைப் பார்த்து கைய காட்டி “ஹலோ இளந்தீரா எப்படி இருக்கீங்க?இந்த தடவை நாங்க யாரும் தேர்தல்ல நிக்கலை. நாங்க இப்போ வேட்புமனு பண்ண தாக்கல் செய்ய வந்திருக்கோம். யாருக்குன்னு யோசிக்காதிங்க, என் பொண்டாட்டி மிஸஸ் மதுமதி ரகுவரனுக்காகத்தான் எங்க கட்சி சார்புல மனு தாக்கல் பண்ண வந்திருக்கோம். என் பொண்டாட்டி அவளைத்தான் எங்க கட்சி எம்.எல்.ஏ கேண்டிடேட்டா நிக்க வைச்சிருக்காங்க. நாங்க ஏற்கனவே வேட்பமனுவை தாக்கல் செய்து முடிச்சிட்டோம். நீங்க என்ன உங்க மனைவிய இந்த தொகுதியில எங்களுக்கு எதிரா நிக்க வைக்கிறீங்க போலிருக்கு வாழ்த்துக்கள் இளந்தீரா வாழ்த்துக்கள், ஆதிரா இளந்திரன்”என சத்தமாக சொல்லியவன் வாழ்த்துவதற்காக கையை நீட்டினான்.
அதைக் கேட்டதும் இளந்தீரனுக்கு உள்ளே கொஞ்சம் ஜெர்க்கானாலும், அதை வெளியே காட்டிக்காது “அப்படியா ரொம்ப சந்தோஷம் ரகுவரன். உங்களுக்கும் உங்க மனைவி மதுமதி ரகுவரனுக்கும் வாழ்த்துக்கள்” என சொன்னவன் கை கொடுத்துவிட்டு விலகிவந்தான்.
ஆனால் அவர்களைப் பார்த்த சிவானந்தனுக்குத்தான் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
அந்த ஜெயச்சந்திரனை படுக்க வைச்சுட்டு நம்ம எலக்சன்ல நின்னு ஜெயிக்கலாம்ன்னு பார்த்தா, இந்த இழவெடுத்தவன் அவனோட மகளையே கல்யாணம் பண்ணிட்டு, அவளேயே தேர்தல் நிக்கவைக்க மனுதாக்கல் பண்ண கூட்டிட்டு வந்து நிக்கிறான் பாரு . இவனுங்களை அன்னைக்கே போட்டு தள்ளிருக்கணும், விட்டு வைச்சது தப்பாபோச்சுதே”என மனசுக்குள்ளயேகருவிக்கொண்டிருந்தார்.
அவரது மனதிற்குள் என்ன ஓடுகிறது என்பதை சரியாக படித்த இளந்தீரன், தனது கண்களாலே சிவானந்தனை எச்சரித்தான்.
அவரோ கொஞ்சம் ஒதுங்கி நிற்க, அப்படியே ஆதிராவை பாதுகாப்பாக கூட்டிட்டுப் போய்வேட்பு மனுவை கொடுக்க ஆபீஸரில் முன்பாகபோய் நின்றான்.
அப்பொழுது ஆதிரா தனது கையில் உள்ளதை அவரிடம் கொடுத்துவிட்டு, இளந்தீரனைப் பிடித்து இழுத்து தன் பக்கத்தில் நிற்க வைத்தாள்.
அவனோ எதுக்கு இவா நம்மளை இழுத்து இவ்வளவீ பக்கத்துல நிக்கவைக்கிறா? எப்பவும் அவளுக்கு பக்கபலமாகதானேநிக்கிறேன். இப்போ என்னடான்னா நான் ஏதோ எலக்ஷன்ல நிற்க மனுதாக்கல் பண்ண வந்தமாதிரியே நிக்க வைச்சிருக்கா? அவள் எப்பவீம் நம்ம பக்கத்துல நிக்கணும்னு விரும்புறா போலிருக்கு,சரி நிப்போம்” என்று நினைத்து அவளை இன்னும் ஒட்டி நின்றான்.
அந்த வேப்பமனுவை பார்த்தா அதிகாரி இளந்தீரனைப் பார்த்து சிரித்தவாறே எல்லாத்தையும் சரிபார்த்துக்கொண்டிருந்தார்.
இந்த ஆபீஸர் எதுக்கு என்னைப் பார்த்து சிரிக்கிறாங்க என்று யோசனையோடு இளந்தீரன் நின்றிருக்க அவனது பெயரை சத்தமாக அழைத்து “நீங்கதான் இழந்தீரனா என்று கேட்டவர்,அந்த வேட்புமனுவை எல்லாம் சரியாக எழுதி இருக்கிறதா என்று மீண்டும் ஒரு முறை சரிபார்த்தார்.
அப்போவே இளந்தீரன் இவங்க எதுக்கு என்கிட்ட எல்லாம் கேட்டுட்டு இருக்காங்க. கேண்டிடேட் ஆதிரா,ஆனால் கேட்கிற கேள்வி எனக்கிட்ட?எங்கயோ இடிக்குதே?என்று குழப்பத்தில் ஆதிராவைப் பார்த்தான்.
அவளோ எதுவுமே தெரியாத மாதிரியே நின்றிருக்க, இவா நிக்கிற பொசிஷனே சரியில்லையே என்று சுத்தி ஒரு பார்வைப் பார்த்தான். ரவியுமே அவனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான்.
இங்க நமக்குத் தெரியாமல் ஏதோ நடக்குது. எதுக்கு குழம்பி நிக்கணும் நம்ம பொண்டாட்டிக்கிட்டயே கேட்டுப்போம் என நினைத்து அவள் பக்கம் திரும்பினான்.
அதற்குள் அந்த ஆபிஸர் எல்லாம் சரியாக இருக்கு,அப்படியே ஒரு கையெழுத்தைப் போட்டிருங்க இளந்தீரன் என்று அழைத்ததும் அவன் அதிர்ச்சியில் பார்த்தான்.
அவன் அதிர்ந்து கண்ணை உருட்டிப் பார்க்கவும் “என்ன சார் கேண்டிடேட் இளந்தீரன் நீங்கதானே. அப்போ நீங்கதான் கையெழுத்து போடணும். கையெழுத்துப் போடச்சொன்னா முழிக்கிறீங்க?”
“நானா நான் கேண்டிடேட் இல்…”என்று அவன் பேசிமுடிப்பதற்குள் ஆதிராதான் அவனது கையை பிடித்து இழுத்து முன்னாடி நிறுத்தியவள் “ மேம் அவங்க ஏதோ கன்பூஷன்ல இருக்காங்க. இப்போ கையெழுத்து போட்டிருவாங்க. நீங்க தான் இந்த தொகுதியில ஜெயசந்திரன் சார்பாக எம்எல்ஏ கேண்டிடேட்டா நிக்கிறீங்கத்தான். அப்போ நீங்க்தானே கையெழுத்துப்போடணும்”என்றதும் அப்படியே கண்ணை மூடக்கூட தோணாது “என்ன? என்று கேட்டவிட்டு ஆதிராவைப் பார்த்தான்.
“அதுக்குத்தானத்தான் நம்ம வந்திருக்கோம். எதுக்கு இப்படி முழிக்கிறீங்க. கையெழுத்தப்போடுங்க நமக்காக வெயிட் பண்றாங்க பாருங்க”என்று அவனது என்று சொன்னாள்.
இளந்தீரனுக்கு அது அதிர்ச்சியான தகவலாக இருந்தது.
“என்ன சொல்லுற ஆதிரா நேத்து வரைக்கும் நான்தானே உனக்கு எல்லாம் நிரப்பித் தந்தேன் என்ன பண்ணனும் எப்படி கொடுக்கணும்னு சொல்லிக்குடுத்தேன். இப்போ வந்து நான்தான் நிக்கிறேன்னு சொல்லுற. இந்த முடிவை யாரு கேட்டது எடுத்தது. ஜெயச்சந்திரன் மகளுக்குதான் இது தகுதியான இடம். எந்த வேலையும் எதுவுமே செய்யாத நான் எப்படி இங்க நிக்க முடியும். இது நியாயம் இல்லை?”என்று அவன் மெதுவாக ஆதிராவிடம் பேசினான்.
“நியாயம் அநியாயம் எல்லாம் எல்லாருக்கும் தெரியும். பேசாம கையெழுத்து போடுங்க அத்தான்”என்று அந்த நேரத்தில் ஆதிரா அவனுக்கு எஜமானியாக மாறி கட்டளையிட்டாள்.
அங்கே நின்றிருந்த ரவியின் கையை பிடித்து இழுத்தவன் “என்ன ரவி நடக்குது இங்க? ஆதிராவைதானே நிக்க வச்சிருக்கோம். இப்போ என்னன்னா ஆதிரா என் பெயரை எழுதிவிட்டு வந்திருக்காள். இது கட்சியிலும் பிரச்சினையாகும் ஆதிராவும் நிக்க முடியாமல் போகும். எதுவுமே யோசிச்சு செய்ய மாட்டீங்களா? இண்டு பேரும் உங்க இஷ்டத்துக்கு செய்றீங்க? என்று கோபப்பட்டான்.
ரவீந்திரன் அவனது தோளில் கையை போட்டு அவனது அண்ணனாக தோழனாக அவனைப் பிடித்துக் கொண்டு “நீ ஆதிராவை நிக்க வைக்கலாம்னு ஐடியா கொடுத்த அன்னைக்கே ஆதிரா இராத்திரியோட இராத்திரியா வந்து அத்தைக்கிட்ட உங்களை நிக்கவைக்கணும்னு சொல்லி சம்மதிக்கவைச்சாள். அத்தை ஆதிரா சங்கவி என்று குடும்பம் மொத்தமா உட்கார்ந்து பேசி கட்சி தலைமையிடத்திலும் பேசா உனக்கு அந்த சீட்டை வாங்கி இருக்கோம். மாமா எப்பவுமே உன்னைத்தான் அவருடைய இடத்துக்கு கொண்டு வரணும்னு ஆசைப்பட்டா.ர் அவர் ஆசைப்பட்டபடி நீ இந்த எலக்சன்ல நிக்கிற, ஜெயச்சந்திரனோட மருமகனா நின்னு ஜெயிச்சு அவருடைய பேரை பெருமைபடுத்துற அவ்வளவுதான். இதுதான் அவரோட விருப்பமும் எங்களுடைய விருப்பமும் கையெழுத்து போடு”என்று சொன்னான்.
ஆதிரா அவனுக்கு தனது பேக்கில் இருந்து பென்னை எடுத்துக் கொடுத்து கையெழுத்து போட வைத்தாள்.
அவன் வெளியே வரும்போது அவரது கட்சி ஆட்களோ வருங்கால எம்.எல்.ஏ இளந்தீரன் வாழ்க என்று கோஷம் போட்டார்கள்.
அதைக் கேட்டதும்தான் சிவானந்தன் குரூப்புக்கே அதிர்ச்சி!அப்படியே திரும்பி பார்த்தார்கள்.
இளந்திரனின் கழுத்தில் மாலையை போட்டு அவனை அழகாக வரவேற்று அழைத்து வந்தார்கள்.
அதைப் பார்த்த மதுமதிக்கு ஷாக்காகி ஒருமாதிரி அவனைப் பார்த்தாள்.
அவனோ அழகான புன்னைகையோடு ஆதிராவின் கையைக் கோர்த்துக்கொண்டு நின்றான்.
அதை தாங்க முடியாத மதுமதி வேகமாக காருக்குள்ள போய் உட்கார்ந்துவிட்டாள்.
ரகுவரனுக்கு கேட்ட செய்தியில் இன்னும் நம்பிக்கை வரவில்லை. ஏதோ நம்மளை ஏமாத்துறாங்களோ என்று தான் என்ன நடக்குது என்பதைக் கவனித்தான்.
“உள்ள வர்ற வரைக்கும் ஆதிராதான் எலக்சன்ல நினைக்கிறான்னு சொன்னானுங்க. அவளுக்கு எதிராக மதுமதி நிக்கவைச்சிருக்கோம், அவங்களுக்கு முன்னாடியே வந்து மனு தாக்கல் செய்து முடிச்சாச்சு இப்ப வந்து இளந்தீரன் எலெக்ஷன் நிக்கறான்னு சொல்லுறானுங்க? என்ன மாமா இங்க நடக்குது? இவனுங்க ஏதோ பெருசா மாஸ்டர் பிளான் போட்டுட்டானுங்களா. இதை இப்படியே விடக்கூடாது மாமா” என்று தனது மாமனாரிடமே கோபப்பட்டு பொங்கி விட்டான்.
“அடவிடு மருமகனே இவனெல்லாம் நம்மளுக்கு சமமானா ஆளா என்ன?. நம்ம கட்சியிலிருந்து தூக்கியெறிஞ்சிட்டோம். இனி அவன் எப்படிப்போனால் நமக்கென்ன! நம்ம இந்த தேர்தலில் ஜெயிச்சு மதுமதி எம்.எல்.ஏவாகணும் அதுதான் நம்மளோட வெற்றியா இருக்கணும். அதுக்காக என்னவெல்லாம் செய்யணுமோ அதை எல்லாத்தையும் செய்யணுமோ யாரைப்போட்டு தள்ளனுமோ போட்டு தள்ளுவோம் அவ்வளவுதான். இதுதான் நம்ம கொள்கையா இருக்கணும் வாங்க போகலாம” என்று அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள் போகும் போது காரில் இருந்தவாறு வன்மத்தோடு ஆதிராவையும் இளந்தீரனையும் பார்த்துக் கொண்டேதான் போனார்கள்.
அதைப் பார்த்த ரவிதான் “அங்கப்பாரு சிவானந்தன் குடும்பம் மொத்தமும் நீதான் நிக்கிறன்னு சொன்னதும் எப்படி விழுந்துடுச்சு ஓடுறாங்கன்னு பாரு. ஆனா தம்பி இவனுங்க சும்மா இருக்க மாட்டானுங்க நம்மளுக்கு எதிராக ஏதாவது செய்தாலும் செய்வாங்க முதல்ல நம்ம மாமாவுக்கு தான் காவல் அதிகமா போடணும்”
“இனி உள்ளது எல்லாம் நான் பார்த்துக்கிறேன் ரவி. ஆனால் இந்த முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை ஏன் இப்படி கடைசி நேரம் வரைக்கும் என்கிட்ட சொல்லாம மறைச்சீங்க. நான் ஆதிராவதானை மனு தாக்கல் பண்ண சொன்னேன். அதுவும் அன்னைக்கே சொன்னேன். அவளுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கு. அது புரியாம நீங்க ஏதேதோ பண்ணி என்ன நிக்க வச்சுட்டீங்களே இது சரியா வருமா?”
“எல்லாமே சரியா வரும் அப்பா கண்ணு முழிச்சிரீந்தா இதைத்தான் விரும்பியிருப்பாங்க. கண்டிப்பா இந்த எலக்சன் முடியறதுக்குள்ள அப்பா எப்படி எழுந்திடுவாங்கன்று எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு. நீங்க ஜெயிச்சு எம்.எல்.ஏ வாதான் அப்பா முன்னாடி நிப்பீங்கன்னு நான் நம்புறேன். அது நிச்சயமா நடக்கும். உங்களுக்கான பண வசதியிலிருந்து எல்லாமே நம்மக்கட்சி செய்து கொடுத்திடுவாங்க. அப்புறம் எதுக்கு நீங்க பயப்படுறீங்க? நீங்க நில்லுங்க பிரச்சாரம் பண்ணுவோம் இந்த எலக்சன்ல நம்ம ஜெயிப்போம், ஜெயிக்கணும், ஜெயிச்சு காட்டணும் புரியுதா?”என்று இளந்திரனுக்கே பாடம் எடுத்துக் கொண்டிருந்தால் அவனது மனைவி ஆதிரா!
அவள் அவனிடம் கட்டளையாக பேசிக் கொண்டிருக்க அவளது கண்களில் உதடுகளையும் ரசித்தவாறு அப்படியே பார்த்திருந்தான்.
அவன் அப்படி தன்னைக் கண்ணெடுக்காது பார்க்கவும் பேசிக் கொண்டிருந்த ஆதிரா சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு அவனது கண்களை கூர்ந்து பார்த்தாள்.
அவனோ யாருக்குமே தெரியாமல் வலது கண்ணை அடித்து,உதட்டைக் குவித்து அவளுக்கு ஒரு சைகை முத்தம் கொடுத்து விட்டு அமைதியாக நின்றான்.
அந்தக் கூட்டத்திலேயே அந்த நேரத்தில் அப்படி ஒரு முத்தத்தை அவனிடமிருந்து எதிர்பார்க்காத ஆதிரா வாயடைத்து அவனது முகத்தையே அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தாள்!