அநாயகா-43
அநாயகா-43
ஆதிராவை கூட்டிட்டு வீட்டுக்கு வரும்போது அங்கே ஜெயிச்சந்திரன் முழித்துதான் உட்கார்ந்திருந்தார்.
அவரைப் பார்த்ததும் ஆதிராவுக்கு உள்ளிருந்த அத்தனை வலிகளும் வெளியே வந்துவிட்டது.
“அப்பாஆஆஆ”என்று ஓடிப்போய் அவரது மடியில் தலைக்கவிழ்ந்து ஏங்கி ஏங்கி அழுதாள்.
அவள் அழுகிறதைப் பார்த்து ஜெயச்சந்திரன் நிமிர்ந்து மகேஸ்வரியைப் பார்த்து என்னாச்சு என்று கேட்டார்.
மகேஸ்வரி நடந்து அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டார்.
“இளந்தீரன் அப்படியா சொன்னான். ஆதிராவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னானா?”என்று தனது சந்தேகத்தை அழுத்தமாக கேட்டார்.
“அவன்தான் இன்டைரக்ட் போன்னு சொல்லிட்டானே. அதுக்கப்புறம் நாங்க அங்க இருந்து என்ன பண்ண முடியும்.இவள் எதிர்த்து கேள்வி கேட்டதுக்கு அடிச்சிட்டான். அந்த மதுமதக முன்னாடியே அவளை அடிச்சிட்டான். அதுக்கப்புறம் அவன்கூட வாழ்ந்து என்ன பிரயோஜனம் ஆதிராவே அங்கிருந்து கிளம்பி வந்துட்டா, நாங்களும் அவக்கூடவே சேர்ந்து வந்துட்டோம். இனிஆதிரா அவன்கூட வாழ்றது கஷ்டம் அவன் மதுமதிங்கிற அந்த பைத்தியத்தை கட்டிட்டு வாழட்டும்,இல்லை சாகட்டும். அதுவும் இல்லையா எங்கேயாவது போகட்டும். இதுக்கு மேல அவனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை அவ்வளவுதான். அவன் கட்சியில் இருந்தும் துரத்தி அனுப்புங்க, அவன் அந்த அமைச்சர் பதவியில இல்லாத மாதிரி பண்ணுங்க. இந்த அஞ்சு வருஷம் கழிச்சு அவன் இருந்த இடம் தெரியாமலயே எங்கேயாவது போய் தொலையட்டும்” என்று மகேஸ்வரி தன்னோட கோபத்தை அவரிடம் காட்டிக் கொண்டிருந்தார்.
அவருக்கு தன்னுடைய மகள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று ஆதங்கம்தான் அதிகமாக இருந்தது. அந்த ஆதங்கம்தான் இவ்வளவு பேச வைத்தது.
ஏற்கனவே அவர் இது சரிவராது,இந்தக் கல்யாணத்துல என் பொணோட வாழ்க்கை போயிடும்என்று தான் கணித்தார். அதேபோல அவளது வாழ்க்கையும் இப்படியானதும் அவரால் தாங்கிக்க முடியவில்லை.
ஜெயச்சந்திரன் இப்போது ஆதிராவிடம் மெதுவாக பேசினார்.
“ஆதிராம்மா நீ என்ன சொல்லுற? இளந்தீரன் உன்னை வேண்டாம்ன்னு சொல்லி அனுப்பிட்டானா? இல்லை அந்த மதுமதி மட்டும் இங்கயே இருப்பாளனு சொன்னானா?”
அந்தக் கேள்வியில் ஆதிரா தனது அப்பாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
“எனக்கு என்னவோ தீரன் செய்தது ஏதோ காரணத்துக்காக இருக்கும்னு நினைக்கிறேன். மதுமதி தற்கொலைக்கு பண்ணபோயிருக்கான்னு யாரோ போன்ல சொன்னதைக் கேட்டுத்தானே போனோம் அதனாலதான் மருமகன் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கான். அவனா அவளை தேடி போகலல்ல அப்போ கண்டிப்பா மதுமதி அங்கிருந்து போயிருவா. அவன் மதுமதியோடுலாம் வாழ மாட்டான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இப்போதைய யாரும் இதைப்பத்தி பேசி மனசைக் குழப்பிக்க வேண்டாம், கொஞ்சம் நிதானமா, அமைதியா, பொறுமையா இருப்போம். அதுக்கப்புறம் எதுனாலும் பேசி முடிவு பண்ணிக்கலாம்” என்று அப்போதைக்கு அந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்திருந்தார்.
ஆதிரா இப்பொழுது கொஞ்சம் நிதானமானவள், தனது கண்ணீரைத் துடைத்துவிட்டு எழுந்து உட்கார்ந்து நிறைய யோசித்தாள்.
அதன் பிறகு ஒரேமுடிவாக சொல்லிவிட்டாள். நான் இனி தீராத்தான்கூட வாழ மாட்டேன். எனக்கு அவங்கக்கிட்டயிருந்து டிவோர்ஸ் வேணும். இதுதான் என்னோட முடிவு நாளைக்கு நம்ம லாயர்கிட்ட பேசி, அத்தானுகு நோட்டிஸ் அனுப்பிடுவேன். இதுதான் என்னோட முடிவு .இந்த முடிவுல இருந்து நான் இனி எந்த சூழ்நிலையிலும் மாறமாட்டேன்”என்றவள் அங்கே இருந்த யாருடைய முகத்தையும் பார்க்காது தன்னுடைய ரூமுக்கு வந்துவிட்டாள்.
ஆதிராவால் இளந்தீரன் அந்த மதுமதி முன்னாடி,அவளுக்காக தன்னை அடித்ததை அவளால் தாங்கிக் கொள்ள முடியயிலை, அதை ஏற்றுக்கொள்ளவும் முடியவிஸ்லை.
உள்ளத்தால் புழுவாய் துடித்துத் தவித்துக் கொண்டிருந்தாள்.
‘அந்த மதுமதி அத்தானை எந்த அளவுக்கு முதுகுல குத்திட்டு போனாள். அப்படிப்பட்டவ முன்னாடி எப்படி என்னை அடிக்கலாம்?எனக்கு உன்னை ட என் பொண்டாட்டி தான் முக்கியம்னு அவளுக்கு காண்பிச்சிருக்கணும், அதுவிட்டுட்டு அவதான் முக்கியமனு என்னை தள்ளி வைச்சுட்டாங்களே. அவங்க எந்த அளவுக்கு காதலிச்சேன். அப்படி நேசித்த எனக்கு இப்படியான ஒரு துரோகம் தேவைதான்’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள்.
அவள் போனதும் ஜெயச்சந்திரன் மகேஸ்வரியையும் கவிதாவையும் திட்டினார்.
“உங்க ரெண்டு பேருக்கும் அறிவே கிடையாதா? கவிதா என்னதான் போன் பண்ணி சொன்னாலும் நீ ஏன் இவ்வளவு அவசரமா இந்த அர்த்த இராத்திரில அங்க போய் நின்ன? எதுனாலும் கொஞ்சம் நிதானமா அவனைத் தனியா கூப்பிட்டு வைச்சு பேசியிருக்கணும்.நீங்க அந்ச மதுமதி முன்னாடியே இப்படி பேசினா அவன் அப்படித்தான் சண்டை போடுவான். ஏன்னா அவ இவன்கிட்ட கேட்ட உதவியை அவன் செய்திருக்கான். அவனை நம்பி அவ வந்திருக்கா. அப்போ நம்மள நம்பி வந்திருக்கா இவளை எப்படி அனுப்ப முடியும் என்று யோசிப்பானா? இல்லையா? எந்த சூழ்நிலையும் எல்லா பக்கமும் இருந்து நம்ம யோசிக்கணும்” என்று அவர்களை திட்டினார்.
சங்கவியோ “அப்பா அதெல்லாம் இருக்கட்டும்.ஆனால் நம்ம ஆதிரா பேசினதுக்கு ஏன் அடிச்சான்? என்னதான் அவன் அவனை நம்பி உதவி கேட்டு வந்திருந்தாலும் அவ முன்னாடி எப்படி ஆதிராவை அடிக்கலாம். அவளுக்கு கல்யாணம் நடக்கிற அன்னைக்குத்தானே ஆதிரா கழுத்துல இளந்தீரன் தாலிகட்டி கூட்டிட்டு வந்தாங்க. அப்படி வாழ்ந்தவன் திரும்பவும் அந்த பொண்ணுக்காக நம்ம ஆதிராவை அடிக்கலாமா? அப்போ நம்ம ஆதிராவோட மனசு என்ன பாடுபட்டிருக்கும். அவன் நம்ம ஆதிராவுக்கு ஏத்தவன் இல்லை. அவன் அவளுக்கு வேண்டாம். அவனுக்கும் ஆதிராவுக்கும் டைவர்ஸ்வாங்கி கொடுத்துடுங்க. அந்த இளந்தீரன் எப்பவுமே முருங்கை மரத்துல இருக்குற வேதாளம் மாதிரிதா.ன் நம்ம கீழே பிடிச்சு இறக்கினாலும் அங்கதான் போய் உட்கார்ந்து இருப்பான். ஆதிராவுக்கு சின்ன வயசுதானே வேற கல்யாணம் பண்ணி வைச்சிடலாம்” என்று பெரிய மனுஷிபோல பேசினாள்.
அதைக்கேட்டதும் ஜெயச்சந்திரன் அவளை சத்தம் போட்டார்.
“என்ன பேசுற சங்கவி? ஆதிரா அவனை எவ்வளவு நேசிக்கிறான்னு இங்க இருக்குற எல்லாத்துக்கும் தெரியும். சும்மா சட்டுபுட்டுன்னு அவங்கள பிரிச்செல்லாம் வைக்க முடியாது. எல்லாரும் கொஞ்சம் பொறுமையா இருங்க. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் என்று பேசி முடித்தவர் கவிதாவை பார்த்து “நீ எதுக்கு இப்ப அங்கயிருந்து இங்க ஓடி வந்த? உன் மகன் வீடுதானே அது. அவனுடைய வாழ்க்கைக்குதானே இவ்வளவு போராடிட்டு இருந்த. நீயும் விஜயராஜும் அவன்கூட அந்த வீட்டுலயேதான் இருக்க போறீங்க .அப்போதான் அங்க என்ன நடக்குதுன்னு நம்மளுக்கு தெரியும். உண்மையாவே அவன் மதுமதிக்கூடதான் வாழ விரும்புகிறானா? இல்லை வேற ஏதாவது பிரச்சினை இருக்கான்னு நம்ம பார்க்க வேண்டாமா? இப்பவே இரண்டுபேரும் கிளம்பி அங்க போங்க” என்று அவர்களை விரட்டினார்.
விஜயராஜிற்கு அங்க போகிதற்கு மனதில்லை. அதனால் “நான் அங்கபோகலை.கவிதா மட்டும் அங்க போய் இருக்கட்டும். நான் எங்களோட பழைய வீடடுக்குபோய் இருக்கேன். எனக்கு அவன்கூடவெல்லாம் சண்டை போட வேண்டியதுவரும் அதனால் நான் எங்க பழைய வீட்ல இருந்துக்குறேன். கவிதா மட்டும் அங்க போகட்டும்” என்று சொன்னார்.
விஜயராஜ் சொல்றதும் சரியாக இருக்கவும் “சரி நீ உங்க பழைய வீட்ல போய் இருந்துக்கோ. இங்க உள்ள பிரச்சனை முடியமட்டும் அங்கயே இரு. இப்போ கவிதாவைக் கூட்டிட்டு போயி கவிதாவிட்டுடடுப் போ. காவிதா நீ உன் வாயை வச்சுட்டு சும்மா இருந்தாமட்டும் போதும். இளந்தீரன்கிட்ட எந்த பிரச்சினையும் பண்ணாத. அங்க நடக்கிறது மட்டும் கவனி” என்று சொல்லி கவிதாவை மீண்டும் இளந்தீரன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
கவிதாவுக்கும் வேறவழியில்லாமல் அண்ணன் சொல்லிட்டாங்களேன்னு மீண்டும் அங்கயே போய் இறங்கினார்.
அவரைப் பார்த்ததும் இளந்தீரன் முகத்தில் ஒரு நிம்மதி வந்தது.
ஆனால் அவரைப் பார்த்ததும் மதுமதியின் முகம் அப்படியே கடுகடுவென மாறிவிட்டது. அதைப் பார்த்த கவிதாவுக்கோ “இவளுக்கு நான் ஒரு வேலை வைச்சே ஆகணும்” என்று ஒரு முடிவோடுதான் அந்த வீட்டுக்குள்ளே போனார்.
ஆனால் கவிதா இளந்திரனிடம் எதுவுமே பேசவில்லை எப்போதும் போல தனது ரூமுக்குள் போய்விட்டார்.
இளந்தீரன் இப்பொழுது அடிக்கடி மதுமதியை வெளியே கூட்டிட்டு போக ஆரம்பித்தான். எங்க போறான்? எதுக்கு போறான்?என்று கவிதாவிடவும்கூட சொல்லுகிறதில்லை ஆனால் அவனோட போகும்போது எல்லாம் மதுமதி சந்தோஷமாகத்தான் வெளியே போனாள்.
இங்கிருந்து எல்லாம் தகவலையும் கவிதா ஜெயச்சந்திரனுக்கு தினமும் போனில் சொல்லிவிடுவார்.
ஆதிராவுக்கு இது எதுவுமே தெரியாது என்றாலும் அவளுக்கு திரும்பவும் இளந்தீரனுடன் சேர்ந்து வாழ விருப்பமேயில்லை என்பது அவள் வக்கீலைப் பார்த்துவிட்டு வந்த பிறகுதான் எல்லாருக்கும் தெரிந்தது.
அவள் விவாகரத்துக்கு அப்ளை பண்ணிட்டு வந்திருந்தாள். இனி தீராத்தான்கூட சேர்ந்து வாழ எனக்கு விருப்பமில்லை என்று தெளிவாக குடும்பத்தார் எல்லாரும் முன்னாடி சொல்லியும்விட்டாள்.
நான் டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணி இருக்கேன். அத்தான் எனக்கு விவாகரத்து தந்தாலும், தராவிட்டாலும் எனக்கு பிரச்சனையில்லை.
ஆனால் இனி நான் அவங்களோடு சேர்ந்து வாழ மாட்டேன், இந்த இரண்டுமாசம் கல்யாண வாழ்க்கையே எனக்கு போதும். இதுக்கு மேல அவங்களா வந்து என்னைக் கூப்பிட்டாலும் அவங்கக்கூட நான் போக மாட்டேன் என்று முடிவாக சொல்லிவிட்டாள்.
ஆதிரா போய் பார்த்து விவாகரத்துக்கு பேசிவிட்டு வந்த அதே லாயரிடம்தான் மதுமதியுடைய விவாகரத்துக்கும் இழந்தீரன் பேசிக் கொண்டிருந்தான்.
அப்போதுதான் வக்கீல் அவனிடமே தகவலை சொன்னார்.
“இளந்தீரன் சார் உங்க மனைவி ஆதிரா காலைலதான் வந்து உங்களுக்கும் அவங்களுக்கும் விவாகரத்து வாங்கணும்னுஎன்கிட்ட பேசினாங்க. அதுக்கான பேப்பர் எல்லாம் ரெடி பண்ணி கையெழுத்து போட்டு கோர்ட்டுக்குள்ள அனுப்பியாச்சு. அதோட காப்பி உங்களுக்கும் அனுப்பி வச்சிருக்கேன்” என்று சொல்லும் போதே இளந்தீரன் அதை நம்பாது அவரைப் பார்த்தான். அவனால் ஆதிரா டிவபர்ஸ்க்கு அப்பளை பண்ணிருப்பாளா என்று நம்பவே முடியவில்லை.
“ஆதிராவா? என் பொண்டாட்டி ஆதீராவா?அவளா வந்து விவாகரத்துக்கு அப்ளை பண்ணினாள்?” என்று நம்ப முடியாது கேட்டான்.
அவருமே “ஆமா சார் ஆதிரா மேடம்தான் வந்தாங்க எனக்கு ஆயிரா மேடமை தெரியாதா என்ன? ஜெயச்சந்திரன் சாரோட இரண்டாவது பொண்ணுதானே, உங்க மனைவி ஆதிரா அவங்களேதான். உங்களுக்காக அவ்வளவு போராடி நின்னு உங்களைக் இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்காங்க, அப்படிப்பட்ட அவங்களை பிரியறதுக்கு உங்களுக்கு எப்படி சார் மனசு வந்துச்சு? என்று கேட்டவர் மதுமதியை வெட்டவா குத்தவா என்று பார்த்தார்.
அதற்கு மேலே எதுவுமே பேசாத இளந்தீரன் அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டான்.
மதுமதிதான் “எதுக்கு இளாத்ததான் இதுக்கு கலங்குறீங்க? எப்படியும் எனக்கும் ரகுவரனுக்கு கிடைச்சிரும் அதுக்கப்புறம் நீங்களும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாம். ஆதீராவுக்குள் எந்த பிரச்சனையும் இல்லாம விவாகரத்து கொடுக்குறாங்க நல்லதுதானே நமக்கு” என்று ரொம்ப சந்தோஷமாக பேசினாள்.
அவள் பேசியதை கேட்டதும் இளந்தீரன் திரும்பி அவளை ஒரு பார்வை தான் பார்த்தான். அந்தப் பார்வையின் அர்த்தம் புரியாது மதுமதி குழம்பிப் போனாள்.
“என்ன இளாத்தான் எதுன்னாலும் வாயை திறந்து சொல்லுங்க. நம்ம பேசி தீர்த்துக்கலாம் நம்ம கல்யாணத்தை எப்போ வைக்கலாம் சொல்லுங்க” என்று அவனது கையை பிடித்து பேசினாள்.
அவனும் லேசான புன்னகையோடு அவளதீ கையை தட்டி கொடுத்தான். வேறு எதுவுமே அவளிடம் பேசவில்லை.
அதுவே அவளை இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க அவன் சம்மதித்து விட்டான் என்பதாக அவள் நினைத்து சந்தோஷப்பட்டாள்!
உன் சந்தோசத்துல ஆணியை அடிக்க!