அநாயகனே-8
அநாயகா-8
ஜெயசந்தாரனின் வீட்டு முன்பு வந்து நின்ற இளநதீரன் வண்டியின் ஆக்ஸிலேட்டரை திருக்கி சத்தம்வரவைத்தான்.
அவ்வளவுதான் அவனது வண்டிச் சத்தத்தில் வெளியே எட்டிப்பார்த்த செக்யூரிட்டி, இளந்தீரனைப் பார்த்ததும் அச்சோ இவனா?இன்னைக்கு என்ன பிரச்சனை பண்ண வந்திருக்கானோ தெரியலையே?இவனால நம்மதான் பயந்து ஓடவேண்டியதிருக்கு’என்று பயந்தவர், உடனே ஓடிவந்து கேட்டை திறந்து விட்டான்.
அவன் அப்படி கேட்டைத் திறந்து உள்ளே விடவெல்லையென்றால்,இளந்தீரன் அடி பொளந்திருவான் என்று அவனுக்கே தெரியுமே.
அதனால் அவன் வண்டி வந்து நின்றதுமே கேட்டை திறந்து விட்டு அமைதியாக ஒதுங்கி நின்றுவிட்டான்.
“அது அந்த பயம் இருக்கட்டும்” என்று அவனை ஒருவிரால் காட்டி மிரட்டிய இளந்தீரன் நேராக வண்டியை கொண்டு உள்ளே விட்டான்.
அப்படியே அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்தான். அந்த அர்த்த இராத்திரியில் யாரும் இல்லையென்றதும் தன் கோபத்தைக் கண்ட்ரோல் பண்ண முடியாது திட்டினான்.
“டேய் இந்த பரதேசி மாமன்காரன் எப்படி நிம்மதியாக தூங்குறான் பாரு. நம்மளை நிம்மதியா தூங்கவிடாமல் பண்ணிட்டு இவனும் இவனோட குடும்பமும் எப்படி நிம்மதியாகத் தூங்குறாங்கப்பாரு. இவனை ஏதாவது செய்யணும் பங்காளி”என்று சுத்தித் தேடிப் பார்த்தான்.
அங்கே தோட்டத்தில் இருந்த ஒரு பெரிய பூந்தொட்டியைப் பார்த்தவன், அதை அப்படியே தூக்கியெடுத்தான்.
அதைக்கொண்டுபோய் அங்கு நின்றிருந்த கார்களில் எது பெரிய விலை அதிகமான கார் என்று பார்த்துவிட்டு,அந்தக் காரின் முன்பக்கக் கண்ணாடியின் மேல் பொத்தென்று போட்டு விட்டான்.
அவ்ளவுதான் அவன் தொட்டியைப் போட்ட வேகத்தில் கண்ணாடி சுக்கல் சுக்கலாக உடைந்து டொம்மென்று சத்தம் கேட்டது.
அந்தக் கண்ணாடி உடைந்த சத்தத்தைக் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பயந்து எழுந்துவிட்டனர்.
“என்ன சத்தம் கேட்டுச்சு?என்ன நடக்குது?” என்று வெளியே ஓடிவந்துப் பார்த்தார்கள்.
அவர்கள் வந்து என்னவென்று பார்க்கும்போது இளந்தீரன்,அடுத்ததும் ஒரு பூந்தொட்டியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, எந்தக்தக் காரோட கண்ணாடியையும் உடைக்கலாம் என்று யோசனையில் நின்றிருந்த இளந்தீனைப் பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டனர்.
ஜெயசந்திரன் இதை எதிர்பார்த்திருப்பார் போல அமைதியாக கைகளைக் கட்டிக்கொண்டு உதட்டை வளைத்து லேசாக நக்கல் கலந்த சிரிப்போடு இளந்தீரனைப் பார்த்தார்!
அதற்குள் மகேஷ்வரிதான் வேகமாக ஓடி வந்து உடைந்தக்காரை பார்த்துவிட்டு நெஞ்சில் கை வைத்தவாறே இளந்தீரனை பார்த்து முறைத்தார்.
ஆனால் அதைப்பார்த்தவனோ இன்னும் கையில் இருந்தத் பூந்தொட்டியை கீழே போடாமல் காரின் கண்ணாடியில் போடுவதற்காகத்தான் நின்றான்.
அதற்குள் அவனது அண்ணன் ரவீந்திரன் வேகமாக இறங்கி வந்து அவனது கையைப்பிடித்து தள்ளிவிட்டவர் “உன் மனசுல என்னதான்டா நினைச்சிட்டு இருக்க? இப்படி வாரத்துக்கு ஒருதடவை வந்து ஏதாவது பிரச்சனை பண்ணி இப்படி பொருள்களை உடைக்கிறதே வேலையா வச்சிருக்க? எதுக்குடா இப்போ அந்தக் கார் கண்ணாடியை உடைச்சி வைச்சிருக்க?இப்படித்தான் இராத்திரி நேரத்துஸ வந்து பிரச்சனை பண்ணுவியா? உனக்கெல்லாம் அறிவே கிடையாதா? இப்போ உனக்கு என்னடா பிரச்சனை?”என்று அவனது சட்டையைப்பிடித்து இழுத்துக் கேட்டவன் அப்படியே அவனது கையில் உள்ள தொட்டியைக்கீழே தள்ளிவிட்டான்.
அதில் இன்னும் கோபப்பட்டவன் ரவியைத் தள்ளிவிட்டான்.
“ஏன்டா நீதான் உங்கம்மா பேச்சைக் கேட்டு இந்தாளு மகளைக் கட்டிக்கிட்டு வீட்டோட மாப்பிள்ளை மாதிரி இங்கயே இருந்து இவருக்கு பீ.ஏ மாதிரியும் வேலைக்காரன் மாதிரியும் இருக்கிற, அது மாதிரியே நானும் அடிமையா இருக்கணும்னு நினைக்கிறியா?நான் உன்னைமாதிரியெல்லாம் இப்படி அடிமை மாதிரி இருக்கமாட்டேன். என் சட்டியிலயே பெரிய ஆளா வந்து நானே எம்.எல்.ஏவாகி இந்தாளை தோற்கடிப்பேன் பாரு. போடா டேய். உன் மாமனாரை சும்மா இருக்கச் சொல்லு பார்த்துக்க. எங்க கட்சி போஸ்டரை எல்லாம் கிழிச்சிட்டு அவரு போஸ்டரை ஒட்டி வைச்சிருக்காரு. நாங்களே கஷ்டப்பட்டு முன்னேறிட்டு இருக்கோம்.அது அவருக்குப் பிடிக்கலையா? இதுக்குமேல எங்க கட்சியோட விளையாடினாருன்னா அவ்வளவுதான் நான் சும்மா இருக்கமாட்டேன்”என்று எகிறினான்.
அதைக்கேட்டுக்கொண்டிருந்த மகேஷ்வரியோ நேராக இறங்கி அவன் பக்கத்தில் வந்தவர்”ஏன்டா என் புருஷனைத்தான் எப்பவும் பிரச்சனைக்கு இழுப்பியா. ஆமாடா அவருதான்டா அந்த போஸ்டரை கிழிக்கச்சொன்னாரு. இப்போ அதுக்கு என்னடா?அதுல உனக்கு என்னடா பிரச்சனை?”என்று கேட்டார்.
“என்னது எனக்கு என்ன பிரச்சனைனானா கேட்குறீங்க? என்ன பிரச்சனைன்னா உன் புருஷன், அதுதான் என் நாய் மாமான் ச்ச்சீ டங்கு சிலிப்பாகுது பாருங்க. என் தாய்மாமன் உங்க புருஷன் எனக்கு பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிட்டான். அதுதான் இப்போ எனக்குப் பிரச்சனை போதுமா.இப்போ எனக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லிட்டேன்ல உடனே உன் இளைய பொண்ணை எனக்கு கட்டித் தருவியா அத்தை?” என நக்கலாகக் கேட்டான்.
ஆதிராவுக்கு அந்த நேரத்திலும் சிரிப்பு வந்தது. ‘இந்த அத்தான் காதலிக்கிறன்னு சுத்துறது மதமதிக்கூட,ஆனால் பேச்சைப்பாரு. இப்போ அம்மா பொண்ணு தர்றேன்னு சொன்ன என்ன பண்ணுவாங்களாம். இந்த சின்னத்தான் வாயிக்கு வாஸ்த்து சரியில்லை. அரசியல்வாதின்னு பேசுற பேச்சைப்பாரு’என்று அவன் பேசுவதை நின்று ரசித்துக்கொண்டிருந்தார்.
ஒத்தை ரோசா இதெல்லாம் ரொம்ப தப்பும்மா!
அதைக் கேட்ட மகேஷ்ழரிரோ அவனை இன்னும் முறைத்தும் ஏளனமாகவும் பார்த்தவர் “நீ எல்லாம் நாசமாதான்டா போவ. திருந்தவே மாட்டுக்கப்பாரு. என் புருஷனை மட்டுமரியாதை இல்லாமல் பேசுபாரு. உனக்கெல்லாம் கூட இருக்கிறவனே குழிபறிப்பான் பாரு அப்போதான் புத்தி வரும். உன் அம்மா கூடப்பிறந்தவருங்கிற ஒரு மரியாதையும் இல்ல, மாமாங்கிற பாசமும் இல்லை. இப்படி அர்த்த இராத்திரியில் வந்து அடவாடி பண்ற பாரு. அதையும் தங்கச்சி மகன்னு நீ என்ன செய்தாலும் பார்த்துட்டு சும்மா நிக்கிறாரு பாரு அவரைச்சொல்லணும். உனக்கெல்லாம் எவன்டா பொண்ணு தருவான். நீயெல்லாம் ஒத்தையில பார்க்க ஆளில்லாம ரோட்டுலக்கிடந்துதான் சாவடா”என்று அவனை சபித்துவிட்டு ஜெயசந்திரனின் பக்கத்தில் வந்தார்.
அவன் பேசியதைக்கேட்டுக்கொண்டிருந்த அவனது அம்மாச்சியும் சங்கவியும் இவன் ஏன் இப்படி பாண்றான் என்றுதான் எரிச்சலில் நின்றிருந்தனர்.
சங்கவி அவளது ஆதிராவிடம் ”ஏன்டி இவன்தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நேரடியாவே எல்லோருக்கிட்டயும் சொல்லிட்டானே. அப்புறம் எதுக்கு இப்போ பொண்ணுகேட்கிறேன் கட்டித் தருவீங்கள்ன்னு நக்கலா கேட்கிறான். ஆனாலும் இவனுக்கு இவ்வளவு ஏத்தம் இருக்கக்கூடாதுடி. வரவர இவன் அட்டகாசம் தாங்க முடியலடி”
“அத என்னைப் பார்த்துச் சொல்லாத உன் செல்லக் கொழுந்தன் அந்த இளந்தீரனைப் பார்த்துச் சொல்லுக்கா. இவனையெல்லாம் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டது என் தப்புத்தான். அத்தை மவனே என் அத்தானேன்னு அவனைக் காதலிச்சதும் தப்புத்தான். அதை நினைச்சுத்தான் தினமும் வருத்தப்படுறனே. இவங்க ஏன்கா இப்படி இருக்காங்க. இவங்இ மாறவே மாட்டாங்களா. நம்ம அப்பாவையே வம்பு இழுத்திட்டிருக்காங்க. இவ்வளவுநாளும் சும்மா இருத்தேன். ஆனால் இன்னைக்கு அப்பாவைப் பேசுறதைப் பார்த்தால் சின்ரத்தான்மண்டையை உடைச்சிடலாம்னு வருது என்று ஆதிரா கோபத்தில் பல்லைக் கடித்தாள்.
“க்கும் உன் கோபமெல்லாம் எந்தளவுக்கு இருக்கும்னு எனக்கும் தெரியும். இப்போ அந்தக் கோபத்தை அடக்கி வை. இதுக்கெல்லாம் காரணம் அவனோடு கூட்டுக்களவானியா நிக்கிறான் பாரு ஒன்னுந் தெரியாத பச்சைப்புள்ள மாதிரி அந்த ரகுவரன்தான் காரணம். இவனை நல்ல ஏத்திவிட்டு ஏத்திவிட்டு நம்மக் குடும்பத்துக்குள்ளயே பிரச்சனையை மூட்டிவிட்டுட்டு உள்ளுக்குள்ள பார்த்துச் சிரிச்சிட்டிருக்கான். இவனுங்க இரண்டுபேரையும் பிரிச்சிவிட்டுட்டா இந்தப் பிரச்சனை சரியாகிடும்டி. அதைதான் எவனும் செய்யமாட்டேங்கிறானுங்க”
“க்கும் இல்லைன்னாலும் உன் கொழுந்தனுக்கு ஒன்னும் தெரியாது பாரு. அவனே சும்மா நிக்கிறான் இவங்கதான் துள்ளிட்டுப் பேசுறாங்க. ரகுவரன்யெல்லாம் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான். அவனே எதிர்கட்சியில அவனது மாமாவுக்கு அடிமையா இருக்கான். நீ வேறக்கா. அவனெல்லாம் இதுக்கு சரிபட்டுவரமாட்டான்”
“நீ சின்னப்பொண்ணுடி இன்னும் மனுஷங்களை பத்தித் தெரியல அதுதான் இப்படிச் சொல்லுற. இளந்தீரனைவிடவும் ரகுவரன்தான் விஷம், ஆபத்தானவன். உனக்கு அது புரியாமாட்டுக்கு”
“போக்கா இவங்க ஒழுங்கா இருந்தா ஏன் அவன் இவனை ஆட்டிவைக்கப்போறான்?இரண்டுபேருமே பிரச்சனையானவனுங்கதான்”
“அப்படின்னா அப்பா பார்க்கிற வேற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிட்டு போகவேண்டியதுதானே. அப்புறம் எதுக்கு இளந்தீரனுக்காகக் காத்திருக்க?”
“அதுவா எல்லாம் வேண்டுதல்தான். அக்கா கல்யாணம் பண்ணிட்டு போன வீட்டுக்கே நானும் கல்யாணம் பண்ணிட்டு போகணும்னு அதுதான் இந்த இளந்தீரன் அத்தானுக்காக வெயிட்டிங்”
“நீ வெயிட் பண்ணு அதுக்குள்ள அவன் நம்ம அப்பாவை ஒருவழியாக்கிடுவான். அங்கப்பாரு இன்னும் குரங்கு மாதிரியே கையில அடுத்ததும் பூந்தொட்டியை தூக்கி அப்படியே வைச்சிருக்கான். யாருமேல போடப்போறானோ தெரியல”
“ம்ம்ம் நம்ம தலையிலதான்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே மகேஷ்வரி ரகுவரனின் கையில் இருந்த பூந்தொட்டியைத் தள்ளிவிட்டவர், அப்படியே தன் கணவரிடம் போனவர் சத்தம்போட்டு பேசினார்.
“ஏங்க உங்க தங்கச்சி மகன் என்கிறதுக்காக எல்லாம் இவ்வளவு இடம் கொடுக்காதீங்க. எதுக்குமே ஒரு அளவு தான் கண்டது. அம்மாவும் மகனும் கொடுக்கிற இந்த தைரியத்தில் தான் இவன் டெய்லி ஒரு பிரச்சனை பண்ணிட்டு இருக்கான். இப்போ எதுக்கு வந்து இந்தக் காரை உடைச்சிட்டு நிக்குறான். நீங்களும் உங்கம்மாவும் பார்த்துட்டு சும்மா நிக்கிறீங்க. என்னன்னு கேட்க்க மாட்டீங்களா? அம்மாவும் மகனும் சேர்ந்து அவனை இப்படி ஆசையா பார்த்துட்டு இருக்கீங்க?” என்று தனது கணவரையும், மாமியாரையும் திட்டி இளந்தீரன் மேலுள்ளக் கோபத்தை இவர்களிடம் காண்பித்தார்.
ஜெயசந்திரனோ மகேஷ்வரி திட்டிக்கொண்டிருக்கும்போதே வீட்டின் முன் வராண்டாவில் இருந்து மெதுவாக கீழே இறங்கி வந்தார்.
இளந்தீரனோ அவரை தெனாவெட்டாகப் பார்த்தான். “போயா நான் உன்வீட்டுக்கு வந்து இப்படித்தான் பிரச்சனை பண்ணுவேன். நீ எங்க கட்சி மேல கைவ வைக்கிறவரைக்கும் இப்படித்தான் இருப்பேன். எங்க கட்சியையும் எங்க தலைவரையும் சீண்டாமல் அமைதியாக போனன்னா நானும் அமைதியாகப் போவேன். இல்லையா இப்படித்தான் உன்கிட்ட முறைச்சிக்கிட்டும் முட்டிக்கிட்டும் நிற்பேன்”என்று கண்களாலயே தனது மாமாவுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
அவரோ அவன் பக்கத்தில்கூட வராமல் அவன் உடைத்த காரை ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் வராண்டாவில் வந்து நின்று கொண்டார்.
ஆனால் இளந்தீரன் இதை எதிர்பார்க்கவில்லை. அவரது அமைதியை பார்த்து கடுப்பானவன் “யோவ் மாமா நீ என் மாமாங்கறதுக்காகவெல்லாம் சும்மா விட்டுட்டு போக முடியாது. எதுக்குயா என் கட்சி போஸ்டரை எல்லாம் கிழிச்சிட்டு உன் கட்சித் தலைவர் போஸ்டரை உன் தலைவர் போட்டோவையும் போட்டு போஸ்டர் ஒட்டி வைச்சிருக்க. எதிர்க்கட்சி அப்படிங்கிறதுக்காக நீ என்ன வேணாலும் செய்வியா?அதுக்குத்தான் கார் கண்ணாடியை உடைச்சேன். நீ போஸ்டர் அடிக்கிறதுக்கும் ஒட்டுறதுக்கும்கூட இவ்வளவு செலவு பண்ணிருக்கமாட்டல்ல. இப்போ உன் கார் கண்ணாடியை மாத்தணும்னா இலட்சத்துல செலவாகும்ல. இதுக்குமேல எங்கக் கட்சிக்கூட மோதினன்னு வையேன் அப்புறம் இதைவிட மோசமா நடந்துப்பேன். எங்க கட்சிக்காக நான் வந்துகேட்பேனு,நிப்பேன்”என்று தெனாவட்டாக நெஞ்சை நிமித்தி கொண்டு கேள்விக்கேட்டு பேசிக்கொண்டிருந்தான்.
அதைக்கேட்டதும் ஜெயசந்திரன் மெதுவாகச் சிரித்தவாறே “அதுவா மருமகனே ஊர்பூராவும் உன் தலைவர் போஸ்டரா இருந்துச்சா. அது அதை பார்த்த உடனே நெஞ்சுக்குள்ள கொஞ்சம் பொறாமை கிளம்பிச்சா அதுதான் நம்ம ஆளை விட்டு என் போஸ்டரை ஓட்டிட்டேன் இப்ப அதுக்கு என்ன செய்யணும்? வேணும்னா உன் மாவட்ட தலைவர் அந்த சிவானந்தன் இருக்கானே அவன்கிட்டச் சொல்லி உங்கக்கட்சித் தலைவர் போட்டோவையும் அவன் போட்டோவையும் சேர்த்துப்போட்டு, மறுபடியும் ஒரு போஸ்டர் அடிச்சு ஒட்டச் சொல்லு. நான் வேணும்னா சும்மா இருக்கேன். உனக்காக போஸ்டரை மட்டும் ஒட்டாமல் இருக்கேன். என்ன சொல்லுற மருமகனே”என்றுவிட்டு இளந்தீரனையும் அவன் பக்கத்தில் நின்றிருந்த ரகுவரன்யையும் பார்த்து நக்கலாகச் சிரித்தார்.
ஜெயசந்திரன் அப்படி சிரிப்பதைப் பார்த்ததும் இளந்தீரனுக்கும் ரகுவரனுக்கும் கோபம் வந்தது.
உடனே ரகுவரன் இளந்தீரனின் கையைப்பிடித்து இழுத்தவன் “பங்காளி வா போகலாம். இவரு வேற ஏதோ திட்டம்போட்டுத்தான் வேலைப்பார்த்திருக்காரு. நம்ம மாமாகிட்ட சொல்லி அடுத்து என்ன செய்யலாம்னு பார்க்கலாம்”என்று அவனைக் கூட்டிட்டுப்போக முயன்றான்.
ஏன்டா கையைப்பிடிக்கிற இரு பேசி முடிச்சிட்டுப்போகலாம் என்று இளந்தீரன் எகிறினான்.
“வேண்டாம்டா உங்க மாமா வேணும்னேதான் எல்லாத்தையும் செய்திருக்காரு. அவரு இப்போ இங்க உள்ள எம்.எல்.ஏ. அவரு அடுத்து நம்மளையும் என்னவேணும்னாலும் செய்வார். வா நம்ம வீட்டுக்குப்போவோம். எதுனாலும் எங்க மாமாவை வைச்சு பேசி முடிச்சிக்கலாம். கட்சியில பெரியவங்க யாராவது வந்து முடிப்பாங்க. வாடா போகலாம். உங்க மாமா சிரிக்கிறதைப் பார்த்தால் எனக்கு பயமா இருக்கு”என்று அமைதியாகப் பேசினான்.
“அதென்ன கட்சியிலப் பெரியவங்கக்கிட்ட பேசிக்கலாம்னு சொல்லுற?அப்போ நம்ம யாருடா நம்மதான் அந்தக் கட்சியே. நம்ம எடுக்கிறதுதான் முடிவு” என்று சொன்னவன் அவனது கையிலிருந்து திமிறி வேகமாக வந்தான்
“எங்க கட்சித் தலைவர் போஸ்டரைக் கிழிச்சி எறிஞ்சதும் இல்லாமல், அதைக் கேட்க வந்த எங்களைப் பார்த்து நக்கலா வேற சிரிக்கிறியா?என கோபத்தில் கத்திய இளந்தீரன் அப்படியே கீழே போட்டிருந்த பெரிய பிரிக்ஸ்ஸை எடுத்து ஜெயசந்திரன் மீது வீசிவிட்டான்.
அந்த செங்கல் அப்படியே நேராக சென்று ஜெயசந்திரனின் நெற்றியில் பட்டது. அவ்வளவுதான் செங்கல் நெற்றியில் பட்ட வேகத்தில் ஜெயசந்திரன் அம்ம்அஅஆஆஆ என்று கத்தியவாறே அங்கேயே மயங்கி விழுந்து விட்டார்!
அதை பார்த்ததும் அவரது மகள்கள் இருவரும் ஓடி வந்து அப்பாஆஆஆ என்று அவரை தாங்கிப் பிடித்தார்கள்.
இதை இளந்தீனும்கூட எதிர்பார்க்கவில்லை. அவரது நெத்தியிலிருந்து ரத்தம் வருவதை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்தவன் அதைக் கண்டும் காணாதமாதிரியே அங்கு நின்றிருந்த தனது அம்மாச்சியைப் பார்த்தான்.
அவரும் மகனுக்கு தன் ஏதோ ஆகிவிட்டது என்று பயந்து ஜெயசந்திரனை பாவமாகப் பார்த்து அழுதுக்கொண்டிருந்தார்.
இதுக்கு மேல இங்க நின்றிருந்தால் சரியாகது என்று ஒன்று நினைத்த ரகவரன், ஜெயசந்தினைப் பான்த்துக்கொண்டிருந்த இளந்தீரனின் கையைபுபிடித்து இழுதுதுக்கொண்டு அங்கிருந்து ஓடித்தப்பித்து வெளியே வந்துவிட்டான்!
தாய்மாமான்னா இரத்தசொந்தம்னு பார்த்தால் இங்கென்ன இரத்தம் சிந்துற சொந்தமாயிருக்கு!