அநாயகா-48
அநாயகா-48
பதினைந்து வருடங்களுக்கு முன்பு!
ஜெயச்சந்திரன் மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றிபெற்று, அந்த தொகுதி எம்.எல்.ஏவானதும், வெற்றி கொண்டாட்டங்களோடு சிவானந்தன் வீட்டில் வழியாக போய்கொண்டிருந்தார்.
மூன்றாவது முறையாகவும் அந்த தொகுதியில் எம்.எல்.ஏ எலெக்ஷனில் தோற்று விட்டு மன வேதனையுடன் இருந்தார் சிவானந்தன்.
சிவானந்தன் ஜெயசந்திரன் அரசியலுக்கு வருவதுக்கு முன்னாடியே ஒரு முறை தேர்தல்ல ஜெயிச்சு எம்.எல்.ஏவாகிட்டுத்தான் கல்யாணமே முடிச்சார்.
எப்போ ஜெயசந்திரன் எதிர்கட்சியில் இவருக்கு எதிராக நின்னாரோ, அப்போதிலிருந்தே அவர் தொடர்ந்து தேர்தல்ல தோற்றுக்கிட்டேதான் இருக்கார்.
இப்போ ஜெயசந்திரன் காரில் உட்கார்ந்து, மாலை மரியாதையுடன் போகும்போது, அதைப்பார்த்து வேதனையுடன் திட்டிக் கொண்டிருந்த சிவானந்தனின் அருகில் நின்றிருந்த பத்து வயது மதுமதிக்கு ஏனோ ஜெயச்சந்திரன் மீது அப்பொழுதே கல்லை தூக்கி எறியும் அளவிற்கு கோபம் வந்தது.
“என்னைக்கு இவன் அரசியலுக்குள் வந்தானோ அன்னையிலிருந்து இருந்து எனக்கு ஜெயிக்கிற வாய்ப்பு போயிடுச்சு. இவனும் இவன் குடும்பமும் இல்லாமல் போனால்தான் எனக்கு அடுத்து ஒரு வாய்ப்பு கிடைக்கும்” என்று சிவானந்தன் புலம்பி கொண்டிருந்தார்.
மரகதமும் ஜெயச்சந்திரனையும் அவனது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும்தான் திட்டி, சபித்துக்கொண்டிருந்தார்.
“இவன் செத்தாதான் நம்ம ஜெயிச்சு மேல வரமுடியும் போலிருக்கு, இவனுக்கு அடுத்து வர்றதுக்கு ஆம்பளை வாரிசு இல்லைன்னாலும், அவனோடா தங்கச்சி மகன்களை வாரிசா வளர்க்கிறான். அவன் பொண்ணுங்களையும் அவங்களுக்கே கட்டிக்கொடுத்து அடுத்தடுத்து அந்தககுடும்பமே இதுலதான் பொழைக்கப்போறாங்களாம். அப்படியெல்லாம் நடக்கவேகூடாது. நம்மளை வீழ்த்தி இவனுங்க மேல வர்றானுங்கன்னா அவனுங்க நாசமாகத்தான் போவானுங்க. எனனைக்கு இவன் அழியறானோ அன்னைக்குத்தான் நம்ம நல்லாருருப்போம்” என்றெல்லாம் வாயிக்கு வந்ததைப் பேசி கடுமையான சாபமான வார்த்தைகளால் அப்படி மோசமாக சபித்தார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் மதுமதியின் மூளைக்குள் போய் வசதியாக உட்கார்ந்து கொண்டது.
அன்றிலிருந்து அவளது மனதிற்குள் நம்மளும் அரசியலுக்குள் வரணும், இந்த ஜெயச்சந்திரனைத் தோற்கடிக்கணும் இவன் குடும்பத்துல இருக்கிறவங்களை நாமளே அழ வைக்கணும் என்று எண்ணம் இருந்தது. இதுவும் ஒருவிதத்தில் பழிவாங்கும் எண்ணம்தான் என்றாலும் அது அவங்க அப்பா தோற்றதால் வந்த விரக்தியும், அதனால் பட்ட கஷ்டங்களகனால் வந்த தோணல்களும் என்றுதான் அப்போது அவளோட அப்பாவும் அம்மாவும் நினைத்தார்கள்.
ஆனால் அது அவள் வளர வளர அந்த எண்ணங்கள் முழுதாக உருப்பெற்று முழுமையாகி அப்படியே வளர்ந்து மதுமதியின் முழு உருவமாக மாறுமென்று யாருமே நினைக்கவில்லை.
இங்கே ஜெயச்சந்திரன் வெற்றிப்பெற்ற சந்தோசத்திலும் கொண்டாட்டத்திலும் வீட்டிற்கு வந்தார்.
அவரை வரவேற்க ஒட்டுமொத்தக் குடும்பமும் ஆரத்தியோடு நின்றிருந்தார்கள். யாரு முதலில் பூங்கொத்துக் கொடுத்து ஜெயச்சந்திரன்கிட்ட பணத்தை வாங்குறதுன்னு ஆதிராவுக்கும் இளந்தீரனுக்கும் இடையில் போட்டியே வந்துவிட்டது அது எப்பவும் நடக்கும் போட்டியே. அவர் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் பிள்ளைகளுக்கு பணத்தை வாரி கையில் கொடுப்பார்.
அந்த அளவுக்கு வசதி வாய்ப்புகளோடு அவர்கள் இருந்தார்கள். அதனால் வேறு எந்த பிரச்சனையும் அந்த குடும்பத்திற்குள் இல்லை.
அண்ணன் தங்கச்சி இரண்டு குடும்பமும் எப்பொழுதும் ஒற்றுமையாக சந்தோஷமாகத்தான் இருந்தார்கள்.
அதனால் தங்கச்சியோட இரண்டு மகன்களுக்கும் தன்னுடைய இரண்டு மகளையும் கட்டிக் கொடுத்து, அவர்களை அரசியலில் தன்னை போல உருவாக்க வேண்டும் என்று ஜெயச்சந்திரனுக்கு ஆசை இருந்தது.
அந்த ஆசைக்கு தண்ணி ஊத்துவது போலவே ராவியும் சங்கவியும் பெரியவர்கள் என்ன சொன்னாலும் சம்மதித்து தலையாட்டக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அடுத்தடுத்து வருடங்கள் கடந்து ஓடியது. ரவீந்திரன பி.பீ.ஏ,எம்.பீ.ஏ என்று தனது படிப்பை தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தான்.
சங்கவியோ தனக்கொரு டிகிரி இருந்தா போதும் என்று நார்மல் டிகிரியா பி.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் முடித்துவிட்டு வீட்டோடு இருந்துவிட்டாள்.
இளந்தீரனுக்கோ மாமாவைப்போல பெரியாளாக வரணும்னு ஆசையும் இலட்சியமும் சேர்ந்தது அவரைப் போலவே அரசியலில் தானும் வரவேண்டும் என்ற ஒரு உத்வேகம் இருந்தது.
அதனால் அவன் கல்லூரியில் பீ.ஏ பொலிட்டிக்கல் சயின்ஸ் எடுத்து முடித்தான். அப்பொழுதுதான் ஆதிராவும் பிளஸ் டூ முடித்திருந்தாள்.
அவள் பதின்பருவத்தில் இருக்கும்போது, இவன் அரும்புமீசை முறுக்கில் இருந்தான். இருவருக்கும் ஒரு விதமான ஒரு ஈர்ப்பு அவர்களை அறியாமலே வந்திருந்தது.
அரும்பு மீசையின் குறும்பும் ஆசையும் துள்ளளும் அந்த வயதில் ஆதிராவைப் பார்த்தால், இளந்தீரனுக்கு அவனை அறியாமலயே காதல் மனதிற்குள் பூத்துக் குலுங்கியது.
ஏற்கனவே தாய்மாமா பொண்ணு என்பதால் அவளிடம் வம்பிழுத்து உன்னைத்தான் கட்டிக்கப்போறேன் என்று சொல்லுகிறவனுக்கு,இப்போது உண்மையிலயே அவள் மீது காதல் வந்ததும், அவளை பார்க்கும் போதெல்லாம் அவனுக்குள் பட்டாம்பூச்சி பறக்கத்தான் செய்தது.
அடுத்து எம்.ஏ பொலிட்டிக்கல் சயின்ஸ் வேற க்லேஜ்ல சேருவதற்காக அப்ளைபண்ணியிருந்தான். ஏற்கனவே மாமா எம்.எல்.ஏ,அதனால் எங்கப்போனாலும் சீட்டுக்கிடைக்கும் என்பதால் அவனும் பெருசா எதுக்குமே அலட்டிக்கவில்லை.
அவன் ஜெயசந்திரனின் வீட்டுக்கு வந்தவன் “மாமா நான் உங்கக்கட்சியில் அடிப்படை உறுப்பினராக சேரலாம்னு இருக்கேன். அப்போதானே நாளைக்கு நான் உங்களுக்கு அடுத்தது ஏதாவது வரமுடியும். என்னையும் உங்க கட்சியில சேர்த்துவிடுங்க”என்று நேரடியாகவ கேட்டான்.
அதைக்கேட்ட ஜெயசந்திரன் சத்தமாகச் சிரித்தவர் “நீதான்டா அடுத்து என் வாரிசா வரப்போறா. வா உடனே வந்துசேர்ந்துக்க. ஆனால் கட்சியில பதவியெல்லாம் இப்போதைக்கு தரமாட்டோம். அடிப்படை உறுப்பினரா இருந்து முதல்ல கள அரசியலைப்படி. அப்புறம் மெது மெதுவா மேல வா. எனக்கு அப்புறம் நீ வந்து அங்க இருக்கிறளவுக்கு உன் திறமையை ஸ்ட்ராங்கா வளர்த்துக்க”என்று மருமகனாக இருந்தாலும் எல்லாம் தெரிஞ்சிட்டுத்தான் வரணும் என்று நினைத்துச் சொன்னார். அடுத்த நாளே அவனைக் கூட்டிட்டுப்போய் கட்சியில் உறுப்பினாரக்கினார்.
அந்த சந்தோசத்தில் வீட்டுக்கு வந்தவன் அப்படியே சங்கரி ஆத்தாக்கிட்ட வம்பிழுத்துவிட்டு, ஆதிராவைப் பார்க்க அவளது ரூமுக்குப் போனான்.
அங்க ட்ரஸ் மாத்திட்டு வெளிய போகக் கிளம்பி வந்த ஆதிராவைப் பார்த்ததும் அவளது கையைப் பிடித்துக்கொண்டான்.
“ப்ச்ச் என்னத்தான் பண்றீங்க. கையை விடுங்க. எனக்கு காலேஜ் அட்மிஷனுக்குப் போகணும். அப்பா ரெடியாகிட்டு இப்போ வந்திடுவாங்க”
“ஆமா பெரிய காலேஜ் அட்மிஷனு போடி. எப்படியும் என்னைக் கட்டிக்கிட்டு அடுத்த எம்.எல்.ஏ இளந்தீரனோட பொண்டாட்டியாகப் போற அதுக்கு எதுக்குடி கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஞ்சினியரிங் படிக்கணும். வா என்கூட சேர்ந்து பீ.ஏ பொலிட்டிக்கல் சயின்ஸ் படி. இப்பவே நம்ம சேர்ந்தே காலேஜ்க்கு போகலாம்”என்றவன் கண்ணடித்தான்.
அவன் கண்ணடித்ததும் வெட்கப்பட்டவள் “எனக்கு ஒன்னும் உங்க பொலிட்டிக்ஸ்ஸும் வேண்டாம் சயின்ஸும் வேண்டாம். நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கப்போறேன். எனக்கு அதுதான் பிடிச்சிருக்கு”என்று கெத்தாகச் சொன்னவளை இழுத்து சுவரோடு சாய்த்தவன் அவளது கண்களைப் பார்த்தான்.
அவளால் அவனது பார்வையை தாங்கிக்க முடியாது இமைகளைத் தாழ்த்தியவள் “ என்னத்தான் பண்றீங்க?கையை எடுங்கத்தான் நான் போணும்”என்று சிணுங்கிக்கொண்டிருந்தவளின் கன்னத்தில் பச்செக்கென்று பளிச்சுன்னு ஒரு முத்தம் வைத்தான்.
அதில் அதிர்ந்து அவனது கண்களைப் பார்த்தவள், அப்படியே கோபத்தில் முறைத்தாள்.
அவள் கோபப்பட்டதும் அடுத்த கன்னத்தில் இன்னும் அழுத்தமாக முத்தத்தைக் கொடுத்தவன் “மாமா பொண்ணாக இருந்தாலும் இப்படி காதலிக்கிறது செம திரிலிங்கா இருக்குதுடி என் பொண்டாட்டி”என்று சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தான்.
“உங்க சேட்டைக்கு அளவில்லாம போச்சுத்தான். இதைப்போய் இப்பவே அத்தைக்கிட்ட சொல்லுறேன்”என்று பொய்யான கோபத்தில் அவனது நெஞ்சில் கைவைத்துத் தள்ளிவிட்டு விலகியவளின் கையைப்பிடித்து இழுத்து நிறுத்தினான்.
“தீராத்தான் கையைவிடுங்க. இதுசரியில்லை”
“எது சரியில்லை என் முத்தமா?அதை சரியாக்கிட்டா போச்சுது”என்றவன் மீணடும் முத்தம் குடுக்க குனியவும் அவள் விலக முயன்றாள்.
அவ்வளவுதான் ஒரு வேகத்தில் அவளை இழுத்து நிறுத்தியவன்,அவனது தலையை சரித்து சட்டென்று அவளது ரோஜா இதழை கவ்விப்பிடித்து தனது பற்களுக்குள் வைத்து அழுத்தினான்.
அவனுக்குமே இது முதல் இதழ் முத்தம் என்பதால் ஒரு அவசரமும் பதற்றமும் அவனோடு ஒட்டிக்கொண்டிருந்தது.
ஆனாலும் அந்த முத்தம் கொடுக்கும் போதைக்கு அடிமையாகிப்போனான். அவளுக்குமே பயம் சொற்றிக்கொள்ள அப்படியே பயந்து அவனைத் தள்ளிவிடத்தான் பார்த்தாள்.
ஆனாலும் அவளுக்குள்ளும் ஒரு விதமான காதல் கிளர்ச்சி உண்டாக அந்த முத்தம் தித்தித்தது.
அவளது இதழ்களை மெதுவாக கடித்து வேகமாக இழுத்தவன் அவளது தோளைப்பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.
அவளது தேகம் நடுங்க, அவளை ரசித்தவாறே அவளிடமிருந்து விலகினான்.
“ஹாய் பொண்டாட்டி. எப்படியிருக்கு இந்த அத்தானோட முத்தம்?ம்ம்ம்” என்று கேட்டுவிட்டு புருவத்தை ஏத்தியிறக்கினான்.
அப்போதே மொத்தமாக அவளதை நெஞ்சுக்குள் குடிபோய்விட்டான் இந்த கோக்குமாக்கான். இன்னும் அவளது நெஞ்சுக்குள் அழியாத பிம்பமாக இளந்தீரனே இருக்கிறான்.
இப்போ மகேஷ்வரி “ஆதிரா இன்னும் கிளம்பலையா?” அப்பா ரெடியாகிட்டாங்க பாரு”என்று சத்தம் கொடுத்ததும்தான் இருவருமே விலகி நின்றார்கள்.
அந்த விலகல் நிரந்தரமாகப்போகுது என்று இருவருக்குமே அப்போது தெரியவில்லு.
அவர்களது காதல்வானில் வேறெந்த மேகமும் இடையூறாக வாராது என்று எண்ணியிருந்தார்கள்.
ஆனால் அவர்களின் வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப்போடவே ஒருத்தி தயாராகிவருகிறாள் என்பது அப்போது அவர்களுக்கு தெரியாதே!
அப்படித் தெரிஞ்சிருந்தாலும் இந்த இளந்தீரன் இதையேதான் அப்பவும் பண்ணிருப்பான். இவன் மேக்கு அப்படி!
இங்கு சிவானந்தன் தனது அக்கா மகன் ரகுவரன் தன் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருந்தார். அவனோட அப்பா அம்மா இரண்டுபேரும் ஒரு ஆக்ஸிடெண்ட்ல இறந்துவிட்டதால்,அவனது பெரிய அண்ணனை படிப்பதற்காக ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு இவனை தன்னோடுக் கூட்டிட்டு வந்தார்.
அந்த இளம்பபருவத்திலிருந்தே ரகுவரனை மதுமதிக்கு ரொம்ப பிடிக்கும். பதின் பருவத்தில் ரகுவரனும் அவளும் காதலிக்க ஆரம்பித்தார்கள்.
மதுமதியைப் பொருத்தவரைக்கும் அவள் விரும்பினால் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எதுனாலும் விரும்புவாள் உண்மையாக விரும்புவார். தனது முழு அன்பின் செலுத்தலாம் அதேபோலத்தான் ரகுவரன் இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ளனும் என்ற முடிவோடு இருந்தால் ஆனால் அதைவிட அதிகமாக அவள் அரசியல் பதவியை விரும்பினாள்.
ரகுவரனுமே அவளை உண்மையாகவே காதலித்தாள். மதுமதி அவனைவிட அதிகமாக இந்த அரசியலை காதலித்தாள்.
அவங்க அப்பா எந்த இடத்தில ஜெயிக்க முடியாமல் தோறுப்போய் வேதனையில் உட்கார்ந்து இருக்கிறாரோ, அதே இடத்துல அவள் ஜெயித்து உட்காரனும்னு பேராசை அவளுக்குள் அப்பவே உருவாகிருந்தது.
அதற்கான சந்தர்ப்பங்களுக்காக கொக்கு போல மதுமதி பொறுமையாக காத்திருந்தாள்.
அவளது காத்திருப்பதற்கு பதிலாக அந்த வாய்ப்பு அவளது கல்லூரி பருவத்தில் அவளுக்குத் தேடிவந்தது.
இளந்தீரன் ரகுவரனும் ஆதிராவும் படிக்கும் அதே கல்லூரியில் சேர்ந்தான்.
அதுவும் ரகுவரன் படிக்கும் அதே எம்.ஏ பொலிட்டிக்கல் சயின்ஸ் வகுப்பிற்குள்தான் நுழைந்தான்.
அன்றிலிருந்து கிட்டதட்ட பனிரெண்டு வருடம் இளந்தீரனின் தலையெழுத்தை எழுதியது அவங்க இரண்டுபேரும்தான். அதுவும் முக்கியமாக மதுதியின் கைப்பாவையாகிப்போயிருந்தான் இளந்தீரன்!
மதுமதி தேர்ந்த சகுனியின் பேத்தியாக இருந்தாள்!!அவள் தாயம் உருட்டியதில் ஆதிராவின் வாழ்க்கையுமல்லவா சேர்ந்து உருண்டது!