அநாயகா-12
அநாயகா-12
இளந்தீரனோ அப்படியே அதிர்ச்சியாகி பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் பின்னாடியே வந்த நல்லபெருமாள்தான் “என்ன எதிர்கால சீ.எம்க்கு அதிர்ச்சியாக இருக்குப்போல. அவங்க வர்றது உன்னை வெளியே எடுக்கிறதுக்காக இல்லை. எங்க உன் உயிர் நண்பன் அந்த ரகுவரனையும் உன் கட்சித்தலைவனையும் காணலை. இராத்திரிதான் வரமுடியலை. இப்பவும் வரமுடியலையா என்ன? பொறுத்திருந்து, காத்திருந்து பாருடா வெண்ணெய்”என்றுவிட்டு தன்னுடைய அறைக்குள் போய்விட்டார்.
அதைக்கேட்ட இளந்தீரன் ஒருவிதமான உணர்வோடு காரில் வந்திறங்கியவர்களைப் பார்த்தான். எப்போதும் அவர்களைப் பார்த்தால் கண்களிலும் வார்த்தைகளிலும் வெறுப்பை கக்கும் அவன், இன்று அமைதியாக தாயைத் தேடும் குழந்தையைப் போல, கண்கள் ஒருமாதிரி அலைபாய பார்த்து நின்றான்.
இவ்வளவு நேரமாக இன்ஸ்பெக்டரிடம் வாய்கிழிய பேசினவன் இப்போ வாயைடைச்சுப்போயிருந்தான்.
அவர்கள் ல்டேஷனுக்குள்ளே வருவதற்காக அவனை நோக்கி நடந்து வரவும்,இளந்தீரனுக்கு முகம் ஒரு மாதிரி கோணலாக போயிற்று.
இதுக்குமேல இவங்களைப் பார்க்கவும்கூடாது,இங்க நிக்கவும்கூடாது என நினைத்து திரும்பிய வேகமாக உள்ளே வந்தவன், ஏற்கனவே உட்கார்ந்திருந்த அந்த சேரை எடுத்துப்போட்டு திரும்பி அவர்களை பார்க்க முடியாத திசையில் போட்டு உட்கார்ந்துக்கொண்டான்.
அவனை இராத்திரியோடு இராத்திரியா அரஸ்ட் பண்ணி, ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்தாலும், அவனை அந்த செல்லுக்குள்ளேயும் போடல, வெளியேவும் விடல. அதனால் அவனால் சரியாகத் தூங்கவும் முடியல. இரவு முழுவதும் அந்த சேரிலயேதான் உட்கார்ந்திருந்தான்.
அவனது கண்கள் தூக்கத்திற்கு கெஞ்சினாலும் தன்னைத் தேடி, தன்னை வெளியே எடுப்பதற்காக தனது கட்சித் தலைவரும், தனது உயிர் தோழனும் வருவாங்க என அசைக்க முடியாத நம்பிக்கையோடு மீண்டும் அதில் வந்து இப்போது உட்கார்ந்தான்.
அதற்குள் மகேஸ்வரியும் ஆதிராவும் உள்ளே வந்தவர்கள், தங்களை பார்க்கக்கூடாது என்று சேரைத் திருப்பிப் போட்டு உட்கார்ந்திருந்த இளந்தீரனை கோபத்தோடும்,ஒருவித இயலாமையோடும் பார்த்தார்கள்.
ஆதிராவது கொஞ்சம் நிதானமாக இருந்தாள். ஆனால் மகேஸ்வரியோ அவனைப் பார்த்ததும் சட்டென்று உணர்ச்சிவசப்பட்டவர் நேராக அவன் முன்புபோய் நின்றார்.
தன் முன்னாடி வேகமாக வந்துநின்ற அத்தையைப் பார்த்ததும், அவனுக்கு என்ன செய்யவென்று தெரியாது ஏறிட்டுப் பார்த்தான்.
“ஏன்டா என் புருஷனை இப்படி செஞ்ச? என் தங்கச்சி மகன், என் தங்கச்சி மகன்னு நீ என்ன செய்து வைச்சிருந்தாலும் அதையெல்லாம் பொறுத்துப்போனாரே. அப்படி உனக்காக பார்த்துப் பார்த்து தூர ஒதுங்கிப்போனாரே,அப்படியிருந்த என் புருஷனையே இப்படி குற்றுயுரும் கொலையுருமாக ஆஸ்பத்திரியில படுக்க வைச்சிட்டியே. நீயெல்லாம் நல்லாவேயிருக்கமாட்டடா! பிச்சைக்காரன் மாதிரி நீ நம்பியிருக்கிறவனுங்களாலே அடிவாங்கி சாகப்போறப்பாரு, நீ நல்லாவே இருக்கமாட்டடா,நாசமாபோயிடுவ என் புருஷனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா உன்னை நான் சும்மா விடமாட்டேன்டா. உனக்கு தூக்கு தண்டனைக் கிடைக்க என்னவெல்லாம் செய்யணுமோ அதையெல்லாம் செய்வேன் பாருடா”என்றவருக்கு அழுகையை அடக்க முடியாது அழுதார்.
இருபத்தைஞ்சு வருஷத்திற்கு மேலான கல்யாண வாழ்க்கையில் ஜெயசந்திரன் அவரை அப்படி காதலோடு பார்த்துக்கிட்டார், இரண்டுபேரும் அவ்வளவு ஒற்றுமையாவும் அந்நியோந்நியமாவும் வாழ்ந்திட்டிருந்தாங்க. அதைப்போய் கெடுத்துட்டு அவங்க கணவைனையே அடிச்சு ஹாஸ்பிட்டல சீரியஸ்ஸா படுக்கவைச்சிட்டானே என்ற வலியிலும் வேதனையிலும் அழுதவரால் நிற்கக்கூட முடியவில்லை.
அவர் தள்ளாடியபடி நிற்கவும் இளந்தீரன் தானாகவே அவரைப் பிடித்து நிறுத்து, தன்னை அறியாது எழுந்து அவரைப் பிடித்து நிறுத்தினான்
அவரோ அவன் கையைப்பிடித்தும் கோபத்தில் அவனைப் பிடித்து தள்ளிவிட்டார். அவனோ
அசையாது மரம் போன்று நின்றிருந்தான்.
மகேஸ்வரி எப்பொழுதும் அவனைக் கண்டால் கோபத்தில் இப்படித்தான் பேசுவார் என்பதால், அதை அவன் காதிலே வாங்கிக் கொள்ளாது நின்றான்.
“நான் என்ன அப்படி கொலைக்குத்தம் பண்ணிட்டேன். உங்க வீட்டுக்காரர் எங்களை கட்சி சார்பா தூண்டிவிட்டாரு,நான் கல்லைத் தூக்கி எறிஞ்சேன் அவ்வளவுதான். இதுக்கு என்னவே பெருசா போலீஸ்ஸ்டேஷன்ல உட்கார வைச்சிருக்கானுங்க. இதுல நீங்க இரண்டுபேரும் வந்து பிரச்சனை பண்ணிட்டிருக்கீங்க. அவருக்கெல்லாம் ஒன்னுமாகிருக்காது. இப்போவே எழுந்து உட்கார்ந்திருப்பாரு. அவரைப்போய் கவனிங்க. இங்க வந்து என்கிட்ட சண்டைப்போடாதிங்க. அம்மாவுக்கும் மகளுக்கும் வேற வேலையில்லை போல” எனத் திட்டியவன் மீண்டும் சேரில் உட்கார்ந்தான்.
அதற்குள் ஆதிரா வேகமாக வந்து மகேஸ்வரியை பிடித்த இழுத்து தன்பக்கமாக நிறுத்தினவள் “அம்மா இப்போ எதுவும் பேசாதீங்க. நம்ம எதுக்கு வந்திருக்கோம்னு தெரியாம அத்தான்கிட்ட சண்டை போடாதீங்க. அத்தானைதான் அரஸ்ட் பண்ணிருக்காங்கல்ல. நம்ம நேரடியாகவே அவர் மேல கேஸ் கொடுக்க வந்திருக்கோம். லாயரும் ரவி அத்தானும் பின்னாடி வந்திருக்காங்க. நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க” என்று ஆதிரா மகேஸ்வரி சமாதானப்படுத்த முயன்றாலும் அவளது கண்களோ அவளையும் அறியாது இளந்தீரனைத்தான் பார்த்தது.
அவனோ அவள் பேசியதையும் கண்டுக்கலை,அவளையும் கண்டுக்கலை.
“நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க, செய்துக்கோங்க எனக்கு அதுல ஒரு பிரச்சனையும் இல்லை. எனக்கு பக்கபலமாக என் கட்சியும் கட்சித்தலைவரும் இருக்காங்க. என் நண்பன் இருக்கான். இவங்கெல்லாம் என்னைக் கைவிட்டாலும் என்னை யாருக்கிட்டயும் விட்டுக்கொடுக்காத என்காதலி மதுமதி இருக்காள். அதனால் நீங்க என்ன மாதிரி ட்ராமா பண்ணினாலும் நான் அசேயமாட்டேன். என்மேல கொலைக் கேஸே கொடுத்தாலும் இன்னைக்கே உங்க கண்ணு முன்னாடி வெளியே வந்திடுவேன். என் கட்சியோடவும் கட்சி ஆட்களோடவும் நின்னு பேசுவேன்.அதையும் நீங்க பார்க்கத்தானே போறீங்க” என சொன்னவன் தெனாவெட்டாக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தவாறு ஆதிராவை திரும்பிப்பார்த்தான்.
அவனது அலட்சிய பார்வையை எதிர் கொண்ட ஆதிரா உனக்கு நான் சளைத்தவள் இல்லை என்ற ரீதியில் அவனை எதிர்பார்வை பார்த்தாள். இமைத்தட்டா பார்த்தாள்.
அந்தப் பார்வையில் தடுமாறிப்போனான். அவனுக்குள் குறுகுறுவென்று ஏதோ உணர்வு தூண்டப்பட்டது. இதுக்குமேல இவளைப் பார்க்கக்கூடாது. இவள் பார்வையாலயே நம்மள வசியம்பண்ணிடுவா!யப்பா எப்படி பார்க்கிறா பாரு என நினைத்தவன், அவளது பார்வை எதிர்கொள்ள முடியாது தனது முகத்தை திருப்பிக் கொண்டான்.
“நீயெல்லாம் அவ்வளவுதானா?என் பார்வையைத் தாங்கிக்க முடியாமல் தடுமாறுற. இதுல எங்கப்பாவை அடிச்சிப்போட்டுட்டேன்னு கெத்தா வந்து போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார்ந்திருக்க. உனக்குப் பயப்படுவனுங்க எல்லாத்தையும் தூக்கிப்போட்டு மிதிக்கணும். நீ எங்கப்பாவுக்கு பண்ணினதுக்கு உனக்கு சரியான தண்டனை கிடைக்கும், காத்திட்டிரு’ என்று உள்ளுக்குள்ளே மறுகி அவனைத் திட்டிக்கொண்டிருந்தாள்.
அவர்களைப் பார்த்த நல்லபெருமாள் “மேடம் நீங்க என்ன இங்க வந்துட்டீங்க? உங்க லாயரும் ரவிசாரும் மட்டும் வர்றதாதானே சொன்னாங்க. வாங்க வந்து உட்காருங்க. ரைட்டர் ஏற்கனவே கம்ப்ளைன்ட் எல்லாம் சரியா எழுதி வச்சிருக்காங்க. எதுக்கும் நீங்க ஒரு தடவை அதை செக் பண்ணி, படிச்சு பார்த்துட்டு எது சரி பண்ணனுமோ அதை சரி பண்ணி எழுதி கொடுங்க.ஏற்கனவே எஸ்.பி சார் போன் பண்ணி கேஸ் என்னாச்சுன்னு கேட்டு பிரஸர் குடுக்கிறாங்க. சீக்கிரம் இவனைக் கொண்டுபோய் கோர்ட்ல் ஆஜர் பண்ண ஆர்டர் போட்டிருக்காங்க”என்று அடுத்த நடக்க வேண்டியதைப் பற்றி தெளிவாக பேசிக் கொண்டிருந்தார்.
இதுவரைக்கும் என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் என்று கேசுவலாக இருந்த இளந்தீரன், இன்ஸ்பெக்டர் சொன்னதைக் கேட்டதும் ஒரு பயப்பந்து மெதுவாக உள்ளுக்குள்ளிருந்து எழுந்தது.
இதுவரைக்கும் எத்தனையோ பிரச்சனை மாமாகிட்ட பண்ணி இருக்கேன் ஆனா ஒருதடவைக்கூட கேசானதே இல்லை. கோர்ட்டுக்கு பக்கமெல்லாம் போனதேயில்லை. ஆனால் இப்போ என்ன கோர்ட்டுக்கு போகணும்னு எல்லாம் பேசிட்டு இருக்காங்க? இதெல்லாம் சரியா படலையே! உடனே ரகுவரனுக்கு போன் பண்ணி சொல்லுவோமா? இல்லன்னா போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ஒரு ஆள் அனுப்பி நம்ம கட்சி தலைவர்கிட்டாபேச சொல்லுவோமா? என அவனது மூளை டக்க டக்கென்று அடுத்தடுத்த யோசிக்க ஆரம்பித்தது.
அவனது நம்பிக்கை முழுவதும் சிவானந்தன் மீது ராகவரனின் மீதும்தான் இப்போதுவரைக்கும் இருக்கின்றது.
‘இவனுங்க எவ்வளவு பெரிய கேசாக போட்டிருந்தாலும் அவங்க இரண்டுபேரும் வந்து தனக்கு பக்கபலமாக நிற்பாங்க. இந்த கேசிலிருந்து தன்னை ஈஸியாவிடுதலை பண்ணி வெளியே கொண்டுவந்திடுவாங்க. எவ்வளவோ பார்த்துட்டோம் இதைப் பார்த்துக்க மாட்டோமா? உயிர்நண்பன் இருக்கும்போதுஎதுக்குப் பயம்இளந்தீரா!’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தான்.
அவனது கண்கள் ரகுவரனை எதிர்பார்த்து வெளியே பார்த்திருந்தது. அப்போது அவன் முன்பாக ரவிதான் வந்து நின்றான். அதுவும் ஜெயசந்திரனின் வக்கீலோடு வந்து நின்றான்.
அவனையும் வக்கீலையும் பார்த்ததும் இவன் வக்கீலோடு வந்திருக்கான். ஒருவேளை கவிதாகுமாரி நம்ம மேல உள்ள பாசத்துல இவனை ஜாமீனெடுக்க அனுப்பி வைச்சிருக்காங்களோ? இருக்கும் இருக்கும். அதுசரி அப்போ இளந்தீரன் மேலயும் பாசமிருக்கு. ஆனால் அவன் வர்றதைப் பார்த்த அப்படித் தெரியலையே! எதுவோ ஒன்னு இவன் வந்து நம்மளைக் கூட்டிட்டுப்போக வந்திருந்தால் அவன்கூடப்போகக்கூடாது. இவன்கூட போனால் என் கௌரவம் என்னவாகும். எதிர்காட்சித் தலைவர அடிச்சிட்டு,அவரு பீ.ஏக்கூடவே வெளியேவந்துட்டான்னு நமக்கு ஒரு இழிச்சொல் வந்திடும். அதனால நம்ம கட்சியில் இருந்து வெளியே எடுக்கிறவரைக்கும் என்னவானாலும் இங்கயேதானு இருக்கணும் என உறுதியாக நினைத்தவன் ரவிந்திரனைப் பார்த்ததும் கெத்தாக அவனை மதிக்காது கெத்துக்காட்டுற மாதிரி உட்கார்ந்திருந்தான்.
உன் நினைப்புத்தான் உன் பொழைப்பைக் கெடுக்குது இளந்தீரா!
ஆனால் ரவியோ இளந்தீரன் என்பவன் தனது தம்பி, அப்படிங்கிற எந்த நினைப்பும் இல்லாமல்,அங்கே அப்படியொருத்தன் பாவமாக உட்கார்ந்திருக்கிறானே என கண்டுக்காது, அவனைத் தாண்டி நேராக இன்ஸ்பெக்டரிடம்தான் போனான்.
அவனுக்காக பேசவா அவனுக்காக செயல்படவோ அவனது இரத்தச் சொந்தங்கறாக இருந்தும் யாரும் முன்வரவில்லை. அவன் செய்த செயலுக்கு இன்னும் நல்லா அனுபவிக்கட்டும் என்று நினைத்தவர்கள் அவனுக்காக இரக்கப்படவேயில்லை.
ரவியை பார்த்ததும் இன்ஸ்பெக்டர் மரியாதைக் கொடுத்து உட்கார சொன்னவர் கம்பயிண்ட் காப்பியை ஆதிராவின் கையில் கொடுத்தார்.
ஆதிராவோ அதைப் படித்துப் பார்த்துவிட்டு ரவியிடமும் வக்கீலிடமும் கொடுத்து சரிபார்த்தவள் இப்போது அதில் கையெழுத்துப்போடுவதற்காக கையில் எடுத்துப் பார்த்தாள்.
அந்தக் கம்ப்ளைண்ட் பேப்பரை கையில் வைத்துக்கொண்டு கொஞ்சநேரம் யோசித்தவள், அதில் கையெழுத்து போடுவதற்கு முன்பாக ஒரு முறை திரும்பி இளந்தீரனைப் பார்த்தாள்.
அவனுமே அந்த நேரத்தில் சரியாக அவளைத் திரும்பிப் பார்த்தான். அவளும் தன்னைப் பார்க்கிறாள் என்று உணர்ந்தாலும், அவளது பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் அதை அவன் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை.
உடனே அலட்சியமாக உதட்டை வளைத்து சிரித்தவன், அப்படியே தோளைக்குலுக்கி “நீ என்ன வேணும்னாலும் பண்ணு. என்ன மாதிரியான கேஸ் வேணும்னாலும் போடு. எனக்கு அதைப் பத்தியெல்லாம் எந்தவிதமான கவலையும் இல்லை. போடி”என்று தலையாட்னான்.
அவனது பார்வையின் அர்த்தம் புரிந்த ஆதிராவுக்கு மனது அவ்வளவு வலித்தது. இந்த அத்தான் எப்போதான் திருந்தப்போறாங்களோ தெரியலை. இவங்களை நினைச்சே அப்பாவுக்கு அவ்வளவு கவலையா இருந்துச்சு. இப்போ கோமாவுல இருக்காரு. அந்த குற்றவுணர்ச்சியே இந்த அத்தான்கிட்ட இலலையே என்று வருத்தப்பட்டவள், லேசாக கசந்த புன்னகையோடு அவனைப் பார்த்துவிட்டு, இப்போதீ வேக வேகமாக கையெழுத்து போட்டாள்.
அவனது மொத்த தலையொழுத்தும் அவளது அந்த ஒற்றை கையெழுத்தில் மாறப்போவது தெரியாமல் அந்த அடிபட்ட சிங்கம் உட்கார்ந்து இருந்தது!