துனை தேடும் கனை

thunai

துனை தேடும் கனை

துனை தேடும் கனை !! 

துனை கனை _ மூங்கில் 

(மூங்கிலோடு மூங்கில் தான் இணை சேர முடியும் ) 

டீசர் 

உஷாவை பட்டுச்சேலையில் அலங்காரம் பண்ணி அழகிய பதுமை போல மணமேடையில் வந்து வேதா அமர வைத்தாள் .. வீரா மாலையை அடிக்கடி சரி செய்து கொண்டே திரும்பி உஷாவை பார்த்தான் .. ஆனால் அவள் பார்வையோ நேராக வெறித்தபடி இருந்தது ... 

ஏன்டி உஷ் உன்ன பார்த்தா புதுப்பொண்ணு  போல  இல்லடி , எதுக்கு கிலோ இஞ்சை கொத்தா தின்னது போல முகரையை வச்சிருக்க ... ஏன் வீரா மாமா நீங்க எதுவும் அவள வைது வச்சிட்டியலா,  வீரா திருட்டு முழி முழித்தான் ... 

"எனக்கு என்ன தெரியும் வேதா , அவ என்கிட்ட பேசி ரெண்டு வருசம் ஆகுது "

"ஆத்தே !!!என்ன சொல்றீங்க,  உங்கிட்ட பேசி ரெண்டு வருசம் ஆகுதா ?வேதா நெஞ்சில் கை வைக்க,  உஷா எதையும் காதில் வாங்காதவள் போல அமைதியாக மண்டப வாசலை பார்த்து கொண்டிருக்க ..

கட்டி மேளம் கட்டி மேளம்!! என்ற குரலில் வீரா தாலியை தயங்கி தயங்கி எடுத்து உஷா கழுத்து அருகே கொண்டு போக,

"வெயிட்" , என   அவன் மணிக்கட்டை பிடித்து நிறுத்தியிருந்தாள் உஷா .. 

"என்னாச்சி ? "

"என்னாச்சி என அனைவரும் சலசலக்க..

"ஒரு நிமிசம் ...என்ற உஷா ... தன் ஜாக்கெட் மறைவில் கிடந்த தாலியை எடுத்து தூக்கி காட்ட,  வீரா முதல் கொண்டு அனைவரும் அதிர்வு தாங்காது அவளை பார்க்க ..

"இந்த தாலியை கட்டினவனே,  வந்து அறுத்து போடட்டடும்,  அடுத்த நிமிசம் நான் வீரா மாமா கையால தாலி வாங்கிக்கிறேன்,  அதுவரை காத்திருங்க மாமா  "என்று அலுங்காமல் குலுங்காமல் உஷா குண்டை போட,  ஈ மோய்க்க வில்லை ...

டூபுடுபு என புல்லட் சத்தம் கேட்டு அனைவரும் மண்டப வாசலை திரும்பி பார்க்க , புல்லட்டை கூட நிறுத்த அவகாசம் இல்லாது,  போட்டுவிட்டு வெள்ளை வேட்டி சட்டையில் , சட்டையை மடக்கி கொண்டே படிகளில் ஏறி ஓடி வந்தான் .. 

பூபதி  

( செக் விண்ணோடு உறவாடும் முகிலே )

எவளுக்கோ கோவத்தில் தாலி கட்ட போய், தோழி அறையில்  மாறி படுத்திருந்த உஷா கழுத்தில் தாலியை கட்டி விட்டு திண்டாடும் அக்மார்க் அப்பாவி டெரர் பாய் .. 

சட்டையை மடக்கி கொண்டே வந்த பூபதி மணமேடையில் பல்லை நரநரத்து கொண்டு அவனை பார்த்த உஷாவை கண்டு,  மடக்கிய  வேட்டியை  இறக்கி விட்டுவிட்டு , அவள் முன்னால் தலை குனிந்து நின்றான் ..

தவறை செய்து விட்டு பி, ராயச்சித்தம் தெரியாமல் ரெண்டு வருடமாக சுற்றுகிறான்...

"கூப்பிட்டு  விட்டிங்களாமே ராஜாத்தி"  ...

"ம்ம் ..நீ கட்டின தாலியை அறுத்து போட்டுட்டு போ" என்று அவள் உறுதியான குரலில் விழுக்கென்னு பூபதி தலையை தூக்கி அவளை கூர்மையாக பார்த்தான் 

"என்ன பார்த்துட்டு இருக்க , என்ன வேணும்னாலும் செய்வேன்னு சொன்னல்ல,  கழட்டி போட்டுட்டு போ.. 

"முடியாது ராஜாத்தி,  வேற எதனாலும் சொல்லுங்க செய்றேன் , கட்டின தாலியை கழட்ட முடியாது என்றான் அவனும் உறுதியான குரலில் 

"உனக்கம் ஒரு வாய்ப்பு தர்றேன்... வாய்ப்பை தவற விடாத,  என் குணம் உனக்கு தெரியாது , கோவத்தில்  துடித்த  இதழை கடித்தாள். எத்துனை ஆசை வீராவோடு வாழ ஆனால் மண்ணாக்கி விட்டானே இப் பாதகன் ... 

"என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க ராஜாத்தி , ஆனா நான் உங்க கழுத்தில கட்டின தாலியை கழட்ட மாட்டேன் ...." அனைவரும் இது என்னடா கிளை கதை என்று வாயை பிளந்து நிற்க..

உஷா மாலையை பிய்த்து அவன் மீது விசிறி அடிக்க ஆறடி சிலை அழகு போல கருப்பு நிறத்தில் வெள்ளை வேட்டியில் நின்ற , அந்த ஆணும் தான் செய்த தவறுக்கு அத்தனை பேர் முன்னாக அவள் செய்யும் அவமானத்தை வாங்கி கொண்டு நின்றான் .... உஷா நேரே இறங்கி பூபதி அருகே போனவள் 

"கழட்ட முடியாதா ?

"முடியாது ..

"ஓஓஓ கழட்ட வைக்கிறேன்டா" என்று பல்லிடுக்கில் பேசியவள் ..

" அப்போ நீதான் என் புருஷன் அப்படித்தான?

 "இந்த தாலிக்கு அதுதான் அர்த்தம்ங்க ராஜாத்தி 

"ஓஓஓ  அப்போ புருஷன் பொண்டாட்டிக்கு செய்யுறது தப்பு இல்லைல்ல.."

"இல்ல ராஜாத்தி 

"ம்ம் அப்ப  என் செருப்பு வாரை மாட்டி விடு" என்று உஷா  காலை நீட்ட .... பூபதி ரத்தம் முறுக்கி வந்தாலும் தன் தவறின் அளவு கண் முன் வர , அவள் முன் அந்த ராட்சத உடல் முட்டி போட்டு அமர..  உஷா தன் செருப்பு காலை தூக்கி அவன் தொடையில் வைக்க ஊரே வேடிக்கை பார்க்க அவன் கை அவள் பாதம் தொட்டு செருப்பை மாட்டியது ...

அவனுக்கு தேவை அவள் மன்னிப்பு , 

அவள் கொடுக்க விரும்பாதது மன்னிப்பு ...

எங்கனம் மூங்கில் தேசத்தில் காதல் காற்று நுழைய ..... 

ஜூன் 25 முதல் வரும்