கோணலாய் காதல் செய்(யாதே)
Kaa

கோணலாய் காதல் செய்(யாதே)
டீசர்
ஜனவரி பத்து முதல் சைட்டில் ஆன்கோவிங்கா வரும் மச்சீஸ் ...
சென்னையில் பணக்காரர்கள் வசிக்கும் அந்த அழகிய கண்ணாடி மாளிகை அது
அடேயப்பா இப்ப கூட கூட்டு குடும்பம் எல்லாம் இருக்கா என்பது போல இரண்டு அண்ணன் குடும்பம் இரண்டு தங்கை குடும்பம் என்று அந்த மாளிகையில் மொத்தம் நாலு குடும்பம் வசிக்கிறது ..
ம்ம் ஒத்துமையான குடும்பம் என்று அனைவரும் வாயை பிளப்பர் உள்ளே உள்ள விரசல் ஓட்டை உடைசல் அவர்களுக்கு என்ன தெரியும் ....
டக் டக் என்று கைத்தடி சத்தம் அந்த மாளிகை உள்ளே கேட்டது அவர்தான் இந்த குடும்பத்தை பிரிய விடாது பிடித்து வைத்திருப்பது..
ஜெயசிங்மணிரத்தினம் நான் சாகும் வரை அத்தனை பேரும் ஒன்னா ஒரே வீட்டுல தான் இருக்கணும் இல்லைன்னா கோடிகணக்கான சொத்தை ஆஸ்ரமத்துக்கு எழுதி வச்சிடுவேன் என்று மிரட்டி மிரட்டியே இதோ 30 வருடத்தை ஓட்டி விட்டார் இவரும் செத்த பாடில்லை சொத்தும் பிரிச்ச பாடில்லை....
மூத்தது இரண்டு ஆண்மகன் அவர்களுக்கு தலா ஒவ்வொரு ஆண் பிள்ளைகள் , அடுத்து இரண்டு பெண் பிள்ளைகள் அவர்களுக்கு தலா ஒவ்வொரு பெண் பிள்ளைகள்.. தாத்தாவோட கணக்கோ இதுகள ஜோடி சேர்த்து விட்டுட்டா காலத்துக்கும் இந்த குடும்பம் பிரியாது என்பதுதான்.. அதற்கு ஏற்றது போல இரண்டாவது பேரனும் , முதல் பேத்தியும் காதலிக்கிறோம் திருமணம் செய்து வையுங்கள் என்று வந்து நிற்க, மனிதன் துள்ளி குடிக்காத குறை தான்
ஆளுயர இருக்கையில் வந்து ஜெயசிங் அமர அத்தனை பேரும் அங்கே ஆஜர் ..... ஒருவனை தவிர...
எங்கடா அவனை காணல ??
தோல் பேக்டரி போயிருக்கான் அப்பா என்று மூத்தவர் தகப்பனை எரிச்சலாக பார்த்தார்... சொத்து இருக்குன்னு அத்தனை பேரையும் அடக்கி ஆளும் அவரை யாருக்கும் பிடிக்காது...
அவனையே தேடு தாத்தா நீ, நானும் உன் பேரன் தான என்று முறைத்தபடி வந்தான் இளைய பேரன் பிரபஞ்சன்
அடேய், பஞ்சா என்றதும் அவன் அத்தை மகள் கிளுக்கி சிரிக்க
ப்ச் பிரபஞ்சா சொல்லு தாத்தா, மானம் போகுது .... என்று அவனை பார்த்து வெட்கத்தில் மறையும் தன் அத்தை மகளும் இன்னும் ரெண்டு நாளில் தன் மனைவி ஆகப்போகும் அரச்சனாவை ஓரக்கண்ணால் பார்த்தான் பிரபஞ்சன்...
ஒரே வீட்டில் பிறந்து வளர்ந்த காரணத்தாலோ என்னவோ காதல் பத்தி கொண்டது.. பெரியவர் உடனே பச்சை கொடி காட்டி விட இதோ திருமணம் என்று முடிவாகி விட்டது...
அவன் வரட்டும்டா, அவனுக்கும் ஒரு கால் கட்டை போட்டிருவோம்
ப்ச் ரொம்ப அவசியம் என்று பிரபஞ்சன் முணுமுணுக்க நகர்ந்து நிற்க... அவன் அருகே ரெண்டாவது அத்தை மகள் மைதிலி கண்ணை கசக்கி கொண்டு நின்றாள்
நீ இப்ப எதுக்கு அழுற
நீ என்னைய கட்டிக்க மாமா அவளை அவரு கட்டிக்கட்டும்
ப்ச் பல்லை உடைச்சிருவேன் மைதி
நானும்தான் உன்ன லவ் பண்றேன் ..
கத்தி சொல்லி தொலையாத மைதி, எனக்கு அவளை தான்,பிடிச்சு இருக்கு அவ தான் என் பொண்டாட்டி...
பாரு பாரு நீ அவ கழுத்துல தாலி கட்டு நான் செத்து போறேன் பாரு
செத்து போ அப்பவும் உன்ன திரும்பி பார்க்க மாட்டேன் என்று பிரபஞ்சன் அவளை முறைத்து விட்டு நகர ... மைதிலுக்கு முகம் எல்லாம் கோவம்
அவங்க காதலிக்கலாம் நான் காதலிக்க கூடாதா, என் மனசுல என்ன இருக்கு எது இருக்குன்னு கூட கேட்காம அவர் கூட ஜோடி சேர்த்து விடுறாங்க என்று அழுகை கொட்டோ கொட்டு என்று கொட்டியது காரிடரில் கார் ஒன்று ப்ரேக் போட்டு நிற்க...அடுத்த ரெண்டு நொடியில் கரிய கார்மேக சிகையை கோதி கொண்டு இந்த மாளிகையின் முதல் வாரிசு உள்ளே வந்தான் ....
மணிமாறன் வயது 29
அங்கே நின்ற யாரையும் கண்டு கொள்வது போல இல்லை நேரே மாடி ஏற ஆரம்பிக்க
மாறா என்ற தாத்தா குரலில் தலையை திருப்பி பார்த்தவன்
என்ன தாத்தா...
உனக்காக தான் நின்னுட்டு இருக்கோம் , அர்ச்சனா, பிரபஞ்சன் கல்யாணம் முடிஞ்சதும் அடுத்த மாசம் உன் கல்யாணத்தையும் முடிச்சிடுவோமான்னு கேட்டு அதுக்கு ஏத்தாப்ப பண்ணலாம்ல ..
உங்க இஷ்டம் தாத்தா
பொண்ணு யாருன்னு கூட கேட்கலையே மாறா உதட்டை மெலிதாக வளைத்து சிரித்தவன் பார்வை அங்கே நின்ற அர்ச்சனாவை ஒரு நொடி பார்த்து மீண்டது ...
வேறு யாரும் இல்லை உன் சின்ன அத்தை மக மைதிலி தான்
ஓஓஓ என்றவன் மாடி ஏறி போய் விட்டான்
திருமண மண்டபம் பரபரப்பாக கிடந்தது...
பிரபஞ்சன் வெட்ஸ் அர்ச்சனா என்ற போர்ட் தலேகீழாக கிடக்க மணமேடையில் அர்ச்சனா தலைகுனிந்து அமர்ந்திருக்க..
அட என்னப்பா இது இப்படி ஆகி போச்சு இவ நேரம் தான் போல பிரபஞ்சன் போன கார் பாலத்துல மோதி ஐசியுவுல இருக்கானாம்... இனி எங்க கல்யாணம் நடக்க? என்று அத்தனை பேரும் அவளை காரணம் காட்டி பேச தாத்தா மரமாக நின்றவர்.... அங்கே சாவகாசமாக போனை பார்த்து கொண்டு நின்ற மணிமாறனை இழுத்து கொண்டு வந்து மணமேடையில் உட்கார வைக்க... அத்தனை பேரும் அதிர்ந்து பார்க்க , மணப்பெண் அர்ச்சனாவோ தாத்தாவை கேள்வியாக பார்க்க ...
மணமேடை வர வந்த உன் கல்யாணம் எப்பவும் நிற்க கூடாது ....
தாத்தா பிரபா திரும்பி வருவார் எனக்கு நம்பிக்கை இருக்கு இது வேண்டாம் என்று அவள் அழ
அவன் திரும்பி வருவான், ஆனா எப்போ இதுவரை வந்து உன் கல்யாணம் நின்னு போச்சோ? அப்பவே புரிஞ்சு போச்சு உன் இணை அவன் இல்லைன்னு.. மாறா இந்தா தாலியை அவ கழுத்துல கட்டு என்றதும் உதட்டை கேலியாக யாருக்கும் தெரியாது வளைத்தவன்... மாலையை எடுத்து கழுத்தில் போட்டு கொள்ள
இது என் பேரன் பார்த்தீங்களாய்யா ஒத்த வார்த்தைக்கு எப்படி வந்து உக்கார்ந்தான்னு என்று அவர் மீசையை முறுக்கிட...
இந்தா மாறா தாலியை கட்டு என்று தாலியை அவன் கையில் கொடுக்க அர்ச்சனா விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.... மாலை நடுவே யாரோ அவளை கிள்ளுவது போல இருக்க தலையை தூக்கி பார்க்க அவளை பார்த்து கண்ணடித்தான் மாறன்...அவள் எச்சில் விழுங்க
பிரபாவை அடிச்சு தூக்குனது சாட்சாத் நான்தான் என்றவனை அவள் அதிர்ந்து பார்க்க ...
நீ அவனை கட்டிக்கிட்டு போவ நான் நக்கிட்டு போகணுமோ? என்றவன் முகத்தில் ஆக்ரோசம் பொங்கி வர
இந்த தாலி உன் கழுத்துல ஏறட்டும்டி காதல் பண்றியா காதல் இந்த மாறன் பண்ணுவேன் பாரு காதல் என்று சத்தமில்லாது கூறியவன் பேச்சில் அவள் அதிர்ந்து நின்ற வேளை உரிமையாக அவள் இடையை அழுத்தி பிடித்து தன் அருகே நகர்த்தி அமர வைத்து தாலியை கட்டி மூன்று முடிச்சு போட்டான் மணிமாறன்...
அவனுக்குள் ஒரு மிருகம் உண்டு அது மிக மிக கொடிதானது என்று அவள் மட்டுமே அறிய போகிறாள்
கோணலாக ஒரு காதல் செய்வான்!!