எஃகில் கலந்த தளவம் 2

Egg2

எஃகில் கலந்த தளவம் 2

2 எஃகில் கலந்த தளவமே!!

அப்போது கண் விழிப்பாள் இப்போது கண்விழிப்பாள்  என்று காத்திருந்து நீலுக்கு எரிச்சல் வந்து விட்டது...

போனது போனது நான்ஸ்டாப்பாக அய்யற்கன்னி தூக்கமும் போனது,  குறட்டையும் போனது...  ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்துக்கே அவளை தூக்கிக்கொண்டு வந்திருக்கிறான்..  கொஞ்சம் கூட சுரணை இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தாள் அங்கயர்கன்னி... 

வெள்ளை நிற தாவணி சிகப்பு நிற பாவாடை ஜாக்கெட்,  கைக்குள் எதையோ பொத்தி வைத்திருந்தாள்...   நீல் அங்கே இருந்த இரும்பு கம்பி ஒன்றை எடுத்து அவள் உள்ளங்கையை விரித்து பார்க்க ... அவளின் கண்ணில் போடும் மூக்கு கண்ணாடி அஃது,  மருதாணி கைகளுக்குள் மலர் போல பத்திரமாய் உட்கார்ந்து இருந்தது.... 

எந்த பெண் தன் பிள்ளையை சுமக்க சரியாக   இருப்பாள் என்று பூமியை அலச கோவிலில் யார் எது சொன்னாலும் பதிலே சொல்லாது சிரித்து விட்டு கடந்த அங்கயற்கன்னி பெஸ்ட் சாய்ஸ் அவனுக்கு பேசுற மனிதனை கண்டாலே ஆகாது 

மூளைதான் வேலை செய்யணும் வாய் வச்ச இடத்துல சும்மா இருக்கணும் என்று நினைக்கும் அவனுக்கு அவள் அமைதி டபுள் ஓகே தூக்குடா செல்லத்தை குடுடா பிள்ளையன்னு  தூக்கிட்டு வந்துட்டான் அரட்டி உருட்டி பிள்ளை கொடுக்க ஜாப்பை தொடங்கணும் இவ என்னன்னா  இந்த தூக்கம் தூங்குறாளே என்று பேஜாராகி போக,

இதற்கு மேல் பொறுக்க முடியாத நீல் இரும்பு கம்பியை வைத்து மெலிதாக அவள் காலில் ஒரு அடி போட

"ஸ்ஊஊ  எத்தனை தடவை தாத்தா உன்கிட்ட சொல்லி இருக்கேன் என்ன அடிச்சு எழுப்பாதன்னு என்று கத்திக்கொண்டு எழும்பி அமர்ந்தவள் ...

"தாத்தா பால்ல சீனி தூக்கலா போட்டு ஒரு காபி .... என்று தலையை சொரிந்து கொண்டே கண்ணாடியை எடுத்து கண்ணில் அணிந்தாள் அங்கயற்கன்னி.. 

தன் எதிரே கால் மீது கால் போட்டு  சுற்றும் நாற்காலியில் அமர்ந்திருந்த நீலை மேலும் கீழும் பார்த்தவள் ....  

"என் வூட்டுக்கு உள்ளார நீங்க என்ன பண்றீங்க... ஆமா யார் நீங்க ? நான் எங்க இருக்கேன்.....  என்று சுற்றி முற்றி பார்த்தவள் 

"ஐஐஐ என்ன கடத்திட்டீங்களா?   சூப்பர் சூப்பர் எந்த இடம் இது ... பார்க்கவே அழகா இருக்கு ... என்று  குடுகுடுவென அறை எங்கும் சுற்றி பார்த்தவள் .... பின்னங்கழுத்தில் கைவிட்டு  முயல்குட்டிய்யை தூக்குவது போல தூக்கி கொண்டு வந்து படுக்கை மீது நீல் அவளை போட 

"ஆஆஆஆ வன்முறை நாட்டுக்கும் வீட்டுக்கு கேடு ஊஊஊஊ என்று தலையை அசைத்து அசைத்து அவள் பேசிய பேச்சுக்கு ரசிகர் பட்டாளமே திரண்டு விடும்...  பிரம்மன் மூட் வந்த நேரம் அவளை படைத்தானோ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றவள் இவளே!!  நெளிந்த இடை சிவந்த உதடு அரிதாரம் பூசாத கண்ணாடி கண்ணும் , அழகுபடுத்த தெரியாம சுருட்டை முடியும் , சங்கு கழுத்தும் சதுப்பு நிலம் போன்ற அழகிய தனங்களும் ஆஹா!!  அற்புதம்!!  தேவர்கள் கூட அவளை ஒருவிசை அவளை  ரசித்து செல்வர்..... ஆனால் எஃகு மனிதன் அவனோ அவளை சிகப்பு கண்ணால் ஆழ பார்த்தபடி...

"இன்னையில இருந்து பத்து மாசத்துல எனக்கு குழந்தை பெத்து கொடுக்கிற ??

"குழந்தை தானே பெத்து கொடுத்திடலாம்" அறையை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தவள் சட்டென அவனை திரும்பிப் பார்த்து 

"ஹான் இப்ப என்ன கேட்டீங்க?"

"இன்னும் பத்து மாசத்துல எனக்கு குழந்தை வேணும்னு கேட்டேன் "

"யாரு சாமி நீ, என்னவோ கருவேப்பிலை கொத்தமல்லி கேக்குற மாதிரி குழந்தை கேக்குற.. 

"ஐயம் நீல் 420!! 

"நல்லவேளை ஒத்த எழுத்தை மாத்தி இருந்தா மானம் போயிருக்கும் நல்ல பேர்...  நான் அம்பாசமுத்திர அய்யற்கன்னி... 

"உன் சுய விளம்பரம் எனக்கு தேவை இல்லை " என்று கையை தட்டிட...  இருவர் உள்ளே வந்தனர்,  அவளை இரண்டு பக்கமும் கைகொடுத்து தூக்கி கொண்டு போய் ... அவள் மயங்கி விழ விழ தண்ணீர் முகத்தில் தெளித்து தெளித்து  இந்த கிரகம் பற்றியும் அவளை தூக்கி வந்த விவரத்தை சொல்லி புரிய வைக்க 

"நீல் எல்லாத்தையும் சொல்லியாச்சு அதோட ஹெல்த் செக்கப் பார்த்தாச்சு .. பக்கா பிட் நீ ப்ராசஸ் ஆரம்பிக்கலாம் .. எனி ஹெல்ப் நாங்க கூட இருக்கணுமா ? 

"அட மானங்கெட்ட ஏலியன் கூட்டங்களா??  இதுக கண்ணுல நான் எப்படி மாட்டி தொலைச்சேன்னு தெரியலையே" என்று சற்று பீதியாக அங்கு நடப்பதை அங்கயற்கன்னி வேடிக்கை பார்த்தபடி இருக்க 

"நோ இனி இந்த சப்ஜெக்டை நான் பார்த்துக்கிறேன்...  "

"பட் எத்தனை தடவை மேக் பண்ணுறீங்கன்னு ரிப்போர்ட் சமிட் பண்ண சொல்லி மேலிடத்துல ஆர்டர் கொடுத்து இருக்காங்க  நீல் "

"நீங்க ரூமுக்கு வெளியே இருந்து ரிப்போர்ட் எடுத்தா சரியா இருக்கும்னு நினைக்கிறேன் "

"ஓகே நீல் என்று இருவரும் வெளியேற.... 

"ஏலியன் சார் என்ற அவள் அழைப்பில் கதவை அடைத்து விட்டு வந்த நீல் அவளை என்ன என்று  திரும்பி பார்க்க 

"ஒருதடவை கத்திக்கவா?  

சத்தமில்லாம கத்து 

"என்ன ஒரு பெருந்தன்மை  இந்த  மூக்கு புடைச்சவனுக்கு" என்று உதட்டை பிதுக்கியவள் 

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று குட்டி நாக்கு தெரிய கத்திய அங்கயற்கன்னி  

"என் தாத்தா அப்பவே சொல்லிச்சு , பெரியவங்க சொல் பேச்சு கேட்கலைன்னா நரகத்துக்குதான் போவேன்னு வந்துட்டேன்ல  போச்சு  "என்று மூக்கை சிந்தி சிந்தி சற்று நேரம் அழுதவள் அருகே  எட்டு வைத்து நீல் நகர படுக்கை மீது பதுங்கிய  அங்கயற்கன்னி...

"எ... ன்.ன..  பண்ண போறீங்க?  .... என்றவள் அருகே வந்து வாயில் செல்லோடேப் போட்டு அடைத்தான் 

இவ என்ன இவ்வளவு பேசுறா  அவள் கால்வாசி பேச்சுக்கே காது வலித்தது அவனுக்கு... 

"உன் லபோ லபோ பேச்சு இரிட்டேட்டிங்கா இருக்கு அமைதியா  நான் சொல்றது , செய்றது எல்லோத்துக்கும்  கோ ஆப்ரேட் பண்ணல உயிர் இருக்காது... ஜாக்கிரதை !! என்றுவிட்டு நீல் கதவை அடைத்து போட்டு விட்டு வெளியே போக ...

"அட லூசு ஏலியன் வாயை கட்டிட்டு , கையை கட்டாம போறான் கடத்தலுக்கு புதுசா இருப்பானோ?  என்று வாயை மூடி இருந்த செல்லோடேப்பை கிழித்து போட்டவள் கதவை வந்து திறக்க...  அதுவும் திறந்தே கிடக்க...  

"மனுசன் கூட சகவாசம் இல்லல்ல,  அதான் சூது வாது தெரியாம இருக்கானுக போல "என்று அவர்களுக்காக பாவப்பட்டவள்...  மெல்ல  பாதம் வைத்து வெளியே வர , யாருமே அவளை நில் என்று தடுக்கவில்லை .... அவரவர்  இயந்திரங்களை வைத்து  கொண்டு தனக்காக  பணிகளை செய்தபடி இருக்க 

"நம்ம ஊர்ல மாடு மேய்க்கிறது போல இவுக கம்யூட்டர் மேய்க்கிறாங்க போல .... ம்ம் பார்க்க தினுசாத்தான் இருக்கு ....  என்று தாவணியை ஒரு கையால் சுற்றி  கொண்டே  அங்கை , அங்கே உள்ள வித்யாசமான மலைகள் தாவரங்கள்  என்று ஒவ்வொன்றாக ரசித்து கொண்டு வந்தவள் மீது பொத்தென்று ஒரு உருவம் வந்து மோத .... 

ஆஆஆஆ என்று அலறி இருவரும் தரையில்  விழுந்து  கிடக்க... 

"என்ன எதுவும் பண்ணிடாதேள் ,  காலையில கடவுள் சன்னதிக்கு போனா சொர்க்கத்துக்கு நேரே போயிடலாம்னு சொன்னாங்க....  இப்படி ஒரேடியா வந்து சேருவேன்னு தெரியாம போயிடுத்தே" என்று  முகம் சிவந்து நின்ற பார்த்தசாரதியை மேலும் கீழும்   பார்த்தவள்  அவன் அரண்ட பார்வையில் 

"நானும் உன்ன மாதிரி வந்து மாட்டிக்கிட்ட மனுசி தான்  ஐயம் ப்ரம் அம்பாசமுத்திரம்  நீங்க தம்பி" என்று அங்கை கையை நீட்ட ... 

"எது  நீயுமா? 

ம்ம் 

உனக்கு பயமாவே இல்லையா... என்று சாரதி வாயை பிளக்க

"அட போப்பா...  பயந்தா மட்டும் என்ன மாறப்போகுது வந்து மாட்டியாச்சு ... இந்த இடத்துல இருந்து போறதுக்கு முடியுமான்னு தெரியல..  என்னோட பெரிய ஆசையே  சாகும்போது கூட சிரிச்சுக்கிட்டே சாகணும்ங்கிறதுதான் .. எப்படியும் சாக போறது உறுதி ஆகிப்போச்சு..

அப்போ நம்மள  கொன்னுடுவாங்களா?  என்று பார்த்தசாரதி பாவமாக அவளை பார்க்க..  அவன் தோளில் தட்டிக் கொடுத்த அங்கயர்கன்னி 

"அப்படியெல்லாம் இல்ல தம்பி நாம தப்பிச்சு ஓடிடலாம்... 

"ஓஓஓ 

" அப்படின்னு சொல்ல ஆசைதான் ஆனா நோ சான்ஸ்...  எப்படியும் தலை தனியா முண்டம் தனியா வெட்டி போடப் போறாங்க ... நம்ம உடம்பு  கூட பூமிக்கு போகாதுன்னு நினைக்கிறேன் ... இந்த கிரகத்திலேயே காஞ்சி கருவாடா போக போறோம் என்று அங்கை  கன்னத்தில் கை வைத்து அங்கேயே ஒரு பாறை மீது அமர....  அவளை நம்புவோமா வேண்டாமா என்பது போல பார்த்தசாரதி இன்னும் அவளைப் பார்த்துக் கொண்டே நிற்க

ப்ச்  எதிரிக்கு எதிரி நண்பன் , பிரண்ட்ஸ் ஆகலாம் தப்பில்லை  என்று மீண்டும் அவள் கையை நீட்ட தயங்கி தயங்கி அவள் கையை பிடித்து குலுக்கினான் 

"வா  சேர்ந்து கவலைப்படலாம் என்று  இருவரும் வெகு நேரம் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்தனர்..

இப்ப நீ எதுக்கு கன்னத்துல கை வச்சு உட்கார்ந்திருக்க.... என்று அங்கை அவனை திரும்பி பார்க்க 

"யாருக்கு தெரியும் நீ ரொம்ப நேரமா இப்படி வச்சிருந்தியா.. அப்படி வச்சா  ஏதாவது ஐடியா தோணும் போல இருக்கும்னு நானும் அதேபோல வச்சு யோசிச்சுகிட்டு இருக்கேன்...  ஏதாவது ஐடியா தோணுச்சா என்ன... 

ம்ஹூம் , ஆமா பார்த்தா உனக்கு என்ன கெடு வச்சிருக்காங்க 

பிள்ளை கொடுக்கிறது தான் 

ஐஐஐ சேம் பிஞ்ச் என்று அங்கை அவன் கையில் கிள்ள அவளை முறைத்தவன்..

சும்மா இரும்மா , வயித்தெரிச்சல் தாங்காம உட்கார்ந்து இருக்கேன் நீ வேற .... அந்த டோலோ 650 என்ன  அப்பா ஆக்காம விட மாட்டாளாம்....  ஒரு வாரம் டைம்   அதுக்குள்ள என்ன அம்மா ஆக்குன்னு கெடு கொடுத்து இருக்கா என்று பார்த்தசாரதி பதட்டம் கொண்டு நகத்தை கடிக்க...

"ஒரு வாரம் இருக்குல்ல "

"ம்ம் அதுக்குள்ள தப்பிச்சிடலாம்னு சொல்றியா" என்று பார்த்தசாரதி ஆர்வமாக அவள் முகத்தை பார்க்க 

"எப்பா என்னை எல்லாம் டான் ரேஞ்சுக்கு யோசிக்காத....  பூமியில குச்சி மிட்டாய் திருடி தின்னுகிட்டு இருந்த என்ன தூக்கிட்டு வந்து அவன் தான் கூறுகெட்ட தனமா வச்சிருக்கான்னா...  நீயும் சோதிக்காதப்பா...

"எனக்கும் எதுவுமே தோணல அங்கா....  

"இரு பொறுமையா யோசிப்போம்.... இவங்க எல்லாம் சாதாரண ஏலியன்ஸ் .. ஆனா நாம பூமியில வாழ்ற மனுஷங்க .. அதுவும் கலியுகத்து மனுசங்க..  வஞ்சனை,  சூது திருட்டு பொய் கள்ளத்தனம் கேப்மாரித்தனம் எல்லாம் கலந்த கலவைகள்..  சோ ஈஸியா 

இவங்களையெல்லாம் கதற விடலாம்னு சொல்றியா?

குறுக்க குறுக்க பேசாதப்பா, இப்பதான சொன்னேன்..  நான் எந்த ஆணியும் புடுங்க போறதே இல்லைன்னு...  அப்பப்ப பயம் வரும் போதெல்லாம் எனக்கு நானே திட்டம் மாதிரி, செல்ப் கான்பிடெண்ட்  கொடுப்பேன் ..  அதுல ஒன்னு தான் இது...  மற்றபடி நானும் எதுவும் பண்ண மாட்டேன், நீயும் எதுவும் பண்ணாத , உயிர் முக்கியம் பிகிலு....என்று அங்கா மூக்கு கண்ணாடியை கழட்டி பார்த்த சாரதி டிசர்ட்டில் துடைத்து கொள்ள.... 

"உன்ன நம்பி வந்து பேசினேன் பார்,  என்ன சொல்லணும் என்று புலம்பியவனுக்கு வழி துணை இல்லை சாவின் துணைக்கு ஒரு தோழி கிடைத்த மகிழ்வே.... 

அவர்கள் இருவரும் பேசி கொண்டிருப்பதை அந்த கிரகமே மானிட்டரில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.... பல்லை நரநரவென கடித்தபடி நீல் மரியாதை இல்லாமல் லூசாக பேசும் அவள் பேச்சை எரிச்சலாக பார்த்து கொண்டிருந்தான்... 

"எனக்கு புரியல நீல்.. உன் பிள்ளையை சுமக்க என்ன குவாலிபிகேசன் இருக்குன்னு இவளை தூக்கிட்டு வந்து இருக்க,  சரியான  லூசா இருக்கா என்று லைக்கா தன்  தலையில் அடிக்க ...

"உனக்கு பிள்ளை கொடுக்க அவனுக்கு என்ன குவாலிபிகேசன் இருக்குன்னு அவனை நீ தூங்கிட்டு வந்த லைக்கா.... "

"ப்ச் அவசரத்துக்கு ஆள் கிடைக்கல...

"எனக்கும் அதேதான் .... 

"ஆனா தப்பான செலக்ஷன் பண்ணிட்டோமோன்னு  தோணுது நீல் உனக்கு?  அவள் உண்மையை  சொன்னாள் ... நீல் அமைதியாக பதில் சொல்லாது எழும்பி போய் விட்டான் ..

 அங்கயற்கன்னி வருடத்தில் ஒருநாள் மெளன விரதம் இருப்பாள் , சரியாக அந்த நாள் நீல் கண்ணில் அவள் மாட்டி விட ... ஆன்லைன் டெலிவரியில்  ரிட்டர்ன் போட முடியாது வாங்கிய   பொருள் போல ஆகி போனது.... 

அப்பாவியாக பிராணநாதா என்று ஒன்று வரும் என்று நினைத்திருக்க... இது பிராணணை வாங்கும் ஒன்றாக இருக்க கழுத்தை தடவினான்.. 

பேசாம இவளை மறுபடியும் பூமியில விட்டிரலாமோ? முதல் முதல் தப்பாய் ஒன்றை செய்து விட்டான் என்று கிரகம் அவனை எள்ளி நகையாடி விடுவோமோ என்று இரும்பு இதய  கர்வம் தடுக்க .... 

பார்ப்போம் சரி வரலைன்னா தலையை உடைச்சு போட்டிர வேண்டியது தான்  என்றவனுக்கு அவளை கண்டால் ஒவ்வாமை வந்து ஒட்டி கொண்டது 

ஒவ்வாமை வந்த பொருளை எங்கனம் தொட??

அவனை பொறுத்தவரை தன் ஜனத்தை பெருக்க தூக்கி வந்த உயிருள்ள சதையுள்ள அழகிய பொருள் அவள் அவ்வளவே !! 

எஃகு மனமும் மெல்லிய மனமும் இணையுமா??