என் இனிய விவாகரத்தே 8

Divorce 8

என் இனிய விவாகரத்தே 8

8 என் இனிய விவாகரத்தே!! 

"அவ மேல இருக்கிற தப்பை மறைக்கிறதுக்கு என்மேல அபாண்டமாக பழி போட்டு இப்படி அசிங்கப்படுத்தி விட்டுட்டா மேடம் ... அவளுக்கும் எங்க வீட்டு டிரைவருக்கும் இருந்த கள்ளத்தொடர்புக்கு அத்தனை சாட்சியும் இதுல இருக்கு என்று பிரபா ஆதாரங்கள் அடங்கிய பைலை வக்கீலிடம் கொடுத்து அனுப்ப ... வக்கீல் அதை நீதிபதியின் முன்னால் வைக்க... புரட்டிப் பார்த்தவர் தலையைப் பிடித்துக் கொண்டு... 

"எப்பவும் கோர்ட் ரெண்டு பக்கமும் அலசி ஆராய்ந்து தான் முடிவு சொல்லும் பிரபா.... உங்க பக்கத்து சாட்சியை சொல்லிட்டீங்க, உங்க மிஸஸ் பக்கம் என்ன கேள்வி, பதில் வருதுன்னு கேட்கணும்ல என்று பெண் நீதிபதி புகழினி நோக்கி திரும்ப...

"அவன் சொன்ன எந்த குற்றச்சாட்டுக்கும் சிறு சலனம் கூட இல்லாமல் கையை கட்டிக் கொண்டு நின்று நீ பேசு ராஜா என்பது போல தான் பார்த்துக் கொண்டிருந்தாள் புகழினி ... 

"என்னம்மா இதுல இருக்கிற ஆதாரத்தை எல்லாம் பத்தி நீ என்ன சொல்ல போற...

"மேடம் டிரைவர் பின்ன சுகம் தேடி போனேன் ரைட், சுகத்துக்காக கண்டவன் பின்னாடியெல்லாம் போகணும்னா, நான் ஏன் மேடம் என் புருஷன் வண்டி ஓட மாட்டேங்குதுன்னு புகார் பத்திரம் வாசிக்க போறேன் .. எந்த வண்டி நல்லா ஓடுதோ அந்த வண்டியில் ஏறி ஜாலியா சுற்றி இருக்க மாட்டானா என்று பதிலை கேட்டு அப்பாடா!! என்ன பொண்ணுடா சாமி என்பது போல் தான் ஆண்களே வியந்து பார்த்தனர்..

"24 மணி நேரமும் ஆபீஸே கதின்னு வெளியவே இருக்கிறவர் போயும் போயும் என் வீட்டு டிரைவர் கூட தான் போகணுமா என்ன... எங்க தெருவிலேயே இவரை விட வாட்ட சாட்டமா மேட்டர் பண்ண நிறைய பேர் இருக்கத்தான் செய்றாங்க அவங்க கூட எல்லாம் போயி என் தேவையை நிறைவேத்தி இருக்க மாட்டேனா மேடம் ... இந்த வேலை செய்யாத கம்பெனியே தான் வேணும்னு நான் ஏன் உங்ககிட்ட குறை சொல்ல போறேன்... அப்படி கள்ளத்தனமான போயிருந்தாலும்தான் இவர் கண்டுபிடிச்சு இருக்க முடியுமா என்ன? ..

"எம்மா , இது கோர்ட் அத மனசுல வச்சுக்கிட்டு பேசும்மா ... உன் இஷ்டத்துக்கு அநாகரீகமா பேசாத 

"எது மேடம் அநாகரீகம், அவன் பாட்டுக்கு நான் அவன் கூட போனேன், இவன் கூட போனேன்னு அத்தாச்சியை கொண்டு வந்து கொடுத்தா, எல்லாரும் என்ன வேசியை பாக்குற மாதிரி ஒரு பார்வை பாக்குறீங்க... நான் தப்பு செஞ்சேனா இல்லையான்னு முடிவு தெரியுறதுக்கு முன்னாடியே என்னை விபச்சாரி ஆக்கிட்டீங்க.... நீங்க எல்லாம் அநாகரீகமாக பாக்கலாம் , பேசலாம் ... ஆனா நான் பேசினா தப்பா மேடம் ....

"சைலண்ட் சைலண்ட் ... வழக்கு சம்மந்தம் இல்லாததை பேசாதீங்க புகழினி

"இருக்கு மேடம் அதான் பேசுறேன் ,உங்களை நான் நீதிபதியா நினைச்சு பேசல, என் தாய் ஸ்தானத்தில் வச்சு பேசுறேன் எனக்கு பசிக்குது. என்ன பட்டினியா போட்டு இருக்காங்க ... எனக்கு சாப்பாடு கொடுங்கன்னு கேட்கிறது தப்பா மேடம் ... அவர் இல்லை என்று தலையாட்ட ....

"பின்ன நான் கேட்கிற தாம்பத்திய தேவையை மட்டும் ஏன் தப்புன்னு சொல்றீங்க.. ஒரு மனுஷனுக்கு பசி எப்படியோ? தூக்கம் எப்படியோ அப்படித்தான் தாம்பத்தியம்... ஆம்பள தன் தேவையை 10 பேர் கூட போயி வேணும்னாலும் நிவர்த்தி செய்துக்கலாம் அது தப்பு இல்ல... ஆனா, தாலி கட்டுன பொண்டாட்டி தன்னோட உடல் தேவையை, மனத் தேவையை புருஷன் கிட்ட கேட்கவும் கூடாது , தன் விருப்பப்படி அதுல செயல்படவும் கூடாது.. அவன் தொட்டா கெடக்கணும் , அவன் தொடலன்னா காயணும் தனக்கு வேணும்னு சொன்னா... அவ அசிங்கம் புடிச்சவ, ஆம்பளைக்கு தேவையானதை கொடுக்கலைன்னா அவன் ஊர் மேயலாம்.. ஆனா பொம்பளைக்கு தேவைன்னு சொன்னா கூட தப்பா மேடம்... அவள் விளாசிய சாட்டையில் அங்கிருந்த பலருக்கு சுளீர் என்று வலித்தது... 

"எனக்கு தாலி கட்டுன என் புருஷன் கிட்ட என்னோட மனத்தேவை, உடல் தேவை என்னோட விருப்பங்களை சந்தோஷங்களை கேட்கிறதும் எதிர்பார்க்கிறதும் தப்பா மேடம்... மனைவி கிட்டேயோ புருஷன் கிட்டேயோ மட்டும் எதிர்பார்க்க வேண்டியதை கண்டவங்க கிட்ட எல்லாம் தேடி போறது சரியா மேடம்... ஆதாரம் இருந்தா அவர் சரி; ஆதாரம் இல்லைன்னா நான் தப்பா? என்ன சோ கால்ட் சமுதாயம் இது.... 

"அந்தரங்கம் மட்டும் வாழ்க்கை இல்லை அதை புரிஞ்சுக்கம்மா"

"இவ்வளவு பேசுற எனக்கு அது தெரியாதா மேடம் மனசு நிறைஞ்சுருந்தா, உடம்பு நிறைஞ்சு போகும் மனசு வெறுமையா கிடக்கு . உடம்பை திருப்தி படுத்த முடியாது மேடம் .... ஒரு பெண்ணா என் பக்கத்துல நின்னு பாருங்க.. நான் சொல்றது உங்களுக்கு புரியும் .... உங்களுக்கும் குழந்தை குட்டி இருக்கும் .. நீங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் நீங்களும் பெண்ணா நான் சொல்றதெல்லாம் கடந்து தானே வந்து இருப்பீங்க மேடம்... பெண் நீதிபதி அமைதியாக அவள் சொல்வதை பார்த்துக் கொண்டிருந்தார்..

"நான் வெறும் உடல் தேவைக்காக இந்த விவாகரத்தை வாங்கி இருப்பேன்னு இப்பவும் நீங்க நினைக்கிறீங்களா மேடம்?" அவர் இல்லை என்ற தலை ஆட்ட அவ்வளவுதான் மேடம் காரணம் ...

"அப்போ உன் கணவன் சொல்ற மாதிரி உனக்கும் இந்த டிரைவருக்கும் எந்த தொடர்பும் இல்லையா ?

மெலிதாக சிரித்த புகழினி, ஆதாரம் யார் வேணாலும் தயாரிக்க முடியும் மேடம்... அதுவும் ஏஐ காலத்துல ஆதாரத்துக்கா பஞ்சம் .... என்ன வச்சு எத்தனை வீடியோ வெளியே வருதோ தெரியல... ஆனா, அப்படி வீடியோவே வந்தாலும்... முதல் லைக் பட்டன் நான்தான் மேடம் கொடுப்பேன்... பூமித்தாய் உயிர் பெற்று வந்தா அவளையும் நிர்வாணம் ஆக்கி பார்க்கிற உலகம் இது நான் மட்டும் எம்மாத்திரம்... அதுக்கெல்லாம் இம்மி கூட கலங்க மாட்டேன் மேடம் அந்த அளவுக்கு மனசு பக்குவமாயிடுச்சு...

ம்ம் நீ பேசறது எல்லாம் சரியா தாம்மா இருக்கு ஆனா கோர்ட்டுக்கு தேவை ஆதாரம்.... சட்டப்படி நீ விவாகரத்து வாங்க, அந்த ஆதாரத்தை எல்லாம் கொடுத்து தான் ஆகணும்.... 

"இது என் வீட்டு சிசிடிவி கேமரா ரெக்கார்ட்... இதுல என் வீட்டுக்குள்ள யாரு வந்தா , நான் எத்தனை தடவை அந்த டிரைவர் கிட்ட நின்னு பேசினேன்... சாரி சாரி பல்ல இளிச்சேன், இது எல்லாம் டேட் வாரியா விலாவாரியாக இருக்கும் ...அதோட அதுல என் போனோட கால் ஹிஸ்டரி, ரெக்கார்ட் ஹிஸ்டரி எல்லாம் இருக்கு ... அப்புறம் என் கூட தொடர்பு படுத்தி பேசினாரே அந்த டிரைவர் அவரோட கால் ஹிஸ்டரி ரெகார்ட் ஹிஸ்டரி அதுவும் இருக்கு... அதுல ஒரு வார்த்தை நான் தப்பா பேசிருந்தா , நான் தப்பான நடத்தையில இருந்திருக்கேன்னு உங்களுக்கு தோணுச்சுன்னா.. எனக்கு இந்த விவாகரத்து வேண்டாம் ... கடைசி வரைக்கும் அந்த வீட்ல வாழ சம்மதம்.... என்று புகழினி தான் கொண்டு வந்ததை கொடுக்க ... பிரபாவுக்கு வியர்த்து வடிந்தது .... 

இவள் கோவில் போன பல நாள் அவனை தேடி பிஏ வீட்டுக்கே வந்திருக்கிறாள் சிசிடிவி நியாபகம் இல்லாமல் இவனும் கண்டபடி இருந்திருக்க.. அவன் முகத்தில் மெல்லிய பதட்டம் தெரிந்தது அதையும் நீதிபதி கவனிக்க தவறவில்லை ...  

மேடம் என்று பிரபா வாயை திறக்க போக ... நீதிபதி அமைதியாக ஒரு கண்டன பார்வை அவனை பாத்தவர் 

"உங்களுக்கு விவகாரத்து தர இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது என்றதும் புகழினி பெருமூச்சு விட 

ஆனா குழந்தையோட விருப்பம் என்னன்னு கேட்க வேண்டியது என்னோட கடமை.... உங்களுக்குள்ள வேறுபாடு இருக்கலாம் ஆனா குழந்தையின் விருப்பம் மிக முக்கியம் .... குழந்தையை வர சொல்லுங்க "என்றதும் தாயின் கண் ஜாடைக்கு யாழி குடுகுடுவென ஓடி வந்து தாய் கால் மாட்டில் நிற்க ...நீதிபதி இருக்கையை விட்டு இறங்கி வர குழந்தை அருகே சேர் போடப்பட நீதிபதி அதில் அமர்ந்து குழந்தையை தூக்கி மடியில் வைத்தவர் 

உன் பேர் என்ன கண்ணா ??

"யாழி புகழினி..."

ஓஓஓஓ .... 

"உனக்கு அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா??" 

"அம்மா" பட்டென்று கூற 

"ம்ம் அப்பாவுக்கும் அம்மாவுக்கு அடிக்கடி சண்டை வருமா கண்ணா

"ம்ம் அப்பா கூட ஒரு ஆன்டி இருப்பாங்களா, அவங்களும் அப்பாவும் எங்கேயாவது போவாங்களா அதுக்கு அம்மா சண்டை போடுவாங்களா அப்பா திட்டுவாரா அம்மா அழுவாங்களா , போனது போனது அவன் செய்த அத்தனை அக்கிரமும் மழலை உதட்டின் வழியே ஊர் அறிந்தது .... 

"ஒருநாள் அம்மா தாத்தா வீட்டுக்கு போயிட்டாங்களா அப்போ அந்த பிஏ ஆண்டியும் அப்பாவும் என்ற மகள் உதட்டை புகழினி மூட போக ஜட்ஜ் தலையை தூக்கி புகழினியை பார்க்க .! அவள் தெரிந்து பட்ட ரணத்தை மகள் தெரியாதே அன்றோ பட்டு இருக்கிறாள்... ஆனாலும் அந்த அசிங்கத்தை கடை பரப்ப விரும்ப வில்லை .... 

சொல்லும்மா 

"நான் ஹால்ல டிவி பார்தேனா அப்பாவும் அவங்களும் பெட் ரூம்ல முத்தா கொடுத்து விளையாடினாங்க.... அந்த ஆன்டி போகும் போது என் தலையில கொட்டி வேற வச்சிட்டு போயிடுச்சு" என்று இப்போதும் யாழி தலையை தடவ.. ஜட்ஜ் தீயாக ஒரு பார்வை பிரபாவை பார்க்க அவன் தலையை குனிந்து கொண்டான் 

சரிம்மா நீ அப்பா கூட போக விரும்புறியா அம்மா கூட போக விரும்புறியா.... 

"அம்மா ஆஆ என்று தாயின் இடையோடு கட்டி கொள்ள... 

சரி போங்க என்று விட்டு மீண்டும் போய் டைஸில் அமர்ந்தவர் 

மதிக்க படாத இடத்தில் பொன்னாக வாழ்வதை விட மதிக்கும் இடத்தில் மண்ணாக வாழ்வது சிறப்பு ... இது ஆணுக்கும் பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும் ... ரெண்டு மனங்களை சேர்தது வைக்க சொல்லி தான் சட்டமும் சொல்லுது சாஸ்திரங்களும் சொல்லுது அந்த மனங்கள் இடையே இடைவெளி இருந்தா சேர்த்து வைக்கலாம் மனங்களே இல்லாத நபரோடு சேர்த்து வைத்து கொலைபாதகம் செய்வதை சட்டம் எப்போதும் செய்யாது எனவே இருவருக்கும் முறைப்படி விவாக ரத்து செய்து இந்த கோர்ட் தீர்ப்பு வழங்குகிறது ... என்று முடிக்க., 

அத்தோடு புகழினிக்கு ஜீவனாம்சமாக என்று ஜட்ஜ் ஆரம்பிக்க 

"மேடம் ஒரே ஒரு கோரிக்கை என்று புகழினி 

இடையூறு செய்ய 

"சொல்லும்மா 

"எனக்கு அந்த வாழ்க்கை தந்த நினைவுகளும் வேண்டாம் அந்த வாழ்க்கை தர போற ஜீவனாம்சமும் வேண்டாம் ... என் தாய் தகப்பன் கஷ்டப்பட்டு போட்ட நகையை மட்டும் தர சொல்லிடுங்க போதும்... இது அந்த வீட்டு பத்திரம் எனக்கு அவரோட வாழ்ந்த எதுவும் வேண்டாம் என்னை என் குழந்தையை பாத்துக்க என்னால முடியும் ....  

குட் ... தீபக் பிரபாகர் ஒரே மாதத்தில அவங்க நகைகளை எல்லாம் திருப்பி கொடுத்துடுங்க...

"ம்ம் சரி மேடம்.... "" 

மேற்கொண்டு அவர் வாழ்க்கையில நீங்க தலையிட கூடாது புரியுதா? 

ம்ம் என்று தலையை குனிந்து கொண்டான்...

இனிய விவகாரத்து வாழ்த்துகள் ம்மா என்று ஜட்ஜ் சிரிக்க.... 

"நன்றி மேடம் !!என்று நிம்மதியாக மூச்சு விட்டவள்... காச் மூச் என்று வக்கீலிடம் கத்தி கொண்டிருந்த பிரபா அருகே இருந்த டேபிளில் தன் தாலியை கழட்டி அதில் இருந்த தங்க முகப்பை வைத்தவள் மஞ்சள் கயிறை அருகே இருந்த குப்பை தொட்டியில் போட்டுவிட்டு நிமிர்ந்த நடை போட்டு நடந்து போக சுதந்திர காற்று அவள் மீது வந்து சாமரம் வீசி வாழ்த்து சொல்லியது... 

இனிய திருமண வாழ்க்கை கிடைக்காத சிலருக்கு இனிய விவாகரத்து வரமே!! 

பெண்ணுக்கு சுதந்திரம் எதையும் செய்ய கொடுக்க படும் சுதந்திரம் அல்ல 

தனக்கு பிடிக்காத ஒன்றை செய்யாமல் விலகி இருப்பது கூட சுதந்திரமே!!