ஊன் உயிர் நீயே நீயே டீசர்
Unn

1 ஊன் உயிர் நீயே நீயே !!
நெல்லை டீக்கடை பரபரப்பாக இருந்தது
பெஞ்சில் கால் மேல் கால் போட்டு ரெட்டை உருவம் டிராக் பேண்டில் அமர்ந்து ஒரு டீயை மாறி மாறி உறிஞ்சியது...
இதுக்கு பத்து மார்க் போடலாம்டா
ப்ச் மூக்கு கேவலமா இருக்கு ..
ஓஓஓ நான் மூக்கை பார்க்கலேயே ,கண்ணுல கண்ணாடி இல்லேன்னா இன்னும் எடுப்பா இருக்கும் டா மை சன் என்ற தகப்பனை திரும்பி பார்த்து முறைத்தான் மகன் ...
ஆம் அங்கே மகனுக்கு இணையாக அமர்ந்து சைட் அடித்தது எக்ஸ் கமிஷ்னர் ஆப் சென்னை சிட்டி.. இப்போது பல மூலிகை தோட்டங்களுக்கு அதிபதி விஜய் ( தேனூறும் இதழே மடல் எழுது நாயகன் )
யோவ் நான் அந்த பொண்ணை சொன்னேன் நீ அந்த பொண்ணு தாயை சொல்ற ? என்று தகப்பனை முறைத்தான் ...
ப்ச் நான் முதல்ல இருந்தே தாயைத்தான்டா பாத்துட்டு இருக்கேன் .. வயசுக்கு ஏத்தாப்ப வேலை பாருங்கன்னு உன் அம்மா சொல்லிதான் அனுப்பி இருக்கா, அவ சொன்னா நான் மீறுவேனா சொல்லு என்று கண்ணை சிமிட்டிய தகப்பன் புஜத்தில் ஓங்கி குத்தினான் ..
விஜய்யின் மகன் வேதாந்ந் அபிமன்யூ!!
பிரபல கல்லூரியில் பேராசிரியராக இப்போதைக்கு இருக்கிறான் மனம் மாறும் போது வேலையும் மாறும் ..
ப்பா ஒரு சிகரெட் சொல்லு ஒரு பொண்ணு கூட கண்ணுக்கு லட்சணமா இல்லை...ச்சைக் .. என்று வேதாந்த் சலிக்க
அதேதான்டா நானும் நினைச்சேன் காலையிலேயே கண்ணுக்கு குளிச்சியா நால பார்த்தாதான் அந்த நாள் நல்ல நாளா அதையும் ஒரு பில்டர் என்று வாங்கி அதை பத்த வைத்து மகன் உதட்டில் வைக்க ..
டேய் நீங்கள் அப்பனும் மகனுமாடா என்பது போல தான் அனைவரும் பார்த்து வைத்தனர்.. எதாவது கேட்டா ..
உனக்கு இப்ப என்ன பிரச்சனை, என் மகனுக்கு சிகரெட் அடிக்க கத்து கொடுத்ததே நான்தான் உனக்கு எதாவது குடையுதா என்று விஜய் எகத்தாளம் பண்ணுவான் ...
யப்போய்
என்னடா ?
அந்த பொண்ணு எப்படி இருக்குன்னு பாரு என்று சிகரெட்டை இழுத்து கொண்டே வேதாந்த் கையை காட்ட
அதர பழைய பிகர்டா என்று சலித்த விஜய்யை முறைத்து கொண்டு வந்தாள் அவன் மனைவி மகிழ வல்லி...
யம்மோய் நான் இல்ல நான் இல்ல , உன் புருசன் தான் என்ன கெடுத்தது என்று பெஞ்சை தாண்டி விழுந்து வேதாந்த் ஓட
டேய் சன் மாட்டி விட்டுட்டு ஓடாதடா என்று விஜ்ய்யும் ஏகிறி குதித்து ஓட ..இருவருக்கும் குறுக்கே கட்டையோடு நின்றாள் மகிழவல்லி ...
என்ன அத்தான் இது இந்த பழக்கத்தை எப்பதான் விட போறீங்க ஹான் ..
சோறு திங்கிறது, வேலை செய்யிறது போல சைட் அடிக்கிறதும் என் உடம்போட ஒட்டி போச்சு வள்ளி அதெல்லாம் விட முடியாது... என்று அவள் கழுத்தில் கை போட சுளீர் என்று அடி போட்டாள்
ஆவுச் ஏன்டி அடிக்கிற..
நீங்க கெட்டு போறது போதாதுன்னு அவனையும் சேர்த்து கெடுத்து பாருங்க வயசு 32 ஆகுது .. இன்னும் உங்க பின்னாடி சைட் அடிச்சுட்டு சுத்திட்டு இருக்கான்.. இருவரும் ஒருசேர கிராஸ் பண்ணி போகும் ஆன்டிக்கும் அவர் மகளுக்கும் கை ஆட்ட
ச்சைக், ரெண்டு பேரையும் திருத்த முடியாது வீட்டுக்கு வந்துடாதீங்க அப்படியே எங்கேயாவது போயிடுங்க.. கட்டினதும் சரி இல்லை பெத்தததும் சரி இல்லை... பேத்தி எடுத்தாச்சு இன்னும் சின்ன பையன்னு நினைப்பு என்று வள்ளி எரிச்சலில் கத்தி கொண்டே தன் வீட்டு கேட்டை திறந்தாள்..
என்னவாம் உன் பொண்டாட்டிக்கு? சும்மா சும்மா திட்டுறா? என்ற மகன் கையில் இருந்து சிகரெட்டை பிடுங்கி குப்பையில் போட்டான் விஜய்
அவ என்னைக்கு கொஞ்சி இருக்கா, விடுறா விடுறா போய் வேலைக்கு கிளம்பு இல்ல அதுக்கும் என் பொண்டாட்டி திட்டும் .. என்று இருவரும் பூனை போல உள்ளே நுழைந்து கொள்ள ...
சாப்பாடு ரெடி ரெண்டு பேரும் வாங்க என்றதும் ஏணிப்படியில் சறுக்கி கொண்டு வந்தது மகன் இல்லை விஜய்தான்..
ஏங்க வள்ளி ஏதோ வாயெடுக்க
ஆரம்பிக்காத சாப்பாட்டை வை... மகனும் சிறுது நேரத்தில் டக் டக் என்று காலணி ஓசையோடு குதித்து இறங்கி வர இருவரும் ஒருசேர அண்ணாந்து பார்க்க...
முன் உச்சி முடியை கலைத்து விட்டு கொண்டு பார்மல் சட்டை பேண்ட் டையில் விஜய்யின் மறு உருவமாக இறங்கி வந்தான் அவன் மகன் வேதாந்த அபிமன்யூ...
பணம் எப்போதும் தகப்பன் மகன் தரத்தை குறைத்தது இல்லை பணம் இருக்கு என்று மற்றவர்களை குறைவாக நடத்தும் குணம் இல்லாத வளர்ப்பு .. கெட்டதும் கத்து வைத்து கொள் என்ற தகப்பன் பேச்சில் அப்பப்ப ஒரு தம் , எப்பவாவது ஒரு பார்ட்டி சரக்கு அவ்வளவுதான் அவன் லிமிட்.. அதுவும் தகப்பனுக்கு சொல்லாமல் மறைக்க மாட்டான் சைட் அடிப்பதில் இருந்து சரக்கு அடிப்பது வரை விஜய்க்கு தகவலை சொல்லி விடுவான்..இருவரும் எப்போதும் நண்பர்கள் ...அதன் பிறகு தான் தகப்பன் மகன் ..
கல்யாணத்துக்கு பொண்ணு எப்போ பார்க்க போறீங்க என்று சட்டையை மடக்கிவிட்டு உட்கார்ந்த மகனை முறைத்த வள்ளி ...
எதுக்கு ராசா நீ ஊரெல்லாம் மேய்றதான, நீயே ஒன்னை பிடிச்சிட்டு வா
அப்போ பத்து பதினைஞ்சு கொண்டு வருவேனேம்மோய்
என்ன மை சன் குறையா சொல்ற
மாசத்துக்கு சொன்னேன் விஜய்
அதான பார்த்தேன் பரம்பரை பேரை காப்பாத்து மை சன் ..
அப்படியே ஆகட்டும்
தூதூ நல்ல அப்பன் , நல்ல புள்ள பேச்சு தான் இருவருக்கும் தினுசாக இருக்கும் ... ஆனால் அப்பன் போல மகன் என்று தெரியாதா? இரண்டாவது மகளை கட்டி கொடுத்து விட்டு இப்போதுதான் பேத்தி பிறந்தாள் ... அதுவரை வேதாந்த் பொறுத்து இருந்ததே பெரிதுதான் ..
பொண்ணு பார்க்கவா வேதா
ம்ம்
எப்படி வேணும்னு சொல்லு அப்பாவை வேணும்னா வேண்டாம்டா வேண்டாம் , நானே பார்க்கிறேன் உன் அப்பன் அவனுக்கும் சேர்த்து பார்த்துட்டு வந்து நின்னாலும் நிற்பார்
ஏன்,வள்ளி நான் கட்ட கூடாதா அந்த முருகனுக்கு ரெண்டு இருக்கும் போது எனக்கும் வள்ளி தேவானைன்னு ரெண்டு இருந்தா தப்பா? வள்ளி விஜய் காதில் எதை சொன்னாளோ கப்சிப் என்று அமர வேதாவுக்கு இதழில் சிரிப்பு விரிந்தது..
தாய் தகப்பன் போல ஒரு அந்யோனிய வாழ்க்கை வேணும் அவ்வளவு தான் ஆசை!! பெண் இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லை...
வள்ளி போல ஒருத்தி வந்தால் தானே அது சாத்தியம்
கலிபோர்னியா ஏர்போர்ட்...
தொடை அளவு ஷார்ட்ஸ் மேலே ஒரு டிசர்ட் தலை மேலே கூலிங் கிளாஸ் சகிதம் நின்றாள் அவள் ...
வதிம்மா..
ஐயம் நாட் அ கிட் மாம் .. ஐ நோ என்ற மகளை வெண்மதி பெருமூச்சு விட்டு பார்த்தாள்.. காரை விட்டு இறங்கி தோரணையாக வந்த தன் தகப்பனை பார்த்ததும்
டேடி என்று தாவி குதித்து ஏற மகளை ஒரு கையில் தூக்கி சுற்றினான் அக்னி புத்திரன்...( அந்நியன் கதை நாயகன்)
பிறப்பது மகனாக இருப்பான் என கனவு காண மகள் உருவத்தில் வந்த மகன் அவள் ..
அசராவதி.. அக்னி புத்திரன் வெண்மதியின் ஒற்றை தவப்புதல்வி...
மகன் இல்லையெனில் என்ன பிறந்த மகள் இன்றுவரை மகனுக்கு சமானம் தான்
அசராவதி வயது இருபது ...
இந்தியாவில் போய் மூலிகை பற்றிய பட்டபடிப்பு படிக்க செல்கிறாள் .. தகப்பனும் மகளும் தாயின் பேச்சில் ஒன்றை கேட்டார்கள் என்றால் அது இது ஒன்றுதான்
மாமா படிக்க வைக்கிறதே வைக்கிறீங்க இந்தியாவுல படிக்க வைங்க மதி அக்னி அருகே உட்கார்ந்து புலம்ப
எதுக்கு , அவளை பார்க்க போற சாக்குல அங்க பொசுக்கு பொசுக்குன்னு போகவா , ஒன்னும் தேவையில்ல ... வெண்மதி முகம் சுருங்கி போனது.. ஆனால் ரெண்டு நாள் கழித்து அக்னி கையில் இந்தியாவில் நெல்லை கல்லூரியில் படிக்க பார்ம் வாங்கி கொண்டு வந்து மதி முன்னால் போட
நான் சொன்ன உடனே செஞ்சா அய்யா தலையில இருக்கிற கிரீடம் விழுந்திடுமா ..
ஆமா விழுந்திடும் ..
ம்க்கும் உங்க மக சம்மதிப்பாளா...
நீ கேட்டா மாட்டா நான்,கேட்டா போவா
என்னவோ இந்த வீட்டுல பேயிங் ஹெஸ்டா நான் இருக்கிறது போலவே அப்பாவும் மகளும் நினைச்சிட்டு சுத்துறாங்க .. எப்படியோ போங்க என்று மதி எழும்பி போக ..அக்னி மகளை மடியில் வைத்து ஒரே கொஞ்சு
வயித்தெரிச்சல் வர வைக்கிறதே இதுகளுக்கு பொழம்பா போச்சு என்று மதி இருவரையும் முறைத்து கொண்டே போக
நோ டேடி அங்க எனக்கு ஒத்துக்காது
ஒத்துக்கலேன்னா உனக்கு ஏத்தாப்ப எல்லாத்தையும் மாத்திடு அசரா...
ஓஓஓ
அப்பா சம்பாதிக்கிறது யாருக்கு ?
எனக்குதான்
ம்ம் என்ன வேணும்னாலும் பண்ணு , ஆனா தப்பை தப்பு இல்லாம பண்ணு மாட்டிக்க கூடாது புரியுதா பேபி
யா டேடி நான் உங்க பொண்ணு என்ற மகளை கட்டி அணைத்து அக்னி அனுப்பி வைத்தான்
அக்னியின் ரத்தம் அதே திமிர் , கோபம், அடங்காத தன்மையோடு அரபியன் குதிரை போல நெல்லையில் வந்து இறங்கினாள் ..
அசுராவதி!!!
அன்புக்கு மட்டுமே கட்டுப்படும் ஒருவன்
அடக்கி ஆண்டே பழக்கப்பட்ட ஒருத்தி
களம் புதிது !!
ஆட்டமும் புதிது !!
பழைய கயையை ரீகேப் பண்ணிக்கோங்க .. முதல் பாகம் ரெண்டு கதையும் ஆடியோ நாவலாக உள்ளது ..
வரும் 13 தேதி வெள்ளி முதல் சைட்டில் ஆரம்பம் ஆகும்
மறுபடியும் அக்னி விஜயோடு ரைட் போகலாமா.?