இவள் துணைவி அவள் மனைவி 6
Thu6
6 இவள் துணைவி
அவள் மனைவி!!
"மாமா மதியம் சாப்பிட வந்துருவீங்கதானே,
"போன் போடுறேன்ம்மா
"ம்ம மகனை பள்ளிக்கு ரெடியாக்கி , அவன் காரின் முன்னிருக்கையில் உட்கார வைத்துக் கொண்டே ஆசையாக தன் கணவனின் முகத்தை வேணி பார்த்துக் கொண்டிருக்க .
"என்னம்மா ஏதாவது பேசணுமா ?என் முகத்தையே பாத்துட்டு இருக்க
"தெரியல மாமா உங்கள பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு... "
"அப்படியா வேணும்னா தலையை உன்கிட்ட கழட்டி வச்சிட்டு போகட்டுமா'
"அப்போ மீதி யாருகிட்ட கொடுக்க போறீங்க...
எனக்கு மொத்தமா இந்த பதி மாமா வேணும்"
"ஹாஹா தந்துட்டா போச்சு
"மாமா
"சொல்லும்மா
என் மேல எதுவும் கோவமா ?
"இல்லையே ஏன்மா தீடிர்னு இப்படி கேட்கிற ..
சும்மாதான் ... கொஞ்ச நாளா டல்லா இருந்த மாதிரி இருக்கீங்க ...
"அப்படியெல்லாம் இல்ல என் பிள்ளைக்கு தங்கச்சி பாப்பா ரெடி பண்ணி கொடுக்கலாமா, தம்பி பாப்பா ரெடி பண்ணி கொடுக்கலாம்னு யோசனையா இருக்கும் போல என்றதும் வேணி வெட்கத்தில் சிரித்துக் கொண்டே கணவனுக்கு கையாட்ட, அவள் சிரித்த முகத்தை பெருமூச்சு விட்டு பார்த்த பதி காரை எடுத்தவன் மகனை ஸ்கூலில் விட்டு விட்டு வெளியே வர....
தன் மனைவியின் ஸ்கூட்டி ஒரு மெடிக்கலின் வாசலில் நின்று கொண்டிருக்கவும்... தலையை திருப்பி அங்கே பார்க்க திரவியா தான் மெடிக்கலில் நின்று கொண்டிருந்தாள்
"இவளுக்கு உடம்புக்கு என்ன ஆச்சு எதுக்கு மெடிக்கல்ல நின்னுகிட்டு இருக்கா... என யோசனையாக நின்றவன் கால்கள் எப்படி தானாக ரோட்டை கடந்து அவள் நிற்கும் இடத்தில் போய் நின்றது... பதி அவளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தான்...
"அண்ணா முகத்தில் பட்ட காயம் ரொம்ப காந்தது இநத காந்தல் போவ ஏதாவது மருந்து இருக்கா, அப்படியே உதட்டில பட்டிருக்க , அடிக்கும் மருந்து கொடுத்துடுங்க... அப்பா முரட்டுத்தனமா அடிச்சு வச்சுட்டார்.. " என்று முனங்கி கொண்டே மருந்தை கை நிறைய வாங்கிக் கொண்டு திரும்பியவள் உமாபதி நெஞ்சில் முட்டி நிற்க... அவள் ஏன் பதறப் போகிறாள்.. இவன் தான் பதறி சற்று பின்னால் நகர்ந்து நின்றவனை கேலியாக மேலும் கீழும் பார்த்தவள்...
"என்ன கணவரே முதன் பொண்டாட்டிகிட்ட ஷிப்ட் முடிஞ்சிடுச்சோ, காலு இரண்டாவது பொண்டாட்டியை தேடி வந்திருக்கு "என்று சிரிக்க இவளுக்கு என்ன ஆனது என்று யோசித்து இவள் பக்கத்தில் வந்து நின்றதற்கு , செருப்பை பிய்த்து அடித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன்
"உன் கூட கொஞ்சம் பேசலாமா?"
வாழ்க்கை முழுக்க டைம் இருக்கு கணவா , பேசலாம் கொஞ்சலாம் பேசிக்கிட்டே கொஞ்சலாம்.. எங்க எப்ப பேச போறீங்க ??
"இங்க வேண்டாம் வந்து கார்ல ஏறு..
"பைக்
"பிறகு வந்து எடுத்துக்கோ
"ஓகே என்று பைக் சாவியை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டவள் முன் இருக்கையில் ஏறுவதற்கு கார் கதவை திறக்க...
"அது என் பொண்டாட்டிக்கான இடம், என் பிள்ளையும் பொண்டாட்டியும் மட்டும் தான் இருக்கணும் ...
"ஓஓஓ அப்போ நான் யாரு மிஸ்டர் உமாபதி???
"நீ எப்படியா இருந்தாலும் இரண்டாவதுதான் உனக்கு பின்னாடி இருக்கையே போதும்...
"ஓஓ, எனக்கான உரிமைய நீங்க கொடுக்கக்கூடாது உமாபதி சார் , நானே எடுத்துப்பேன்... உங்க மூத்த பொண்டாட்டி இருக்கும் போது , இந்த சீட் அவளுக்கு... நான் இருக்கும் போது இந்த சீட் எனக்கு... தாலி ஸ்ட்ராங்கா உள்ள பதுக்கி வச்சிருக்கேன் .. நான் உட்காரத்தான் செய்வேன்" என்று அடாவடியாக சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்..
முன்னால் இருந்த கண்ணாடியை பார்த்து தன் காயங்களுக்கு திரவியா மருந்து போட்டுக் கொண்டிருக்க... காரை ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு கொஞ்சம் மனம் கனத்து தான் போனது... . கத்தி கூட வேணியிடம் கோபப்பட மாட்டான் , அவனுக்கு கோபப்படவே வராது அப்படிப்பட்டவனை, கோபத்தில் அரக்கனாய் மாற்றி இதோ காயத்தை வாங்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்.. அவளுக்கு வலித்ததோ இல்லையோ, இவனுக்கு இப்படி காயப்படுத்தும் அளவுக்கு நான் தரம் இறங்கி போனேனா? என்று வலிக்க ..
சாரி திரவியா கொஞ்சம் கோபத்துல நான் என்ன பண்றேன்னு தெரியாம பண்ணிட்டேன்"...
"ம்ம் இதே மாதிரி கோவத்துல , என்ன பண்றேன்னு தெரியாம என் கூட அப்படி இப்படி இருந்தா நல்லா இருக்கும் என்றவளை எரிச்சலாக பார்த்தவன்
"நீ என்மேல வச்சிருக்கிற இந்த பீலிங்குக்கு என்ன அர்த்தம் தெரியுமா ? "
"நீங்க படிச்சவங்க, நாலும் தெரிஞ்சவங்க, அதைவிட என்னை விட ஏகப்பட்ட வயசு பெரியவரு, ஒரு கல்யாணம் முடிஞ்சு , அனுபவம் வேற வாய்ந்தவரு, நீங்களே சொல்லுங்களேன்... இதுக்கு பேரு என்ன ? "
"இதுக்கு பேரு அட்ராக்சன்... என் மேல உனக்கு வந்து இருக்கிறது ஈர்ப்பு"
"ஓ யூ மீன் , உங்க மேல எனக்கு ____ ஸ் ஆசை வந்திருக்குன்னு சொல்றீங்க ரைட்" என்று பச்சையாக சொன்ன அவளை கண்ணை உருட்டி உமாபதி பார்க்க
"சும்மா சொல்லுங்க நமக்குள்ள என்ன ஒளிவு மறைவு இருக்கு ... ஓபன் டாக் பண்ணலாமே ?
"ம்ம எஸ் நான் சொல்ல நினைச்சதை நீயே சொல்லிட்ட ...
"சரி இப்போ உங்க மேல செ***** ஆசை வந்துச்சுன்னே வச்சிப்போம், அது வந்ததுனால என்ன தப்பு இருக்கு?
"என்ன தப்பா , இதுக்கு பேரு எச்சத்தனம் திரவியா யோசி, உன் மேல இருக்கிற தப்பு புரியும்..
"என்ன யோசிக்கணும் ஒரு பொண்டாட்டி வீட்டில இருக்கும் போது, அந்த பொண்டாட்டிக்கு குழந்தையும் கொடுத்து , அந்த குழந்தைக்கு அஞ்சு வயசு ஆகி இருக்கும் பொழுது , கொழுந்தியா கேட்டான்னு , தாலியை எடுத்து கட்ட யோசிக்காத நீங்க... என்ன யோசிக்க சொல்றீங்களா?
"என்ன அந்த ஒரு இக்கட்டில மாட்ட வெச்சது நீதான்..
சரி உங்களுக்கு முன்னாடி குழி இருக்கு, குழி கிடந்தா நேரா போய் குழி சின்னதா இருக்கா பெருசா இருக்கான்னு விழுந்து ஆராய்ச்சி பண்ணுவீங்களா? அந்த குழிய சுத்தி போறதில்ல, அதே மாதிரி செத்துட்டு போறான்னு விட்டுட்டு போறதுக்கு வழி இல்லாம .. ஐயோ பாவம்ன்னு கொடுக்குறதுக்கு தாலி என்ன உங்களுக்கு விளையாட்டு பொருளா ??
திரவியா ஆஆஆஆ"
"கத்தாதீங்க மிஸ்டர் பதி உங்க பேச்சை எல்லாம் கேட்க ஐயம் நாட் நீலவேணி , ஐயம் திரவியா உமாபதி' என்றவள் முகத்தில் அப்படியே ஒரு திமிர்த்தனம் இருந்தது...
ஊப்ஸ் இஇஇஇஇஇஇஇஇ
"தாலி புனிதம் தாம்பத்தியம் புனிதம் , மத்தது எல்லாம் எச்சன்னு சொல்ற நீங்க., அந்த தாலிய என் கழுத்துல கட்டினா.. ஒரு பொண்டாட்டியா நான் கேட்க வேண்டியது உங்ககிட்ட கேட்கத்தான் செய்வேன்.... தாலி கட்டினீங்கல்ல , அப்போ தாம்பத்தியம் என்கூட பண்ணுங்கன்னு சொல்றதுல என்ன தப்பு இருக்கு? அதுக்கு பேரு நீங்க ஈர்ப்புன்னு வச்சுக்கிட்டாலும் சரிதான் , ___ஸ் ஆசைன்னு நினைச்சாலும் சரிதான்..பட் , எனக்கு நீங்க வேணும் ... தாலி கட்டுனா உங்க கூட தாம்பத்தியமும் பண்ணியே தீருவேன்... தாலிக்காக அவ்வளவு ரிஸ்க் எடுத்த நான் , இந்த தாம்பத்தியத்துக்காக எவ்வளவு பண்ணுவேன்னு நீங்க யோசிங்க ...
"கண்ணகி வாழ்ந்த இடத்துல வளர்ந்த பொண்ணா நீ??
"ஹாஹாஹா , நான் கண்ணகியா இருந்தா யாரும் எனக்கு சிலை வைக்க போறது கிடையாது மாமா, நான் மாதவியாவே இருந்துக்கிறேன்... மாதவியா இருந்தாலும் , மனசுல நினைச்சவனோட வாழ ஒரு வாய்ப்பு கிடைக்கும்ன்னா, மாதவியா இருக்கிறதுல எனக்கு எந்த வருத்தமும் கிடையாது ... சோ, நீங்க கண்ணகி கூடையும் மாதவி கூடையும் வாழ பழகிக்கோங்க ... காரை ப்ரேக் போட்டு நிப்பாட்டிய உமாபதி, திரவியா கழுத்தை பிடித்து காரை விட்டு வெளியே தள்ளியவன்
"உன்கிட்ட போய் பேசி புரிய வைக்க பாத்தேன் பாரு ச்சே , இன்னைக்கு காரை விட்டு தள்ளி இருக்கேன், இதே போல என் கழுத்துல ஏறி உட்கார்ந்து வேதாளமா ரத்தத்தை குடிக்கிற உன்னை என் வாழ்க்கையை விட்டும் தள்ளி விடுவேன்டி... எத்தனை நாளைக்கு ஆடுறேன்னு பார்க்கிறேன்.... எல்லாருக்கும் இந்த பதி நல்லவன்தான்... ஆனா உனக்கு மட்டும் கெட்டவன்தான்... என்னைக்கும் நீ நினைக்கிற மாதிரி என் கூட வாழ முடியாது... " தரையில் கிடந்த அவளை காரி துப்பாத குறையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு உமாபதி காரை எடுக்க...
குப்பைக்கு அருகே கிடந்த திரவியாவோ உதட்டை வளைத்து கொண்டு..
"குப்பை ஒட்டுதேன்னு வருத்தப்பட்டா, நான் எப்போ வாழ்றது... குப்பையை உதறி போட்டுட்டு எத்தனை தடவைனாலும் எழும்பி பின்னாடி வருவேன் கணவா ... இதுக்கெல்லாம் நான் அசரமாட்டேன் என்று தன் மேல் பட்ட குப்பையை எல்லாம் உதறிவிட்டு, ஆட்டோவை பிடித்து வீடு நோக்கி போனாள் அவனின் சின்ன மனைவி !!
"என்னடி போகும்போது என் வண்டியில போன, வரும்போது ஆட்டோவில் வந்து இறங்கி இருக்க...
"எனக்கு அந்த வண்டிய ஓட்ட முடியல
"என்கிட்ட நல்லா தானடி ஓடுது.
"உன்கிட்ட நல்லா ஓடுறாரு ,
யார சொல்ற ???
"வண்டிய சொன்னேன்... உன்கிட்ட அந்த வண்டி நல்லா ஓடுறாரு , ஆனா என்கிட்ட முரண்டு பிடிக்கிறாரே...
"ப்ச், அது சரி நேத்து சேறு, இன்னைக்கு குப்பையா வந்து நிக்கிற ... குப்பையில் விழுந்து பிரண்டு எழும்பி வந்த தன் தங்கையை புரியாமல் நீலவேணி பார்த்துக் கொண்டிருக்க...
"நேத்து உடம்பு ஃபுல்லா சேறு அப்பிக்கனும் போல ஆசையா இருந்தது ... இன்னிக்கு குப்பை அப்பிக்கணும் போல தோணுச்சு.. சோ இன்னைக்கு குப்பை... நாளைக்கு சாக்கடை, என் மேல தான் ஒட்டுது உனக்கு என்ன வந்துச்சு...
எம்மா நாரடிக்கிறது என் வீட்டை என்று குமரகுரு முகத்தை சுளிக்க...
"இது என் உமாபதி மாமா பார்த்து பார்த்து கட்டின வீடு சோ எனக்கும் இந்த வீட்ல உரிமை இருக்கு
திரவியா என்ற குரலில் , வாசலை திரவிய எட்டிப் பார்க்க.. உமாபதி கோபத்தில் பல்லை நெறித்துக் கொண்டு நின்றான்..
"பெரியவங்க கிட்ட எப்படி பேசணும்னு உனக்கு தெரியாது
"சின்னவங்க கிட்ட எப்படி பேசணும்னு உங்க அப்பாவுக்கு தெரியாதா?"
"வீட்டுக்கு விருந்தாளியா வந்திருக்க, வந்த இடம் தெரியாம போக பழகு ..
"வீட்டுக்கு விருந்தாளியா வந்தவகிட்ட லிமிட்டோட பேசுறதுக்கு உங்க அப்பாவுக்கு முதல்ல கற்றுக் கொடுங்க
"திரா என்ன பேச்சு பேசுற அமைதியா இருடி என்று நீலவேணி பதறி வந்து தங்கையின் வாயை பொத்த
"அடங்கி போறதுக்கு நான் ஒன்னும் நீலவேணி இல்ல... சோ மைண்ட் யுவர் வேர்ட்ஸ் குமரகுரு சார் என்றுவிட்டு தன் அறையை நோக்கி போக
"சாரி மாமா
"உனக்காக இந்த பிசாசை எல்லாம் சமாளிக்க வேண்டியது இருக்கு , விடும்மா என்று குமரகுருவும் அறைக்குள் போய்விட்டார்..
"மாமா என்று நீலவேணி கணவன் கையை வந்து பிடிக்க ...
"டென்ஷனா இருக்கு வேணி , கொஞ்சம் குளிச்சிட்டு வர்றேன்...
"ஐயோ அங்க பிளம்பர் வேலை பார்த்துட்டு இருக்காரு மாமா
"ஏன் என்னாச்சு எல்லாம் நல்லா தானே இருந்தது
ம்ம், காலையில திரவியாதான் அவ ரூம் ஹீட்டர் சரியில்லன்னு நம்ம ரூம்ல வந்து குளிச்சா? இங்கேயும் ஏதோ லீக்கேஜ் இருக்காம் , அதான் பிளம்பர் வர வச்சு, வேலை பாத்துட்டு இருக்கேன்" என்றதும் அறைக்குள் சிசிடிவி மாட்டுவேன் என்று திரவியா சொன்னது இவனுக்கு ஞாபகம் வந்து கையில் இருந்த எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு உமாபதி வேகவேகமாக படியில் தாவி தன் அறைக்குள் ஓடினான்.. அங்கே எல்லாவற்றையும் முடித்துவிட்டு பிளம்பர் வெளியே வர
"எங்கடா வச்ச? என்று அவன் சட்டையை பிடித்து உலுக்க
"சார் என்ன ஆச்சு என்று அவன் பதற..
" பல்ல ஒடச்சிடுவேன், எங்கடா ஃபிட் பண்ணி இருக்க ...
"பாத்ரூம்ல ஒன்னு வாஷ்பேஷன்ல ஒன்னு சார்
ரெண்டா?
"ம்ம் ,
" இப்பவே அதை எடுடா..
"சார் எடுத்தா லீக்கேஜ் ஆயிடும் ..
"எடுக்கலன்னாலும் சுட சுட லீக் ஆயிடும் அண்ணா என்று சிரித்துக்கொண்டே வந்த திரவியாவை உமாபதி பல்லை கடித்துக் கொண்டு பார்க்க அவன் கையில் இருந்த பிளம்பர் சட்டையை விலக்கி விட்டவள்
"நீங்க போங்க அண்ணா, நான் அவர்கிட்ட பேசிக்கிறேன் காசு வாங்கிட்டீங்களா?
"இன்னும் இல்லம்மா என்றதும் உமாபதி சட்டை கையை விட்டு உரிமையாக பணத்தை எடுத்து அவர் கையில் கொடுத்தவள்..
"சாரி அண்ணா அவர் ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ல உங்ககிட்ட அப்படி நடந்துக்கிட்டார்... போயிட்டு வாங்க
"ம்ம் சரிம்மா என்று அவர் இன்னும் குழம்பிக் கொண்டே கீழே நடந்து போக
சிசிடிவி கேமரா பைப்ல வச்சேன்னு நினைச்சியா கணவா, நட்டுல வச்சிருக்கேன் ....
உன்ன இஇஇஇஇஇ என்று அவள் கழுத்தோடு பிடித்து தூக்கியே விட்டான்..
ஸ்ஆஆஆஆ அவள் வலியில் துடிக்க
மாமா மாமா சாப்பிட வரீங்களா? வேணி குரல் வர
சட்டென திரவியாவை கீழே போட்ட உமாபதி...
"எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு... நீ உன்னோட லிமிட் தாண்டி போயிட்டு இருக்க என்று அவளைத் தொட்ட தன் கையை டிஷ்யூ பேப்பரில் துடைத்து அவள் முகத்திலேயே போட்டுவிட்டு
"உன்ன தொடுறதை கூட பாவமா நினைக்கிறேன்.. உன்ன அடிச்சு , திட்டி என் கையும் வாயும்தான் வலிக்குது... எப்படியும் போ , உன்னை எட்டியே பார்க்க மாட்டேன்... என்கிட்ட இருந்து மனைவிங்கிற அந்தஸ்தை நீ செத்தாலும் சரிதான் , நான் செத்தாலும் சரிதான் வாங்கிக்கவே மாட்ட... என்ன பண்ணுவியோ என்ன பண்ணனுமோ புடுங்கிக்கோடி , உன்னால ஒன்னையும் புடுங்க முடியாது என்றுவிட்டு அவன் கீழே இறங்கி போக ..
போகும் அவன் முதுகை பார்த்துக் கொண்டு நின்ற திரவியாவோ..
கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ?..போவோம் போவோம் என்ற தோளை உலுக்கிக்கொண்டு அவளும் பின்னாலேயே சாப்பிட இறங்கி போனாள்..
அத்தனை தவறையும் செய்துவிட்டு தன் பேச்சுத் திறமையால் அதை நியாயப்படுத்தும் நபர்கள் முன்னால், விட்டுக் கொடுத்து போய் பழக்கப்பட்டவர்கள் வார்த்தை இல்லாது வாயடைத்து தான் போவார்கள்...
நம்ம பதி வாயில பெவிஹூயிக் போட்டு ஒட்டிப்பது நலம்!!