கவறின் தவறேல் அமேசான் வெளியீடு

Kavar

கவறின் தவறேல் அமேசான் வெளியீடு

கவறின் தவறேல் நேரடி அமேசான் வெளியீடு 

https://www.amazon.in/dp/B0DK4B3W38

பெரிய வீட்டு மேல பிராது வந்திருக்கு ஐஞ்சு மணிக்கு பஞ்சாயத்து கூடும் "என்று தண்டோரா சத்தத்தில் அத்தனை கூட்டமும் அதிர்ந்தது 

"யாரு பேர்ல பிராது அண்ணன்" என்று துலிகா அதிர்ந்து கேட்க

"உங்க ரெண்டாவது அண்ணன் சிருஷ்டி பேர்ல

"அவர் பேர்லையா?? என்ன பிரச்சனை,   யாரா இருக்கும் என்று அனைவரும் பஞ்சாயத்து நோக்கி ஓட ..

பஞ்சாயத்து ஆலமரம்,  பல்லு போன கிழவர்கள் அமர்ந்திருக்க வளைந்த சொம்பு எல்லாம் ரெடி தீர்ப்பு சொல்ல ... 

என் தம்பி மேல எவன்டே பிராது கொடுத்தது??  என்று விஷ்வா வேட்டியை ஏத்தி கட்டி மீசையை முறுக்க..  அத்தனை பேரும் அவனை அமைதியாக பார்த்தனர்...  அவனுக்கு கோவம் வராது வந்தால் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவானே

"யாரு பிராது கொடுத்ததுன்னு  கேட்டேன்?   என்று சிருஷ்டியும் உறும  

"நான்தான் !! என்ற பெண்ணின் குரலில் அனைவரும் திரும்ப ...

அவள் அனாமிகா!!

இவளா ??என்றது சிருஷ்டி உதடுகள் 

அனாமிகா தன் ஆறு மாத குழந்தையை தூக்கி கொண்டு கூட்டத்தின் நடுவே வர ... 

துலிகா , விஷ்வா அனைவரும் புரியாது முழிக்க..ஹம்சா கண்ணை விரித்து கையில் உள்ள குழந்தையையும் சிருஷ்டியையும்  மாறி மாறி பார்க்க ,  சிருஷ்டி மட்டும் சட்டென்று தலையை குனிந்தான்.. 

பின்ன தங்கை வாழ்க்கையை காப்பாத்த அவன் செய்த மாதவறு அவன் மட்டுமே அறிவான் 

"என்ன பிராதும்மா ? 

"அவர் என்ன கடத்தி வச்சி , கெடுத்துட்டார் .... இது அவர் குழந்தை எனக்கு நியாயம் வேணும்  "என்று அனாமிகா குழந்தையை சிருஷ்டி காலடியில் போட...  அனைவரும்  அதிர்ந்து நிற்க ... 

சிருஷ்டி தன் ஜாடையில் கிடந்த மகனை பெருமூச்சு விட்டு பார்த்தான்

கவறின் தவறேல் !!

பெண்மையை  கவறின் தவறேல் என்றான் அவன்,

அவன் வாழ்கையை கவறின்  தவறேல் என்றாள்  அவள் 

அவனை வாழ விட கூடாது என வந்தாள் அவள்!!