அவுணர்களின் அதிபதி நான் டீசர்
அவுணர்

வெள்ளி இரவு முதல் சைட்டில் அதிபதி வருவான்..
அவுணர்களின் அதிபதி நான்!!
அவுணர் _ அசுரன்
ராவண ஈஸ்வரன் தலையை கோதி கொண்டு முகத்தில் தோன்றும் சினத்தை மறைக்க முடியாது திணறி அருகே இருந்த மேஜையை கையால் உடைக்க மட்டுமே முடிந்தது ...
மகனுக்கு ஆயுதம் மட்டுமா சொல்லி கொடுத்து பழக்கினான் ராவணன்
பெண் உன் பலகீனம்
குடும்பம் உன் கால்கட்டு,
சகோதர பாசம் ,நட்பு உன் எதிரி
காதல் புதைக்குழி மகனே !!!
இதுல எதுலேயும் சிக்கிடாத அதுல சிக்கினதுனாலதான் இந்த ராவணன் இன்னவரை சிலதை சாதிக்க முடியாம திணறுறேன் , அதனால நீ அந்த தப்பை பண்ணிடாத என்று சொல்லி சொல்லி மகன் மனதில் ஆழமாக பதிய வைத்து விட்டான் .
போனை எடுத்து தன்,மூத்த மகனுக்கு தட்டினான்
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை என்று பாட்டு அதிர பத்து தடவைக்கு பின் அப்பக்கம் போன் எடுக்க பட்டது ..
சரக்கு இன்னும் போய் சேரலைன்னு போன் வந்தது ... என்னாச்சி ? ..
டேய் பேசுறது கேக்குதா .
ம்ம் கேட்குது கேட்குது கடைக்காரன் முன்பு ஒற்றை விரல் நீட்டி, பலான பலூன் ஒன்றை வாங்கி பேண்ட் பாக்கெட்டில் சொருகி கொண்டு நடக்க ஆரம்பித்தான் ...கோல்டன் நிற முடியும் தாடியும் வடநாட்டு ஜாடையில் தகப்பன் தாயின் குவாட்டருக்கு தண்ணிர் விட்டு கலக்கிய புது நிறத்தில் இருந்தான்...
சரக்கு இன்னும் போய் சேரலையாம் என்ன ஆச்சு? ராவணன் பல்லை கடித்து பேசிட
வித்துட்டேன்..என்றான் புருவத்தை நீவி கொண்டு சுற்றி கண்களை வட்டமடித்த கொண்டு
யாருகிட்ட?
ஆப்போசிட் பார்டிகிட்ட ...
அது எதிரி டீம்டா...
அதுக்கு என்ன செய்ய? காசு தந்தான் கொடுத்துட்டேன் ... நாட்டுக்கு சேவை நீ செய், நான் எனக்கு சேவை செஞ்சிக்கிறேன் என்றவன் சுவற்றில் சாய்ந்து நின்ற பெண்ணை கை நீட்டி அழைத்து..
ஒரு நைட்...
ஆயிரம் சாரே..
இந்தா ஐந்நூறு
சார் ஆயிரம்
ஏன் நான் மடடும் தான் அனுபவிப்பேனா, நீ அனுபவிக்க மாட்ட, அப்ப நான் தர்ற சுகத்துக்கு காசு எவன் தருவான்? ராவணன் போனை தள்ளி வைத்து கொண்டான் மகன் பேசும் பேரத்தில் நரம்பு புடைத்தது..
சரி சாரே கொடு
பிடி வா என அவளோடு நடக்க ஆரம்பித்தான்..
காசு கொடுத்தா எது வேணும்னாலும் செய்வியா?
செய்வேன், நீ அதே காசை கொடு சரக்கை மறுபடியும் உன் கைக்கு கொண்டு வர்றேன் என்றதும் ஈஸ்வர் பல்லைக் கடித்தான்..
சரி, இப்ப நீ எங்க இருக்க?
ஹைதராபாத் ரெட் லைட் ஏரியாவுல , பூஜாவோ கூஜாவோ செம கம்பெனி குடுப்பா வந்தா ஒரு நாள் டிரை பண்ணு... அதற்குள் ஈஸ்வர் ஃபோனை வைத்து விட்டான்...
அவன் ராவணனின் அவதாரம் இல்லை ராவணனின் இரத்தத்தில் உருவான அவதாரம் ...
அகர அதிபதி!!! வயது முப்பது !!
அதிபதி!! இந்த உலகை பணம் கொண்டு பணத்தால் ஆள வந்த அதிபதி
அதிகாலை அந்த அறைக் கதவு தட்டப்பட்டது...
அடுத்த கஸ்டமரா!! என தோளை குலுக்கி கொண்டு அதிபதி தன் கருப்பை சட்டையை எடுத்து மாட்டி கொண்டு கதவை திறக்க....போலீஸ் கூட்டம் தோளை குலுக்கி கொண்ட அதிபதி , சுவற்றில் கையை கட்டி கொண்டு சாய்ந்து நிற்க.. அந்த பெண்ணை பிடித்த போலீஸ் அதிகாரி..
விபச்சாரம் பண்றியா, ஏய் போய் வண்டியில ஏறுடி.. நீயும் ஏறுடா என அதிபதின் சட்டையை பிடித்து இழுத்தான்..
அவன் தயாள இனியன் ஐபிஎஸ்... ராவணின் மற்றொரு அவதாரம் இவன் ...
எதிரே போலீஸ் யூனிபார்ம் போட்டு விறைப்பாக நின்ற தன் தம்பி தயாவையும் ,அவன் கை தன் சட்டை மேல் இருப்பதையும் அதிபதி மாறி மாறி பார்த்தவன்...
கேஸ் போட போறியா?...என்றான் வெட்டுப்பட்ட புருவத்தை வளைத்து கொண்டே
ஆமாடா என்ன செய்வ? ..
"போலீஸ்ஸ ஓங்கி மிதிச்சேன்னு அதுக்கும் சேர்த்து போடுறா பரதேசி" என்று அகரன் இனியன் நெஞ்சில் ஓங்கி மிதிக்க , இவனும் அவனை அடிக்க பாய..
சார் சார் அவன உள்ள தூக்கி வச்சி சாவடி அடிக்கலாம் ..இங்க வேண்டாம்...என ஒருவர் இனியன் காதில் குசுகுசுவென கூற...
உன்ன கதற விடுறேன்டா என அதிபதியை இழுத்து கொண்டு போக தயா போன் அடித்தது..
சொல்லுங்க ப்பா...
எதுக்குடா அவன அரெஸ்ட் பண்ற.. விடு அவன ...
என் கடமையை நான் செய்வேன்ப்பா..
எதுடா உன் கடமை அவன் என்ன பண்றான் ஏது பண்றான்னு பார்க்கிறதா உன் கடமை..
ஆமா
எப்படியும் போங்க என்று ஈஸ்வர் வைத்து விட்டான்...
அதிபதி சட்டை கையை மடக்கி கொண்டு போதை தரும் மதுவை வாயில் வைத்தவன்...
சொர்க்கம்!! போகலாம் வாடா என்று தயா காக்கி சட்டை காலரை இழுத்து , போலீஸ் ஜீப்பில் தள்ளி, அவன் அருகே குதித்து ஏறி அமர்ந்தான் அதிபதி ...
பொண்ணு, போதை ,பணம் மூணும் தர்ற சுகத்தில இந்த அதிபதி அரக்கனா நிம்மதியா வாழ்ந்துடுவான்.. என்று போதையில் சீட்டில் சாய்ந்த அதிபதியை கொல்லும் நாளுக்காக காத்திருக்கிறான் அவன் தம்பி தயா ....
உலகத்தை ஆள்வான் இந்த அதிபதி !!!
***
அகரன் இரவு சிவப்பு விளக்கு பகுதிக்கு போய்விட்டு விடியற்காலையில் வெளியே வர .. அந்த இடத்தில் சங்கோஜமாக தன் தாவணியை தோள் வழியாக போர்த்தி கொண்டு ஆண்கள் அவளை பார்த்து போகும் பார்வை உடலை கூசச் செய்ய குனிந்து நின்று கொண்டிருந்தாள் ...
கானவி, கானம் பாடும் அழகும் கானத்தை போல இனிமையும் கொண்டவள்,
அதிபதி காரில் ஏற வரவும், ஓடி வந்து அவன் முன்னால் நின்ற தென்றலை.. மேலும் கீழும் பார்த்த அதிபதி
இன்னைக்கு கோட்டா முடிஞ்சு, நாளைக்கு வரும் போது வந்து நில்லு என வண்டியில் ஏற போக... கானவி கையை பிசைந்து கொண்டே நிற்க...
என்ன தொழிலுக்கு புதுசா? என்று சிகரெட்டை எடுத்து வாயில் வைக்க
வாவ் என்ன வாசம் ... என்று நுகர்ந்து கொண்டே அவளைப்பார்கக சேலையை இழுத்து பிடித்து கொண்டவள்...
வானதி பாட்டி உங்கள வந்து பார்க்க சொன்னாங்க..
கிழவி இன்னும் சாகலையா எதுக்கு எங்கிட்ட அனுப்பிச்சு.. என்று யோசனையாக புருவத்தை தடவினான்.. போதை வேறு அவளை பளபளவென காட்ட தோளைக் குலுக்கியவன்...
காசைக் கொடுத்தா வருவாளா? கொடுத்து பார்ப்போம் வந்தா இன் இல்லை அவுட் என தோளை குலுக்கினான்..
எங்கூட வர்றியா?
ம்ம் சரிங்க..உங்ககூட வந்தா காலேஜ்ல சேர்த்து விட்டு படிக்க வைப்பீங்கன்னு பாட்டி சொன்னாங்க ..
ஓஓஓ காசுக்கு பதிலா இப்ப படிக்க வைக்க சொல்றீங்க போல நல்ல மெத்தட் போய் வண்டியில ஏறு என் வீடு ஓகேதான..
ஓகேதான் சார் என்று கானவி தான் கொண்டு வந்த கட்டைப்பைகளை தூக்கி ஒண்டு அதிபதி வண்டியில் ஏறினாள் ..
பாவம் பாட்டி ஈஸ்வர் மகன் என்று சொன்னவர் அதிபதியா தயாவா என்று சொல்லாமல் விட்டிருக்க..
இந்த அரக்கனிடம் வந்து மாட்டிய காலத்தின் கோலத்தை என்ன செய்ய??
இராவண சரித்திரம் திரும்பியது..........