எஃகில் கலந்த தளவம் நீ

Egg

எஃகில் கலந்த தளவம் நீ

Title and concept துண்டு போட்டாச்சு 

எப்போ வரும் 

விரைவில் வரும்  

எஃகில் கலந்த தளவம் நீ !! 

டீசர் 

எஃகு இரும்பு 

தளவம் பிச்சிப்பூ 

தலைப்பு செய்தி வானில் அடிக்கடி தோன்றும் வித்யாசமான பறக்கும் தட்டுகள்,  மக்கள் பார்த்ததாக தகவல் ... பொதுமக்கள் பதட்டம் என்று செய்தி வாசிப்பாளர் வாசிக்க..

ஆமா சார் நைட் ரெண்டு மணி இருக்கும்,  பக்கத்துல அந்த ஸ்பேஸ்டிஸ்க் பறந்தது,  ஒரே நேரத்துல நாலு அங்கேயும் இங்கேயும் கிராஸ் ஆச்சு ஒருவர் பதட்ட குரலில் கூற 

ஆமா சார் நாங்களும் பார்த்தோம் என்று ஆங்காங்குள்ள மக்கள் பீதியாக கூற 

ஏலியன் இருப்பது உண்மைதானா??  அவர்கள் மனிதனை,  பூமியை தாக்க திட்டமிடுகின்றனரா??  என்று செய்தி முடிந்தது 

ஊரே அடங்கிய வேளை,  வானத்தில் ஓசோன் படலம் அருகே பறக்கும் தட்டுகள் பல , பூமியை கண்காணித்து கொண்டிருந்தது..  குட்டி கிரகம் போல இருந்த அந்த தட்டுகள் உள்ளே பெரிய பெரிய மானிட்டர் வைத்து பூமி  உற்று நோக்கி பட்டு கொண்டிருந்தது..

டக் டக் என்ற இரும்பு காலணி சத்தம் கேட்டு அங்கே வெள்ளி  ஆடையில் நின்ற அத்தனை பேரும் திரும்ப 

வந்தான் அவன்!! 

ஏலியன் என்று  மனிதர்கள் கூறுவார்கள்,  வேற்றுகிரகவாசி  என்று படித்தவர்கள் கூறுவார்கள் , பூமி போன்ற இன்னொரு கிரகத்தில் உள்ள மனிதர்கள் அவர்கள் அவ்வளவே .... 

நீல் . கே 420 என்பது அவன் நாமம் ..லேசர் பார்வைக்கு சொந்தக்காரன்..மனிதனின் நாடி நரம்பு  யோசனை அத்தனையும் அத்துபடி...  

என்ன ஆச்சு ? என்ற அவன் எஃகு குரலில் ..

அல்மோஸ்ட் நாம என்ன செய்யணும்னு நினைச்சமோ அதை எல்லாம் இந்த சேட்டிலைட் போன்,  5ஜி 7ஜி இது மூலமா நாம செஞ்சுக்கிட்டே வர்றோம் ... மனிதன் எல்லாரும் இயந்திரமா மாறிக்கிட்டு வரான்,  அவனோட உணர்வுகள் எல்லாத்தையும் இந்த இயந்திரங்கள் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்திருக்கு இதுவே நமக்கு மிகப்பெரிய வெற்றிதான் நீல் ,

யா இதுதான நம்ம விருப்பம் 

பட்

வாட்

பாரு நீல்,, நம்ம மக்கள் தொகை எப்படி இருக்குதுன்னு.... 

என்னாச்சு 

இங்க இனப்பெருக்கம் பூமி அளவுக்கு இல்லை..

ப்ச் அதுக்கு டைம் இல்லேயே 

இப்படி சொன்னா எப்படி  அவங்கள அழிக்கிறது விட நம்ம மக்களை பெருக்கிறது நம்ம முக்கியமான வேலை நீல் ..

ஓஓஓ

அதை பத்தி ஒரு ஆர்டிகிள் ரெடி பண்ண சொல்லி இருந்தேன் ..

ம்ம் பிறப்பு இறப்பு இரண்டுக்கும் அஞ்சுவதும் இல்லை  அழுவதும் இல்லை .... இரும்பில் செய்த இதையோன் இவர்கள் ... 

அதுல வந்தது பார்த்தா எனக்கு அதிர்ச்சியா இருக்கு நீல் 

வொய்

இங்க ஆண்கள் கிட்டேயும் பெண்கள் கிட்டயும் கணக்கெடுப்பு நடத்துனதுல ... எல்லாரும் ஒன்னு போல சொல்றாங்க..

என்னன்னு 

எங்களுக்கு  இங்க உள்ள ஆண்கள் மேலையோ பொண்ணுங்க மேலையோ ஈர்ப்பே வரலேன்னு..

உணர்வே இல்லாம ஒரு கூடல் அதுல எப்படி குழந்தை அது இது...  இதெல்லாம் சாத்தியம் இல்லாதது எங்களுக்கு பிடிக்கலன்னு சொல்றாங்க...  அவனுக்குமே அதேதான்..  இதுவரை எந்த பெண்ணிடமும் தன் தேவைக்காக கூட செல்ல வேண்டும் என்று யோசித்ததே இல்லை...  அதற்கு நேரமும் இருந்ததில்லை... மொத்த பூமியையே கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கிறவன் பெண் பின்னால் அலைய முடியுமா??  அதைவிட அவர்கள் கிரகத்தில் வாழும் பெண்கள் அத்தனை பேரும் ஆணா பெண்ணா என்றே தெரியாத அளவிற்கு வேலை வேலை என்று மானிட்டர் பின்னாடி தான் அலைவார்கள் .... இந்த இயந்திர உலகத்தில் காதலா,  காமமா , உணர்வா?? சிரிக்க தோன்றியது அவனுக்கு..

நான் சொல்றது எல்லாம் இப்போ உங்களுக்கு சிரிக்க வைக்கலாம்  நீல் .. ஆனா பிட்டர் ஃபேக்ட் இதே மாதிரி போய்க்கிட்டிருந்ததுன்னா...  அடுத்த சந்ததி நம்மளோட கிரகத்தில் இல்லாம போயிடும்..

வாட் 

எஸ் ,  நாமதான் கடைசி சந்ததியா கூட இருப்போம் நமக்கு அறிவு இருக்கிற அளவுக்கு ஆள்பலம் இல்ல குழந்தை கண்டிப்பா பெத்துக்கணும்னு சொன்னா பெத்துப்பாங்க ஆனா உணர்வே இல்லாத ஒரு பெண் கிட்டையோ ஆண் கிட்டயோ எப்படி அது சாத்தியம்... 

இப்போ என்ன பண்ணனும்

 நமக்கு உணர்வுள்ள ஒரு சந்ததி உருவாக்கணும்..

ம்ம் 

நம்மளோட கிரகத்தோட மனிதர்கள் எண்ணிக்கையை கூட்டனும்னா,  கண்டிப்பா உணர்வுகள் நிறைந்த வாழ்க்கை மக்களிடையே தேவை ..

அதுக்கு என்ன செய்யணும்னு சொல்றீங்க உணர்வுகள் அதிகமாக இருக்கிற மனிதர்களோட நம்ம கிரகவாசிகளை சேரவிட்டா

நீல் யோசனையாக தன் நாசியை ஒரு விரலில் உரசி கொண்டே அவரை கூர்ந்து பார்க்க..  அவன் சிவப்பு விழி  கண்ணில் அதிர்வு வந்தது .. 

அப்படின்னா இங்க உள்ள ஆண்கள் அங்கு உள்ள பெண்கள் கூட , அங்கு உள்ள பெண்கள் இங்கு உள்ள ஆண்கள் கூட  சேரனும் சரியா..

ம்ம்  ஆமா ஏன் ட்ரை பண்ணி பார்க்க கூடாது நீல் 

பண்ணிடலாமே

ஒரு சாம்பிள் நீயே அதை ட்ரை பண்ண கூடாது நீல் 

 நானா

ஆமா நாம ஆபரேஷன் சக்சஸ் ஆனா அதுவே எல்லாரும் ட்ரை பண்ணட்டுமே.. 

நமக்கு நம்ம கிரகம் வளரனும் இங்க வம்ச விருத்தி விரட்டி நடக்கணும் அடுத்த கிரகத்தை எல்லாம் புடிக்கிறது நம்மளோட வேலையா இருந்தாலும் நம்மளுடைய கிரகம் அழிஞ்சிடாம பாதுகாக்கணும்னா , இங்க மக்கள் தொகை பெருக்கம் இருந்தே ஆகணும்...

புரியுது குவாக் .. ஆனா வேற யாரையாவது வச்சு ட்ரை பண்ணலாமே..

இல்ல நீல்  நீதான் அதுக்கு சரியான ஆளு...  பூமியிலிருந்து ஒரு பெண்ணை கொண்டு வா அப்படியே ஒரு ஆணையும் லைக்கா என்று  அழைக்க இரும்பு கவச ஆடையில்  விருட்டென்று வந்து நின்றாள் அவள் 

நீ என்ன சொல்ற லைக்கா 7.5 

எனக்கு ஓகே ...போய் ஆளை பிடிச்சிட்டு வர்றேன்  என்று அவள் நேர்கொண்ட பார்வை பார்த்தாள்

அம்பாசமுத்திரம் வயல்வெளி அருகே வந்து பறக்கும் தட்டு நின்றது .. நீல் குதித்து  பூமியில் இறங்கினான்... லேசர் கத்தி மூலம் கதவை கிழித்து உள்ளே வந்தவன்  இருட்டில் தன் சிவப்பு கண்களை சுருக்கிட..  கட்டிலில் பல போர்வை உள்ளே ஒருத்தி குட்டி குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தாள்..  

ஏன் நீல் இந்த பொண்ணு ..என்று லைக்கா கிசுகிசுக்க 

போன் சாட்டிலைட் இதுக்கு எல்லாம் அடிமை ஆகாத ஒருத்தி வேணும்ல ... அவதான்  குடும்பம் குட்டின்னு உணர்வுல கூட இருப்பா  சோ மை சாய்ஸ் இது என்று அந்த உருவத்தை கை நீட்ட

ஓஓஓ அப்போ நானும் அப்டியே பார்க்கணும்  இல்ல 

அது உன் சாய்ஸ் என்னோடு பெஸ்ட் சாய்ஸ் இதுதான்  ... நீல் தூங்கி கொண்டிருந்த அப்பெண்ணை அலேக்காக தூக்கி சுருட்டி பறக்கும் தட்டில் போட்டான் ..

அவள் அம்பாசமுத்திரம் அங்கயற்கன்னி !!  

லைக்கா கோவில் வாசலில் செருப்பை தேடி தலையை சொரிந்து கொண்டு நின்ற ஒருவனை முதுகில் தட்ட 

என்னோட செருப்பை யாரேனும் பார்த்தேளா,  இங்க தான் போட்டேன் காணாம போயிடுத்து ... பிரசாதம் வாங்கிண்டு ஊஊஊஊஊஊஊஊஊஊ ஆஆஆ 

என்ன ஏன் தூக்கிட்டு போறேள்,  விடுங்கோ யார் நீங்க என்று அவன் கத்த கத்த  லைக்கா அவனே தூக்கி கொண்டு பறக்கும் தட்டில் வீசினாள் ... 

அவன் பார்த்த சாரதி!!  

உணர்வே இல்லாத இயந்திரம் இவர்கள் ,உணர்வுள்ள மனிதர்கள் இவர்கள்... ஜெயிக்க போவது இயந்திரமா,  மனிதர்களா???