வன்முறை செய் தப்பில்லை 13
Van13
13 வன்முறை செய் தப்பில்லை !!
பாரிஜாதம் உட்கார்ந்து காய்கறி வெட்டி கொண்டு பக்கத்து வீட்டு பெண்ணோடு ஏதோ கதை பேசியபடி கையும் வேலையில் இருக்க ... திண்ணையில் உட்காந்து போனை பார்த்து கொண்டிருந்த ஜீவா கண்கள் அவ்வப்போது அவளை தீண்டி மீள
"எப்போய் , சும்மாவா இருக்க இன்பா அவன் மடியில் ஏறி அமர..
"ப்ச் என்னடா?
"உனக்கு ஆயிரம் வேலை இருக்கு அதெல்லாம் விட்டுட்டு இப்படி சும்மாவே உட்கார்ந்து இருந்தேன்னு வச்சுக்கோ, நாள் வீணா போயிடும்
"எனக்கு என்னடா வேலை இருக்கு வெயில் மண்டைய பொளக்குது... இப்ப வெளிய போய் என்ன செய்யப் போறோம் ..
"இப்படி சோம்பேறியா இருக்காதப்பா , நீ இப்போ சாதாரண ஆளு கிடையாது..
"வேற
"லவ் பண்ற.... அந்த காதலை வளர்க்கிறதுக்கு கொஞ்சம் கஷ்டப்படத்தான வேணும்
"லவ்வா யார ?
"அதான்பா நேத்து இட்டுட்டு வந்து இட்டுட்டு போனியே, அந்த ரவை மறந்துட்டியா? உனக்கு கால அவகாசம் முடிஞ்சுகிட்டே இருக்கு , அதை லவ் பண்ணனும்னு பெரிய கடமை உனக்கு இருக்குல்
"ப்ச் அதுக்கு ?
"ரவையை விட்டுட்டு... இப்படி எப்ப பார்த்தாலும் கன்னத்துல கை வச்சு உட்கார்ந்தா என்ன அர்த்தம் டிப் டாப்பா கிளம்பி வா ... நீயும் நானும் ஒரு எட்டு போயி அந்த பிகர பாத்துட்டு வந்துருவோம் ...
"இப்படி எல்லாம் பேசச் சொல்லி உனக்கு யாருடா கத்து தந்தது ...
"நானாவது பேசுறேன்னு நினைச்சுக்கோ... உனக்கும் இந்த கலை எல்லாம் கத்து தர்றேன் சீக்கிரம் கிளம்பி வா...
"அவளை பார்த்து என்னடா செய்யப் போறோம்"
" பார்த்து பழகுனா தானே காதல் நல்ல ஸ்ட்ராங்கா ஆகும் ... எனக்கும் அவங்களுக்கும் இடையில ஒரு பாண்டிங் வரும்... நம்ம மூணு பேருக்கும் இடையில ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரும்... இதெல்லாம் வர்றதுக்கு நாம அடிக்கடி அவங்கள மீட் பண்ணனுமா இல்லையா? இன்பா கண்ணாடியை பார்த்து முகத்திற்கு பவுடர் போட்டவன் தன் முக்கிய ப்ராப்பர்ட்டிக்கும் சற்று பவுடரை அடித்துக் கொண்டான்..
"அதெல்லாம் வேண்டாம்டா , மனசுக்கு ஒத்து வரல ..
"ஒத்து வரலையா அப்போ அம்மா கூடவே வாழ போறியா என்ன ? கொக்கி கேள்வி விழ ,ஜீவா மண்டையை நாலாபுறமும் பதில் தெரியாது ஆட்ட ..
"எப்போய் உன் அழகென்ன? ஸ்டேட்டஸ் என்ன நீ போய் இந்த பட்டிக்காட்டில உள்ள பாரிஜாதம்.. அதுவும் தாவணி கட்டிக்கிட்டு கரண்டை கால் தெரிய, இவ்வளவு பெரிய கொலுசு போட்டுக்கிட்டு பஜாரி மாதிரி ஊரெல்லாம் சண்டை இழுத்துக்கிட்டு அலையுற என் அம்மாவை கல்யாணம் கட்டி உன் கூட கூட்டிட்டு போனா நல்லாவா இருக்கும்...
அது
"ம்ம் யோசி, உனக்கு 20 நாள் தான் டைம் இருக்கு... அதுக்கு பிறகு எதையும் மாத்த முடியாது... பார்த்திருக்க தானே அம்மா எல்லாத்துக்கும் கெடு க் கொடுக்கும்... அந்த கெடுவை தாண்டிட்டா , அது சொன்னது தான் முடிவு ... 20 நாளுக்குள்ள நீ அந்த ரவையை கரெக்ட் பண்ணி கல்யாணத்தை முடிக்கல பாரிஜாதத்துக்கு புருஷனா காலம் முழுக்க இங்கதான் சாகணும்.. அவளுக்கு ஜோடியா வாழ போறியா? இல்ல ரிச்சு ஃபிகரா , பளிங்கு சிலை மாதிரி இருக்கிற ரவையை உஷார் பண்ண போறியா ? உனக்கு இரண்டே ஆப்ஷன் தான் இருக்கு யோசிச்சுக்கோ? "
"அவன் அவன், லவ்வுக்காக தாஜ்மஹால் எல்லாம் கட்டுறான், நீ லவ்வுக்காக தாஜ்மஹால் கூட கட்ட வேண்டாம் ... அட்லீஸ்ட் ஒரு கோழிக்கூண்டாவது கட்டனும்ல, நீயும் ரவையும் பண்ற லவ்வுல அம்மாவே நீங்க ரெண்டு பேரும் தான் சரியான ஜோடின்னு வாழ்த்துரை கொடுக்கணும்...
"அதுக்கு என்னடா செய்ய சொல்ற ? அதற்குள் பொற்றவை போனில் கூவி விட
"அய்யோய்யோ இவங்க எதுக்கு போன் பண்றாங்க" ஜீவா பதற
"பின்ன உன்ன மாதிரி எல்லாரும் ஓடாத வண்டியை வச்சிக்கிட்டு தள்ளிட்டா இருப்பாங்க .... கொடு நான் பேசுறேன்.. நீங்க போய் கிளம்பி வாங்க ..நான் மீட்டிங் பாயிண்ட் ரெடி பண்ணி வைக்கிறேன் பச்சை கலர் சட்டை போடுப்பா, அதான் உன் நட்சத்திரத்துக்கு ஏத்த கலராம் , காலையிலேயே கன்னி ராசிக்கு என்ன பேவைரைட் கலர்னு பாத்துட்டேன்.. என்ன இன்னைக்கு சேதாரம் அதிகம்னு சொன்னான் அதான் என்ன எழவுன்னு புரியல போற போக்குல அதையும் பார்த்துப்போம்...
"ராசில கன்னி இருந்து எதுக்கு ? வேற எதுக்கும் யூஸ் ஆக மாட்டைக்கே "என்று மகன் புலம்பி கொண்டே போனை எடுத்தவன்
"என்ன ?என்றான் திமிரான குரலில்
"அவர் இல்ல
"அம்மாவும் அப்பாவும் ரூம் குள்ள இருக்காங்க
"வாட் ரூம்குள்ளையா ?
"ம்ம் தம்பியோ தங்கச்சியோ வேணும்னு அடம் பிடிச்சேன்
"அதுக்கு ?
"தங்கச்சி பொம்மை ரெடி பண்ணிட்டு இருக்காங்களாம்.. நான் வெளியே உட்கார்ந்து இருக்கேன் ....
"நான் அவர்கிட்ட பேசணும் உடனே போனை கொடு
"வேணும்னா நீ நேர்ல வந்து பேசு .. எனக்கு வேற வேலை கழுதை இல்லை பாரு ... என்று போனை ஆப் பண்ணிவிட .. பொற்றவை அறக்க பறக்க ஓடி வந்தாள்.... அவன் பெண் சுகம் கண்டுவிட்டால் , தன் கையில் அக பட மாட்டானே..
ஜீவா தன் வீட்டுக்குள் இருந்து சட்டையை மாட்டி கொண்டு வர... வந்து நின்ற பொற்றவைக்கு அப்பாடா என்று இருந்தது.. இன்பாவை தீயாக முறைத்துக் கொண்டே ....அங்கே நின்ற பொற்றவையை அதிர்ந்து பார்த்தவன்...
"என்ன பொற்றவை இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க
"உங்களை பார்க்க தான்
"என்ன பார்க்கவா எதுக்கு?
"நேத்து நைட்ல இருந்தே போன் போட்டு பார்த்தேன் எடுக்கல அதான் ...
"ஓஓஓ தூங்கிட்டேன்... "
இவர்களை வேடிக்கை பார்த்தபடி மாம்பழத்தை வெட்டி தட்டில் வைத்துக் கொண்டிருந்த பாரிஜாதம் அமைதியாகவே அவர்களைப் பார்க்க ...
ஜீவா கோவில் வரைக்கும் போகணும்... வர்றீங்களா போயிட்டு வரலாம்
"புதுசா லவ் பண்றவங்க கோவிலுக்கா போவாங்க... எடத்தை நான் காட்டுறேன் ... வாங்க வாங்க போகலாம் ... நல்ல நேரம் முடிய போகுது ... அப்பா நான் முன்னாடி சீட்டு, நீ பின்னாடி போய் உட்காரு..."
டேய் நில்லு... எல்லா இடத்துக்கும் நீ வந்தா நாங்க ரெண்டு பேரும் எப்படி தனியா பேசுறது? என்று இன்பா கையை இழுத்து பொற்றவை நிறுத்த ..
என்னைய வச்சுக்கிட்டே பேசுங்க... அப்படி நான் கேட்கக்கூடாதது எத நீங்க பேச போறீங்க? எப்போய் நான் வரவா வேண்டாமா? "
அவனும் வரட்டுமேங்க.... ஆசை படுறான்ல.. ஜீவா அனுமதி உடனே கிடைக்க...
ப்ச் ம்ம் ....
"முதல் முதல்ல லவ் பண்ண போறீங்க இருங்க மச்சான், ஆரத்தி சுத்தி அனுப்பி விடுறேன் "என்று பாரிஜாதம் ஆரத்தி தட்டோடு நொண்டி நொண்டி அவன் அருகே வந்தவள் ....
காதல் கை கூடி ரெண்டு பேரும் கேக்கும் கிரீமுமா, அருவாளும் ரத்தமுமா, வாழணும் என்று ஆரத்தியை சுற்றி அவனுக்கு பொட்டு வைத்து விட
"உனக்கு என்ன பார்த்தா நக்கலா இருக்காடி "என்று அவள் கையை அழுத்தி பிடித்து அவளிடம் கோவதத்தில் கிசுகிசுப்பாக ஜீவா கேட்க
"இப்ப ஏன் மச்சான் என்கிட்ட கோவப்படுதிய.... உங்க பிள்ளையை பெத்தவ உரிமையை தவிர வேற என்ன உரிமை என்கிட்ட உங்களுக்கு இருக்குன்னு தொட்டு பேசுறிய...சும்மா சும்மா தொட்டு பேசாதீங்க... கையை எடுங்க ..போய் நல்லா லவ்வு பண்ணிட்டு வாங்க நான் ராவுக்கு சோறு ஆக்கி வைக்கிறேன்... ஆல் த பெஸ்ட் மச்சான் ...தங்கச்சி அவரை பார்த்து கூட்டிட்டு போம்மா" கார் போக போக கையை ஆட்டி பாரிஜாதம் அவர்களுக்கு விடை கொடுக்க... கடுகடுத்தது அவன் முகம் ஏன் இப்படி ஒரு அவஸ்தை தெரியவில்லை ... கண்ணாடியில் இன்னும் பளீர் முகத்தோடு கையை ஆட்டிய அவளைத்தான் அவன் கண் மொய்த்து கொண்டே இருந்தது..
"எங்கடா போகணும் ? என்று மகனை நோக்கி ஜீவா திரும்ப
ஜீவா ஷாப்பில் மால் போகலாமா?? என்று பின்னிருந்து பொற்றவை குரல் வர
"ஷாப்பிங் மால் எல்லாம் போரிங் அப்பா , நான் சொல்ற இடம் போங்க உங்க காதலை அம்மாகிட்ட நிருபிக்க சூப்பர் இடம் கண்டு பிடிச்சு வச்சிருக்கேன் அதோ அங்க தான் நிறுத்துங்க"... மகன் சொன்ன இடத்திலேயே ஜீவா வண்டியை நிறுத்த...
மாடல் டாட்டூ ஷாப்!!! என்று கொட்டை எழுத்தில் கிடந்த கடைக்குள் தகப்பன் கையை பிடித்து இழுக்க
"இங்க எதுக்குடா வந்து இருக்கும் "
"இதயத்துக்குள்ள இருக்கிற உன்னை ஆன்டி கை மேல டாட்டூ போட போறாங்க ... நீ அவங்க பேரை உன் நெஞ்சுல டாட்டூ போட போற, அதை அம்மாகிட்ட போய் காமிச்சா உங்களோட லவ்வு தெரிஞ்சுடும்ல எப்படி என் ஐடியா ?
"நோநோ என்னால எல்லாம் முடியாது ஜீவா" என்று பொற்றவை பதற
"இதுக்கே பதறினா எப்படி ஆன்டி.. நாளைக்கு கோவில்ல அப்பா பேர்ல சிறப்பு பூஜை இருக்கு , முட்டி போட்டே நூறு படி மேலே ஏறி போகணும்... நாக்குல நங்குன்னு ஒரு ஈட்டி குத்தி ..
நோ "அவள் பதற
"எப்போய் இது தேறாது போல ,பேசாம வேற பொண்ணை பார்ப்போம்..."
"சும்மா இருடா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்
"அதை நீ இவங்களை லவ் பண்ணி காட்டுறேன்னு சவால் விடும் போதே யோசிச்சு இருக்கணும் .... எனக்கு தெரியாது இப்பவே டாட்டூ போடு .... ஓட வழி பார்த்த பொற்றவையை உள்ளே தள்ளியவன்
"ஆன்டிக்கு ஒரு டாட்டூ பார்சல் ...
"நீ வாப்பா உட்கார் ..."
"இந்த பேரை நெஞ்சுல பச்சக்னு பச்சை குத்தி விடுங்க ரோட் ரோலர் ஏறினாலும் என் அப்பாவை விட்டு அழிய கூடாது என்று இன்பா பெயரை எழுதி அவர் கையில் கொடுக்க
"சார் ஓகேவா பாத்துக்கோங்க" என்று அவர் நீட்ட ... அவனோ ஏதோ யோசனையில் இருந்தவன் ...குனிந்து பார்க்காதே ..
"மகன் சொல்றபடி போட்டு விடுங்க ..... என்று கண்களை மூடி கொண்டான்.... பச்சக் பச்சக் என்று ஊசி அவன் நெஞ்சில் தையல் போட வலித்ததா?
"பா.....ரி.....ஜா.....த....ம் "என்று அவர் ஒவ்வொரு எழுத்தாக கூறி போட்டு முடிக்க, சட்டென குனிந்து பார்த்தவன் நெஞ்சில் பாரிஜாதம் பெயர், இதயம் உள்ளே அழகாக ஜொலிக்க...என்னடா இது என்று மகனை பார்த்து முறைக்க
"அய்யய்யோ சாரிப்பா அம்மா நியாபகத்திலேயே இருந்தேனா அதான் அம்மா பேரை எழுதி கொடுத்துட்டேன்... அதுக்கு பக்கத்துல பொற்றவை பேரையும் எழுத சொல்லிடவாப்பா "என்று இன்பா கிளுக்கி சிரிக்க மகன் காதை பிடித்து திருகிய ஜீவா
"தெரியும்டா... நீ இந்த வேலை தான் பார்ப்பேன்னு.. "
"உனக்கு வேணடாம்னா அழிச்சிட சொல்லுப்பா...
"ப்ச் போட்டாச்சுல்ல இருந்துட்டு போகட்டும்..."
"டாட்டூவுல உள்ள அம்மா பேரை போட்டாசுன்னு போனா போகுதுன்னு வச்சிக்கலாம்ப்பா...ஆனா அம்மாவை போனா போகுதுன்னு வச்சி வாழ்ந்தா நீ தப்பானவன் ஆகிடுவ... சாரி வலிக்குதாப்பா??" என்று தகப்பன் நெஞ்சில் இருந்த காயங்களை அவன் கை விரல் வருட ...
"உனக்கு அம்மா வேணுமா வேண்டாமான்னு யோசி உனக்கு அம்மா வேண்டாம்னா ஒன்னும் பிரச்சனை இல்லைப்பா... எனக்கு நீயும் வேணும் ...அம்மாவும் வேணும் ... நீ பார்க்க விரும்பும் போது என்ன வந்து பார் .. இல்லையா நான் வந்து பார்க்கிறேன்... அம்மாவை வதைக்காதப்பா.. எப்படி என்னால இன்னொரு பெண்ணை உனக்கு ஜோடியா பார்க்க முடியலையோ... அம்மாவால மட்டும் எப்படிப்பா இதை எல்லாம் சகிக்க முடியும் ..ஒருத்தி தாங்குறான்னு அத்தனை வலியையும் சுமையையும் அவளையே சுமக்க வச்சா நீயும் ஒரு வகையில அரக்கன் ஆகிடுவ... என் அப்பா நல்லவர்... என் அம்மா வலியும், என் வலியும் புரியும் ... பார்த்து வாப்பா ... இனி உன் விஷயத்துல நானோ அம்மாவோ தலையிட மாட்டோம்" என்று இன்பா கடையை விட்டு வெளியேறிவிட.... ஜீவா போகும் மகனையும் , தன் நெஞ்சில் கிடந்த பெயரை மெல்ல தடவி பார்த்தவன்..
இதுக்கு கீழ... யூ ஆர் மை நீயூ பிகினிங்னு போட்டு விடுங்க அண்ணன் "என்று மறுபடியும் சேரில் கண்ணை மூடி படுத்தவன் இதழில் அழகிய புன்னகை ...
இதுவரை அவன் உலகில் செல்லாத பயணம் ஒன்றை தேடி அவனே விரும்பி சென்றான்...
என்ன போட சொன்னா என்ன போட்டு வச்சிருக்கீங்க ஆஆஆஆஆ தன் கையில் இருந்த அடுத்தவ புருசனை ஆட்டைய போடுபவள் என்ற டாட்டுவை கண்டு ரத்தம் கொதித்து போனாள் பொற்றவை ....
"இல்ல போடும் போதே கேட்டேனே மேடம் ..
"ப்ச் நான் ஜீவான்னு எழுதுன பேப்பர்ல தந்தேன்...
"இல்லையே மேடம் அந்த பையன் இதைத்தான் தந்தான் .
"ஷட் இஇஇஇஇஇ வலிக்கும்னு கண்ணை மூடுனது தப்பா போச்சு.... தயவு செஞ்சு இதை எதாவது டிசைன் போட்டு மறைச்சு விடுங்க ப்ளீஸ் என்று பொற்றவை பதற... போட்டதின் மீது மீண்டும் ஒன்றை போட வலி உயிர் போனது...அவள் எப்படியோ வெளியே வர ஜீவா அவளுக்காக காத்து நின்றவன் அவள் பேசும் முன்னே..
"இருபது நாள் இல்ல இருநூறு வருசம் ஆனாலும் என்னால யாரையும் நேசிக்க முடியாது பொற்றவை ...
என்னாச்சு ஜீவா தீடீர்னு...."
"அவ ஒருத்தியை மனசுக்குள்ள சுமக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் முடிவு வேணும்னா தாமதமா எடுத்து இருக்கலாம்... ஆனா எடுத்த முடிவுல கடைசி வரைக்கும் நிலைச்சு இருந்து காட்டுவேன்.. சாரி உங்க நேரத்தை வீணாக்கினதுக்கு, ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போயிடுங்க.. என்றவன் நடையிலேயே துள்ளல் வெளிப்பட்டது...
இதுவரை காதலித்தானா தெரியாது, ஆனால் இனி காதலிக்க தொடங்குவான்...