வன்முறை செற் தப்பில்லை 16

Van16

வன்முறை செற் தப்பில்லை 16

16 வன்முறை செய் தப்பில்லை!!

என்னடா , உங்க அப்பா ஒரு வாரமா மலையை முழுங்குன மல்லன்  மாதிரி அமைதியாவே சுத்தி வர்றாரு,  என்ன சங்கதி என்று இரவு தூங்குவதற்கு குட்டி கட்டிலை தூக்கிக் கொண்டு நடந்த மகனை பிடித்து இழுத்து கதை கேட்க பாரிஜாதம் பார்த்தாள்

ஜீவா தினமும் போகிறான் வருகிறான் உலகத்து செய்தியை அவள் காதுக்கு கொண்டு வந்து சேர்க்கும் குட்டி பட்டாசு தகப்பன் கூடவே பாடிகார்ட் போல சுற்றுகிறது...  ஏதாவது கேட்டால் , இன்பாவும்  பதில் சொல்வது இல்லை ... அன்றைய சம்பவத்திற்கு பிறகு அவனும்  சரியில்லை ... இன்பாவும்  சரியில்லை...  இரண்டையும் கவனித்துக் கொண்டே தான் இருந்தாள். 

ஆக்கி வைத்த சோறு அப்படியே இருக்கிறது,  இன்பாவும் சரியாக சாப்பிட்டது போல இல்லை...  ஜீவா வீட்டில் கை நனைத்து ஒரு வாரம்  ஆகிறது பொறுக்க மாட்டாது கேட்டு விட்டாள்... 

"அவர் பேசினாலும் தப்புன்னு சொல்ற..  பேசலனாலும் தப்புன்னு சொல்ற , இப்ப என்னதான் உன் பிரச்சனைம்மா ""

"என்னடா என்கிட்ட எகிறிட்டு வர்ற

" பின்ன அந்த மனுஷன் உன்னைய தேடி தானே வந்துச்சு .... போன்னு வெரட்டி விடுற... நம்மள விட்டு  எங்க போகும்.... 

"அது 

"பாவம் வேலைக்கு போகுதும்மா 

"வேலைக்கா??  என்று பாரிஜாதம் வாயை பிளக்

"ஏன் உனக்கு தெரியாதோ?

"அது எங்கேயோ வேலையில சேர்ந்து இருக்குன்னு தெரியும் ...எங்கடா

"மூர்த்தி மாமா ரைஸ் மில்லுல,  கணக்கு பார்க்குது 

"ஊர் உலகத்துல வேற வேலையே இல்லையா...  அங்க தான் போய் பார்க்கணுமா?  அவன் நம்மள  மதிக்கவே மாட்டான்..  

"அவர் எங்க வேலை பார்த்தா உனக்கு என்ன ... நீ ஏன் பதறுற...  இனிமே சும்மா சும்மா அப்பாவை குறை சொல்லாதேம்மா... 

"ஹான் வேற 

"பாவம் ராத்திரி எல்லாம் வேலை செஞ்சுட்டு வந்து உடம்பு வலியில  தூங்க முடியாம உருண்டு பிரண்டு மனுஷன் கஷ்டப்படுறதை பக்கத்துல இருந்து பாக்குற ஜீவன் நான் தான்...  இப்ப கூட அவருக்கு அடிச்சு விடுறதுக்குதான்  வாலினி எடுத்துகிட்டு போறேன்...  என்று இன்பா வாலினியை தூக்கி காட்ட....  பாரிஜாதத்திற்கு கண்ணுக்குள் ஊசி தைத்தது போல வலி...

"ஏன்டா நானா இந்த வேலையெல்லாம் பார்க்க சொன்னது ... இப்போ வந்த அப்பாவுக்காக அம்மாகிட்ட மூஞ்சி குடுத்து பேச மாட்டேங்கிறியே?  நானும் தான் கால் வலிக்க வட்டி பிரிச்சுட்டு வந்து கால் வலியில் தூங்காம கிடந்து இருக்கேன்...

"ஆமா அன்னைக்கு உனக்கு கால் அமுக்கிவிட்டேன் இன்னைக்கு அப்பாவுக்கு கால் அமைக்க விட போறேன்...  எனக்கு ரெண்டு பேரும் வேணும்,  ரெண்டு பேரும் முக்கியம் தான்..  கதவு பூட்டிக்க அப்பா வர்ற நேரம் ஆகுது , நானும் அப்பாவும் இனிமேதான் நைட்டுக்கு சமைக்கணும் 

"என்னது தனி சமையலா??  எத்தனை நாளா நடக்குது 

"பின்ன சாப்பிடாம கிடக்க முடியுமா? ராத்திரி வந்து உலை வச்சு அவருக்கு அவரே சாப்பாடு செஞ்சுக்கிறார். ,

"இப்ப நான் என்ன செஞ்சுட்டேன்னு ரெண்டு பேரும் இப்படி தனி குடித்தனம்  போய் என்ன வேதனைப்படுத்துறீங்க...  ஏன் என்னால உங்க ரெண்டு பேருக்கும் சமைச்சு போட முடியாதா? 

"அதெல்லாம் எனக்கு தெரியாதும்மா , உன் புருஷன் வர்ற டைம் தான், அவர் கிட்டேயே உன் பஞ்சாயத்தை வச்சுக்க ... நான் போய் காய் நறுக்கி வைக்க போறேன் என்று இன்பா ஓடிவிட ..  

"மனசுல இருக்கிறதை சொன்னா குத்தமா?  வீஞ்சுக்கிட்டு ரெண்டும் ரெண்டு திசைக்கு போகுதுக... நான் என்ன மாடமாளிகை வேணும், மச்சி வீடு வேணும்னா கேட்டேன் .... கடைசி வரை வச்சி காப்பாத்துவேங்கிற நம்பிக்கையை கொடுன்னு தானே கேட்டேன் அது குத்தமா, இவன்  குதிச்சிட்டு போறான் அவரு முகத்தை திருப்பிட்டு போறார் என்ன பார்த்தா ரெண்டு பேருக்கும் எப்படி இருக்காம்??"புலம்பி கொண்டே பாரிஜாதம் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தாள்... 

"கேட்டை திறந்து  கொண்டு ஜீவா உள்ளே வந்தான் அவளை ஒரு வாரமாக தலைதூக்கி கூட பார்க்க மாட்டான்,  கிணற்றுக்கு பக்கத்தில் அவள் உட்கார்ந்து பாத்திரம் விளக்கிக் கொண்டிருக்கும் பொழுது தான்  காலை வேலைக்கு புறப்பட்டு போவான்...  அவன் அழுக்குத் துணி வருவதில்லை, சாப்பாட்டுக்கு என்று வந்து நிற்பது இல்லை .. தன் வேலைகளை செய்ய சொல்லி அவளிடம் கேட்பது இல்லை....  ஆனால். அவன் வேலை எல்லாம் நடந்து கொண்டிருந்தது...  கொடியில் அவன் சட்டை துணிகள் வரிசையாக காயும்,  இதோ சாப்பாடு வரை தனியாக நடக்கிறது இவளுக்கு தான் இருப்பு கொள்ளவில்லை....

"மச்சான் நில்லு... அவன் கேளாதது  போல போக 

"மச்சான் உன்னையத்தான் கூப்பிடுறேன் நிக்கிறியா இல்லையா?  என்று பாரிஜாதம் ஓடிப்போய் அவனுக்கு குறுக்கே போய் நின்ற பாரிஜாதத்தை மேலும் கீழும் பார்த்தவன்...  அவள் வழியில் இருந்து விலகி நடக்க பார்க்க .... அவன் மணிக்கட்டை சட்டென பிடித்து தடுத்தவள் செயலை எதிர்பாராதவன்  பட்டென்று அவள் நெஞ்சோடு இடித்து அருகே இருந்த மரத்தின் மீது அவளையும் பிடித்துக் கொண்டு சாய ...

ஆஆஆஆஆ  தடுமாறிவள் வெற்றிடை அவன் முரட்டுக்கு பழகி கொண்டிருந்த உள்ளகையில் அகப்பட்டு வலிக்க மெல்ல அவளை நகர்த்தி விட்டவன் ...

"என்ன ? என்றான் சோர்வாக 

"நீ வேலைக்கு போறதெல்லாம் நல்ல விஷயம் தான்ய்யா ,  நான் அதை வேண்டாம்னு மறுக்கல...  அதுக்காக சாப்பாடு கூட என் கையில வாங்கி சாப்பிட கூடாதுன்னு முடிவு எடுத்துட்டியாய்யா..  அந்த அளவுக்கு உனக்கு என்னய்யா வஞ்சனை வச்சேன் .... நீயே ஆக்கி சாப்பிடுறியாம் ,  உன் மகன் சொன்னான்... என்னைய அப்பனும் பிள்ளையும் விரோதி போல ஆக்குதிய... 

"பொண்டாட்டியை  படுக்கைக்கும் , சாப்பாட்டுக்கும் மட்டும் கூப்பிடுறவன் ஆம்பள இல்லன்னு நீதான சொன்ன ? என்றவன் குரலில்  வந்த தெளிவு அவளையே ஆடச் செய்தது...  கண்களை அகல விரித்து அவனைப் பார்க்க.. 

"முதல்ல புருஷனா மாறிக்கிறேன் , அப்புறம் பொண்டாட்டிக்கான உரிமையை நீ செஞ்சா போதும் ... என்றவன் அவள் கையில் ஒரு பையை திணித்து 

"முதல்வாரம் சம்பளம் வந்துச்சு,  இது உனக்கானது...ம்ஹூம் என் பொண்டாட்டிக்கானது... வேணும்னா வச்சிக்க  இல்லை உன் இஷ்டம் ___ கடையில வாங்கினேன் , திருப்பி கொடுத்துடு ..இது சம்பளம் ரெண்டாயிரம் ரூபாய் தான் ... உன்கிட்ட தரணும்னு தோணுச்சு தந்தேன் "என்று  அவள் கையில் வைத்துவிட்டு ஜீவா கொட்டாவி விட்டபடி,  தன் வீடு நோக்கி நடக்க...  அவன் மென்மை இல்லாத  கடுகடுவென நின்ற முகத்தில் பாரிஜாதம் தான்   விக்கித்து நின்றாள்  .... அவன் தலை மறையவும்  கையில் இருந்த கவரை திறந்து பார்த்தவள் முகம் பூவாக மலர்ந்து போனது .... சிகப்பு நிற சேலையும்  ஜாக்கெட்டும் இருந்தது எத்தனை நேரம் அவள் கண்கள் கண்ணீரை கொட்டியது தெரியாது ஆனால் தாரை தாரையாக  வந்து கொண்டே இருந்தது 

துணியை கிணற்றுக்கு அருகே போட்டு துவைத்து கொண்டு நின்ற ஜீவாவ முன் ஓடி போய் நின்றவள் 

"யோவ்  இந்த சேலை உண்மையாவே எனக்கா ? ஆச்சர்யமாக கேட்டாள்....  உலகில் அவளுக்கென முதல் முறை செய்யும் ஒருவன் அல்லவா?   கால் தரையில் நிற்கவில்லை... 

"ஊர்ல உள்ளவளுக்கு எல்லாம் வாங்கி கொடுக்கிற அளவுக்கு உன் புருஷன் பொட்ட பொறுக்கியும் கிடையாது...  அப்படி வாங்கிக் கொடுக்கிறதுக்கு உன் புருஷன் கிட்ட காசும் கிடையாது,  ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி எடுத்து இருக்கேன்....  

"ரொம்ப நல்லா இருக்குய்யா  ,  அவன் முன்னால் சேலையை  தன் தோளில் போட்டு காட்டி 

"நல்லா இருக்காய்யா,   அங்கும் இங்கும் சுற்றிக்காட்டினாள்... 

வெளிர் மஞ்சள் நிற சேலை பச்சை நிற புட்டா போட்டு சுமாராகத்தான்  இருந்தது...  கையில் வைத்து பார்க்கும் போது நல்லா இருந்தது போல இருந்துச்சு  எடுத்து விட்டான் 

"இன்னும் சேலை செலக்ட் பண்ணி எடுக்க பழகணும் போல .... என்று முனங்கி கொண்டான் .... 

"இரு எங்கேயும் போயிடாதய்யா  கட்டிட்டு வர்றேன் ... அவனும் ஆர்வமாக போகும் அவளை தலையை திருப்பி பார்த்தான்....

"என்னப்போய் உன் பொண்டாட்டியை கையில பிடிக்க முடியாது போல இருக்கே .... என்னவோ ரெண்டு பேரும் சண்டை போட்ட மாதிரியே இருந்தது...  ஆனா ரெண்டு பேர் முகத்திலையுமே சூரியன் உதிச்ச மாதிரி பிரைட்டா இருக்கே என்ன விஷயம் ? ஏம்ப்பா அம்மாவை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டியா என்ன?  சோப்பு நுரையை அள்ளி  தன் மகன் முகத்தின் மீது தெளித்த ஜீவா..

வாங்குறதைவிட கொடுக்கிறது இன்பம்..  நம்மள சுத்தி இருக்கிறவங்களுக்கு சின்ன சின்னது செஞ்சா கூட போதுன்னு புரிஞ்சுகிட்டதுல வந்த பிரைட்டா இருக்கும்..."

அவ்வளவு தானா.. "

வேறென்ன ??

"அம்மா  மேல காதல் எல்லாம் வரலயா?..

"அதெல்லாம் உன் அம்மா மாதிரி உன் கிட்ட எல்லாத்தையும் சொல்ல முடியாது .. காதல் வந்தா உன் அம்மாகிட்டேயே சொல்லிக்கிறேன்,  போடா போய் படி.."

பார்த்தியா நேரம் பார்த்து உன் குருவையே கழட்டி விடுற...  நான் இல்லாம நீங்க ரெண்டு பேரும் சேர முடியாது,  தெரியும் தானே ? 

"உன்னை வச்சிக்கிட்டு அவளை ஆசையா கூட ரெண்டு நிமிஷம் கழிச்சு பார்க்க முடியலடா...  மொத்த விபரத்தையும் கை விரல்ல வச்சிட்டு  திரியிற..  உன் கண்ணை மறைஞ்சு அவளை காதல் பண்ணி,  எனக்கு அரசல் புரசலா தெரிஞ்சதெல்லாம் பண்ணி பார்த்து உனக்கு தங்கச்சி பாப்பா கொண்டு வர்றதுக்குள்ள நாக்கு தள்ளிடும் போல இருக்கே என்று ஜீவா  முனங்கி கொண்டே துணிகளை துவைத்து கொண்டிருந்தவன்...  ஜில்ஜில் சத்தத்தில் ஆசையாக திரும்பிப் பார்க்க .... 

தாவணிக்கட்டி பழக்கம் சேலை கட்டி பழக்கம் இல்லையே கசகசா என்று சேலையை தனக்கு தெரிந்தது போல கட்டி அவன் முன்னால்  வந்து நின்றவளுக்கு முதல் முறை வெட்கம் வந்தது நெளிந்தாள்  ஜீவாவின் முகத்தை பார்க்க முடியாமல் தரையைப் பார்த்துக் கொண்டே

"நல்லா இருக்காய்யா... 

"சுமார்தான் உள்ளதை உள்ளபடி சொல்லி விட்டு நாக்கை கடிக்க ... 

"ம்க்கும் , டேய் அப்பா வாங்கி தந்தது எப்படி இருக்கு?? 

"ஏதோ ஓகே" இன்பா தாயின் மலர்ந்த முகத்தை ஆசையாக பார்த்தான் 

"போடா, அதெல்லாம் நல்லாதான் இருக்கு என் புருஷன் வாங்கி தந்ததை குறை சொல்லாத "என்று  கழுத்தை கோணி கூறிவிட்டு பாத கொலுசு நடனமிட துள்ளி குதித்து வீட்டை தாண்டி ஓட 

"இந்த ராத்திரியில உங்க அம்மா எங்கடா ஓடுறா 

சேலம் வாங்கி கொடுத்துல,  கிறுக்கு எதுவும் பிடிச்சிருச்சா?

"பின்ன கிறுக்கு பிடிக்காம இருக்குமா..  எனக்கு அம்மாவாச்சே, இன்னைக்கு ஒருபய ராத்திரி  தூங்க முடியாதுல்ல ... மேல் தெருவில இருந்து கீழ்தெருவரைக்கும் நீ வாங்கிக் கொடுத்த சேலையை எல்லாருக்கும் காட்டிட்டுதான் வந்து வீட்ல சேர்வா., என்ன செய்கிறாள் என்று பார்க்க ஜீவா வாசல் அருகே போய் தூணில் சாய்ந்து கொண்டு நின்று பாரிஜாதத்தை பார்க்க

"தேவி அக்கா,  இது என் புருஷன் வாங்கி கொடுத்த சேலை

"அப்படியா நல்லா இருக்கு ... "

"ம்ம் இருக்கும்ல... என்னவோ உன் தங்கச்சிக்காரி சொன்னா உனக்கெல்லாம் செய்ய  ஒருத்தனுமே இந்த உலகத்துல கிடையாது...  கடைசி வரைக்கும் அனாதையா கிடந்து தான் சாகப் போறேன்னு...  அவகிட்ட போன் போட்டு சொல்லுங்க பாரிஜாதத்துக்கு செய்ய அவ புருஷன் வந்துட்டான்னு ., அப்படியே சேலை எடுத்து கொடுத்ததையும் சொல்ல மறந்துடாதீங்க... 

"ஆத்தாடி சரிம்மா

ஒவ்வொரு வீடாக அந்த 600 சேலையை காட்டியதில் அவளுக்கு என்ன ஒரு சந்தோஷம்!! 

சரியாக மனைவியை கோவிலுக்கு அழைத்து போய்விட்டு வந்த மூர்த்தி புல்லட் அவள் எதிரில் வர 

"இங்க சில பேருக்கு நமக்கு மட்டும் தான் நல்ல பொண்டாட்டி இருக்கு,  நாம மட்டும்தான் வாழ்றோம்னு எகத்தாளம் கூடிப்போச்சு...  எனக்கும்தான் நல்ல புருஷன் இருக்கு... அவரும்தான் என்ன ராணி மாதிரி வச்சு பார்த்துக்க போறார்...  அண்ணனாவது தம்பியாவது...  இனிமே யாரு அன்புக்கும் நான் ஏங்கி நிக்க வேண்டிய தேவையே இல்லையே....  வேண்டுமென மூர்த்திக்கு கேட்க சாடை பேசிவிட்டு பாரிஜாதம் மூர்த்தியை கடந்து போக ... மீசையை முறுக்கிக் கொண்டே புல்லட் கண்ணாடியில் துள்ளி குதித்து ஓடும் தன் தங்கையை குனிந்து பார்த்தான்...  பின்னால் இருந்த பொக்கிஷா  அவன் தோளில் அடித்து என்ன என்று கேட்க ...

இல்லை என்ற தலை ஆட்டியவன் அமைதியில் தங்கைக்கு கொடுக்க  சிறிதுளி அன்பும் துளிர்த்து இருந்தது தெரிந்தது ...

"ப்ச் அந்த ரமலாவுக்கு மட்டும் சொல்ல முடியல ... வேற எல்லாருக்கும் சொல்லியாச்சு" என்று உள்ளே நுழைந்தவள் இன்னும் அங்கேயை கையை கட்டி கட்டி கொண்டு நின்ற  அவனை கண்டு பாரிஜாதம்  அப்படியே நின்றுவிட... 

தூங்கலயாய்யா..."

"தூக்கம் வரல 

"ஏன் என்னாச்சு ??

"அன்னைக்கு ராத்திரி என்ன நடந்துச்சுன்னு மட்டும் சொல்லலையே..அதையும் சொல்லிட்டா அதுக்கு என்ன பண்ணணும்னு யோசிக்கலாம்... 

என்ன சொல்லணும் ? புரியலியே அவள் புரியாது கணவனை பார்க்க ...

"உன்ன தூக்கிட்டு போன வரை தான் புட்டேஜ் இருக்கு ... வீட்டுக்குள்ள தூக்கிட்டு போன பிறகு என்ன நடந்துச்சு ??

"அது எதுக்கு " அவள் திணற 

"வேற , அதை பத்தி எவன்கிட்ட போய் கேட்க எவ்வளவு யோசிச்சாலும் ஒன்னுமே நியாபகம் வரல எல்லாத்தையும் புளி போட்டு விளக்குனியே, உன் விளக்கெண்ணெய் புருசனுக்கு அதையும் விளக்கிட்டா, தத்தி தத்தி வந்து சேர்ந்துடுவேன் என்றவன் பார்வையில் புது மாற்றம்தான்...  நேர் கொண்ட பார்வை அதுவும் அவளிடம் வேறு விதமாக இருந்தது...  தயக்கம் இல்லாது பேச்சு,  தாம்பத்தியம் பற்றி பேச  கூட நடுக்கம் இல்லாது வந்த புருசன்  புதுபேச்சில்   மறைத்து நின்ற அவளை தாண்டி ஓடி போனவள் முந்தானை சேலையை அவன் கைகள் பிடித்து இழுத்து இருக்க 

ஆஆஆஆஆஆ நச்சென்று ஜீவா மீது அவள் இடித்து நிற்க 

"என்ன நடந்துச்சு ஒன்னு உள்ள உள்ள சிசிடிவியை காட்டு ... இல்லை நீயே நடந்ததை சொல்லு.... எல்லாத்தையும் கத்துக்கிறேன் ...  சிங்கம் ஒரு நாளைக்கு ஏகப்பட்ட தடவை இணை சேருமாம் நான் அன்னைக்கு எத்தனை தடவை போனேன் .. இப்பதான் நெட்ல அதை பத்தி லைட்டா தேடிட்டு இருக்கேன் ... நீயும் சொல்லு  கத்துக்கிறேன்...  "

"சீசீ போய்யா விவரம் கெட்டத்தனாம பேசிக்கிட்டு என்று குப்பென சிவந்த முகத்தோட அவனை தள்ளிவிட்டு ஓடிய மனைவியின் வெட்கம் தான் அவன் காதல் தொடங்கியதின் முதல் புள்ளியோ??

புள்ளி புள்ளியாக கோர்த்து கோலம் மட்டும் இல்லை காதலும் கோர்க்கலாம்..