வன்முறை செய் தப்பில்லை 11

Van11

வன்முறை செய் தப்பில்லை 11

11 வன்முறை செய் தப்பில்லை !!

"என்ன ஆச்சு ஜீவா? பொற்றவை பதட்டமாக வந்த ஜீவாவை யோசனையாக பார்க்க 

"கிணத்து பக்கம் பாசி கிடந்தது பார்க்காம வழுக்கி விழுந்துட்டா போல , நல்லா அடிபட்டு இருக்கு...

"நல்லா நடிக்கிறா ஜீவா , எனக்கு என்னவோ அவ பிளே பண்ற மாதிரி தோணுது

"அவ முகத்துல வலி அப்படியே தெரியுது எதுக்காகவும் அவ்வளவு சீக்கிரமா முகத்துல வலியை காட்ட மாட்டா, அதோட செவந்து போய் இருக்கு... நீங்க ஆட்டோ புடிச்சு போயிடுங்க... அவளை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டு வந்துடுறேன்.. பொற்றவை பதிலுக்கு எதிர் பார்க்காமல் கார் கதவை திறந்து இறங்க சொல்லி விட்டான்.. அவள் ஏதோ பேசுவதற்கு முயற்சி செய்ய ஜீவா வேக வேக எட்டு வைத்து... தாயும் மகனும் இருந்த இடத்தை நோக்கி போய்விட்டான்..

ப்ச் காலை வேகமாக தரையில் உதைத்தவள்

"ஒத்த ஆம்பளையை வளைக்கிறதுக்கு போராடுற உனக்கே இவ்வளவு திமிரு இருந்தா, எத்தனை பேரை, கண்ணாலேயே ஜதி பேசி கவுத்து இருப்பேன்... இந்த அஞ்சரை அறிவு ஜீவாவை என்னால கவுக்க முடியாதா என்ன ? அலாவுதீன் பூதம் மாதிரி, எனக்கு கிடைச்ச இவனை வச்சே இனி நான் வாழந்துட மாட்டேன்... நீ என்ன செஞ்சாலும் , இனிமே என்கிட்ட இருந்து இவனை பறிக்கவே முடியாது என்று பொற்றவை ஆக்ரோஷமாக மூச்சு விட்டுக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்..

அவளைப் பொறுத்தவரை கற்பு, தூய்மை, காதல் எல்லாம் மூன்றாவது பட்சம்தான்... முதலில் காசு அவ்வளவே

"இப்ப பரவாயில்லையா பாரி "தாய் மகன் இரண்டு பேரிடமும் பதில் இல்லை 

"உன் கிட்ட தான் பாரி கேட்கிறேன், இப்போ வலி பரவாயில்லையா? ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகவா 

"உங்க லவ்வர் அங்க ஒத்தையில போறாங்க போய் அவங்களுக்கு சேவியம் பண்ணுங்க .. எனக்கு என் மகன் இருக்கான்.. அவன் பார்த்துப்பான், வாடா நாம அப்படியே பொடி நடையா ஹாஸ்பிட்டல் வரைக்கும் போயிட்டு வந்துருவோம் ...

"ரொம்ப வலிக்குதாம்மா" இன்பா தாயின் காயத்தை தடவிக் கொண்டே இருக்க ... 

"ஏதோ நினைப்புல போய் விழுந்துட்டேன்டா, ஏடாகூடமா இடிச்சுக்கிட்டு போல இருக்கு.. நல்லா வலிக்குது , இதை வச்சுக்கிட்டு வீட்டு வேலை பார்க்கணுமே அதை நினைச்சா தான் பக்குன்னு இருக்கு ..

"ஆஆஆஆஆஆஆஆ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க இறக்கி விடுங்க "அவளை குண்டுகட்டாக தூக்கி தோளில் போட்டுக் கொண்டான் ஜீவா

உங்களை தான் சொல்றேன் இறக்கி விடுங்க 

எப்போய் அம்மாவை எங்கய்யா கடத்திட்டு போற ஏற்கனவே வலிக்குதுன்னு சொல்லிட்டு இருக்காங்க எங்க தூக்கி போட்டு கொண்டு போற ... 

அதி மேதாவி ரெண்டு பேரும் சொன்னாதான் கேக்க மாட்டேங்கிறீங்களே, அதான் ஹாஸ்பிட்டலுக்கு ஆள கடத்திக்கிட்டு இருக்கேன்.. ஒரு ஊசி போட்டா வலி குறைய போகுது, அதுக்கு ஒக்காந்து அம்மாவும் மகனும் பட்டிமன்றம் நடத்திக்கிட்டு இருக்கீங்.க கதவை பூட்டிட்டு வாடா , கார் முன் சீட்டில் தூக்கி கொண்டு வந்து பூவாக இறக்கிறான் 

உங்க கை என் மேல டச் ஆகுதுங்க என்று பாரிஜாதம் முறைக்க 

அது 

ஆமா இப்ப என்ன உரிமையில என்ன தூக்கி தோள்ள போட்டு கொண்டு வந்து கார்ல உட்கார வச்சிருக்கீங்க... யாரை கேட்டுட்டு என்ன தொட்டிங்க?ஹான் என்று பாரிஜாதம் முறைப்பாக அவனை பார்க்க அதன் பிறகே அவளை தொட்டு தூக்கியது ஞாபகம் வந்து தலையை கோதியவன்

அது வந்து

நிறுத்துங்க, உங்க வீட்ல வேலைக்காரிக்கு அடிபட்டிருந்தா கூட இதை எல்லாம் பண்ணி இருப்பேன்... இல்ல ரோட்ல போற நாய் குட்டிக்கு அடிபட்டிருந்தாலும் இதை பண்ணி இருப்பீங்க அப்படித்தானே

ஆமா ஆமா 

அதெல்லாம் ஓகே என் இடுப்பை தொட்டு தடவி அதுக்கு கீழேயும் தடவி தடவி மசாஜ் பண்ணுனீங்களே உங்க வீட்டு வேலைக்காரிக்கும் இதே சர்வீஸ்தான் பண்ணுவிரீங்களா ... பரவால்லப்பா உங்க இரக்க குணத்தை பார்த்து நெஞ்சு முட்டுது.. என்றவள் நக்கலாக சிரிக்க... ஜீவா கண்களை அகல விரித்தான்.. 

இப்போதுதான் யோசித்தான் , அவள் காயத்தை எல்லாம் அவன் கைகள் தொட்டு துலாவியது அதில் அடி இடையும் ஒன்று அவன் தவறை உணர்ந்து நாக்கை கடிக்க...

"அது வந்து பாரி, நீ வலியில துடிச்சதும்., என்ன பண்றோம்னு தெரியாம ராங் இடத்துல ராங்கா கை போட்டுட்டுட்டேன் சாரி ... அதற்குள் மகன் கதவை பூட்டிக்கொண்டு ஓடி வந்தவன் முன் இருக்கையில் இருந்த தன் தாயையும் தகப்பனையும் மாறி மாறி பார்த்தவன், ஊமையாக சிரித்துக் கொண்டே போய் பின்னால் இருக்கையில் அமர்ந்து கொண்டான் ...

வலிக்கு ஊசியை போட்டு மூவரும் வீடு வந்து சேர அவள் நொண்டி நொண்டி கிச்சன் நோக்கி போக 

"டேய் உங்க அம்மாகிட்ட சொல்லுடா வேலைய இழுத்து போட்டு செஞ்சா இன்னும் அதிகமா வலிக்கும்னு டாக்டர் சொல்லிதானே அனுப்பினார்

சொல் பேச்சு கேட்காம கிச்சன்குள்ள போனா என்ன அர்த்தம்" திண்ணயில் உட்கார்ந்திருந்த ஜீவா உள்ளே அவள் நடமாட்டத்தை பார்த்துக் கொண்டே மகனிடம் தூது அனுப்ப 

"ஏம்ப்பா, உன் வாயை குத்தகைக்கு விட்டு இருக்கியா.. நீயே அம்மாகிட்ட சொல்லு, உங்க ரெண்டு பேருக்கும் இடையில நான் என்ன தரகர் வேலையா பாத்துட்டு இருக்கேன்.. போ " அவன் போனில் விளையாடிக்கொண்டே முகத்தை திருப்பி உட்கார்ந்து கொள்ள ...

அப்போ அப்பாவும் மகனும் என்னத்த சாப்பிடுவீங்களாம் , குவிச்சு போட்டு இருக்க துணி ஒரு அம்பாரம் கிடக்கு, டாக்டர் வாயில வந்ததெல்லாம் சொல்லுவாங்க ... அதை எல்லாம் கேட்டா , வீட்டு வேலையை யார் பார்க்கிறது? பானையில் சோத்தை உலை போட்டுவிட்டு வலியோடு துணியை துவைப்பதற்கு எடுத்துக் கொண்டு வர... அவள் கையில் இருந்து துணியை வெடுக்கென்று பிடுங்கி கொண்டு கிணற்றுப் பக்கம் போன ஜீவா..

"சரியா துவைக்கிறேனான்னு மட்டும் பாரு ... 

"என்ன பண்றீங்க.... அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், உங்க லவ்வருக்கு போய் உதவி செய்யுங்க... எங்களுக்கு எங்கள பாத்துக்க தெரியும் 

"என் பிள்ளைக்கு செய்யுற மாதிரி நினைச்சுக்கிறேன் எப்படி அவனுக்கு செய்யுறது என் கடமையோ? அதே மாதிரி என் புள்ளையை பெத்த உனக்கு செய்ய்றதும் என் கடமைதான்... நான் ஒன்னும் அவ்வளவு பெரிய கல்நெஞ்சக்காரன் எல்லாம் கிடையாது .. தாயின் கையைப் பிடித்து இழுத்து தன் அருகில் வைத்த இன்பா

"எம்மோய் ஏதோ மின்னல் ஒளி வந்து அலைவரிசை மண்டைக்குள்ள புகுந்த மாதிரி இருக்குது.. அப்பா ஒரு மார்க்கமா பண்ணுது. நீ பாட்டுக்கு எதையாவது பேசி கெடுத்துவிட்டுடாத , பேசாம உக்காரு என்னவாவது பண்ணிட்டு போகுது.. நம்ம டார்கெட் இவர் இல்ல, அந்த ரவை... அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிப்போம் என்று தாயும் மகனும் உட்கார்ந்து அரட்டை அடிக்க 

எங்கிட்டேயும் ஏதாவது பேசலாம்தான, ஒத்தையாவே உட்கார்ந்து துவைக்க போர் அடிக்குதுடா" என்று அவர்கள் கூட்டணியில் இவனும் சேர்ந்து கொள்ள ... மகன் பேசும் கதைக்கு தாயும் தகப்பனும் சிரித்துக்கொண்டே உம் போட்டனர்... இன்பா பாரிஜாதம் மடியில் தூங்கி விட ... கொடி மீது அவள் துணிகளை உதறி காய போட்டவனை சுற்றி தான் அவள் பார்வை எல்லாம் ... 

ஓகேவா பாரி , ஒரளவு துவைச்சு இருக்கேனா? வேலையை முடித்து விட்டு லுங்கியை ஏத்தி கட்டி கொண்டு வந்த ஜீவா தன் வியர்வையை சுண்டி விட இவள் முகத்தில் வந்து அவன் முத்து வியர்வை தெறிக்க, மயக்கம் தெளிந்த மாது 

ஹான் என்ன சொன்னீங்க .."

முடிச்சிட்டேன் , இன்பாவை கொடு தூங்க கூட்டிட்டு போறேன் "

"அவன் இன்னைக்கு என்கிட்ட இருக்கட்டும் இடையில எதாவது தேவைபட்டா எடுத்து தருவான்...

"அதுக்கு அவன் தூக்கத்தை எடுக்க போறியா? பாவம் அசந்து தூங்குறான்.. நான் வேணும்னா இந்த திண்ணையில் படுத்துக்கவா? ஏதாவது வேணும்னா ஒரு குரல் கொடு , நான் வந்து எடுத்து தர்றேன் .. பாவம் அவனை ஏன எழுப்புற ? என்று வெறும் திண்ணையில் அவன் உட்கார ...

பனிக்காற்று வீசுதுய்யா , நீ உள்ளார போ... நான் பாத்துக்குறேன் ..."

அசைய முடியாம வீங்கி போய் கிடக்க , என்னத்த பாத்துக்குவ, பரவால்ல நானே இருக்கேன் ... ஜீவா பாய் தலைகாணி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்து அவள் வீட்டு திண்ணையில் போட்டு படுத்து கொண்டான் ... 

இதெல்லாம் எதுக்கு செய்றேன்னு உண்மையாவே உனக்கு தெரியலைய்யாய்யா" என்று கண்ணை மூடிக் கிடந்த ஜீவாவிடம் கிசுகிசுப்பாக பாரிஜாதம் கேட்க..

ஆபத்து காலத்துல உதவி செய்யணும்ல.. பொக்கிஷாவுக்கு கூட பல நாள் காவல் இருந்திருக்கேன் ... அது மாதிரி நினைச்சிக்கிறேன்

"பெரிய பாறாங்கல்ல தூக்கி உன் மண்டைல போட்டு உடைச்சா எல்லாம் சரியாயிடும்... எல்லாம் சரியா தான் பண்ற , ஆனா அதுக்கு ஒரு விளக்கம் கொடுக்கிற பாரு, அந்த மண்ணாங்கட்டி விளக்கத்துலதான் நீ பெயில் மார்க்கே வாங்கிட்டு இருக்க ., சொந்த வீட்டுக்கே குண்டு பல்ப் மாட்ட தெரியதா மகான்னு உனக்கு புனைப்பெயர் வைக்கலாம் "

அப்படின்னா? "

பல்ப் பியூஸ் போனா கூட மாத்தலாம் ... 

இது கரெண்டே இல்லாத களிமண் வீட்டுல மாட்டுன பல்ப்புன்னு சொன்னேன் ... "

ப்ச் உளற ஆரம்பிச்சுடுவா ... இவ பேசுறதை புரிஞ்சிக்க புது டிக்ஷனரி தான் தயார் பண்ணணும் 

ம்க்கும் தோளை உலுக்கி கொண்டு பாரிஜாதம் உள்ளே போய் பாய் தலையணையை எடுத்து கொண்டு வந்து இன்னொரு பக்க திண்ணையில் போட 

"நீ எங்க இங்க படுக்கிற?

"நீதானய்யா சொன்ன , ஏதாவது வேணும்னா எடுத்து தர்றேன்னு .... 

""அதுக்கு

"நீ தான் வந்த முதல் நாளே உன் வீட்டுக்குள்ள வரமாட்டேன்னு சத்தியம் பண்ணி இருக்கல்ல அதான் நான் வெளிய வந்துட்டேன்; இப்படியே தெருவிலேயே குடும்பம் நடத்துவோம், குளு குளுன்னு இருக்கும்...என்று அவளும் மகனை அருகே போட்டு படுக்க 

"குழந்தைக்கு குளிர போகுதடி 

"என்ன சொன்ன? என்று படுத்திருந்த பாரிஜாதம் வெடுக்கென்று எழும்பி அவனை உத்துப் பார்க்க

"குழந்தைக்கு குளிர போகுதுன்னு சொன்னேன் 

"ப்ச் ,தெரியாம பேசுறானா தெரிஞ்சு பேசாறானானேன்னு தெரியலையே... ஆனா அப்பப்ப, அதிர வைக்கிறான்.... சிறுது நேரத்தில் நல்ல குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்த பாரிஜாதம் மேலே ஏதோ ஊற 

"அடிங் _____தா எந்த ____மொவன்டா அது ,என் மேல கை வச்சது...."

"ஏய் ஏய் நான்தான்" என்று ஜீவா கத்த. பாரிஜாதம் கண்ணை திறந்து பார்க்க அவன் கையை முறுக்கி பிடித்து வைத்திருந்தாள் 

நீயா, வேற எவனோன்னு நினைச்சேன் சஸ்ட் மிஸ் இல்ல கையை உடைச்சு இருப்பேன்.... என்ன ? ஜீவா அவள் அருகே நெருங்கி நின்றான்.. லுங்கி மேலே உள் பனியன் என்று அவன் நின்ற கோலம் தானாக முகத்தை திருப்ப வைத்து விட்டது 

மகன் இல்லாம தூக்கம் வர மாட்டைக்கு பாரி, இன்பாவை தூக்கிட்டு போகவா.."

ம்ம் என்று அனுமதி கொடுக்கவும் அவள் நெஞ்சு பக்கத்தில் குனிந்து ஜீவா மகனை தூக்கி கொண்டு நிற்க ... தூக்க தண்டனை என்னவோ அவளுக்கு தான் போலும் , அவன் நெருக்கம் வன்முறை செய்தது அவளை ..

ஸ்ஸ் ஆஆஆஆ ...

பிடிச்சுருக்கா சரியா பண்றேனா? தன் மீது இரு பக்கமும் கை ஊன்றி அவன் அதிர்ந்த நாழிகை அன்றோ இப்போது நியாபகம் வந்தது ..

எப்போ பார்த்தாலும் சப்பிக்கிட்டே கிடக்க வேண்டியது , அதுல என்னடா வருது "மகன் விரலை எடுத்து விட்டு கொண்டு அவன் நிற்க 

அய்யோ வலிக்குது மச்சான் உதட்டை எடுங்க " தன் நெஞ்சில் முகம் புதைத்து போதை ஏற்றிய அவனை தள்ளி பார்த்தாள் வலுவற்ற அவள் கையில் பலம் இல்லாது போனது.. 

இப்படியே சப்பிக்கிட்டே கிடக்க நல்லா இருக்கு ஆனா எதுவும் வரலையே "உருட்டி உருட்டி சப்பியவன் உச்சுகொட்டிய நியாபகம் காலை பின்னினாள்...

"சீக்கிரம் பிள்ளையை தூக்கிட்டு நகருங்க எம்புட்டு நேரமா என் மேலேயே சாஞ்சு கிடப்பீங்க தள்ளுங்க அவன் சுரணை கெட்டவன் ,அவளுக்கு சுரீர் என்றதே ..  

என்ன அப்பப்ப ஸ்ஸ் ஸ்ஸ்னு குரல் கொடுக்க , வலிக்குதோ என்றவனுக்கு வலியில் ஸ் போடுவதுக்கும், சுகத்தில் ஸ் போடுவதுக்குமே வித்யாசம் தெரிலையே என்று தலையில் அடித்து கொண்டவள்..

ஆமா கொஞ்சம் வலிக்குது... 

மருந்து எங்க இருக்கு? 

என் ரூம்ல.... படி தாண்டா பத்தினன் ஆச்சே இப்ப எப்படி உள்ளே போய் எடுக்க போறீங்க..

உன் வாய் தான் எனக்கு பிடிக்கவே இல்ல குதர்க்கமாவே பேசுற... நீ இருக்கும் போதுதான் போக மாட்டேன்னு சொன்னேன், மத்தபடி எனக்கு பிரச்சனை இல்லை ... நீ மட்டும் தான் எனக்கு பிரச்சனை "

"நான் என்னத்தய்யா உனக்கு பிரச்சனை கொடுத்தேன் , உன் முன்ன அவுத்து போட்டு மூட் ஏத்தினேனா? இல்லை மேல விழுந்து உதட்டை கவ்வி உசுப்பி விட்டேனா? இல்லை, குனிஞ்சு நிமிந்து உடம்பை காட்டி டெம்ட் பண்ணினேனா? இல்லை, உன்ன உரசி உரசி வெறி ஏத்த வச்சேனா.... நான் பாட்டுக்கு என் வேலை உண்டு நான் உண்டுன்னு இருக்கேன், சும்மா என்ன குறை சொல்லாத பார்த்துக்க... "

"ச்சீ அசிங்கமா பேசிக்கிட்டு... என்று அவன் உள்ளே போக 

இதுவே அசிங்கமாம் , அப்படி என்னத்த அசிங்கமா பேசினேன் உங்களை விட குறைவுதான் நல்லா ___ரிடி உள்ள போகலன்னு சொன்ன ஆசாமியை காணல அவனைத்தான் தேடிட்டு இருக்கேன் கையில கிடைக்கட்டும்... " இவள் குரல் அவன் பின்னேயே போனது ... அவள் அறை உள்ளே நுழைந்தவன் அசந்தே விட்டான்.,

ஜீவா இந்த ஊருக்கு வந்த முதல் நாளில் இருந்து எடுத்த பல போட்டோ அறை எங்கும் மாட்டி இருந்தாள்.. அறை எங்கும் அவன் நியாபக சின்னங்கள்தான் ... 

கிடைச்சதாய்யா... அவள் குரலில் திடுக்கிட்டு கண்ணை விட்டு மருந்தை தேடியவன் கையில் பேன் ட்ரைவ் ஒன்று கிடைக்க .. சிசிடிவி புட்டேஜ் என்று எழுதி இருக்க  

என்னவா இருக்கும் என்று யோசித்தவன் அதையும் மறைத்து எடுத்து கொண்டான்.... முதல் முதல் திருட்டு வேலை ஒன்றை செய்துவிட்டு அசப்பு இல்லாது அவளுக்கு மருந்தை கொடுத்து விட்டு படுத்து கொண்டான். 

எம்மா என்னா வலி வலிக்கு கருமம் இந்தாள நெனைச்சுட்டு போய் விழுந்து வாரி இருக்கேன்.. நாளைக்கு வட்டி வேற பிரிக்க போகணுமே? புலம்பி கொண்டே உட்கார்ந்து பாரிஜாதம் மருந்தை தடவி கொண்டிருக்க... ஜீவா அவளுக்கு ரொம்ப வலிக்குதோ என்று நினைத்து திரும்பி பார்த்தவன் எச்சில் விழுங்கினான் ... 

அவளோ மருந்து தடவ எளிதாக தன் தாவணியை நழுவ போட்டு விட்டு ஜாக்கெட்டோடு உட்கார்ந்து மருந்தை தடவி கொண்டிருக்க... பட்டென்று தலையை திருப்பி கொண்டவன் வாய்வழியே மூச்சை நிரப்பி விட்டவன் 

தப்பு தப்பு என்று கன்னத்தில் போட்டு கொண்டான்... கண்ணை மூடிய பின்னும் காரிகை நினைவில் வந்தால் அதன் பெயர் என்னவோ? 

அவன் வழிபோக்கன் அல்ல , அடைத்த வழிகளை திறந்து, அலங்காரவாசல்களை கொடுக்க வேண்டியவன் என்று புரிந்து கொள்வானா??!!