வன்முறை செய் தப்பில்லை 6
Van6
6 வன்முறை செய் தப்பில்லை!!
ப்ச் நமக்கு மட்டும் எல்லாமே குண்டக்க மண்டக்கதான் நடக்குது ... அந்த கடவுள் என் விதியை மட்டும் எப்படி எழுதினாரோ தெரில ...
இங்க்இல்லாத பேனா வச்சி எழுதி இருப்பான் ... அதான் மொத்தமா சும்மாவே கிடக்கு ... இந்தாங்க ஜூஸ் என்று அவன் அருகே வைத்து விட்டு பாரிஜாதம் உள்ளே போக ... கவலை ஒரு பக்கம் இருந்தாலும் ஜூஸ் உள்ளே போனது..
திண்ணையில் தலையில் கை வைத்து உட்கார்ந்து இருந்தான் ஜீவா ..
எப்போய் எப்போய் திடுக்கிட்டு ஜீவா பார்க்க ... அவன் மகன்தான் கூடையும் கையுமாக நின்றான் ...
ப்ச என்னடா ?
வா கடைக்கு போயிட்டு வரலாம்
"நான் வரல மூட் அவுட்ல இருக்கேன் ...
"கடைக்கு போயிட்டு வந்து மூட் அவுட்ல இரு ...
"வர முடியாதுடா
"எம்மோய் இஇஇஇஇஇஇ வீட்டுக்குள் பார்த்து இன்பா குரல் கொடுக்க
"டேய் டேய் எதுக்குடா இப்ப உன் அம்மையை கூப்பிடுற , கடைக்கு தான போகணும் ஜீவா பதறினான்
"ம்ம்
"போகலாம் ... போய் ட்ரெஸ் போட்டுட்டு வா....
"எல்லாம் போட்டு தான இருக்கு ... நீள சட்டை அவன் அணிகலன் மறைத்து இருந்தது, கழுத்தில் பெரிய செயின் இடையில் தங்க கொடி , கையில் கை செயின் காதில் வைர கடுக்கன் வரை இருந்தது ஆனால் மறைக்க வேண்டியது காத்தோட்டமாக கிடக்க
"எல்லாம் போட்டியே அதுக்கு எதாவது போட்டு மூட கூடாதா...
"மூடுவோம் மூடுவோம் , இப்ப என்ன அவசரம் வந்துச்சு ... வாப்பா கிளம்பு ....
"இங்க பாரு கடைக்கு கூட்டிட்டு போறேன்.. சும்மா சும்மா அப்பான்னு சொல்லாத , நான்தான் உன் அப்பான்னு எதை வச்சி உன் அம்மாவும், நீயும் சொல்லிட்டு இருக்கீங்க எதாவது சாட்சி இருக்கா? ...
"ஏன் இல்லை, எனக்கும் உனக்கும் ஒன்னுபோலத்தான் இருக்குமாம்... என்ன? எனக்கு சின்னதாம் உனக்கு பெருசாம், அம்மா சொல்லிச்சு....
"எது சின்னது பெருசு??" என்று ஜீவா புரியாது பார்க்க
"இதுதான்" என்று இன்பா தன் சட்டையை தூக்கி காட்டி விட்டு போக
கடவுளே!! என் மானம் இப்படியா ஊர் விட்டு ஊர் வந்து போகணும் ... என்று புலம்பி கொண்டே மகன் பின்னே போக .... நேரே மூர்த்தி சூப்பர் மார்கெட் உள்ளே இன்பா நுழைய போக, கபார் என்று மகனை இழுத்து தூக்கிய ஜீவா
ஏன்டா வேற கடையே இல்லையா, எதுக்குடா மூர்த்தி அண்ணன் கடைக்கு வர்ற ??
"இங்க தான் நமக்கு தேவையான பொருள் எல்லாம் கிடைக்கும்.... கப்சிப்புன்னு உள்ள வர்றியா இல்லை தரமா ரெண்டு வேலையை பார்த்து விடவா..
"போய் தொலை" பாரிஜாதம் கன்னிவெடி என்றால் இன்பா ஆட்டோ பாம் என்று தெரியுமே ...
"கல் உப்பு இன்னும் வரல, நாளைக்கு வந்திடும் பொடி உப்பு வேணும்னா வாங்கிட்டு போ தங்கச்சி, என்று சேரில் உட்கார்ந்து மூர்த்தி கடைக்கு வந்த நபருக்கு பில்லை போட்டு கொண்டிருக்க , அவன் மடியில் வைர கம்மல் மினுங்க மல்லிகை பூ ரெட்டை ஜடையில் பச்சை பாவாடை சட்டை அணிந்து மூர்த்தி மகள் குறிஞ்சி உட்கார்ந்து இருக்க ....
ஹலோ என்ற குரலில் மூர்த்தி மேலே தேட
"கொஞ்சம் கீழ பார்க்கிறது" என்ற குரலில் மூர்த்தி கீழே குனிந்து பார்க்க இன்பா நின்றான் .... கண்ணை சுருக்கிய மூர்த்தி
"என்ன வேணும்? ..."
"அரை கிலோ மூட், கால் கிலோ கிளுகிளுப்பு , ஒரு கிலோ பீல் , நல்லா தரமானதா பார்த்து என் அப்பாவுக்கு பார்சல் பண்ணுங்க ....
"என்னது ? மூர்த்தி மீசை துடிக்க
"ம்ம் எனக்கு தெரியாது பத்தே மாசத்துல எனக்கும் தங்கச்சி வேணும் ... என் அப்பன் இதுக்கு எல்லாம் சரி பட்டு வர மாட்டானாம்... நீங்க தான் அதுல பெரிய ஆள் ஆச்சாமே, எல்லாத்திலும் கால் கிலோ போட்டு விடுங்க ... அம்மாதான் உன் மாமன்தான் மாமியை கண்ணாலேயே உண்டாக்கிடுவான்னு சொல்லும் , அந்த கலையை என் அப்பாவுக்கு கத்து கொடுக்கணுமாம்...
"அடிங்க , யாருகிட்ட தான் வந்து லந்து பண்ணிட்டு இருக்க என்று மூர்த்தி பல்லை கடிக்க ... அசந்தான் இல்லையே தாய்மாமன் குசும்பும், பேச்சும் இவனுக்கு அப்படியே இருந்தது ...
நம்ம பொண்ணுங்களா மாமா?? இருக்கட்டும் இருக்கட்டும் அழகாதான் இருக்கா ? என்று இன்பா மூர்த்தி மகள் கன்னத்தை வருட போக... சட்டென மகளை பின் இழுத்து கொண்ட மூர்த்தி
"தொலைச்சு புடுவேன் இனிமே இந்த கடை பக்கம் வந்த அம்ம_____ணமா ஓட விட்டு அடிப்பேன் ஓடுடா ...
"அதுக்கு எல்லாம் வேலையே இருக்காது மாமோய் நான் ஆல்வேஸ் அப்படிதான் சுத்திட்டு இருக்கேன் ...." என்றவன் மூர்த்தி அசந்த நேரம், குறிஞ்சி கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு இன்பா ஓடி விட ...
ஆஆஆஆஆ ஜீவா கன்னத்தை பிடித்து கொண்டு நின்றான் ..சின்னது ஓடி விட பெரியது மாட்டி கொண்டது...
பிள்ளையை ஒழுங்கா வளர்க்க துப்பில்லை , நீயெல்லாம் ஒரு அப்பன் , ஒழுக்கத்தை சொல்லி கொடுத்து வளரு இன்னொரு நேரம் இந்த கடை பக்கம் அப்பனும் மகனும் வந்தீங்க ரெட்டை கொலை விழும் பிள்ளையை பெக்க சொன்னா பொறுக்கி நாயை பெத்து விட்டிருக்க "என்று கடுகடுவென மூர்த்தி போக ...
"பிள்ளை பெத்தது உண்மையா பொய்யா தெரியும் முன்ன , அடுத்த பிள்ளைக்கு அவளும் அவனும் ரெடியாகிட்டு இருக்காங்க ,
நானே இதுக கிட்ட இருந்து தப்பிக்க முடியாம சுத்திட்டு இருக்கேன்..... இன்னும் என்ன எல்லாம் பார்க்க வேண்டியது இருக்கோ" என்று கன்னத்தை தடவி கொண்டே ஜீவா புலம்பி கொண்டே வெளியே வர ... கடைக்கு மறைவான சந்தில் இருந்து ஐஸை சப்பிக்கொண்டே இன்பா வெளியே வர
"என்னப்போய் மாமா அடி எப்படி?? பல்லை கடித்த ஜீவா ...
"விஷக்கிருமிடா நீ எதுக்குடா சும்மா இருந்தவனை கூட்டிட்டு வந்து அவர்கிட்ட அடி வாங்க விடுற .."
உன்னையை பெரியப்பா அடிச்சு வளர்க்கலையாம் அதான் இப்படி வளர்ந்து இருக்கியாம் ... அங்க வாங்காத அடியை என் மாமன்கிட்ட வாங்குன்னு கோர்த்து விட்டேன்... அன்பின்பால் வன்முறையும் தப்பில்லையே!!
முதல்ல உன்னைத்தாண்டா உன் அம்மாகிட்ட இருந்து பிரிச்சு வளர்க்கணும்.. சின்ன பிள்ளை மாதிரியாடா பேசுற... இவ்வளவு பேசுறல்ல பள்ளிக்கூடம் போகாம உன் அம்மைக்கூடவே ஏன் சுத்திட்டு இருக்க ...
"ப்ச் போகணும் போகணும் ..
"என்ன போகணும் ? நாளைக்கு கொண்டு போய் ஸ்கூல்ல சேர்த்து விடுறேன் ஒழுங்கா படிக்க போ...இன்பா தகப்பன் முகத்தை அண்ணாந்து பார்த்து கொண்டு நிற்க ...
"என்னடா சேர்த்து விடுறேன் போறியா? உடனே அவன் தலை வேகமாக சரி என்று ஆடியது ...
"நீயும் வருவியாப்பா?? என்று ஜீவா விரலோடு விரலை கோர்த்து கொள்ள ..
"காலையில ரெடியா இரு கூட்டிட்டு போறேன்
"ம்ம் ம்ம் சரி குஷியில் அவன் மண்டை ஆடியது ...
"அம்மாகிட்ட நல்லது பழகினா பரவாயில்லையே அத்தனை கெட்டவார்த்தையும் அத்துப்படி , ஸ்கூலுக்கு போ அங்க நாலு அறை வாங்கினாதான் இனி உன் வாய் குறையும் .. முதல் உனக்கு ஒரு வழி பார்க்கணும் அப்பதான் நான் மூச்சு விட முடியும் போல இருக்கு ... ஏங்க ஏங்க என்று வீட்டுக்குள் பார்த்து ஜீவா குரல் கொடுக்க ... தாவணியில் கையை துடைத்து கொண்டு பாரிஜாதம் வெளியே வர
நாளைக்கு காலையில அவனை கூட்டிட்டு போய் ஸ்கூல்ல சேர்த்து விடுறேன் என்றதும் பாரிஜாதம் சட்டென மகனை திரும்பி பார்க்க ...இன்பா புன்னகை முகத்தோடு ஆமா என்பது போல தலையாட்ட ...
"நீங்களும் ரெடியா இருங்க....
"ம்ம் மறுபேச்சு இல்லை ... தன் வீடு நோக்கி திரும்பிவன்
ஆமா கேட்கணும்னு நினைச்சேன் பிள்ளை பிறந்த பிறகும் ஏன் தாவணி கட்டுறீங்க , சேலை எல்லாம் கட்ட மாட்டீங்களா என்றவனை பே என்று அவள் பார்த்தபடி நிற்க ,அவன் கேள்வியை கேட்டு விட்டு பதிலுக்கு காத்திருக்காது போய்விட்டான் அவள் ஆடையை கவனித்திருக்கிறான் என்பதே பெரிய மாற்றம்தானோ??
பாரு அம்மா அப்பாவே அது கையால உனக்கு சேலையும் எனக்கு டவுசரும் வாங்கி தர போகுது ... சும்மா சும்மா அப்பாவை திட்டுனியே , பாரு நாளைக்கு என்ன ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்கு... துள்ளும் மகன் போலவே, அவள் இதயமும் துள்ளாட்டம் போட்டது ...
டேய் நல்லா இருக்கேனா? கண்ணாடி முன்னே நின்ற தாயை இடித்து கொண்டு வந்து நின்ற இன்பா
நான் நல்லா இருக்கேனா அப்பாவுக்கு இணையாக இருக்கேனா?
இன்னைககாவது டவுசர் போடுடா ஸ்கூலுக்கு போகணும்ல
போற வழியில அப்பாவை வாங்கி தர சொல்லி போட்டுக்கிறேன் பவுடரை உடலெங்கும் பூசி கொண்டு நின்றான் ..
வாம்மா நேரம் ஆகிட போகுது தாயும் மகனும் அரக்க பறக்க கிளம்பி வர ... ஜீவா இருந்த வீடு பூட்டி கிடக்க
ஜீவா தம்பி அவசர வேலையா மார்கெட் வர போகுதாம் ரெண்டு பேரும் கிளம்பி வெயிட் பண்ணுவீங்களாம் வந்திடுவாராம் என்று வாசலில் நின்ற முதியவர் தகவல் சொல்ல ... தாயும் மகனும் திண்ணையில் உற்சாகம் குறைந்தாலும் வருவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்க ...
அவன் ,யார் நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறான் இவர்கள் நம்பிக்கையை காப்பாற்ற ... போனவன் வருவான் வருவான் என்று காத்திருந்து மாலையே ஆகி போனது ஜீவா வரவே இல்லை ... மடியில் படுத்திருந்த மகனை குனிந்து பார்க்கவே அவளுக்கு மனம் கனத்தது... தன் தொடையில் சுட்டது மகன் கண்ணீர் என்று புரிந்து சுக்குநூறாக உடைந்தே போனாள்...
முரடாய் உலகத்தின் பார்வையில் தெரியும் நபர்கள்தான் முட்டாள்தனமான அன்புக்காக ஏங்கும் ஜீவன்கள்...
ரெண்டு பேரின் அன்பின் வலி புரியாது, ஜீவாவோ மருத்துமனை அறையில் டீயை ஆற்றி கொண்டிருந்தான் படுக்கை மீது ஒரு பெண் சோர்வாக படுத்து இருக்க காலில் கட்டுபோட்டு வைத்திருந்தனர் ..
ஏங்க இப்ப பரவாயில்லையாங்க... என்றதும் எதிரே நின்ற அவனை பார்த்து சாந்தமாக தலையாட்டினாள் அப்பெண்
பார்த்து வர கூடாதாங்க நல்லவேளை நான் வந்தேன் ...
பஸ்ஸை பிடிக்க ஓடினேன் எதிர வந்த லாரியை பார்க்கல நேக்கு உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றி சார் "
"இருக்கட்டும்ங்க... இந்தாங்க டீயை குடிங்க என்று ஜீவா டீயை நீட்ட
உங்களை மூர்த்தி அத்தான்கூட பார்த்து இருக்கேனே நீங்க ?என்று அப்பெண் இழுக்க
ஜீவா...அவர் ட்ரைவரா இருந்தேன்"
"ஓஓஓ என்பேர் பொற்றவை, பொக்கிஷா தங்கச்சி
"அட அவங்க தங்கச்சியா ??
"ம்ம் இன்டர்வி போன எடத்துல இப்படி ஆகி போச்சு ப்ச் அந்த வேலையை நம்பிதான் இருந்தேன் போச்சுங்க..
"விடுங்கங்க நமக்கு கிடைக்கிறது எப்படியும் கிடைக்கும்.... போயிடுவீங்களா இல்லை கூட்டிட்டு போகணுமா
"இல்லைங்க ஆட்டோ பிடிச்சு போயிப்பேன் என்று பொற்றவை மெலிதாக சிரிக்க ...
"உங்க நம்பர் ???ஆட்டோவில் ஏறிய பொற்றவை மெலிதாக இழுக்க ...
"இந்தாங்க , எதாவது தேவைன்னா கண்டிப்பா கூப்பிடுங்க செய்றேன்" என்று அவளுக்கு கையை ஆட்டிக்கொண்டு நின்றது வெள்ளை மலைக்குரங்கு ...
"பாவம் எவ்வளோ அப்பாவியா பார்க்கிறாங்க.. நல்லவேளை எதுவும் ஆகல என்று பொற்றவைக்காக கவலை வேறு பட்டு கொண்டான்.... ஆட்டோவில் இருந்து திரும்பி பார்த்த பொற்றவை கண்ணில்அவன் ஏறிய பல கோடி ரூபாய் காரும் , அவன் கழுத்தில் கிடந்த டைமண்ட் பெண்டெண்ட் பட மெலிதாக உதட்டை வளைத்தாள்...
இவன் உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணா என்று நிற்க போவது உறுதியோ உறுதி!!