வன்முறை செய் தப்பில்லை 5

Van5

வன்முறை செய் தப்பில்லை 5

5 வன்முறை செய் தப்பில்லை !!

"ஏங்க ஏங்க காலையில சாப்பாடு ரெடியா? ஜீவா தன் முடியை கார் கண்ணாடியில் பார்த்து கோதிக் கொண்டே உள்ளே நோக்கி குரல் கொடுத்தான்..

வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது, காலையிலிருந்து இரவு வரை இவர்களோடவே சுற்ற வேண்டும் அதுதான் அவன் வேலை... முதல் நாள் அவன் அழுக்கு துணியை துவைக்க கையில் எடுத்த பொழுது வந்து வெடுக்கென்று பாரிஜாதம் அதை பிடுங்கிக் கொண்டவள்... 

"இதுக்கும் சேர்த்து கணக்குல கழிச்சுகிறேன்... நானே துவைச்சு தந்துடுறேன் அவன் பஞ்சு போன்ற கைகள் அழுக்கு துணியை துவைக்க கூட சம்மதிக்கவில்லை...

"வேலை செய்ய கள்ளக் கறி பிடித்த உடல் அல்லவா இது நல்லா இருக்கே என்று அத்தனை அழுக்கு துணியையும் அவள் கையில் கொடுத்தவன்..

இதை மட்டும் நானே துவைச்சுக்கிறேன் என்று தன் அங்க வஸ்திரத்தை மட்டும் ஜீவா தன் முதுகுக்கு பின்னால் மறைத்துக் கொள்ள

அதுக்கு உள்ள இருக்கிறதுக்கே, நான் தான் முறைவாசல் செஞ்சேனாக்கும் ரொம்ப ஓவரா தான் போற ஒரு மாசம் முடியட்டும் அப்பறம் இருக்கு உனக்கு "

"அதெல்லாம் ஒரு மாசத்துல ஆளை பிடிச்சிருவேங்க 

"ம்க்கும் நீங்கதான ??

"எல்லாரும் எனக்கு எதுவுமே தெரியாத மாதிரியே பேசிகிட்டு இருக்கீங்க ... என்ன எல்லாரும் அண்டர் எஸ்டிமேட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க... அவன் அவன் லவ்வருக்காக லட்ச கணக்குல செலவு பண்ணிக்கிட்டு இருக்கான். ஆனால் நான் வெறும் ₹1000 ரூபாய் செலவுல பொண்ணு பிடிச்சிட்டேன்ல்ல என்றுவிட்டு சட்டென வாயை பொத்திக்கொள்ள

என்ன சொன்ன, பொண்ணு புடிச்சிட்டியா?

"அது எதுக்கு உங்களுக்கு ஒரு மாசம் எனக்கு டைம் தந்திருக்கீங்க .. அதுக்குள்ள லேடியோட வர்றேன் என்று இரவு சொன்னவன், காலையில் குளித்து கிளம்பி மினுக்கி வந்து நிற்க .. பாரிஜாதம் யோசனையோடு தோசை அடுக்கி வைத்திருந்த தட்டை அவன் கையில் கொடுக்க 

"நோ டச் அந்த திண்ணையில வைங்க , 

"உன்ன...

"பாருங்க சம்பவம் நடத்துச்சு, நடந்துச்சுன்னு நீங்க சொன்னா போதுமா? நான் நம்பணும்ல, எனக்கு உங்க மேல இப்பவும் நம்பிக்கை கிடையாது அதனால விலகியே இருங்க ..டச் பண்ணி பேசுற வேலையை வச்சிக்காதீங்க ... அவள் வைத்து கொடுத்த சாப்பாட்டை கழுத்து அடைக்க தின்ன ஆரம்பிக்க ..

என்னடா உன் அப்பன் பேச்சு எல்லாம் தூக்கலா இருக்கு...

அதை ஏன் கேட்கிற ...."

மூர்த்தி மாமா தரகர்னு ஒருத்தன் உங்ககிட்ட வந்து அடி வாங்கிட்டு போனான்ல "

"ஆமா பொண்ணை ___ ட்டி கொடுக்கிற ப்ரோக்கர் பய அவனை கெடுத்ததே அந்த நாய்தான...அவனை பத்தி நீ ஏன்டா பேசுற ??

"அட கேளும்மா நேத்து அப்பாகிட்ட வந்து, அந்த ஆளு பொண்ணு வேணுமான்னு கேட்க ... உன் ஆளும் மண்டையை மண்டையை ஆட்டிச்சு, ஐந்நூறு ரூபாய் அட்வான்ஸ் வேற கொடுத்துச்சு.. உன்கிட்ட நேத்தே சொல்ல நினைச்சேன் மறந்து போயிட்டேன்... 

"அட கடவுளே !! அதான் ஆயிரம் ரூபாய்க்கு பொண்ணு கிடைச்சிருச்சுன்னு போறாரா .. டேய் உன் அப்பனை பிடிடா, எடாகூடமா மாட்டிக்க போறான் என்று தாயும் மகனும் வெளியே ஓடி வர ஜீவா கார் பறந்து விட்டது ... 

"விவரம் கெட்டவனை வச்சிக்கிட்டு நிதமும் மாரடிக்கிறேனே... பூட்டு போட்டு அதை பாதுகாக்க முடியும்னா சிக்குன்னு பூட்டை போட்டு தேவைபட்டா மட்டும் திறந்துப்பேனே , அய்யோ என்ன ப்ராப்ர்டி புலம்ப வச்சே சாகடிக்கிறானேய்யா ன்று பதறியவள்.. டேய் புல்லட் சாவியை எடு" தாயும் மகனும் அவனை தேடி ஊரெல்லாம் சுற்ற அவன் கார் போன இடம் தெரியவில்லை .... 

ஏங்க நீங்க ரொம்ப நல்லவங்கங்க.. வெறும் ஆயிரம் ரூபாய் தந்தா போதுமாங்க, காரில் தன் அருகே கண்ணாடி பார்த்து லிப்ஸ்டிக் போட்ட பெண்ணை ஜீவா திரும்பி பார்க்க 

என் வேலையை பொறுத்து காசு கூடும்... என்ன எல்லாம் வேணும் ? ஆர்டினரியா, எக்ஸ்ட்டாடினரியா.... வித் ட்ரிங்கா, வித்அவுட் டிரிங்கா? மருந்து எதுவும் ஏத்துவியா?  

அப்படின்னா ?

அதான் படுக்கும் போது உனக்கு எப்படி வேணும் ? எந்த பொசிசன் வேண்டும்?   

படுக்கும் போது லுங்கிதாங்க கட்டுவேன் ... குப்புற படுத்து தான் தூங்குவேன் அதான் ஸ்லீப்பிங் பொசிசன் ., அதுதான் எனக்கு பிடிக்கும் ஏங்க இதை எல்லாம் கேட்கிறீங்க., அவனை மேலும் கீழும் பார்த்த அப்பெண்ணோ.. அவன் பார்வை கண்ணை தாண்டி நகரவில்லை அவள் கலைந்து கிடந்த சேலை வழியாக வேண்டுமென துருத்தி காட்டிய அழகை சும்மா கூட தீண்டவில்லை ...  

ஆளு ஹீரோ போல இருக்கான் , கூறுகெட்டவனா இருப்பான் போலேயே ஆட்டையை போட்டுற வேண்டியதுதான்... என்று வஞ்சிக்க நினைத்த பெண் ...

"கையில எவ்வளவு காசு வச்சிருக்க ? ...

"காசு இல்லைங்க , கிரெடிட் கார்ட் ஏடிஎம் கார்ட்தான் இருக்கு .... கல்யாணம் முடிஞ்ச பிறகு டேடிகிட்ட பேசி காசு எல்லாம் வாங்கி தர்றேன் ... உடனே கல்யாணத்தை மட்டும் வச்சிக்கலாம்ங்க.... 

கல்யாணமா? யாருக்கு?"

"உங்களுக்கும் எனக்கும் ... அவங்க டார்ச்சர் தாங்க முடியலங்க இப்பவே கல்யாணத்தை பண்ணி ஜோடியா போய் நின்னா தான் தப்பிக்க முடியும் ... 

"கல்யாணமா ச்சீ .. டேய் ஒழுங்கா கையில இருக்கிறது எல்லாம் வச்சிட்டு இறக்கி விடு "என்று அப்பெண் அவன் சட்டையை பிடித்து இழுத்தவள் அவன் பர்சை புடுங்கி அத்தனை பொருளையும் எடுத்து கொண்டவள் 

"ஏடிஎம் பின் என்ன ...

"ஏங்க என்னங்க பண்றீங்க?? என்றவன் கழுத்தில் கத்தியை வைத்தவள்

"ஒழுங்கா சொல்ல போறீயா இல்லையா ... இல்லை நீ என்ன தப்பு பண்ண கூப்பிட்டேன்னு அய்யா அம்மான்னு கத்தினேன் உன்னை தூக்கி உள்ள போட்டு நுங்கை எடுத்துடுவான்க செய்யவா .. 

"என்னங்க பார்க்க நல்ல பொண்ணு மாதிரி இருந்தீங்க , இப்படி எல்லாம் பேசுறீங்க 

"நான் நல்ல பொண்ணுன்னு உன்கிட்ட சொன்னேனா ... ஒழுங்கு மரியாதையா செயினை கழட்டு , இல்ல இன்னைக்கு நீ செத்த.. 

"என்னங்க நீங்க அவளை விட மோசமா இருக்கீங்க எவ்வளவு மிரட்டினாலும் நான் எதையும் தரமாட்டேன் முதல்ல வண்டியை விட்டு இறங்குங்க "என்று ஜீவா கதவை திறக்க போக ... அதற்குள் அப் பெண் 

"ஐயோ அம்மா என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்றானே என்று கத்த ஆரம்பிக்க... அங்கே நின்று இரண்டு போலீசார் வந்து ஜீவா சட்டையை பிடித்து இழுத்து அவன் கன்னத்தில் பளார் என்று அடிக்கப் போக... போலீஸ் மணிக்கட்டை அழுத்தி பிடித்து இருந்தது பாரிஜாதத்தின் கைவிரல்கள்... ஜீவா கண்களை மூடிக்கொண்டு நின்றவன், தன் அருகே கேட்ட முத்து கொலுசின் சத்தத்தில் கண்களை திறந்து பார்க்க .. 

ஆங்கார தேவியாக நீலி போல, தன் மையிட்ட விழிகள் அங்கும் இங்கும் கதகளி ஆட .. தன் முன்னே நின்ற போலீசாரை கண்களால் எரித்து சாம்பலாக்கிக் கொண்டு நின்றாள் பாரிஜாதம்!!

"எவ்வளவு தைரியம் இருந்தா. , என் புருஷன் மேல கை வைக்க பார்ப்ப

"இல்லம்மா அந்த பொண்ணுக்கிட்ட 

"பொண்ணு சொன்னா எல்லாத்தையும் அப்படியே கேட்பியா அவ ஒன்னா நம்பர் ____ யா... காசு புடுங்க பார்க்கிறா? அதை விசாரிக்க துப்பில்லை அவர் மேல கை வைக்கிற கையை எடுடா.,. 

"என்னம்மா மரியாதை இல்லாம பேசுற ..

"அப்படிதான் டா பேசுவேன் கையை எடுக்கிறியா இல்லை கையை ரெண்டா வெட்டி காக்காவுக்கு போடவா.. உன் பதவி காக்கி சட்டைக்கு எல்லாம் இந்த பாரிஜாதம் பயப்பட மாட்டா ... ம்ம் எடு கையை, இல்லை சீனாகி போகும்" என்றவள் முகம் சொன்ன ரெளத்திரம் கண்டு அவர் கையை எடுத்து விட ...பாரிஜாதம் ஜீவா கசங்கிய சட்டையை நீவி சரி செய்து விட, இன்பா அவன் பேண்டில் ஒட்டிய மணலை தட்டிவிட்டவள் 

"ப்ச் ஏன்யா உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா? அது கிராக்கிய்யா

கிராக்கியா?? அப்படின்னா "

"சாவுகிராக்கின்னு அர்த்தம் வா வந்து வண்டியில ஏறு .... 

என் கார்

ஊர் போய் சேர்ற வரை காரை கையில எடு அப்ப இருக்கு சங்கதி, வந்து புல்லட்ல ஏறு.. அவள் பின்னே ஏறி அமர்ந்த ஜீவா இடைவெளி விட்டு கம்பியை பிடித்து கொள்ள 

இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை ... 

என்னங்க சொன்னீங்க என்று ஜீவா அவள் காது அருகே வந்து கேட்க அவன் மீசை கன்னத்தில் உரசியே அவன் மீது வந்த ஆற்றாமை போனதை என்ன என்று விளக்க ... 

இந்த பொண்ணு போனா போகுதுங்க நான் வேற நல்ல பொண்ணா...

அப்படியே கிழிச்சு தள்ளிடுவீங்க.... புல்லட் டுபுடுபுவென வீடு நோக்கி நகர 

ஏங்க

ம்ம்

தேங்க்ஸ்ங்க...

எதுக்கு?

"இல்லை கரெக்ட் டைம் வந்து என்ன போலீஸ் கிட்ட இருந்து காப்பாத்தினதுக்கு...

"ஏன்யா அதான் உன் அண்ணன் அப்பாரு எல்லாம் பெரிய ஆளுதானே இந்த மாதிரி சமயத்தில அவுக பெயர் சொன்னா கூட போதுமே ஏன்யா கோழிமாதிரி முழிச்சிட்டு நிக்கிற "

"அது வந்துங்க இந்த மாதிரி ஷாக்கான சிட்டிவேசன்ல எனக்கு கொஞ்சம் மூளை வேலை செய்யாம ஸட்க் ஆகிடும்ங்க 

"அப்பா அது மூளை உள்ளவங்களுக்கு உனக்கு எதுக்கு ஸ்டக் ஆகுது "என்று இன்பா சிரிக்க

"கிண்டலா பண்றீங்க பாருங்க ஒரு மாசத்துல நான் யாருன்னு காட்டுறேன் "

"எம்மோய் இவரு உன்ன எத்தனை கொலை பண்ண வைக்க போறாரோ தெரியல போ .... அவளோ புஸ்புஸ் என்று தன் முதுகில் மோதிர ஜீவா மூச்சு காற்றில் உடல் சிலிர்த்து போய் இருந்தாள் ..

அவன் மூச்சுக்காற்றுக்கே அவள் காதல் அழகாய் பூத்தது 

கத்தி கத்தி சொல்லியும் அவன் காதில் கூட அவள் காதல் போய் சேரவில்லையே எத்தனை முரண் இக்காதல்!! 

காதல் வன்முறை அவளுக்கோ அவனுக்கோ??