வன்முறை செய் தப்பில்லை 15

Van15

வன்முறை செய் தப்பில்லை 15

15 வன்முறை செய் தப்பில்லை !! 

காதலியை மாற்றலாம் ,காதலிக்கு சோதனை வைக்கலாம் காதல் செய்யும் முன் யோசிக்கலாம், காதலை நிராகரிக்கலாம் , மனைவி என்று ஆன ஒருத்தியை மனைவியாக நம்பி அவனுக்கு தன்னை முழுதாக கொடுத்து தாயாக நிற்பவளை எப்படி நிராகரிப்பது... அவள் அவனை ஏமாற்ற வில்லை அவள் தானே ஏமாந்து நிற்கிறாள்... இந்த அளவு அந்த வெற்று மண்டையில் ஒளிவட்டம் தோன்றியதே பெரிய விஷயம் தான் ... 

"இவ்வளவு நடந்து இருக்கு, ஒரு மண்ணும் நியாபகம் இல்லையே ப்ச் ... என்ன நடந்து போச்சு இனிமே வாழ காதலிக்க ட்ரை பண்ணிட்டா போச்சு ... அவளும் கொஞ்சமே கொஞ்சம் அழகுதான்.. அந்த அடர்ந்த புருவமும் உதட்டு மேல இருக்கிற மச்சமும் கொஞ்சம் நல்லாதான் இருக்கு .. உடம்பை பிட்டா வச்சிருக்கா .. என்ன மத்த பொண்ணுங்க போல நடக்க, பேச தெரியல... அதுக்காக அவ தப்பானவன்னு சொல்றது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.. நேரா வீட்டுக்கு போறோம் நெஞ்சை திறந்து டாட்டுவை காட்டுறோம் ... இனிமே சேர்ந்து வாழலாம்னு அவளை சமாதானம் பண்றோம் ஊருக்கு பெட்டியை கட்டுறோம் .... அப்படி இப்படின்னு எப்படியாவது வாழந்துட வேண்டியதுதான் பெண்டுல மனநிலையில் தான் ஆளு வீட்டை நோக்கி போனது...

"எம்மோய் அப்பா வந்திடுச்சு" என்ற இன்பா குரலில் கையில் இருந்த அண்டாவை அப்படியே போட்டு விட்டு ஓடி வந்த பாரிஜாதம் ... அவன் சட்டையை வேகவேகமாக நகட்டி டாட்டூவை தடவியவள் கண்ணில் கண்ணாடி துகள் போல கண்ணீர் மினுங்கியது... 

"யோவ் , அவன் தான் சின்னபுள்ளை விளையாட்டு தனமா எதுவோ பண்ண சொல்லி இருக்கான்னா.. நீங்களும் போய் மாங்கு மாங்குன்னு குத்திட்டு வந்து இருக்கீங்க... வலி ரொம்ப இருக்கோ? சுடுதண்ணீ ஒத்தடம் எதாவது கொடுப்போமாய்யா ? " என்றவள் உதட்டை குவித்து காற்றை ஊதி அவன் காயம் மீது குளிர் பரவ பிரயத்தனம் பண்ணி கொண்டு இருக்க.. ஜீவா அவள் கழுத்தில் நாலு ஊக்கி மாட்டி தொங்கி கொண்டிருந்த தாலியையே பார்த்து கொண்டிருந்தவன், அந்த தாலியை சட்டென கைவிட்டு தூக்கி பார்க்க 

" அய்யோ என்னய்யா பண்ற?? என்றவள் அவன் பார்வை தாலியில் இருந்து மேலெறி அவள் கண்ணை நேர்கொண்டு பார்க்க ...

"ஓஓஓ பென்ட்ரைவ்வை பார்த்துட்டியா? அதான் பூதம் அடிச்ச மாதிரி சுத்திட்டு இருக்கியா ? வந்த அன்னைக்கே என்னடி தாலின்னு கேட்டிருந்தா இதுக்கும் விளக்கம் சொல்லி இருப்பேன்... உனக்குத்தான் என்ன பாக்கவே நேரம் இல்லையே... பெரிய கண்டுபிடிப்பு கண்டுபிடிச்ச மாதிரி பார்த்துகிட்டு நிக்கிற.. நான் உன் பொண்டாட்டி மாதிரி இல்லை பொண்டாட்டிதான்... பத்து முடிச்சு தாலி கட்டுன ஒரே ஆசாமி நீயாதான் இருப்ப ... போ போ போய் கொஞ்சம் ஓய்வு எடு, சாப்பாடு செஞ்சு வச்சுட்டு கூப்பிடுறேன்" என்று பாரிஜாதம் திரும்ப போக... அவள் மணிக்கட்டை பிடித்து இழுத்தவன்

"சாரி பாரி 

"எதுக்கு ? 

"அன்னைக்கு அப்படி நடந்து இருக்க கூடாது?

"சரி நடந்துட்ட , இப்ப என்ன செய்ய, நடந்ததை பத்தி பேசி என்ன நடக்க போகுது? விடு விடு போய் வேலையை பாரு...

"தெளிவில்லாமல் ஏதோ தப்பு பண்ணிட்டேன் ரியலி ரொம்ப கில்டியா இருக்கு தொண்டை கம்மிய குரலில் ஜீவா பேச..

"இனிமே எதையும் மாற்ற முடியாது மாத்துனா அது முறையாகவும் இருக்காது நாம தான் குடும்பம்னு ஆகிப்போச்சு .. இனிமே இணைஞ்சு வாழ்ற வழியை பார்ப்போம்.... ராத்திரி கிளம்பி இரு சென்னைக்கு கிளம்பலாம்.. டேடிகிட்ட விஷயத்தை எப்படியாவது சொல்லி , உன்னை என் வீட்டுல சேர்க்க வச்சிடுறேன்.. இனிமே அங்க எல்லாரும் சந்தோசமா இருக்கலாம் பாரி கிளம்பு ... டேய் இன்பா நீயும் கிளம்பு நைட் கிளம்பினாதான் காலையில போக முடியும் ... 

தாயும் மகனும் அவனை ஒருசேர ஒரு பார்வை பார்க்க 

"என்னடி சொல்லிட்டே இருக்கேன்... ரெண்டு பேரும் கல்லு மாதிரி என்னை பார்த்துட்டு இருக்கீங்க கிளம்புங்க , 

"எங்க கிளம்பனும்

"அதான் சொன்னேனே டேடியோட வீட்டுக்கு 

"அங்க நாங்க எதுக்கு வரணும்? என்று ஒன்றுபோல தாயும் மகனும் ஒரே டோனில் கேட்டனர்..

"விளையாடுறீங்களா, தப்பு பண்ணிட்டோம் இனிமே எல்லாத்தையும் திருத்திக்கலாம் குடும்பமா வாழலாம்னு நினைச்சு கூப்பிட்டா.. ஏன் வரணும் எதுக்கு வரணும்னு இது என்ன கேள்வி? 

"ஏன்னா நீங்க பேசுனது புரியலன்னு அர்த்தம்

"இதுல புரியுறதுக்கு என்ன இருக்கு ..

"இதுல என்ன புரிஞ்சது , ஒரு சிசிடிவி ஃபுட்டேஜ் பாத்துட்டு நீ தான் பொண்டாட்டி வான்னு கூப்பிட்டா எவ நம்பி வருவா?

"பச் எனக்கும் உன்ன பிடிச்சுதான்டி இருக்கு... டி போட்டா அநாகரிகம்னு நினைக்கிற எனக்கு உன்ன டி போட்டு பேச புடுச்சு இருக்கு.. ரசிக்க தொடங்கி இருக்கேன் இதைவிட வேற என்ன மாற்றம் என்கிட்ட வேணும் "

"எது டி போட்டு பேசுறதும், வெறிச்சு வெறிச்சு பார்க்கிறதும்தான் உங்க ஊர்ல லவ்வா? "

"வேற என்னடி செய்ய சொல்ற மகன் முன்னாடி கிஸ்ஸா பண்ண முடியும்... "

"ம்க்கும் அப்படியே பண்ணிட்டாலும்.... 

இத்தனை நாள் ஆகாத பொண்ணு, பொண்டாட்டின்னு தெரிஞ்ச பிறகு புடிச்சு போச்சா?  

"இப்ப ஏண்டி குழப்பிக்கிட்டு இருக்க.... நீதானே என்ன காதலிக்கிறேன், என்கூட வாழ என்ன வேணும்னாலும் செய்றேன்னு, தலைகீழா நின்னுது..  

"ஹான் நின்னேன்.. என் காதலுக்காக இப்பவும் தலைகீழாகத்தான் நிக்கிறேன்.. உன் காதலுக்காக நீ எந்த செங்கலை ராசா சுமந்த... என்னையும் அவனையும் நேசிக்கிற ரைட்டு... ஆனா அந்த நேசத்துக்காக நீ என்ன எல்லாம் இழந்த சாமி...

அது இழந்தா தான் அன்பா ?

ஆமா , விட்டுகொடுக்கிறதும், இழக்கிறதும் வலியை சுமக்கிறதும் அவங்களை எங்கேயும் விட்டுகொடுக்காததும் தான் உண்மையான அன்பு.. உனக்காக உன் மேல வச்ச காதலுக்காக , நான் கிட்டத்தட்ட எல்லாத்தையும் இழந்துட்டேன்.... நீ எல்லாத்தையும் இழக்க வேண்டாம் ... ஆனா இவன் நம்ம மேல உண்மையாவே அன்பு வச்சிருக்கான் நேசம் வச்சிருக்கான்னு. , அட்லீஸ்ட் 10 சதவிகிதமாகுது நான் உணர்றதுக்கு , நீ அப்படி எதையும் செய்யலையே .... எதுவுமே செய்யாத உன் பின்னாடி நானும் உன் பிள்ளையும் வருவோம்னு எப்படி நம்பின... 

பாரி கோவப்படுத்தாத.... எனக்கும் இப்பதான வாய்ப்பு கிடைச்சிருக்கு ... இனிமேதான் லவ் பண்ண ட்ரை பண்ணனும் ...

"ட்ரை பண்ணு அதுல பாஸ் ஆன அப்புறம் பாத்துக்கலாம் .."

"இப்படி குதர்க்கமா பேசினா எப்படி? வாழ வந்தாதானடி வாழ்ந்து காட்ட முடியும் ..."

"ஏன் உன்னைய நம்பி ஒரு புள்ளைய பெத்து நடுத்தெருவில நின்னுது போதாதா ? நீ வாழ்ந்து காட்டுனது எல்லாம் போதும்... முதல்ல நேசிச்சு காட்டு , அதுக்கு பிறகு வாழ்ந்து பார்க்கலாம்... அப்படியே அதை இதை சொல்லி அங்க கூட்டிட்டு போய், உன் அண்ணன் உழைப்பில எங்களை ஓசி சோறு திங்க சொல்றியா? நாலு நாள் ஒழுங்கா இருப்ப, அதுக்கு பிறகு காரை தூக்கிக்கிட்டு நீ பாட்டுக்கு ரேசுக்கு போயிடுவ... நாங்க ரெண்டு பேரும் போனவன் வருவானா, நம்மள நினைப்பானான்னு லோ லோன்னு ரோட்ல சுத்தணுமா?  

இது எல்லாம் வீணான பேச்சு பாரி .... நான் இனி சரியா இருப்பேன் ... என்ன நம்பேன்..

"யாரை நம்புனாலும் உன்ன நம்ப மாட்டேன்.... என் காதல் செத்துடக்கூடாதான்னுதான், தம் பிடிச்சு உன்ன சுத்தி சுத்தி வர்றது ... எங்க மேல உண்மையான அன்பு இருந்தா, அந்த அன்பை எப்படி காட்டனுமோ அப்படி காட்டு.. அதுக்கு பிறகு வாழ்றதை பத்தி யோசிப்போம் ... பிள்ளை கொடுக்கிறவன் எல்லாம் ஆம்பளையும் இல்ல.. உன் கூட வாழ்றேன் வான்னு சொல்லுறவன் எல்லாம் காதலனும் இல்லை.... வந்துட்டான் __யாண்டி , கெளம்பு...."

"ஏய்இஇஇஇஇஇஇஇ என்று வாழ்க்கையில் முதல் முறை அவன் கைகள் வன்முறை செய்து இருந்தது ஆம் கோவத்தில் பாரி கன்னத்தில் பளார் என்று ஒன்றை வைத்திருக்க 

எப்போய்... என்ற மகன் குரலில் பதறி கையை கீழே போட்டு விட்டவன் 

சாரி சாரி பாரி கோவத்துல பண்ணிட்டேன் என்று அவள் கன்னத்தை வருட... அவன் கை மீது தன் கையை வைத்து கன்னத்தோடு பிடித்து அழுத்தி கொண்ட பாரிஜாதம்... 

இந்த அடி எனக்கு வலிக்கலய்யா, சுகமா இருக்குய்யா, ஏன்னு புரியுதா... அவன் இல்லை என்று தலையாட்ட

"அந்த புரிதல் உனக்கும் எனக்கும் இன்னும் வரலைய்யா... குருட்டுப் பூனை விட்டத்துல , பாஞ்ச மாதிரி வாழ்க்கை கடலுக்குள்ள நுழைய நினைக்கிற... மூச்சு திணறி ரெண்டு பேரும் செத்துருவோம் .... ஆணும், பெண்ணும் இருந்தா , சேர்ந்தா மட்டும் தாம்பத்தியம் கிடையாதுய்யா... என்ன நம்பி தாலி கட்டின உனக்கு உசுருள்ள வரைக்கும் உண்மையா இருக்கிறதும், உனக்கே உனக்காக மட்டும் ஒருத்தியா வாழ்றதுதான் என் கடமையும் பொறுப்பும்.. அதே மாதிரி தாலி கட்டுன எனக்கும் என் புள்ளைக்கும் செய்ய வேண்டிய கடமை, கொடுக்க வேண்டிய பாசம், நேசம் நிறைய இருக்குய்யா... உன்கிட்ட எல்லாத்தையும் எதிர்பார்க்கல கொஞ்சம் தான் எதிர்பார்க்கிறேன் ... அந்த கொஞ்சம் கிடைச்சா கூட போதும் நாய் மாதிரி உன் பின்னாடி கூப்பிடுற இடத்துக்கு எல்லாம் நானும் உன் மகனும் வர்றோம்... இந்த பென்ட்ரைவ்வை காட்டித்தான் உன்ன லாக் பண்ணணும்னு நினைச்சு இருந்தா ஃபாரின் வந்து கூட உன்னை தூக்கிட்டு வர எனக்கு தெரியாதாய்யா?? நான் உன்கிட்ட எதிர்பார்க்கிறது சுத்தமான காதல் ... அதுவும் கிடைக்கும் போ" என்றுவிட்டு பாரிஜாதம் அண்டாவை டொம் என்று போட்டு கழுவ உட்கார்ந்தவள், விட்ட வேலையை செய்ய ஆரம்பிக்க இவன் பே என்று நின்றான்.... 

இவன் வா என்றதும் வருவாள் வாழ் என்றது வாழ்வாள் என்று நினைத்திருந்த ஜீவாவுக்கு அய்யோ ஆகி போனது 

ஏற்கனவே பெத்த பிள்ளைக்கே இங்க தலைகீழா நின்னு உரிமையை வாங்க வேண்டி இருக்கு.. இந்த _யிராண்டி அடுத்த பிள்ளைக்கு துண்டை போக வந்துட்டான்.. வீட்டு பக்கம் சோத்துக்கு தவிர வேற எதுக்காவது வந்த வண்டை வண்டையா கிழிச்சிடுபுடுவேன் பார்த்துக்க.... ஒருத்தி கழுத்துல இம்மாம் பெரிய தாலி கிடக்கு அது கண்ணுல தெரியாம சுத்திக்கிட்டு , இவரு வருவாராம் வாடின்னு ஒரே நாள் ராத்திரில யானைக்கண்ணு திறந்து கூப்பிடுவாராம், உடனே நாய்குட்டி போல பின்னாடி போகணுமாம்.. யார்கிட்ட உன் நடிப்பு பட்டறையை போடுற... அன்னைக்கு ஏமாந்தேன் இன்னைக்கு ஏமாறுவேன்னு நினைச்சியோ ?? நான் வச்சிருக்க காதலுக்காகதான் உன்னையை சுத்தி சுத்தி வர்றது ... என் காதலை நான் காட்டிட்டுதான் இருக்கேன் .. உன் காதல் எதுன்னு போட்டி போட்டு காட்டு ... மனசு திருப்தியானா கூட வர்றேன், இல்லை இப்படியே பெட்டியை கட்டு... பிள்ளை பெக்க பொண்டாட்டியை தேடுறியோ கொத்துக்கறி போட்டு புடுவேன் ஜாக்கிரதை" ரவுண்ட் கட்டி திட்டி கொண்டே நின்ற பாரிஜாதத்தை தலையை தடவி கொண்டே பார்த்தான் ..

அவன் உலகம் ஆண்கள் நிறைந்ததாகவே இருந்து இருக்கிறது பெண்ணின் உணர்வை அன்பை உணர கூட கால சூழ்நிலை அவனுக்கு அமைந்ததே இல்லை ... யார் யாருக்கு என்ன விருப்பமோ அதன் மீதே கண்ணும் கவனமும் போகும், இவனுக்கு உயிரில்லா ஜடப்பொருள் மீதே கவனம்... அவனை தாங்க யட்சன் உண்டு என்ன நடந்தாலும் நம்மள விட மாட்டார் பின்ன எதுக்கு போட்டு ரிஸ்க் எடுத்துக்கிட்டு என்ற தெனாவெட்டு சற்று அதிகம் உண்டு ... அவன் நினைத்தால் பொறுப்புகள் தூக்கி சுமக்க முடியும் ஆனால் பத்து நாள் வளையும் உடல் அப்புறம் மாடு மேய்க்க போய்விடும்.. வருடத்தின் முதல் நாள் போடும் புது வருட இலக்கு பத்தே நாளில் காணாது போவது போலத்தான் அவன் வாழ்ந்து இருக்கிறான்...ஆனால் நினைவு தெரிந்து யாரையும் ஏமாற்றி பிழைத்தது இல்லை.. யாரையும் அழ வைத்து வாழ்ந்தது இல்லை , யாருக்கும் துரோகம் செய்தது இல்லை, இந்த நல்ல குணாதிசயங்கள் எல்லாம் ஒரு ஆணுக்கு போதாதா என்ன? 

போதாதது என்கிறதே உலகம் ..ஏமாளியாக இருக்காதே, சோம்பேறியாக திரியாதே பொறுப்புகளை கையாள், சூழ்நிலைக்கு தக்க வாழ் இது எல்லாம் உயரிய குணங்களோடு சேர்ந்தால் மட்டுமே அவன் முழு ஆணாக முடியும் .... 

ரெண்டு நொடி அமைதியாக நின்று மகனையும் மனைவியையும் பார்த்த ஜீவா அந்த சுள்ளென அடித்த வெயிலில் வேகவேகமாக நடந்து போய் மூர்த்தி கடை முன்னே நின்றான் ....

வியர்த்து வடிந்து நின்ற ஜீவாவை கண்ட மூர்த்தி கண்களை சுருக்கி பார்த்த படி 

என்னடா சாப்பிடலையா முகம் சோர்வா கிடக்கு..என்ன ஆச்சு ?

அண்ணன் எதா...வது வே....லை வேணும் என்று தயக்கமாக கேட்க 

ஏன்டா தீடீர்னு 

என் பொண்டாட்டி பிள்ளைக்கு என் உழைப்புல சோறு போட நினைக்கிறேன் அண்ணன் என்றவனை மீசையை முறுக்கி பார்த்த மூர்த்தி 

வயசுக்கு வந்துட்ட போல 

அண்ணன் 

ரைஸ்மில்ல தான் வேலை இருக்கு மூட்டை எல்லாம் தூக்க வேணுடியது இருக்குமேடா... என்றதும் எச்சில் விழுங்கிய ஜீவா...

பரவாயில்லை அண்ணன் .... என் பிள்ளையை பொண்டாட்டியை நடுத்தெருவுல விடுற அளவு நான் கெட்டவன் இல்லைன்னு அவங்களுக்கு காட்டணும்னு தோணுது எதா இருந்தாலும் பரவாயில்லை செய்றேன் 

நாளையில இருந்து வந்து வேலையில சேர்த்துக்க 

ஏன் நாளைக்கு இன்னைக்கே போறேன் ..

அம்மாடி மகாலட்சுமி ரைஸ்மில் சாவி எடுத்துட்டு வந்து மச்சானுக்கு கொடு...

இதோ வர்றேண்ணா என்று பொக்கிஷா ரைஸ்மில் சாவியை கொடுக்க... ரைஸ்மில் நோக்கி நடந்த அவனை மூர்த்தி சிரித்து கொண்டே பார்க்க 

ஏண்ணா எத்தனை வேலை இருக்கு ஏன் கஷ்டமான வேலையை அவாளுக்கு கொடுத்தேள்

அவ சுமந்தாள்ல , இவன் சுமக்கட்டும் ... நீ என்னை சுமை வா என்று அவள் இடையை பிடித்து கிள்ளினான்.. 

மாவு நெடி அடித்த ரைஸ்மில் உள்ளே ஜீவா புது ஒருவனாக காலெடி எடுத்து வைத்தான்.. 

மனைவி பிள்ளைக்கான கடமைகளையும் தூக்கி சுமப்பவனே அழகிய காதலானாக இருக்க முடியும் ... தனக்கு வலித்தாலும் அவர்களுக்கு வலிக்காது பார்த்து கொள்வதே பேரன்பாக இருக்கும் ....

பேரன்பை அவனுக்கு கொட்டி கொடுத்தவள், அதே பேரன்பை சொச்சம் எதிர்பார்ப்பது தவறா??