வன்முறை செய் தப்பில்லை 1

Van1

வன்முறை செய் தப்பில்லை 1

1 வன்முறை செய் தப்பில்லை !!  

முதல் பாகம் மூப்படையா யட்சகா !!

இரண்டாம் பாகம் குரோத கொள்முதல் அழகே !!

மூன்றாம் பகுதி குரோதமும் அழகே !! 

"டேய் _____  பயலே வாங்குன காசை தர துப்பில்லை உனக்கு எல்லாம் கல்யாணம் ஒரு கேடு ,,காசை  எடுத்து மேல வைடா  என்று ஒலிப்பெருக்கி இல்லாமலே ஊரின் சந்து பொந்துகள் அத்தனைக்கும் அந்த குரல் கேட்டு,  ஊரே அவ்விடம் ஆஜர் ...

புது மாப்பிள்ளை தலையை குனிந்து கல்யாண பந்தல் நடுவே நிற்க...  சேரில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து தாவணியை சுழட்டி கொண்டிருந்தாள் பாரிஜாதம் !! 

காட்டுப்பூவில் அழகு இருக்காதா என்ன?  அவள் காட்டு செண்பகப்பூ  உதடு தேனை போல வளவளவென இருந்தது , ஆனால் நாவோ சூடாய் தான் வார்த்தைகளை தொடுக்கும்.... கண்கள்  மையிட்டு அகல விரிந்தது,  ஆனால் அது தரும் பார்வையோ பத்து பேரை எரித்து சாம்பல் ஆக்கி விடும் ஆக்ரோசம் கொண்டது , அவள் உச்சி முதல் உள்ளங்கால் வரை  திமிர் தாண்டவம் ஆடியது ... மாநிறத்து மதுரமானவள் தன் அழகை எல்லாம் தங்க ஆரம் பூட்டி ஜொலிக்க வைத்திருந்தாள்....  தொழில் வட்டிக்கு பணம் கொடுப்பது ...  

"அக்கா .... ரெண்டு நாள்ல காசு தந்துடுறேன் இப்படி கல்யாண வீட்டுல வந்து கலவரம் பண்ணுறியே " என்று அவன் தலையை சொரிய ...

"என்ன செய்ய எனக்கு என்ன உன் தேஞ்சு போன  முகரையை பார்த்து ரசிக்க ஆசையாவோய்,  உன் தொங்கச்சி கல்யாணத்துக்கு வாங்குன பத்து லட்ச ரூபாயை தூக்கி மேல வை  ..

ஐஞ்சு லட்சம் தான்  என்று அவன் திருத்த , தோளை உலுக்கிய பாரிஜாதம் 

"அது அப்ப,  மீட்டர் வட்டி ஸ்பீட் வட்டி எல்லாம் போட்டு இப்ப பத்து லட்ச ரூபாய் தரணும்....  என்று மாப்பிள்ளை கையில் இருந்த கூலர்ஸ்ஸை வெடுக்கென்று புடுங்கி   உதட்டை குவித்து காற்றில் தூசி தட்டி அதை இடையில் சொருகி கொண்டாள் ... 

அக்கா ஆஆஆஆஆ 

"அக்கா சொன்னாலும் ஆத்தா சொன்னாலும் இங்க எதுவும் கதைக்கு ஆகாது..  சொந்த ஆத்தா ரோட்டுல பைத்தியமா சசுத்தி லாரியில அடிப்பட்டு செத்ததுக்கே  ஏன்னு கூட பார்க்காத நான் உங்க பசுப்பலுக்கு எல்லாம் மயங்கிடுவேனா?  ஹான் ஒழுங்கு மரியாதையா காசை வைடா  "என்றாள் வெண்கல உருண்டைகளை உருட்டி விட்ட குரலில்.... 

"கையில சுத்தமா காசு இல்லைக்கா "என்றதும் கல்யாண மணமேடையை சுற்றி பார்த்தாள் அலங்காரம் தூக்கலாக இருந்தது ... 

"பந்தல் போட காசு இருக்கு , புது சொக்கா வாங்க காசு இருக்கு,  தாலி வாங்க காசு இருக்கு , எனக்கு தர மட்டும் காசு இல்லையோ?  என்றவள் சட்டென அங்கு இருந்த தாலியை எடுத்து இடையில் சொருகி கொள்ள .. 

அய்யோ 

அச்சோச்சோ என்று அத்தனை பேரும் பதற 

"காசை என் கையில வச்சிட்டு ,  உன் கல்யாணத்தை நடத்திக்க என்று ஜலங்கை கொலுசு சிலுசிலுக்க  நடந்த பாரிஜாதம்  வாசலில் நின்ற தன் புல்லட்டில் ஏறி அமர்ந்து கூலர்ஸ்ஸை கண்ணில் மாட்டி கொண்டு அவள் புல்லட் அந்த கிராமத்து மண்சாலையில்  சீறி பாய்ந்தது...

பெண் என்றால் வெட்கம் மடம் நாணம்  மட்டுமே இருக்க வேண்டுமா என்ன ? எவன் எழுதிய விதிகள் அவை...  திமிரும்,  வீரமும் , வன்முறையும் கொஞ்சி விளையாடும் அவள் கையில்!!  

தாங்கி கொள்ள ஆண் துணை இல்லாத,  அணைக்க உறவுகள் இல்லாத,  பாதுகாக்க உற்றவன் இல்லாத ஒவ்வொரு பெண்ணுக்கும் துணை திமிரும் , வீரமும் தான் ...

வன்முறைகள் கற்று கொள்ளவில்லை என்றால் அவளை கழுகாக கொத்தி குதறி விட்டு போய் இருக்கும் இவ்வுலகம்!! அவளுக்கு வன்முறையே அழகு !! 

எப்போதும்  போல மூர்த்தி கடைக்குள் நுழைந்து விட,  அவன் தலை மறையும் வரை மேலிருந்து மகளை இடையில் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி  பொக்கிஷா..

கீழே யாரோ தெரிந்த உருவம் ஒன்று காரில் இருந்து இறங்கி வருவதை பார்த்துவிட்டு யோசனையாக பொக்கிசா கண்ணை சுருக்க

"ஏங்க நல்லா இருக்கீங்களா??  என்று தாம்பூல தட்டோடு காரில் இருந்து இறங்கினான் ஜீவா இன்பாதித்தன்!! 

கோர்ட் சூட்டில் பெராரி காரில் படு ஸ்டைலாக வந்து நின்றான்... 

அடடே நீங்களா வாங்கோ, " அன்று  பஸ்ஸ்டாண்டில்  மூர்த்தியை கண்டு பயத்தில் ஓடியவன்தான் இன்றுதான் மறுமுறை பார்க்கிறாள்... 

" நீங்க மூர்த்தி அண்ணனை கொலை பண்ணிட்டீங்கன்னு கேள்விப்பட்டு பதறிட்டேன்.. உங்கள ஜாமீன் எடுக்கணும்னு எவ்வளவோ முயற்சி செய்தேன்..டேடி கிட்ட போய் கேட்டதுக்கு..  நீ எம்பிஏ முடி,  அப்புறம் அவங்கள ஜாமீன் எடுக்கிறத பத்தி பேசலாம்..  நீ எம்பிஏ முடிக்காம தனியா தொழில் தொடங்காம.. உனக்காக நான் எதையும் செய்ய மாட்டேன்னு ஸ்ட்ரீட்டா சொல்லிட்டாரா?  நானும் வேற வழியில்லாமல்,  ஃபாரினுக்கு போயிட்டு இப்போதான் ஜாமீன் எடுக்கிறதுக்கு எல்லாம் ரெடி பண்ணி ஜெயிலுக்கு போனா...  நீங்க எப்போவோ ரிலீஸ் ஆயிட்டீங்கன்னு சொன்னாங்க...  எப்படி உங்களை ரிலீஸ் பண்ணுனாங்க...  

"அது எப்படியோ ரிலீஸ் பண்ணிட்டாங்க ஜீவா ,  சரி என்ன கையில தட்டு , பூ ,பழம் எல்லாம் ..  ஆறடி அழகிய ஆண்மகன் .. ஜீவா  இன்பாதித்தன் !!

நல்ல உடல்கட்டு நறுக்கியசிகை,  மெலிதான தாடி கழுத்தில் அழகிய செயின்..  கூர்நாசி ரெட்டை நாடி, கழட்டி விட்ட சட்டை நடுவே கூலர்ஸ் என்று  அழகில் அடித்து சாய்த்தான்!! 

அந்த ஆறடி உடலில் கர்வம், திமிர்,  கோவம் , வீரம் , ஆண்மை எப்போதும் இருந்தது இல்லை ...உலக  விவரம்  கற்று கொள்ள பெரும்பாடு பட்டு,  அதில் படு தோல்வி தொடர் தோல்வி அடைந்தவன்.. இவள் மீது  காதல் வந்து இங்கே வந்து நிற்கவில்லை..  அவள் மீது இரக்கம்..  தன் கண் முன்னால் அவளின் வாழ்க்கை கன்னாபின்னா என்று கலைந்து போனதை பார்த்ததிலிருந்து அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதில் ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தது.. எதையாவது செய்ய முயற்சியும் செய்வான் .... ஆனால் கடைசிவரை  முயற்சியோடவே அது போய்விடும்...  இம்முறை மூர்த்தி இல்லை என்ற தைரியத்தில் தாம்பூல தட்டோடு வந்துவிட்டான்..

உங்களுக்கு தான்ங்க கொண்டு வந்தேன் ., 

டேடி பொக்கிசாவை பொண்ணு கேளுங்க  காலையில் தன் குழந்தைகளை பள்ளிக்கு கிளப்பிக் கொண்டிருந்த யட்சன் முன்னால் வந்து ஜீவா நிற்க அவன் என்ன சங்கதி என்பது போல அருகில் நின்ற தேனிசையை பார்க்க

"அந்தப் பொண்ணு ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆயிடுச்சாம் ..  திடீர்னு வந்து நான் அந்த பொண்ண கல்யாணம் கட்டிக்க போறேன்,  பொண்ணு கேளுங்கன்னு சொல்றான் ,.. என்ன பண்ணட்டும் 

"இது அவன் வாழ்க்கை ரிஸ்க் அவன்தான் எடுக்கணும் ... போயி அவனையே பேச சொல்லு நான் உங்களை கட்டிக்கிறேன்னு

"ம்க்கும் மூர்த்தி ரெண்டா பொளந்து அனுப்ப போறான் "என்று தேனிசை முனங்கி கொண்டு போக

"எனக்காக யாருமே வரமாட்டீங்க அப்படிதான?

"ஆமாடா வர முடியாது .. உனக்கு தேவையா நீயே பொண்ணு கேளு ..  "இரண்டு கோடி ரூபாய் தொழில் தொடங்க ஜீவா  கேட்க ... நம்பி கொடுத்த பாவத்துக்கு பத்து கோடி ரூபாய் கடன் அடைத்து இருக்கிறான்.... 

"நீ தொழிலே பண்ண வேண்டாம் ராசா,   சட்டி பெட்டியை கட்டிட்டு ஊர் வந்து சேருவியாம் .. உன் டேடி சொல்ல சொன்னார் என்றதும்தான் தாமதம் எப்போதடா ஊர் போய் சேர்வோம் என்று இருந்தவன் அடித்து பிடித்து ஓடி வந்து விட்டான் ... 

"யாரும் வரவேண்டிய தேவை இல்லை , இனிமே , நானே என் வாழ்க்கையை பார்த்துக்கிறேன்.... என்று சூர்மையில் ஜீவா  கிளம்பி விட ...

ஏன்  கிழவா நான் ஒரு கணக்குல அவனை அங்க அனுப்பிவிட்டா,  இவன் வேற கணக்குல்ல போட்டுட்டு வந்து இருக்கான்..  பாரிஜாதம் கூட இவன கோர்த்து விடலாம்னு பார்த்தா,  இவன் என்னன்னா மூர்த்தி பொண்டாட்டிதான் வேணும்னு நிக்கிறான் .. சரி ஆசையாக கேட்கிறான் இல்ல போய் பொண்ணு கேட்கிறது என்று தேனிசை யட்சனை இடிக்க..

"அடுத்தவன் பொண்டாட்டிடி அது... "

" சரி இப்ப தானே அவ அடுத்தவன் பொண்டாட்டி...  அன்னைக்கு ஜாமின்ல எடுத்து விடுங்க டேடின்னு உங்க கால்ல வந்து விழுந்தான்ல்ல அப்ப எடுத்துவிட்டு இருக்கலாம்ல...

"இங்க பாரு ஒன்னு வேணும்னா அடம் பிடிச்சு வாங்க தெரியணும் ... தனக்கு ஒன்னு புடிச்சிருக்குன்னா அதுக்காக தலதலைகீழா நிக்க தெரியணும்...  ஒருத்தர் வேணும்னா அவங்களுக்காக எந்த எல்லைக்கு வேணும்னாலும் போக தெரிஞ்சு இருக்கணும்...

ம்ம் 

"இது இல்லன்னா அது...அது இல்லன்னா இதுன்னு ஆப்ஷன் தேடி போறதுக்கு பேரு அன்பு கிடையாது....  அப்படி தேடி போற அன்பு நிலைக்கவும் செய்யாது ... என்னால ஜாமீன் எடுக்க முடியாது, எம்பிஏ படிக்கறதுக்கு போன்னு சொன்ன உடனே தலையாட்டுனான் பாத்தியா...  அந்த பொண்ணு வேணும்னு நினைச்சிருந்தா,  அவளை வெளியே கொண்டு வர  தலைகீழா நின்று இருந்து இருப்பான்...  அதுல இருந்து என்ன தெரியுது ?

தெரிலையே கிழவா 

"அந்த பொண்ணு மேல பரிதாபம் இருக்குடி பாசம் இல்ல ...

"ஓஓஓ 

"அனுதாபம் இருக்கு , அன்பு இல்ல ... ஏதாவது செய்யணும்ங்கிற ஏக்கம் இருக்கு ...காதல் இல்ல...  இது எதுவுமே இல்லாத ஒருத்திக்காக அவன் போராடல....  போராடி இருந்தா,  நான் காப்பாத்தி இருப்பேன் ... ஒருத்தி தனக்கு வேணும்னா எந்த எல்லைக்கு வேணும்னாலும் போக துணியனும்...  அது ஆம்பளையா இருந்தாலும் சரி, பொம்பளையா இருந்தாலும் சரி ... இவ எனக்கு வேணும் அப்படின்னா,  தான் உயிரை கூட தூசி மாதிரி உதறி தள்ளிட்டு , அவங்களுக்காக மலை  போல நிக்கணும்...  அதுக்கெல்லாம் இவன் சரிப்பட்டு வர மாட்டான்  போல விடு....  போயிட்டு பத்து நாள்ல  மறுபடியும் திரும்பி வருவான் ... 

எங்க திரும்பி வர ... இனி போனா போனதுதான் கிழவா என்று தேனிசை சிரிக்க 

"அது என்னவோ  சரிதான் ... இனி இவன்  வந்தா பார்த்துக்க வேண்டியது தான்  "என்று யட்சனுக்கும் சிரிப்பு தான் வந்தது .... இங்கே கற்ற பாடம் போல வேறெங்கும் அவன் எதையும் கற்று கொள்ளவில்லை ..ஒன்றுமே தெரியாதவன் சற்று தெளிந்தது மூர்த்தியிடம் வந்த பிறகு தான் ... மூர்த்தி  கோமாவில் இருக்கும் போது இவனுக்கு ஏதாவது அவன் ஆட்கள் மூலம் ஆபத்து வந்து விடுமோ என்றுதான் பாரின் அனுப்பி வைத்தான் .. இப்போது மறுபடியும் போறேன் என்று வந்து நின்ற ஜீவாவை தயக்கம் இல்லாது போ என்று அனுப்பி விட்டான்.. 

தன் முன்னே நின்ற ஜீவாவை புரியாது தான் பொக்கிசா பார்த்தாள்... 

"இது எல்லாம் எனக்கா எதுக்கு ? 

"உங்க வாழ்க்கையில என்ன வேணும்னாலும் நடந்து இருக்கலாம் ... இப்படி உங்க வாழ்க்கை ஆகுறதுக்கு  காரணம் ஒருவகையில நானும்தானே:

"சரி அதுக்கு ? 

"எனக்கு அந்த குற்ற உணர்ச்சி எப்போதும் இருக்கு..

"உன் குற்ற  உணர்ச்சியில கொல்லிக்கட்டையை  சொருக ... சொல்லிகிட்டே இருக்கானே  தவிர,  வேற எந்த ஆணியமே பிடுங்காத ஒரே ஆள் இவன்தான் என்று பொக்கிஷா உதட்டுக்குள் சிரிப்பை மறைக்க 

"எனக்கு உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுச்சு.."

"அதுக்கு 

"உங்க வாழ்க்கை முழுக்க உங்களுக்கு பாதுகாப்பா உங்க கூடவே நான் இருக்கேங்க .. என்னை கல்யாணம் கட்டிக்கிறீங்களா??  என்று தாம்பூல தட்டை அவள் முன்னால் நீட்ட

அப்போ என்னையும் என் பிள்ளையையும்  உன் கூடவே கூட்டிட்டு போயிடுறியா ? என்ற குரலில் ஜீவா பின்னால் திரும்பி பார்க்க...  கையை கட்டிக் கொண்டு மூர்த்தி மீசையை முறுக்கியபடி நிற்க  ஜீவா அப்பட்டமாக அதிர்ந்து போனான் 

இவரா??  அண்ணன் நீங்க  செத்து ஆவி ஆகிட்டீங்களா?  

"அடிங்க அடிக்கிற அடியில நீதான்டா ஆவி ஆக போற ? என்று ஜீவா தோளில் மூர்த்தி ஒரு அடி போட 

"ஆஆஆஆ வலிக்குது அப்போ  நீங்க சாகலையா?????

"நீ சுடு சோம்பேறின்னு தெரியும்டா ... ஆனா இவ்வளவு சோம்பேறின்னு இப்பதாண்டா தெரியுது ஒன்னு பெத்து,  ரெண்டு கிராஸ் பண்ண போறேன்டா இப்ப வந்து கல்யாணத்துக்கு துண்டு போடுறியே...

அண்ணே அவங்கள விட்ருங்க,  நான் அவங்கள பத்திரமா பார்த்துக்கிறேன் அவங்களை  கொடுமை படுத்தாதீங்க பாவம்,  பொண்ணுங்க சாபம் நம்மள சும்மா விடாது..  என்று உருகி வழிய

"_______ ஹான் வந்துட்டாரு பொண்ணு சாபம் பத்தி பேச .... மூதேவி வெண்ணை மொவனே,   இப்பதான் இந்த ஊருக்கு வழி கிடைச்சதாடா "என்ற குரலில் ஜீவா  திரும்ப    அங்கே பாரிஜாதம் பல்லை நரநரவென கடித்து அவனை பார்த்தபடி நிற்க .... 

"யோவ் அப்பா,  பெத்த பிள்ளைக்கு இன்சியல் கொடுக்காம எங்கைய்யா போய் தொலைஞ்ச" என்ற குட்டி குரலில் எல்லாரும் கீழே எட்டி பார்க்க ... பாரிஜாதம் அருகே குட்டி உருவம் ஒன்று இடையில் கை வைத்து  கொண்டு தாயை போலையே அவனை  முறைத்து கொண்டு நின்றது .... 

எம்மோய்  இந்த ஆளை தூக்கி தோள்ல போடும்மா,  இனிமே எவனாவது எனக்கு அப்பா இல்லைன்னு சொல்லட்டும் பார்க்கிறேன் .... எப்போய் வாப்பா ...  என்ற குழந்தை ஓடி வந்து ஜீவா காலை கட்டி கொள்ள .. 

"ஏங்க யாருங்க இது ... உங்க பிள்ளைங்களா??? என்று ஜீவா பாரிஜாதத்தை புரியாது பார்க்க 

"நம்ம புள்ள , நீ பெத்து விட்டதுடா வெண்ணை...  உனக்கும் எனக்கும் பிறந்த நம்ம புள்ளை புரியுதா 

ஏதே ஏஏஏஏஏஏ ஜீவா பிளந்த வாய்க்குள் ஒரு காட்டையை ரெடி பண்ணி விடலாம்.... 

ஆம் அவனை உரித்து வைத்து கூர்நாசி,  முட்டை கண் ரெட்டை நாடி என்று அப்படியே தகப்பன் அழகில் தாயின் ரவுடி லுக்கில் புருவத்தை வளைத்து தகப்பனை பார்த்தான் இன்ப ஆதித்தன்!! 

"என்னண்ணா இது புதுக் கதையா இருக்கு .. அந்த குட்டி குழந்தை பாக்குறதுக்கு அப்படியே ஜீவா போல இருக்கு என்ற பொக்கிஷா  மூர்த்தி கையை சுரண்ட 

"அப்பவே யோசிச்சேன் இவ இடுப்புல ஒரு பிள்ளையை தூக்கிட்டு போகும்போது, இந்த திருட்டு முழியை எங்கேயோ பார்த்திருக்கேனேன்னு இவன்தானா அந்த திருடன்....ஆனா இவன் அதுக்கு சரி பட்டு வர மாட்டானே என்று யோசித்த மூர்த்தி 

"ஹாஹா மாமி நீ அடிச்ச சரக்குல பாதி எங்க போச்சுன்னு அடுத்த நாள் தேடினேன்..  பாட்டல் காலியா கிடந்தது.. அந்த மீதி மீதியா வந்து  நிக்குது என்று மூர்த்தி சிரிக்க 

அச்சோச்சோ!!  இந்த பொண்ணு உங்க தங்கச்சி தானே  என்றதும் மூர்த்தி அவளை முறைக்க..

சரி சரி ... வட்டி கொடுக்கலைன்னா ஆம்பள பொம்பளன்னு பார்க்காம கடைத்தெருவுல கிடந்து பஜாரி போல சண்டை போடும்,  நேத்து கூட பார்த்தேன் ...  பாவம் இந்த பையன் மாட்டிண்டான்..

"ம்ம்  அது அவுக வீட்டு கதை நீ உள்ள போ .... 

எது என் பிள்ளையா?? ஜீவா இது என்னடா வம்பா போச்சு என்பது போல இருவரையும் மாறி மாறி பார்த்தான் ..

யாரங்க ஏமாத்த பார்க்கிறீங்க , உங்க கூட  ஒழுங்கா நான் நின்னு பேசினது கூட கிடையாது காமெடி பண்ணாதீங்கங்க ....  அதற்குள் அங்கே கூட்டம் கூட ஆரம்பிக்க 

நம்ம குடும்ப பஞ்சாயத்தை வீட்டுல போய் பேசலாம் வா என்று பாரிஜாதம் அவன் கையை பிடித்து இழுக்க 

முடியாதுங்க நான் ஏன் உங்க வீட்டுக்கு வரணும் .... விடுங்க கையை .... என்று ஜீவா அவள் கையை உதறி விட்டு காரை நோக்கி நடக்க போக .. இன்பா ஓடிப்போய் தகப்பனுக்கு குறுக்கே கையை மறைத்து நின்று தாயை பார்க்க பாரிஜாதம் கண்ணை மூடி திறந்து சமிக்கை கொடுக்க...

நான் இளிச்சவாயன் தான் அதுக்காக இவ்வளவு தூரம் ஏமாத்த கூடாதுங்க...  நல்லவேளை இப்ப கொஞ்சம் விவரம் வந்துடுச்சு இல்லை,  என் தலையில மிளகாய் அரைச்சிடுவீங்க போலேயே என்று  ஜீவா புலம்பி கொண்டே கார் கதவை திறக்க போக 

ஆஆஆஆஆஆஆஆஆ அந்தரத்தில் தொங்கினான் ..

அய்யோ என்ன இறக்கி விடுங்க "ஜீவா அலற அலற அவனை தூக்கி பாரிஜாதம் தோளில் போட்டு கொள்ள ...

"டேய் அப்பா கத்தாம வா , இல்லை கத்தியை பட்டாக்ஸ்ல சொருகிடுவேன்..  அம்மா அம்புட்டு தூரம் சொல்லுது திமிரா பண்ற ... அப்படித்தான் அம்மா நல்லா தூக்கு, இனிமே இவர் நம்மள வுட்டு எங்க போறார்னு பார்ப்போம்... ஹேய் எங்க அப்பா வந்தாச்சு  எங்க அப்பா வந்தாச்சு என்று தாயின் முன்னே டவுசர் கூட அணியாது ஆடி கொண்டே ஜீவா மகன் ஓடினான் ...  

பிடித்தவர்களை பிடித்து கொள்ள சற்று வன்முறை செய்யலாம் தப்பில்லை!!