வன்முறை செய் தப்பில்லை டீசர்2
Va2
வன்முறை செய் தப்பில்லை ¡¡
டீசர் 2
இருட்டோடு இருட்டாக ஊரை விட்டு தப்பித்துவிட நினைத்து , பாரிஜாதம் அறையில் இருந்த கார் சாவியை கனபாடு பட்டு திருடி கொண்டு ஜீவா காரை திறக்க போக ...
காருக்கு அடியில் இருந்து உருண்டு வந்த குட்டி உருவம் அவன் பேண்டை பிடித்து இழுக்க... கீழே குனிந்து பார்த்த ஜீவாவுக்கு பக்கென்று ஆகி போனது ...
தலைக்கு கைகொடுத்து தரையில் படுத்தபடி கையில் ஸ்பேனரோடு காலை ஆட்டி கொண்டிருந்தான் இன்ப ஆதி.
இவனா?? என்று ஜீவா பதற
"தெரியும்டி மாப்பிள்ளை, எப்படியும் நீ ஓடிருவேன்னு அதான் நானும் அம்மாவும் உனக்கு முன்னேவே ப்ரீ ப்ளான் போட்டு இங்க வந்தாச்சு.. இந்தா இது உன் கார் ப்ரேக் என்று பிரேக்கை மகன் நீட்ட ...
பாரு ஆம்பளன்னா எதுக்கும் பயப்பட கூடாது மகனேன்னு, ஆடு மேய்க்கிறதுல இருந்து ஆட்டோ மொபைல் வரை அத்தனையும் சொல்லி தந்து அம்மா வளர்த்து இருக்கு .. குட்டி பையன் தானே ஏமாத்திட்டு ஓடலாம்னு பார்த்தே முதல் கொலை நீதான்டி மாப்பிள்ளை... என்று எழும்பியவன் ...
டேய் அப்பாவுக்கு மரியாதை கொடு என்று கார் ஜன்னலை பாரிஜாதம் திறக்க .. கார் பின்சீட்டில் கால் மேல் கால் போட்டு பாரிஜாதம் அவன் கூலரை
கண்ணில் மாட்டி கொண்டு படுத்து இருக்க
அய்யோ தானா வந்து இந்த சைத்தானுக கிட்ட மாட்டி கிட்டோமே என்ற ரீதியில் அவன் நிற்க ....
"உன் அப்பாவை நான் டீல் பண்ணிக்கிறேன் நீ போய் டவுசரை போடு "
"ஏதே நான் ஆம்பள பையன்னு எப்படி ஊருக்குள்ள தெரியும்.. அப்படியே கிடக்கட்டும் அப்பத்தான் நான் வளர்ந்து பெருசான பின்ன நம்ம அருமை பெருமை ஊர் சொல்லும்... இந்த ஆள் போல மறைச்சு வச்சா எலி செத்து போகும் , இப்படிதான் ஆகும் வீரமே வராது ... பாரு முழியை வெவ்வே என்று ஜீவாவை பார்த்து முகத்தை கோணிவிட்டு அவனை இடித்து தள்ளிவிட்டு இன்பா ஓட .. ஏதோ தோன்றி ஜீவா பேண்டை தடவ அவன் பர்ஸ், பாஸ்போர்ட் கார் சாவி அத்தனையும் ஆட்டையை போட்டு விட்டு ஓடி விட்டான் பாரிஜாதம் வளர்ப்பில் விவரமாக வளரும் இன்பா
"ஏங்க இதெல்லாம் அநியாயம் யார்கிட்டேயோ பிள்ளையை பெத்துட்டு என்ன அதுக்கு அப்பா ஆக சொல்றீங்களே உங்களுக்கு மனசாட்சி இல்லை" என்ற ஜீவாவை பல்லை கடித்து பாரிஜாதம்
"ஆமா இல்லை , இங்கன நான் ஒருத்தி உனக்காக காத்து கிடக்கேன்.. நீ பூ பழத்தோட அங்கன போய் நிக்கிறியா . இங்க இருந்தா உன் உயிர் தப்பிக்கும் .. இல்லை இதோ போறான் பாரு நான் பெத்த குட்டிப்புலி, அவன் போதும் உன் சோலியை முடிக்க என்று மீண்டும் அவனை தூக்கி தோளில் போட்டவள் தனி அறை உள்ளே ஜீவாவை போட்டு கதவை பூட்டினாள்..
"அய்யோ யாராவது இதுக கிட்ட இருந்து காப்பாத்துங்க..என்று ஜீவா கத்தி கதவை தட்டி உடைத்து பசி மயக்கத்தில் அப்படியே மயங்கி விழ..
டேய் அதை துணி போட்டு மறைச்சுட்டாவது சாப்பிட்டு தொலைடா, பெரிய வில்லேஜ் விஞ்ஞானி போல பேசு, டவுசர் மட்டும் போட்டிராத என்று எலும்பை கடித்து இழுக்கும் மகனை பாரிஜாதம் முறைக்க
அதுவும் திங்கட்டும் , அப்பதான் சீக்கிரம் வளருமாம்... பக்கத்து வீட்டு கிழவி சொல்லிச்சு.. மாப்பிள்ளைக்கு குட்டி குஞ்____ னு யாரும் சொல்ல முடியாது பாரு... அதான் பாத்துக்கோங்கன்னு விட்டாச்சு, நாளைக்கு பின்ன சங்கடகுஸ்கா ஆகிட கூடாதுல்ல ... எல்லாம் பிற்காலத்தை கருத்தில் கொண்டுதான் இப்படி சுத்துறேன்... நீ சோத்தை தின்னு .. அங்கிட்டு ஏன் சோதனை பண்ணுத ..
"உண்மையாவே அதான் காரணமாடா
"என் அப்பன் காசுல தான் கு_சை மறைக்கணும்னு சபதம் விட்டிருக்கேன்
அடேய் மங்கம்மா சபதம் மாதிரி கு__சம்மா சபதமா
"யா யா "
டேய் உன் அப்பனுக்கு பல்ப்பே எரியலைண்ணா உன் நிலமை
டிங்கி டிங்கின்னு சுத்த வேண்டியதுதான் என்று
என் சிங்க குட்டி டா நீ,என்று மகனை தூக்கி போட்டு பிடித்தாள் பாரிஜாதம்
கதவுக்கு இந்த பக்கம் உட்காந்து தாயும் மகனும் சிரித்து சிரித்து பேச .. இவன் காதில் அந்த சிரிப்பு விழ ... இதுக வன்முறை விட்டு தப்பி பிழைக்கவே மனம் வேண்டியது ..
வம்முறையும் சில நேரம் நன்மை பயக்கும்!!