வன்முறை செய் தப்பில்லை டீசர்
Vanmurai
வன்முறை செய் தப்பில்லை !!
டீசர் !!
மூர்த்தி கடைக்குள் நுழைந்து விட அவன் தலை மறையும் வரை மேலிருந்து மகளை இடையில் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த பொக்கிஷா.. யாரோ தெரிந்த உருவம் ஒன்று காரில் இருந்து இறங்கி வருவதை பார்த்துவிட்டு யோசனையாக கண்ணை சுருக்க
"ஏங்க நல்லா இருக்கீங்களா?? என்று தாம்பூல தட்டோடு காரில் இருந்து இறங்கினான் ஜீவா இன்பாதித்தன்!!
கோர்ட் சூட்டில் பெராரி காரில் படு ஸ்டைலாக நின்றான்...
அடடே நீங்களா வாங்கோ,
"உங்கள ஜாமீன் எடுக்கணும்னு எவ்வளவோ முயற்சி செய்தேன்..டேடி கிட்ட போய் கேட்டதுக்கு.. நீ எம்பிஏ முடி, அப்புறம் அவங்கள ஜாமீன் எடுக்கிறத பத்தி பேசலாம்.. நீ எம்பிஏ முடிக்காம தனியா தொழில் தொடங்காம.. உனக்காக நான் எதையும் செய்ய மாட்டேன்னு ஸ்டேட்டா சொல்லிட்டாரா? நானும் வேற வழியில்லாமல் ஃபாரினுக்கு போயிட்டு இப்போதான் ஜாமீன் எடுக்கிறதுக்கு எல்லாம் ரெடி பண்ணி ஜெயிலுக்கு போனா... நீங்க எப்போவோ ரிலீஸ் ஆயிட்டீங்கன்னு சொன்னாங்க... எப்படி உங்களை ரிலீஸ் பண்ணுனாங்க...
அது எப்படியோ ரிலீஸ் பண்ணிட்டாங்க ஜீவா , சரி என்ன கையில தட்டு , பூ ,பழம் எல்லாம் ..
உங்களுக்கு தான்ங்க
ஓஓஓ எனக்கா எதுக்கு
உங்க வாழ்க்கையில என்ன வேணும்னாலும் நடந்து இருக்கலாம் ... இப்படி உங்க வாழ்க்கை ஆகுறதுக்கு காரணம் ஒருவகையில நானும்தானே
சரி அதுக்கு
எனக்கு அந்த குற்ற உணர்ச்சி எப்போதும் இருக்கு..
உன் குற்ற உணர்ச்சியில கொல்லிக்கட்டையை சொருக ... சொல்லிகிட்டே இருக்கானே தவிர வேற எந்த ஆணியமே பிடுங்காத ஒரே ஆள் இவன்தான் என்று பொக்கிஷா உதட்டுக்குள் சிரிப்பை மறைக்க
எனக்கு உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுச்சு..
அதுக்கு
உங்க வாழ்க்கை முழுக்க உங்களுக்கு பாதுகாப்பா உங்க கூடவே நான் இருக்கேங்க .. என்னை கல்யாணம் கட்டிக்கிறீங்களா என்று தாம்பூல தட்டை அவள் முன்னால் நீட்ட
அப்போ என்னையும் என் பிள்ளையையும் கூடவே கூட்டிட்டு போயிடுறியா ? என்ற குரலில் ஜீவா பின்னால் திரும்பி பார்க்க... கையை கட்டிக் கொண்டு மூர்த்தி மீசையை முறுக்கியபடி நிற்க
"அண்ணே நீங்க சாகலையா?????
"நீ சுடு சோம்பேறின்னு தெரியும்டா ... ஆனா இவ்வளவு சோம்பேறின்னு இப்பதாண்டா தெரியுது ஒன்னு பெத்து ரெண்டு கிராஸ் பண்ண போறேன்டா இப்ப வந்து கல்யாணத்துக்கு துண்டு போடுறியே...
அண்ணே அவங்கள விட்ருங்க, நான் அவங்கள பத்திரமா பார்த்துக்கிறேன் அவங்களை கொடுமை படுத்தாதீங்க பாவம், பொண்ணுங்க சாபம் நம்மள சும்மா விடாது..
ஹான் வந்துட்டாரு பொண்ணு சாபம் பத்தி பேச மூதேவி வெண்ணை மொவனே, இப்பதான் இந்த ஊருக்கு வழி கிடைச்சதா என்ற குரலில் ஜீவா திரும்ப
யோவ் அப்பா, பெத்த பிள்ளைக்கு இன்சியல் கொடுக்காம எங்கைய்யா போய் தொலைஞ்ச என்ற குரலில் எல்லாரும் கீழே எட்டி பார்க்க ... பாரிஜாதம் அருகே குட்டி உருவம் ஒன்று இடையில் கை வைத்து கொண்டு நின்றது ....
எம்மோய் இந்த ஆளை தூக்கி தோள்ல போடும்மா, இனிமே எவனாவது எனக்கு அப்பா இல்லைன்னு சொல்லட்டும் பார்க்கிறேன் .... டேய் வெண்ணை வாடா ... என்ற குழந்தை ஓடி வந்து ஜீவா காலை கட்டி கொள்ள ..
"ஏங்க யாருங்க இது ... உங்க பிள்ளைங்களா??? என்று ஜீவா பாரிஜாதத்தை புரியாது பார்க்க
"நம்ம புள்ள , நீ பெத்து விட்டதுடா வெண்ணை...
"என்னண்ணா இது புதுக் கதையா இருக்கு .. அந்த குட்டி குழந்தை பாக்குறதுக்கு அப்படியே ஜீவா போல இருக்கு என்ற பொக்கிஷா மூர்த்தி கையை சுரண்ட
"அப்பவே யோசிச்சேன் இவ இடுப்புல ஒரு பிள்ளையை தூக்கிட்டு போகும்போது, இந்த திருட்டு முழியை எங்கேயோ பார்த்திருக்கேனேன்னு இவன்தானா அந்த திருடன்....ஆனா இவன் அதுக்கு சரி பட்டு வர மாட்டானே என்று யோசித்த மூர்த்தி
"ஹாஹா மாமி நீ அடிச்ச சரக்குல பாதி எங்க போச்சுன்னு அடுத்த நாள் தேடினேன்.. பாட்டல் காலியா கிடந்தது.. அந்த மீதி மீதியா வந்து நிக்குது என்று மூர்த்தி சிரிக்க
அச்சோச்சோ!! இந்த பொண்ணு உங்க தங்கச்சி தானே என்றதும் மூர்த்தி அவளை முறைக்க..
சரி சரி ... வட்டி கொடுக்கலைன்னா ஆம்பள பொம்பளன்னு பார்க்காம கடைத்தெருவுல கிடந்து பஜாரி போல சண்டை போடும், நேத்து கூட பார்த்தேன் ... பாவம் இந்த பையன் மாட்டிண்டான்..
"ம்ம் அது அவுக வீட்டு கதை நீ உள்ள போ ....
"அய்யோ என்ன இறக்கி விடுங்க ஜீவா அலற அலற அவனை தூக்கி பாரிஜாதம் தோளில் போட்டு கொள்ள ...
"டேய் அப்பா கத்தாம வா , இல்லை கத்தியை பட்டாக்ஸ்ல சொருகிடுவேன்... ஹேய் எங்க அப்பா வந்தாச்சு எங்க அப்பா வந்தாச்சு என்று தாயின் முன்னே டவுசர் கூட அணியாது ஆடி கொண்டே ஜீவா மகன் ஓடினான் ...
பிடித்தவர்களை பிடித்து கொள்ள சற்று வன்முறை செய்யலாம் தப்பில்லை!!
குட்டி ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன், சின்ன கதைதான் ஜீவா என்ன ஆனான்னு தெரியணும்ல பய நொந்து நூடுல்ஸ் ஆகுறதை பார்க்க வேண்டாமா ?????