வன்முறை செய் தப்பில்லை 14
Van14
14 வன்முறை செய் தப்பில்லை!!
எம்மோய் , எதுக்கு இப்போ அடிக்கிற? பட்டக்ஸை தடவிக்கொண்டு தன் தாயை முறைத்தபடி நின்றான் இன்பா
உன் நம்பி அந்த மனுஷனை அனுப்புனதுக்கு உன்னால எவ்வளவு முடியுமோ செஞ்சுட்டு வந்து இருக்க இல்லடா... இளம் உடம்பு எப்படிடா அதை தாங்கும் ...
"ரோடு ரோலரையா ஏத்திட்டு வந்தேன் ... சாதாரணமா ஒரு டேட்டு போட்டா உயிர் எல்லாம் போகாது...
"உன் வாயை திறக்காத இன்பா பண்றதும் பண்ணிட்டு பேச்சை பாரு மனுஷன் வீடு வந்து சேருவாரா இல்ல இடைவெளியில விழுந்து கிடப்பாரான்னு தெரியலையே பாரிஜாதம் அங்கும் இங்கும் பதைபதைத்து அலைந்தாள்...
"வந்தா மலை போனா _யிறு இவருக்கு எல்லாம் இரண்டு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தாதான் சரியா வரும்... எப்படியும் நம்மளை தேடி வந்துருவார் போய் வேலையை பாருங்க ...
"அவருக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்
"என்ன செய்வீங்க?
"வேற என்ன செய்ய , நீ ஒரு பக்கத்தில் நான் ஒரு பக்கத்தில் உட்கார்ந்து அழத்தான் வேணும்..
"தெரியுதில்லம்மா அவர் நமக்கு வேணும்னா ஏதாவது செஞ்சு தான் ஆகணும் பதறாதீங்க அம்மா அடிச்சது வலிச்சிடுச்சாடா மகனை கொஞ்ச
"எனக்கு வலிக்கிறது போல எப்போ அடிச்சிருக்க
"பின்ன எதுக்குடா ஆ ஓன்னு சத்தம் போடுற
"சரி கஷ்டபட்டு அடிக்கிறியே உன் மனசு குளிரத்தான்...
"குட்டி கு..சான் சேட்டையை பாரு" என்று மகனோடு பேசி கொண்டு நின்றாலும் பார்வை என்னவோ நாயகனை தேடித்தான் இருந்தது...
பாலத்தின் பக்கம் ஜீவா கார் நின்றது , காரின் மீது மல்லாக்க படுத்து கிடந்தான் ஜீவா ... உடல் கொதகொத என்று காய்ந்தது .. புதிதாக காயம் கண்ட உடல் காய்ச்சலுக்கு வழி செய்தது.. அப்படியே கண்ணை மூடி கிடந்தான்..
மூடிய கண்ணில் நேற்று இரவு கண்ட காட்சிகள் சுனாமி அலையாக போல மேலே உயர்ந்தது
தூக்கம் வராது உழண்டவன் படுக்கை மீது ஏதோ கூர்மையாக குத்த லைட்டை போட்டு என்ன என்று பார்க்க அவள் அறையில் இருந்து எடுத்து வந்த பென்ட்ரைவ்..
ப்ச் இதுல என்னத்த வச்சிருக்க போறா, எவன் எவன்கிட்ட எவ்வளவு காசு வாங்கணும்னு ஏதாவது ஆதாரம் வச்சிருப்பா .... இதை வேற நான் பெரிய ஜேம்ஸ்பாண்ட் போல தூக்கிட்டு வந்து இருக்கேன்... பணத்துக்காக தன்னை ஏமாற்றுகிறாள் என்ற ஆரம்பகால குற்றசாட்டு குறைந்து குறைந்து அவ வச்சிருக்க பணமே நாலு தலைமுறைக்கு காணும் போல, அவளுக்கு எதுக்கு என் பணம் ... உண்மையாவே என்ன லவ் பண்றாளா என்ன ? யோசனையாக தாடையை தடவியன் நேரம் போகாது தன் லேப்டாப்போட் பென்ட்ரைவ்வை இணைக்க
ஒன்றும் பெரிதாக இல்லை ... அவள் வீட்டை சுற்றி சுற்றி சிசிடிவி காட்சி இருந்தது .. அதில் அவன் தெமென வருவது பாரிஜாதம் வாசற்படியில் சாய்ந்து நின்று அவனை பார்ப்பது சாப்பாடு கொடுப்பது... போகும் அவன் முதுகை ரசிப்பது..அவன் வீட்டை விட்டு போன பிறகு கள்ள சாவி கொண்டு கதவை திறந்து குப்பையாக கிடக்கும் அவன் அறையை பெருக்குவது... அவன் ஒழுங்காக துவைக்காது அழுக்காவே கொடியில் தொங்கும் ஆடைகளை மீண்டும் எடுத்து துவைத்து போடுவது குடித்து விட்டு வந்து வீட்டு வாசலில் விழும் அவனை அலேக்காக தூக்கி கொண்டு போய் படுக்க வைப்பது என்று அவனுக்கு தாதியாக இருந்தாளா தாயாக இருந்தாளா இல்லை காதலியாக இருந்தாளா தெரியாது ஆனால் இவனை சுற்றியே அவள் உலகம் இருந்ததை அவை சாட்சி சொன்னது.. பெருமூச்சு விட்டு அதை அணைக்க போனவன் ...
தூக்கம் வரும் வரை ஓடட்டும் என்று ஓடவிட்டான் தொடை தெரிய பாவாடையை மடக்கி கட்டி கிணற்றில் நீரை இறைக்கும் பாரி, சண்டைக்கு சண்டை போடும் பாரி , அவளை வம்பு இழுத்த அண்ணன் அடியாட்களை அடி விளாசி எடுத்த பாரி என்று அவள் வீரதீர சாகசம் அனைத்தும் மெல்லிய சிரிப்போடே பார்த்து கொண்டிருந்தான்...
பஜாரிதான் அதுல எந்த மாத்து கருத்தும் இல்லை... இவளை எப்படி அடக்கி பிள்ளை பெத்தேன் எப்படி விட்டா ? எப்படி யோசிச்சாலும் ஒன்னும் நியாபகம் வர மாட்டைக்கு... ஆனா ரிசல்ட் சரியா வந்து இருக்கே ரெட்டைசுழியன் அசல் என்ன போல பிறந்து மிரட்டுறானே...
அன்று இரவு வெள்ளை நிற தாவணி சிகப்பு நிற பாவாடை அணிந்து மல்லிகை மலரோடு வாசலில் நின்று கொண்டிருந்தாள்..
என்ன இந்த மனுசனை காணல, மாமி வீட்டுக்கும் காவலுக்கு போகலன்னு தகவல் வந்ததே , எங்க போயிருப்பாரு.. ஜீவா , காதில் மாட்டிய ஹெட்போனில் அவள் குரல் கேட்க...
நடு இரவு தாண்டிய பிறகும் ஜீவா வராமல் இருக்க பாரிஜாதம் வாசலிலேயே உட்கார்ந்து அவனுக்காக காத்திருந்தாள்... அவன் என்னவோ ஒரு நாள் கூட இவளை எட்டிப் பார்த்தது கிடையாது, சாப்பாடு கொடுத்தால் தடையில்லாமல் வாங்கிக் கொண்டு போய் தின்றுவிட்டு , காலையில் அந்த பாத்திரத்தை விளக்காமல் கொண்டு வந்து அவள் வீட்டு திண்ணையில் வைத்து விட்டு போய்விடுவான்... அதை தாண்டி இவள் எதற்கு நமக்கு சாப்பாடு தருகிறாள் இவளோடு பேசி பழகுவோமே என்ற எதுவுமே இல்லாமல் எருமை மாடு மேலே மலை பெய்தது போல சுற்ற அவனால் மட்டும்தான் முடியும்...
ஆண் என்ற ஒற்றை அடைமொழி கொண்டு எல்லோரும் அவளை ஒரு நாளாவது படுக்கையில் ருசித்து விட மாட்டோமா என்று அவளை சுற்றிய கண்கள் மத்தியில் , இவன் இரட்டை விழிகள் மட்டும் தான் அவளை அருவருப்பாய் பார்க்காத விழிகள் அதனாலேயே அவன் மீது நிரம்ப ஆசை அதுவே காதலாகி அவனுக்காக காத்திருக்க... காத்திருக்க சளிப்பு காதலும் கூடிய போனது... பொக்கிஷாவை காப்பாத்த நினைத்து அவளை பஸ்ஸ்டாண்ட் வர சொன்னவன் அங்கே மூர்த்தியை பார்த்து உயிர் போய்விட, நடுங்கி போனவன் காரில் இருந்த மீதி நீரை கடக்முடக் என்று குடித்து விட்டவன்
மூர்த்தி அண்ணனுக்கு உண்மை தெரிஞ்சது செத்தோம் ஊரை விட்டு ஓடிர வேண்டியதுதான் என்று காரை விட்டுவிட்டு தன் பொருட்களை எடுக்க வீட்டை நோக்கி வந்தவன் கண் எல்லாம் சதிராட...
ப்ச் என்று கண்ணை கசக்கினான்....
பசிக்குதோ, இளமை பசியை வயிற்றுப்பசி என்று நினைத்தவன் ..
"பாரி சோறு வச்சிருக்கும் தின்னுட்டு , இத்தனை நாள் நமக்கு சோறு தந்தததுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு ஓடிருவோம்.. பசி என்றதும் அவள் நியாபகம் வந்து அவளை தேடித்தான் ஓடினான்...
நேரம் ஆக ஆக மண்டை கீர் என்றது ... கண்ணை சுழட்டியது.. எப்படியோ வந்து வீட்டு வாசலில் பொத்தென்று விழ ... அவனுக்காக காத்திருந்த பாரிஜாதம் கண்ணில் அவன் பட்டுவிட
"இன்னைக்கும் போதையா? பாலுக்கு பதிலா குவாட்டரை குடிச்சே வளர்ந்து இருப்பார் போல ராத்திரி ஆனா பாதி நாள் போதையில வர வேண்டியது ... என்று அலுத்து கொண்டு அவன் அருகே போனாள் ..பல நாள் போதையில் கிடப்பவனை இவள்தான் தூக்கி கொண்டு வந்து அறையில் போடுவாள், அவனை அப்போது தூக்கி தூக்கி பழகியதுதான்...
"பெரிய ரவுசா போச்சுய்யா உன்னோட இன்னைக்கும் சரக்கா? "
"ம்ம்
"சாப்பிட்டியாய்யா.."
"ம்ஹூம் அதான் உன்னை தேடி வந்தேன்
"ம்க்கும் இதுக்கு மட்டும் நானா, வா சாப்பாடு போடுறேன் தின்னுட்டு தூங்கு" அவனை குண்டுகட்டாக தூக்கி தன் தோளில் போட்டு கொண்டு போய் தன் திண்ணையில் உட்கார வைத்தவள் அவனை தூக்கியதால் கலைந்த தாவணியை சரிசெய்து கொண்டு நின்றாள்...
"தடிமாடு மாதிரி வளர்ந்து இருக்கியே தவிர புத்தியே இல்லைய்யா.. அந்த மூர்த்தி பயலுக்கு நீ யாருன்னு தெரியாமலா இருக்கும் ... எனக்கே உன் ஆணிவேர் தெரியும்னா அவனுக்கு எனக்கு முன்னவே தெரிஞ்சு இருக்கும் ... என்னவோ உன்ன நம்பி அவன் சின்னவீட்டுக்கு காவல் வச்சிருக்கான்... எப்போ மாட்டிக்கிட்டு சாவ போறியோ... உன் மேல கை வச்சிருவானா என்ன? இல்லை நான்தான் விட்டிருவேனா, அண்ணனா இருந்தாலும் உன் மேல தூசி பட்டிச்சு யாரா இருந்தாலும் பார்க்க மாட்டேன்... "சாப்பாடு போட்டு பிசைந்து அவன் கையில் கொடுக்க ... அவன் பார்வையோ தாவணி தாண்டி தளிர்த்து நின்ற அவள் ரெட்டை மாவினத்தில்.
அடிங்க என்னய்யா பார்வை இது, ஒருநாள் இல்லாத திருநாளா அஙகன பார்த்துட்டு இருக்க... சாப்பிட்டு போய் தூங்கு... ஆளையும் பார்வையும் பார் அவனுக கூட போய் கெட்டு போய்வந்த கத்தரிக்க வேண்டியதை கத்திரிச்சு விட்டிருவேன் ஜாக்கிரதை ... பிறகு இட்லி வித்அவுட் சட்னிலதான் சுத்த வேண்டி இருக்கும் என்று பாரிஜாதம் தன் தாவணியை இழுத்து சரி செய்து கொண்டு வீட்டுக்குள் போய் கதவை அடைக்க போக... அவன் கால்கள் கதவை அடைக்க விடாது தடுத்து நிறுத்தி இருந்தது... கண்கள் சிவந்து அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவனை கண்டு திக்கென்றது
ப்ச் என்ன வேணும்?
பாரிஇஇஇ பசிச்சதா அதான் உன்னை தேடி வந்தேன் ...
"அதான் சோறு வச்சிருக்கேனே தின்னு
"வயித்துக்கு கீழ பசிச்ச மாதிரி இருக்கு "
"கீழயா அப்படின்னா ???
"இங்க என்று தன் பேண்டின் மீது அவன் கைகள் அழுத்தி காட்ட
"________ என்ன பார்த்தா உனக்கு வேசி போல இருக்கா .... இந்த பழக்கம் எல்லாம் எப்போய்யா பழகின, நீ அப்படி கிடையாதே... யோவ் என்ன ஆச்சு ? ஜீவா சுருண்டு திண்ணையில் விழுந்தான்....
"மச்சான் மச்சான் பயந்து போய் பாரிஜாதம் ஜீவா அருகே ஓடி வந்தாள் .... அச்சச்சோ உடம்பு எல்லாம் தீயா கொதிக்கிதே என்னத்தய்யா குடிச்சிட்டு வந்த ... அவன் கால் கையை பரபரவென தேய்த்து விட்டு பார்த்தவள்...தலை தொங்கி கிடந்த அவன் தலையை தூக்கி தன் மடியில் போட்டு கொண்டவள்
"மச்சான் கண்ணை திற ... எனக்கு பயமா இருக்கு .... மச்சான் என்று அவன் நெஞ்சில் காது வைத்து கேட்டவள் அவன் செய்த செயலில் பதறி போனாள்...
ஸ்ஆஆஆஆஆ இது கொடேன் இதுதான் வேணும் அவன் உதடு குனிந்து கிடந்த அவள் ரெட்டை ஜாதிக்காய் அழகை கவ்வ இடம் தேட
"சீசீ என்ன மனுசன் நீ .... விடு அவளை விடாது ஆக்டோபஸ் போல வளைத்து பிடித்தவன்...
"உடம்பு எல்லாம் கிடுகிடுக்குது.... இங்க எல்லாம் சூடு தாங்கல.. என்னவோ பண்ணுது, நான் செத்து போவேன் போல பயமா இருக்கு .."
என்ன கருமத்தைய்யா தின்னுட்டு வந்த முதல்ல விடு ஹாஸ்பிட்டல் போவோம், ஒன்னும் ஆகாது " திமிறி அவனை விட்டு எழும்ப பார்க்க, ஜீவா சட்டென அவளை தூக்கி திண்ணையில் போட்டு அவள் மீது படர
"கிறுக்கா விடு.... என்ன வேலை பார்த்துட்டு இருக்க ... அவன் வலிமை அவள் மட்டுமே அறிவாள் அவனை விட்டு விலக முடியாது இரும்பாக அணை போட்டு படுத்திருந்தான்..
ப்ளீஸ் ப்ளீஸ் பாரி எல்லாத்தையும் கழட்டு ... நீயும் நானும் லவ்மேக் பண்ணலாம்... பரபரவென அவன் கைகள் அவள் தாவணியை பிடித்து உருவ ...
"ஆஆஆஆஆ விடு விடு என்று அவனை எட்டி உதைக்க போனவள் கால்களை தன் கால்கள் கொண்டு கிடுக்கிப்பிடி போட்டவன்...
"பாரி ப்ளீஸ் ஒரே ஒரு தடவை ரொம்ப முடியல முட்டி நின்ற முயல்களில் முகம் புதைத்தான்.
"உனக்கு பொண்ணு உடம்பு தான் வேணும்னா தயவுசெஞ்சு எங்கனையாவது போயிட்டு வா, என்ன உடம்புக்கு தொட்டு அசிங்க படுத்தாத.... விடு .. என்று பிடித்து தள்ள பார்த்தாள் ...
"உடம்பு கொடுத்து உன்ன மயக்க நினைச்சிருந்தா எப்பவோ உன்ன போல நாலு பிள்ளையை பெத்து இருப்பேன்யா... என் மனசு எப்போய்யா உனக்கு புரியும் அசிங்கம் பண்ணாத விடு ..ஆஆஆஆஆஆ ...
"நீ மட்டும் தரலைன்னா ராத்திரியே செத்தாலும் செத்துருவேன் போல ....
"யோவ் நான் உன்ன காதலிக்கிறேன்... நீ கேட்கிறது வேற ... கிறுக்கனுக்கு நாம பேசுறது என்னைக்கு புரிஞ்சு இருக்கு இப்ப புரிய .. மண்டையில் அடித்து கொண்டவள்...
நீ என்ன லவ் பண்ணுறியா ????
"ம்ம் ரொம்ப ரொம்ப.... உன்ன எனக்கு அம்புட்டும் பிடிக்கும்யா... எப்பவாவது என்ன திரும்பி பார்க்க மாட்டியான்னு காத்து கிடக்கேன் நீ என்னன்னா இப்படி ஒரு வேலையை பார்க்க பார்க்கிற விடு" ..
லவ் பண்றல்ல, அப்போ இது தப்பில்லை வா" கொக்குக்கு மதி ஒன்றே என்பது போல பெண் உடலில் ஒன்றும் தெரியாது உருட்டினான்.. சுயமதியோடு அவன் இல்லை என்று புரிந்தது.. கஞ்சா செடி வளர்த்த தாயை கண்டவள் ஆயிற்றே அவன் வேறு போதையில் தன்னை தேடுகிறான் என்று புரிந்து போனது
"அய்யோ விடு.... எதை நம்பி என்ன தர சொல்ற குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு.. காலையில எழும்பி என்ன குற்றம் சுமத்தவா? "
"சத்தியமா உன்ன கைவிட மாட்டேன்டி என்ன நம்பு ...
ஹான் ...
உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்...
இதை வேற எவளாவது ஏமாந்தவா இருப்பா அவகிட்ட போய் சொல்லு... போ தள்ளி
ப்ச் என்ன செஞ்சா நம்புவ... சத்தியம் பண்ணவா
"இந்த சோலி எல்லாம் ஆகாது ... நான் வேணும்னா முறைப்படி தாலி கட்டு .... அப்பறம் என் மேல கை வை , இல்லை இப்படியே ஓடி போயிடு" என்றவள் எப்போதும் தன் இடையில் உள்ள பணப்பையில் வைத்திருந்த தாலியை தன் மீது கிடந்த ஜீவா முன் நீட்ட... ரெண்டு நொடி கூட தாமதிக்காது அவள் கழுத்தில் தாலியை கட்டி பத்து முடிச்சை அல்லவா போட்டு வைத்திருந்தான்...
இந்த திருமணம் செல்லுமா தெரியாது ஆனால் மரபு இல்லாத மஞ்சத்து விளையாட்டுக்கு தன்னை கொடுக்க அவளுக்கு ஒரு துளி விருப்பம் இல்லை ...
இப்ப எடுத்துக்கவா பாரி? ம்ம் என்றவளை கொத்தாக தூக்கி கொண்டு அவள் வீட்டுக்குள் நுழைந்தான்.. விடியலில் லம்பி கொண்டே வந்து தன் வீட்டில் படுத்தவன் சிறுது நேரத்தில் பெட்டி படுக்கையை தூக்கி கொண்டு கிளம்பியது வரை வெளியே இருந்த சிசிடிவி கேமராவில் அத்தனையும் பதிவாகி இருக்க, அதை கண்ட ஜீவா அப்படியே தலையை பிடித்தான்...
அவள் தாய் மட்டும் அல்ல , அவன் மனைவி !! தெரிந்து கட்டினானோ தெரியாது கட்டினானோ தன் கையால் அவள் கழுத்தில் தாலியை கட்டி விட்டான் .. ஒரு பெண்ணிடம் அத்துமீறி தவறு செய்து விட்டேனா என்ற உறுத்தலும் அவள் காரணமா நான் காரணமா என்று குழப்பமும் ஒற்றை வீடியோவில் தீர்வுக்கு வந்து விட்டது
அறம் இல்லாத குடும்பத்தில் பிறந்து காதலனே ஆனாலும் அறம் மீற மாட்டேன் என்றாளே அவளை விட உத்தமி யார் இருக்க கூடும்? ....
தாலி கட்டிய புனித பந்தத்துக்கு புனிதமாக இல்லாத சிந்தாமணி மகளாக பிறந்ததால்,,அவள் கழுத்தில் கிடந்த தாலிக்கும் அவள் வயிற்றில் பிறந்த பிள்ளைக்கும் மதிப்பு இல்லாது போனது !! அவன் கட்டிய தாலியை விட அவள் புனிதமானவள்!! இவள் கிடைக்க அவன்தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ....
உலகம்தான் அவள் காதலை பரிகாசம் செய்தது ஆனால் அவன் வார்த்தைக்காக அவனை நம்பி அவளையே, கொடுத்தவளுக்கு அவன் கொடுத்த மிகப்பெரிய காதல் பரிசு ஏமாற்றம்தான்!!
காதலின் வலியை விட, ஏமாற்றத்தின் வலி ஒன்றும் பெரிதானது இல்லை போலும்!! இன்னும் அவன் காதலுக்காக காத்திருக்கும் அவளுக்கு அவன் என்ன கைமாறு செய்ய போகிறான்....