களம் கண்ட அன்றில்

kalam

களம் கண்ட அன்றில்

களம் கண்ட அன்றில்!!

டீசர்

நாளை இரவு ஏழு மணி முதல் ஆரம்பம் ஆகும் 

இந்த கதையில் வரும் சம்பவங்கள் , கதாபாத்திரம் அத்தனையும் கற்பனை மட்டுமே !!

1947 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 

விடியலில் தைத்திரு நாள் தமிழ்நாடே அந்த களை இன்றி இருளில் மூழ்கி கிடந்தது.. 

பிரிட்டிஷ் ராணுவத்தின் சித்திரவதையின் நாடு முழுக்க இரத்த வாடையும் கொத்தடிமை காற்றும் விடியல் நமக்கு சொந்தமா இல்லையா என்று தெரியாது சுதந்திரம் இல்லாத தன்மையும் , வீட்டை விட்டே வெளியே போக முடியாத அவலங்களும்  பயமும்,  நாட்டிற்காக வெளியே சென்ற தன் விடலை பருவ மகன்கள் பிணமாக வீட்டிற்கு வந்த துர்ச் செய்திகளும்..

எப்போது என் நாட்டிற்கு சுதந்திரம் என ஏக்கங்ளோடு காத்திருக்கும் கண்களும் எங்கு பார்த்தாலும் பீரங்கி சத்தமும் , போர் முழக்கமும் பிரிட்டிஷ் காலடித்தடங்களும்,  அவர்களின் பூட்ஸ் சத்தம் பெண்கள் ஆண்களின் அலறல் சத்தமும் குழந்தைகளில் பசி  அகோரமும் என்று தமிழ்நாடு அகதியாக தன் நாட்டிற்குள் அடங்கி கிடந்த நேரமது!!

தமிழ்நாட்டின் பூஞ்சோலை கிராமம் (கற்பனை)

குக்கிராமம் தீப்பந்த வெளிச்சத்தில் அந்த கிராமம் நட்சத்திர போல மின்னியது ... 

தை மாதத்தில் வயல் நிலங்கள் அத்தனையும் பூட்ஸ் காலடிகளால் மிதிபட்டு பயிர் நிலங்கள் அத்தனையும் தலை சாய்ந்து அவர்கள் மனம் போலவே வாடி வதங்கி போய் கிடந்தது..

கீச் கீச் என்று பூச்சிகளின் ரீங்காரம்,  அந்த இருட்டை இன்னும் பயமுறுத்திக் கொண்டிருந்தது .. குதிரை வண்டிகளில் தடைங்கள் , எங்கோ கேட்ட குதிரை குழம்பின் சத்தித்த்தில் வரிசையாக கூரையாக இருந்த வீடுகளில் உள்ளே உள்ளவர்கள் அப்படியே இருட்டு நோக்கி தன் குழந்தைகளை இழுத்துக் கொண்டு போய் பதுங்கி அமர்ந்து கொண்டு காதுகளை கூர்த்திட்டினர் ,

பதுங்கி இருந்த இடத்தில் ஒரு குழந்தை பசிக்காக வீல் என்று அழ , அந்த தாயோ குழந்தையின் உதடுகளை தன் கை வைத்து இறுக்கமாய் மூடிக்கொண்டது , அதுவோ  மூச்சு திணறி பசியிலும் தன் தாயே தன்னை வாயை மூடவும் அழ கூட முடியாமல் அப்படியே சோர்ந்து போய் தன் தாய் மடியிலேயே தலை சாய்ந்தது..

ஏன் இந்த அவலம் ஏன் இந்த அகோரம் என் நாட்டிற்கு இந்ந இழி நிலை 

வருந்தாத நாள் இல்லை,  வந்தவனை எல்லாம் வரவேற்ற என் நாட்டிற்கா இந்நிலமை எவனோ ஒருவன் நம்மை  எல்லாம் ஆட்டி படைக்கிறானே?  என்று சீற்றம் ஒவ்வொருவர் மனதிலும் இருந்தாலும்  யார் முதலடி  எடுத்து வைக்க ? எல்லா இடங்களிலும் அஹிம்சையாக சிலர் ,  போராளியாக பலர்  மக்கள் போராடிக் கொண்டிருந்தார்கள்,  ஆனால் இருந்து என்ன பயன்? 

குதிரை காலடி சத்தம் தேய்ந்து போனது அனைவரும் மெல்ல குடிசை விட்டு தலையை வெளியே நீட்ட .. ஆள் அரவம் இல்லாது இருக்க 

யாரும் இல்ல துணிஞ்சு வாங்க என்ற குரலில் அனைவரும் இயல்பாக வெளியே வர .... மரத்துக்கு பின்னே இருந்து சீறி வந்தது குதிரை வண்டி .. மக்கள் சிதறிட இரக்கம் இல்லாத இராணுவ  அதிகாரி ஒருவன் கையில் வைத்திருந்த துப்பாக்கி வைத்து சிதறிய ஆண்களின் கால்களை நோக்கி சுக பொத் பொத் என்று கொத்து கொத்தாக அக்கயவன் காலில் மக்கள் விழுந்தனர் ... குதிரை வண்டியை விட்டு நெட்ட நெடு உயரத்தில் வெள்ளை நிறத்தில்  தன் பூட்ஸ் காலை தமிழ்நாட்டு மண்ணில் அவன் இடம் போல வெகு விஸ்தாரமாக நீட்டி வைத்தவன்  பார்வையில் ஊரே நடு நடுங்கி போனது... 

தமிழ்நாட்டை ரட்சிக்க ஒருவன் வீறு கொண்டு வருவான் என அனைவரும் காத்திருக்க? 

வந்ததோ வந்ததோ அவர்கள் பிராணன் எடுக்க வந்த வெள்ளைக்கார எமன் அல்லவா?  

மார்க் ஹிட்லர் வயது 27 

ஹிட்லர் என பெயர் வைத்ததினால் அவர் குணம் வந்ததுவா இல்ல இவன் பிறவி குணமே இதுவோ தெரியாது ஆனால் ரத்த காட்டில் புரள கொஞ்சமும் சளைக்காதவன் 

பிரிட்டிஷ்  காவல்துறை உயர் அதிகாரி,  அவனே இவர்கள் இருக்கும் இடம் நோக்கி வந்தால்  ஊரை சுடுகாடாக மாறாது போக போட்டான் இரக்கம் அற்றவன் தன்,நாட்டுக்கு விசுவாசி தமிழ்நாட்டுக்கு அகோரி ஆண் பெண் குழந்தை பேதம் இன்றி அடித்து தின்னும் நர மாமிச பட்சி  அவன் ... 

யூ ப்ளடி ____  எங்களுக்கு எதிராக போராட்டம் பண்ண,  உங்க ஊர்ல இருந்து அத்தனை ஆம்பளையையும்  சத்தமில்லாம அனுப்பி விட்டா எங்களுக்கு தெரியாதா?  என்றவன் கொஞ்சி, பாதி  கொன்று வந்த தமிழ் வார்த்தையில் அனைவரும் எச்சில் விழுங்கினார்கள் .. வெள்ளையன் இங்கிருந்து பொன் பொருளை மட்டுமா கொள்ளை இட வந்தான் அழகிய தமிழையும் அல்லவா கொன்று தங்கிலிஸ் என்ற விஷக்கிருமியை விதைத்து தமிழையும் அன்றோ மரணிக்க வைத்து விட்டான் அவன் நாவில் தமிழ் மெல்ல செத்தது... 

அம்மா ராட்சசன் எப்படி இருப்பான் என்று குழந்தைகள் கேட்டால் இப்படித்தான் இருப்பான் என  இந்த வெள்ளைக்கார துரையை தான் காட்டுவார்கள்... அவன் பூனை கண்களும் சிவந்த நிறமும் , செம்பட்டை முடியும் போட்டிருக்கும் பிரிட்டிஷ் காவல் உடையும் அடேடே!!  கம்பீரம் தான் ஆனால் அதை ரசிக்க இங்கு உள்ளவர்களுக்கு முடியாதே ..

எங்க அந்த கொம்பனை?  ஊரை திரட்டி கொண்டு போனா விட்டுருவோமோ எல்லாரும் போய் ஒவ்வொரு வீடா அந்த கள்ள நாயை தேடுங்க,  அவன் கிடைக்கல அத்தனை குழந்தைகளையும் தூக்கிட்டு போய் நம்ம தனி சிறையில போடுங்க என்றவன் தன் பின்னால் வந்த சிப்பாய்களுக்கு,    கண்களை காட்ட அவனுக்கு பிரத்தியேக இருக்கை வந்தது.அதில் தோரணையாக கால் மேல் கால் போட்டு அமர்ந்தான் ..

சார் அவனை எங்கேயும் இல்லை  ..

ஓஓஓ அவன் வீட்டு ஆட்கள் எல்லாரையும் இழுத்துட்டு வாங்க 

ஓகே சார் என்று காவலர்கள்  கொம்பன் சுதந்தர போராட்டத்தில் துடுக்காக ஈடுபடும் வீரன் அவன் தலைமையில் ஒரு பெரிய படை உருவாகி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் கொடி தூக்கி பேராட்டத்தில் இன்னும் தீவிரமாக இறங்க அதை அறிந்து தான் அவனை கொல்ல இந்த தேடுதல் வேட்டை ... 

வீடுகளில் உள்ள அத்தனை பேரையும் இழுத்து கொண்டு வந்து மார்க் காலடியில் போட வயதான கொம்பன் தாயும் தகப்பனும் அவன் தம்பிகளும் பாவமாக உயிர் பயத்தில் நடுங்கினர்... மார்க் கண்களை சுழட்டியவன் 

இவ்வளவு தானா இவன் வீட்டில

இல்லை சார் ஒரு தங்கச்சி இருக்கு போல 

எங்க அதை 

அய்யோ எசமான் என் பொண்ண விட்டிருங்க போன வாரம்தான் சமைஞ்சா..மார்க் காலை கொம்பன் தாய் பிடித்து கொள்ள .. 

வாட் ? சமைஞ்சா என தமிழை மொழிபெயர்க்கும் அதிகாரி நோக்கி மார்க் தலையை திருப்பிட..

சார் எஜ் அட்டன் பண்ணி இருக்காம்

அப்போ அதை தூக்கிட்டு வா,  போனவன் வருவான் , ஒரு  பெண்ணை ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்த குடிசையில் இருந்து இழுத்து கொண்டு வர ..

இருட்டின் நிழலோவியமாக வந்து நின்ற அப்பெண்ணை மார்க் தன் கையில் வைத்திருந்த குட்டி விளக்கை பயன்படுத்தி பார்த்தான் ...

வண்டி மை தீட்டிய கருப்பு கருவண்டு விழிகள், சிவப்பு நிற  கப் ரவுக்கை , கட்டம் போட்ட சேலை மூக்கில் மூன்று முத்து வைத்த தங்க மூக்குத்தி , நீள ஜடை , திராவிட அழகில் பெண்ணவள் பயந்து போன் தன் குடும்பம் அருகே ஓட நினைக்க மார்க் கையிலிருந்து வந்த குண்டு அவள் காலை உரசி செல்ல 

ஆஆஆஆஆஆஆஆ என்று பயத்தில் காதை பொத்தி கொண்டு அலற ... 

அவளை இழுத்துட்டு வாங்க என்றதும்  அப்பெண்ணை இழுத்து கொண்டு வந்து மார்க் முன்னே நிறுத்த அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான்... 

வாட் இஸ் யுவர் நேம் ? 

ஹான் கண்களை அழுகையோடு அறியாது விழித்தாள்..

பெயர் என்ன ?ஹான் அவன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை பீதியாக பார்த்து கொண்டே பெண் வாயை திறந்தாள் 

க....ண்.....ண....ம்...மா  

வாட் ? 

கண்ணம்மா

ஏஜ் ?

ஹான் 

எசமான் வயசு கேட்கிறார்? ஒருவன் எடுத்து கொடுக்க 

18 

இவளை தூக்கி கொண்டு போய் நம்ம ராணுவ டென்ட்ல போடுங்க ...என்று விட்டு மார்க் குதிரை வண்டியில் ஏறி விட்டான் ..

அய்யா எசமான் எசமான் என்று அவன் பறந்த குதிரை பின்னே கொம்பன் குடும்பம் ஓட 

உன் மகன வந்து என் கால்ல விழல,  உன் பொண்ணு பொணம்  ஊர் நடுவுல விழும், அதுவும் எப்படின்னு சொல்ல தேவையில்லை,  ஏற்கனவே பலது பார்த்திருப்பிங்களே,   உயிரும் மானமும் வேணும்னா உன் மகனை வந்து என் முன்னால நிற்க சொல்லு மைண்ட் இட் "என்றவன் குதிரை  ஊரை அலற விட்டுவிட்டு போக .... 

கண்ணம்மா வெள்ளைக்காரனால் சிறை எடுத்து செல்ல பட்டாள்...

அந்நிய களத்தில் அன்றில்!!

போராட கூட நினைக்க முடியாத இடத்தில் எங்கனம் தன்னையும் மானத்தையும் காக்க போகிறாள்... 

அனைத்து கண்ணமாக்களும் பாரதிக்கு மட்டும் படைக்க படவில்லை போலும், சில மார்க்குக்கும் படைக்கப்பட்டு விட்டார்கள் போல 

இனி இந்த கண்ணம்மா மார்க்கின் கண்ணம்மா !!