நெய்தல் நீலாம்பல்

neithal

நெய்தல் நீலாம்பல் !!

டீசர் 

திங்கள் இரவு ஏழு மணி முதல் வரும்  (சைட் நோட்டிபிகேசன் வருதா பாருங்க வரலேன்னா லாகவுட் ஆகிட்டு மறுபடி லாகின் பண்ணிக்கோங்க.. )

ஏர்போர்ட் வாசலில் தன் பெட்டியை உருட்டிக் கொண்டு வெளியே வந்தான் கரண்..  அவன் இந்திய மண்ணில் கால் வைக்கவும் அவனை சுற்றி போலீசார் வளைத்துக் கொண்டனர்.

என்னாச்சு ?

"சார் நீங்க ஒரு பொண்ண ஏமாத்தினதா கம்பளைண்ட் பண்ணீயிருக்காங்க.. சோ,  யூ ஆர் அண்டர் அரெஸ்ட் "என அவன் முன்னால் விலங்கு நீட்டப்பட..

"ஹோ, " அந்த விலங்கையும் போலீஸ் பெயரையும் பார்த்த கரண் போனை எடுத்து காதில் வைத்தான் சத்தமே வராமல் ஏதோ போன் பேசினான்..  போனை விலங்கை நீட்டிய காவலர் நோக்கி பேசு எனும் விதமாய் கொடுக்க , காதில் போனை வைத்தவர் வெட வெடத்துப் போனார்..

"சார் , அந்த பொண்ணுதான்.."

"ப்ச் ஸ்டாப் நான்சென்ஸ்,  எவளாவது பணம் பறிக்கிறதுக்காக என் மேல கம்ப்ளைன்ட் கொடுப்பா, கொடுத்தா உடனே நீயும் விலங்கத் தூக்கிட்டு வந்துருவியா,  கம்ப்ளைன்ட் கொடுத்தது யாரு? என்றான் கரண் புருவத்தை உயர்த்தி, 

"நவீனா சீனிவாசன் !!"

இந்த மாதிரி பேரையே நான் கேள்விப்பட்டது கிடையாது,  அண்ட் என் மேல கம்ப்ளைன்ட் வந்திருந்தா அதுக்கான ஆதாரம்,  நான்தான் செஞ்சேன் அப்படிங்கிறதுக்கு எவிடன்ஸ் இல்லாம இப்படி இத்தனை பேரும் வந்து நீங்கன்னா ,  பொய் உண்மையாகிடுமா இல்ல நான்தான் பயந்துடுவேனா ஹான் "

இல்ல சார் ஆதாரம் இருக்கு 

என்ன ஆதாரம் ??"கரண் கம்பெனியில் நவீனா  வேலையில் இருந்தது , அங்கிருந்து இந்தியா வந்தது என சில செல்லுபடியாகாத ஆவணம் இருந்தது ..

"வாட் ரப்பீஸ் யூ ஆர்  , இது ஆதாரமா மேன் ...  அவ என் கம்பெனியில வேலை பார்த்து இருக்கா,  அங்க லட்சக்கணக்கான பேர் வேலை பாக்குறாங்க,  அதுல இந்த நவீனா யாருன்னு கூட நான் பார்த்தது கிடையாது , அண்ட் ஒன் மோர் இன்பர்மேஷன் பார் யூ .. நான் ஒரு மாசமா அமெரிக்காவில் இல்ல என்னோட சுவிட்சர்லாந்து பிராஞ்சுல இருந்திருக்கேன்,  அதுக்கான எவிடன்ஸ் இதோ என்று அவன் சுவிட்சர்லாந்தில் ஒரு மாதமாக இருந்ததற்கான எவிடன்ஸை தூக்கி போலீசார் முன்னால் போட , அவன் சட்டையை கொத்தாக ஒரு பெண்ணின் கை இழுத்தது...  கரண் திரும்பி பார்க்க..

நவீனா  ஆத்திரம் நிறைந்த கண்களோடு அவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் , 

"கை எடுடி" எனறான் பல்லை கடித்த படி

"நீ என்ன  பேசுறன்னு நானும் கேட்டுக்கிட்டே தான் இருந்தேன் , என்ன உனக்கு தெரியாது?அவள் ஆத்திரமாக அவனை ஏறிட

ப்ச் தெரியாது 

"என் கூட நீ பழகல"

"பழகல

"என்ன ஏமாத்தல?

"ஏமாத்தல 

"சீட்டர் சீட்டர், லய்யர் லய்யர்,  "நவீனா நடு ரோடு என்றும் பார்க்காமல் தன்னுடைய மனவெதுமை தாங்காமல் கத்த ,  தன் மேலிருந்த அவள் கையை உதறி விட்ட கரண் , தன் சட்டையில் ஒட்டி இருந்த அவள் கைப்பட்ட அழுக்கை உதறிக் கொண்டே

 அப்போ , நீதான் பொய்யா என் மேல புகார் கொடுத்ததோ! நல்லா கிளம்பி இருக்கீங்க பணம் சம்பாதிக்க,  சும்மா சொல்ல கூடாது சபாஷ் நடிப்பு என உதட்டை வளைத்த கரணை பார்த்து அவள் ஆத்திரம் தீராது அடிப்பதற்கு கை ஓங்க,  அவள் மணிக்கட்டை வலிக்க பிடித்த கரண்..

"தட் இஸ் யுவர் லிமிட் , கைய நீட்டுற வேலையை வச்சுக்கிட்ட முறிச்சிடுவேன்,  கம்ப்ளைன்ட் கொடுத்தல்ல போயிட்டே இரு,  அந்த தப்பை நான் செஞ்சனா இல்லையான்னு , ப்ரூவ் பண்ண வேண்டியது என்னோட வேலை,  அதை நான் பார்த்துக்கிறேன்

"என்னடா திமிரா, 

"ஆமாடி  , போர்ஜரி பண்ற உனக்கு இவ்வளவு இருந்தா எனக்கு இருக்காது,

"தூஊஊஊ , பண்றது எல்லாம் பண்ணிட்டு எதுவுமே பண்ணாதது மாதிரி தெனாவட்டா நிக்கிறியா,  நல்லா கேட்டுக்கோ,  உன்னோட திமிர எல்லாம் அடக்கல என் பேரு நவீனா சீனிவாசன் இல்ல.."

"சரிதான் போடி,  நீ தலைகீழா இல்ல, தவண்டு தவண்டு தண்ணி குடிச்சாலும் , எதுவும் இங்க மாத்த  முடியாது...எல்லாத்துக்கும் தயாராதான் நான் வந்திருக்கேன்,  முடிஞ்சது புடுங்கு போ ...கரண் காரில் ஏற போக , 

"மிஸ்டர் கந்தசாமி என்ற கரண் தேவா "என்றதும் அவன் கூர்ந்து பார்க்க, நவீனா உதட்டை சுளித்த படி 

"நீ மறைச்சு வச்சிருக்க பேர் மட்டும் இல்ல , உன் மறைஞ்சு போன வாழ்க்கையையும்,  நார் நாரா கிழிக்க போறேன்டா..  பார்த்துட்டே இரு உன் மானம் என் கையில , பொண்ணுதானேன்னு நினைச்சு விளையாடுறியா,  உன்ன விட மாட்டேன்டா எங்க போனாலும் விட மாட்டேன்" என்றாள் வழிய துடித்த கண்ணீரை இழுத்து பிடித்து கொண்டு ..

"வெயிட்டிங் முடிஞ்சதை செய் "என்று 

அவளை பார்த்து நாக்கை நீட்டி கண்ணடித்த கரண் ஸ்டைலாக போனை பேசிக்கொண்டே காரில் ஏற போக..  அவனை வயித்தெரிச்சல் தாங்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்

நவீனா சீனிவாசன் !!

நெய்தல் நிலமாக அவளை சுற்றி கடற்காற்றும் உப்பு நீரும் மட்டுமே நன்னீர் அவள் தாகம் தீர்க்க கிடைக்குமா?காத்திருப்போம் !!!