வன்முறை செய் தப்பில்லை 8

Van8

வன்முறை செய் தப்பில்லை 8

8 வன்முறை செய் தப்பில்லை !!

கூலர்ஸ் மாட்டி கொண்டு பள்ளி உள்ளே நுழைந்த ஜீவா தோற்றம் கண்டு தானாக அவனுக்கு வணக்கம் வைக்க.. அழகாக பதிலுக்கு புன்னகை கொடுத்தவன் அவனே விண்ணப்ப படிவம் வாங்கி பூர்த்தி செய்ய ... 

"நான் ஒரு தடவை சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கிறேன்யா கொடு என்று பாரிஜாதம் கையை நீட்ட 

"மழைக்காவது பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கி இருக்கியா ? ஏதோ வட்டி பிரிச்சு கணக்கு வழக்கு பார்க்கிற மத்தபடி ஸ்கூலுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம் ... 

"பெயர் சொல்லு நானே பில்அப் பண்றேன் 

"என்கிட்ட பேச மட்டும் மண்டையனுக்கு காது வரை வாய் வரும்...." கவனிக்க தான் செய்தாள் இவள் அருகே போனாலும் அவன் விலகி விலகி மகன் அருகே போய் நின்றான் .. அழகு அதரம் பூசிய உதட்டில் காஜல் தடவிய கண்ணில், அலங்கார ஆடையில் , மெல்லினமாக பேசும் பெண்ணே அழகு என அவன் நினைத்து விட்டான்.. இவள் ரகட் பேச்சும் நேர்கொண்ட பார்வையும் மருதாணி கையும், சலங்கை கொலுசும், நிமிர்வும் அவனுக்கு ஒவ்வவில்லை போல 

தாயின் பெயர் ..

பேர் சொல்லு எழுத குனிந்து நின்றான்...

பாரிஜாதம் 

"ம்ம் படிப்புல நாலு போடணுமா ஐஞ்சு போடணுமா இல்ல அதுவும் போகலையா?

"டபுள் எம்ஏ, எம்பில் "என்றவளை சட்டென நிமிர்ந்து பார்த்தான் ..

"இப்ப சைக்காலஜி ஆன்கோயிங் போயிட்டு இருக்கு அடுத்த வருசம் முடிஞ்சுடும்... படிச்சா போதாது உலகம் தெரியணும் , எனக்கு உலகத்தை பத்தி நல்லாவே தெரியும், அய்யாவுக்கு எப்படி ?" புருவத்தை வளைத்து கேட்க .. அவன் பதில் சொல்லாது உள்ளே நுழைந்து விட ...

"மிஸ்ஸூக்கு குட் மார்னிங் சொல்லு ... என்று ஜீவா மகனிடம் கிசுகிசுக்க...

"எப்பா சின்ன புள்ளை போல ட்ரீட் பண்ணாத ... 

 "டேய் உன் அம்மை உன்ன பெரியாள் போல பேச பழக்கிட்டா, நீ சின்னபையன் தான் ஒழுங்கா குட்மார்னிங் சொல்லு 

"ப்ச் குட்மார்னிங் என்று உதட்டை பிதுக்கி சொன்னான்... தாயின் வளர்ப்பில் தவறிய மரியாதையை தகப்பன் கற்று கொடுக்க கற்று கொள்ள ஆரம்பித்தான்..சில கேள்விகள் இன்பாவிடம் ஆசிரியர் கேட்க , ஜீவாவுக்கே புருவம் உயர்ந்தது அவன் டான் டான் பதிலில் .., தமிழ் முதல் சம்ஸ்கிருதம் வரை வெளுத்து வாங்கினான்...

இது எல்லாம் யார் சொல்லி தந்தது 

மை மாம் என்றதும் பாரிஜாதத்தை மெச்சுதல் பார்வை பார்த்தனர்.. 

புத்தகங்களின் அட்டை பக்கம் வைத்து அதன் தகுதியை நிர்ணயிக்க கூடாது என்பது எத்துனை உண்மை ,.

குட் நாலேஜ் கிப் இட் அப் ...

அப்பா பேர் ப்ளாங்கா இருக்கே சார், ஆசிரியர் கேட்கவும் .. தாயும் மகனும் ஒருசேர அவனை திரும்பி பார்க்க .... 

இருந்தா தான போட முடியும் , அவளை பத்தி தெரியாம கேட்கிறீங்க போல மேடம் ,அவ அம்மாவுக்கு ஐஞ்சு புருஷன் , அப்பாவுக்கு பத்து பொண்டாட்டி மேடமும் அதே வகையறா தான் என்று எள்ளல் செய்தபடி வந்த ட்ரில்மாஸ்டர் வாய் அப்படியே நின்று விட்டது ஜீவாவை கண்டு 

அவன் அப்பா பேர் ஜீவா இன்பாதித்தன், நான் தான் இவனோட அப்பா ... போட்டுக்கோங்க... என்றவன் கனீர் குரல் அந்த அறையை சற்று அல்ல அதிகமாவே அதிரச்செய்ய ... இன்பா தகப்பன் தோளில் சாய்ந்து கொண்டவன், அவன் கன்னத்தை இழுத்து இச் வைக்க ..

போதுமா இப்ப ஹேப்பியா? என்று ஜீவா மகனிடம் குனிந்து கேட்க

ம்ம் "என்றான் அருகே இருந்த பாரிஜாதம் மகிழ்ச்சியை பார்க்க அவனுக்கு நேர பற்றாக்குறை போல, பாரிஜாதம் மட்டற்ற மகிழ்வில் யாரும் அறியாது குனிந்து தாவணியில் ஆனந்த கண்ணீரை துடைத்து கொண்டாள்,. போதுமே இது போதுமே !! பேசிய வாய்க்கு அவன் வார்த்தையால் முதல் பூட்டு போட்டு விட்டானே... 

"எப்போய் அந்த டீக்கடை பக்கம் வண்டியை நிறுத்து 

"ஏன்டா 

"அங்க ஒரு கிழவன் அப்பன் பேர் தெரியாதவன்னு என்ன போகும் போதும் வரும் போதும் ஜாடையா சொல்வான்... வா வா அவன்கிட்ட நீதான் என் அப்பான்னு சொல்லு இறங்கு இறங்கு ...தகப்பன் கையை பிடித்து இழுத்து கொண்டு ஓடிய மகனை பார்த்து பாரிஜாதத்துக்கு பெருமூச்சு வந்தது 

நல்லவேளை அவள் காதலுக்கு மதிப்பு இல்லை எனிலும், பிள்ளைக்கு மதிப்பும் , அந்தஸ்தும் கொடுத்தானே.. 

"எனக்கு ஒரு டீ , என் மகனுக்கு ஒரு பூஸ்ட் போடுங்க அண்ணன்" என்று இன்பாவை தூக்கி வைத்து கொண்டு நின்ற ஜீவாவை ஒரு பார்வை, இன்பாவை ஒரு பார்வை பார்த்தவர் எப்படி பேசுவார் அதான் ஜெராக்ஸ் காப்பி போல இருவரும் இருந்தனரே....  

"அந்த ஆளு இந்த ஆளு என்று இரவு வரை என் மகன் என் மகன் என்று யார் யாரெல்லாம் அவனை கேலி பேசினார்களோ அத்தனை பேர் முன்னாலும் தகப்பனை வைத்தே என் மகன் என்று சொல்ல வைத்து விட்டான் ..

தாயும் மகனும் திண்பண்ட கடை அருகே பாலம் மீது உட்கார்ந்து இருந்தனர் ... கீழே சலசல என்று நீர் ஓடியது 

"போதுமாடா இப்ப ஹேப்பியா என்று பாரிஜாதம் மகனிடம் கேட்க 

"ம்ஹூம்.... 

"ஏன்டா 

"அப்பா உன்னை திரும்பி கூட பார்க்கலயேம்மா என்றதும் பாரிஜாதம் சற்று அதிர்ந்து தான் போய்விட்டாள்..

"எனக்கு என்ன வேணும்னு நீ பார்த்து பார்த்து செய்வ உனக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியாதாம்மா.. "

"ப்ச் விடுடா இப்பதான உன்ன ஏத்துட்டு இருக்கார் கூடிய சீக்கரம் என்னையும் ஏத்துப்பார்...

"டேய் சுடச்சுட இருக்குடா பார்த்து வாங்கு, பானிபூரி சமோசா என்று சுடச்சுட மகனுக்கு கொண்டு வந்து ஜீவா நீட்டியவன் அவனும் மகன் பக்கம் அமர்ந்தவன் ..  

கொஞ்சம் பேசுவோமா என்ற ஜீவாவை தாயும் மகனும் திரும்பி பார்க்க .. 

"பேசினா தீராதது எதுவுமே இல்லன்னு எங்க டாடி அடிக்கடி சொல்லுவாரு, நம்ம ஏன் இந்த பிரச்சனையை பேசி தீர்த்துக்க கூடாதுங்க 

ஆற்றுக்குள் கல்லை போட்டு விளையாடிக் கொண்டிருந்த இன்பா, தன் அருகே இருந்த தாயை எட்டிப் பார்க்க அவளும் அப்படி என்னதான் பேசுறான்னு பார்ப்போமே என்பது போல் கண்ணைச் சிமிட்ட.. இன்பா கையை அசைத்து பேசு என்பது போல் சமிக்ஞை கொடுக்க 

"அதாவது உன்ன எனக்கு ரொம்ப புடிச்சிருக்குடா" இன்பா தலையை சரித்து பார்க்க

"நெஜமதாண்டா குட்டி பையா., வாய் தான் கொஞ்சம் ஓவரே தவிர மத்தபடி நீ சமத்து பையன்.. உன்ன கெடுத்ததே உன் அம்மாக்காரிதான் .. உன் அம்மா மேல தான் எனக்கு இப்ப வரைக்கும் நம்பிக்கையும் இல்ல, லைக்கும் இல்ல" என்றதும் பாரிஜாதம் பல்லை நரநரத்து ஜீவாவை முறைத்து பார்க்க ,இன்பா தன் தாயின் தொடையில் தட்டி 

"இரு எப்படியும் கிறுக்கன் கிறுக்குத்தனம் பண்ணுவான்.. அப்போ மொத்தமா வச்சு செய்யலாம் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் என்று தாயிடம் கிசுகிசுப்பாக கூற ...

"எனக்கு என்னமோ உன் அப்பனுக்கு சாவு என் கையாலதான்னு தோணுதுடா.. 

"எம்மோய், நீ மட்டும் கொலை பண்ண போறியா இல்ல , நீயும் நானும் சேர்ந்து இவரை போட்டு தள்ள போறம்மான்னு பேசி முடிச்ச பிறகுதான் முடிவு பண்ணனும் எதுக்கும் அவசரப்படாதீங்க... 

"அதனால என்ன பண்ணலாம்னு இருக்கீங்க...

"கிட்டத்தட்ட நீ என்ன மாதிரியே 80% இருக்கிறதுனால உன்னை என்னோட குழந்தையாவே அடாப்ட் பண்ணிக்கிறேன்.. அதுக்காக உன் அம்மாவை எல்லாம் எக்ஸ்ட்ரா பிட்டிங்கா, என்னால தூக்கிக்கிட்டு சுக்க முடியாது.. ஊரெல்லாம் சண்டை பிடிச்சுகிட்டு ஆம்பள பொம்பளன்னு பாக்காம முட்டி வரைக்கும் சேலையை தூக்கி விஜயகாந்த் தங்கச்சி மாதிரி பறந்து பறந்து அடிக்கிற ஆள் எல்லாம் எனக்கு செட்டாகாது... ஏதோ சித்து வேலை பண்ணி இந்த ப்ராஜெக்ட் சக்சஸ் பண்ணிட்டான்னு தோணுது ... அதனால உன் அம்மா மேல எனக்கு நல்ல எண்ணம் இல்ல.... "

"அதுக்கு ???என்றான் இன்பா புஸ்புஸ் மூச்சு விட்டபடி...

"அதனால நீ அப்பாகூட ஒரு மாசம் இரு , அம்மா கூட ஒரு மாசம் இரு ஈக்குவல் ஈக்குவல். உன்ன நாங்க ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கிறோம்., உங்க அம்மா சொன்ன மாதிரி ஒரே மாசத்துல நல்ல சித்தியா உனக்கு ரெடி பண்ணி தர வேண்டியது என் பொறுப்பு என்றவனை ஒரே தள்ளாக பிடித்து ஆற்றுக்குள் தள்ளி விட்டான் இன்பா .....

"டேய்இஇஇஇஇ பாரிஜாதம் பதற...

"போய் தொலையட்டும் ம்மா ... 

"டேய் இப்ப நான் என்ன தப்பா பேசிட்டேன்னு என்ன பிடிச்ச தண்ணிக்குள்ள தண்ணி விட்ட? தண்ணிக்குள் தத்தளித்து கொண்டே ஜீவா இருவரையும் அண்ணாந்து பார்க்க 

அவன் வாங்கி கொடுத்த டவுசர். தின்பண்டங்கள் அத்தனையையும் தூக்கி அவன் முகத்திலேயே வீசி அடித்தவன்

"எனக்கு அப்பா பிடிக்கும் ஆனா , என் அம்மா உசுரு அம்மாவ பிடிக்காத நீயும் எனக்கு வேண்டாம் இப்படியே போயிரு, மேலோகத்துல போய் சித்தியை ரெடி பண்ணு , வாம்மா ... என்று தாயின் கையை பிடித்து இழுக்க ...

"டேய் பத்து நாள்ல உன்ன மகனா ஏத்துக்க முடிஞ்சவருக்கு... இன்னும் 20 நாள் மிச்சம் இருக்கே கண்டிப்பா என் அருமையும் தெரியும்டா எனக்கு நம்பிக்கை இருக்கு ...

"ப்ச் எப்படியோ போ என்று இன்பா நகர 

"பல்லு போன பாம்பை வச்சிக்கிட்டு என்கிட்ட ஒருமாதிரிதான்யா வீஞ்சிட்டு இருக்க , வேலையே செய்யாத கிங்கிணி மங்கிணி அதை வச்சிக்கிட்டு ரெண்டு பேரை மேய்ச்சி தள்ளிடுவானாம், 

அப்படி எந்த சீமை சிறுக்கிதான் உனக்கு கிடைக்கான்னு பார்த்துடுறேன்.., எவ்வளவு தூரம் போக முடியுமோ போ , எப்படியும் என்கிட்ட தான் வந்து ஆகணும் ... இந்தா வந்து சேர் என்று கயிறை தூக்கி அவன் அருகே போட்டு விட்டு தாயும் மகனும் நடந்தே வீட்டுக்கு போய்விட

லொக் லொக் என்று இருமி கொண்டே அவள் போட்ட கயிரை பிடித்து ஏறி வெளியே வந்த ஜீவா 

"கொலைகார கூட்டம் , ரெண்டு நொடியில சோலியை முடிக்க பார்த்துட்டாங்களே" என்று நெஞ்சை தடவியவன் போன் கீர் கீர் என்று பாக்கெட் உள்ளே அதிர போனை எடுத்து காதில் வைத்தான் 

ஹலோ ஜீவாவா? 

"ஆமாங்க நொந்து போன ஜீவான்னு பேரை மாத்திக்கலாமான்னு யோசனையில இருக்கேன் நீங்க யாருங்க ? "

ஹாஹா என்ற சிரிப்பு சத்தம் ... 

"நான் பொற்றவை! நேத்து பார்த்தோமே பொக்கிசா சிஸ்டர் ...தேனாக குரல் வந்தது 

"அட நீங்களா எப்படி இருக்கீங்க, காயம் எல்லாம் பரவாயில்லையா 

"ம்ம்

"என்ன விஷயம்ங்க ?

"சும்மாதான் பேசணும் போல இருந்துச்சு... 

"ஓஓஓ பேசுங்க பேசுங்க...

"நேத்துல இருந்து நேக்கு உங்க நியாபகம்தான்...

"ஆமாங்க எனக்கும் தான் ..

"என்ன சொல்றீங்க ??

"நேத்து உங்களை கூட்டிட்டு வரும் போது ஹெட்போனை எங்கேயோ மிஸ் பண்ணிட்டேன் ... நீங்க அதை எங்கேயும் பாத்தீங்களா?  

ப்ச் சத்தம் இல்லாது சலித்தாள்...

"அப்பறம்

"அப்பறம் என்னங்க ஒன்னும் இல்ல ... வருசக்கணக்காக துண்டு போட்டவளுக்கே இது பிடி கொடுக்கல.. இவள் கொஞ்சல் குலாவலா புரிய போகுது ... அவள் அப்படியும் இப்படியும் என்று மயக்கி பேசி பார்த்தாள் இவன் நான்சிங்காவே வண்டியை ஓட்ட 

"அப்பறம் ஜீவா ஏதோ பிரச்சனைன்னு சொன்னீங்கல்ல என்னது ? சொன்னா நான் எதாவது ஹெல்ப் பண்ணுவேன்.."

"எனக்கு என்னங்க பிரச்சனை இருக்க போகுது இந்த ரெண்டு ரத்த காட்டேரிக தான் கழுத்தை கடிச்சு ரத்தத்தை குடிக்குதுக.. "

"ரத்த காட்டேரியா 

"ம்ம் சின்னது ஒன்னு பெருசு ஒன்னு ...  

"என்ன ஆச்சு ... சொல்ல தோணினா சொல்லுங்க ஜீவா .. அவனுக்கும் யாரிடமாவது புலம்பத் தோன்றி மனசில் உள்ளதை எல்லாம் எங்கே சொல்ல கூடாதோ அங்கே சொல்லியாச்சு பொற்றவை உதட்டில் வன்ம சிரிப்பு அழகாய் விரிந்தது ..

காலையில உங்களை மிட் பண்ணலாமா ஜீவா... ப்ரீயா 

ஐயம் ஆல்வேஸ் வெட்டிதாங்க.... 

அப்போ ____ ரெஸ்ட்டாரெண்ட் வர முடியுமா 

சரிங்க என்று போனை வைத்தவனுக்கு வயிறு பசி எடுக்க 

என்ன சமைச்சு இருப்பா சோறு போடுவாளா இல்லை கோவத்துல வெறும் வயிறா படுக்க வச்சிடுவாளா..ச்சே ச்சே அதெல்லாம் என்ன கோவம் வந்தாலும் சோத்துல கை வைக்க மாட்டா ... 

ஒரு ஆண் பசிக்கும், பாய்க்கும் தனக்கான பெண்ணை மட்டுமே தேடுவான் ...