வன்முறை செய் தப்பில்லை 7

Van7

வன்முறை செய் தப்பில்லை 7

7 வன்முறை செய் தப்பில்லை !!

படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கும் தன் மகனின் காலை பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தாள் பாரிஜாதம்..

ஏமாற்றம் அவளுக்கே அத்தனை வலிக்கும் போது அந்த  பிஞ்சு குழந்தை அவனுக்கு எவ்வளவாய் வலித்திருக்கும் ... ஜீவாவின் கார் உள்ளே நுழையும் சத்தம் கேட்டு மணியை பார்த்தாள், மணி 11 தாண்டி இருந்தது ... வீட்டிற்கு வந்த பிறகுதான் ஜீவாவிற்கு காலையில் இவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு செல்கிறேன் என்று சொன்னதே ஞாபகம் வந்தது 

ஷட் என்று காலை தரையில் உதைத்தவன், "அச்சச்சோ மறந்தே போயிடுச்சே பஜாரி திட்டுவாளே, பாரிஜாதம்னு பேர் வச்சதுக்கு பதிலா பஜாரின்னு வச்சுருக்கலாம் எப்போ பாரு லபோ லபோன்னு கத்திக்கிட்டு "என்று  தலையை தடவி பாரிஜாதம் வீட்டை பார்க்க ..அவள் வீடு கூ இருட்டாக கிடந்தது   அப்படியே உருவி தன் வீட்டை நோக்கி அவன் நடக்க போக..  ஜல் ஜல் என்ற சலங்கை ஒலியில் எச்சில் விழுங்கினான்....

"வந்ததை கண்டுபிடிச்சிட்டா போலேயே 

"நில்லு" என்ற குரலில் அவன் நடை தடைப்பட்டு திரும்பிப் பார்க்க பாரிஜாதம் தலைமுடி கலைந்து தாவணி நலுங்கி அவனை நோக்கி நடந்து வந்தவள் கொத்தாக ஜீவாவின் சட்டையை பிடித்து தூக்கியே விட்டாள்..

"உன்கிட்ட அவன் கேட்டானா?  என்ன கூட்டிட்டு போய் பள்ளிக்கூடத்துல சேர்த்து விடுன்னு 

"ம்ஹூம்  இல்ல என்று அவன் தலையாட்ட 

"நான் கேட்டேனா , உன் கூட ஜோடியா கூட்டிட்டு போயி பள்ளிக்கூடத்துல அவனுக்கு அட்மிஷன் போடணும்னு

"இல்லைங்க

"அது பச்சைக் குழந்தைய்யா, நீ வருவேன்னு  ஆசையா  இந்த திண்ணையில காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போய் நின்னான்.,  அன்னைக்கு என்னையும் இப்படித்தான்யா ஏமாத்திட்டு போன.. உன்ன  கைவிடமாட்டேன்டி உன்ன  கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொல்லி ஒரு பொண்ணு எத இழக்க கூடாதோ அதை இழக்க வச்ச இன்னைக்கு என் மகனை ,  உன் பாசத்துக்கு ஏங்க வச்சு  ஏமாத்துற பாத்தியா ??

"இல்லைங்க,  நான் வேணும்னே பண்ணல

"நீ வேணும்னு தான் எல்லாத்தையும் பண்ற  "என்று அவனை அப்படியே விட , தடுமாறி போய் ஜீவா தூணில் சாய்ந்து நின்றான் 

"எல்லாத்தையும் வேணும்னு தான் பண்ற,  நீ ஒன்னும் ,ஒன்னும் தெரியாத ஆளு கிடையாது எல்லாம் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே நடிக்கிற சுயநலவாதி!!  எங்க குழந்தை,  குடும்பம் பொண்டாட்டின்னு வந்துட்டா,  அவங்களுக்காக சம்பாதிக்கணுமோ , அவங்க கடமையை சுமக்கணுமோன்னு,  உன்னோட ஆம்பளைங்கிற கடமையை சுமக்க கறிவலி எடுத்த ஒரு  சோம்பேறி..

எங்க நம்மளோட சுக வாழ்க்கைக்கு ஆபத்து வந்துருமோ,  இல்ல நம்ம உயிருக்கு  ஆபத்து வந்துருமோ,  நம்மளோட நேரத்தை அடுத்தவங்களுக்கு செலவழிக்கணுமான்னு உன்ன பத்தியே யோசிக்கிற சுயநலம் பிடிச்சவன்.. அதுக்கு இந்த அப்பாவி முகமும்,  ஒன்னும் தெரியாத பேச் வச்சி சி ஏமாத்திக்கிட்டு திரியுற... ஆனா,  என்ன ஏமாத்த முடியாது அடுத்தவங்கள கஷ்டப்படுத்தி அவங்க உணர்வுகளை மதிக்க தெரியாம அதை உதாசீனப்படுத்துறது அரக்கத் தனத்திலும் மேலானதுன்னு உனக்கு தெரியும் .. தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே ஆக்டிங் விடுவ ...  அது சரி உனக்கு என்ன தேவைன்னே தெரியாது இதுல எங்களுக்கு என்ன தேவைன்னா  பார்க்க போற ? உன்ன தோள்ல தூக்கி சுமந்த அண்ணன் பாரமும் பாசமுமே இப்பவரை புரியல உன்னால தான் அவர் வாழ்கையை அத்தனை வயசு வரை வாழாம இருந்தாருன்னு யோசிக்க கூட முடியாம அவர் பிள்ளை குட்டின்னு செட்டில் ஆகிட்டார்னு அதுக்கும் நொரை நாட்டியம் பேசுற உனக்கு இப்ப வந்த எங்களை பத்தி என்ன கவலை இருக்க போகுது 

உனக்காக காத்திருந்தோம் பாரு எங்களைத்தான் பிஞ்சை  செருப்பால அடிக்கணும்...  உன்னோட அன்புக்காக ஏங்கி நின்னது எங்க தப்புதான். போதும் ராசா,  எனக்காக ரெண்டு நிமிஷம் நின்னு நான் பேசுனத கேட்டியே அதுவே பெரிய உலக  சாதனைதான்!!  போய் தூங்கு,  உன் தூக்கம் என்னால  தடை  பட வேணாம்" என்றவள்  விறு விறுவென்று தன் வீட்டு கதவை படார் என்று சத்தத்தோடு பூட்டிவிட்டு உள்ளே போய்விட

அவள் பூட்டிய கதவை நின்று  ஜீவா பார்த்துக் கொண்டிருந்தான்... 

"நான் சொல்றதையே கேட்காம எனக்கும் சேர்த்து அவங்களே பேசுனா எப்படி?  நான் எதுக்காக வரல என்ன பிரச்சனைன்னு என்கிட்டேயும் கேட்கணும்ல  இவளே சோலோவா குதிச்சா எப்படி..  எல்லாரும் ஏன் தான் என்னை திட்டுறாங்க,  அவங்களுக்கு என்ன பத்தி சரியா தெரியலையா..  இல்ல அவங்க சொல்ற மாதிரி நான் தான் எதையுமே சரியா செய்ய மாட்டேங்கிறேனா..  தப்புதான் பச்ச குழந்தையை ஏமாத்தி  இருக்கக் கூடாது என்றவனுக்கு வெறுமையான படுக்கை சற்று உறுத்தத்தான் செய்தது.

தினமும் இரவு அவன் பக்கத்தில் படுத்து கிடந்து இன்பா ,  பெரிய ஆள்  போல கதை பேசிக்கொண்டே கிடப்பான், ஆனால் தூங்கிய பிறகு விரலை சப்பும் மகனை பார்த்து கொஞ்சம் ரசிக்கவும் செய்து இருக்கிறான் ... இப்போது அவன் இல்லாத படுக்கை தூக்கத்தை வெகு தூரம் கொண்டு போய்விட உருண்டு உருண்டு படுத்தான்..  தூக்கம் வருவேனா என்றது ... 

பாவம் தேடி இருப்பான்ல, நாளைக்கு எதையாவது சொல்லி சமாளிச்சு ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய் சேர்த்து விடணும் என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லிக் கொண்ட பிறகுதான் தூக்கம் வந்தது..

காலையில் எப்போதும் 10 மணிக்கு எழும்பும்  ஜீவா இன்று 6:00 மணிக்கே எழும்பி பாரிஜாதம் வீட்டு கதவு எப்போது திறக்கும் என்று காத்திருந்தான்... டொக்  என்று கதவு திறக்கப்பட...  ஆர்வமாக அவள் வீட்டை எட்டிப் பார்த்தான் ... தன் பரந்த முடியை கோதி கொண்டையிட்டவள் வாசல் அருகே இருந்த பால் வாளியை எடுத்துக் கொண்டு போக 

ஏங்க " என்றவன் அழைப்பில் அவள் கேட்டாலும் கேட்காதது மாதிரியே நடக்க ஆரம்பிக்க 

"பாரி" என்றதும் என்ன என்பது போல் அவள் திரும்பிப் பார்க்க 

"உங்க குழந்தை இன்னும் முழிக்கலையா என்றவனை கடித்து குதறும் ஆத்திரம் தான் வந்தது..

"என் குழந்தை இன்னும் முழிக்கல" என்று உள்ளே போய்விட்டாள்  ஆனால் உள்ளிருந்து பாத்திரம் அங்கும் இங்கும் டம டம என்று பறந்தது...

"என் குழந்தையாம்ல காத்தை குடிச்சா பிள்ளை உண்டானேன் , அப்படி திரும்புங்க இப்படி திரும்புங்கன்னு ராத்திரி முழுக்க ரவுசு பண்ணி பிள்ளையை வயித்துல ரொப்பி விட்டுட்டு, இப்ப என் பிள்ளையாம்ல இவனுக்கு இருக்கிற ஏத்தத்துக்கு  நாலு வெட்டு வாயிலேயே போடுணும் .. அவள் புளுபுளுத்தது திண்ணையில் இருந்த ஜீவாவுக்கு கேட்கத்தான் செய்யது ..

"நமக்கு தான் அந்த பிராசஸே தெரியாதே,  எப்படி லவ் மேக் பண்ணினேன்...  அதுவும் இப்படி ஒரு மட்டமான பிகர் கூட....ஆஆஆஆஆஆஆ தலையில் வந்து விழுந்த கரண்டியில் வலியில் தலையை தடவினான் ..

"உலக அழகியை கட்டி வச்சிட்டாலும் நீ மேய்ஞ்சு தள்ளிடுவ...  இப்படியே பேசிட்டு திரி,  நெல்லு அவிக்கிற அண்டாவுல  போட்டு உன்னை அவிக்க போறேன் ..    

எப்பா சாமி பொண்ணா இவ பேயி,  தப்பி தவறி கூட இவளோட வாழ்ந்துட கூடாது சாமி வலித்த மண்டையை அழுத்தி தேய்த்தான் .... 

தன்னை போல சுத்தும் மகனை  நம்பாது இருக்கவும் முடியவில்லை .. தன் மீது குற்றம் சுமத்தவும் முடியவில்லை ...  தன் அருகே அரவம் கேட்டு ஜீவா திரும்பி பார்க்க .. அவனை கண்டுகொள்ளாது தூங்கி முழித்து வந்த இன்பா இன்னொரு பக்க திண்ணையில் போய் அமைதியாக அமர்ந்து ... சேவல் பின்னே சுற்றும் கோழிக்குஞ்சுகளை  பார்த்து கொண்டு இருக்க .... 

டேய் 

டேய் மகன் பதில் இல்லை

அவன் அருகே போய் ஜீவா அமர ... இன்பா உடனே எழும்பி நகர போக சட்டென அவன் கையை இழுத்து தன் மடி மீது அமர வைத்தவன்...

சாரிடா நேத்து என்னால வர முடியல ... 

அம்மா அடிக்கடி சொல்லும் சாரிங்கிறதுதான் பெரிய கெட்டவார்த்தைன்னு...   அடுத்து என்ன சொல்ல என்று ஜீவாதான் திணறி போனான் ... 

"எம்மோய் காப்பி" உள்ளே குரல் கொடுத்த இன்பா தகப்பன் மடியை விட்டு எழும்ப போக அவனை விடாது பிடித்தவன் 

"சத்தியமா நான் வேணும்னு பண்ணலடா.,  ஒரு ஆன்டிக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு..  அவங்களை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டு வந்தேன் ... ஒருத்தர் வலியோட கிடக்கும் போது அப்படியே விட்டுட்டு வர்றது தப்புதானடா? இருவருக்கும் காப்பியை கொண்டு வந்த பாரிஜாதமும் அவன் பேசுவதை கேட்டு கொண்டு தான் நின்றாள்... 

காரணம் சரியா இருந்தாலும் எங்களுக்கு அந்த தகவலை சொல்லி இருக்கணும்ல... 

அது 

எங்களை மறந்து போற அளவு உங்களுக்கு  சிட்டிவேசனா? இத்தனை வருசம் ஆகுதுப்பா..நானோ அம்மாவோ உங்களை ஒருநாள் கூட மறந்தது இல்லை... என்றவன் மெச்சூரிட்டியான பேச்சில் இவன் தான் எச்சில் விழுங்கினான்..

"சங்கட படாதீங்கப்பா இதை விட  நிறைய நானும் அம்மாவும் பார்த்து இருக்கோம்.. பழகி போச்சு என்று இன்பா  எழும்பி போய்விட .. இவனுக்கு அவன் சுருங்கி போன முகம் பாடாய் படுத்தி விட்டது .. ஒருநாள் முழுக்க மகன் பின்னேயே சுற்றினான்.. 

யோவ் எதுக்குய்யா தொல்லை பண்ற கோலிக்குண்டு கூட விளையாட விடாம பின்னாடியே துரத்திட்டு இருக்க என் பின்னாடி சுத்துறக்கு அம்மா பின்னாடியாவது சுத்து ஏதாவது நடக்கும் என்று இன்பா எரிச்சலாக ... 

டேய் டேய் இந்த ஒரு வாட்டி எக்ஸ்க்யூஸ் கொடுடா...

"அய்ய உன்னையை அம்மா திட்டுறதுல தப்பே இல்லைப்பா .... நீ பறந்து பறந்து பந்தாடி எங்களை காப்பாத்துவேன்னு பார்த்தா,  உன்ன காப்பாத்தவே நான்தான் வரணும் போல  இப்ப என்னாங்கிற? 

"நாளைக்கு ஸ்கூல் கூட்டிட்டு போறேன் ... 

"சவத்தை சரி போ...  

"உனக்கு ஒன்னு  கொண்டு வந்தேன் ம்ம் என்று ஜீவா கண்ணாடி கவரை நீட்ட ... இன்பா அதை திறந்து பார்க்க பளீர் புன்னகை ...

"எம்மோய் ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ கவரை தூக்கி கொண்டு தாயை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் ஓடினான் .

"என்னடா ?

"எம்மோய் அப்பா எனக்கு டவுசர் வாங்கிட்டு வந்து இருக்கு பாரு "என்று கவரை  பாரிஜாதம் கையில் கொடுக்க...வேக வேகமாக உள்ளே திறந்து பார்த்தாள் தனக்கும் எதாவது இருக்குமா என்று ... மீண்டும் மீண்டும் கலைத்து போட்டு பார்த்தாலும் அவன் மனம் போலவே கவரும் காலியாக இருக்க ...   உள்ள வெறுமையை புன்னகை உள்ளே மறைத்து கொண்டவள் மகன் சந்தோஷத்தில் அவளும்  மகிழ்ந்தாள் .. 

:எம்மோய் ராசா போல இருக்கேனா?  " டவுசரை அணிந்து தாயிடம் சுற்றி சுற்றி காட்ட.. 

"என் கண்ணேபட்டிரும் போல,  உன் அப்பன் போல இளவரசனாட்டம் இருக்க "மகனை நெட்டி முறிக்க  தாயின் கன்னத்தில் இச் வைத்தவன் .,.

"இந்த உலகத்துலேயே அழகு என் அம்மா தான் ... அதுக்கு பிறகுதான் அப்பா கூட என்ற மகன் அன்பில் குளிர்ந்து தான் போனாள் ... 

"நீ வரலையா பாரி... குனிந்து ஷூவை கட்டியபடி ஜீவா கேட்க 

"ம்ஹூம்  ....

"தனித்தனியா கெஞ்சணுமா கிளம்பி வா" சற்று கட்டளை குரல் அவனிடம் வர ..

"ரெண்டு நிமிசத்துல வந்திடுறேன்... என்று உள்ளே ஓடியவள் அழகாக கிளம்பி வெளியே வர ...

"பைக்குல போவோமா நீங்க ஓட்டுறீங்களா??? என்று பைக் சாவியை ஜீவாவிடம்  நீட்ட 

"அது சரிபட்டு வராது உடம்பு உரசும்,, ஒரு முடிவுக்கு வர்ற வரை கேப் மெயின்டெய்ன் பண்றது நல்லது கார்ல போவோம் ..."

"அப்படியே கற்பை குகைக்குள்ள வச்சி நாலு பூதம் போட்டு காத்து வச்சிக்கிடுங்க ... யோவ் உன் கற்பை ரிப்பன் வெட்டுனதே நான்தான் நம்பித் தொலையா 

"அதுதான்,டவுட்டே அது எப்படி எனக்கு தெரியாம , எதுவுமே தெரியாம நடந்துச்சு..  நீ ஏதோ திருட்டு வேலை பார்த்து இருப்பியோன்னு சந்தேகம் ... உன்னை மட்டும் நம்பவே மாட்டேன் ... 

 "அடிங் கொப்பரானே , எத்தனை பேரைய்யா திருட்டுத்தனமா நான் _____ டது பார்த்த ஆஆஆஆஆஆ பாரிஜாதம் வலித்த கையை தடவினாள் 

எதுக்கு கிள்ளுன

"இனிமே கெட்டவார்தை போடு,  இப்படிதான் கிள்ளி வைப்பேன் ... என்றவன் முத்தம் கூட இனித்து இருக்குமா தெரியாது அவளை தொட்டு கிள்ளிவிட்டு போனது இனிக்க தான் செய்யது 

"பிள்ளையை கெடுக்கிறதே நீதான் .... கண்ட பேச்சு அவன் முன்ன பேசி பாரு இருக்கு உனக்கு ... உனக்குதான்டா இனிமே கெட்டவார்த்தை பேசு வாயிலேயே நாலு போடு போடுவேன் என்று மகனை தூக்கி காரில் அமர வைக்க ... 

அம்மா 

"அவளையும் தூக்கி உட்கார வைக்கணுமா... எம்மா தாயே பின்னாடி ஏறு ...  கீ கொடுத்த பொம்மை போல தாயும் மகனும் அவன் பேச்சுக்கு பின்னே சென்றனர்.. 

அன்புக்கு ஏங்கியவர்களுக்கு, அன்பை அள்ளி கொடுக்க தேவையில்லை,  சொச்ச அன்பே போதுமானது பிழைத்து கொள்வார்கள்!!