கோணலாய் காதல் செய்(யாதே
Go

கோணலாக காதல் செய் (யாதே)
டீசர்
திங்கள் இரவு ஏழு மணி முதல் சைட்டில் ஆரம்பம் ஆகும்
கடவுள் கேட்டால் தருவார் என்று அர்ச்சனா நினைத்தாளோ
கடவுளே இது எல்லாம் என் வாழ்க்கையையில ஏன் நடக்குது, எதுக்கு இந்த அக்னி பரீட்சை ஒன்னும் புரியல ஒன்னே ஒன்னுதான் பிரபா அத்தான் உசுருக்கு எந்த பாதிப்பும் இல்லாம வீட்டுக்கு வந்து சேரணும் என்று வேண்டி கொண்டு கண்ணை திறக்க
ஆத்தாடி!! என்று நடுங்கி போய் எதிரே நின்ற புருசனை பார்த்தாள்... பூஜை அறை வாசலில் கதவில் சாய்ந்து நின்று அவளை பார்த்தபடி மணிமாறன் நின்று கொண்டிருந்தான்..
ரூமுக்கு வா .. என்று அவன் தாவி தாவி அறைக்குள் போக ... அவன் அடிச்சா கூட வாங்கிக்கலாம் ஆனால் அவன் நுனி விரல் கூட இவள் மீது படாது சித்திரவதை செய்கிறானே, பேச்சா அவை கந்தககத்தில் தொய்த்து, தீயில் வாட்டி , ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்கு வலிக்கணும் என்றே பேசுகிறானே...
படுக்கையில் பேண்ட் சட்டை கூட கழட்டாது அப்படியே குப்புற படுத்து கிடந்த மாறன் அருகே போய் வெடவெடத்த உடலோடு அர்ச்சனா நிற்க ... தன் காலில் கழட்டாத ஷூவை அவள் பக்கத்தில் நீட்டினான்
அர்ச்சனா முழங்கால் போட்டு படுக்கை அருகே அமர்ந்து அவன் ஷூவை கழட்டி போட்டுக் கொண்டே
சாரி மணி அத்தான்
ஏன் நான் சாகணும்னு உன் சாமி கிட்ட வேண்டி கிட்டதுக்காகவா
இல்ல அத்தான்
பின்ன நான் கொல்லனும்னு நினைச்சவன் பிழைக்கணும்னு நீ நெனச்சா , அப்போ நான் சாகணும்னுதானே நீ வேண்டி இருப்ப... இன்னொரு ஷூ மீதி இருக்கு ... அதையும் கழட்டு என்று இன்னொரு காலையும் அவள் முன்னால் நீட்டி மல்லாக்க படுத்தான்..
நான் செஞ்சது தப்புதான் அத்தான் மன்னிச்சிடுங்க...
ஓஓஓ, மன்னிப்பா அது எதுக்கு, அப்போ நீ செஞ்சது தப்புன்னு ஒத்துக்கிற
அத்தான் என்றாள் அவனை கண்ணீரை துடைத்துக் கொண்டே பார்த்தபடி
சரி என்ன பண்ணலாம்? என்றான் ஒவ்வொரு விரலாக நீவி மீறி சொடுக்கு எத்துக்கொண்டே அவள் கையில் வைத்திருந்த ஷூவை பார்த்தபடி...
அர்ச்சனா எச்சிலை விழுங்கி கொண்டே , தன் கையில் வைத்திருந்த அவன் ஷூவால் படீர் படீரென்று , தன் வாயில் அடித்தவள்.. உதடு கிழிந்து கிழிந்து ரத்தம் வர...
"இனிமே இந்த வாயால அவர் பெயரை சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன் என்று சொல்லி சொல்லி அடித்து அவளை அவளே காயப்படுத்தி கொள்ள...
போதும் போதும் விடு, மனசு புண்ணு பட்டு போச்சு அம்மைய்யாரே... போய் கூலா பீர்ல ஐஸ் கட்டி போட்டு கொண்டு வா என்றதும் அர்ச்சனா தன் உதட்டை சேலையில் துடைத்து கொண்டு போய் அவனுக்கு கூலாக பீரை கண்ணாடி கிளாஸில் நிரப்பி , ஐஸ் கட்டிகளை போட்டு எடுத்து கொண்டு வந்து மாறன் முன்னே நீட்ட.. அதை வாங்கி ரெண்டு சொட்டு எடுத்து அவள் முகத்தில் தெளித்து
இதுதான் பத்தனி பொண்டாட்டிக்கு அழகு , இங்க வா என்று அர்ச்சனா கையை பிடித்து இழுத்து தன் அருகே உட்கார வைத்து ஐஸ் கட்டிகளை எடுத்து அவள் உதட்டில் காயம் மீது வைக்க
ஸ்ஆஆஆஆ என்று வலியில் அவள் சுணங்க..
உனக்கு ரொம்ப அவசரம் அம்மையாரே , இப்படியா காயப்படுத்திக்குவ ஹான் ... நான் சும்மா கிண்டலாதானே உங்கிட்ட கேட்டேன் என்று உச்சு கொட்டிய அவன் வார்த்தையில் பரிதாபம் இல்லை வேணும்டி உனக்கு என்ற நக்கல் தான் இருந்தது
குடிக்கிறியா ? என்றான் கிளாஸை அவள் உதட்டு அருகே கொண்டு போய்
ம்ஹூம்....
அப்போ போய் ஆம்லெட் போட்டு கொண்டு வந்து பக்கத்தில உட்கார்ந்து கம்பெனி கொடு என்றவன் போகும் அவளை உதட்டை சுளித்து பார்த்து கொண்டே தங்க திரவத்தை உதட்டில் வைத்து விழுங்க ஆரம்பித்தான்...
அவன் உள்ளமும் எரிந்தது வயிறும் எரிந்தது....