கோணலாய் காதல் செய்(யாதே)

Koo

கோணலாய் காதல் செய்(யாதே)

கோணலாய் காதல் செய் ( யாதே)

டீசர் 2

படியில் மணிமாறன் இறங்கி வர , அவன் பின்னே அவன் புது மனைவி அர்ச்சனா களை இல்லாத முகத்தோடு இறங்கி வந்தாள்...

என்ன மணிமாறா பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு எங்க போற என்ற தாத்தாவுக்கு இதழ் விரித்து புன்னகை ஒன்றை கொடுத்தவன் 

புது வாழ்க்கையை தொடங்கி இருக்கோம்ல தாத்தா, அதான் கோவிலுக்கு போய் சாமியை பார்த்துட்டு வரலாம்னு 

பேஷா போயிட்டு வாடா ... அதற்குள் பிரபஞ்சன் தாய் பிரபாவதி பூஜை அறையில் இருந்து ஓடி வந்தார் 

ஆண்டவா !! நான் வேண்டுன கடவுள் என்ன கைவிடல பிரபா பொழைச்சிட்டானாம் மாமா என்று கத்த மணிமாறன் பின்னே வந்த அர்ச்சனாவுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது ..

எனக்கு தெரியும்ல அவன் வைர பாஞ்ச கட்டை என்,பேரனை எவனாவது சாச்சிட முடியுமா என்று தாத்தா மீசையை திருகிட, மணிமாறன் உதட்டை வளைத்து பிதுக்கி கொண்டு காரில் போய் ஏற அரச்சனாவும் காரின் பின் இருக்கையில் போய் அமர 

அவன் பிழைச்சிட்டான்ன உடனே அம்மையாருக்கு ஏக குஷி போல என்றான், காரை ஓட்டி கொண்டே பின் சீட்டில் இருந்த அர்ச்சனாவை புருவம் உயர்த்தி பார்த்த படி... அவள் பதில் சொல்லாது வெளியே பார்க்க ஆரம்பிக்க, கார் போய் ஊர் ஒதுக்குப்புறமாக இருந்த மருத்துமனையில் நின்றது ...

இறங்குங்க அம்மையாரே, அவள் யோசனையாக ஹாஸ்பிட்டலை பார்க்க...

அட இறங்குடி, வெத்தலை பாக்கு வைக்கணுமோ என்றவன் இரைச்சல் குரலில் அர்ச்சனா இறங்கி அவன் பின்னே நடக்க ...

இவளுக்கு தான் செக் பண்ணணும் நானும் கூட இருப்பேன் பேமெண்ட் பண்ணிட்டேன். என்றவன் பேச்சு செயல் ஒன்றும் பிடிபடாது அர்ச்சனா அவன் அருகே நிற்க 

சார் செக் பண்ணிடலாம் பட் நீங்க உள்ள வர்றது டாக்டர் தயக்கமாக அவனை பார்க்க 

ஏன் பிரசவத்துக்கு மட்டும் அனுமதி தர்றீங்கல்ல, இதுக்கும் தரணும் , அதுக்கு எவ்வளவு வேணும் வாங்கிக்கோங்க ஆனா வருவேன்.. நான் யாரையும் நம்ப மாட்டேன் என்றான் அவளை பல்லை நரநரக்க பார்த்தபடி...

சரி வாங்க என்றதும் அரச்சனாவை படுக்கையில் படுக்க வைக்க 

எதுக்கு என்ன செக் பண்ண போறீங்க? என்று புரியாது பார்க்க.. அவள் அருகே சேர் போட்டு முதல் ஷோ பார்ப்பது போல உட்கார்ந்து இருந்த மணிமாறனை டாக்ட்டர் பாவமாக பார்க்க 

அது ஒன்னும் இல்ல அம்மையாரே, நீ வெர்ஜின்தானா இல்லை எச்சி இலையான்னு பார்க்கணும்ல... நான் பாட்டுக்கு குருட்டு பூனை விட்டத்துல பாஞ்ச மாதிரி பாஞ்சிட்டா, அதான் உனக்கு வெர்ஜினிட்டி டெஸ்ட் பார்க்க போறேன் என்ன டாக்டர் படிச்சது மறந்து போச்சா, ம்ம் செக் பண்ணுங்க என்றதும் படுத்து கிடந்த அர்ச்சனா முகத்தில் உணர்வு துடைக்க பட அவனை பார்க்க 

என்ன தவிர இந்த மணிமாறன் யாரையும் நம்ம மாட்டேன்டி, எத்தனை அவுட்டிங் இரண்டு பேரும் என் கண்ணு முன்னாடி ஆட்டிக்கிட்டு போயிருப்பீங்க, தப்பு நடக்காமலா இருக்கும் என்றவன் நாவில் விஷமா ?? இல்லை விஷத்தில் தான் நாவு ஒட்டி இருந்ததா தெரியாது ச்சை என்ற ஒரு பார்வை அர்ச்சனா பார்க்க 

என் கை இல்லை மூச்சு கூட உன் மேல படாது , ஆனா தினம் தினம் கதற வைப்பேன்டி .. டாக்ட்டர் இஇஇஇஇஇஇ 

இதோ பார்க்கிறேன் சார் என்று உணர்வு இல்லாது கிடந்த அவள் பெண்மை சோதிக்கப்பட்டது...

சார் 

ரிசல்ட் என்ன ?கண்ணை உருட்டினான் ....

உங்க வொய்ப் வெர்ஜின் என்றதும் நாடியை தடவியவன் முகத்தில் திருப்தி இல்லை 

அவன் அவ்வளவு நல்லவனா ?இல்ல இவ அவ்வளவு நல்லவளா, அது எப்படி ஒன்னுமே நடக்காம இருக்கும் .. வேற எதையாவது தொட்டு இருக்கானான்னு எதாவது செக்கப் பண்ணி பார்க்க முடியுமா? என்றவன் பேச்சில் டாக்டர் கூட என்ன மனிதன் இவன் என்று தான் பார்த்தார்... 

இல்ல சார் பார்க்க முடியாது 

ஓஓஓஓ சரி விடுங்க, நானே செக் பண்ணிக்கிறேன் முதல் தடவை பண்ணும் போதே இது பழகினதா பழகாததான்னு தெரிஞ்சிடும்ல என்றவன் பேச்சில் அருவருத்து போன அர்ச்சனா அழுது கொண்டே வெளியே ஓடி கழுத்தை சுற்றி கொண்டே ஓடும் அவளை பார்த்த மணிமாறன் ... 

இதுவரை தப்பு நடக்கல , இனி தப்பு நடந்தா இவளை நம்ப முடியாது , அவனையும் நம்ப முடியாது என்று யோசனையாக ஓடும் அவள் பின்னால் நடந்தான்..

கோணலாக சிந்திப்பான் கோணலாகவே காதலும் செய்வான்...கோணலாக ஒருவன் இவனிடம் காதலும் படாத பாடு பட போகிறது..

ஜனவரி பத்து முதல் ஆன்சைட்டில் வரும்