நேரடி அமேசான் வெளியீடு திறவோனே ஏன் தாழ் திறந்தாய்
Thee

திறவோனே ஏன் தாழ் திறந்தாய்
நேரடி அஅமேசான் கதை
https://www.amazon.in/dp/B0DMMHLLCJ
டீசர்
இளமையில் வறுமையும் முதுமையில் தனிமையும் கொடிது என்றனர் ஆனால் தனிமை எவ்வயதிலும் கொடிது தான் !!
இந்த தனிமையான இரவுகளை காணும் போது இந்த தனிமையான வீட்டை பார்க்கும் பொழுது, மனம் விட்டு பேச ஆளில்லை என்ற நிலையை வெறுக்கிறான்.. என்னதான் உறவுகள் இருந்தாலும் எல்லோரும் ஓரளவுக்கு தானே, அவரவர்கள் அவரவர்கள் குடும்பம் குழந்தை என்று செட்டில் ஆகிவிட்டனர்.. இவன் மட்டும் இந்த தனிமையை துணையாக கொண்டு வாழும் ஒருவன் ...யாரவன்??
விஷ்வாமித்திரன் !!
வயது பின் 30 . திருமணத்தில் தோஷம் திருமணம் செய்யக்கூடாது என்று ஜோசியர் சொன்னதின் காரணமாக வேறு வழியில்லாமல் திருமணம் செய்யாமல் ஒத்தகட்டையாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன் ..ஆனால் வாழ வேண்டும் என்ற ஆசை மிக உண்டு...
ஐயா உங்களுக்கு திருமணம் யோகம் இப்ப இல்ல அதுக்கு இன்னும் அஞ்சு வருஷம் கூட போகலாம்... என்று ஜோசியர் முடித்து விட, அவன் அல்லக்கை வெற்றிலையை மடக்கி கொடுத்து கொண்டே
" அய்யாஅவர் சொல்றதுக்காக நீங்க இப்படியே தனிக்கட்டையாக இருக்கணும்னு அவசியமா?
"வேற என்ன செய்ய முடியும்
"நீங்க கண் அசைச்சா போதும் , உங்களுக்காக நீ நான்னு ஆளுக வருவாங்க.. பின்ன என்ன? அதுக்கு மட்டும் தேவைக்கு ஒதுங்கிட்டு வந்துட வேண்டியது தானே.. மற்ற நேரமாக இருந்தால் பல்லை பெயர்த்து இருப்பான்... ஆனால் இப்போதெல்லாம் தன் உடலை அடக்க பாடுபடும் அவனுக்கு தொண்டை ஏறி இறங்கியது .. அவன் யோசனை புருவம் மேலும் பேச உந்த..
அதான் வப்பாட்டி வச்சிக்கோங்க அய்யா..
வப்பாட்டியா??
ம்ம் அதேதான் அய்யா உங்களுக்கு என்ன குறைச்சல், அதோட இதெல்லாம் பெரிய மனுசனுக்கு சகஜம்.. கல்யாணத்துக்கு பிறகு வச்சிகிட்டாதான் தப்பு... கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி இப்படி போயிட்டு வர்றதுல என்ன தப்பு சொல்லுங்க ... நீங்க சரின்னு சொன்னீங்கன்னா.. நான் ஆள பாக்குறேன்... ஊருக்கு ஒதுக்கால அப்படியே ஒரு வீட்டை வாங்கி கொடுத்துட்டீங்கன்னா.. உங்க தேவைக்கு போயிட்டு வந்துடலாம் பாருங்க.. அமைதியாக வெற்றிலையை சுவைத்துக் கொண்டே இருந்தவனுக்கு மனதில் சாத்தான் புகத்தான் செய்தது...
கொம்பா "
என்ன அய்யா "
"அது கொஞ்சம் சின்ன வயசா பாரு
"ஒரு முப்பது வயசு போதுமாய்யா "
"ச்சே அதுக்கும் குறையா .. ஒரு 20 25குள்ள சின்ன கழுதையா பாரு அதான் அடங்கும் .. குறிப்பா இப்படி பவுடர் பூச்சு எல்லாம் போட்டு ஆள மயக்குற பார்வை பார்க்க கூடாது.. என்ன பாத்தா அரண்டு முழிக்கணு, ம் நான் என்ன சொன்னாலும் ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்க கூடாது .. அப்படியே என் கைக்குள்ள அடங்கிரனும்... இந்த பகட்டு பேச்சு அறிவாளி பேச்சு இதெல்லாம் இருக்கவே கூடாது சும்மா நொய்யி நொய்யின்னு என் காது பக்கத்துல உட்கார்ந்து நொய்யல் பேசுறவளும் ஆகாது... உள்ளுக்குள்ள போனா காலையில வரைக்கும் உலகத்தை மறந்துட்டு அவ கூட இருக்கணும் .. அந்த மாதிரி பார்த்து பதமா சொல்லிக் கொடுத்து கூட்டிட்டு வா புரியுதா?குறிபபா என் ஜாதியா இருக்கணும்..
ம்ம் சரி அய்யா
வயசு ரொம்ப முக்கியம் முத்தி போன பொண்ணா கூட்டிட்டு வந்த தூக்கிப்போட்டு மிதிப்பேன்... 20 25 குள்ளதான் இருக்கணும்.. அதுவும் சிறுத்த உடம்பா எனக்கு ஏத்த அளவா இருக்கணும் புரியுதா?
"அய்யோ அம்மோய் இஇஇஎஇஎஎஎ எந்தா பெரிய பாம்பு" என்று கத்தி கொண்டு இருட்டை கிழித்தபடி ஒரு உருவம் ஓடி வந்து விஷ்வா மித்திரன் நெஞ்சில் நச்சென்று சோமபான உருண்டை பிதுங்க விஸ்வாமித்ரன் தவம் கலைக்க அவன் மேல் வந்து விழுந்தது.. அவன் அரண்மனைக்காரன் அவள் இந்த அரண்மனை வாட்ச்மேன் மகள் வனமேனகை
ஆவ்ஊஊஊ எனனு விஷ்வா தன் நெஞ்சில் பாரம் உணர்ந்து யார் என பார்க்க டார்ச் லைட் வெளிச்சத்தை அவ்வுருவம் மீது காட்ட..
"பாம்பு பாம்பு பாம்பு" என்று கண்ணை மூடி கொண்டு அந்த உருவம் பினாத்த.... செப்புச்சிலையே தான் அவள் ..
சிவந்த உதடு.. நீண்ட பின்னல் . அவன் மார்பு உயரம் கூர் மூக்கு, வானில் ஓடும் நிலாமகள் போல அழகு , வயது மிகவும் குறைவாக இருக்கும் என்று பார்த்தும் தெரியும் அளவு .. இளம் உடம்புக்காரி!!
பயத்தில் நடுங்கி விஷ்வா சட்டையை விடாது இழுத்து நின்ற அவள் விரல் ஓவ்வொன்றும் வீணை நரம்புகள் ... அந்த வெளிச்சத்தில் கண்ணை அகல அவள் விரித்து அண்ணாந்து பார்க்க.. பார்த்த பார்வையில் ஆறடி உடல் அப்படியே அதிர்ந்து நின்றது ... கண்ணா அவை??!!
அப்பப்பா!! திராட்சை மது ரச கிண்ணங்கள் , செயற்கை அழகை காட்டி மயக்கும் பெண்கள் மத்தியில் இவள் பார்த்த ஒற்றை பார்வை அய்யோ மூச்சு முட்ட வைத்தது... முதல் பார்வையில் ஒரு பெண் தடுமாற வைப்பாளா ?? வைத்தாளே ஒற்றை பார்வையில் ...
அய்யா அங்கன அங்கன பாம்பு பாம்பு உதட்டை குவித்து குவித்து அவள் அவனுக்கு விளக்கம் சொல்ல .. தன்னிலை மறந்து போய் அவளை குனிந்து பார்த்து கொண்டு நின்றான் விஷ்வாமித்திரன் ..
2
அகிலா ஐசக்கின் நேரடி அமேசான் கதை
தந்திரக்காரா லிங்க் கீழே