முற்று பெறாத முதல் நீ

Mu

முற்று பெறாத முதல் நீ

முற்று பெறாத முதல் நீ !!

புதன் இரவு ஏழு மணி முதல் வரும் .. 

அஞ்சு வருஷமா அசைவு இல்லாம கிடக்கிறா, உங்களால ஒன்னும் பண்ண முடியல இல்ல .. நான் கோடி இல்லை மில்லியன் கணக்குல கொட்டி கொடுக்கிறேன், அம்மு எனக்கு திருப்பி வரணும் என்ற மாறனை தலையை பிடித்துக் கொண்டு பார்த்தார் மருத்துவர் அவள் உயிரோடு இருக்கும் ரகசியம் அறிந்த ஒருவன் மாறன் மட்டுமே ... 

மிஸ்டர் மாறன் அவங்களோட மூளை செயலிழந்து போச்சு , பெட்டர் அவங்களோட ஆர்கன் எல்லாத்தையும் 10 பேருக்கு கொடுத்தா??

வாட் , நோ நோ நோ நோஓஓஓஓஓஓஓ, நான் தியாகி பட்டம், நல்லவன் பட்டம் எல்லாம் வாங்க விரும்பல , என் பொண்டாட்டியோட உடம்பை குறு போட்டு கொடுத்து புண்ணியவானான் ஆக முடியாது , அவ உடம்புல இருந்து நகம் கூட போகக்கூடாது, அவ எனக்கே எனக்கு... அவ மறுபடியும் கண்ணு முழிக்கலேன்னாலும் பரவாயில்லை அவ எனக்கு வேணும் .. இப்படியே ஜடம் போல இந்த படுக்கையில் கிடந்தாலும் போதும் .. எனக்கு எங்க அம்மு போதும் ..

முகம் எல்லாம் அகோரமாக அடிப்பட்ட தடத்தோடு சிதைந்து மூச்சு பேச்சு இல்லாமல் வருட கணக்காக கிடக்கும் மனைவியை அவனால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை...  

மாறன் யோசனையாக மருத்துவமனை காரிடரில் நடந்து கொண்டிருந்தவன் திடீரென்று ஒருவர் மீது மோதி

சாரி கவனிக்கல என்று நகரப் போக

"பரவால்ல சார் இருக்கட்டும்" என்ற அமெரிக்காவில் தமிழ் மொழி கேட்டு மாறன் தலையை தூக்கிப் பார்த்தான், டாக்டர் கோட்டில் மாதவன் நின்று கொண்டிருந்தான்..(ரண ரணமாய் , வேள்வி தீ மாதவன்)

தமிழ்நாடு என்றதும் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருக்க..மாறன் தன் மனைவியின் நிலையை அப்படியே கூறிவிட்டான் 

மூளைசாவு ஆகிடுச்சா ?

"இல்லங்கிறாங்க..

"அப்ப கவலை விடுங்க மிஸ்டர் மாறன் நான் உங்க மிஸஸை பாக்கலாமா!

"அவள காப்பாற்ற முடியுமா?

 ஒத்தையா ரெட்டையா போட்டு பாப்போமே என்ற மாதவன் அவளை முழுதாக செக் செய்துவிட்டு, 

நான் நியூரோ டாக்டர் இல்ல மாறன் .. 

பட், எல்லாத்தையும் பத்தி கத்து வச்சிருக்கேன், இது என்னோட தொழில் இல்ல... உயிர் அத வச்சு சொல்றேன் உங்க பொண்டாட்டிய நூறு சதவிகிதம் காப்பாத்த டாக்டரால முடியாது" என்றதும் மாறன் பரிதாபமாக மாதவனை பார்க்க 

"ஆனால் ரிஸ்க் எடுக்க நீங்க தயாரா இருந்தா என்னால உங்க பொண்டாட்டிய காப்பாத்த முடியும்

"என்ன பண்ணனும்?பல வருடம் கழித்து அவன் கண்ணில் ஒளி

"அவங்க மூளை செல்கள் எல்லாம் சாகல , பட் அடிச்ச அடியில ஒரே ஒரு செல் மட்டும் மொத்தமா சிதைஞ்சு போச்சு..

"ஓஓஓ ,

" அந்த ஒத்த செல் அவங்களுடைய ஒட்டுமொத்த உடம்பையும் செயல் இழக்க வச்சிடுச்சு அந்த ஒத்த செல் நாம கண்டுபிடிச்சு, அதுக்கு பதிலா இன்னொரு பொருத்தமான செல் ஒன்ன அவங்களோட மூளைக்குள்ள செலுத்தனும்( அஸ் யூஸ்வெல் கம்பி கட்டுற கதைதான் )

"என்ன சார் விளையாடுறீங்களா, இதெல்லாம் மருத்துவத்தில் இன்னும் வர கூட இல்லை "என்று சக மருத்துவர்கள் மாதவனை பார்த்து சிரிக்க 

"ப்ச் நீங்க சொல்லுங்க மாதவன் 

எனக்கு என் பொண்டாட்டி வேணும் ... 

மாதவன் ஒரு பேனா எடுத்து செங்கல் போல அமைப்பை கட்டியவன் அதில் ஒரு செங்கலை மட்டும் உருவி எடுத்துவிட்டு ..

"இப்போ இந்த செல் மட்டும் உடைஞ்சிருக்கு இதை எடுத்துட்டு அதுக்கு பதிலா இன்னொரு மூளைச்செல் வச்சா மூளை தன் கட்டுப்பாட்டுக்கு வந்துடும்.. நாட் ஸூயர்,வரலாம் வரலாமலும் போகலாம் உயிருக்கு ஆபத்தா கூஊ முடியலாம்...  

பிழைக்க வாய்ப்பு இருக்கா என்றான் மாறன் ஆர்வமாக 

பிஃபடி பிஃப்டி , மாறன் சிறுது யோசித்து விட்டு 

ஓகே நான் ரெடி

இப்போ , அந்த ஒரு செல் யாரு கிட்ட இருந்து கொடுக்கிறது என்பதுதான் ஹைலி டாஸ்க் மாறன் .. யாருமே அவங்களோட மூளையில் கை வைக்க விடமாட்டாங்க இல்ல... அவங்க உடம்ப மூளையை செயல்படுத்தக்கூடிய ஒரு செல் என்கிட்ட இருக்கலாம் உங்ககிட்ட இருக்கலாம் யார்கிட்ட வேண்டுமானாலும் இருக்கலாம்... 

மேட்ச் ஆச்சுன்னா ??

யூ ஆர் லக்கி , அவங்கள காப்பாத்திடலாம் .. ஆனா இது எல்லாம் என்னுடைய யூகம்தான் என்ற மாதவன் பேச்சில் முன் நெற்றியை தடவிய மணிமாறன் 

அவள உயிருக்கு உயிரா நேசிக்க மட்டும் இல்ல அவளுக்காக உயிரை கொடுக்க கூட நான் தயார் என் பொண்டாட்டிக்கு என்னோட செல் கரெக்டா இருக்குமா..

"நோ மிஸ்டர் மாறன் அதுலேயும் ரிஸ்க் இருக்கு 

என்ன

"எந்த செல் உங்க கிட்ட இருந்து எடுக்கப்படுதோ அதுக்கான செயல்பாடு உங்களுக்கு நின்னு போகும் , எடுத்துக்காட்டா அந்த செல் உங்களோட கை கால இயக்கக் கூடியதாய் இருந்தா, உங்க கை கால் செயல் இழக்கலாம் , இப்படி என்ன பாதிப்பு வேணாலும் வரலாம் லைக் மரணம் கூட"

"பரவாயில்லை டாக்டர் என்ன வந்தாலும் அவளுக்காக தாங்க நான் தயார்.... ஆனால் அதுக்கு முன்னாடி எனக்கு இந்தியாவுல செய்ய வேண்டிய வேலை ஒன்னு பாக்கி இருக்கு ... அதை முடிச்சுட்டு வரேன் ஆப்ரேஷன் வச்சுக்கலாம்...

மாறன் நீங்க தேவையில்லாம இவர் பேச்சைக் கேட்டு ரிஸ்க் எடுக்குறீங்க என்று மற்ற மருத்துவர்கள் அவனை எச்சரிக்க 

என் கண்ணு முன்னாடி பொணம் மாதிரி கிடக்குற இவள தினம் தினம் பார்த்து சாவுறதுக்கு ஒரேடியா செத்துப் போறது எவ்வளவோ மேல்,. ஒன்னு அவ கூட வாழ்க்கை இல்லை செத்துட்டு போறேன் என்றவன் பெருமூச்சு விட்டு அவள் சிதைந்த முகத்தை தடவ...

அது ஒன்னும் பிரச்சனை இல்ல மாறன்.. அவங்க முகத்தை பிளாஸ்டிக் சர்சரி பண்ணி சரி பண்ணிடலாம்...

ஓஓஓ 

"என்ன கொஞ்சம் முக அமைப்பு ஜாடை லைட்டா மாறும் ...

 அவ கண்ணு முழிச்சு பார்க்கும் போது இந்த முகத்தை பார்த்து கலங்கிட கூடாது அதுக்கும் சேர்த்தே சர்ஜரி பண்ணிடுங்க"

இந்தியா போய் விட்டு வந்த மாறன் மூளையில் உள்ள செல்களில் எல்லாம் அவளோடு பொருத்திப் பார்க்கப்பட்டது... ஒற்றை செல் மட்டும் அவள் செயல் இழந்த அந்த செல்லுக்கு சரிசமமாய் ஒத்துப் போனது...

அது மாறனின் காதல் அணு !! 

அவன் காதல் உணர்வு அவளை உயிர் பெற வைத்தது ஆனால் அவன் காதல் உணர்வு இழந்து போனான் ...

தன் மனைவி இறந்த நாளோடு அவள் நினைவுகள் முற்று பெற்று , காதல் உணர்வும் அழிக்கப்பட்டு போனது.... 

ஆம் அவனை பொறுத்தவரை அவன் மனைவி இறந்து போனாள்... அவளோடே காதலும் அழிந்து போனது ..... 

அவள் முகத்தின் காயத்தை ப்ளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரி செய்து மரண படுக்கையில் இருந்து வேறு  ஜாடையில் கண்ணை திறந்தாள் அர்ச்சனா மணிமாறன் ...

சார் உங்க மனைவி கண்ணு முடிச்சிட்டாங்க என்ற மாதவனை யோசனையாக பார்த்த மாறன் 

என் வொய்பா?? ஆர் யூ ஜோக்கிங், என் அர்ச்சனா இறந்து ஆறு வருசம் ஆகுது வேற யாரோன்னு நினைச்சு என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க 

சார் என்று அவன் அழைக்க அழைக்க எட்டி பார்க்காது காரை எடுத்து கொண்டு கிளம்பி விட்டான் மணிமாறன் ..

காற்புள்ளி வைத்து போனான் மன்னவன், முற்று புள்ளி வைக்க வருவாளா மணாளனி,